"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 107
[This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.]
பகுதி: 107 / பின் இணைப்பு – இராசவலியவின் சுருக்கம்
பக்கம் 23 இல் தேவநம்பியதீசனின் ஆட்சிக் காலத்தில், உச்ச அதிகாரத்தை அடைந்த தர்ம அசோகர், ஜம்புத் தீவின் [இந்தியாவின்] ஒரே பேரரசராக ஆட்சி செய்தார் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், இது சோழர்கள், பாண்டியர்கள், சத்தியபுத்திரர்கள் மற்றும் கேரளபுத்திரர்கள் [Cholas, Pandyas, Satiyaputras and Keralaputras] அண்டை வீட்டாராகவும் அசோக இராச்சியத்தில் இருந்து சுயாதீனமாகவும் இருப்பதாகக் கூறும் அசோகரின் பாறை ஆணைகள் 2 மற்றும் 13 உடன் முரண்படுகிறது.
பக்கம் 23 இன் கீழே ஒரு கூற்று உள்ளது: அவர் [இது மகிந்த தேரரை அல்லது புனித போதி மரக் கிளையை இலங்கைக்கு கொண்டு போவதற்கு ஈடுபட்ட ஒருவரைக் குறிக்கலாம்?] ஜம்புத் தீவில் (பண்டைய இந்தியா) இருந்தபோது, புத்தர் தனது முதுகை சாய்ந்து வைத்திருந்த அந்த புனித போதி மரத்தின் வலது கிளையில் தங்க பென்சிலைப் பயன்படுத்தி குங்குமப்பூவால் குறி வைத்தார். பின்னர் அவர் அந்தக் கிளையை இலங்கைக்கு வருமாறு வேண்டுகோள் விடுத்தார். அதிசயமாக, அந்தக் கிளை ஒரு வாளால் வெட்டப்பட்டது போல, நேர்த்தியாக மரத்திலிருந்து பிரிந்தது, வானத்தில் உயர்ந்து, இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்தியால், காற்றின் வழியாக இலங்கைக்குச் சென்றது. அந்தக் கிளை முந்தைய மூன்று புத்தர்களின் போதி மரங்கள்? ஒரு காலத்தில் நின்ற இடத்திற்கு வந்து சேர்ந்தது. அது காற்றில் மிதந்து, பின்னர் கவனமாக ஒரு தங்கப் பானையில் வைக்கப்பட்டு அந்த இடத்தில் நடப்பட்டது. என்றாலும் தேரி சங்கமித்தாவால் அந்தப் போதி மரக்கிளை இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டதாக மற்ற இரண்டு நாளாகமங்களிலும் கூறப்பட்டத்திற்கு இது முற்றிலும் மாறுபட்டது. மேலும் மகாவம்சம், 18 - 39 இல் இருந்து 42 இன் படி தேரி சங்கமித்தா இடது கிளையைக் கொண்டு வந்தார் என்பது உறுதியாகிறது. - வழிபட்ட பின்பு, மும்முறை வலம் வந்தான். எட்டு இடங்களில் கைகூப்பி வணங்கினன். பிறகு தங்கத் தொட்டியை ஒரு ஆசனத்தில் வைக்கச் சொன்னன். அந்த ஆசனம் தங்கம் வைத்து இழைத்தது. பலவித ரத்தினங்கள் பதிப்பிக்கப் பெற்றது. ஏறுவதற்கு எளிதாக அமைந்தது. கிளையின் உயரத்துக்குச் சரியாகப் புனிதமான அக்கிளை யைப் பெற்றுக் கொள்வதற்காக ஏறி, அரசன் நின்று கொண்டான். தங்கப் பிடி போட்ட செந்தூரத் துண்டினால் கிளையைச் சுற்றி ஒரு கோடு கிழித்தான். பின் பவித்திரமான இப்பிரகடனத்தைச் செய்தான்: போதி விருட்சம் இங்கிருந்து இலங்கைக்குப் போவது எவ்வளவு உண்மையோ, புத்த மார்க்கத்தில் உறுதி குலையாமல் நான் இருப்பேன் என்பது எந்த அளவு உண்மையோ, "அதைப் போல் இந்தப் போதி மரத்தின் தென் புறக்கிளை தானாகத் துண்டுபட்டு இத் தொட்டியில் இடம் பெறுவதாக." பிறகு மகாபோதி மரக்கிளை கோடு கிழித்த இடத்தில் தானாகத் துண்டுபட்டது. மணம் நிரம்பிய மண் உள்ள தொட்டிக்கு மேலே மிதந்தது. முதலில் வரைந்த கோட்டுக்கு மேலே மூன்று விரற்கடைக்கு மேல். சுற்றிலும் பத்து கோடுகள் கிழித்தான் அரசன். முதற் கோட்டிலிருந்து பத்து ஆணி வேர்கள் தோன்றின. பின்னல் கீரப்பட்ட கோடுகள் ஒவ்வொன்றிலிருந்தும் பத்துக் கிளைவேர்கள் தோன்றி வலைபோல் பின்னிக்கொண்டன. இந்த அதிசயத்தைக் கண்ட மன்னன் மகிழ்ச்சிப் பெருக்கில் கத்திவிட்டான். அவனுடன் இருந்தவர்களும் பெரு மகிழ்வடைந்தனர். பிக்குகள் களிப்பினால் துள்ளிய இதயத்துடன் எம்பெருமானை வணங்கினர். இவ் வாறாக நூறு வேர்களுடன் மகா போதி மரம் தொட்டியிலிருந்த நறுமண மண்ணில், மக்களுக்கு நம்பிக்கை ஏற்படச்செய்து, ஊன்றிக் கொண்டது. - ஆனால் இராசவலியத்தின் படி வலது கிளை இலங்கைக்கு பறந்து சென்றது. என்ன ஒரு முரண்பாடு! இவைதான், சங்கமித்தா ஒரு கண்டு பிடிக்கப்பட்ட கதாபாத்திரம் என்பதற்கான காரணங்களில் ஒன்றாகிறது. சங்கமித்தா, மகிந்தா பற்றி ஏற்கனவே விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
தேவநம்பியதீசனின் இரண்டாவது சகோதரர் மனா [king Mana], மற்ற இரண்டு நாளேடுகளிலும் மகாநாகன் [King Mahanaga] இவன் ஆவான் , மற்றும் தேவநம்பியதீசனின் மனைவி, மனாவை விஷம் வைத்து கொல்ல முயன்றார். இதனால், பின்னர் மனா பாதுகாப்பாக இருக்க, உருகுணைக்குச் [Ruhuna] சென்று தனது சொந்த இராச்சியத்தை நிறுவி மாகாமம் [Magama] நகரத்தை கட்டினார். பாரம்பரியமாக அரியணை மன்னனிடம் இருந்து மூத்த மகனுக்குச் செல்வதால் இந்தக் கதை மிகவும் சந்தேகத்திற்குரியது? எனவே, இந்த பாரம்பரிய முறை, தலைமுறை தலைமுறையாக நிலைத்து இருப்பதால், அதன் மூலம் அரியணை தனது மகனுக்கு உறுதி செய்யப்படுவதால், ராணி இங்கு கவலைப்பட வேண்டிய அவசியம் இருந்து இருக்காது. பின்னர் எல்லாளனைக் கொல்ல 'துட்டகாமினி' என்ற கதாபாத்திரம் உருவாக்ககப்பட்டது. துட்டகாமினி ஒரு கண்டு பிடிக்கப்பட்ட கதாபாத்திரம். இதைப்பற்றி ஏற்கனவே ஆராயப்பட்டுள்ளது.
மனாவின் மகன், மன்னன் யதல தீசன் [Yatalatissa], களனி நகரத்தைக் கட்டி அங்கு ஆட்சி செய்தான். பின்னர், யதல தீசனின் மகன் கோதபயா [Gothabhaya], தெற்கில் ஒரு முக்கியமான நகரமான மாகாமவின் [Magama] மன்னனானான். கோதபயாவின் மகன் கவன் தீசன் [Kavantissa], மாகாமவின் அடுத்த மன்னரானான். (அவன் பிரபலமான மன்னன் துட்டகாமினியின் தந்தை ஆகும்) அதேபோல, கெலனி தீசன் [Kelanitissa] களனியில் ஆட்சி செய்தான் (ஒரு புத்த துறவி கொல்லப்பட்டது தொடர்பான ஒரு சோகக் கதைக்கு இவன் ஆளாகியதுடன், இது ஒரு பெரிய வெள்ளத்திற்கும் வழிவகுத்தது, இந்த கதையும் முன்பு விரிவாக ஆராயப்பட்டுள்ளது).
எனவே, மனா, யதல தீசன், கோதபயா மற்றும் கவன் தீசன் ... ஆகியோர் இலங்கைக்குள் வெவ்வேறு பகுதிகளின் ஆட்சியாளர்களாக இருந்தனர் என்றாலும், அனுராதபுரத்திலிருந்து ஆட்சி செய்யவில்லை என்பதால், அவர்கள் மன்னர்களின் முக்கிய பட்டியலில் இலங்கையின் அதிகாரப்பூர்வ ஆட்சியாளர்களாக இங்கு பட்டியலிடப்படவில்லை.
Part: 107 / APPENDIX – "Summary of Rajavaliya"
It is stated in the page 23 that Dharmasoka was the sole emperor of Jambudvipa (India) which is in conflict with the Rock Edicts 2 and 13 of Asoka which say Cholas, Pandyas, Satiyaputras and Keralaputras are neighbours and independent of the kingdom of Asoka.
There is a statement at the bottom of the page 23: ’He also, when in Jamvudvipa, had marked with a gold pencil vermilion on the right branch of the sacred Bo tree, against which Buddha had leant his back; and having requested it to pass over to Lanka it severed itself as if cut by a saw, ascended to the sky, descended to this island of Lanka by supernatural power’. This is in sharp contrast with the narrative given in the other two chronicles in which that Bo branch was brought to Lanka by Theri Samghamitta. Theri Samghamitta brought the left branch as per the Mahavamsa, 18 – 34, but as per the Rajavaliya it is the right branch which flew to Lanka on its own. What a contradiction! This is also one of the reasons that Samghamitta is an invented character.
His second brother is Mana, Mahanaga in other two chronicles, and Devenipetissa’s wife tried to kill Mana by poisoning. Mana then to be safe, went away to Ruhuna, and established his own kingdom and built a city of Magama. This story line is very suspicious as traditionally the throne passes from the king to the eldest son. The queen mother, therefore, should not to have bothered as the throne was assured to her son. This story line is invented to create the character ‘Duttha Gamani’ to slay Elala later. Duttha Gamani is an invented character. Mana’s son, king Yatalatissa, built the city of Kelaniya and ruled there. His son Gothabhaya ruled at Magama. Kavantissa, son of Gothabhaya, was the next king at Magama. Kelanitissa ruled at Kelaniya. Mana, Yatalatissa, Gothabhaya and Kavantissa ruled not at Anuradhapura, and, therefore, they are not listed in the list of sovereigns. They also reigned in Lanka.
நன்றி
Thanks
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
[Kandiah Thillaivinayagalingam,
Athiady, Jaffna]
பகுதி / Part: 108 தொடரும் / Will follow
துளி/DROP: 2042 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 107
https://www.facebook.com/groups/978753388866632/posts/33862079050107308/?
By
kandiah Thillaivinayagalingam ·
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.