Jump to content

இலங்கையில் 62 இலட்சம் தெருநாய்கள்: பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
07 MAR, 2024 | 01:21 PM
image

இலங்கையில் 62 இலட்சம் தெருநாய்கள் இருப்பதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் நாடாளுமன்றத்தில் இன்று (07) தெரிவித்தார்.

இது சுற்றுலாப் பிரதேசங்களில் மிகவும் பாரதூரமான நிலைமையை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்த  தென்னகோன், இது தொடர்பில் தீர்வு காணப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

விலங்குகளினால் ஏற்படும் சேதங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்காக அரசாங்கம் புதிய சட்டத்தை கொண்டு வந்துள்ளதாகவும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கூறினார்.

https://www.virakesari.lk/article/178158

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தயவுசெய்து புடிச்சு எல்லாத்தையும் சீனாவுக்கு ஏற்றுமதி செய்யவும். குரங்கை முடியுமுன்னா.. ஏன் நாயை முடியாது.

ஒரு நாயை ஒரு அமெரிக்கன் டொலருக்கு கொடுத்தால் கூட நிறைய அந்நியச் செலவாணி வரும்.

Link to comment
Share on other sites

ஒரு  தொலைபேசி அழைப்போடு தெரு நாய்களும் அகற்றப்படும். காசும் நாட்டுக்கு வரும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ஏராளன் said:

இலங்கையில் 62 இலட்சம் தெருநாய்கள் இருப்பதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் நாடாளுமன்றத்தில் இன்று (07) தெரிவித்தார்.

சீனாவுடன் ஒரு ஒப்பந்தம் போட வேண்டியது தானே?

காதும் காதும் வைத்த மாதிரி செய்ய வேண்டிய விடயத்தை ஊரைக் கூட்டியா சொல்லுவீங்க.

வடக்கு கிழக்கில புத்தரை அமர்த்தும் போது மாத்திரம் ரகசிய ஒப்பந்தம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாய்களை பிடிச்சு கருத்தடை செய்யுங்கோ ....இதுக்கும் எங்கன்ட ஆலோசனையா உங்களுக்கு தேவைப்படுகிறது....எங்களுக்கு  நேரம் இல்லை 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தெருநாய்களின் எண்ணிக்கை தொடர்பில் அமைச்சர் வெளிப்படுத்திய தரவை கால்நடை மருத்துவர்கள் மறுப்பு

நாட்டிலுள்ள தெருநாய்களின் எண்ணிக்கை தொடர்பில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் நேற்று பாராளுமன்றத்தில் விடுத்த பிரகடனம் அடிப்படை ஆதாரமற்றது எனவும், அது தொடர்பில் சரியான தரவுகள் இன்றி இராஜாங்க அமைச்சர் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார் என கால்நடை மருத்துவர்கள் சங்கத்தின் விலங்கு மக்கள்தொகையின் மனிதநேய முகாமைத்துவ ஆலோசரான வைத்தியர் சமித் நாணயக்கார தெரிவித்துள்ளார்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் சுமார் 6.2 மில்லியன் தெருநாய்கள் சுற்றித் திரிவதாகவும், இந்த நிலைமை சீகிரியா போன்ற சுற்றுலாப் பகுதிகளில் பாரிய பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

நாட்டில் மூன்று மில்லியன் குரங்குகள் இருப்பதாக சமூகத்திற்குள் தவறான எண்ணத்தை ஏற்படுத்துவதற்கும், தவறான புள்ளிவிபரங்களை மேற்கோள்காட்டி, குரங்குகளின் எண்ணிக்கை குறித்து முன்னர் தவறான அறிக்கைகள் பரப்பப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கால்நடை மருத்துவர்களாகிய நாங்கள் கடந்த 24 ஆண்டுகளாக இந்த நாய்களின் எண்ணிக்கையில் ஈடுபட்டு வருகிறோம். 2007 ஆம் ஆண்டுக்குள் நாட்டில் மூன்று மில்லியன் நாய்கள் இருந்தன. பின்னர், நாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தும் கருத்தடை அறுவை சிகிச்சைத் திட்டங்கள் அரசு மற்றும் விலங்குகள் நலச் சங்கங்களால் நடத்தப்பட்டன,”

z_p43-better-300x169.jpg

இந்த திட்டங்களின் விளைவாக நாட்டில் தற்போதைய நாய்களின் எண்ணிக்கை 2.1 மில்லியனுக்கும் குறைவாக உள்ளது என்றார்.

“ஆனால் நாட்டில் 6.2 மில்லியன் தெருநாய்கள் இருப்பதாக அமைச்சர் கூறினார். இருப்பினும், நாட்டில் தெருநாய்கள் குறைவாகவே உள்ளன. நாய்கள் தெருநாய்களாகக் கருதப்பட்டாலும், பெரும்பாலான நாய்கள் சுதந்திரமாக வாழ்ந்தாலும் அவற்றின் உரிமையாளர்கள் உள்ளனர். பொதுவாக மத வழிபாட்டுத் தலங்கள், முச்சக்கர வண்டி தரிப்பிடங்கள் மற்றும் கடைகளுக்கு அருகில் வாழும் நாய்கள் சமூக நாய்களாகக் கருதப்படுகின்றன” என வைத்தியர் தெரிவித்துள்ளார்.

“எங்கள் கணக்கீடுகளின்படி, நாட்டில் 2.1 மில்லியன் நாய்கள் உள்ளன, அவற்றில் மூன்று சதவிகிதம் தெருநாய்களாக கருதப்படலாம்,” என்றார்.

எனவே, இராஜாங்க அமைச்சர் பொய்யான அறிக்கையை வெளியிட்டு, நாட்டில் தற்போதுள்ள நாய் இனத்தின் உயிருக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளது எனவும் வைத்தியர் தெரிவித்துள்ளார்.

“சிகிரியா போன்ற சுற்றுலாப் பிரதேசங்களில் பாரியளவில் நாய்கள் பெருகுவது பாரிய பிரச்சினைகளை ஏற்படுத்தும் ஒரு சூழ்நிலையாக மாறியுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் கூறினார். கடந்த ஆறு வருடங்களாக நாய்களின் எண்ணிக்கையை முறையாகக் கட்டுப்படுத்தி தடுப்பூசிகள் போடப்பட்ட இடமே சீகிரியா. நாய்களை கட்டுப்படுத்தும் திட்டங்கள் குறித்து, பாராளுமன்றத்தில் இதுபோன்ற அறிக்கைகளை வெளியிடுவது தகுதியற்றது”

“நாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தவும், கருத்தடை அறுவைச் சிகிச்சைத் திட்டங்களைத் தொடரவும் 200 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டது. ஆனால், கருத்தடை அறுவைச் சிகிச்சைத் திட்டங்களைத் தொடர்வதற்கான உபகரஎன்று அவர் கூறினார். .

பல விலங்குகள் நல அமைப்புகள் மாவட்டத்தில் ஆண்டுதோறும் 35,000 முதல் 40,000 விலங்குகளுக்கு கருத்தடை அறுவை சிகிச்சையில் ஈடுபடுகின்றன. சுகாதார அமைச்சின் சில அதிகாரிகள் இந்த அமைப்புகளில் இணைவதற்கு கூட உடன்படவில்லை என வைத்தியர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

https://thinakkural.lk/article/294931

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஏராளன் said:

 

“ஆனால் நாட்டில் 6.2 மில்லியன் தெருநாய்கள் இருப்பதாக அமைச்சர் கூறினார்.

எங்கள் கணக்கீடுகளின்படி, நாட்டில் 2.1 மில்லியன் நாய்கள் உள்ளன, 

IMG-5997.jpg

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குரங்கு ,நாய்களிலும் பொய் சொல்லி உழைக்கிறானுகளே  பாவிகள்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சில வருடங்களுக்கு முன் மோட்டார் சைக்கிளில் நிதானமாக A9 வீதி வழியாகப் போய்க்கொண்டு இருந்த என்னுடைய அப்பாவின் முன்னால் யாரோ ஒருவரின் வளவுக்குள் இருந்து திடீர் என்று ஓடி வந்த ஒரு நாய் வாகனத்தின் சக்கரத்துக்குள் சிக்கி அப்பாவை கீழே விழுத்தி விட்டு பறந்தடித்து இன்னொரு வளவு வேலிக்குள் புகுந்து ஓடி விட்டது, அப்பாவுக்கு கை கால்களில் காயம் ஏற்பட்டு வைத்திய சாலையில் 2 நாள் இருந்தார்.

அப்பா அம்மாவை இலங்கையில் வைத்துக்கொண்டு அவர்களுக்கு எந்நேரம் என்ன நிகழுமோ என்று பதை பதைக்கும் இங்கே வாழும் பிள்ளைகள் நிலையை யோசிச்சுப் பாருங்கள்.

 

கேள்வி கேட்டால் மனிதாபிமானம், விலங்கு நலன், பௌதம், ஹிந்து என்று ஆயிரத்தெட்டு நோட்டு நொசுக்குகள்

 

  • Like 1
  • Sad 1
Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.