Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
15 minutes ago, விசுகு said:

அதனை விடுதலைப் புலிகள் உரிமை கோரினார்களா?

எதிர்பார்த்த திசையில் தான் போகுது உரையாடல்: "நீலனை நாங்க தான் கொன்றோம், இவை தான் காரணங்கள்" என்றார்கள் - எல்லாம் மொக்கைக் காரணங்கள் (இதே காரணங்களுக்காக அன்ரன் பாலசிங்கத்தையும் நாமளே சாக்கோல்லியிருக்கோணும், சீரியசாக!😂)

 காரணம் சரியில்லை என்றவுடன், "புலிகள் உரிமை கோரினார்களா? எப்படி நிரூபிப்பீர்கள்? என்கிறார்கள். நான் நினைக்கிறேன் நீலன் விடயத்தில் ஹமாஸ் அல்லது ஹிஸ்புல்லா செய்திருக்கலாமென?? ஏனெனில் அவர்களிடம் தான் தற்கொலைப் படை இருந்தது?

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
17 minutes ago, Kandiah57 said:

இல்லை   இலங்கை பொலிஸார் எப்படி பட்டவர்கள் என்பதற்கு உதாரணம்  அன்று தொடங்கி இன்று வரை வளர்ச்சி அடைந்து வருகிறது  

மேலும் உங்கள் விருப்பம் போல் புலிகள் பூண்டோடு அளிக்கப்படுவிட்டார்கள்.  2009 ஆண்டுக்கு பின்னர் உங்களுக்கு பொற்காலம் தான்  

தமிழரின் அரசியல் போராட்டம் இன்னும் பல தலைமுறைக்கு கூட முன்னெடுக்க முடியாத அவல நிலையை  உருவாக்கி விட்டுச் சென்றது பொற்காலம் இல்லை. ஒருவரை அடித்து துவைத்து ICU நோயாளராக்குவது எளிது. அவரை மீண்டும் நலமாக்க நீண்ட காலம் எடுக்கும்.  

ஆனால், கருத்து தெரிவித்தாலே  படுகொலை செய்யப்படுவர் என்ற உயிர்ப் பயம் இன்றி  மக்கள் வாழ்வது ஒரு ஆறுதல் அவ்வளவுதான். 

  • Thanks 1
  • Downvote 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
16 minutes ago, Justin said:

 

 

எதிர்பார்த்த திசையில் தான் போகுது உரையாடல்: "நீலனை நாங்க தான் கொன்றோம், இவை தான் காரணங்கள்" என்றார்கள் - எல்லாம் மொக்கைக் காரணங்கள் (இதே காரணங்களுக்காக அன்ரன் பாலசிங்கத்தையும் நாமளே சாக்கோல்லியிருக்கோணும், சீரியசாக!😂)

 காரணம் சரியில்லை என்றவுடன், "புலிகள் உரிமை கோரினார்களா? எப்படி நிரூபிப்பீர்கள்? என்கிறார்கள். நான் நினைக்கிறேன் நீலன் விடயத்தில் ஹமாஸ் அல்லது ஹிஸ்புல்லா செய்திருக்கலாமென?? ஏனெனில் அவர்களிடம் தான் தற்கொலைப் படை இருந்தது?

இலங்கையில் நடைபெற்ற அத்தனை தற்கொலை தாக்குதல்களும் புலிகளால் மட்டுமே நடாத்தப்பட்டதா??

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
18 minutes ago, Justin said:

நான் நினைக்கிறேன் நீலன் விடயத்தில் ஹமாஸ் அல்லது ஹிஸ்புல்லா செய்திருக்கலாமென??

எனக்கு அது அமெரிக்க இஸ்ரேல் கூட்டுசதியாக இருக்கும் போல தெரிகின்றது 🤣

Edited by விளங்க நினைப்பவன்
  • Haha 1
  • Downvote 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
19 minutes ago, island said:

😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

இந்த கேள்வியை கேட்கும் போது அனைத்து மக்களுக்கும் இப்படி சிரிப்பு வரும். நீங்களும் மனதுக்குள் சிரித்தீர்கள் அல்லவா விசுகு. 😂😂😂😂😂

 

நீங்கள் வேண்டும் என்றால் சிரியுங்கள்

ஆனால் குற்றவாளி என்பதற்கும் குற்றம் சாட்டப்பட்டவர் என்பதற்குமான வித்தியாசத்தை மட்டுமே நான் குறிப்பிடுகிறேன். ஏனெனில் என் இனம் மீதான பொறுப்பு எனக்கிருக்கிறது. டொட். 

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, island said:

தமிழரின் அரசியல் போராட்டம் இன்னும் பல தலைமுறைக்கு கூட முன்னெடுக்க முடியாத அவல நிலையை  உருவாக்கி விட்டுச் சென்றது பொற்காலம் இல்லை. ஒருவரை அடித்து துவைத்து ICU நோயாளராக்குவது எளிது. அவரை மீண்டும் நலமாக்க நீண்ட காலம் எடுக்கும்.  

ஆனால், கருத்து தெரிவித்தாலே  படுகொலை செய்யப்படுவர் என்ற உயிர்ப் பயம் இன்றி  மக்கள் வாழ்வது ஒரு ஆறுதல் அவ்வளவுதான். 

இது 100% தமிழர் விடுதலை கூட்டணியின் பிழை  நான் இலங்கையில் நேரடியாக கண்டும் உள்ளேன் 

இனி பேசி பயனில்லை’  மொக்கையாக தெரியவில்லை 

தமிழ் ஈழம் தான் தீர்வு இது மொக்கையாக தெரியவில்லை 

ஆயுதப் போராட்டம் தான் வழி இது மொக்கையாக தெரியவில்லை 

ஆயுதப் பயிற்சி எடுக்கவில்லை மொக்கையாக தெரியவில்லை 

களத்தில் நிற்கவில்லை மொக்கையாக தெரியவில்லை 

போராடியவர்களுடன் நிற்க முடியவில்லை மொக்கையாக தெரியவில்லை 

இவர்கள் இல்லையென்றால் இளைஞர்கள் ஒருபோதும் ஆயுதம் ஏந்தி இருக்க மாட்டார்கள் 

இளைஞர்களை மூட்டாள்கள். ஆக்கிய காரணம் தான்  இந்த நிகழ்வுகளுக்கு காரணம் 

இளைஞர்கள் இலக்கு தமிழ் ஈழம் 

இவர்கள் வாழ்க்கை பாராளுமன்றத்தை அனுபவிப்பது  ஆயுதப் போராட்டம் என்று இவர்கள் சொன்னதன் கருத்துகள் என்ன?? 

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
23 minutes ago, Kandiah57 said:

முதலில் அவர் எழுதியது தீர்வு திட்டம் இல்லை ....பல ஆயிரக்கணக்கான இளைஞர்களை சிறைப்படுத்தி. ஆயுதங்களை களையும் திட்டம்  அதாவது இவர்களின் தீர்மானங்களின்படி ஆயுதமேந்தி போராட்டம் நடத்த துணிந்து பெற்றோர்களை உடன்பிறப்புகளை  விட்டுட்டு வந்தவர்களை  கொலை செய்யும் திட்டம்  

அது தான் கூறுகிறேன் புலிகள் மேற்கொண்ட அரசியல் படுகொலைகள் அனைத்தும் நியாயமானவை என்றும் புலிகளால் கொல்லப்பட்ட  அனைவரும் கொல்லப்பட வேண்டியவர்களே என்றும்,  இங்கு நீங்கள் வசிக்கும் நாட்டுப் பத்திரிகைகள்  இணையங்கள் , பின்னூட்டங்கள், முக நூல்கள்  ஆகியவற்றில் அந் நாட்டு மொழியில் எழுதி  புலிகள் பயங்கரவாதிகள் அல்ல கொல்லப்பட வேண்டியவர்களையே அவர்கள் கொன்றார்கள்  என்று நிறுவலாமே? 

அதை செய்வது  சொந்த வாழ்ககைக்கு உலை வைக்கும் என்பதால் எந்த தேசியரும் அதை செய்ய மாட்டார் என்பது தெரியும். 😂 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 minutes ago, விசுகு said:

இலங்கையில் நடைபெற்ற அத்தனை தற்கொலை தாக்குதல்களும் புலிகளால் மட்டுமே நடாத்தப்பட்டதா??

 இல்லை. புலிகள் இல்லாமல் போன பின்னர் நடந்த ஈஸ்ரர் குண்டு வெடிப்பு புலிகள் அல்ல!

அப்ப சீரியசாக நான் பகிடிக்குச் சொன்னதை வைத்து ஹமாஸ், ஹிஸ்புல்லா தான் நீலனைக் கொன்றனர் என்கிறீர்களா? பிறகேன், மேல ரண்டு ஜட்ஜ் மார் நீண்ட தீர்ப்பெழுதி மெனக்கெட்டவையாம்?

இப்படி கொமெடியனாக நீங்கள் மாறுவதைப் பார்க்க எனக்குக் கூசுது!

  • கருத்துக்கள உறவுகள்
Posted
51 minutes ago, island said:

சந்திரிக்கா தோல்வியை தழுவவில்லை புத்தன். 1999 ம் ஆண்டு தேர்தலில் அவர் வெற்றி பெற்றிருந்தார்.  யாழ்பாணத்தில் கூட கணிசமான வாக்குகளைப் பெற்றிருந்தார். 

1999 ல் அவரை மனித வெடிகுண்டு மூலம் கொல்ல முயன்று பயங்கரவாதிகள் என்ற அரசின் பிரச்சாரத்துக்கு  எம்மவர் துணை புரிந்தார்கள். 

ஓ அப்படியா.....தொடர்ந்து வந்த தேர்தலில் அவர் பங்கு பற்ற வில்லையா? 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, putthan said:

ஓ அப்படியா.....தொடர்ந்து வந்த தேர்தலில் அவர் பங்கு பற்ற வில்லையா? 

இல்லை. 

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, island said:

இல்லை. 

 

1 minute ago, island said:

இல்லை. 

Chandrika Kumaratunga was elected Executive President from 1994-2005, becoming Sri Lanka's first and only female Executive President.

Former Executive President Chandrika Bandaranaike Kumaratunga was born on June 29, 1945 into a family with a long history of public service. Her father, Solomon Bandaranaike, an oxford educated barrister was elected Prime Minister of Sri Lanka in 1956. He was assassinated in 1959, when Chandrika was 14 years old. Following the death of her husband, Chandrika's mother, Sirimavo,  entered politics and became the world's first female Prime Minister when she was elected into office in 1960. She served a total of three terms and 18 years as Prime Minister of Sri Lanka.

Chandrika completed her secondary education in Sri Lanka, after which she traveled to Paris to study at the prestigious Political Science Institute (Science Po) of the University of Paris. In 1970, she graduated with a degree in Political Science and entered a Ph.D. Program in Development Economics at the École Pratique des Hautes Études, University of Paris, where she studied from 1970-1973.

Upon returning home to Sri Lanka, Chandrika served as the Principal Director of the Land Reforms Commission, as the chairperson to the Janawasa Commission, which established cooperative farms and eventually as an expert consultant for the Food and Agriculture Organization of the United Nations.

Shortly after the assassination of her husband by extremists in 1988, Chandrika entered politics. In 1993, she was elected Chief Minister of the Western Province in a landslide victory. Then in August 1994, she followed in the footsteps of her parents and was elected Prime Minister of Sri Lanka.  

Chandrika temporarily retired from active politics in 2005, after serving two terms as Executive President. In 2015, Kumaratunga was appointed as the Chairperson of the Office for National Unity and Reconciliation.

She continues to work, however, towards her vision of a more inclusive and democratic Sri Lanka through the CBK Foundation for Democracy and Justice (FDJ) and the South Asian Policy and Research Institute (SAPRI),  two non-profit, non-political bodies Chandrika established shortly after leaving office.

CONNECT WITH THE COUNCIL OF WOMEN WORLD LEADERS

அதாவது அவர் இளைப்பாறி விட்டார்
Just now, putthan said:

National Unity and Reconciliation.

இன்னும் இந்த வசனத்தை சொல்லி  கொண்டு இருக்கினம் .....

  • கருத்துக்கள உறவுகள்
Posted
20 minutes ago, island said:

அது தான் கூறுகிறேன் புலிகள் மேற்கொண்ட அரசியல் படுகொலைகள் அனைத்தும் நியாயமானவை என்றும் புலிகளால் கொல்லப்பட்ட  அனைவரும் கொல்லப்பட வேண்டியவர்களே என்றும்,  இங்கு நீங்கள் வசிக்கும் நாட்டுப் பத்திரிகைகள்  இணையங்கள் , பின்னூட்டங்கள், முக நூல்கள்  ஆகியவற்றில் அந் நாட்டு மொழியில் எழுதி  புலிகள் பயங்கரவாதிகள் அல்ல கொல்லப்பட வேண்டியவர்களையே அவர்கள் கொன்றார்கள்  என்று நிறுவலாமே? 

அதை செய்வது  சொந்த வாழ்ககைக்கு உலை வைக்கும் என்பதால் எந்த தேசியரும் அதை செய்ய மாட்டார் என்பது தெரியும். 😂 

ஏன்?? எதற்காக?? என்ன பிரயோஜனம்??  புலிகள் இருக்கிறார்களா?? 2009 பிரச்சனை தீர்ந்து விட்டது இல்லையா??? இனி புலிகள் வரமாட்டார்கள்  நீலன் போல்  நிறையவே தலைவர்கள் உண்டு” அவர்கள் தீர்வுகள் எழுதுவார்கள்    எவரும் கொல்லப் போவதில்லை   தமிழர்கள் மகிழ்ச்சியாக வாழ்வார்கள். வாழ்த்துக்கள்  

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
27 minutes ago, Justin said:

 இல்லை. புலிகள் இல்லாமல் போன பின்னர் நடந்த ஈஸ்ரர் குண்டு வெடிப்பு புலிகள் அல்ல!

அப்ப சீரியசாக நான் பகிடிக்குச் சொன்னதை வைத்து ஹமாஸ், ஹிஸ்புல்லா தான் நீலனைக் கொன்றனர் என்கிறீர்களா? பிறகேன், மேல ரண்டு ஜட்ஜ் மார் நீண்ட தீர்ப்பெழுதி மெனக்கெட்டவையாம்?

இப்படி கொமெடியனாக நீங்கள் மாறுவதைப் பார்க்க எனக்குக் கூசுது!

எதற்காக எல்லோரும் நீலனை பிடித்து தொங்குகிறீர்கள் என்று தெரியவில்லை. நான் கேட்ட கேள்வி நீலன் பற்றி அல்லவே??

தற்கொலை தாக்குதல் என்றால் அது புலிகள் தான் என்ற குற்றச்சாட்டில் எனக்கு உடன்பாடு இல்லை. 

Edited by விசுகு
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, Kandiah57 said:

ஏன்?? எதற்காக?? என்ன பிரயோஜனம்??  புலிகள் இருக்கிறார்களா?? 2009 பிரச்சனை தீர்ந்து விட்டது இல்லையா??? இனி புலிகள் வரமாட்டார்கள்  நீலன் போல்  நிறையவே தலைவர்கள் உண்டு” அவர்கள் தீர்வுகள் எழுதுவார்கள்    எவரும் கொல்லப் போவதில்லை   தமிழர்கள் மகிழ்ச்சியாக வாழ்வார்கள். வாழ்த்துக்கள்  

தீர்வுகளை வழங்காமல் இருக்க புலிகளை  உயிர்ப்புடன் வைத்திருக்க வேண்டும் ....துவாரகா,பொட்டர்,தலைவர் வருகினம் என்று சொல்வது போல இதுவும் ஒன்று என கடந்து  செல்ல வேணும் ....
புலிகளினால் நல்லிணக்கம் கெட்டு விட்டது அதை சரி செய்ய ஒன்று பட்ட இலங்கையில் சமாதானம்,சாந்தி போன்றவற்றை நிலை நாட்ட வேண்டும்..

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 minutes ago, விசுகு said:

எதற்காக எல்லோரும் நீலனை பிடித்து தொங்குகிறீர்கள் என்று தெரியவில்லை. நான் கேட்ட கேள்வி நீலன் பற்றி அல்லவே??

தற்கொலை தாக்குதல் என்றால் அது புலிகள் தான் என்ற குற்றச்சாட்டில் எனக்கு உடன்பாடு இல்லை. 

இருக்கிற தீர்வை நடை முறை படுத்தாமல் திண்டாடுகிறார்கள் ...
மாவட்ட அபிவிருத்தி சபை திட்டமும் நல்ல திட்டம் என்று சொல்லுவினம் ....அதை தான் இப்ப அரசாங்கம் செய்ய முயலுகின்றது ..

75 வருடங்களாக தமிழர் பிரதேசம் என ஒன்று இருக்க கூடாது என அவர்கள் வேலை செய்கின்றனர் ....அப்படி இருந்தால் அது அவர்களுக்கு என்றோ ஒரு நாள் தீமை தரும் என நம்புகின்றனர்....

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
14 minutes ago, விசுகு said:

எதற்காக எல்லோரும் நீலனை பிடித்து தொங்குகிறீர்கள் என்று தெரியவில்லை. நான் கேட்ட கேள்வி நீலன் பற்றி அல்லவே??

தற்கொலை தாக்குதல் என்றால் அது புலிகள் தான் என்ற குற்றச்சாட்டில் எனக்கு உடன்பாடு இல்லை. 

யோசப் பராசாசிங்கம். பாராளுமன்ற உறுப்பினர் கொலை பற்றி கவலையில்லை ...காரணம் என்ன?? 

குமார் பொன்னம்பலம் கொலை பற்றி கவலையில்லை காரணம் என்ன?? 

ரவிராஜ் கொலை பற்றி கவலையில்லை காரணம் என்ன?? 

ஆனால் தீர்வு திட்டம் என்ற பெயரில்  ஆயுதப் போராட்டங்களை செய்த இளைஞர்களை  மடக்க சதி திட்டம் திட்டியது பற்றி கவலைப்படுகிறார்கள்   

நான் அறிந்த வகையில் புலிகள் பலமுறை  விசாரணையின் பின் குற்றம் நிறுபிக்கப்பட்டால் மட்டும் தண்டனை உண்டு”    புலிகளின். வழியில்  குறுக்கீடும் எவரும் தப்பிக்கவே முடியாது  

இது அவர்களின் சட்டம்   

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
32 minutes ago, விசுகு said:

எதற்காக எல்லோரும் நீலனை பிடித்து தொங்குகிறீர்கள் என்று தெரியவில்லை. நான் கேட்ட கேள்வி நீலன் பற்றி அல்லவே??

தற்கொலை தாக்குதல் என்றால் அது புலிகள் தான் என்ற குற்றச்சாட்டில் எனக்கு உடன்பாடு இல்லை. 

சரி, 2009 வரையான காலத்தில் இலங்கையில் தற்கொலைத் தாக்குதல் நடத்திய வேறு அமைப்புகள், நபர்கள் யாரென்று சொல்லி விடுங்கள். இது பலருக்கு புதினமாக இருக்கும்😎, ஆனால் புதினம் பார்க்கத் தானே யாழுக்கு வாசகர்கள் வாறவை?

யார் அது வேற தற்கொலை தாரிகள்?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 20/2/2024 at 15:56, island said:

கந்தையா போரிடும் புலிகளை இராணுவம் கொன்றால் அது  இன அழிப்பும் ஆகாது போற்குற்றமும் ஆகாது. ஆனால்,  ஆயுதமின்றி சரணடைந்த புலிகளை இலங்கை இராணுவம் கொலை செய்தது நிச்சயமாகப் போர்க குற்றம் தான்.  ஆனால் 1990 ல் ப  ஆயுதமின்றி சரண்டைந்த பொலிசாரை  புலிகளும் சுட்டுக் கொலை செய்த போர்க்குற்றத்தை செய்துள்ளார்கள்  என்பது தமிழ் மக்களின் போராட்டத்தை பின்னடையச்செய்த நிகழ்வுதான். 

அப்போ ஏன் சிங்கள அரசு போர்க்குற்ற விசாரணைக்கு பின்னடிக்கிறது. நீங்களே புள்ளிகள்(points) எடுத்து கொடுக்கிறீர்கள்.

3 hours ago, Justin said:

உங்களுடைய இந்த கொல்லப் பட்டவரின் மீது, எள்ளலுடன் குற்றத்தைச் சுமத்தி, கொலை செய்தவர்களின் மீது ஒரு மாசும் படாமல் பாதுகாக்கும் அலட்சிய "அலட்டல்" இருக்கிறதே😂? இது தான் எங்கள் தலைமுறை தமிழ் தேசிய அரசியலில் இருந்து ஒதுங்கி நிற்பது நல்லதென்கிற எண்ணத்தை ஏற்படுத்துகிறது எனக்கு.

இப்படியான அறிவலட்சியத்தோடும், மனிதாபிமான உணர்வும் இல்லாமல் இருக்கும் தலைமுறையின் கைகளில் தமிழர்களின் ஆட்சி கிடைக்காமல் இருப்பது தமிழர்களுக்கு நல்லது!

சுத்தமான அடுத்த தலைமுறைக்கு அது கிடைத்தால் கிடைத்து விட்டுப் போகட்டும், அவர்களை நஞ்சூட்டாமல் காத்தால் போதும்!

சிங்களவர்கள் யாரும் கோத்தபய  இனப்படுகொலை செய்துள்ளார் என்பதை எங்காவது வாசித்துள்ளீர்களா??

  • Thanks 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
19 minutes ago, Kandiah57 said:

யோசப் பராசாசிங்கம். பாராளுமன்ற உறுப்பினர் கொலை பற்றி கவலையில்லை ...காரணம் என்ன?? 

குமார் பொன்னம்பலம் கொலை பற்றி கவலையில்லை காரணம் என்ன?? 

ரவிராஜ் கொலை பற்றி கவலையில்லை காரணம் என்ன?? 

ஆனால் தீர்வு திட்டம் என்ற பெயரில்  ஆயுதப் போராட்டங்களை செய்த இளைஞர்களை  மடக்க சதி திட்டம் திட்டியது பற்றி கவலைப்படுகிறார்கள்   

நான் அறிந்த வகையில் புலிகள் பலமுறை  விசாரணையின் பின் குற்றம் நிறுபிக்கப்பட்டால் மட்டும் தண்டனை உண்டு”    புலிகளின். வழியில்  குறுக்கீடும் எவரும் தப்பிக்கவே முடியாது  

இது அவர்களின் சட்டம்   

இவ்வளவு குற்றங்கள் செய்தபவர்கள் மேலும் எம்மை படுகுழியில் தள்ளுகிறார்கள். இங்கு புலிகளில் பிழை பிடித்து  போராட்டத்தை சீரிய வழியில் முன்னெடுக்க போகிறார்கள் சிலர்.

அது சரி நீலன் தான் பீரிசுடன் செய்த வரைபுகளை அக்காலத்தில் போராடிய புலிகளுடனோ மக்களுடனோ பகிர்ந்திருந்தார்களா?? அல்லது மூடிய அறையில் வரையப்பட்டதா?

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 minutes ago, Justin said:

சரி, 2009 வரையான காலத்தில் இலங்கையில் தற்கொலைத் தாக்குதல் நடத்திய வேறு அமைப்புகள், நபர்கள் யாரென்று சொல்லி விடுங்கள். இது பலருக்கு புதினமாக இருக்கும்😎, ஆனால் புதினம் பார்க்கத் தானே யாழுக்கு வாசகர்கள் வாறவை?

யார் அது வேற தற்கொலை தாரிகள்?

புலிகளால் உரிமை கோரப்படாத எந்த தாக்குதலையும் நான் புலிகளின் தலையில் போடமாட்டேன்.  அவை குற்றம் சாட்டப்பட்டவர் மட்டுமே. குற்றத்தை நிரூபிக்க நீதியான சர்வதேச விசாரணை தேவை. அதற்கு புலிகள் எப்பொழுதுமே தயாராக இருந்ததே சாட்சி. அதேநேரம் சிங்கள அரசு அதற்கு தயாராக இல்லாதது இத்தாக்குதல்களின் அதன் பங்கை உறுதி செய்கிறது. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 minutes ago, Kandiah57 said:

யோசப் பராசாசிங்கம். பாராளுமன்ற உறுப்பினர் கொலை பற்றி கவலையில்லை ...காரணம் என்ன?? 

குமார் பொன்னம்பலம் கொலை பற்றி கவலையில்லை காரணம் என்ன?? 

ரவிராஜ் கொலை பற்றி கவலையில்லை காரணம் என்ன?? 

ஆனால் தீர்வு திட்டம் என்ற பெயரில்  ஆயுதப் போராட்டங்களை செய்த இளைஞர்களை  மடக்க சதி திட்டம் திட்டியது பற்றி கவலைப்படுகிறார்கள்   

நான் அறிந்த வகையில் புலிகள் பலமுறை  விசாரணையின் பின் குற்றம் நிறுபிக்கப்பட்டால் மட்டும் தண்டனை உண்டு”    புலிகளின். வழியில்  குறுக்கீடும் எவரும் தப்பிக்கவே முடியாது  

இது அவர்களின் சட்டம்   

ஒரு அரசியல் கொலை பற்றிப் பேசாவிட்டால் கொலைக்கு ஆதரவு என்கிறீர்களா? இதுவும் உங்கட "வில்லாய் வளைஞ்சு குத்தி முறிந்த" கந்தையா தியரிகளில் ஒன்றா😂?

இங்கே யாராவது இந்தக் கொலைகளைப் பற்றிப் பேசப் பட்ட திரிகளில்,  இந்த பலியான நபர்கள் கொல்லப் படவேண்டிய காரணங்களை அடுக்கி வாதிட்டுக் கண்டிருக்கிறீர்களா? நான் யாழில் உறுப்பினராக இருக்கும் கடந்த 17 வருடங்களில் அப்படி நடந்து காணவில்லை. ஏனென்று நினைக்கிறீர்கள்? அப்படி ஒரு அரசியல் கொலைக்காளானவரின் கொலைக்கு நியாயம் கற்பிப்பது இன்னும் கொலைகளை ஊக்குவிக்கும் செயல்பாடு.
இப்படியான நிராயுத பாணிகளின் கொலைகளுக்கு நியாயம் கற்பிக்காமல் ஒருவரைத் தடுப்பது மனிதத் தன்மை. இதில் அரசியல் சார்பு/எதிர்ப்பு எதுவும் அவசியமில்லை.

உதாரணமாக நீலனை எடுங்கள், அவரது மக்கள், பேரப் பிள்ளைகள், சகோதரங்கள் இன்னும் இருக்கிறார்கள். அவர் அநியாயமாகக் கொல்லப் பட்டார் என்று என்னைப் போலவே அவர்களும் நம்புகிறார்கள். இங்கே உங்களைப் போன்றோர் கொலை செய்தவனுக்கே மரண தண்டனை வழங்காத ஐரோப்பிய நாட்டில் இருந்து கொண்டு, அவர் கொல்லப் பட்டதை எள்ளலோடு நியாயப் படுத்தும் போது, நீலனின் உறவுகளின் காயத்தில் உப்புத் தடவுகிறீர்கள் என்ற குறைந்த பட்ச புரிதல் கூட இல்லாமலா இருக்கிறீர்கள்?

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 minutes ago, Justin said:

சரி, 2009 வரையான காலத்தில் இலங்கையில் தற்கொலைத் தாக்குதல் நடத்திய வேறு அமைப்புகள், நபர்கள் யாரென்று சொல்லி விடுங்கள். இது பலருக்கு புதினமாக இருக்கும்😎, ஆனால் புதினம் பார்க்கத் தானே யாழுக்கு வாசகர்கள் வாறவை?

யார் அது வேற தற்கொலை தாரிகள்?

இந்த தளத்தின் போக்கை திசை திருப்புவதாக நினைக்க வேண்டாம்....

ராஜீவ் காந்தியின் கொலை தொடர்பாக  இப்பொழுது மீண்டும் சுப்ரமணிய சுவாமிகளை பற்றி கதைகள் பேசப்படுகிறது .... புலிகளின் உறுப்பினர்களை வைத்து வேறு சில புலனாய்வு சக்திகள் செயல் பட்டிருக்க‌லாம்....கோத்தா அரசு பதவிக்கு வர இந்திய புலனாய்வு மற்றும் சிறிலங்கா புலனாய்வு இணைந்து இஸ்லாமிய தீவிரவாதத்தை  பயன்படுத்தி குண்டு வெடிப்பை நடத்தியது போன்று .....

நீலனின் கொலையும் இருக்க சந்தர்ப்பம் உண்டு என விசுகு நினைத்திருக்கலாம்....

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, island said:

அது தான் கூறுகிறேன் புலிகள் மேற்கொண்ட அரசியல் படுகொலைகள் அனைத்தும் நியாயமானவை என்றும் புலிகளால் கொல்லப்பட்ட  அனைவரும் கொல்லப்பட வேண்டியவர்களே என்றும்,  இங்கு நீங்கள் வசிக்கும் நாட்டுப் பத்திரிகைகள்  இணையங்கள் , பின்னூட்டங்கள், முக நூல்கள்  ஆகியவற்றில் அந் நாட்டு மொழியில் எழுதி  புலிகள் பயங்கரவாதிகள் அல்ல கொல்லப்பட வேண்டியவர்களையே அவர்கள் கொன்றார்கள்  என்று நிறுவலாமே? 

அதை செய்வது  சொந்த வாழ்ககைக்கு உலை வைக்கும் என்பதால் எந்த தேசியரும் அதை செய்ய மாட்டார் என்பது தெரியும். 😂 

அதெப்படி கடந்த பல வருடங்களாக பயங்கரவாதிகளாக புலிகள் பட்டியலில் உள்ளார்கள்??  பொழுது போக்குக்காக அவர்களை பயங்கரவாதிகள் பட்டியலில் இவ்வளவு நீண்ட காலம் வைத்துள்ளார்கள்?

Just now, putthan said:

இந்த தளத்தின் போக்கை திசை திருப்புவதாக நினைக்க வேண்டாம்....

ராஜீவ் காந்தியின் கொலை தொடர்பாக  இப்பொழுது மீண்டும் சுப்ரமணிய சுவாமிகளை பற்றி கதைகள் பேசப்படுகிறது .... புலிகளின் உறுப்பினர்களை வைத்து வேறு சில புலனாய்வு சக்திகள் செயல் பட்டிருக்க‌லாம்....கோத்தா அரசு பதவிக்கு வர இந்திய புலனாய்வு மற்றும் சிறிலங்கா புலனாய்வு இணைந்து இஸ்லாமிய தீவிரவாதத்தை  பயன்படுத்தி குண்டு வெடிப்பை நடத்தியது போன்று .....

நீலனின் கொலையும் இருக்க சந்தர்ப்பம் உண்டு என விசுகு நினைத்திருக்கலாம்....

கதிர்காமரின் கொலையை  சிங்கள அரசே நடாத்தியதாக  சிங்கள ஊடகங்கள்/ அரசியல்வாதிகள் கருத்து தெரிவித்தார்கள். ஆனால் அத்தருணம் புலிகள் மீது பழி  போடப்பட்டது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, விசுகு said:

புலிகளால் உரிமை கோரப்படாத எந்த தாக்குதலையும் நான் புலிகளின் தலையில் போடமாட்டேன்.  அவை குற்றம் சாட்டப்பட்டவர் மட்டுமே. குற்றத்தை நிரூபிக்க நீதியான சர்வதேச விசாரணை தேவை. அதற்கு புலிகள் எப்பொழுதுமே தயாராக இருந்ததே சாட்சி. அதேநேரம் சிங்கள அரசு அதற்கு தயாராக இல்லாதது இத்தாக்குதல்களின் அதன் பங்கை உறுதி செய்கிறது. 

😂😂🤣அட்ரா சக்கை!

அப்ப விசுகர் ஐரோப்பிய முறைப்படி "உரிய படிமுறைப்படி-due process" போகும் ஆள் போல! அந்த உரிய படிமுறை புலிகளுக்கு மட்டும் தான் கிடைக்க வேணுமோ அல்லது புலிகள் தண்டனை கொடுத்த அரசியல்வாதிகளுக்கும் தேவையோ😎? உதாரணமாக, நீலன் மீது புலிகள் வைத்த குற்றப் பத்திரிகை எங்கே? எப்படி அவர் விசாரிக்கப் பட்டார்? எங்கே due process?

பி.கு: 10 பக்கம் வந்த பின்னர் திடீரென்று குத்துக் கரணமடித்து நீலனைப் புலிகள் கொல்லவில்லை என்றிருக்கிறீர்கள், அப்படியே கந்தயரையும் ரியுனை மாத்தச் சொல்லுங்கோ!

3 minutes ago, putthan said:

.

நீலனின் கொலையும் இருக்க சந்தர்ப்பம் உண்டு என விசுகு நினைத்திருக்கலாம்....

சேச்சே நினைத்திருக்க மாட்டார்- நம்புகிறார் அப்படி😂

விசுகரோடான அரசியல் கொலை பற்றிய உரையாடல்கள் வருடக் கணக்காக இப்படித் தான் முடிகின்றன.

முதலில் வேள்விக்காக கொலை, பின்னர் அங்க இங்க ஓட்டம், இது இறுதிப் பாகம்: புலிகள் செய்யவில்லை!

இந்த ஜோக் அமீர் யோகேஸ்வரன் கொலை பற்றிய திரியிலும் நடந்தது! இனி இந்த திரி "சிரிக்க சிறக்க" மாதிரி இருக்கும்🤣!

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
22 hours ago, Cruso said:

இங்கு சிலர் போராளிகளின் தவறுகளை, விஸேடமாக புலிகளின் தவறுகளை சுட்டி காடட கூடாது என்பதில் கருத்தாக இருக்கிறார்கள்.

மனடையன் குழு, ஈபிடிபி, ப்ளட் போன்ற  இயக்கங்களை பற்றி எழுதினபோது எதிர்க்கருத்து இல்லை. நன்றாக பச்சை குத்தினார்கள். இப்போது நிலைமை வேறாக மாறி இருக்கிறது.

நெற்றி கண் திறப்பினும் குற்றம் குற்றமே. 

 

தலைவர் பிரபாகரன் பற்றி எழுதிய போதே(வன்மம்) நீங்கள் யாரென்று புரிந்து விட்டது. அக்கருத்தை காணவில்லை. நிர்வாகம் தூக்கி விட்டது போல.  
இப்போ பத்தோடு பதினொன்றாக ...........................

 

On 19/2/2024 at 14:35, விளங்க நினைப்பவன் said:

Vasee யை நான் ஒரு சித்தாந்தவாதி என்று எல்லோ நினைத்தேன்.  இடைக்கிடை இவர் குரான் படிக்கின்றாரோ என்றும் குழம்பியதுண்டு. ஈழத்து நாம் தமிழர் கட்சி தலைவர் போன்று இப்போது பேசுகின்றார்.

அப்போ நீங்கள் என்ன படிக்கிறீர்கள்?? குரானில் எதுவும் கூடாமல் சொல்லப்பட்டுள்ளதா?
நாம் தமிழரை தாக்குவதால் நீங்கள் தி மு.கவின் அடிபொடியோ??

Guest
This topic is now closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.