Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: VISHNU   15 MAR, 2024 | 06:48 PM

image

இந்திய இழுவைமடிப் படகுகளின் அத்துமீறல்களைக் கட்டுப்படுத்தக் கோரி யாழ். இந்தியத் துணைத் தூதரகம் முன்பு கடற்றொழிலாளர்கள் உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.

யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சம்மேளனத்தில் வெள்ளிக்கிழமை (15) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கிராமிய அமைப்புக்களின் தலைவர் செல்லத்துரை நற்குணம் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது:

எமது யாழ்ப்பாண மாவட்ட கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் அத்துமீறல் தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது.

இந்திய மீனவர்கள் எமது வாழ்வாதாரத்தையும்  தொழிலையும்  தொடர்ச்சியாக அழித்து வரும் நிலையில் இலங்கை அரசாங்கத்திடமும் இந்திய அரசாங்கத்திடமும் எமது ஆதங்கங்களை வெளிப்படுத்தியும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

அண்மையில் இந்தியச் சட்டவிரோத  மீன்பிடியாளர்களைக் கட்டுப்படுத்துமாறு கோரி இலங்கை கடல் எல்லையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினோம். யாழ்ப்பாண இந்தியத் துணைத் தூதரகத்திடம் கோரிக்கை மனு கையளித்தோம். ஆனால், பயன் ஏதும் ஏற்படவில்லை.

இவ்வாறான நிலையில் எதிர்வரும் 19 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதரகத்துக்கு முன்பு தொடர்ச்சியான உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம்.

எமது போராட்டத்துக்கு ஏனைய மாவட்டங்களைச் சேர்ந்த சங்கங்கள், சமாசங்கள் மற்றும் சம்மேளனங்கள் தமது ஆதரவை வழங்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/178823

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழக கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களை கண்டித்து யாழில் உணவு தவிர்ப்பு போராட்டம்

Published By: DIGITAL DESK 3   19 MAR, 2024 | 03:38 PM

image

இந்திய கடற்தொழிலாளர்களின்  அத்துமீறிய செயற்பாட்டை கண்டித்து யாழ் மாவட்ட கடற்தொழிலாளர்கள் இன்று செவ்வாய்க்கிழமை (19) உணவு தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

யாழ் மாவட்ட கிராமிய கடற்தொழில் அமைப்புக்களின் சம்மேளனமும், யாழ் மாவட்ட கடற் தொழில் கூட்டுறவு சங்கங்களின் சம்மேளனமும் இணைந்து  யாழ்ப்பாணம் புனித ஜோன் பொஸ்கோ வித்தியாலயத்திற்கு முன்பாக உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

முன்னதாக இன்றைய தினம் காலை  மருதடி சந்தியில் இருந்து பேரணியாக யாழ் இந்திய துணைத் தூதரகம் நோக்கி சென்ற கடற்தொழிலாளர்கள்  துணைத் தூதரகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

பின்னர் பொலிஸார் அங்கிருந்து வெளியேற்றியதை அடுத்து யாழ் புனித ஜோன் பொஸ்கோ வித்தியாலயத்திற்கு முன்பாக தமது உணவு தவிர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

34__7_.jpg

34__9_.jpg

34__6_.jpg

34__8_.jpg

https://www.virakesari.lk/article/179128

  • கருத்துக்கள உறவுகள்
On 15/3/2024 at 17:12, ஏராளன் said:

அண்மையில் இந்தியச் சட்டவிரோத  மீன்பிடியாளர்களைக் கட்டுப்படுத்துமாறு கோரி இலங்கை கடல் எல்லையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினோம். யாழ்ப்பாண இந்தியத் துணைத் தூதரகத்திடம் கோரிக்கை மனு கையளித்தோம். ஆனால், பயன் ஏதும் ஏற்படவில்லை.

IMG-6038.jpg

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Kavi arunasalam said:

IMG-6038.jpg

நல்ல கேள்வி.

இதை அதிகாரமுடையவனிடம் கேட்க வேண்டும்.

பிழையான ஆளிடம் கேட்டு விட்டீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kavi arunasalam said:

IMG-6038.jpg

ஏன் கையில் போத்தல் வைத்திருக்கிரார்....தண்ணிச்சாமிகள் தான் போராடியினம் என்ற கருத்து போல நான் விளங்கி கொள்கிறேன்😘

6 hours ago, Kavi arunasalam said:

IMG-6038.jpg

சீமான் மட்டுமல்ல, ஈழத்தமிழர்களின் விடயங்களில் அக்கறை இருப்பதாகக் காட்டிக் கொள்ளும், வைகோ, திருமாளவன், திருமுருகன் காந்தி, களஞ்சியம், ராமதாஸ் ஆகியோர் கூட, இதற்கு நேரிடையாக பதில் சொல்ல மாட்டினம். 

அவ்வளவு ஏன், போலிகாவின் அண்ணண் காசியானந்தன் எனும் இளைஞன் கூட இதற்கு நேரிடையாக பதில் சொல்ல மாட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Kavi arunasalam said:

IMG-6038.jpg

சரியான ஆளிடம் தான் கேள்வி கேட்டுள்ளீர்கள் அதிகாரத்தில் உள்ள அரசியல் கட்சி தொடங்கி அதிகாரம் அற்ற சீமான் கட்சிகள் வரை இலங்கை கடலுக்குள் சென்று தமிழ்நாட்டு மீனவர்களால் நடத்தபடும் கடற்கொள்ளையை தமது அரசியல் நலனுக்காக ஆதரிப்பவர்களாக தான் உள்ளனர். நான் முதலமைச்சரானால் இலங்கைக்கு களவு எடுக்க செல்லும் தமிழ்நாட்டு  மீனவர்களின் கையில் வெடிகுண்டை கொடுத்து அனுப்பி வைப்பேன் என்று சொன்னவர் தான் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான்.

1 hour ago, putthan said:

ஏன் கையில் போத்தல் வைத்திருக்கிரார்.

தமிழ்நாட்டு மீனவர்களால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதால் மது குடித்து குடித்தே இறப்போம் என்று நினைத்து விட்டனரோ ☹️

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Kavi arunasalam said:

IMG-6038.jpg

கையில் சாராயப்  போத்தல், மடித்துவிடப்பட்ட காற்சட்டை, சேட் க்கு மேலால் ஒரு கோட் /பிளேசர் . 

இவர் நிச்சயமாக மீனவர் இல்லை.. அப்படியானால் 

இவர் யார்? 

🥺

 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

இவர் நிச்சயமாக மீனவர் இல்லை.. அப்படியானால் 

இவர் யார்? 

சாதாரண ஒரு ‘குடி’மகன்

9 hours ago, putthan said:

தண்ணிச்சாமிகள் தான் போராடியினம் என்ற கருத்து போல நான் விளங்கி கொள்கிறேன்😘

தவறு. தண்ணீரில் பிழைக்க வந்தவர்கள் என்பதுதான் சரியாக இருக்கும், புத்தன்.

எம்ஜிஆர் படப் பாடல் ஒன்று இப்படி இருக்கிறது

”தரைமேல் பிறக்க வைத்தான் - எங்களை

தண்ணீரில் பிழைக்க வைத்தான்….”

Edited by Kavi arunasalam
எழுத்துப்பிழை திருத்தப்பட்டது

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, ஈழப்பிரியன் said:

நல்ல கேள்வி.

இதை அதிகாரமுடையவனிடம் கேட்க வேண்டும்.

பிழையான ஆளிடம் கேட்டு விட்டீர்கள்.

ஈழப்பிரியன், சரியான ஆளிடம்தான் கேள்வி போய் இருக்கிறது.

ஈழத்தமிழர் மேல் கரிசரனை உள்ள  ஒருவர். ஈழத்தமிழர் போராட்டத்தை முன்னிருத்தி அரசியல் செய்பவர். பிரபாகரனை தலைவராக ஏற்றுக் கொண்டவர். யேர்மனிக்கு வந்து மாவீரர் தினத்தை சிறப்பித்தவர்….. என்று பல விடயங்கள் இவரிடம்  இருக்கின்றன.

 

  • கருத்துக்கள உறவுகள்

தொடரும் உணவு தவிர்ப்பு போராட்டம்; ஒருவர் நிலை கவலைக்கிடம்

1413889360.jpeg
 

எழிலன்

இந்திய மீனவர்களின் அத்துமீறிய செயற்பாட்டைக் கண்டித்து யாழ். மாவட்ட மீனவர்கள் முன்னெடுத்துள்ள உணவு தவிர்ப்புப் போராட்டம் இன்று மூன்றாவது நாளாகவும் தொடர்கின்றது.

யாழ். மாவட்ட கிராமிய கடற்றொழில் அமைப்புக்களின் சம்மேளனத்தினரும், யாழ். மாவட்ட கடற்றொழில் கூட்டுறவுச் சங்கங்களின் சம்மேளனத்தினரும் இணைந்து கடந்த 19 ஆம் திகதி காலை முதல் யாழ்ப்பாணம் புனித ஜோன் பொஸ்கோ வித்தியாலயத்துக்கு முன்பாக உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

செல்லத்துரை நற்குணம், அன்ரன் செபராசா, சின்னத்தம்பி சண்முகராஜா மற்றும் அந்தோனிப்பிள்ளை மரியதாஸ் ஆகிய நான்கு மீனவர்களே உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் மூன்றாவது நாளாகவும் ஈடுபட்டு வருகின்றனர்.

இதில், ஒரு மீனவரின் உடல் நிலை தற்போது கவலைக்கிடமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மீனவர்களின் உணவு தவிர்ப்புப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து இன்றையதினம் யாழ். தையிட்டி அன்னை வேளாங்கன்னி கடற்றொழில் சங்கத்தினர் கலந்து கொண்டுள்ளனர்.(க)

 

https://newuthayan.com/article/தொடரும்_உணவு_தவிர்ப்பு_போராட்டம்;_ஒருவர்_நிலை_கவலைக்கிடம்

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

தொடரும் உணவு தவிர்ப்பு போராட்டம்; ஒருவர் நிலை கவலைக்கிடம்

IMG-6042.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழில் தொடரும் மீனவர்களின் உணவு தவிர்ப்பு போராட்டம்; ஒருவரது நிலை கவலைக்கிடம்

Published By: DIGITAL DESK 3   21 MAR, 2024 | 12:26 PM

image
 

இந்திய மீன்பிடியாளர்களது எல்லைதாண்டிய அத்துமீறும் செயற்பாட்டை கண்டித்து யாழ் மாவட்ட மீனவர்கள் முன்னெடுத்துள்ள உணவு தவிர்ப்பு போராட்டம் இன்று வியாழக்கிழமை (21) மூன்றாவது நாளாகவும் தொடர்கின்ற நிலையில் தமக்கு ஆதரவு தெரிவித்து எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினரோ அமைச்சரோ வரவில்லை என உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

யாழ். மாவட்ட கிராமிய கடற்தொழில் அமைப்புக்களின் சம்மேளனமும், யாழ் மாவட்ட கடற் தொழில் கூட்டுறவு சங்கங்களின் சம்மேளனமும் இணைந்து கடந்த 19 ஆம் திகதி காலை முதல் யாழ்ப்பாணம் புனித ஜோன் பொஸ்கோ வித்தியாலயத்திற்கு முன்பாக உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் செல்லத்துரை நற்குணம், அன்ரன் செபராசா, சின்னத்தம்பி சண்முகராஜா மற்றும்  அந்தோணிப்பிள்ளை மரியதாஸ் ஆகிய நான்கு மீனவர்களே உணவு தவிர்ப்பு போராட்டத்தில் மூன்றாவது நாளாகவும் ஈடுபட்டு வருகின்றனர்.

இதில் ஒரு மீனவரின் உடல் நிலை தற்போது கவலைக்கிடமாக உள்ளது.

குறித்த மீனவர்களின் உணவு தவிர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இன்றையதினம் யாழ் தையிட்டி அன்னை வேளாங்கணி கடற்றொழில் சங்கத்தினர் கலந்து கொண்டுள்ளனர்.

இதேநேரம் நடைமுறைச் சாத்தியமற்றதென தெரிந்தும் பல்வேறு விடயங்களை முன்னிறுத்தி நடைபெறும் ஆர்ப்பாட்டங்கள் பேரணிகள் போராட்டங்களில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது வகிபாகத்தை அழைப்பு விடுக்காமலும் தானாக ஒட்டிக்கொண்டு ஊடகங்களுக்கு அறிக்கைகளும் செய்திகளும் விடுப்பவர்கள் எமது இந்த வாழ்வாதார பிரச்சினைக்கு ஆதரவுக்கரம் நீட்டவில்லை என்பது வேதனையாக உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/179307

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வடக்கின் கடற்றொழிலாளர்களது உணர்வுகளை நான் எப்போதும் மதிப்பவன் - அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Published By: DIGITAL DESK 3   21 MAR, 2024 | 04:36 PM

image

வடக்கின் கடற்றொழிலாளர்களது உணர்வுகளை நான் எப்போதும் மதிப்பவன் என தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் முன்னெடுத்தவரும் உண்ணாவிரதப் போராட்டமும் வெற்றி கண்டிருக்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.

சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன அவர்களுக்கு எதராக எதிர்க்கட்சிகளால் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பிலும் நாட்டில் நிலவும் சில பிரச்சினைகள் தொடர்பிலும் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

இந்திய இழுவை மடி வலைப் படகுகளின் எல்லைத் தாண்டியதும், அத்துமீறியதும், தடைசெய்யப்பட்ட கடற்றொழில் உபகரணங்களைக் கொண்ட கடற்றொழில் முறைமையினாலும், பாதிக்கப்பட்டு வருகின்ற வடக்கு கடற்றொழிலாளர்களின் நிலைமைகளை உலகுக்கு எடுத்துக் காட்டும் வகையில் யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர்கள் முன்னெடுத்து வருகின்ற உண்ணாவிரதப் போராட்டமானது இன்று மூன்றாவது நாளாகவும் தொடர்கிறது.

இந்த விடயம் தொடர்பில் நாங்கள் சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம். நேற்றும்கூட யாழ்ப்பாணத்திலே மூன்று இந்திய இழுவை மடி வலைப் படகுகள் கடற்படையினரால் பிடிக்கப்பட்டு 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மன்னாரில் இரு படகுகள் பிடிக்கப்பட்டு 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதேநேரம், தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி மாநிலங்களின் கடற்றொழில் துறை சார்ந்த அமைச்சர்கள் இந்திய இழுவை மடி வலைப் படகுகளின் பிரச்சினைகள் தொடர்பில் என்னுடன்  கதைத்து வருகின்றனர்.

அதேபோல் இம் மாநிலங்களைச் சேர்ந்த முதலமைச்சர்களும் என்னுடன் தொடர்பு கொண்டு வருகின்றர். முதலமைச்சர்களைச் சந்தித்து கலந்துரையாடுவது தொடர்பிலும் ஒரு சூழல் உருவாகி வருகின்றது. அவர்கள் இந்திய இழுவை மடி வலைப் படகுகளின் மூலமான பாதிப்புகளை உணர்ந்து கொண்டிருப்பதாகவே தெரிய வருகின்றது.

எனவே, பேச்சுவார்த்தைகள் மூலம் ஒரு சுமுகமான தீர்வினை எட்ட முடியும் என நான் எதிர்பார்க்கிறேன்.

இதேநேரம் வடக்கின் கடற்றொழிலாளர்களது உணர்வுகளை நான் எப்போதும் மதிப்பவன். அவர்களது போராட்டங்களை நான் விளங்கிக் கொள்கின்றேன்.

அவர்களது போராட்டங்கள் சிறந்த பயன்களைத் தந்திருப்பதாகவே நான் கருதுகின்றேன். தற்போதே அவர்களது உண்ணாவிரதப் போராட்டமும் வெற்றி கண்டிருக்கிறது. எனவே, உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிடுமாறு நான் அவர்களிடம் அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன் என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/179355

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அமைச்சர் டக்ளஸ் உறுதிமொழி; உணவு தவிர்ப்பு போராட்டம் கைவிடப்பட்டது!

Published By: DIGITAL DESK 3  22 MAR, 2024 | 04:17 PM

image

இந்திய அத்துமீறிய மீன்பிடியாளர் களை நிறுத்துமாறு கோரி நான்கு நாட்கள் இடம்பெற்ற உணவு தவிர்ப்புப் போராட்டம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் உறுதிமொழியால் கைவிடப்பட்டது.

கடந்த செவ்வாய்கிழமை யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரகத்திற்கு அருகாமையில் யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் நான்கு போர் உணவுதவிர்ப்புப் போராட்டத்தை ஆரம்பித்தனர்.

இன்று நான்காம் நாள் போராட்ட இடத்திற்கு வருகை தந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இந்திய அத்துமீறிய கடற் தொழிலாளர்களை கட்டுப்படுத்துவது தொடர்பில் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி முதலமைச்சர் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சர்களுடன் பேசினேன்.

பாண்டிச்சேரி முதலமைச்சர் எல்லை தாண்டும் மீனவர்களை தடுப்பது தொடர்பில் எழுத்துமூலமான உறுதிமொழி தந்துள்ளார்.

தமிழக முதல்வர் கடிதம் அனுப்பத் தயாராக இருப்பதாகவும் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் தேர்தல் ஆணையகத்துடன் ஆலோசித்து கடிதம் அனுப்புவதாக கூறியிருக்கிறார்.

மீனவர் பிரச்சனை தொடர்பில் பேச வருமாறு இந்திய தரப்பினர் அழைப்பு கொடுத்திருந்தார்கள் நான் அவர்களிடம் கூறி இருக்கிறேன் இந்தியா மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் வர மாட்டார்கள் என்ற எழுத்து மூலமாக உத்தரவாதம் தந்தால் மட்டுமே பேச்சுவார்த்தைக்கு வருவேன் எனக் கூறியுள்ளேன்.

எனது நிலைப்பாடு அன்று என்ன கூறினோனே அதுதான் எல்லை தாண்டி வரும் இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு வார்கள்.

கைது செய்யப்படுபவர்களை விடுவிக்க எனக்கு அழுத்தங்கள் வந்தாலும் எனது நிலைப்பாடு ஒன்றுதான்.

இதனால் தான் இந்தியா என்னை எதிரியாப் பார்க்கிறது ஏனைய தமிழ் அரசியல் வாதிகள் மீனவர் பிரச்சினையில் மெளனமாக இருப்பதால் எதிரியாக பார்ப்பதில்லை .

ஆகவே இந்தியத் தரப்பு சாதகமான சமிக்ஞைகளை காண்பித்த நிலையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தை கைவிடுங்கள் மீனவர்கள் பக்கமே நான் நிற்பேன் என அவர் மேலும் தெரிவித்தார் 

குறித்த உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு ஆதரவாக தும்பளை, கொட்டடி, சேந்தான் குளம், குருநகர், மாதகல், பலாலி, தையிட்டி, சக்கோட்டை, மயிலிட்டி, வளலாய், மயிலிட்டி மற்றும் சீத்திப்பந்தல் ஆகிய கடற்தொழில் சங்கங்களைச் சேர்த்து மீனவர்கள் உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களுக்கு ஆதரவு தெரிவித்து வருகை தந்தனர்.

IMG-20240322-WA0094.jpg

jfh.gif

 hgdrdg.gif

https://www.virakesari.lk/article/179438

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

இன்று நான்காம் நாள் போராட்ட இடத்திற்கு வருகை தந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இந்திய அத்துமீறிய கடற் தொழிலாளர்களை கட்டுப்படுத்துவது தொடர்பில் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி முதலமைச்சர் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சர்களுடன் பேசினேன்.

அவன் இவனுடன் பேசுவதைவிட 

செங்கடலில் காவல் காக்கும் ஆக்களை 2 கப்பலில் எல்லையில் இறக்கிவிட்டால் காவல் காக்க மாட்டார்களோ?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.