Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

ஆமாம் கேட்கலாம்   .. நான் மறிக்கவில்லை ..இவர் மட்டும் தான் மனிதன் . என்பது இல்லை  சுட்டுக் கொல்லப்பட்ட அனைவரும் மனிதர்கள் தான்  .  அதையும் ஏன் என்று கேளுங்கள் ..  இவர் எழுதிய தீர்வு ஏன் நடைமுறைப்படுத்தப்படவில்லை,??  30 ஆண்டுகள் கடந்து விட்டது ... போராட்டம் தோற்றதற்க்கும். தீர்வு கிடைக்கமைக்கும்  முழு காரணம்  தமிழ் தலைவர்கள் தான் ....ஆயுதப் போராட்டம் என்று தீர்மானம் எடுத்த பின்னர்

1.    ஆயுதம் ஏந்தி போராடி இருக்க வேண்டும்

2.   விருப்பம் இல்லையென்றால் அரசியலிலிருந்து ஒதுக்கி இருக்க வேண்டும்

3. .அல்லது இளைஞர்களுடன். சேர்த்து போராடி இருக்க வேண்டும்  ஆயுதம்  துக்கமால் ஒத்துழைப்பு வழங்கி இருக்கலாம்

4,. இவர்கள் அரசியலில் இருந்தது தங்களை வளர்த்து கொள்வதற்குத்தான்

5,.எங்களுக்கு தேவை தீர்வு  இவருடைய படிப்பு அல்ல  வன்முறை மோசமானது தான் ஆனால் அடிமைத்தனம் வன்முறையை விட மோசமானது

6.  இவர் தீர்வு எழுதியதுக்கு தான் கொல்லப்பட்டார்  என்பது சரியா?? வேறு காரணம்கள் இல்லையா?  யாழ் கள உறவு ஒருவர்  விளக்கம் அளித்து இருந்தார்.  

ஒரு பிழையை நியாயப்படுத்துவதற்கு குத்தி முறிவதைப் பார்க்க பரிதாபமாக இருக்கிறது. 

😩

  • Replies 379
  • Views 35.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • nedukkalapoovan
    nedukkalapoovan

    அப்போ உங்கள் பார்வையில் கொலை செய்யப்பட்டவர்கள்.. நீதி நியாயவான்கள். அப்பாவிகளின் கொலைகளில் சவாரியே செய்யவில்லை. ஒரு இனத்தையே படுகொலை செய்தவன்கள் எல்லாம் வாழுறாங்கள் இன்னும். அதனால்.. இந்த தத்துவா

  • ரஞ்சித்
    ரஞ்சித்

    ஒருவருக்கு புலிகளை வசைபாடவும் அவர்களது ஜனநாயக விரோத செயற்பாடுகளை வாரியிறைக்கவும் வடிகால் ஒன்றும் கிடைத்த மகிழ்ச்சி. இன்னும் இருவருக்கு புலியெதிர்ப்பு என்பதற்கூடாக உள்நுழைந்து பேரினவாதத்தின் திட்டத்தை

  • Kavi arunasalam
    Kavi arunasalam

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Kapithan said:

ஒரு பிழையை நியாயப்படுத்துவதற்கு குத்தி முறிவதைப் பார்க்க பரிதாபமாக இருக்கிறது. 

😩

நீங்கள் பரிதாபத்துக்குரியவர் தான்  ...எனது கருத்துக்கு பதில் எழுத முடியாமல் இருக்கிறது   .. .நீங்களும் அது பிழை தான் என்று ஏன் குத்தி முறியக்கூடாது?? 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

பெரிய படிப்பு படித்தவர். ஏன் பாராளுமன்ற உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டார்??? இரண்டாவது வருமானமா ?? 

பொதுவாக தேர்தலில் வெற்றி வருபவர்கள் (90 %) முடடால்களாக, களவு, கொலை , கொள்ளை அடிப்பவர்களாக இருப்பார்கள். உதாரணத்துக்கு வடக்கு கிழக்கு பாராளுமன்ற உறுப்பினர்களை எடுத்து பாருங்கள்.  

எனவேதான் நாடடை வழி நடத்தக்கூடிய படித்த , ஒழுக்கமுள்ளவர்களை தெரிவு செய்ய இந்த நியமன உறுப்பினர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.  

சில நேரங்களில் அரசியல் காரணங்களுக்காக குப்பைகளையும் கொண்டு வருவதுண்டு. அதுதான் இந்த நாட்டில் உள்ள பிரச்சினை.

ஆனால் இங்கு நீலனை ஒரு நல்ல நோக்கத்துக்காகவே கொண்டு வந்தார்கள் என்பது நிச்சயம். 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kandiah57 said:

இந்த தகமைகள். தமிழ் ஈழம் என்றும் ஆயுதப் போராட்டம் செய்வது… தான்  வழி என்றும்  முடிவு எடுக்க முதலும் இருந்தது தானே??  அந்த நேரத்தில் தீர்வு வரைந்து இருக்கலாம்,.....ஏன் செய்யவில்லை  ...?? இவர் பெரிய படிப்பு படித்து விட்டார் என்று சிங்களவன் தீர்வு தந்து விடுவார்களோ?? அல்லது பாராளுமன்றம் அங்கீகாரம்…………………… வழங்கி விடுமா?? தயவுசெய்து பதில்கள் அளிக்கவும்   

ஏன் இல்லை? எத்தனையோ ஒப்பந்தங்கள் போடப்பட்ட்து. ஆனால் எல்லாம் மீறப்பட்ட்துடன், சில கிழித்தெறியப்பட்ட்து. செய்யவில்லை என்று சொல்ல வேண்டாம்.

ஆயுதப்போராட்டம் என்பது சும்மா மக்களை பிச்சைகாரக்கும் போராட்டமாக இருக்க கூடாது. ஆபிரிக்காவில் யுத்தம் என்று சொல்லி மக்கள் இன்னும் இன்னும் பிச்சை காரர்களாக மாறுகிறார்கள் தவிர வேறொன்றும் நடக்கவில்லை. அது யுத்தம் அல்ல ஒரு கொள்ளை கும்பலின் வெறியாட்டிடம்தான் அங்கு நடக்கின்றது.

ஆனால். கிழக்கு தீமோர் தென் சூடான் போன்ற தேசங்களிலும் போராடினார்கள் வெற்றி பெற்றார்கள். யுத்தம் செய்ய ஒரு காலமுண்டு, சமாதானம் பண்ண ஒரு காலம் உண்டு. இல்லாவிடடாள் முடிவு அழிவுதான்.

அன்டோன் பாலசிங்கத்தின் கருத்துக்களுக்கு செவி கொடுத்திருந்தாலே எல்லாம் ஒரு நன்மையில் முடிவடைந்திருக்கும் . நிச்சயமாக இனிமேல் தீர்வு என்பது இருக்காது. எல்லோரும் இலங்கையர் என்று வாழ்வதுதான் தீர்வாக அமைய போகின்றது. இது எனது கருத்து. 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Cruso said:

சில நேரங்களில் அரசியல் காரணங்களுக்காக குப்பைகளையும் கொண்டு வருவதுண்டு. அதுதான் இந்த நாட்டில் உள்ள பிரச்சினை.

ஆமாம் உண்மையில் குப்பைகள் தான்  நியமன பாராளுமன்ற உறுப்பினர்கள்  இங்கே படித்தவன் படிக்காதவன் என்று பார்க்க முடியாது கூடாது   செய்வார்களா ?? செய்யமாட்டார்களா?? இலக்கை விட்டு விலகாமால் உறுதியாக உண்மையாக உழைப்பார்கள?? என்று பார்க்க வேண்டும்  இவர் சட்ட புலமையாளர் பெரிய பல்கலைகழகத்தில் படித்தவர். என்பவையெல்லாம் தேவையற்ற விடயங்கள்  குறைந்த பட்சம் இலங்கையில் சட்டத்தின் ஆட்சி நடைபெற உழைத்தாரா?? இல்லையே?? 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Cruso said:

ஏன் இல்லை? எத்தனையோ ஒப்பந்தங்கள் போடப்பட்ட்து. ஆனால் எல்லாம் மீறப்பட்ட்துடன், சில கிழித்தெறியப்பட்ட்து. செய்யவில்லை என்று சொல்ல வேண்டாம்.

இல்லை என்று சொல்லவில்லை  ஒப்பந்தங்கள் சரி வராது”  இலங்கையில் என்பது தான் உண்மை நிலை  அது தெரிந்து கொண்டும் போராட்டம் நடத்து கொண்டிருக்கும் போது  ஏன் எழுத வேண்டும்??  போராட்டத்தை குழப்பவா??  இது தீர்வு திட்டம் இல்லை  ஆயுதம் ஏந்தி போராடியவர்களை கொல்வதற்குயான திட்டம்  .....தனியா இலங்கை உடன் போரிட்டு இருந்தால்  போர் வெற்றி பெற்று இருக்கும்  பல நாடுகள் போரில் பங்கு பற்றியதால் தான்  தோற்கடிக்கப்பட்டது  இப்ப ஏன் தீர்வு வராது”?? மற்றும் 1994 இல் தீர்வு  எப்படி சாத்தியம்?? உங்கள் பதில்களுக்கு மிக்க நன்றி  🙏

  • கருத்துக்கள உறவுகள்
On 24/2/2024 at 14:47, விசுகு said:

இது தான் வரலாறா???

புலிகள் அப்படி செய்தார்களா??

IMG-5904.jpg

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Kandiah57 said:

நீங்கள் பரிதாபத்துக்குரியவர் தான்  ...எனது கருத்துக்கு பதில் எழுத முடியாமல் இருக்கிறது   .. .நீங்களும் அது பிழை தான் என்று ஏன் குத்தி முறியக்கூடாது?? 

கருத்தா,..... எங்க,..எங்க,...எங்க, .வடிவேலுவின் நகைச்சுவை நினைவிற்கு வருகிறது 😀

கந்தையருக்கு குசும்பு ஜாஸ்தி,...🤣

7 hours ago, Kandiah57 said:

இல்லை என்று சொல்லவில்லை  ஒப்பந்தங்கள் சரி வராது”  இலங்கையில் என்பது தான் உண்மை நிலை  அது தெரிந்து கொண்டும் போராட்டம் நடத்து கொண்டிருக்கும் போது  ஏன் எழுத வேண்டும்??  போராட்டத்தை குழப்பவா??  இது தீர்வு திட்டம் இல்லை  ஆயுதம் ஏந்தி போராடியவர்களை கொல்வதற்குயான திட்டம்  .....தனியா இலங்கை உடன் போரிட்டு இருந்தால்  போர் வெற்றி பெற்று இருக்கும்  பல நாடுகள் போரில் பங்கு பற்றியதால் தான்  தோற்கடிக்கப்பட்டது  இப்ப ஏன் தீர்வு வராது”?? மற்றும் 1994 இல் தீர்வு  எப்படி சாத்தியம்?? உங்கள் பதில்களுக்கு மிக்க நன்றி  🙏

ஐயா சாமி,.. ஆளை விடுங்கோ,...🤣

  • கருத்துக்கள உறவுகள்
On 25/2/2024 at 16:41, Kapithan said:

இதப் பார்க்கும் நெடுக்கர் இதை ஏன் தேவையில்லாமல் இங்கே வெட்டி ஒட்டுகிறீர்கள் எனக் கேட்கப்போகிறார். 😀

அவர் கன்றுக்குட்டியை பார்த்து கன்றுக்குட்டி என்று தான் சொல்லுபவர் ஆகவே அப்படி கேட்க மாட்டார்..

21 hours ago, Kapithan said:

ஒரு பிழையை நியாயப்படுத்துவதற்கு குத்தி முறிவதைப் பார்க்க பரிதாபமாக இருக்கிறது. 

இன்னொரு உறவு படுகொலைகளை  நியாயபடுத்த  கதை  கதையாக எழுதி 😭

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, Cruso said:

ஆனால். கிழக்கு தீமோர் தென் சூடான் போன்ற தேசங்களிலும் போராடினார்கள் வெற்றி பெற்றார்கள். யுத்தம் செய்ய ஒரு காலமுண்டு, சமாதானம் பண்ண ஒரு காலம் உண்டு. இல்லாவிடடாள் முடிவு அழிவுதான்.

கிழக்கு தீமோர் இந்தோனேசியா என்ற நாட்டினால் ஆக்கிரமிக்க பட்ட நாடு ....அதற்கு முதல் போர்த்துக்கல் நாட்டின் ஆக்கிரமிப்பில் இருந்த நாடு அதாவது இந்தோனேசியாவை ஒல்லாந்தர்கள் ஆட்சி செய்யும் பொழுது போர்த்துக்கல் இதை ஆட்சிக்கு உட்படுத்தினர் ...இது முக்கியமாக காலணித்துவ நாடுகள் தங்களுக்கு வசதியாக சிறு தீவுகளை ஆட்சிக்கு உட்படுத்தி தங்களது மொழியையும்,மதத்தையும் அந்த மக்களுக்கு திணித்து விட்டு சென்றது வரலாறு..இந்தியாவுக்கு அருகில் சிறிலங்கா,கோவா..சீக்கிம்.....சீனாவுக்கு அருகில் தாய்வான் ..கொன்கொங்.... ..இந்தோனேசியாவுக்கு அருகில் கிழக்கு தீமோர்.அவ்வாறு செய்தமைக்கு காரணம் அவர்களின் தூர நோக்கு அதாவது ஜனநாயாக பண்புகள் உலகம் பூராவும் பரவ வேண்டும் அத்துடன் முதலாளித்துவ் சிந்தனைகள், வலதுசாரிகள் உலகம் பூராவும் இருக்க வேணும் என்ற கொள்கையின் அடிப்படையில்...
அந்த நோக்கில்   கிழக்கு தீமோர் பூர்வீக குடிகளை போத்துகீச மொழி பேசுபவர்களாக‌வும்,மற்றும் கிறிஸ்தவ மதத்தையும் பின்பற்றுபவர்களாகவும் உருவாக்கி வைத்திருந்தனர்...போத்துகீச பொருளாதரம் வீழ்ச்சியடைந்த வுடன் சுதந்திரம் அந்த தீவுக்கு கொடுத்தனர் போத்துகீசர்....இதை சகிக்க முடியாத இந்தோனேசியா ஆக்கிரமிப்பு செய்தது....

இதை தாங்கி கொள்ளாத மேற்குலகமும் அவர்களின் கூட்டாளி  அவுஸ்ரேலியாவும் அந்த நாட்டு மக்களை தம்வசமாக்க ஆயுத போராட்டத்திற்கு ஊக்கமளித்து பல உதவிகளை செய்து சுதந்திரம் வழங்கி தங்கள் கூட்டணிக்குள் கொண்டு வந்து வைத்துள்ளனர்...
ஆசியாவில் இரண்டாவ்து கிறைஸ்தவ மதம் பின்பற்றும் நாடாக அது உள்ளது ..கிறிஸ்தவ மதத்தினர் பெருமான்மையினராக் இருந்து ஆட்சி செய்யும் நாடுகள் இரண்டே உண்டு ஒன்று பிலிப்பைன்ஸ்,மற்றது கிழக்கு தீமோர் ....
இந்தோனேசியா சர்வதேசிய அளவில் செல்வாக்கு பெற்ற பிராந்திய வல்லரசாக் இருந்திருந்தால் கிழக்கு தீமோரர் மக்களுக்கும் எமது நிலை தான் ஏற்ப்பட்டிருக்கும்...

தற்பொழுது பப்புவாநீயுகினியில் இதே போன்ற நிலையை உருவாக்க தீயா வேலை செய்கின்றனர் ....

ஆயுத போராட்ட வெற்றி தோல்வி  பிராந்திய நலன் கருதியே தீர்மாணிக்கப்படுகிறது ....

தென்சுடான் ,எரித்த்ரியா யாவும் இதன் பின்னனியே ...

கோவா,சீக்கிம் போன்ற நாடுகளை தன் வசப்படுத்திய இந்தியாவுக்கு தன்னுடைய  ஜம்மு கஷ்மீரின்  எல்லைகளை பாதுகாக்க முடியாமல் போனது ...பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கவின் பலம் ....
 
{ஆனால். கிழக்கு தீமோர் தென் சூடான் போன்ற தேசங்களிலும் போராடினார்கள் வெற்றி பெற்றார்கள்}

அவர்கள் வெற்றி பெறவில்லை ...அவர்களை நிழல் ஆக்கிரமிப்பில் வைத்திருப்பவர்கள் வெற்றி பெற்றார்கள் ...எந்த போராட்டத்தயும் வெற்றி பெற‌ வைப்பது அவர்களின் நிழல் ஆக்கிரமிப்பாளர்கள்

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விளங்க நினைப்பவன் said:

இன்னொரு உறவு படுகொலைகளை  நியாயபடுத்த  கதை  கதையாக எழுதி 😭

அந்த கருத்துகளுக்கு நீங்களும் கதை கதையா பதில் கருத்துகள் எழுதி இருக்கலாம் இது கருத்து களம். கள உறுப்பினர்கள் பற்றி கருத்துகள் எழுதக்கூடாது,..கருத்துக்களுக்கு கருத்துகள் எழுதுங்கள்…  இயலாத போது ஐயோ சாமி ஆளை விடுங்கள்  என்றாவது எழுதலாம்,   ........அது சரி உங்கள் தலைவர்கள் ஆயுதப் போராட்டம் என்றது   குருவிகளையும். விலங்குகளையும் சுடுவதையா???,.... மனிதர்களை இல்லையா??   1994 தீர்வு சாத்தியம்   2024 இல்  சாத்தியம் இல்லை என்கிறார்கள்  எனக்கு ஒன்றும் விளங்கவில்லை   ஏன் என்று நீங்கள் விளங்கினதை   எனக்கு சொல்லி தாருங்கள்” பார்ப்போம் 

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, Cruso said:

ஏன் இல்லை? எத்தனையோ ஒப்பந்தங்கள் போடப்பட்ட்து. ஆனால் எல்லாம் மீறப்பட்ட்துடன், சில கிழித்தெறியப்பட்ட்து. செய்யவில்லை என்று சொல்ல வேண்டாம்.

ஆயுதப்போராட்டம் என்பது சும்மா மக்களை பிச்சைகாரக்கும் போராட்டமாக இருக்க கூடாது. ஆபிரிக்காவில் யுத்தம் என்று சொல்லி மக்கள் இன்னும் இன்னும் பிச்சை காரர்களாக மாறுகிறார்கள் தவிர வேறொன்றும் நடக்கவில்லை. அது யுத்தம் அல்ல ஒரு கொள்ளை கும்பலின் வெறியாட்டிடம்தான் அங்கு நடக்கின்றது.

ஆனால். கிழக்கு தீமோர் தென் சூடான் போன்ற தேசங்களிலும் போராடினார்கள் வெற்றி பெற்றார்கள். யுத்தம் செய்ய ஒரு காலமுண்டு, சமாதானம் பண்ண ஒரு காலம் உண்டு. இல்லாவிடடாள் முடிவு அழிவுதான்.

அன்டோன் பாலசிங்கத்தின் கருத்துக்களுக்கு செவி கொடுத்திருந்தாலே எல்லாம் ஒரு நன்மையில் முடிவடைந்திருக்கும் . நிச்சயமாக இனிமேல் தீர்வு என்பது இருக்காது. எல்லோரும் இலங்கையர் என்று வாழ்வதுதான் தீர்வாக அமைய போகின்றது. இது எனது கருத்து. 

இவ்வளவு மாவீரர்களையும், மக்களையும் காவு கொடுத்து விட்டு சாதாரண மாநில அரசு, மாகாண அரசு என்ற சிங்கள,மேற்கு, இந்தியாவின் சுத்துமாத்துக்கு தலைவர் பிரபாகரன் ஆம் என்பாரா?  எத்தனை ஏமாற்று வித்தைகளை (சிங்களத்தின்) தமிழ் மக்கள் கண்டு விட்டார்கள். நோர்வேயின் திருகு தாளங்கள் சொல்லி மாளாது. அன்ரன் பாலசிங்கம் அவர்களையும் மேற்கு வெருட்டி இருக்கும் என்பதை தற்போது அமெரிக்கா, மேற்கு நாடுகள் பலஸ்தீனுக்கு செய்வதை பார்க்கும் போதே சொல்லலாம். 

On 22/2/2024 at 20:43, Cruso said:

அதையும் குறிப்பிட்டு எழுதுங்கள். பின்னர் அதை பார்த்து வெறுப்பா இல்லையா என்று தெரிந்து கொள்ளலாம். சும்மா சும்மா எழுதக்கூடாது. 

சும்மா எழுதவில்லை. கருத்துக்களை அவதானித்தால் எழுதுகிறேன்.

15 hours ago, Kavi arunasalam said:

IMG-5904.jpg

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் அன்ரன் பாலசிங்கம் அவர்களுடன் கேட் கப்பட்ட கேள்விக்கு பதில் அது ஒரு துன்பியல் நாடகம் என சொன்னதே. ஆகவே அக்கொலை புலிகளால் நடாத்தப்பட்டது என நம்புகிறீர்களா?
அந்த வசனத்தை திருப்பி 15 வருடங்களின் பின் நக்கலாக இத்திரியில் பாவிப்பதன் நோக்கம் என்ன??

  • கருத்துக்கள உறவுகள்
On 23/2/2024 at 08:50, Justin said:

😎ஓ யெஸ்..முன்னுக்குப் பின் முரணாக, தங்களுக்கே சிரிப்பு வரவைக்கும் விளக்கங்களை தந்து கொண்டிருக்கிறார்கள்..இவர்களை வெளியே இருந்து தான் ஒருவர் "மட்டந் தட்ட" வேணும்!

 😎ஓ யெஸ். உங்களுக்கும் கத்தி திரும்பும் என்பதை (மட்டம் தட்ட) நினைவு படுத்த விரும்புகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, Kandiah57 said:

  குறைந்த பட்சம் இலங்கையில் சட்டத்தின் ஆட்சி நடைபெற உழைத்தாரா?? இல்லையே?? 

சட்ட்தின் ஆட்சி நடைபெற உழைத்தாரா இல்லையா என்பதை இங்குள்ள நாட்டு மக்கள்தான் சொல்ல வேண்டும். அது தமிழராகத்தான் இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை. 

20 hours ago, Kandiah57 said:

இல்லை என்று சொல்லவில்லை  ஒப்பந்தங்கள் சரி வராது”  இலங்கையில் என்பது தான் உண்மை நிலை  அது தெரிந்து கொண்டும் போராட்டம் நடத்து கொண்டிருக்கும் போது  ஏன் எழுத வேண்டும்??  போராட்டத்தை குழப்பவா??  இது தீர்வு திட்டம் இல்லை  ஆயுதம் ஏந்தி போராடியவர்களை கொல்வதற்குயான திட்டம்  .....தனியா இலங்கை உடன் போரிட்டு இருந்தால்  போர் வெற்றி பெற்று இருக்கும்  பல நாடுகள் போரில் பங்கு பற்றியதால் தான்  தோற்கடிக்கப்பட்டது  இப்ப ஏன் தீர்வு வராது”?? மற்றும் 1994 இல் தீர்வு  எப்படி சாத்தியம்?? உங்கள் பதில்களுக்கு மிக்க நன்றி  🙏

அதைத்தான் நானும் சொல்லுகிறேன் தமிழர்களுக்கு தனியான தீர்வு என்று வரப்போவதில்லை. ஏன் இந்தியாவும் அனுமதிக்க போவதில்லை. ஒரே நாடு ஒரே சடடம்தான் இந்தியாவின் கொள்கை. எனவே இனி நாம் எல்லோரும் ஸ்ரீலங்கார்கள்தான். பிரச்சினை முடிந்து விட்ட்து. 

Edited by Cruso

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, putthan said:

கிழக்கு தீமோர் இந்தோனேசியா என்ற நாட்டினால் ஆக்கிரமிக்க பட்ட நாடு ....அதற்கு முதல் போர்த்துக்கல் நாட்டின் ஆக்கிரமிப்பில் இருந்த நாடு அதாவது இந்தோனேசியாவை ஒல்லாந்தர்கள் ஆட்சி செய்யும் பொழுது போர்த்துக்கல் இதை ஆட்சிக்கு உட்படுத்தினர் ...இது முக்கியமாக காலணித்துவ நாடுகள் தங்களுக்கு வசதியாக சிறு தீவுகளை ஆட்சிக்கு உட்படுத்தி தங்களது மொழியையும்,மதத்தையும் அந்த மக்களுக்கு திணித்து விட்டு சென்றது வரலாறு..இந்தியாவுக்கு அருகில் சிறிலங்கா,கோவா..சீக்கிம்.....சீனாவுக்கு அருகில் தாய்வான் ..கொன்கொங்.... ..இந்தோனேசியாவுக்கு அருகில் கிழக்கு தீமோர்.அவ்வாறு செய்தமைக்கு காரணம் அவர்களின் தூர நோக்கு அதாவது ஜனநாயாக பண்புகள் உலகம் பூராவும் பரவ வேண்டும் அத்துடன் முதலாளித்துவ் சிந்தனைகள், வலதுசாரிகள் உலகம் பூராவும் இருக்க வேணும் என்ற கொள்கையின் அடிப்படையில்...
அந்த நோக்கில்   கிழக்கு தீமோர் பூர்வீக குடிகளை போத்துகீச மொழி பேசுபவர்களாக‌வும்,மற்றும் கிறிஸ்தவ மதத்தையும் பின்பற்றுபவர்களாகவும் உருவாக்கி வைத்திருந்தனர்...போத்துகீச பொருளாதரம் வீழ்ச்சியடைந்த வுடன் சுதந்திரம் அந்த தீவுக்கு கொடுத்தனர் போத்துகீசர்....இதை சகிக்க முடியாத இந்தோனேசியா ஆக்கிரமிப்பு செய்தது....

இதை தாங்கி கொள்ளாத மேற்குலகமும் அவர்களின் கூட்டாளி  அவுஸ்ரேலியாவும் அந்த நாட்டு மக்களை தம்வசமாக்க ஆயுத போராட்டத்திற்கு ஊக்கமளித்து பல உதவிகளை செய்து சுதந்திரம் வழங்கி தங்கள் கூட்டணிக்குள் கொண்டு வந்து வைத்துள்ளனர்...
ஆசியாவில் இரண்டாவ்து கிறைஸ்தவ மதம் பின்பற்றும் நாடாக அது உள்ளது ..கிறிஸ்தவ மதத்தினர் பெருமான்மையினராக் இருந்து ஆட்சி செய்யும் நாடுகள் இரண்டே உண்டு ஒன்று பிலிப்பைன்ஸ்,மற்றது கிழக்கு தீமோர் ....
இந்தோனேசியா சர்வதேசிய அளவில் செல்வாக்கு பெற்ற பிராந்திய வல்லரசாக் இருந்திருந்தால் கிழக்கு தீமோரர் மக்களுக்கும் எமது நிலை தான் ஏற்ப்பட்டிருக்கும்...

தற்பொழுது பப்புவாநீயுகினியில் இதே போன்ற நிலையை உருவாக்க தீயா வேலை செய்கின்றனர் ....

ஆயுத போராட்ட வெற்றி தோல்வி  பிராந்திய நலன் கருதியே தீர்மாணிக்கப்படுகிறது ....

தென்சுடான் ,எரித்த்ரியா யாவும் இதன் பின்னனியே ...

கோவா,சீக்கிம் போன்ற நாடுகளை தன் வசப்படுத்திய இந்தியாவுக்கு தன்னுடைய  ஜம்மு கஷ்மீரின்  எல்லைகளை பாதுகாக்க முடியாமல் போனது ...பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கவின் பலம் ....
 
{ஆனால். கிழக்கு தீமோர் தென் சூடான் போன்ற தேசங்களிலும் போராடினார்கள் வெற்றி பெற்றார்கள்}

அவர்கள் வெற்றி பெறவில்லை ...அவர்களை நிழல் ஆக்கிரமிப்பில் வைத்திருப்பவர்கள் வெற்றி பெற்றார்கள் ...எந்த போராட்டத்தயும் வெற்றி பெற‌ வைப்பது அவர்களின் நிழல் ஆக்கிரமிப்பாளர்கள்

எமக்கு ஏன் முடியாமல் போனது? எல்லா நாடுகள் பற்றியும்  எழுதுகிறீர்கள். நம்ம நாட்டிடை பற்றியும் எழுதுங்கள். தமிழ் ராச்சியம் சிங்களத்துடன்  இணைக்கப்பட்ட்தா? இல்லை ஆக்கைரமிப்புக்கு முன்னர் இருந்து சிங்களவர் கிலேதான் வாழ்கிறோமோ?

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, kalyani said:

இவ்வளவு மாவீரர்களையும், மக்களையும் காவு கொடுத்து விட்டு சாதாரண மாநில அரசு, மாகாண அரசு என்ற சிங்கள,மேற்கு, இந்தியாவின் சுத்துமாத்துக்கு தலைவர் பிரபாகரன் ஆம் என்பாரா?  எத்தனை ஏமாற்று வித்தைகளை (சிங்களத்தின்) தமிழ் மக்கள் கண்டு விட்டார்கள். நோர்வேயின் திருகு தாளங்கள் சொல்லி மாளாது. அன்ரன் பாலசிங்கம் அவர்களையும் மேற்கு வெருட்டி இருக்கும் என்பதை தற்போது அமெரிக்கா, மேற்கு நாடுகள் பலஸ்தீனுக்கு செய்வதை பார்க்கும் போதே சொல்லலாம். 

சிங்களவன் மட்டும் ஆயிர கணக்கான ராணுவத்தை  இழந்தும், காயப்பட்டும், சிங்கள பொதுமக்கள் கொல்லப்பட்டும், அரசியல் தலைவர்களை இழந்தும், கோடிக்கணக்கான சொத்துக்களை இழந்தும் பெற்ற இந்த வெற்றி எதேர்க்கென்று கேட்க மாடடார்களா? நீங்கள் கேட்க்கிறமாதிரி அவர்கள் கேட்க மாடடார்களா?

அம்மணி , மாநில அரசு மாகாண அரசு என்றெல்லாம் எழுத வேண்டாம். அதையெல்லாம் மறந்து  விடுங்கள். அதையெல்லாம் கடந்து பிச்சை வேணாம் நாயை பிடி என்ற நிலைக்கு வந்தாயிற்று. நாங்கள் இங்கு இலங்கையில் இருந்து எழுதுகிறோம். விளங்கினால் சரிதான். 

  • கருத்துக்கள உறவுகள்
On 24/2/2024 at 09:09, Kapithan said:

உங்களுக்கு குசும்பு ஜாஸ்தி  குசா 🤣

உங்களின் இந்தக் கேள்வியினூடாக நான் புரிந்துகொள்வது,...

"தாங்கள் ஆகக் குறைந்தது 40-45 வருடங்களுக்கு முன்னரே இலங்கையை விட்டுத் தப்பியோடிவிட்டீர்கள்."

ஆயுதம் தாங்கிய எல்லா இயக்கங்களும் துப்பாக்கிக் குண்டு மூலம்தான் தீர்ப்பெழுதினார்கள்.  இது உங்களுக்குத் தெரியாதென்றால் தங்களின் போராட்டம் தொடர்பான அடிப்படைப் புரிதலில் குறைபாடு இருக்கிறது. 

ஏனைய இயக்கங்கள், இந்திய அரசு, சிறிலங்கா அரசு என்பன (இவர்கள் எனைய இயங்கங்களை  பயன்படுத்தி வி.புலிகளை அழிக்க முற்பட்டது  ஏனைய இயக்கங்கள் கையை கட்டி வாயை மூடி நிற்க புலிகள் சுட்டார்களா?

1 minute ago, Cruso said:

சிங்களவன் மட்டும் ஆயிர கணக்கான ராணுவத்தை  இழந்தும், காயப்பட்டும், சிங்கள பொதுமக்கள் கொல்லப்பட்டும், அரசியல் தலைவர்களை இழந்தும், கோடிக்கணக்கான சொத்துக்களை இழந்தும் பெற்ற இந்த வெற்றி எதேர்க்கென்று கேட்க மாடடார்களா? நீங்கள் கேட்க்கிறமாதிரி அவர்கள் கேட்க மாடடார்களா?

அவர்கள் தான் எம்மை அடக்குபவர்கள் என்பதை மூளையில் இருந்து கிளறி எடுக்க முடியுமா?😁

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, Cruso said:

சட்ட்தின் ஆட்சி நடைபெற உழைத்தாரா இல்லையா என்பதை இங்குள்ள நாட்டு மக்கள்தான் சொல்ல வேண்டும். அது தமிழராகத்தான் இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை. 

ஆம் அது சிங்களவர். ஆங்கிலேயர்கள்.     ......எவராகவுமிருக்கலாம்  ஆனால் நிகழ்வுகள் கூட சொல்லலாம்  அண்மையில் தலைகீழாக  ஒருவர் கட்டி தொங்க விட்டு கொலை செய்யப்பட்டார் ...     .......இலங்கையில் சட்டம் ஒருபோதும் ஆட்சி செய்யவில்லை  அப்படி இருத்தல் தமிழ் ஈழம் கேட்டு இருக்க முடியாது    

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, Cruso said:

எமக்கு ஏன் முடியாமல் போனது? எல்லா நாடுகள் பற்றியும்  எழுதுகிறீர்கள். நம்ம நாட்டிடை பற்றியும் எழுதுங்கள். தமிழ் ராச்சியம் சிங்களத்துடன்  இணைக்கப்பட்ட்தா? இல்லை ஆக்கைரமிப்புக்கு முன்னர் இருந்து சிங்களவர் கிலேதான் வாழ்கிறோமோ?

எப்படி எழுதுவது😂?

கிழக்கு திமோர் காரனும், குறிப்பிட்ட ஏனையோரும் தமக்குள் இருந்த தவறுகளை, கோணல்களைப் பேசினார்கள், திருத்த முயன்றார்கள். குறைந்த பட்சம், யாருடன் சார வேண்டுமென்ற தெளிவுடனாவது இருந்தார்கள். இதைப் போல இன்று கூட தமிழர்களிடையே துரோகிப் பட்டம் வாங்காமல் யாரும் செய்ய இயலுமா? இங்கே கருத்துகளுக்குப் பதில் சொல்ல முடியாமல், வேற இடங்களில் பச்சைப் புள்ளி பெற கொமெடி எழுதிக் கொண்டிருப்பவரிடம் நீங்கள் இதைக் கேட்கிறீர்கள்? 

  • கருத்துக்கள உறவுகள்
Just now, kalyani said:

ஏனைய இயக்கங்கள், இந்திய அரசு, சிறிலங்கா அரசு என்பன (இவர்கள் எனைய இயங்கங்களை  பயன்படுத்தி வி.புலிகளை அழிக்க முற்பட்டது  ஏனைய இயக்கங்கள் கையை கட்டி வாயை மூடி நிற்க புலிகள் சுட்டார்களா?

அவர்கள் தான் எம்மை அடக்குபவர்கள் என்பதை மூளையில் இருந்து கிளறி எடுக்க முடியுமா?😁

என்ன  இப்போது மண்டையை  காணவில்லை? மண்டை  எண்டு எழுத பயமா? இப்போது மேலே உள்ள மூளையால் யோசிக்கிறீர்கள்போல தெரியுது. 

நீங்கள் எழுதியதட்குத்தான் பதில் எழுதி இருந்தேன். பதில்  இல்லை என்றவுடன் மூளையை பற்றி கதைக்கிறீர்கள். 

நீங்கள் சொன்னதை எப்பவோ நான் கிளறி எடுத்து எறிந்து விடுத்தேன். நீங்கள்தான் அதை இன்னும் செய்யவில்லை. நீங்களும், இங்குள்ள சிலரும் அப்படி செய்தால் எல்லாமே சுமுகமாக முடிவடைந்து விடும். 

Just now, Kandiah57 said:

ஆம் அது சிங்களவர். ஆங்கிலேயர்கள்.     ......எவராகவுமிருக்கலாம்  ஆனால் நிகழ்வுகள் கூட சொல்லலாம்  அண்மையில் தலைகீழாக  ஒருவர் கட்டி தொங்க விட்டு கொலை செய்யப்பட்டார் ...     .......இலங்கையில் சட்டம் ஒருபோதும் ஆட்சி செய்யவில்லை  அப்படி இருத்தல் தமிழ் ஈழம் கேட்டு இருக்க முடியாது    

அப்படியா? இனி என்ன கேட்கலாம்?

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, Cruso said:

அப்படியா? இனி என்ன கேட்கலாம்?

தமிழ் விளங்குவது இல்லையா??   பலமுறை வாசித்து விளங்க முயற்சிக்கவும்   

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Kandiah57 said:

தமிழ் விளங்குவது இல்லையா??   பலமுறை வாசித்து விளங்க முயற்சிக்கவும்   

நீங்கள்தான் கொஞ்சம் விளக்கமாக எழுதுங்களேன். எனக்கு தமிழ் விளங்குவது குறைவு என்று உங்களுக்கு தெரியும்தானே. நீங்கள் தமிழ் பண்டிதர் இல்லையா? 🤣

Edited by Cruso

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Cruso said:

நீங்கள்தான் கொஞ்சம் விளக்கமாக எழுதுங்களேன். எனக்கு தமிழ் விளங்குவது குறைவு என்று உங்களுக்கு தெரியும்தானே. நீங்கள் தமிழ் பண்டிதர் இல்லையா? 

ஆம் உங்களை விட ...   நான் சொன்னது சட்டம் இலங்கையில் ஆட்சி செய்திருந்தால்   ஏன்  தமிழ் ஈழம்  கேட்க வேண்டும் ??? தேவையற்றது  பெயரில் என்ன இருக்கிறது தமிழ் ஈழம் என்றும் இருக்கலாம் இலங்கை என்றும் இருக்கலாம்,. .......ஆட்சி முறை தான் எமக்கு தேவை  அதாவது சட்டத்தின் முன் அனைவரும் சமன்  எழை  பணக்காரர் படித்தவன்’ படிக்கதவன்,  ...........என்று அனைவருக்கும் ஒரே சட்டம்   

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Kandiah57 said:

ஆம் உங்களை விட ...   நான் சொன்னது சட்டம் இலங்கையில் ஆட்சி செய்திருந்தால்   ஏன்  தமிழ் ஈழம்  கேட்க வேண்டும் ??? தேவையற்றது  பெயரில் என்ன இருக்கிறது தமிழ் ஈழம் என்றும் இருக்கலாம் இலங்கை என்றும் இருக்கலாம்,. .......ஆட்சி முறை தான் எமக்கு தேவை  அதாவது சட்டத்தின் முன் அனைவரும் சமன்  எழை  பணக்காரர் படித்தவன்’ படிக்கதவன்,  ...........என்று அனைவருக்கும் ஒரே சட்டம்   

அப்படியா , எனக்கு விளங்கி விட்ட்து. 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Cruso said:

2 hours ago, Cruso said:

எமக்கு ஏன் முடியாமல் போனது? எல்லா நாடுகள் பற்றியும்  எழுதுகிறீர்கள். நம்ம நாட்டிடை பற்றியும் எழுதுங்கள். தமிழ் ராச்சியம் சிங்களத்துடன்  இணைக்கப்பட்ட்தா? இல்லை ஆக்கைரமிப்புக்கு முன்னர் இருந்து சிங்களவர் கிலேதான் வாழ்கிறோமோ?

எமது ராஜ்ஜியம் இணைக்கப்பட்டது ....காங்கேசந்துறை துறைமுகம் வல்வெட்டி துறைமுகம் போன்ற துறைமுகங்களிலிருந்து எவ்வித கட்டுப்பாடுமின்றி தென்னிந்தியா துறைமுகத்துக்கு போய் வரக்கூடியதாக இருந்திருக்கு ...இன்று வரை அமெரிக்கா மற்றும் மேற்குலகு அந்த நாட்டை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முயல்வது பிராந்திய நலன் கருதி அன்று உருவாக்கிய சிலோன்....

ஆகிரமிப்புக்கு முன் தனி ராஜ்ஜியங்களாக இருந்தவை ...

Guest
This topic is now closed to further replies.

இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.