Jump to content

தொ(ல்)லைபேசி


sathiri

Recommended Posts

பதியப்பட்டது

தொ(ல்)லைபேசி

ஒரு பேப்பருக்காக

விஞ்ஞான கண்டு பிடிப்புக்களில் இந்த தொலைபேசியின் கண்டுபிடிப்பும் ஒரு உன்னதமானதுதான். கைத்தொலைபேசியின் வரவிற்கு பின்னர் அதன் தொழில் நுட்பவளர்ச்சியும் மாற்றங்களும் நாளுக்கு நாள் அதிகரித்துதான் செல்கிறது.முன்பெல்லாம் ஊரில் ஒருவர் வீதியில் தன்பாட்டில் சிரித்து கதைச்சபடி நடந்து போனல் சந்தேகமே இல்லை அவருக்கு விசர் என்று எல்லோரும் முடிவு கட்டிடுவினம்.ஆனால் இன்று நிலைமை அப்பிடியில்லை காரணம் கைத்தொலைபேசி புளுதோத் என்கிற சின்ன கருவியை காதுக்குள்ளை வைச்சிட்டு எல்லாருமே தங்கடை பாட்டிலை கதைச்சபடிதான் போகினம். இப்ப யார் கதைக்காமல் தன்ரை பாட்டிலை கம்மெண்டு போகினமோ அவைதான்விசரர் எண்டு நினைக்கிற அளவுக்கு நிலைமை மாறி போச்சுது.அது மட்டுமில்லை தொலைபேசி தொல்லை பேசியாவும் மாறிப்போச்சுது.

இன்றைய நிலைமை இப்பிடியிருக்கு முந்தி ஊரிலை தொலைபேசியை காணுறதெண்டாலே அபூர்வம். முக்கியமா அரசாங்கம் சம்பந்த பட்ட கச்சேரி புகையிரத நிலையம்.தபால்கந்தோர்.காவல்ந

Posted

சா இப்படி ஒரு பிழைப்பு தேவையாய்யா? :lol: நானெண்டா அந்த போனை தலையில போட்டு தற்கொலை செய்திருப்பன்.... :lol:

Posted
இல்லாட்டி இண்டைக்கு நானும் ஒரு விஞ்ஞானியாகி குறுந்தாடியும் வைச்சு கண்ணாடியும் வெள்ளை கோட்டும் போட்டபடி விஞ்ஞான விளக்கம் குடுத்துகொண்டிருப்பன். இப்பிடி உங்களுக்கு விண்ணாணம் எழுதிகொண்டிந்திருக்கமாட்ட
Posted

தந்திக்கம்பத்திலை ஏறி கம்பியிலை காதைவைச்சு கொண்டிருக்கிறான் இப்பிடியே விட்டா நாளைக்கு கரண்டு கம்பத்திலை ஏறி கரண்வருதாஎண்டு கையை வைச்சு பாப்பான் எண்டார்.பிறகென்ன மிச்சத்துக்கு அப்பாவும் கூரையிலை செருகியிருந்த பிரம்பை உருவ என்ரை ஆராச்சியும் அதோடை நிண்டுபோச்சுது.

அனுபவத்தை எல்லோரும் கவரத்தக்க வகையில் நகைச்சுவையோடு சொல்லி இருக்கிறியள். நல்லா இருக்கு சாத்ரி மாமா.

பாவம் உங்கப்பா உங்களூக்கு அடிச்சே களைச்சு இருப்பார். ஏன் மாமா இப்படி குழப்படி செய்யுறனியள்? உந்தக்காலத்திலை இருளழகன் எல்லாம் இல்லையோ?

Posted

டண் :lol::lol: ஜம்மு :lol::) நானே விஞ்ஞானியா வர ஏலாமல் போட்டுது எண்ட கவலையிலை கதை எழுதிகொண்டிருக்கிறன் வெந்த புண்ணிலை வாலை சே வேலைசெருகாதேங்கோ. வெண்ணி நீங்களாவது என்ரை கவலையை புரிஞ்சுகொண்டதுக்கு சந்தோசம் :lol:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பாருங்கள் சாத்திரி! உங்க சித்தப்பாவுக்கு ஆத்திரத்தில அறிவு சரியா வேலைசெய்யவில்லை. காரணம், ஒரு செக்கன் யோசித்திருந்தால் கூடப் போதும் பூவரசம்தடிக்குப் பதிலாக கொக்கத்தடியை எடுத்து இறங்க விடாமல் மேலே வைச்சே பூசை செய்திருக்கலாம். ம்.ம். இந்த மாதிரி விசயங்களில் நம்ம மாமாக்கள் கொஞ்சம் விபரமானவங்கள்தான். :lol::lol:

Posted

விஞ்ஞானியாக வராததும் ஒருவைகையில நல்லதுதான். இல்லாட்டி யாழுக்கு ஒரு சாத்திரி கிடைத்திருப்பாரா ? :lol:

உங்கள் ஒவ்வொரு அனுபவங்களையும் நகைச்சுவையாக எழுதுவது நன்றாக உள்ளது. பாராட்டுக்கள், சாத்திரி.

Posted

அதுக்கு சித்தப்பா சொன்னார் உன்ரை மகன் தந்திக்கம்பத்திலை ஏறி கம்பியிலை காதைவைச்சு கொண்டிருக்கிறான் இப்பிடியே விட்டா நாளைக்கு கரண்டு கம்பத்திலை ஏறி கரண்வருதாஎண்டு கையை வைச்சு பாப்பான் எண்டார்.

சா சா உந்த சித்தப்பாக்களே படுமோசம் தான், அவசரப்பட்டுக் காரியங்களைக் கெடுக்கிறதிலை. :icon_mrgreen::(

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கதை நன்றாக இருக்கின்றது சாத்திரியாரே! நல்லகாலம் என்ரை வாழ்க்கையிலை சித்தப்பா எண்ட உறவே எனக்கில்லை :( ஆனால் நான் வந்து உங்கை அஞ்சாறு பொடியளுக்கு.............. :icon_mrgreen:

Posted
சா சா உந்த சித்தப்பாக்களே படுமோசம் தான், அவசரப்பட்டுக் காரியங்களைக் கெடுக்கிறதிலை. :lol::)
:unsure:
பாருங்கள் சாத்திரி! உங்க சித்தப்பாவுக்கு ஆத்திரத்தில அறிவு சரியா வேலைசெய்யவில்லை. காரணம், ஒரு செக்கன் யோசித்திருந்தால் கூடப் போதும் பூவரசம்தடிக்குப் பதிலாக கொக்கத்தடியை எடுத்து இறங்க விடாமல் மேலே வைச்சே பூசை செய்திருக்கலாம். ம்.ம். இந்த மாதிரி விசயங்களில் நம்ம மாமாக்கள் கொஞ்சம் விபரமானவங்கள்தான். :unsure::lol:
உங்களுக்கெல்லாம் என்னிலை இருக்கிற அன்பை பாத்து சத்தியமா எனக்கு ஆந்த கண்ணீரே வந்திட்டுது :(
Posted

மிகவும் ரசிக்கும் படியான இயல்பான நடையில் எழுதுகின்றீர்கள். காலத்தை குறிப்பாக 83 கலவரத்தின் காலப்பகுதியில் பதற்றங்களும் அப்படியே இயல்பாக கண்முன்னே வருகின்றது. வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதுங்கள்.

Posted

அப்ப சித்தப்பா செய்த புண்ணியத்திலைதான் சாத்திரி உயிர் வாழுகிறீங்கள் போல....

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சாத்திரி உங்க தொ(ல்)லைபேசி, தொ(ல்)லைபேசி யான கதை அழகு . நீங்க விஞ்சானியாகவிட்டாலும் பரவாயில்ல நல்ல நகைச்சுவையா கதை எல்லாம் எடுதுறீங்களே . வாழ்த்துகள் சாத்திரியார் .

ஒன்றே ஒண்ணு கேட்கனும் சாத்திரி , கோவிக்கமாட்டிங்களே . காதை கரண்ட் கம்பிக்கு பக்கத்துல்ல வைச்சப்போ கரண்ட் கம்பிக்கு ஒன்னும் விபரீதம் நடக்கவில்லையோ?

Posted

சாத்திரி உங்க தொ(ல்)லைபேசி, தொ(ல்)லைபேசி யான கதை அழகு . நீங்க விஞ்சானியாகவிட்டாலும் பரவாயில்ல நல்ல நகைச்சுவையா கதை எல்லாம் எடுதுறீங்களே . வாழ்த்துகள் சாத்திரியார் .

ஒன்றே ஒண்ணு கேட்கனும் சாத்திரி , கோவிக்கமாட்டிங்களே . காதை கரண்ட் கம்பிக்கு பக்கத்துல்ல வைச்சப்போ கரண்ட் கம்பிக்கு ஒன்னும் விபரீதம் நடக்கவில்லையோ?

கரண் கம்பிக்கு ஸாக் அடிச்சு அறுந்து பேச்சுது :unsure::(:D:D

Posted

கரண் கம்பிக்கு ஸாக் அடிச்சு அறுந்து பேச்சுது :D:D:lol::lol:

கேக்கிறவன் கேனையா இருந்தால் லண்டனில கறுப்பி பெராறி ஓட்டுவாவாம்... :unsure::(

Posted

இந்த ஆராய்ச்சியும் நடந்திருக்கா? றெயில் தண்டவாளத்தில் வைப்பது ஓரளவு பறவாயில்லை சாத்திரி அண்ணா..இது மோசம்!

ஆராய்ச்சி கடைசியில் அடியில் போய் முடிந்து விட்டாலும் உங்க கதை நன்றாக இருக்கு.

உங்கள் மனைவிக்கு வீட்டில் டைம் போறதே தெரியாது போல..இல்லை உங்களோட இப்படி

சுவாரசியமான கதையை கேட்டால் அப்பிடித்தானே என்று சொல்ல வந்தன் :)

Posted

:)உங்களுக்கெல்லாம் என்னிலை இருக்கிற அன்பை பாத்து சத்தியமா எனக்கு ஆந்த கண்ணீரே வந்திட்டுது :)

:wub::wub: என்ன கண்ணீர் மாமா ஆந்த கண்ணீரோ? யூ மீன் ஆந்தை கண்ணீர்? :):):(

Posted

நகைச்சுவையான கதை அருமை ரசித்தேன் ... சிரித்தேன் :wub: சிறு வயதில் நெருப்புப் பெட்டியில் தொலைபேசி கதைச்ச ஞாபகம் வந்தது ....

ஆந்தை தலை கீழா தொங்கும்? கண்ணீரும் விடுமா? :)
வெளவால்தான் தலைகீழா தொங்குமென்று கேள்விப்பட்டிருக்கிறேன் .... ஆந்தையும் அப்படியோ... :wub:
  • கருத்துக்கள உறவுகள்
Posted

அட வௌவாலை நினைத்துக்கொண்டு எழுதி விட்டேன் மன்னித்துக்கொள்ளுங்கள். :unsure:

இப்போது மன்னிப்புக் கேட்டு என்ன பிரியோசனம். ஆந்தை தலைகீழாகத் தான் தொங்கும் என்று ஒருத்தன் கூட 100டொலருக்குச் சவால் விட்டுவிட்டேன் :lol::lol:

இப்போது மன்னிப்பாம்.... மன்னிப்பு :)

Posted

ஆனந்த கண்ணீர் என்று எழுதபோய் அதிலை எழுத்து அடிபடாததிலை ஆந்த கண்ணிராகி அது ஆந்தையாகி இப்ப வெளவாலாய் வந்துநிக்கிது அடுத்ததா என்னென்ன உருவம் மாற போகுதோ தெரியேல்லை :lol::):unsure:

Posted

இப்போது மன்னிப்புக் கேட்டு என்ன பிரியோசனம். ஆந்தை தலைகீழாகத் தான் தொங்கும் என்று ஒருத்தன் கூட 100டொலருக்குச் சவால் விட்டுவிட்டேன்

இப்போது மன்னிப்பாம்.... மன்னிப்பு

:unsure: அட நான் தான் குழம்பினேன் என்றால்..நீங்களுமா? இதுல என்னை வேற சாட்டுறீங்களா? :)

Posted

இப்போது மன்னிப்புக் கேட்டு என்ன பிரியோசனம். ஆந்தை தலைகீழாகத் தான் தொங்கும் என்று ஒருத்தன் கூட 100டொலருக்குச் சவால் விட்டுவிட்டேன் :(:(

இப்போது மன்னிப்பாம்.... மன்னிப்பு :lol:

இங்க பாருங்கப்பா மதுரைக்கு வந்த சோதனையை.... :lol::o:o

  • கருத்துக்கள உறவுகள்
Posted

என் சோதனையை விடுங்கோ!

சாத்திரியைப் போட்டு பின்னியெடுக்கின்றார்கள். உதவிக்குப் போகாமல் இருக்கின்றது சரியோ. முதல்ல வேட்டியை மடிச்சுக் கட்டி முன்னுக்குப் போங்கோ...... பின்னால நான் வர முயற்சிக்கின்றேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எலோன் மஸ்கின் நிலத்தடி குகை வழித்தடத்திட்டங்கள்(TBM) சில அவுஸ்ரேலியாவிலும் உள்ளது, இது தவிர இணைய வசதி, புதிப்பிக்கப்படக்கூடிய சக்தி திட்டங்களும் உள்ளன.
    • இலங்கை அரசு மீன் வள இழப்ப்ற்கு நட்ட ஈடு கோர முடியாதா? இலங்கை மீனவர்களின் மீன் பிடி உபகரணங்களை அழித்ததிற்கும், தவறான மீன் பிடி முறைகளை பாவித்து மீன் பிடிக்கின்றமையால் நீண்டகால அடிப்படையில் ஏற்பட்டும் மீன் வள இழப்பிற்கும். அப்படியே இந்தியாவிடமும் எல்லை தாண்டிய மீனவர்களை கடந்த காலத்தில் கொன்ற இலங்கை அரசிடம் பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பம் சார்பாக நட்ட ஈடு கோரி இந்தியாவில் வழ்க்கு தொடுக்கவும் வேண்டும்.  
    • அறிதலுக்காக மட்டும்.    அதிக விபரிப்புடன்.  எலன் மஸ்க்   
    • அப்ப இதை உங்கள் முந்திய கருத்தில் சொல்லவில்லை? சிலை வைத்தற்காக அல்ல, விகாரை கட்டியதற்கு எதிராகவே கருணாகரம் குரல் எழுப்புகிறார் என்று சொல்லாமல்… சிலை எப்பவோ வைத்தாயிற்றாம் எண்டதோடு மீதி உண்மையை முழுங்கியது நீங்கள். இப்போ என்னை விதண்டாவாதி என்கிறீர்கள். பிகு சிலையோ, அதைசுற்றி சின்ன கோவிலோ இரெண்டும்  எதிர்க்கப்பட வேண்டியதே. முன்பு சிலை வைத்துவிட்டார்கள் என்பதால் இப்போ கோவில் கட்டுவதை எதிர்க்காமல் விட முடியாது. இங்கே மீதி உண்மையை (இப்போ கட்டப்படுவது கோவில்) நீங்கள் எழுதாமல்….ஏதோ இரு வருடம் முதல் நடந்த விடயத்தை இப்போ எதிர்க்கிறார்கள் என்பது போல் எழுதியது கபடத்தனமானதில்லையா?
    • உங்களுக்கு குசும்பு அதிகரித்துவிட்டது, அவர் இனப்பிரச்சினைக்கு (பொருளாதார பிரச்சினை) தீர்வு கூறுகிறார்.
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.