Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, goshan_che said:

https://www.facebook.com/SooriyanFMSriLanka/videos/1464846094416796/?mibextid=rS40aB7S9Ucbxw6v

ஏன்னா நாங்க வெளிநாடு👆🏼🤣

#லண்டன் #அஜினமோட்டோ

இதில் இவர்கள் சொல்வதை ஏற்கிறீர்களா?

  • Replies 364
  • Views 38k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • goshan_che
    goshan_che

    பாகம் II   ஒருவருக்கு நீண்ட கால்கள் இருப்பது சில அனுகூலங்களையும், சில பிரதிகூலங்களையும் தரவல்லது. விமானப்பயணத்தில் பிரதிகூலம் என்னவெனில், எக்கானாமி இருக்கைகள் இடையேயான  இடைவெளி போதாமையால், ம

  • Thumpalayan
    Thumpalayan

    எல்லார்ட வரவேற்புக்கும் நன்றி. ஒவொருநாளும் யாழப் பாக்காட்டிக்கு எனக்கு பத்தியப்படாது. எழுதத்தான் பஞ்சி, அதைவிட அநேகமான புலம்பெயர் உறவுகள் அடுத்த கட்டத்துக்கு நகர விரும்பாமையும் (moving on) ஒருவகை விரக

  • Kavi arunasalam
    Kavi arunasalam

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, MEERA said:

இதில் இவர்கள் சொல்வதை ஏற்கிறீர்களா?

பொதுப்படையாக எல்லாரும் என சொல்ல முடியாது.

அத்துடன் போத்தல் தண்ணீர் என்பது அங்கேயும் அநேகர் செய்வதுதான்.

உரக்க கத்தும் சிறுபான்மை என கேள்வி பட்டிருப்பீர்கள். அப்படி, பலர் மரியாதையாக நடந்தாலும், சில அஜினமோட்டோ கேசுகள் அங்கே போய் இப்படிதான் நடக்கிறன. 

இவர்கள் நடத்தையால் எல்லார் மீதும் இப்படி ஒரு விம்பம் விழுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

large.IMG_6831.jpeg.845fffcc1e2b27aa198b32cb8527966b.jpeg

நீங்கள் சொன்ன இந்த கொற்றலை இன்று காய்ந்த சோமாலியாவில் திறந்து விட்டனராம். மிகவும் அழகு என்று எல்லோரும் புகழ்கின்றனர்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

20 இலட்சம் மாத சம்பளம் U.K. இல் என்றால் அண்ணளவாக வருடம் £ 95,000. இந்த வருமானம் பெறுவோர் எவ்வளவு? 

ஏன் அவைக்கு கொடுக்க வேண்டும்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, MEERA said:

20 இலட்சம் மாத சம்பளம் U.K. இல் என்றால் அண்ணளவாக வருடம் £ 95,000. இந்த வருமானம் பெறுவோர் எவ்வளவு? 

பத்து இலட்சம் சம்பளம் அதில் பத்தாயிரம்தான் தருவோம் என்றல்லவா வருகிறது வீடியோவில்?

அதுவும் மாசத்துக்கா வருடத்துக்கா என்று சொல்லவில்லை.

எனது கணக்கில் மாச சம்பளம் என எடுத்தால் £30K வருகிறது? இது யூகேயின் median salary க்கு கிட்டத்தானே?

(நான் கணக்கில் வீக் என்பதால் எனக்கே குழப்பமாய் உள்ளது🤣).

ஆனால் இங்கே எண்ணிக்கை பொருட்டல்ல. 

பத்தாயிரம்/பத்து இலட்சம் எனும் ratio தான் பொருள் என நினைக்கிறேன்.

பிகு

இந்த வீடியோவும், அண்மைகாலமாக யாழில் ஊர் புதினம் பகுதியில் வெளிவரும் செய்திகளும், பின்னூட்டகளும், புலத்தமிழருக்கும், புலம்பெயர் தமிழரில் உரக்க கத்தும் சிறுபான்மைக்கும் உள்ள இடைவெளி பெரிதாகி வருவதையே காட்டுகிறது என நான் நினைக்கிறேன்.

இது நல்ல விசயம் அல்ல. ஆனால் புலம்பெயர் தமிழரின் உரக்க கத்தும் குழுவின் ஊர் யதார்த்தபுரிவின்மையே இந்த இடைவெளிக்கு மிக பெரிய காரணி.

இதை கண்டு வந்து சொல்பவர்கள் மீதே காண்டாவதில் ஒரு பயனுமில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விளங்க நினைப்பவன் said:

large.IMG_6831.jpeg.845fffcc1e2b27aa198b32cb8527966b.jpeg

நீங்கள் சொன்ன இந்த கொற்றலை இன்று காய்ந்த சோமாலியாவில் திறந்து விட்டனராம். மிகவும் அழகு என்று எல்லோரும் புகழ்கின்றனர்.

வெறும் தென்னம் ஈக்குக்களால் கட்டி வைத்துள்ளார்கள் மொக்கு சிங்களவர்+ஹிந்தியர் 🤣.

கொசுறு

இதில் 50 மாடி பெரிய கட்டிடம் முழுக்க அப்பார்மெண்டாம் என செய்தியில் வாசித்தேன். 

இதன் அருகில் உள்ள சங்கிரில்லா + கோல்பேஸ் 1  தொகுதி பற்றி எழுதினேன் அல்லவா? அங்கே ஒரு studio flat £350K போகிறது. இது தோராயமாக இலண்டன் புறநகர் (suburb) zone 4/5 இல் ஒரு ஸ்ருடியோவின் விலைக்கு நிகராக வருகிறது.

எனது யூனிவர்சல் கிரெடிட் (சோசல்) மிஞ்சும் காசில் ஒன்றை வாங்கி விட யோசிக்கிறேன்🤣🤣🤣.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, goshan_che said:

பத்து இலட்சம் சம்பளம் அதில் பத்தாயிரம்தான் தருவோம் என்றல்லவா வருகிறது வீடியோவில்?

அதுவும் மாசத்துக்கா வருடத்துக்கா என்று சொல்லவில்லை.

எனது கணக்கில் மாச சம்பளம் என எடுத்தால் £30K வருகிறது? இது யூகேயின் median salary க்கு கிட்டத்தானே?

(நான் கணக்கில் வீக் என்பதால் எனக்கே குழப்பமாய் உள்ளது🤣).

ஆனால் இங்கே எண்ணிக்கை பொருட்டல்ல. 

பத்தாயிரம்/பத்து இலட்சம் எனும் ratio தான் பொருள் என நினைக்கிறேன்.

பிகு

இந்த வீடியோவும், அண்மைகாலமாக யாழில் ஊர் புதினம் பகுதியில் வெளிவரும் செய்திகளும், பின்னூட்டகளும், புலத்தமிழருக்கும், புலம்பெயர் தமிழரில் உரக்க கத்தும் சிறுபான்மைக்கும் உள்ள இடைவெளி பெரிதாகி வருவதையே காட்டுகிறது என நான் நினைக்கிறேன்.

இது நல்ல விசயம் அல்ல. ஆனால் புலம்பெயர் தமிழரின் உரக்க கத்தும் குழுவின் ஊர் யதார்த்தபுரிவின்மையே இந்த இடைவெளிக்கு மிக பெரிய காரணி.

இதை கண்டு வந்து சொல்பவர்கள் மீதே காண்டாவதில் ஒரு பயனுமில்லை.

“பத்து இலட்சம் ரூபா, பதினைந்து இலட்சம் ரூபா, இருபது இலட்சம் ரூபா சம்பளம் எடுப்பம் “

என்றே வருகிறது….

வெளிநாட்டில் இருபது இலட்சம் ரூபா வருடாந்த சம்பளம் பெற்று என்ன செய்யலாம்?

U.K. இல் £ 5000

Edited by MEERA

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, MEERA said:

ஏன் அவைக்கு கொடுக்க வேண்டும்?

அது எல்லாருக்குமானதல்ல. 

கொடுக்க வேண்டிய இடத்தில் பலர் இருக்கிறார்கள். அங்கே இருப்பவர்கள் தியாகத்தில் இங்கே வந்து சேர்ந்தோர்.

அங்கே அக்கா வயதான பெற்றாரை பார்கிறார் என்ற தைரியத்தில் இங்கே மனைவியுடன் டூர் போவபர்கள்.

எனக்கு தெரியும் ஒரு வயோதிப தம்பதி - பிள்ளைகள் இருவரையும் ஐரோப்பா அனுப்பி விட்டு இன்றும் உடல் உழைப்பில் வாழ்கிறார்கள்.

பலர் அனுப்பும் பணம் - தாம் அங்கே நின்று செய்ய தவறிய கடமைகளுக்கான விலை. இந்த கொமெண்டை நான் இந்த சூழமைவில்தான் பார்க்கிறேன்.

17 minutes ago, goshan_che said:

ஆனால் இங்கே எண்ணிக்கை பொருட்டல்ல. 

பத்தாயிரம்/பத்து இலட்சம் எனும் ratio தான் பொருள் என நினைக்கிறேன்.

👆🏼👇

6 minutes ago, MEERA said:

“பத்து இலட்சம் ரூபா, பதினைந்து இலட்சம் ரூபா, இருபது இலட்சம் ரூபா சம்பளம் எடுப்பம் “

என்றே வருகிறது….

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

அது எல்லாருக்குமானதல்ல. 

கொடுக்க வேண்டிய இடத்தில் பலர் இருக்கிறார்கள். அங்கே இருப்பவர்கள் தியாகத்தில் இங்கே வந்து சேர்ந்தோர்.

அங்கே அக்கா வயதான பெற்றாரை பார்கிறார் என்ற தைரியத்தில் இங்கே மனைவியுடன் டூர் போவபர்கள்.

எனக்கு தெரியும் ஒரு வயோதிப தம்பதி - பிள்ளைகள் இருவரையும் ஐரோப்பா அனுப்பி விட்டு இன்றும் உடல் உழைப்பில் வாழ்கிறார்கள்.

பலர் அனுப்பும் பணம் - தாம் அங்கே நின்று செய்ய தவறிய கடமைகளுக்கான விலை. இந்த கொமெண்டை நான் இந்த சூழமைவில்தான் பார்க்கிறேன்.

அப்போ அங்கே இருப்பவர்கள் எல்லோரும் தங்கள் கடமைகளை செய்தார்கள் என்று நினைக்கிறீர்களா?

Edited by MEERA

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, MEERA said:

அப்போ அங்கே இருப்பவர்கள் எல்லோரும் தங்கள் கடமைகளை செய்தார்கள் என்று நினைக்கிறீர்களா?

அறுதி பெரும்பான்மையானோர் செய்கிறார்கள்.

இல்லாவிடில் நாட்டில் கோவில்களும், தேவாலங்களும் வயோதிபர்களால் நிரம்பி வழியும்.

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு எனது கேள்வி புரியவில்லை என்று நினைக்கின்றேன். 

எத்தனை பேர் புலம் பெயர் தேசங்களில் பத்து இலட்சம் ரூபா

மாத சம்பளம் பெறுகிறார்கள்? 

வயோதிபர்களை பார்ப்பது தான் கடமையா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, MEERA said:

உங்களுக்கு எனது கேள்வி புரியவில்லை என்று நினைக்கின்றேன். 

எத்தனை பேர் புலம் பெயர் தேசங்களில் பத்து இலட்சம் ரூபா

மாத சம்பளம் பெறுகிறார்கள்? 

வயோதிபர்களை பார்ப்பது தான் கடமையா?

பத்து இலட்சத்தை 400 ஆல் வகித்த £2500. சரிதானா?

இது யூகே புலம்பெயர் தமிழ் சமூகத்தில் நிச்சயம் எடுக்கும் சம்பளம்தான்.

London living wage மணிக்கு £13.15.

கிழமைக்கு 60 மணி வேலை எனில் (5x12 hour shift) = 13x60= £780

ஒரு வருடம்= 780x52= £40560

ஒரு மாசம் = 3380.

———

பின்னே? பெற்றாரை பார்க்காமல் வேறு என்ன கடமை இருக்க முடியும்?

ஆனால் அங்கே எம் சொத்தை பாதுகாப்பது முதல் பல கடமைகளையும் நாம் outsource பண்ணி விட்டுத்தான் இருக்கிறோம்.

ஒருவனோ, ஒருத்தியோ தன் வீட்டில், நகரில் இருந்து செய்ய வேண்டிய அத்தனை கடமைகளையும் இன்னொருவர் தலையில்தானே கட்டி உள்ளார்கள் புலம்பெயர்ந்தோர்.

அதைத்தான் அந்த வீடியோவில் சொல்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, goshan_che said:

பத்து இலட்சத்தை 400 ஆல் வகித்த £2500. சரிதானா?

இது யூகே புலம்பெயர் தமிழ் சமூகத்தில் நிச்சயம் எடுக்கும் சம்பளம்தான்.

London living wage மணிக்கு £13.15.

கிழமைக்கு 60 மணி வேலை எனில் (5x12 hour shift) = 13x60= £780

ஒரு வருடம்= 780x52= £40560

ஒரு மாசம் = 3380.

இப்பவும் உங்களால் 60 மணித்தியாலங்கள் வேலை செய்ய முடியுமா?

மேலும் சிறீலங்காவில் Gross ஐ சொல்லும் பழக்கமில்லை… 

Edited by MEERA

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, MEERA said:

இப்பவும் உங்களால் 60 மணித்தியாலங்கள் வேலை செய்ய முடியுமா?

மேலும் சிறீலங்காவில் Gross ஐ சொல்லும் பழக்கமில்லை… 

தகமைகளை வளர்த்து கொண்ட ஒருவர் 37 மணி நேரம் செய்து பெறும் சம்பளத்தை தகுந்த தகுதிகளை அடைய முடியாத ஒருவர் 60 மணி நேர உழைப்பில் அடையவேண்டி இருப்பது இயல்பே.

இப்பவும் 60 மணத்தியாலம் வேலை செய்துதான் என் தேவையான வரவை அடைய முடியும் என்றால் நிச்சயம் செய்வேன்.

நீங்கள் வாரம் 60 மணத்தியாலம் வேலை செய்யும் 60+ வயது ஆட்களை காண்பதில்லையா? செக்கூரிட்டி வேலை செய்யும் அரைவாசி பேர் இப்படித்தானே?  அங்கே எல்லாம் ஒரு ஷிப்ட் 12 தான். 48 அல்லது 60 தான் வழமை.

———-

Gross ஆ take-home ஆ என அந்த வீடியோவிலும் சொல்லவில்லை என நானும் egg இல் hair புடுங்க விரும்பவில்லை.🤣

Take-home ஆகவே இருப்பினும் gross 3380 எனில் take-home  2022/2023 யில் 2700. 20023/2024 இல் 2750. 

இப்படி பார்த்தாலும் வீடியோவின் 10 இலட்ச கணக்கு சரிதான்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

உங்களைப் போல் egg இல் hair புடுங்க எனக்கு நேரமில்லை.

அடிப்படை சம்பளத்தை உதராணமாக எழுதியது தாங்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, MEERA said:

உங்களைப் போல் egg இல் hair புடுங்க எனக்கு நேரமில்லை.

அடிப்படை சம்பளத்தை உதராணமாக எழுதியது தாங்கள்.

அடிப்படை சம்பளமே அந்த வீடியோவில் சொல்லப்பட்டுள்ளது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிற்சேர்க்கை III

வெஸ்டேர்ன் மெடிசின் Vs வெதமாத்தையா 

அடுத்த பாகத்தை கொடுக்க பிந்தியமைக்கு மன்னிக்கவும். படங்களை போட்டது திரியை எழுத்தில் இருந்து படங்கள் நோக்கி திருப்பி விட்டது.

—————
இலங்கை போவதில் ஒரு வசதி - கொஞ்சம் காசை செலவழித்து ஒரு புல் மெடிக்கல் செக்கப் செய்துகொண்டு வரலாம்.

அதுவும் நவலோக்க, டேர்டன்ஸ், ஆசிரி, லங்கா ஹொஸ்பிட்டல் போன்ற முதல் தர வைத்தியசாலைகளிலேயே £230 க்குள் ஒரு டோட்டல் மெடிக்கல் செக்கப்பை செய்துகொள்ளலாம்..

முன்னர் ஒரு காலம் இருந்தது யூகே NHS என்றால் உலகிற்கே முன்மாதிரி, ஆனால் இப்போ அப்படி இல்லை. எல்லாம் 14 வருட வலதுசாரி மகாராசாக்களின் ஆட்சி தந்த “முன்னேற்றம்”.

இப்போதெல்லாம் ஜீ பி யிடம் அப்பாயின்மெண்ட் வாங்குவதை விட நோயில் சாகலாம் என்ற நிலை. அப்படியே ஜி பி யை சந்திக்க முடிந்தாலும், அவர் refer பண்ணி ஒரு ஸ்கான் எடுப்பதற்குள் சித்திரகுப்தன் சீட்டை கிழிக்க ரெடியாகி விடுவார்.

அத்தோடு இலவசம் என்பதால் கண்ட மாதிரி speculative டெஸ்டுகளும் எடுக்க refer பண்ண மாட்டார்கள். முதலில் தண்ணீர் குடியுங்கள், ரெஸ்ட் எடுங்கள் என்றே சொல்லி அனுப்புவார்கள்.

ஆகவே உடனடி கவனிப்பு தேவை எனில்,

ஒன்றில் கணிசமான அளவு பணத்தை கட்டி யூகேயில் தனியார் ஹெல்த் இன்சூரன்ஸ் எடுத்து வைக்க வேண்டும். 

அல்லது….இலங்கை அல்லது இந்தியா (பல்லு கட்ட போலந்து, துருக்கி) போன்ற நாடுகளுக்கு போய் இப்படி ஒரு செக்கப்பை செய்து வரலாம்.

இந்த ரிப்போர்ட்டுகள் எல்லாம் எடுக்க ஒரு நாள் செலவாகும். பின்னர் இதை வைத்து ஒரு கன்சல்டண்டுடன் உங்களுக்கு அப்பாயின்மெண்ட்டும் தருவார்கள்.

இதில் நன்மை என்னவென்றால் -

இந்த டெஸ்டுகளில் ஏதாவது கோளாறாக கட்டினால் - அதை நேரடியாக இங்கே ஜி பி யிடம் காட்டும் போது - நோயின் தார்பரியம் அறிந்து வேலை கட…. கட…. என நடக்கும்.

எனக்கு தெரிந்த சிலர் முன்பே இவ்வாறு செய்திருந்தாலும், இதுவரை நான் செய்ததில்லை. இந்த முறை வயதும் 45 இன் அடுத்த பக்கத்துக்கு போய் விட்டதாலும், கடந்த 3 வருடத்தில் ஜி பி க்கள் தந்த அனுபவத்தினாலும் - ஒரு டெஸ்டை செய்ய முடிவு செய்தேன்.

இந்தியா போல் அல்லாது, இலங்கையில் health tourism த்தின் பெறுமதி இன்னும் வடிவாக அறியப்படவில்லை. விலைகளும் உள்ளூர் ஆட்களை குறிவைத்தே உள்ளன (வடை, கொத்து, சிகிரியா டிரிக்ஸ் இன்னும் இங்கே வரவில்லை).  ஒவ்வொரு ஆஸ்பத்திரியும், பல வகை வகையான packages வைத்திருக்கிறார்கள். 

ஒன்றிற்கு மூன்றாக தெரிந்த வைத்தியர்களிடம் கதைத்து - ஒரு package ஐ நானும் ஒரு முண்ணனி வைத்தியசாலையில் தெரிந்து கொண்டேன்.

டெஸ்ட் எடுக்கும் நாள் அதிக நிகழ்வுகள் இன்றி கழிந்தது. ஒவ்வொரு உடல் பகுதிக்குமுரிய இடத்துக்கு அந்த டெஸ்டுக்காக போகும் போது, அவை உள்ளூர் வாசிகளால் நிரம்பியே இருந்தது. எந்த நாட்டிலும், எந்த நிலையிலும் உணவுக்கு அடுத்து நல்ல பிஸினஸ் மருத்துவம் என்பது புரிந்தது.

எல்லாம் முடிந்து கன்சல்டேசன் போனால் -கன்சல்டன் - எடுத்த எடுப்பிலேயே எந்த நாடு என்று கேட்டார் - டாக்டரிடம் பொய் சொல்ல கூடாதாமே? ஆகவே எனது “யாழ்பாணம்/மாடகளப்பு/வன்னி/இந்தியா” உத்தியை கைவிட்டு யூகே என உண்மையை சொன்னேன்.

கண்ணாடிக்கு மேலால் ஒரு பார்வை பார்த்து விட்டு, நான் அங்கேதான் மேற்படிப்பு படித்தேன், “இப்படி ஒரு முழுமையான டெஸ்டை அங்கே உன்னால் செய்யவே முடியாது அல்லவா”, என அவருக்கு ஏலவே தெரிந்த விடயத்தை என்னிடம் உறுதி செய்தார்.

என்ன இருந்தாலும் என் குஞ்சல்லவா? விட்டு கொடுக்க முடியாதே?

ஆம், ஆனால் இங்கும் அரச வைத்தியசாலையில் இப்படி ஒரு முழுமையான டெஸ்டை செய்யமாட்டீர்கள்தானே என்றேன்.

உனக்கு வாயில் கொலஸ்டிரோல் கூட என்பதை போல் ஒரு பார்வை பார்த்து விட்டு, ரிப்போர்ட்டுக்கான வியாக்கியானத்தை ஆரம்பித்த வைத்தியர்.

40 நிமிட கன்சல்டேசனின் பின், ஏலவே தெரிந்த விடயங்களை தவிர வேறு ஏதும் கோளாறு இல்லை என்பது நிம்மதியாக இருந்தாலும்…. இவ்வளவு செலவழித்துள்ளேனே…ஒன்றும் இல்லையா என இன்னொரு மனம் மொக்குத்தனமாய் ஒரு கணம் சிந்திக்கவும் செய்தது🤣.

கடைசியாக…எனி அதர் குவெஸ்சன்ஸ் க்கு வைத்தியர் வர, என் நெடுநாள் உபாதையான சயாடிக்கா கால் வலியை பற்றி சொன்னேன்.

அக்கம் பக்கம் பார்த்த வைத்தியர், மெல்லிய குரலில் “இதுக்கு இங்கே உள்ள வெதமாத்தையாதான் சரி” என கூற, யாரையாவது ரெக்கெமெண்ட் பண்ண முடியுமா என நான் அவரை விட மெல்லிய குரலில் கேட்டேன்.

கன்சல்டேசன் அறையை விட்டு கிளம்பும் போது எனது போனில் ஒரு பிரபல வெதமாத்தையாவின் தொடர்பிலக்கமும், விலாசமும் சேமிக்கப்பட்டிருந்தது.

———————-

ஆவலோடு காத்திருங்கள்!

பிற்சேர்க்கை IV

வெதமாத்தையாவும் ஆவா குரூப்பும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கொசுறு

@தமிழ் சிறி இன்னொரு திரியில் ரஸ்யர்கள் இலங்கையில் வியாபாரம் செய்வது பற்றி சிலாகித்து இருந்தார்.

அதை பற்றி இந்த திரியில் முன்னரும் எழுதி இருந்தேன். இப்படியான இடங்களுக்கு நான் போகவில்லை, ஆனால் தென்னிலங்கையில் கீழே படத்தில் இருப்பது போலான அறிவிப்புகளை கன இடங்களில் கண்டேன்.

மும்மொழி கொள்கையை ஒருவழியாக அமல்படுத்திய கண்கொள்ளா காட்சி🤣👇.

large.IMG_7419.jpeg.58a217d25d8b815747b4532bcde3bcb9.jpeg

Edited by goshan_che

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் ஒரு சம்பவம் நடந்தது. நானும் என் நண்பர் குழாமும் மாத்தறையில் ஒரு கடலோர ரிசார்ட்டில் போய் அமர எத்தனித்த போது - மன்னிக்க வேண்டும், இங்கே கிச்சனில் பழுது, உணவுகள் இல்லை, இன்னும் ஏதோ நொண்டி சாட்டுகள் கூறி மிக தன்மையாக எம்மை வேறு இடம் பார்க்க சொல்லி கேட்டுக்கொண்டார்கள். கேட்டு கொண்டவர்கள் உள்ளூர்வாசிகள். என் குழுவில் மூவினத்தவரும் இருந்தோம்.

அந்த இடம் முழுவதும் வெள்ளையர்களாகவே இருந்தது. மருத்துக்கும் ஒரு சுதேசியையும் காணவில்லை.

என்ன நடக்கிறது என்பது விளங்கினாலும், பிரச்சனை வேண்டாம், மிகவும் தன்மையாக கேட்கிறார்கள் வெளியேறுவோம் என்பதே எம் குழுவில் அநேகரின் எண்ணமாக இருந்தது.

இங்கிலாந்தில் இதுவே எமக்கு நடந்தால் “சேறாடி” இருப்போம் என நாம் சிலர் சொன்னபோது, உள்ளூர்வாசிகள் நடந்து கொள்ளும் முறை, வாடிக்கையாளருக்கு அசெளகரியங்களை தருவதால் - வியாபார நிறுவனமாக அவர்களில் தாம் அதிகம் பிழை காணவில்லை என்றனர் - இலங்கை வாசிகள்.

கடல்கரை வழியாக நடந்து வந்து அடுத்ததாக இருந்த இன்னொரு இடத்தில் கேட்ட போது மிக வரவேற்புடன் எம்மை உள்ளே எடுத்தார்கள்.

தென்னிலங்கை கடற்கரை நகர்களில் சில இடங்களில் இப்படியான ஒரு அறிவிக்கபடாத அப்பாதயிட் நடை முறை இருப்பதாகவே தெரிகிறது.

இதே போல் வெள்ளையருக்கு மட்டும் என ஒரு பார்ட்டி ஏற்பாடாகி, சர்ச்சை ஆகி நிறுத்தப்பட்டது.

செய்தி இணைப்பு கீழே.

https://www.bbc.co.uk/news/world-asia-68421131.amp

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வருடம் இறுதி அல்லது 2025 தொடக்கத்தில் வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்குவது குறித்து இலங்கை அரசு ஆலோசித்து வருகின்றதாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, விளங்க நினைப்பவன் said:

இந்த வருடம் இறுதி அல்லது 2025 தொடக்கத்தில் வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்குவது குறித்து இலங்கை அரசு ஆலோசித்து வருகின்றதாம்.

இது ஒரு நல்ல நகர்வாக எனக்குப்படவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

இது ஒரு நல்ல நகர்வாக எனக்குப்படவில்லை.

ஏற்றுகொள்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
On 11/4/2024 at 14:56, Thumpalayan said:

அரச வேலை இல்லாதவர்கள் சாப்பாட்டுக்கடை, ஹைஏஸ் வான்/ஆட்டோ, பான்சி கடை/சூப்பர் மார்க்கட் என்ற வட்டத்தை விட்டு வெளியில் வர கஷ்டப்படுகிறார்கள்

உண்மைதான்.. என்ன காரணம் என்று விளங்கவில்லை. 

புதிது புதிகாக சாப்பாட்டுக் கடைகள்.. வெளியில் சாப்பிடுவது இப்பொழுது ஒரு trend ஆகிவிட்டது. 

யாழ்ப்பாண townல் புதிதாக Domino’s திறந்துவிட்டார்கள்(போன வருட ஆரம்பத்தில் இது இருக்கவில்லை). பழைய நினைவுகளில் ஊர் சாப்பாட்டை எதிர்பார்த்துப் போனால் ஏமாற்றம்தான். 

  • கருத்துக்கள உறவுகள்
On 11/4/2024 at 20:27, goshan_che said:

ஊரில் உள்ள விடயங்களை விதந்து பேசினாலும், இள, மத்திய வயது குடும்பங்கள் ஊர் மீளுவதை, குறிப்பாக பிள்ளைகளுடன் போவதை மோசமான முடிவு என்றே இன்னும் கருதுகிறேன். ஊர் போய் வந்த பின் இந்த கணிப்பு மேலும் இறுகியுள்ளது.

என்னைப் பொறுத்தவரை பிள்ளைகளுடன் போய் வாழ்வது சரியானதல்ல என்பதை ஏற்றுக்கொள்கிறேன். அதற்காக அங்கே உள்ளவர்கள் பிள்ளைகளுடன் வாழவில்லையா எனக்கேட்டால் அங்கே உள்ளவர்கள்(நான் பார்த்த அளவில்)கூட சந்தர்ப்பம் கிடைத்தால் வெளியேற தயங்கமாட்டார்கள் என்றே நம்புகிறேன். 

Edited by P.S.பிரபா
எழுத்துப்பிழை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, P.S.பிரபா said:

என்னைப் பொறுத்தவரை பிள்ளைகளுடன் போய் வாழ்வது சரியானதல்ல என்பதை ஏற்றுக்கொள்கிறேன். அதற்காக அங்கே உள்ளவர்கள் பிள்ளைகளுடன் வாழவில்லையா எனக்கேட்டால் அங்கே உள்ளவர்கள்(நான் பார்த்த அளவில்)கூட சந்தர்ப்பம் கிடைத்தால் வெளியேற தயங்கமாட்டார்கள் என்றே நம்புகிறேன். 

ஓம்…..

நான் சிறுவயதில் வாசித்ததில் என் மனதில் பதிந்தவற்றில் ஒன்று மஹாத்மா காந்தியின் மூத்த மகன் அவரை பற்றி கூறியது.

காந்தி தென்னாபிரிகாவில் ஒரு ஆச்சிரமம் அமைத்து அதில் பண்ணை செய்து ஒரு வகையான அடிப்படை வாழ்வை தன் குடும்பம், சகாக்கள் சகிதம் மேற்கொண்டுள்ளார்.

இதை அவரின் மூத்த மகன் தன் மீது திணிக்கப்பட்ட வன்முறை. தன் வாழ்வின் சூறையாட்டம் என்கிறார்.

என்னை பொறுத்தவரை ஒரு 18 வயதுக்கு கீழானவரை, அவரின் பிறப்புரிமையுள்ள, வளர்ந்த நாட்டில் இருந்து - இன்னொரு வளரும் நாட்டுக்கு இட்டு போவதை - அடிப்படை மனித உரிமை மீறல் என்றே சொல்வேன்.

ஆகவே இதை ஒரு போதும் ஆதரிக்கபோவதில்லை.

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.