Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது (edited)
அதிர்ஷ்ட லாபச் சீட்டு
-----------------------------------
மீண்டும் ஒரு பில்லியன் டாலர்கள் இன்று இங்கு ஒரு அதிர்ஷ்ட லாபச் சீட்டிற்கு கிடைத்திருக்கின்றது. மெகா மில்லியன் மற்றும் பவர் லொட்டோ என்னும் இரண்டு பெரிய குலுக்கல்கள் வாரத்திற்கு இரண்டோ, மூன்றோ தடவைகள் இங்கு நடக்கும். அதை விட பல மாநிலங்களின் விதவிதமான சீட்டுகளும், குலுக்கல்களும். மொத்தத்தில் இங்கு இவை ஆயிரக் கணக்கில் வரும் என்று நினைக்கின்றேன். எல்லாம் குலுக்கல்கள் என்றில்லை, பல சுரண்டும் வகையையும் சேர்ந்தவை.
 
மெகா மற்றும் பவர் குலுக்கல்கள் பரிசு சில மில்லியன்கள் என்று ஆரம்பித்து, எவருக்கும் பெரும் பரிசு விழாமல், ஆயிரம் மில்லியன்களையும் (ஒரு பில்லியன்) தாண்டிப் போவன. ஒரு சீட்டின் விலை ஒன்று அல்லது இரண்டு டாலர்கள் (மட்டுமே....).
 
வேலையில், நண்பர்கள் வட்டத்தில், விளையாட்டுக் குழுமங்களில் என்று குழுக்களாக சேர்ந்து இந்த அதிர்ஷ்ட லாபச் சீட்டுகளை வாங்குவார்கள். முக்கியமாக பெரும் பரிசு பில்லியன் டாலர்களை அணுகும் போது, எல்லோரும் 'போனால் மயிர், வந்தால் மலை....' என்று ஓரணியில் திரள்வார்கள். அப்படியே குழுக்களாக வாங்கிக் கொண்டு, தனித்தனியாகவும் வாங்கிக் கொள்வார்கள். குழுக்களில் அதிர்ஷ்டம் கெட்டவர் யாராவது இருந்து விட்டால் என்ன செய்வது என்னும் முற்காப்பு யோசனை போல.
 
நான் வாங்குவதில்லை, குழுக்களில் சேர்வதில்லை. இதுவரை வாங்கவில்லை. ஏனென்ற காரணம் கடைசியில் இருக்கின்றது.
 
குழுக்களுடன் சேராமல், சீட்டு வாங்காமல் இருப்பது கொஞ்சம் கஷ்டம்தான். 
 
வேலையில் இருக்கும் குழு சொல்லும் பரிசு விழுந்தால் அவர்கள் எல்லோரும் இந்த வேலையை விட்டுவிட்டுப் போய் விடுவார்களாம். நான் தனியே வேலை செய்ய வேண்டி வருமாம்.
 
நண்பர்கள் குழு சொல்லும் நான் இப்படியே இருக்க அவர்கள் மட்டும் பல மில்லியன்களுக்கு அதிபதிகள் ஆவது அவர்களுக்கு சங்கடமாக இருக்கின்றது என்று.
 
விளையாட்டுக் குழுக்கள் அவர்கள் வென்றால் நாங்கள் வழமையாக ஆடும் மைதானங்களுக்கு அதன் பிறகு வரவே மாட்டார்களாம்.
 
என் அதிர்ஷடமோ என்னவோ, இவர்களில் ஒருவருக்கு கூட இன்னமும் சொல்லும் படியாக ஒரு பரிசும் கிடைக்கவில்லை.
 
பரிசு விழுவதற்கான நிகழ்தகவு நம்ப முடியாத அளவிற்கு மிகக் குறைவு என்று கலைமாமணி, முதுமாமணி, பெருமாமணி என்று எவருக்கு நான் சொல்ல ஆரம்பித்தாலும், 'ஆனாலும் யாருக்கோ பரிசு விழுகிறது தானே....' என்ற ஒற்றையடி மட்டையடியாக என் மேல் விழுகின்றது. 
 
படிப்பும், வாழ்க்கையும் ரயில் தண்டவாளங்கள் போல, ஒன்று இன்னொன்றுடன் இணையவே மாட்டாது என்பதற்கு இது இன்னொரு உதாரணம் போல.
 
இந்தப் பரிசு விழுவதை விட, மின்னல் தாக்கி இறப்பதற்கு பதினைந்து மடங்குகள் சாத்தியம் அதிகமாக இருக்கின்றது. இந்தப் பரிசு விழுகுதோ இல்லையோ, உலகில் மின்னல் தாக்கி தினமும் பலர் போய்க் கொண்டிருக்கின்றார்கள். மின்னல் தங்களை தாக்கவே மாட்டாது என்று நினைப்பவர்கள், பெரும் பரிசு மட்டும் தங்களுக்கு விழும் என்று நம்புவது கொஞ்சம் வேடிக்கையானதுதான்.
 
எது என்னவோ, சீட்டு எடுப்பவர்கள் எல்லோரும் தங்களுக்கு பரிசு விழும் என்று நம்பியே எடுக்கின்றனர்.
 
சீட்டு ஒன்று வாங்கினால், அது எனக்கு விழுந்து விட்டால், அதன் பின்னர் என்ன செய்வது என்ற பயத்திலேயே நான் வாங்காமல் இருக்கின்றேன்.
 
பிற் குறிப்பு:
1. இங்கு தினமும் மாலை நேரங்களில் இந்த சீட்டுகள் விற்கும் கடைகளின் வாசல்களில் அன்றாடம் தொழில் முடித்து வருவோர்கள் பலர் சீட்டுகளை வாங்கி சுரண்டிக் கொண்டிருப்பார்கள். முடிவில் அவர்களின் முகங்களில் ஒரு வேதனை தெரியும். அதிஷ்ட லாபச் சீட்டு விற்பனையால் வரும் வருமானத்தில் இருந்து அரசாங்கம் பல நற்பணிகளை செய்கின்றது என்போர் இந்த வேதனையை பார்க்கவேண்டும்.
 
2. பல நிகழ்விற்கான நிகழ்தகவுகள் கீழே இருக்கின்றது. பெரும் பரிசு விழ முன், ஒரு தேனீ குத்தி போய்ச் சேருவதற்கு ஐம்பது மடங்குகள் சாத்தியம் அதிகமாக இருக்கின்றது:
 
Winning Mega Millions: 302,575,350 to 1
Winning Powerball: 292,201,338 to 1
Being eaten by a shark: 264 million to 1
Being struck by lightning twice: 19 million to 1
Becoming U.S. president: 32.6 million to 1
Dying in a plane crash: 11 million to 1
Being hit by debris from a plane: 10 million to 1
Being killed by a bee sting: 6.5 million to 1
Being attacked by a shark: 5 million to 1
Being attacked by a grizzly bear: 2.7 million to 1
Becoming a movie star: 1.5 million to 1
Being struck by lightning: 960,000 to 1
Winning an Olympic medal: 662,000 to 1
Hitting a hole-in-one in golf: 12,500 to 1
Winning an Oscar: 11,500 to 1
Bowling a perfect 300 game: 11,500 to 1
Being injured by a toilet: 10,000 to 1
Edited by ரசோதரன்
  • Like 4
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

சீட்டு ஒன்று வாங்கினால், அது எனக்கு விழுந்து விட்டால், அதன் பின்னர் என்ன செய்வது என்ற பயத்திலேயே நான் வாங்காமல் இருக்கின்றேன்.😁

 வேடிக்கையாக சொன்னாலும்  உண்மை அது தான்.  இருக்கிற நிம்மதியும் போய் விடும்.குடும்பம் பிரிந்த கதைகளும் உண்டு. கெடட சகவாசம் வந்து சேர்ந்து விடும். அது ஒரு மாயை .
 
நிகழ் தகவு அருமையான சொற்பதம். அழகாக கோர்த்து கதை சொல்லும் விதம் பாரடடதக்கது. அதிகம் உங்கள் ஆக்கங்கள்   வரவேண்டும். 

  • Thanks 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
41 minutes ago, நிலாமதி said:

உங்களின் ஆதரவிற்கும், ஊக்கத்திற்கும் நன்றிகள் என்றும்.............🙏

  • கருத்துக்கள உறவுகள்
Posted
53 minutes ago, நிலாமதி said:
56 minutes ago, நிலாமதி said:

நிகழ் தகவு அருமையான சொற்பதம்.

சிறிமா ஆட்சி காலத்தில் புதிய கல்வி திட்டம் கொண்டு வரப்பட்டது    

எண்கணிதம் தூய கணிதம். பிரயோக கணிதம்.  உயர் கணிதம்  .  . ..என்று எல்லா வற்றையும் அகற்றி விட்டு    கணிதம். என்று மட்டுமே ஒரு பாடம் வந்தது நடைமுறையில்   இதில் நிகழ்தகவு  என்ற ஒரு பகுதி உண்டு” ... அதாவது    மூன்று பந்துகளில்.  இரண்டு இரணடாக.  எத்தனை முறைகள் எடுக்கலாம்    ??    இந்த முறையை லொத்தரில் பயன்படுத்தலாம் செலவு மிக அதிகம்    

1. இருந்து 49 இலக்களில். 6 இலக்களை தெரிவு செய்யும்   லொத்தர். ஜேர்மனியில் புதன்கிழமை சனிக்கிழமை உண்டு”   முதலாவது பல இலட்சம்கள். வரும்   பல தடவைகள்  வெற்றி கிடையாது விடில்  பில்லியன் வரும்   ஆனால் 

நிகழ் தகவுப்படி     49*48*47*46*45*44 என்ற. பெருக்குத்தொகையை  1*2*3*4*5*6 என்னும் பெருக்குத் தொகையால்  வகுக்க. வரும்  தடவைகள்   நிரல்களை    லொத்தர். வெட்டினால்.  நிச்சயம் ஆறு இலக்கம். வரும்   ஆனால் செலவு  பரிசு தொகையை விட. அதிகம்   🤣🤣🤣

குறிப்பு,. முயன்று பாருங்கள்  😂

  • Haha 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, ரசோதரன் said:

நான் வாங்குவதில்லை, குழுக்களில் சேர்வதில்லை. இதுவரை வாங்கவில்லை.

எனக்கும் இதில் ஈடுபாடில்லை.
 
இங்கு பெரிய பெரிய லொட்டோ வீரர்கள் இருக்கிறார்கள்.

தலையைக் காட்டுகிறார்களோ தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 minutes ago, Kandiah57 said:

சிறிமா ஆட்சி காலத்தில் புதிய கல்வி திட்டம் கொண்டு வரப்பட்டது    

எண்கணிதம் தூய கணிதம். பிரயோக கணிதம்.  உயர் கணிதம்  .  . ..என்று எல்லா வற்றையும் அகற்றி விட்டு    கணிதம். என்று மட்டுமே ஒரு பாடம் வந்தது நடைமுறையில்   இதில் நிகழ்தகவு  என்ற ஒரு பகுதி உண்டு” ... அதாவது    மூன்று பந்துகளில்.  இரண்டு இரணடாக.  எத்தனை முறைகள் எடுக்கலாம்    ??    இந்த முறையை லொத்தரில் பயன்படுத்தலாம் செலவு மிக அதிகம்    

1. இருந்து 49 இலக்களில். 6 இலக்களை தெரிவு செய்யும்   லொத்தர். ஜேர்மனியில் புதன்கிழமை சனிக்கிழமை உண்டு”   முதலாவது பல இலட்சம்கள். வரும்   பல தடவைகள்  வெற்றி கிடையாது விடில்  பில்லியன் வரும்   ஆனால் 

நிகழ் தகவுப்படி     49*48*47*46*45*44 என்ற. பெருக்குத்தொகையை  1*2*3*4*5*6 என்னும் பெருக்குத் தொகையால்  வகுக்க. வரும்  தடவைகள்   நிரல்களை    லொத்தர். வெட்டினால்.  நிச்சயம் ஆறு இலக்கம். வரும்   ஆனால் செலவு  பரிசு தொகையை விட. அதிகம்   🤣🤣🤣

குறிப்பு,. முயன்று பாருங்கள்  😂

🤣....

நிகழ்தகவு என்ற சொல்லை கணக்குப் பாடத்திலேயே முதலில் அறிந்து கொண்டோம்....👍

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 minutes ago, ஈழப்பிரியன் said:

எனக்கும் இதில் ஈடுபாடில்லை.
 
இங்கு பெரிய பெரிய லொட்டோ வீரர்கள் இருக்கிறார்கள்.

தலையைக் காட்டுகிறார்களோ தெரியவில்லை.

அய்யய்யோ.... களத்தில் பெரிய லொட்டோ வீரர்கள் இருக்கின்றார்கள் என்று எனக்குத் தெரியாது.... என் அபிப்பிராயத்தை மட்டுமே எழுதினேன். குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா...

  • கருத்துக்கள உறவுகள்
Posted
45 minutes ago, Kandiah57 said:

சிறிமா ஆட்சி காலத்தில் புதிய கல்வி திட்டம் கொண்டு வரப்பட்டது    

எண்கணிதம் தூய கணிதம். பிரயோக கணிதம்.  உயர் கணிதம்  .  . ..என்று எல்லா வற்றையும் அகற்றி விட்டு    கணிதம். என்று மட்டுமே ஒரு பாடம் வந்தது நடைமுறையில்   இதில் நிகழ்தகவு  என்ற ஒரு பகுதி உண்டு” ... அதாவது    மூன்று பந்துகளில்.  இரண்டு இரணடாக.  எத்தனை முறைகள் எடுக்கலாம்    ??    இந்த முறையை லொத்தரில் பயன்படுத்தலாம் செலவு மிக அதிகம்    

1. இருந்து 49 இலக்களில். 6 இலக்களை தெரிவு செய்யும்   லொத்தர். ஜேர்மனியில் புதன்கிழமை சனிக்கிழமை உண்டு”   முதலாவது பல இலட்சம்கள். வரும்   பல தடவைகள்  வெற்றி கிடையாது விடில்  பில்லியன் வரும்   ஆனால் 

நிகழ் தகவுப்படி     49*48*47*46*45*44 என்ற. பெருக்குத்தொகையை  1*2*3*4*5*6 என்னும் பெருக்குத் தொகையால்  வகுக்க. வரும்  தடவைகள்   நிரல்களை    லொத்தர். வெட்டினால்.  நிச்சயம் ஆறு இலக்கம். வரும்   ஆனால் செலவு  பரிசு தொகையை விட. அதிகம்   🤣🤣🤣

குறிப்பு,. முயன்று பாருங்கள்  😂

நன்றி நன்றி  ஆனால் சில விடயங்கள் புதிமையாக உள்ளது ?????????

தேடிப்பார்போம் .

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, ரசோதரன் said:
அதிர்ஷ்ட லாபச் சீட்டு
-----------------------------------
மீண்டும் ஒரு பில்லியன் டாலர்கள் இன்று இங்கு ஒரு அதிர்ஷ்ட லாபச் சீட்டிற்கு கிடைத்திருக்கின்றது. மெகா மில்லியன் மற்றும் பவர் லொட்டோ என்னும் இரண்டு பெரிய குலுக்கல்கள் வாரத்திற்கு இரண்டோ, மூன்றோ தடவைகள் இங்கு நடக்கும். அதை விட பல மாநிலங்களின் விதவிதமான சீட்டுகளும், குலுக்கல்களும். மொத்தத்தில் இங்கு இவை ஆயிரக் கணக்கில் வரும் என்று நினைக்கின்றேன். எல்லாம் குலுக்கல்கள் என்றில்லை, பல சுரண்டும் வகையையும் சேர்ந்தவை.
 
மெகா மற்றும் பவர் குலுக்கல்கள் பரிசு சில மில்லியன்கள் என்று ஆரம்பித்து, எவருக்கும் பெரும் பரிசு விழாமல், ஆயிரம் மில்லியன்களையும் (ஒரு பில்லியன்) தாண்டிப் போவன. ஒரு சீட்டின் விலை ஒன்று அல்லது இரண்டு டாலர்கள் (மட்டுமே....).
 
வேலையில், நண்பர்கள் வட்டத்தில், விளையாட்டுக் குழுமங்களில் என்று குழுக்களாக சேர்ந்து இந்த அதிர்ஷ்ட லாபச் சீட்டுகளை வாங்குவார்கள். முக்கியமாக பெரும் பரிசு பில்லியன் டாலர்களை அணுகும் போது, எல்லோரும் 'போனால் மயிர், வந்தால் மலை....' என்று ஓரணியில் திரள்வார்கள். அப்படியே குழுக்களாக வாங்கிக் கொண்டு, தனித்தனியாகவும் வாங்கிக் கொள்வார்கள். குழுக்களில் அதிர்ஷ்டம் கெட்டவர் யாராவது இருந்து விட்டால் என்ன செய்வது என்னும் முற்காப்பு யோசனை போல.
 
நான் வாங்குவதில்லை, குழுக்களில் சேர்வதில்லை. இதுவரை வாங்கவில்லை. ஏனென்ற காரணம் கடைசியில் இருக்கின்றது.
 
குழுக்களுடன் சேராமல், சீட்டு வாங்காமல் இருப்பது கொஞ்சம் கஷ்டம்தான். 
 
வேலையில் இருக்கும் குழு சொல்லும் பரிசு விழுந்தால் அவர்கள் எல்லோரும் இந்த வேலையை விட்டுவிட்டுப் போய் விடுவார்களாம். நான் தனியே வேலை செய்ய வேண்டி வருமாம்.
 
நண்பர்கள் குழு சொல்லும் நான் இப்படியே இருக்க அவர்கள் மட்டும் பல மில்லியன்களுக்கு அதிபதிகள் ஆவது அவர்களுக்கு சங்கடமாக இருக்கின்றது என்று.
 
விளையாட்டுக் குழுக்கள் அவர்கள் வென்றால் நாங்கள் வழமையாக ஆடும் மைதானங்களுக்கு அதன் பிறகு வரவே மாட்டார்களாம்.
 
என் அதிர்ஷடமோ என்னவோ, இவர்களில் ஒருவருக்கு கூட இன்னமும் சொல்லும் படியாக ஒரு பரிசும் கிடைக்கவில்லை.
 
பரிசு விழுவதற்கான நிகழ்தகவு நம்ப முடியாத அளவிற்கு மிகக் குறைவு என்று கலைமாமணி, முதுமாமணி, பெருமாமணி என்று எவருக்கு நான் சொல்ல ஆரம்பித்தாலும், 'ஆனாலும் யாருக்கோ பரிசு விழுகிறது தானே....' என்ற ஒற்றையடி மட்டையடியாக என் மேல் விழுகின்றது. 
 
படிப்பும், வாழ்க்கையும் ரயில் தண்டவாளங்கள் போல, ஒன்று இன்னொன்றுடன் இணையவே மாட்டாது என்பதற்கு இது இன்னொரு உதாரணம் போல.
 
இந்தப் பரிசு விழுவதை விட, மின்னல் தாக்கி இறப்பதற்கு பதினைந்து மடங்குகள் சாத்தியம் அதிகமாக இருக்கின்றது. இந்தப் பரிசு விழுகுதோ இல்லையோ, உலகில் மின்னல் தாக்கி தினமும் பலர் போய்க் கொண்டிருக்கின்றார்கள். மின்னல் தங்களை தாக்கவே மாட்டாது என்று நினைப்பவர்கள், பெரும் பரிசு மட்டும் தங்களுக்கு விழும் என்று நம்புவது கொஞ்சம் வேடிக்கையானதுதான்.
 
எது என்னவோ, சீட்டு எடுப்பவர்கள் எல்லோரும் தங்களுக்கு பரிசு விழும் என்று நம்பியே எடுக்கின்றனர்.
 
சீட்டு ஒன்று வாங்கினால், அது எனக்கு விழுந்து விட்டால், அதன் பின்னர் என்ன செய்வது என்ற பயத்திலேயே நான் வாங்காமல் இருக்கின்றேன்.
 
பிற் குறிப்பு:
1. இங்கு தினமும் மாலை நேரங்களில் இந்த சீட்டுகள் விற்கும் கடைகளின் வாசல்களில் அன்றாடம் தொழில் முடித்து வருவோர்கள் பலர் சீட்டுகளை வாங்கி சுரண்டிக் கொண்டிருப்பார்கள். முடிவில் அவர்களின் முகங்களில் ஒரு வேதனை தெரியும். அதிஷ்ட லாபச் சீட்டு விற்பனையால் வரும் வருமானத்தில் இருந்து அரசாங்கம் பல நற்பணிகளை செய்கின்றது என்போர் இந்த வேதனையை பார்க்கவேண்டும்.
 
2. பல நிகழ்விற்கான நிகழ்தகவுகள் கீழே இருக்கின்றது. பெரும் பரிசு விழ முன், ஒரு தேனீ குத்தி போய்ச் சேருவதற்கு ஐம்பது மடங்குகள் சாத்தியம் அதிகமாக இருக்கின்றது:
 
Winning Mega Millions: 302,575,350 to 1
Winning Powerball: 292,201,338 to 1
Being eaten by a shark: 264 million to 1
Being struck by lightning twice: 19 million to 1
Becoming U.S. president: 32.6 million to 1
Dying in a plane crash: 11 million to 1
Being hit by debris from a plane: 10 million to 1
Being killed by a bee sting: 6.5 million to 1
Being attacked by a shark: 5 million to 1
Being attacked by a grizzly bear: 2.7 million to 1
Becoming a movie star: 1.5 million to 1
Being struck by lightning: 960,000 to 1
Winning an Olympic medal: 662,000 to 1
Hitting a hole-in-one in golf: 12,500 to 1
Winning an Oscar: 11,500 to 1
Bowling a perfect 300 game: 11,500 to 1
Being injured by a toilet: 10,000 to 1

விழப்போவதில்லை என்று தெரிந்தாலும் இடைக்கிடை வாங்குவதுண்டு, ஓரிரு குழுக்களிலும் இருக்கிறேன், நாங்கள் பணக்காரர் ஆவதை விட, இவங்களுக்கு விழுந்துவிட்டால் நாங்கள் பிறகு இருக்கமுடியாது என்ற ஒரே காரணம்தான்😀

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 hours ago, நீர்வேலியான் said:

விழப்போவதில்லை என்று தெரிந்தாலும் இடைக்கிடை வாங்குவதுண்டு, ஓரிரு குழுக்களிலும் இருக்கிறேன், நாங்கள் பணக்காரர் ஆவதை விட, இவங்களுக்கு விழுந்துவிட்டால் நாங்கள் பிறகு இருக்கமுடியாது என்ற ஒரே காரணம்தான்😀

🤣......

அதுவும் சரிதான். எங்களுக்கு தெரிந்த குழுவில் எந்தக் குழுவிற்காவது பரிசு விழுந்தால், எப்படி 'ரியாக்ட்' பண்ண வேண்டும் என்று, வேறு எதுவும் யோசிக்க இல்லாத ஒரு நேரத்தில், முன்னரே யோசித்து வைக்க வேண்டும்.....😀

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted
33 minutes ago, suvy said:

நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂

😀.....

உங்களுக்காக 'கோப்பிக் கணக்கு' என்ற தலைப்பில் ஒன்று எழுத வேண்டும்....🤣

நீங்கள் இலகுவாக கடந்து விடுகிறீர்கள்........👍

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நான் எங்கை இருந்தாலும் ஒன்லைனில் யூரோ மில்லியன் வாங்குவேன்.. மாத ஆரம்பத்திலேயே 4 கிழமைக்கும் சேத்து வாங்கிடுவன்.. 40/50 க்குள் ஒரு தொகை செல்வாகும் மாதம்.. ஒரே நம்பரை வெட்டிக்கொண்டு வாறன்.. விழாதெண்டு தெரியும்.. அப்பிடி விழுந்தாலும் எழும்பி நடக்கேலா பல்லுப்போன காலத்திலைதான் விழும்.. அதுக்கு பிறகு விழுந்தா என்ன விட்டா என்ன.. 

உங்கள் பகிர்வுக்கு நன்றி.. நல்ல எழுத்து நடையா இருக்கு.. யாராப்பா நீங்கள்..? முந்தி எங்களோட சுய ஆக்கங்களில எழுதுப்பட்ட ஆள் போல கிடக்கு.. 🤔

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
12 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

நான் எங்கை இருந்தாலும் ஒன்லைனில் யூரோ மில்லியன் வாங்குவேன்.. மாத ஆரம்பத்திலேயே 4 கிழமைக்கும் சேத்து வாங்கிடுவன்.. 40/50 க்குள் ஒரு தொகை செல்வாகும் மாதம்.. ஒரே நம்பரை வெட்டிக்கொண்டு வாறன்.. விழாதெண்டு தெரியும்.. அப்பிடி விழுந்தாலும் எழும்பி நடக்கேலா பல்லுப்போன காலத்திலைதான் விழும்.. அதுக்கு பிறகு விழுந்தா என்ன விட்டா என்ன.. 

உங்கள் பகிர்வுக்கு நன்றி.. நல்ல எழுத்து நடையா இருக்கு.. யாராப்பா நீங்கள்..? முந்தி எங்களோட சுய ஆக்கங்களில எழுதுப்பட்ட ஆள் போல கிடக்கு.. 🤔

😀.....

மிக்க நன்றி.

இல்லை, நான் இங்கு முந்தி எழுதவில்லை. இந்த மாதம் முதலாம் திகதி தான் நான் இங்கு இணைந்தேன். இது சத்தியமான உண்மை. ஆனால் பல வருடங்களாக களத்தை வாசித்து வருகின்றேன்.

Edited by ரசோதரன்

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.