Jump to content
இணைய வழங்கி மாற்றம் காரணமாக நானை  (17/11/2024) ஐரோப்பிய நேரம் 20:00 மணிமுதல் இணைய வழங்கியில் தடங்கல் ஏற்படும் என்பதை அறியத்தருகின்றோம்.

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

ஜனாதிபதி வேட்பாளர் தேர்தல்: தெற்கு கரோலினாவில் டிரம்ப் வெற்றி

அமெரிக்காவில் ஜனநாயக கட்சி சார்பில் ஜனாதிபதி ஜோ பைடன் பதவி வகித்து வருகிறார். இந்த ஆண்டு அவரது பதவிக்காலம் முடியவுள்ள நிலையில், எதிர்வரும் நவம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடக்கவுள்ளது.

ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் கட்சி உறுப்பினர்களின் ஆதரவைப் பெறவேண்டும். அதற்கு மாகாணங்கள் தோறும் வாக்குப்பதிவு நடைபெறும். இரு கட்சிகள் சார்பிலும் நடக்கும் மாநாட்டில் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்டு தங்கள் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை தேர்ந்தெடுப்பார்கள்.

trump.jpg

இதற்கிடையே, அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் களம் களைகட்டத் தொடங்கியுள்ளது. குடியரசுக் கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளர் தேர்வு நடந்து வருகிறது. இதில் முன்னாள் ஜனாதிபதி டிரம்ப், இந்திய வம்சாவளியைச் சோ்ந்தவரும், தெற்கு கரோலினா மாகாண முன்னாள் ஆளுநருமான நிக்கி ஹாலே இடையே போட்டி நிலவுகிறது.

இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளரை தேர்வு செய்ய தெற்கு கரோலினா மாகாணத்தில் நடந்த தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். தெற்கு மாகாணத்தில் நடந்த வாக்குப்பதிவில் அவர் வெற்றி பெற்றுள்ளார்.

ஏற்கனவே நியூ ஹாம்ப்ஷையர் மற்றும் லோவா காகசஸ் மாகாணங்களில் நடந்த தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

https://thinakkural.lk/article/293106

  • கருத்துக்கள உறவுகள்
Posted

முதல் தடவையாக ட்ரம்பை வென்றார் நிக்கி ஹாலே

Published By: SETHU    04 MAR, 2024 | 01:02 PM

image

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் குடியரசுக் கட்சியின் வேட்பாளரைத் தெரிவுசெய்வதற்காக வொஷிங்டன் டிசி நகரில் நடந்த உட்கட்சித் தேர்தலில் நிக்கி ஹாலே வெற்றியீட்டியுள்ளார்.

குடியரசுக் கட்சி ஜனாதிபதி வேட்பாளருக்கான உட்கட்சித் தேர்தல் வரலாற்றில் பெண்ணொருவர், பிராந்திய தேர்தலொன்றில் வெற்றியீட்டியமை இதுவே முதல் தடவையாகும். 

நேற்று ஞாயிற்றுக்கிழமை வொஷிங்டன் டி.சி. நகரில் நடைபெற்ற தேர்தலில் நிக்கி ஹாலே 63 சதவீத வாக்குகளைப் பெற்றார். இதன் மூலம் நகரில்  நிக்கி ஹாலே 19 பிரதிநிதிகளின் ஆதரவைப் பெறுவார். 

முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 33.3 சதவீத வாக்குகளைப் பெற்றார். அவருக்கு  வொஷிங்டன் டிசியிலிருந்து பிரதிநிதிகள் எவரும் கிடைக்கவில்லை. 

டொனால்ட் ட்ரம்ப், நிக்கி ஹாலே ஆகிய இருவர் மாத்திரமே தற்போது குடியரசுக் கட்சி வேட்பாளருக்கான போட்டியில் நீடிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

குடியரசுக் கட்சியில் அமெரிக்கா முழுவதும் 2429 பிரதிநிதிகள் உள்ளனர். ஜனாதிபதி வேட்பாளராகுவதற்கு குறைந்தபட்சம் 1215 பிரதிநிதிகளின் ஆதரவு தேவை. 

டொனால்ட் ட்ரம்ப் இதுவரை 247 பிரதிநிதிகளையும் நிக்கி ஹாலே  பிரதிநிதிகளையும் பெற்றுள்ளனர். 

நாளை செவ்வாய்க்கிழமை 15 மாநிலங்களில் குடியரசுக் கட்சி வேட்பாளருக்கான உட்கட்சித் தேர்தல் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/177863

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்: டிரம்பிற்கு நிதியுதவி அளிக்கிறாரா மஸ்க்?

அமெரிக்காவில் இவ்வருடம் நவம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் போட்டியிட உள்ள தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடனை எதிர்த்து முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் களம் இறங்கி உள்ளார்.

தனது பிரசாரங்களுக்கு நிதி தேவைப்படுவதால் குடியரசு கட்சி ஆதரவாளர்களில் பல முன்னணி தொழிலதிபர்களை சந்தித்து டொனால்ட் டிரம்ப் நிதியுதவி கோரி வருகிறார்.

இந்நிலையில், உலகின் முன்னணி கோடீஸ்வரர்களில் ஒருவரும் அமெரிக்க தொழிலதிபருமான எலான் மஸ்கை டொனால்ட் டிரம்ப் சந்தித்து பிரசாரங்களுக்கு நிதி கோரியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Capture-2-1.jpg

புளோரிடா (Florida) மாநில பாம் பீச் (Palm Beach) பகுதியில் டொனால்ட் டிரம்ப் நடத்திய பல பிரமுகர்களுடனான சந்திப்பில் எலான் மஸ்க் கலந்து கொண்டார்.

பாம் பீச் விமான நிலையத்தில் எலான் மஸ்க் மற்றும் டொனால்ட் டிரம்ப் ஆகிய இருவரின் விமானங்களும் ஒரு மணிக்கும் குறைவான கால இடைவெளியில் வந்திறங்கியது குறித்து முன்னரே தகவல்கள் வெளியாகின.

2024 ஜனாதிபதி தேர்தல் போட்டிக்கு டிரம்பை எலான் மஸ்க் ஆதரிப்பாரா என்பது தற்போது வரை தெரியவில்லை.

2022 இல் தனக்கு ஆதரவாக மஸ்க் வாக்களித்ததாகவும் அதை அவரே ஒப்பு கொண்டதாகவும் டிரம்ப் தெரிவித்திருந்தார். ஆனால், இதனை அப்போது மஸ்க் மறுத்தார்.

இதுவரை அமெரிக்காவின் இரு கட்சிகளில் எந்த கட்சியையும் சாராதவராக தன்னை முன்னிறுத்தி வந்திருக்கும் உலகின் முன்னணி கோடீஸ்வரர்களில் ஒருவரான எலான் மஸ்க், டிரம்பை ஆதரிக்கும் பட்சத்தில், பைடனின் வெற்றி வாய்ப்புகள் பெருமளவு குறையக்கூடும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

https://thinakkural.lk/article/294692

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நல்ல விடயம். நிக்கி ஹேலி தேர்வாகியிருந்தால் நடுவில் இருக்கும் independent வாக்காளர்கள் பைடனை விட்டு நிக்கிக்கு அதிபர் தேர்தலில் வாக்களித்திருப்பர். ட்ரம்ப் பக்கம் இத்தகைய இளம் வாக்காளர்கள் வருவது கடினம். பைடன் அணிக்கு ஒரு வாய்ப்பிருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 minutes ago, Justin said:

நல்ல விடயம். நிக்கி ஹேலி தேர்வாகியிருந்தால் நடுவில் இருக்கும் independent வாக்காளர்கள் பைடனை விட்டு நிக்கிக்கு அதிபர் தேர்தலில் வாக்களித்திருப்பர். ட்ரம்ப் பக்கம் இத்தகைய இளம் வாக்காளர்கள் வருவது கடினம். பைடன் அணிக்கு ஒரு வாய்ப்பிருக்கிறது.

இதை மனதில் வைத்து நிக்கியை உப ஜனாதிபதியாகவும் தெரிவு செய்யலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 minutes ago, ஈழப்பிரியன் said:

இதை மனதில் வைத்து நிக்கியை உப ஜனாதிபதியாகவும் தெரிவு செய்யலாம்.

உப ஜனாதிபதிக்காக நடுநிலை வாக்காளர்கள் வாக்களிப்பதில்லை. ஏனெனில் உப ஜனாதிபதிக்கு அரசியலமைப்பின் படி பெரிய பலம் கிடையாது. நிக்கி ஹேலிக்கு இன்னொரு வாய்ப்பு ஜனாதிபதி வேட்பாளராக வர இருக்கிறது, எனவே அதனாலும் அவர் ட்ரம்ப் அழைத்தாலும் போகப் போவதில்லை. இது என் ஊகம்!

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 minutes ago, Justin said:

உப ஜனாதிபதிக்காக நடுநிலை வாக்காளர்கள் வாக்களிப்பதில்லை. ஏனெனில் உப ஜனாதிபதிக்கு அரசியலமைப்பின் படி பெரிய பலம் கிடையாது. நிக்கி ஹேலிக்கு இன்னொரு வாய்ப்பு ஜனாதிபதி வேட்பாளராக வர இருக்கிறது, எனவே அதனாலும் அவர் ட்ரம்ப் அழைத்தாலும் போகப் போவதில்லை. இது என் ஊகம்!

பெண்களின் வாக்குகளைக் கவர நடந்தாலும் நடக்கலாம்.

ஆனாலும் மைக் பென்சை மாதிரி வாயை இறுக மூடி சிரித்துக் கொண்டிருக்கிற ஆளே ரம்புக்கு தேவை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, ஏராளன் said:

அமெரிக்காவில் இவ்வருடம் நவம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் போட்டியிட உள்ள தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடனை எதிர்த்து முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் களம் இறங்கி உள்ளார்.

தனது பிரசாரங்களுக்கு நிதி தேவைப்படுவதால் குடியரசு கட்சி ஆதரவாளர்களில் பல முன்னணி தொழிலதிபர்களை சந்தித்து டொனால்ட் டிரம்ப் நிதியுதவி கோரி வருகிறார்.

இந்நிலையில், உலகின் முன்னணி கோடீஸ்வரர்களில் ஒருவரும் அமெரிக்க தொழிலதிபருமான எலான் மஸ்கை டொனால்ட் டிரம்ப் சந்தித்து பிரசாரங்களுக்கு நிதி கோரியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சென்ற தேர்தலில்  பைடனுக்கு ஹொலிவூட் கும்பல் அமோக ஆதரவு அளித்து உலகை பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளியது தான் மிச்சம். எனவே எலான் மஸ்க் புத்திசாலி மனிதர். ரம்பிற்கு ஆதரவளிக்கக்கூடும். 😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, குமாரசாமி said:

சென்ற தேர்தலில்  பைடனுக்கு ஹொலிவூட் கும்பல் அமோக ஆதரவு அளித்து உலகை பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளியது தான் மிச்சம்.

அதேநேரம் ரம்ப் வென்றிருந்தால் அதைவிட மேசமாகி இருக்கலாம் என்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
Just now, ஈழப்பிரியன் said:

அதேநேரம் ரம்ப் வென்றிருந்தால் அதைவிட மேசமாகி இருக்கலாம் என்கிறார்கள்.

இப்பவே மோசம் என்கிறார்கள். அதை விட மோசம் என்றால்.....

இன்றைய பொருளாதார நெருக்கடிக்கு எரிசக்தி அரசியல்தான் முக்கிய காரணம் என்கிறார்கள். அந்த வகையில் டொனால்ட் ரம்ப் அதில் கை வைக்கவில்லை என நான் நினைக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

“நன்கொடையா? இரு வேட்பாளர்களுக்குமே இல்லை” – மஸ்க்

mask-2-300x200.jpg

இவ்வருட இறுதியில் அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது.

ஜனநாயக கட்சியை சேர்ந்த தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் குடியரசு கட்சியை சேர்ந்த முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஆகியோர் ஒருவரையொருவர் எதிர்த்து களம் இறங்கியுள்ளனர்.

பல்வேறு மாநிலங்களில் பதிவான வழக்குகளுக்காக பெரும் தொகை செலவிட்டு வரும் டிரம்ப், பிரசாரங்களுக்கான நிதி கட்டமைப்பில் பைடனை விட பின் தங்கி உள்ளார்.

தனது பிரசாரத்திற்கு பெரும் நிதி தேவைப்படுவதால், டிரம்ப் குடியரசு கட்சியை ஆதரிக்கும் பெரும் தொழிலதிபர்களை சந்தித்து நிதியுதவி கோரி வருகிறார்.

இதன் தொடர்ச்சியாக, அமெரிக்காவை சேர்ந்த உலகின் முன்னணி கோடீஸ்வரரான எலான் மஸ்க் மற்றும் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் புளோரிடா மாநில மியாமியில் சந்தித்து பேசியதாக செய்திகள் வெளியாகின.

டிரம்ப்பை, மஸ்க் ஆதரிக்கும் பட்சத்தில் ஜோ பைடனின் வெற்றி வாய்ப்புகள் குறையலாம் என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்தனர்.

 

 

இந்நிலையில், வரவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் இரு கட்சி வேட்பாளர்களில், எவருக்கும் தான் நிதியுதவி அளிக்க போவதில்லை என எலான் மஸ்க் தனது அதிகாரபூர்வ எக்ஸ் கணக்கில் திட்டவட்டமாக அறிவித்துள்ளார் .

மஸ்கின் இந்த அறிவிப்பு, டிரம்பிற்கு பின்னடைவாக மாறலாம் என கூறும் அரசியல் விமர்சகர்கள், நேரடியாக வேட்பாளருக்கு நிதியுதவி செய்ய மஸ்க் மறுத்தாலும், அரசியல் கட்சிகளின் கமிட்டிகளுக்கு அவரது நிறுவனங்கள் அளிக்க கூடிய நன்கொடைகள் மூலம் நிதியளிக்கலாம் என கருத்து தெரிவித்தனர்.

உலக பணக்காரர்கள் பட்டியலில் $192 பில்லியன் நிகர மதிப்பு உள்ள எலான் மஸ்க், ஜோ பைடனின் குடியேற்ற மற்றும் அகதிகள் மறுவாழ்வு தொடர்பான கொள்கைகளை விமர்சித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

https://thinakkural.lk/article/294798

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, ஏராளன் said:

இந்நிலையில், வரவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் இரு கட்சி வேட்பாளர்களில், எவருக்கும் தான் நிதியுதவி அளிக்க போவதில்லை என எலான் மஸ்க் தனது அதிகாரபூர்வ எக்ஸ் கணக்கில் திட்டவட்டமாக அறிவித்துள்ளார் .

மஸ்க் ரொம்பத் தான் தமாசு விடுறார்.

ரம்புக்கு அள்ளிக் கொடுக்க காத்திருக்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அமெரிக்க அதிபர் வேட்பாளர் தேர்தல்: பைடன் - டிரம்ப் வார்த்தைப் போர், நிக்கி ஹேலி விலகல்

அமெரிக்க அதிபர் வேட்பளர் தேர்தல், நிக்கி ஹேலி, ஜோ பைடன், டொனால்ட் ட்ரம்ப்

பட மூலாதாரம்,GETTY IMAGES

7 மார்ச் 2024

இந்த ஆண்டு நடைபெறும் அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான குடியரசுக் கட்சி வேட்பாளர் போட்டியில் இருந்து நிக்கி ஹேலி விலகியுள்ளார். அமெரிக்க அதிபராகும் அவரது கனவு வேட்பாளராகும் முன்பே தகர்ந்தது.

அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் தேர்வுக்கான போட்டியில் இருந்து விலக நிக்கி ஹேலி முடிவு செய்துள்ளார். குடியரசுக் கட்சி வேட்பாளருக்கான போட்டியில் அவர் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு சவால் விடுத்தார், ஆனால் அவரால் அதில் வெல்ல முடியவில்லை.

ஹேலி விலகியது 2024ஆம் ஆண்டின் அமெரிக்கத் தேர்தலின் துவக்கமாகக் கருதப்படுகிறது. நான்கு ஆண்டுகள் முன்பு நடந்தது போலவே, முன்னாள் அதிபர் டிரம்புக்கும், இந்நாள் அதிபர் ஜோ பைடனுக்கும் இடையே போட்டி நிகழவிருக்கிறது.

அமெரிக்க அதிபர் வேட்பளர் தேர்தல், நிக்கி ஹேலி, ஜோ பைடன், டொனால்ட் ட்ரம்ப்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

முதல் பிரிவினர், டிரம்பை எதிர்ப்பதற்காக மட்டுமே நிக்கி ஹேலியை ஆதரித்ததாகக் கூறுகின்றனர்.

நிக்கி ஹேலியின் ஆதரவாளர்கள் டிரம்பை ஆதரிப்பார்களா?

நிக்கி ஹேலி திரட்டியிருந்த டிரம்ப் எதிர்ப்பாளர்களின் கூட்டணியால் டிரம்பின் வெற்றியைத் தடுக்க முடியவில்லை. ‘சூப்பர் செவ்வாய்’ என்றழைக்கப்படும் கடந்த செவ்வாய்க்கிழமையன்று நடந்த முதல்கட்ட வாக்குப் பதிவுகளில் டிரம்ப் வென்றதையடுத்து அவர் குடியரசுக் கட்சியின் வேட்பாளராவது ஏறத்தாழ உறுதியாகிவிட்டது.

நிக்கி ஹேலியை ஆதரித்தவர்களை மூன்று வகையில் பிரிக்கலாம்: டிரம்ப் எதிர்ப்பாளர்கள், சார்பற்றவர்கள், குடியரசுக் கட்சி விசுவாசிகள்.

இதில் முதல் பிரிவினர், டிரம்பை எதிர்ப்பதற்காக மட்டுமே நிக்கி ஹேலியை ஆதரித்ததாகக் கூறுகின்றனர். இதுபோன்ற வாக்காளர்கள், தங்கள் பக்கம் திரும்புவர் என்று ஜனநாயகக் கட்சியினர் எதிர்பார்க்கின்றனர்.

சில மாகாணங்களில் நடந்த முதல்கட்டத் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளில், ஹேலியின் ஆதரவாளர்களில் 21% பேர்தான், அவரது விலகலுக்குப் பின் குடியரசுக் கட்சி வேட்பாளருக்கு வாக்களிக்கப் போவதாகத் தெரிவித்துள்ளனர்.

ஆனால் டிரம்ப் ஆதரவாளர்கள் இந்த வாக்காளர்களைத் தங்கள் பக்கம் இழுப்பதற்குப் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. அவர்கள் நிக்கி ஹேலியின் மீது அந்தரங்கத் தாக்குதல்களை மட்டுமே செய்து வருகின்றனர்.

நிக்கி ஹேலி போட்டியிலிருந்து விலகியதும்கூட டிரம்ப் முதலில் அவரைத் தாக்கித்தான் பேசினார். அதன் பின்னரே ஹேலியின் ஆதரவாளர்களைத் தன்னை ஆதரிக்குமாறு அவர் அழைப்பு விடுத்தார்.

 

டிரம்பிற்கு எதிராக இருக்கும் சவால்கள் என்ன?

அமெரிக்க அதிபர் வேட்பளர் தேர்தல், நிக்கி ஹேலி, ஜோ பைடன், டொனால்ட் ட்ரம்ப்
படக்குறிப்பு,

டிரம்பின் மீது இருக்கும் வழக்குகளும் அவருக்கு பின்னடைவாக அமையக்கூடும்

ஆனால் ஒரு கருத்துக்கணிப்பின்படி, 19% அமெரிக்க வாக்காளர்கள் டிரம்ப், பைடன் ஆகிய இருவரையும் வெறுக்கின்றனர். இதனால், இவர்கள் வாக்களிக்காமலே இருக்கக்கூடும் என்று சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

அமெரிக்கப் பொருளாதாரத்தில் நிகழும் மாற்றங்கள், யுக்ரேன், காஸா ஆகிய இடங்களில் நிகழும் சம்பவங்கள், அல்லது டிரம்ப், பைடன் ஆகியோர் சங்கடப்படும் வகையில் செய்யும் குளறுபடிகள் ஆகியவை எப்பக்கமும் சார்பற்ற வாக்காளர்களின் முடிவை மாற்றக்கூடும் என்று அவர்கள் கருதுகின்றனர்.

மேலும், டிரம்பின் மீது இருக்கும் வழக்குகளும் அவருக்குப் பின்னடைவாக அமையக்கூடும். அவருக்கு எதிராக இருக்கும் நான்கு குற்ற வழக்குகளில் ஏதேனும் ஒன்றில்கூட அவருக்கு எதிரான குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர் வாக்குகளை இழப்பார், என்றும் அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர்.

 

பைடன் – டிரம்ப் இடையே முற்றும் வார்த்தைப் போர்

அமெரிக்க அதிபர் வேட்பளர் தேர்தல், நிக்கி ஹேலி, ஜோ பைடன், டொனால்ட் ட்ரம்ப்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

பைடனின் தேர்தல் பிரசாரக் குழு, டிரம்ப் விளம்பரத்திற்காகவே பேசி வருவதாகக் கூறியிருக்கிறது.

இந்நிலையில் டிரம்ப், ஜோ பைடனை தொலைக்காட்சியில் நேருக்கு நேர் விவாதிக்க அழைப்பு விடுத்திருக்கிறார். ‘எப்போது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும், எந்த இடத்தில் வேண்டுமானாலும்’ பைடனோடு விவாதிக்கத் தயார் என்று டிரம்ப் கூறியிருக்கிறார்.

அமெரிக்காவின் நலனுக்காக அவர் இந்த விவாதத்திற்கு பைடனை அழைப்பதாகக் கூறியுள்ளார்.

அத்தோடு, 81 வயதான பைடன், மிகவும் வயதானவர் என்றும், மறதியால் அவதிப்படுபவர் என்றும், அதனால் அவரால் தன்னோடு விவாதிக்க முடியாது என்றும் டிரம்ப் கூறி வருகிறார்.

பதிலுக்கு, 77 வயதான டிரம்ப் முதுமையால் மனச்சிதைவு அடைந்துவிட்டதாக பைடன் கூறியுள்ளார். பைடனின் தேர்தல் பிரசாரக் குழு, டிரம்ப் விளம்பரத்திற்காகவே இதையெல்லாம் செய்து வருவதாகக் கூறியிருக்கிறது.

https://www.bbc.com/tamil/articles/cml7e7r07kxo

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 minutes ago, ஏராளன் said:

அத்தோடு, 81 வயதான பைடன், மிகவும் வயதானவர் என்றும், மறதியால் அவதிப்படுபவர் என்றும், அதனால் அவரால் தன்னோடு விவாதிக்க முடியாது என்றும் டிரம்ப் கூறி வருகிறார்.

இவரை விட அவருக்கு 4 வயதுதான் கூட ஆனல் பைடன் வயதானவராம்.  நாலு வருடங்களுக்கு முன்னர் பைடனுக்கு 77 வயதாக இருக்கும்போதும் இதையே ட்ரம்ப்  சொன்னார். இப்ப ட்ரம்புக்கு 77 வயது!😂

 

(குறிப்பு: இந்தக் கருத்தாளர் டொனல்ட் ட்ரம்பின் ஆதரவாளர் என்பது கவனிக்கத் தக்கது) 😂

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

அமெரிக்க அதிபர் தேர்தல்: மீண்டும் பைடன் vs டிரம்ப் - பெரும்பான்மை பெற்றது எப்படி?

அமெரிக்க அதிபர் தேர்தல்: மீண்டும் பைடன் vs டிரம்ப் - பெரும்பான்மை பெற்றது எப்படி?

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், கைலா எப்ஸ்டீன்
  • பதவி, பிபிசி செய்திகள்
  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் இருவரும் நவம்பரில் நடைபெறவுள்ள தேர்தலுக்கான தமது கட்சிகளின் சார்பில் வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கான பிரதிநிதித்துவ பெரும்பான்மைக்கு தேவையான ஆதரவைப் பெற்றுள்ளனர்.

நான்கு மாகாணங்கள், ஒரு அமெரிக்க பிரதேசம் மற்றும் வெளிநாட்டில் வசிக்கும் ஜனநாயகக் கட்சியினர் செவ்வாயன்று தங்கள் முதன்மைத் தேர்வுகளை நடத்தினர்.

இதன் விளைவாக, அமெரிக்க வாக்காளர்கள் எட்டு மாதங்களில் அதிபர் தேர்தலை எதிர்கொள்வார்கள். இந்தக் கோடையில் நடைபெறும் கட்சி மாநாடுகளில் கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவார்கள்.

கடந்த செவ்வாயன்று 81 வயதான அதிபர் ஜோ பைடன் பேசியபோது, "டிரம்ப் முன்வைக்கும் அச்சுறுத்தல் முன்னெப்போதையும் விட அதிகமாக இருக்கும் தருணத்தில் வாக்காளர்கள், தான் மீண்டும் போட்டியிடும் முயற்சியை ஆதரிப்பதை கௌரவமாகக் கருதுவதாக" கூறினார்.

நேர்மறையான பொருளாதாரப் போக்குகளை மேற்கோள் காட்டி, அமெரிக்கா "மீண்டும் வருவதற்கான(பாதையின்) நடுவில்" இருப்பதாக அவர் கூறினார். ஆனால் ஒரு ஜனநாயக நாடாக அதன் எதிர்காலத்திற்கு சவால்கள் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அமெரிக்க அதிபர் தேர்தல்: மீண்டும் பைடன் vs டிரம்ப் - பெரும்பான்மை பெற்றது எப்படி?

பட மூலாதாரம்,GETTY IMAGES

அத்துடன் கருக்கலைப்பு கட்டுப்பாடுகளை நிறைவேற்றவும் சமூக திட்டங்களைல் குறைக்கவும் முயல்பவர்களிடம் இருந்தும் சவால்களை எதிரக்கொள்ள வேண்டியிருப்பதாகவும் அவர் கூறினார்.

"அமெரிக்க மக்கள் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு எங்களைத் தேர்ந்தெடுப்பார்கள் என்று நான் நம்புகிறேன்," என பைடன் தனது பிரசாரத்திற்கான தேர்தல் அறிக்கையில் கூறினார்.

பைடன் தற்போது அதிபர் பதவியில் இருப்பதால், இது அவருக்கு இயல்பாகவே பலத்தைத் தருகிறது. அவர், ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராகத் தேர்வாவதற்கு அவர் கடுமையான சவால்களை எதர்கொள்ளவில்லை.

அவர் வயது மூப்பின் காரணமாக, அவர் அதிபர் பதவிக்கான கடமைகளை நிறைவேற்றுவதில் சிக்கல் இருப்பதாக வாக்காளர்களிடம் இருந்து கருத்துகள் வந்தபோதிலும், அவர் சார்ந்திருந்த கட்சி அவருக்கு பக்கபலமாக இருந்தது.

இதற்கிடையில், 77 வயதான டிரம்ப், குடியரசுக் கட்சியின் வாக்காளர் தளத்தில் மிகவும் பிரபலமாக இருக்கிறார். இது அவரை நன்கு நிதியளிக்கப்பட்ட போட்டியாளர்களைவிட அதிக ஆதரவு பெற்று வேட்பாளர் தேர்வில் வெற்றி பெறுவதற்கு உந்தியது.

 
அமெரிக்க அதிபர் தேர்தல்: மீண்டும் பைடன் vs டிரம்ப் - பெரும்பான்மை பெற்றது எப்படி?

பட மூலாதாரம்,GETTY IMAGES

டிரம்ப், குற்றங்களுக்கு எதிராகப் போராடவும், உள்நாட்டு எரிசக்தி உற்பத்தியை அதிகரிக்கவும், வெளிநாட்டு இறக்குமதிக்கு வரி விதிக்கவும், யுக்ரேனில் போரை முடிவுக்குக் கொண்டு வரவும், உலக விவகாரங்களில் அமெரிக்காவை முதன்மைப்படுத்தும் அணுகுமுறையை மீண்டும் தொடங்கவும் சபதம் செய்துள்ளார்.

செவ்வாய்க்கிழமை இரவு முடிவுகள் அதிர்ச்சியை ஏற்படுத்தவில்லை. ஏனெனில் இருவரும் இதுவரை கட்சியில் நடந்த வேட்பாளர் தேர்வுக்கான போட்டியில் ஆதிக்கம் செலுத்தி வந்தனர்.

நவம்பரில் அதிபர் பைடனுக்கும், முன்னாள் அதிபர் டிரம்புக்கும் இடையில் மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டி ஏற்படுவதற்கான வாய்ப்பு இருப்பதால், அமெரிக்கர்கள் அதிருப்தி அடையும் வகையில் சில சமிக்ஞைகள் இருந்தபோதிலும், அவர்கள் மீண்டும் போட்டியிடுவது தீர்மானிக்கப்பட்டதாகவே தோன்றியது.

 
அமெரிக்க அதிபர் தேர்தல்: மீண்டும் பைடன் vs டிரம்ப் - பெரும்பான்மை பெற்றது எப்படி?

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஜனநாயகக் கட்சியினரும் குடியரசுக் கட்சியினரும் தங்கள் முதன்மை வேட்பாளர் தேர்வு செய்வதற்கான விதிகளில் சிறு வித்தியாசங்கள் இருந்தாலும், செயல்முறை அடிப்படையில் இண்டும் ஒன்றுதான்.

ஒவ்வொரு மாகாணத்திற்கும் கட்சி பிரதிநிதிகளுக்கு ஒரு குறிப்பிட்ட பங்கு ஒதுக்கப்படுகிறது, அவை வெற்றிபெறும் வேட்பாளருக்கு ஒட்டுமொத்தமாகவோ அல்லது விகிதாசாரமாகவோ முடிவுகளின் அடிப்படையில் வழங்கப்படும்.

குடியரசுக் கட்சி வேட்பாளர் தனது அதிபர் தேர்தலுக்கான வேட்பாளர் தேர்தலில் வெற்றி பெற முதன்மை சீசனில் குறைந்தபட்சம் கட்சியின் 1,215 பிரதிநிதிகளின் ஆதரவைப் பெற வேண்டும். அதேநேரம் ஒரு ஜனநாயகக் கட்சி 1,968 பிரதிநிதிகளின் ஆதரவைப் பெற வேண்டும்.

செவ்வாயன்று, குடியரசுக் கட்சியினர் மிசிசிப்பி, ஜார்ஜியா மற்றும் வாஷிங்டன் மாகாணத்தில் முதன்மைக் கூட்டங்களையும், ஹவாயில் ஒரு காக்கஸையும் நடத்தினர்.

ஜனநாயகக் கட்சியினர், இதற்கிடையில், ஜார்ஜியா, வாஷிங்டன் மற்றும் மிசிசிப்பி மாகாணங்களிலும், வடக்கு மரியானா தீவுகளிலும், வெளிநாடுகளில் வாழும் ஜனநாயகக் கட்சியினருக்காகவும் முதன்மைப் போட்டிகளை நடத்தினர்.

 
அமெரிக்க அதிபர் தேர்தல்: மீண்டும் பைடன் vs டிரம்ப் - பெரும்பான்மை பெற்றது எப்படி?

பட மூலாதாரம்,GETTY IMAGES

பைடன் மற்றும் டிரம்பின் முக்கிய போட்டியாளர்கள் செவ்வாய்கிழமை முதன்மை போட்டிகளுக்கு முன்பே வெளியேறிவிட்டனர், எனவே முடிவுகள் அனைத்தும் உறுதியாக இருந்தன.

டிரம்பின் கடைசி போட்டியாளரான முன்னாள் ஐநா தூதர் நிக்கி ஹேலி, சூப்பர் செவ்வாய் அன்று டிரம்பிடம் 14 மாகாணங்களை இழந்த பின்னர் இந்த மாதத் தொடக்கத்தில் போட்டியில் இருந்து வெளியேறினார்.

இன்னும் பல மாகாணங்கள் தங்கள் முதன்மைப் போட்டிகளை நடத்தவில்லை என்றாலும், டிரம்ப் மற்றும் பைடனுக்கு தேவைப்படும் பிரதிநிதிகளின் ஆதரவுக்கு மேல் உள்ளது. இதனால், 2024 பொதுத் தேர்தலுக்கான ஏற்பாடும் இப்போது திறம்பட நடந்து வருகிறது.

அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5, 2024 அன்று நடைபெறவுள்ளது.

https://www.bbc.com/tamil/articles/cnekg3rze2ro

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, ஏராளன் said:

டிரம்ப், குற்றங்களுக்கு எதிராகப் போராடவும், உள்நாட்டு எரிசக்தி உற்பத்தியை அதிகரிக்கவும், வெளிநாட்டு இறக்குமதிக்கு வரி விதிக்கவும், யுக்ரேனில் போரை முடிவுக்குக் கொண்டு வரவும், உலக விவகாரங்களில் அமெரிக்காவை முதன்மைப்படுத்தும் அணுகுமுறையை மீண்டும் தொடங்கவும் சபதம் செய்துள்ளார்.

உலகிற்கு நல்ல சகுனம். வாழ்க ட்ரம்ப் 👈🏽 💪🏽

  • கருத்துக்கள உறவுகள்
Posted

spacer.png

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

அமெரிக்க அதிபர் தேர்தலில் புதிய திருப்பம்... டிரம்ப் ஆதரவாளராக மாறிய எலான் மஸ்க்

அமெரிக்க அதிபர் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் எக்ஸ் தளத்தின் உரிமையாளரான எலான் மஸ்க் புதிய திருப்பமாக தனது ஆதரவை டொனால்ட் டிரம்ப் பக்கம் திருப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பான பதிவொன்றினையும் அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார், அதில் அவரது ஆதரவு நிலைப்பாடு டிரம்ப் பக்கம் இருப்பது தெளிவாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதன்படி தனது பதிவில், தனது முந்தைய ஜனநாயகக் கட்சி ஆதரவை ஒப்புக்கொண்ட எலான் மஸ்க், தற்போது அமெரிக்காவுக்கு ’சிவப்பு அலை’ வேண்டும் என பதிவிட்டிருக்கிறார். சிவப்பு அலை என்பது குடியரசுக் கட்சியை குறிக்கிறது.

தேர்தலுக்கு முன்

அதாவது மீண்டும் டிரம்ப் அதிபராக வரவேண்டும் என்பதை எலான் மஸ்க் வெளிப்படையாக பொதுவெளியில் தெரிவித்திருக்கிறார். ”தேர்தலுக்கு முன்பாக நான் ஒரு பரிசீலிக்கப்பட்ட முடிவை எடுக்க விரும்புவேன். ஒரு வேட்பாளரை ஆதரிக்க முடிவு செய்தால், அதற்கான காரணத்தை நான் சரியாக விளக்குவேன்" என்று முன்னதாக தெரிவித்திருந்த எலான் மஸ்குக்கு, தற்போது அதற்கான சூழல் வந்திருக்கிறது என்று அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.

 

முன்னதாக 2020 அதிபர் தேர்தலில் ஜோ பைடனுக்கு தான் வாக்களித்ததாக எலான் மஸ்க் தெரிவித்திருந்தார், ஆனால் 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற மின் வாகனங்கள் தொடர்பான உச்சி மாநாட்டில் எலான் மஸ்கின் டெஸ்லாவுக்கு இடம் இல்லை என தெரிய வந்ததும் மஸ்க் நிலைப்பாடில் பெரும் மாற்றம் நிகழத் தொடங்கியது.

 

எலான் மஸ்குக்கே விற்க முடிவு

அது மாத்திரமன்றி, எக்ஸ் தளத்தில் வெகுவாக விமர்சிக்கப்பட்ட டிரம்ப் இதனால் வெறுப்புற்ற நிலையில் ட்விட்டருக்கு போட்டியாக ட்ரூத் சோஷியல் என புதிய சமூக ஊடகத்தை தொடங்கினார். ஆனால் டொனால்ட் ஆதரவாளர்களுக்கு அப்பால் அது மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெறவில்லை.

அமெரிக்க அதிபர் தேர்தலில் புதிய திருப்பம்... டிரம்ப் ஆதரவாளராக மாறிய எலான் மஸ்க் | Elon Musk Starts Endorsing Trump Than Joe Biden

எனவே எக்ஸ் தளத்திற்க்கு மீண்டும் பயனர்களை இணைக்கும் யுக்தியாகவும் இது இருக்கலாம் என பலதரப்பட்டோராலும் தற்போது பேசப்பட்டு வருகிறது, இந்நிலையில் தற்போது மீண்டும் எக்ஸ் தளத்துக்கு திரும்பியதை அடுத்து தனது ட்ரூத் சோஷியலை எலான் மஸ்குக்கே விற்க டிரம்ப் முடிவு செய்திருப்பதாகவும், அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://ibctamil.com/article/elon-musk-starts-endorsing-trump-than-joe-biden-1711371224

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, ஏராளன் said:

அமெரிக்க அதிபர் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் எக்ஸ் தளத்தின் உரிமையாளரான எலான் மஸ்க் புதிய திருப்பமாக தனது ஆதரவை டொனால்ட் டிரம்ப் பக்கம் திருப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவர் முதலிருந்தே ரம்புக்குத் தான் ஆதரவாக உள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, ஈழப்பிரியன் said:

இவர் முதலிருந்தே ரம்புக்குத் தான் ஆதரவாக உள்ளார்.

உண்மை/ நியாய தர்மங்கள்  உணர்ந்தவர்கள் டொனால்ட் ரம்ப் அவர்களை ஆதரிப்பார்கள் தானே....😎

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
22 minutes ago, குமாரசாமி said:

உண்மை/ நியாய தர்மங்கள்  உணர்ந்தவர்கள் டொனால்ட் ரம்ப் அவர்களை ஆதரிப்பார்கள் தானே....😎

வெற்றி வாய்ப்பு ர‌ம்புக்கு தான் அதிக‌ம்............11மாத‌ம்  தெரிந்து விடும்.................

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ட்ரம், பைடன் இவர்களை விட சிறந்த தலைவர்கள் அமெரிக்காவில் இல்லையா?

வினோதம் நிறைந்த அமெரிக்கா!

  • கருத்துக்கள உறவுகள்
Posted
27 minutes ago, vasee said:

ட்ரம், பைடன் இவர்களை விட சிறந்த தலைவர்கள் அமெரிக்காவில் இல்லையா?

வினோதம் நிறைந்த அமெரிக்கா!

எல்லா நாடுகளிலும் இதே பிரச்சனைதான். 😂

  • Like 1


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.