Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

6

 

17.12.2023இல் இல்ஸ்ஹொபன் கிராமத்தில் தோல்வியில் முடிந்த கொள்ளைக்குப் பின்னர், பொலிஸார் தேடிய காரைப் பற்றிய தகவல்களையும் அவர்களால் திரட்ட முடியாமல் இருந்தது.

போக்குவரத்துப் பொலிஸாரின் கண்களில் கூட அந்தக் கார் படாமல் எங்கேயோ ஒழித்திருந்தது.

வழக்கம் போல் அன்றும், போக்குவரத்துப் பணியில் இருந்தாள் லூயிஸா(21).  காரின் வலது பக்கத்தில் அவள் அமர்ந்திருந்தாள். அவளது வேலைத் தோழன்  காரை ஓட்டிக் கொண்டிருந்தான். அவர்களது கார் ஹாகன்பாகர் றிங் என்ற இடத்தில் பயணித்துக் கொண்டிருந்தது. இங்குதான் எல்பிரிடே கூகெர் 2020இலும் ஹைடமேரி, எடித்லாங் ஆகிய இருவரும் 2022இலும் கொல்லப்பட்டிருந்தார்கள்.

“ஒருவேளை அன்று இல்ஸ்கொபனில், முதியவரின் மனைவி இல்லாமல் இருந்திருந்தால், அந்த முதியவரையும் அவன் கொன்றிருக்கலாம்

“இருக்கலாம். ஆனால் கொலையாளி தனியாக இருக்கும் முதுமை அடைந்த பெண்களைத்தானே குறி வைக்கிறான். ஒருவேளை இவன் கொள்ளையடிக்க மட்டும் வந்தவனாக இருக்கும் கொலையாளி வேறு ஒருத்தனாகவும் இருக்கலாம்

திடீரென லூயிஸா, “ நிறுத்து நிறுத்து. காரை நிறுத்துஎன்று சென்னாள்

“ஏன்? என்ன பிரச்சினை?”

“அதிலே ஒரு சில்வர் கலரிலே VW கார் பார்க் பண்ணியிருந்தது. ஒருவேளை நாங்கள் தேடுற காராகக் கூட இருக்கலாம். வா பாத்திட்டு வருவம்

 அந்த சில்வர் கலர் காருக்கு முன்னால்  லூயிஸாவும் அவளது சக  தோழனும் நின்றார்கள்இலக்கத் தகட்டில் பொதிகளை ஒட்டும் நாடாவால் ஒட்டிய தடயங்கள், VW station wagon, Silver  நிறம் என அவர்கள் தேடும் காரின் அடையாளங்கள் அத்தனையும் பொருந்தி இருந்தன. ஆனால் காரின் இலக்கத் தகடு மட்டும் இல்லை.

 

Untitled Artwork

பொதுவாக இலக்கத் தகடு இல்லாத கார்களை வீதிகளின் ஓரத்தில்  நிறுத்தி வைக்க முடியாது. அத்துடன் இலக்கத் தகடு இல்லாவிட்டால் அது பதிவில் இல்லை என்பது மட்டுமல்ல பயணிக்கவும் முடியாது.

 

கார் பூட்டி இருந்தது. கார் கண்ணாடியூடாக உள்ளை பார்த்தார்கள்.  ‘ரெட் புள்குடிபான ரின்கள், பொதிகளை ஒட்டும் நாடாக்கள் என்பன காருக்குள் இருந்தன. ஆக, கார் பாவனையில் இருக்க வாய்ப்பு இருக்கிறது என்று இருவரும் தீர்மானித்துக் கொண்டார்கள்.

அவர்களால் காரின் போனற்றைத் திறக்க முடிந்தது.  இயந்திரத்தின் இலக்கத்தை எழுதிக் கொண்டு தங்கள் காருக்குத் திரும்பினார்கள். காரில் அமர்ந்து கொண்டே, தங்கள் வேலைத் தோழனைத் தொடர்பு கொண்டார்கள்.

“கார் எஞ்சின் ஒன்றின்ரை நம்பர் அனுப்பிறன். அதைப் பற்றி தகவல் வேணும்

தகவல் உடனேயே வந்தது, “அந்தக் கார் இப்ப பதிவிலை இல்லை

“கடைசிப் பதிவு ஆரின்ரை பேரிலை இருந்தது?”

“அதுஹூஸைன் என்றவரின்ரை பேரிலைதான் கடைசியா இருந்திருக்கு. ஆளின்ரை இடம் ஒப்பன் வைலர்

“இந்த விபரத்தை மேலதிகாரிக்குச் சொல்லிவிடு

 

Untitled Artwork

ஒப்பன் வைலர் ஸ்வேபிஸ் ஹால் நகரில் இருந்து பதினைந்து கிலோ மீற்றர் தூரத்தில் இருக்கிறது

திடீரென பொலிஸாரைக் கண்டதும் ஹூஸைனுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

சம்பிராதய கேள்விகளுக்குப் பிறகு, “VW station wagon, கார் எங்கே?”

அந்தக் காரைப் பற்றிக் கேட்ட போது, ஹூஸைனின் முகம் இன்னும் வெளிறியது.

“வித்துப் போட்டன்

“யாருக்கு வித்தனீ?”

ஹூஸைனின் தலை மெதுவாக நிலத்தை நோக்கி குனிய ஆரம்பித்தது.

“ சரி கார் விற்ற ஒப்பந்தத்தைக் காட்டு

“கார் விக்குற போது  ஒப்பந்தம்  ஒண்டும் போட இல்லை

“அதெப்படி  ஒப்பந்தம் இல்லாமல் கார் கை மாறிச்சு?”

“வாங்கினவர் அதைதான் பதிவு செய்யிறன் எண்டு சொன்னவர்

“ஓ, அப்பிடியோ? சரி என்ன விலைக்கு வித்தனீ?”

“350 யூரோக்களுக்கு

பொலிஸாரின் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் ஹூஸைன் தடுமாறிக் கொண்டிருந்தான்.

பொலிஸார் அங்கிருந்தேநாங்கள் குற்றவாளியை அடையாளம் கண்டு விட்டோம்என்று தங்கள் தலைமை அதிகாரிக்கு அறிவித்தார்கள்,

01.02.2023  புதன்கிழமை.

அதற்கு முதல் நாள் செவ்வாய்க் கிழமை காலையில் டானியலின் மனைவி, குழந்தைகளின் அறையை விட்டு வெளியே வந்த போது அதிர்ந்து விட்டாள். அவள் முன்னால் ஆயுதத்துடன் ஒருவன் நின்று கொண்டிருந்தான்

 

  • Like 8
  • கருத்துக்கள உறவுகள்
Posted

என்னய்யா திருப்பத்துக்கு மேல திருப்பமா திடுக்கிட வைக்கிறியள்?!
தொடருங்கோ தொடர்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அவசியமற்று வீட்டுக் கதவு திறக்கவும் கூடாது அப்படியே திறந்து விட்டுட்டு அங்க , இங்க  என்று திரியவும் கூடாது என்பதற்கு இந்தக் கதை ஒரு உதாரணம்.பகிர்வுக்கு மிகவும் நன்றி..தொடருங்கள்.✍️

  • கருத்துக்கள உறவுகள்
Posted

7

31ந்திகதி குற்றவாளியைக் கைது செய்வதற்கான ஏற்பாடுகள் எல்லாம் துரிதமாக நடந்தேறினகுற்றம் சாட்டப்பட்டவரது விபரங்கள், கொலைக்கான ஆதாரங்களை எல்லாம் ஆராய்ந்த ஸ்வேபிஸ் ஹால் மூத்த அரச சட்டத்தரணி லுஸ்ரிக், ‘குற்றவாளி என சந்தேகிக்கப்படுவரை கைது செய்து விசாரிக்கலாம்என பொலிஸாருக்கு அனுமதி வழங்கினார்.

எந்த இடத்தில் இலக்கத் தகடு இல்லாமல் சில்வர் நிற VW கார் நின்றதோ அதற்கு முன்னாலேயே குற்றவாளி என சந்தேகிக்கப்படுபவருடைய வீடும் இருந்தது. அந்தக் காருக்குப் பக்கத்தில் இருந்து ஆராய்ந்த இரண்டு பொலிஸாருக்கும் அன்று அது தெரிந்திருக்கவில்லை.

பொலிஸார் வீட்டுக்குள் சென்ற போது டானியல் ஷோபாவில் அமர்ந்து கோப்பி குடித்துக் கொண்டிருந்தான். பொலிஸாரைக் கண்டதும் எழுந்து கொண்டான். அவனது பத்து மற்றும் பன்னிரண்டு வயதான இரு பெண் குழந்தைகளும் தங்கள் அறையில் நித்திரையில் இருந்தார்கள். அறையை விட்டு வெளியே வந்த டானியலின் மனைவி ஆயுதங்களுடன் இருந்த பொலிஸாரைக் கண்டு பயந்து நின்றாள்.

வீட்டில் இருந்த அலுமாரிகள் எல்லாம் வெறுமையாக இருந்தன. தரையில் இருந்த சூட்கேஸுகள் நிரம்பி இருந்தன. சேர்பியாவுக்குப் பயணிப்பதற்கு தயாராக எல்லா ஏற்பாடுகளையும் செய்து விட்டு, கொஞ்சம் ஆற அமர இருந்து கோப்பி குடித்துக் கொண்டிருந்த டானியல் மாட்டிக் கொண்டான்

பொலிஸ் கொமிஸனர் Inge (41) டானியலைக் கைது செய்யும் போது, அவன் எந்த எதிர்ப்பும் காட்டாது அமைதியா இருந்தான். அவனைக் கைது செய்யும் போது அவனது பணப் பையில் பல 100, 200 ரூபா யூரோ தாள்கள் இருந்தன

டானியலுடன் யேர்மனிய மொழியில் உரையாட முடியவில்லை. அவனைக் கைது செய்து பயணிக்கும் போது, பொலிஸ் கொமிஸனர், “குற்றம் செய்ததாக சந்தேகித்து உன்னைக் கைது செய்து விசாரணைக்காக கொண்டு செல்கிறோம்என எழுதி அதை கூகுளில் சேர்பிய மொழியில் மொழி பெயர்த்து டானியலுக்குக் காட்டிய போதும் டானியல் அதை வாசித்து விட்டு அமைதியாக இருந்தான்.

 

Untitled Artwork

டானியல் மேல் சுமத்தப்பட்ட கொலை வழக்கு பன்னிரண்டு தடவைகளாக ஹைல்புறோன் நகரில் உள்ள நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கு நடந்த ஒவ்வொரு தடவையும் அவனது பெற்றோர், சகோதரிகள், மனைவி ஆகியோர் சேர்பியாவில் இருந்து வந்து பார்வையாளர் பகுதியில் அமர்ந்திருந்தார்கள். கை விலங்கிடப்பட்ட நிலையிலேயே டானியல் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டிருந்தான். வழக்கில் மொத்தமாக எழுபத்தி இரண்டு சாட்சிகள் விசாரிக்கப்பட்டார்கள்.

வழக்கின் 12வது அமர்வு 29.09.2023 அன்று நடைபெற்றது. அன்று டானியலின் 32வது பிறந்த தினம்.

 தீர்ப்பு வழங்குவதற்கு முன்னர், மூத்த அரச தரப்பு சட்டத்தரணி லுஸ்ரிக் தனது வாதத்தின் தொகுப்பை வாசிக்க ஆரம்பித்தார்.

 

Untitled Artwork

எடித்லாங்கின் மரணமும் ஒரு கொலைதான். போதுமான தடயங்களை சேகரித்து வைக்காததும், எடித்லாங்கின் உடல் தகனம் செய்யப் பட்டதாலும் விசாரணைகளை தொடர்ந்து செய்ய முடியாமல் போனதாகவும் பொலிஸ் தரப்பில் சொல்லப்பட்டிருக்கிறது. மேலும் குற்றம் சுமத்தப்பட்ட டானியலின் டீஎன்ஏ பரிசோதனையில், அவர் கொலை நடந்த இடத்தில் இருந்தார் என்பதற்கான ஆதாரங்களும் தரப்படவில்லை. ஆகவே அந்தக் கொலையில் டானியலை குற்றவாளியாகச் சேர்க்க முடியாது. 

Untitled Artwork

ஹைடமேரியின் கொலையில், கொலை நடந்த அன்று, டானியலை முதலாவது மாடியில் கண்டதாக சாட்சியங்கள் சொல்கின்றன. அன்று அவரது கையில் லீடில் சுப்பர் மார்க்கெற்றின் பிசுரங்கள் இருந்ததையும் கண்டிருக்கிறார்கள். கொலை நடந்த இடத்தில் டானியல் இருந்தார் என்பதற்கான தடயங்களை பொலிஸார் நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருக்கிறார்கள். டானியலின்டீஎன்ஏயும் கொலை நடந்த இடத்தில் எடுத்தடீஎன்ஏயும் பொருந்துகின்றன. டானியல் அணிந்திருந்த வெள்ளை அடிடாஸ் சப்பாத்தின் அடையாளங்களும், அது டானியலுடையதுதான் என அடையாளம் காணப்பட்டிருக்கிறது. கொலைக்கான ஆயுதம் கண்டுபிடிக்கப்படவில்லை.

இல்ஸ்கொபனில், முதியவரைத் தாக்கியது, கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட வழக்கில், பாதிக்கப்பட்ட முதியவர், டானியல்தான் அதைச் செய்தது என்பதை உறுதிப்படுத்தி இருக்கிறார். மேலும், முதியவர் டானியலின் மாதிரிப் படத்தை வரைய உதவி செய்திருக்கிறார். அவர் சொன்ன  அடையாளங்களை வைத்து வரையப்பட்ட மாதிரிப் படம் தொண்ணூறு சதவீதம் டானியலின் முகத்துடன் ஒத்துப் போயிருக்கிறது. அந்தப்படம் பின்னாளில் டானியலை இனம் காண பெரிதும் உதவியாகவும் இருந்திருக்கிறது. முதியவர் வீட்டின் அழைப்பு மணி, மற்றும் புதருக்குள் இருந்து எடுக்கப்பட்ட துப்பாக்கி,லீடில் சுப்பர் மார்க்கெற்றின் பிசுரங்கள்ஆகியவற்றில் இருந்து எடுக்கப்பட்ட தடயங்களை பரிசோதித்த போது அவை டானியலின்டீஎன்ஏஉடன் பொருந்தின. அன்று டானியல் பயணித்த கார் அவர், 29.12.2022 இல் ஹூஸைனிடம் இருந்து 350 யூரோக்களுக்கு வாங்கியது நிரூபிக்கப் பட்டது. காரை வாங்கும் போது, டானியல் விற்பனைக்கான ஒப்பந்தத்தை செய்ய விரும்பாததால்ஹூஸைன், தன்னுடைய பாது காப்புக்காக டானியலை அவரது கைத் தொலைபேசியில் படம் பிடித்திருக்கிறார். அந்தப் படம், பொலிஸ் திணைக்களத்தினால் வரையப்பட்ட மாதிரிப் படத்துடன் ஒத்துப் போயிருந்ததை கவனிக்க வேண்டும். அத்தோடு குற்றவாளியான டானியலையும் கண்டறிய அந்தப் படம் உதவி இருக்கிறது.

ஹேரயுற்றேயின் மரணத்தில், அவர் தாக்கப்பட்டு கொலை செய்த ஆயுதமான சுத்தியல், ஹேரயுற்றேயின் வீட்டில் இருந்து 100 மீற்றர் தூரத்தில் கண்டெடுக்கப் பட்டிருந்தது. அந்தக் கொலையில் சேகரிக்கப்பட்ட தடயங்களில் டானியலின் டீஎன்ஏ கண்டுபிடிக்கப் பட்டிருக்கிறது. அவர் அணிந்த சப்பாத்தின் பதிவும் கொலை நடந்த இடத்தில் இருந்திருக்கிறது. டானியலைக் கைது செய்து, அவரது வீட்டைச் சோதனை செய்த போது அவரது வெள்ளை அடிடாஸ் சப்பாத்து கழுவப்பட்டு சுத்தம் செய்யப்பட்டிருந்தாலும், சப்பாத்து கட்டும் நாடாவில் இரத்தக்கறை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.. அது ஹேரயுற்றேயின் இரத்தம் என்பது நிரூபிக்கப் பட்டுமிருக்கிறது.

கொலைக்கான 100 கிராம் உலோக எடையைக் கொண்ட சுத்தியலை  அவர் கட்டிடப் பொருள் விற்பனை நிலையத்தில் இருந்து களவாடி தனது ஜக்கற்றினுள் மறைத்துக் கொண்டு, காசாளர் பகுதியில் தொலைபேசி கதைப்பது போல் வெளியேறியது கமராவில் பதிவு செய்யப்பட்டிருந்தது. அந்த வீடியோ நீதி மன்றத்தில்  பார்வையிடப்பட்டிருந்தது….”

 

Untitled Artwork

“நான், எனது இரண்டு பிள்ளைகள் மனைவியுடன் ஸ்வேபிஸ் ஹாலுக்கு வந்தது, வாழ்வதற்காக மட்டுமே. யாரையும் நான் கொல்லவும் இல்லை, யாரிடமும் கொள்ளையடிக்கவும் இல்லை. எனக்கு ஆண்டவன்தான் சாட்சிஎன்று டானியல் சொன்னான்.

“ஆயுள் தண்ட னை . தண்டனை முடிவடைந்ததன் பின்னால் டானியலின் நடவடிக்கை கவனிக்கப்பட்டு, விடுதலைக்கு தகுதியானவர் என்றால் மட்டும் அவர் விடுதலை பெற முடியும்

அத்துடன் ஆயுள் தண்டனையை அவர் யேர்மனியிலேயே அனுபவிக்க வேண்டும்என  தீர்ப்பு வந்தது.

கொலைகள் நடந்து, குற்றவாளி பிடிபட்டு தண்டனையும் வழங்கப்பட்டு விட்டது. ஸ்வேபிஸ் ஹால் நகரம் இப்பொழுது அமைதி ஆயிற்றா என்று நீங்கள் கேட்கலாம். 14.10. 2020இல், எல்பிரிடே கூகெரைக் கொன்றது யார் என்று இன்னமும் தெரியவில்லை. அந்தக் கொலையைச் செய்தவர் இன்னமும் சுதந்திரமாக நடமாடிக் கொண்டுதானே இருக்கிறார். கொஞ்சம் ஆறப் போட்டு, இரண்டு வருடங்களுக்குப் பின்னாலும் ஏதும் நடக்கலாம். டானியல் கூட  ஒருவேளை, கூலிக்குக் கொலை செய்பவனாகவும் இருந்திருக்கலாம்

இருந்தால் பார்க்கலாம்.

 

  • Like 9
  • கருத்துக்கள உறவுகள்
Posted

பிறகும் ஒரு புதிரா?!
உங்கள் தொடருக்கு நன்றி கவி ஐயா.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

சட்டம் ஒரு கோழை ......ஆமையைப்போல்தான் நகரும்.......அப்பவும் அடிக்கடி தலையை ஓட்டுக்குள் இழுத்துக் கொள்ளும்......" ஏன் ஜட்ஜ் ஐயா, அந்த நிரூபணமான இரண்டு கொலை வழக்குகளுக்கு முதல்ல சரியான தண்டனையைக் குடுங்க.......பிறகு வரும் குற்றங்கள் நிரூபணமானால் அந்தத் தண்டனைகளையும் குடுங்கள் .......குற்றவாளி இறந்திருந்தாலும் பிரச்சினை இல்லை" .......பல வழக்குகளில் ஒருத்தர் செய்த குற்றங்களைப் பிரித்து பிரித்து 150 வருடங்களுக்கு மேல் தண்டனை கொடுக்கிறார்கள்......அதெல்லாம் சட்டப்படி செய்யும் ஏமாற்று வேலை என்று குடுக்கிறவருக்கும் தெரியும், வாங்கிறவருக்கும் தெரியும்.......பார்க்கிற மக்களுக்கும் தெரியும்.......!  😴

  • Like 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 7/2/2024 at 11:17, Kandiah57 said:

யூரோவலயம் வந்த பிறகு எல்லைகள் திறந்து விட்டார்கள் கிழக்கு ஐரோப்பியர்கள்  எந்தவொரு தடையுமின்றி வந்து போகலாம்  அதன் பின் இப்படியான குற்றங்களின்  எண்ணிக்கை அதிகம்   அவர்கள் செய்திருந்தால் பிடிப்பது கொஞ்சம் கடினம் இது எனது கருத்துகள்

Kandiah57, உங்கள் கருத்து ஏற்றுக் கொள்ளக் கூடியதுதான். ஆனால் இங்கே குற்றவாளி பிடிபட்டிருக்கிறான் என்பது ஆறுதலான விடயம்

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, Kavi arunasalam said:

Kandiah57, உங்கள் கருத்து ஏற்றுக் கொள்ளக் கூடியதுதான். ஆனால் இங்கே குற்றவாளி பிடிபட்டிருக்கிறான் என்பது ஆறுதலான விடயம்

ஆமாம் உங்கள் நேரத்திற்கும் தொடரை விரைவில் எழுதி முடித்தமைக்கும். நன்றி அண்ணை  அந்த பெண் பொலிஸ் பாராட்டப்பட வேண்டியவர்.  

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இன்று லீவு என்பதால் ஒரே மூச்சில் வாசித்துமுடித்தேன்! தொடருக்கான உத்திகளை நன்றாகவே கையாள்கின்றார் மூனா ஐயா! நல்லதோர் துப்பறியும் கதை போல இருந்தது. டானியல்தான் என்று அறிமுகப்படுத்தப்பட்ட உடனேயே தெரிந்துவிட்டது!  தமிழ்வாணன் கதைகள் படித்த அனுபவம்தான்🤓

ஒவ்வொரு புதன் கிழமையும் அத்தியாயங்களைப் போட்டிருக்கலாம்!

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
18 hours ago, கிருபன் said:

தமிழ்வாணன் கதைகள் படித்த அனுபவம்தான்

தமிழ்வானண் கதைகளை நான் வாசித்தது குறைவு. என் காலத்தில் (கபொத சாதாரணம் படித்த நேரம்) அதிகம் வாசித்தது பி.டி.சாமி என்பவர் எழுதிய மர்ம நாவல்கள்தான். அவர் எழுதும் பாணி எனக்குப் பிடித்திருந்தது. பிற்பாடு “அனிதா - இளம் மனைவி’ என்று பத்து வாரங்களில் குமுதம் சஞ்சிகையில் சுஜாதா வேகமாக எழுதிய கதை பிடித்துப் போய் அவர் பக்கம் விழுந்து விட்டேன்.

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

படிச்சு முடிச்சாச்சு  ஒரு கயித்தில கட்டி இழுத்துப்போயிட்டார்  வாழ்த்துக்கள் கவி ஐயா

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

அருமையான ஒர் தொடர் ....திரை பட்ம் பார்ப்பது போல் இருந்தது உங்களது எழுத்து நடை...பகிர்வுக்கு மிக்க நன்றி...

  • Like 1

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எனக்கு தெரியாது பார்க்கவில்லை ......ஆனால் இங்கு அர்ச்சுனா குரல் கொடுப்பது பாதிக்கப்பட்டுள்ளவர்கள் சார்பாக   அது எனக்கு பிடித்து உள்ளது  இந்த மக்களுக்குகாக   இதுவரை எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினர்களும்   பேசவில்லை   ஏன்?? அர்ச்சுனாவின். செயல்கள்  கோமாளித்தனமானது  தான்  100% ஒத்துக் கொள்கிறேன்  ஆனால் நான் அதை பார்க்கவில்லை   பார்க்க விரும்பவில்லை  ஏன்?   ஏனென்றால் எவருமே குரல் கொடுக்க விரும்பாத மக்களுக்குகாக. துணிந்து குரல் கொடுக்கிறார் யாரும் தட்டிக் கேட்கத,.....  கேட்க விரும்பதா. அநீதியையும் தட்டிக் கேட்கிறார்கள் மேலும்  வட்டுக்கோட்டையை சேர்ந்த ஒரு ஆசிரியை  தனது மாமியாரயை   திடீரென வீட்டில் விழுந்து மயங்கிய நிலையில்  யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதித்தார்கள்  பலமணி நேரத்தின் பின்னர்  ஒரு மருத்துவர் பல மருத்துவ மாணவர்கள் புடை சூழ. வந்தார்  நோயாளியை. தொட்டுக்கூட. பார்க்கவில்லை  எட்ட நின்று  ஆக கொலோரேஸ்.  என்றாராம்   அவர் போய் விட்டார்  சரியான மருத்துவம் அளிக்கபடவில்லை  இடையில் நடந்த பல விடயங்களை நான் மறந்து போனேன்     அந்த பெண் இறந்து விட்டார்  அதன் பின்னர் உடலை வெட்டி பார்த்து உள்ளார்கள்,... உடல் தைக்காமல். வட்டுக்கோட்டை பொலிஸார் மூலம் மரணவிசாரனை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது  இங்கே ஜேர்மனியில் என்னுடன் வேலை செய்த தமிழ் இளைஞர் ஒருவருக்கு இதோ பிரச்சனை  வாய் மூலம் சிறுநீரகம் வரை  ஒரு சிறு குழாயை விட்டு  கொழுப்பை அகற்றிவிட்டுயுள்ளார்கள்.   மூன்று மாதம் மருத்துவ லீவும். கிடைத்தது  மீண்டும்   நன்றாக வேலை செய்தார்    யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் நடந்த பல விடயங்கள் நீதிக்கு பிறம்பானவை    அவற்றிற்கு குரல் கொடுக்க. எவருமில்லை    இதுவரை எவருமில்லை  இப்போது அர்ச்சுனா என்ற ஒருவன் வந்துட்டாரு அவரை ஒரு கை பார்த்து விடவேண்டும். என்பது மேல் மட்டத்தின். விருப்பம்   அதற்கு நாங்கள் துணை போகலாமா.  ???? 🙏
    • இதே வைத்தியர் அர்ச்சுனா ஒரு முறை தனது மேலதிகாரி தன்னை சார் என்று அழைக்கூமாறு கேட்டதே நக்கல் நையாண்டி செய்து பல வீடியோக்களை வெளியிடப்பட்டதாக ஞாபகம்lément blockquote
    • சங்கி என்றால் சக தோழன் என்று அர்ததம் என்று சமீபத்தில் சீமான் கூறினார். இப்போது உண்மையான சங்கி என்றால் திமுக தான் என்கிறார். அப்படியாயின்  திமுக என் உண்மையான சக தோழன் என்று கூற வருகிறாரா? 
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.