Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது
7-9.jpg

ஒருவர் தனிப்பட்ட முறையில் வீட்டிலேயே 3 கஞ்சா செடி வரை வளர்க்கலாம் மற்றும் தினமும் 25 கிராம் வரை உபயோகிக்கலாம் என ஜெர்மனி பாராளுமன்றம் சட்டம் நிறைவேற்றியுள்ளது.

ஜெர்மனியில் கடந்த வெள்ளிக்கிழமை கூடிய பாராளுமன்றம் இந்த சட்டத்தை நிறைவேற்றியுள்ளது.

கஞ்சா உபயோகத்தை சட்டரீதியாக ஒப்புகொள்ளும் இந்த சட்டத்திற்கு எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தும், அரச தலைவர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் (Olaf Scholz) ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.

இதன் மூலம் தனிநபர், சட்டம் கொடுத்த உரிமையுடன் வீட்டிலேயே 3 கஞ்சா செடிகள் வரை வளர்க்கலாம். மேலும், ஒருவர் சுமார் 25 கிராம் வரை கஞ்சாவை தினமும் எடுத்துகொள்ளலாம்.

கஞ்சா எடுத்துகொள்வதற்கு என்று ஒரு குழு அமைக்கப்படும் அதில் உறுபினர்கள் மட்டுமே சட்டபூர்வமாக கஞ்சா எடுத்துகொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெர்மனியில் சமீபக்காலமாக கஞ்சா உட்கொள்ளுதல் இளைஞர்களில் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கருப்பு சந்தையில் கஞ்சா விற்பனை அதிகரித்துள்ளது.

அதனை தடுத்து சட்டபூர்வமாக்கும்போது, விற்பனையை கட்டுக்குள் கொண்டுவர முடியும் என நம்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், இந்த சட்டத்திற்கு நாட்டில் பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

மால்டா மற்றும் லக்சம்பர்க் நாடுகளை தொடர்ந்து தற்போது ஜெர்மனியும் கஞ்சா உபயோகத்தை சட்டரீதியாக அங்கீகரித்தது பல்வேறு பகுதிகளில் இருந்து எதிர்ப்பை பெற்றுள்ளது.

இந்நிலையில், நெதர்லாந்து நாடும் கஞ்சாவை சட்டபூர்வமாக அங்கீகரிக்க முனைப்பு காட்டுகிறமை குறிப்பிடத்தக்கது.

https://thinakkural.lk/article/293213

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஜெர்மனியில் கஞ்சா செடிகளை வீட்டில் வளர்க்க அனுமதி!
கஞ்சா உபயோகத்தை சட்டரீதியாக ஒப்புகொள்ளும் இந்த சட்டத்திற்கு எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தும், அரச தலைவர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் (Olaf Scholz) ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. ]

மேலே உள்ள செய்தி உண்மையானால் அது தவறானது  துரதிர்ஷ்டவசமானது.இலங்கை அரசு செய்தால் தான் தவறு யேர்மன் செய்தால் நல்லது என்று இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

German lawmakers pass cannabis legalization bill

It paves the way for adults to legally possess and grow small amounts of cannabis, and for cultivation clubs to be set up.

FEBRUARY 23, 2024 5:00 PM CET

The German parliament passed a marijuana decriminalization bill on Friday, setting up the country to eventually authorize legal sales to adults.

The legislation, part of an agreement by the country’s three-party coalition government, would legalize cannabis possession and home cultivation for adults and allow non-profit cannabis clubs to supply consumers.

"That's the way that works. Away from punishment. Away from taboo. We have to face up to the problems," German Health Minister Karl Lauterbach said before the law was adopted on Friday afternoon.

The vote has also been closely followed across the Atlantic. 

“It’s a historic moment,” said Omar Khan, a spokesperson for Canadian cannabis company High Tide. “Germany [will] become the first EU country and the second G7 country after Canada to legalize adult use.”

The details: Adults over 18 will be allowed to possess 25 grams of cannabis and grow up to three plants at home. Cannabis clubs will be allowed to supply up to 500 members with a monthly maximum of 50 grams per member. 

But the potency of THC — the psychoactive chemical in cannabis — will be restricted for 18- to 21-year-olds in an effort to address the impact of marijuana use on the developing brain.

The impact: The legislation will remove cannabis as a narcotic substance in Germany, which will be a boon to the country’s existing medical marijuana operators.

“The barrier to entry to become [a] cannabis patient gets [lowered],” said Niklas Kouparanis, CEO of German medical cannabis company Bloomwell Group. “The barrier to prescribe cannabis for doctors gets lowered dramatically [too].”

https://www.politico.eu/article/german-lawmakers-pass-cannabis-legalization-bill/#:~:text=“Germany [will] become the,to three plants at home.

Edited by Kapithan
Posted

அருகில் உள்ள நாட்டில் (Netherland)கஞ்சாவுக்கான அனுமதி நீண்ட காலத்துக்கு முன் உள்ளது. ஜேர்மனி கஞ்சாவை சட்டபூர்வமாக்கியது ஆச்சரியம் அளிக்கவில்லை. 

4 hours ago, ஏராளன் said:

இதன் காரணமாக கருப்பு சந்தையில் கஞ்சா விற்பனை அதிகரித்துள்ளது.

அதனை தடுத்து சட்டபூர்வமாக்கும்போது, விற்பனையை கட்டுக்குள் கொண்டுவர முடியும் என நம்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தான் கனடாவும் சொல்லி  சட்டபூர்வமாக்கியது. இதன் வருமானம் அனைத்தும் ( சிகரட், மதுபானம் உட்பட) அரசுக்கு சொந்தமானது என்பது குறிப்பிடதக்கது.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
48 minutes ago, nunavilan said:

அருகில் உள்ள நாட்டில் (Netherland)கஞ்சாவுக்கான அனுமதி நீண்ட காலத்துக்கு முன் உள்ளது. ஜேர்மனி கஞ்சாவை சட்டபூர்வமாக்கியது ஆச்சரியம் அளிக்கவில்லை. 

இதனை தான் கனடாவும் சொல்லி  சட்டபூர்வமாக்கியது. இதன் வருமானம் அனைத்தும் ( சிகரட், மதுபானம் உட்பட) அரசுக்கு சொந்தமானது என்பது குறிப்பிடதக்கது.

The Controlled Cannabis Supply Chain Experiment aims to establish whether it is possible to regulate the production, distribution and sale of quality-controlled cannabis. The experiment is intended to shed light on the effects on crime, safety and public health. This experiment is sometimes referred to informally as the weed experiment.

https://www.government.nl/topics/controlled-cannabis-supply-chain-experiment#:~:text=The Controlled Cannabis Supply Chain,crime%2C safety and public health.

Netherlands begins trial to make cannabis fully legal

Experiment aims to make production, supply and smoking legal and remove effects of gang involvement

Agence France-Presse in Breda
Fri 15 Dec 2023 12.42 GMT

Cannabis users in two Dutch cities can smoke legally for the first time as authorities roll out a trial that would expand the country’s tolerance of marijuana to full legality.

“Historic moment,” said the health minister, Ernst Kuipers, on Friday as he scanned the first box of legal cannabis in the Baron coffee shop in the southern city of Breda.

A misconception abroad is that cannabis is already legal in the Netherlands, which is home to the famous coffee shops and seen as a huge draw for cannabis smokers.

In fact, the drug exists in a legal grey area, which the government hopes to stub out with the four-year trial starting in Breda and nearby Tilburg.

The consumption of small quantities of cannabis is illegal but police choose not to enforce the law as part of a “tolerance” policy that has been in place since the 1970s. However, the production of cannabis and its supply to coffee shops is also illegal but this is not tolerated, meaning producers and coffee shop owners have to operate in the shadows.

This has led to gang involvement, with a related rise in petty crime and antisocial behaviour that officials hope to stop if the trial is successful.

“Criminal organisations took over that criminal market and therefore coffee shop owners were depending on the criminal market and that had to stop,” the mayor of Breda, Paul Depla, told Agence France-Presse.

Production will be limited to a handful of farms, whose cannabis will be closely monitored before being supplied to coffee shops.

Consumers would be guaranteed a high-quality product, whereas before it was impossible to know where the cannabis came from, or whether it had been altered.

“The product will be clean, tested, pesticide-free,” said Ashwin Matai, the cultivation director at Holland High farm, which will supply coffee shops legally from February.

The level of THC and CBD, the active ingredients of cannabis, would be measured, so users knew the strength of their joint.

Kuipers said: “From a public health perspective, we had no oversight of the process, we could not do any checks on any potential contamination of the products. Now we can do all that.”

Independent researchers will monitor the trial with a view to eventual decriminalisation.

Asked whether it could lead to legalising other drugs, Depla was cautious. “Let’s start with the legalisation of cannabis and then we can see what will happen because I think some people are also afraid it will … lead to more people being addicted,” he said.

https://amp.theguardian.com/world/2023/dec/15/netherlands-begins-trial-to-make-cannabis-fully-legal

Edited by Kapithan
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, விளங்க நினைப்பவன் said:

ஜெர்மனியில் கஞ்சா செடிகளை வீட்டில் வளர்க்க அனுமதி!
கஞ்சா உபயோகத்தை சட்டரீதியாக ஒப்புகொள்ளும் இந்த சட்டத்திற்கு எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தும், அரச தலைவர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் (Olaf Scholz) ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. ]

மேலே உள்ள செய்தி உண்மையானால் அது தவறானது  துரதிர்ஷ்டவசமானது.இலங்கை அரசு செய்தால் தான் தவறு யேர்மன் செய்தால் நல்லது என்று இல்லை.

தயவுசெய்து விளங்கிக் கொண்டு கருத்துகள் எழுதுங்கள்   இங்கே ஒருவர் கஞ்சா வீட்டில் வளர்க்கமால். உபயோகப்படுத்தாமல்.   வாழ முடியும்  அதாவது கட்டாயம் இல்லை திணிக்கவுமாட்டார்கள். 

விரும்பினால் உபயோகிக்கலாம் இல்லாவிட்டால் போ. என்பது தான் சட்டம்  இப்போது விளங்கியத??   இலங்கையுடன் ஜேர்மனியை ஏன் ஒப்பிட்டீர்கள்?? 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இது எல்லாம் நன்றாக விளங்கிகொண்ட விடயங்கள் தானே 🤣 தாங்கள் குடியேறிய மேற்கு நாடுகளில் தவறு நடந்தால் தவறு இல்லை அதே தவறை இலங்கை செய்தால் தான் தவறு.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, விளங்க நினைப்பவன் said:

இது எல்லாம் நன்றாக விளங்கிகொண்ட விடயங்கள் தானே 🤣 தாங்கள் குடியேறிய மேற்கு நாடுகளில் தவறு நடந்தால் தவறு இல்லை அதே தவறை இலங்கை செய்தால் தான் தவறு.

அப்பன் வளர்ந்த நாடுகளுக்கும் வளர்ந்து வரும் நாடுகளுக்குமான வித்தியாசத்தை புரிந்து கொள்ளுங்கள். கல்வி மூலம் இங்கே அனைத்தும் (செக்ஸில் இருந்து செல்போன் வரை) சிறிய வயதிலேயே ஊடட்டப்பட்டு விடும். நமது மண் இன்றும் கசிப்புக்குள் கிடந்து வெளியே வரமுடியாமல்....? 😭

  • Downvote 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, விசுகு said:

அப்பன் வளர்ந்த நாடுகளுக்கும் வளர்ந்து வரும் நாடுகளுக்குமான வித்தியாசத்தை புரிந்து கொள்ளுங்கள். கல்வி மூலம் இங்கே அனைத்தும் (செக்ஸில் இருந்து செல்போன் வரை) சிறிய வயதிலேயே ஊடட்டப்பட்டு விடும். நமது மண் இன்றும் கசிப்புக்குள் கிடந்து வெளியே வரமுடியாமல்....? 😭

இந்த கஞ்சாவைவை சட்டப்பூர்வமாக்கும் முயற்சிகள் இங்கே நடைபெறுவதும்  ஏற்றுகொள்ள முடியவில்லை  அய்யா.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 27/2/2024 at 11:32, விளங்க நினைப்பவன் said:

இது எல்லாம் நன்றாக விளங்கிகொண்ட விடயங்கள் தானே 🤣 தாங்கள் குடியேறிய மேற்கு நாடுகளில் தவறு நடந்தால் தவறு இல்லை அதே தவறை இலங்கை செய்தால் தான் தவறு.

குரு செய்தால் தவறில்லை சிசிஷ்யன் செய்தல் தவறு என்பது அவர்கள்கொள்கை. பணக்காரன் செய்தால் பிரச்சினையில்லை. ஏழைகள் அப்படி எல்லாம் இருக்க கூடாது. அங்கு போய் அவர்கள் கற்றுக்கொண்ட பாடங்கள். 

  • Haha 1
Posted
On 27/2/2024 at 17:17, விளங்க நினைப்பவன் said:

இந்த கஞ்சாவைவை சட்டப்பூர்வமாக்கும் முயற்சிகள் இங்கே நடைபெறுவதும்  ஏற்றுகொள்ள முடியவில்லை  அய்யா.

இங்கில்லை எங்கும் ஏற்க  முடியாது.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஜேர்மனியின் இந்த கஞ்சா அரசியலை பல கட்சிகள் எதிர்க்கின்றன. அந்த எதிர்க்கும் கட்சிகளின் ஒரு கட்சியின் அங்கத்தவர்களில் நானும் ஒருவன். 

இப்படியான போதைவஸ்து கொள்கைகள் வருங்கால சமுதாயத்தை இன்னும் பாதிக்கும். கோக்கோ கோலா சிப்ஸ்  சிகரெட் உடம்பிற்கு கேடு என ஒருபக்கம் போதித்துக்கொண்டு.....கஞ்சா பிரயோகத்திற்கு அனுமதியளிப்பது  அரசுகளின் கையாலாகத்தனங்களில் ஒன்று.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

கஞ்சாவை மேற்கு நாடுகள் சட்ட பூர்வமாக்குவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன:

1. கஞ்சாவில் இருக்கும் பதார்த்தங்கள் (THC etc.) அடிமைப் படுத்தும் வீரியம் (addiction) ஏனைய போதை வஸ்துக்களை விட மிகக் குறைவு.

2. கஞ்சாவினால் ஏற்படும் நீண்டகால உடலாரோக்கியப் பாதிப்பும் ஏனைய போதைகளோடு ஒப்பிடும் போது குறைவு.

3. சட்டங்களை மீறி இலகுவாக கஞ்சா விளைவிக்கப் பட்டு, தாராளமாகப் புளங்குகின்றது street drug வடிவில். இது கறுப்புச் சந்தை, வயது குறைந்தோர் கூட இதனால் நுகர வாய்ப்பிருக்கிறது.

4. இதையே அரச கட்டுப் பாட்டில் கொண்டு வந்து நுகர அனுமதித்தால், வயது குறைந்தோர் நுகராமல் கட்டுப் படுத்துவது இலகுவாக இருக்கும் (கறுப்புச் சந்தையின் மவுசு குறைந்தால்)

5. இவ்வளவு உப்புச் சப்பற்ற கஞ்சாவைக் கட்டுப் படுத்தும் முயற்சி, நிதி என்பன ஏனைய போதை வஸ்துக்களைக் கட்டுப் படுத்தப் பயன்படுத்தலாம்! overdose மரணங்களைத் தடுக்கலாம்!

  • Like 1
  • Thanks 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

கஞ்சா இளம்வயது ஆட்களிடம் மூளை பாதிப்பு அறிவுசார் செயல்திறன்களை பாதிப்பு ஏற்படுத்தும் என்று ஒரு கட்டுரையில் படித்திருக்கிறேன்.கஞ்சா சட்டப்பூர்வமாக்கபடுவதால் வயது குறைந்தோர் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு கிடைக்காமல் இருக்கும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, Justin said:

இன்றும் கசிப்புக்கு வரவேற்பு இருக்கும் இடங்களில் இதை சொல்லி அடி வாங்கமுடியுமா?

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஜேர்மனி செய்தது  சரியானது   காரணம் ஐரோப்பா ஒன்றியம் ஒரு நாடு போன்றது    பக்கத்து நாடு அங்கீகாரம்…………………… வழங்கி இருக்கும் போது  ஜேர்மன் தடை செய்து எந்தவொரு பிரயோஜனமுமில்லை    மற்றும் கோப்பி  தேனீர் கூட போதை உண்டு  ...அளவுடன் பாவிக்கலாம்  தடை செய்த நாடுகளில் களவாக பாவிக்கிறார்கள்  தடை செய்ய உடன். பாவிக்கவில்லை என்று கருத்து இல்லை   

1,  விசா இல்லாமல் ஒரு நாட்டில் வாசிக்ககூடாது,......வாசிக்கிறார்கள் 

2.  ..வேலை அனுமதிப்பத்திரமின்றி வேலை செய்ய கூடாது,.....செய்கிறார்கள் 

3,... பதிவு இல்லாமல் வேலை செய்ய கூடாது,.....செய்கிறார்கள் 

4,  வருமானத்துக்கு வரி செலுத்த வேண்டும் ........பிழையான. கணக்கு காட்டி குறைந்த வரி காட்டுகிறார்கள்    

5,....நான் பாவிப்பது இல்லை  சட்டம் வந்து விட்டது பாவிக்கலாம்.  பாவிக்க போகிறேனா. ? இல்லையே??   

6,  களவாக. செய்வதில் ஒரு சுகம் மகிழ்ச்சி உண்டு   ......தடைகளை மீற. ஒரு ஆர்வம் இருக்கும்   அனுமதி அலுப்பை தரலாம்,...எனவே… ..கஞ்சா  பாவனையாளர்கள் குறையலாம்🤣🙏

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, Kandiah57 said:

போதைப்பொருள் மருத்துவத்திற்காக பாவிப்பதை தவிர்த்து வேறு எதற்கும் உபயோகிக்கக்கூடாது என்பதே என் கருத்து.

எங்கை ஒருக்கால் இழுத்து பாப்பம் எண்டு போட்டு ஒரு இழுவை இழுக்க வெளிக்கிட்டால்.....தொடர்ந்து இழுக்க வேண்டி வரும் கந்தையர்.😂

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 hours ago, விளங்க நினைப்பவன் said:

கஞ்சா இளம்வயது ஆட்களிடம் மூளை பாதிப்பு அறிவுசார் செயல்திறன்களை பாதிப்பு ஏற்படுத்தும் என்று ஒரு கட்டுரையில் படித்திருக்கிறேன்.கஞ்சா சட்டப்பூர்வமாக்கபடுவதால் வயது குறைந்தோர் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு கிடைக்காமல் இருக்கும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை.

நிச்சயமாக உத்தரவாதம் இல்லை. ஆனால், வயது குறைந்த பாவனையாளருக்கு யார் விற்கிறார்கள் என்று பார்த்தால் சட்ட விரோத விற்பனையாளர்கள் தான். இவர்களுக்கு இலாபம் இல்லாமல் அரசே சட்டத்திற்குட்படுத்தி பிசினசை எடுத்துக் கொண்டால், இவர்கள் வேறு எதையாவது விற்கப் போய் விடுவார்கள், எனவே பள்ளிகளுக்குள் கஞ்சா வருவது குறையலாம். இதை உறுதி செய்யும் தரவுகள் இன்னும் அமெரிக்காவில் இல்லை, ஆனால் தியரிப் படி இது சாத்தியம்.

கஞ்சாவை தினசரி எடுத்துக் கொண்டால் நிச்சயம் மூளையின் செல்களுக்குப் பாதிப்புகள் ஏற்படும். ஏனெனில், மூளையில் இருக்கும் உயிரியல் பாதைகளைத் தான் கஞ்சாவில் இருக்கும் cannabinoids பதார்த்தம் பாவித்து உச்சம் தருகிறது. வித்தியாசம் என்னவெனில், ஏனைய தீவிர போதைவஸ்துக்களான opioids போல overdose மரணங்கள் கஞ்சாவினால் நிகழ்வதில்லை, அடிமைப் படுத்தும் இயலுமையும் குறைவு.

மற்றபடி எந்த போதையும் (அல்கஹோல், கஞ்சா, இணையம்..) வாழ்க்கைக்கு நல்லதல்ல என்பது உண்மை!

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
15 minutes ago, Justin said:

இங்கேயும் பாடசாலை பிள்ளைகள் தான் அதிகம் இதில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இதில் கஞ்சா பாவிப்பதால் ஏற்படும் பாதிப்பை விட கஞ்சா விற்று பிடிபடுவதால் தான் இவர்கள் வாழ்வு அதிகம் அழிந்து போகிறது 😭

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.