Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

                                                    நியூயோர்க்கில் சொந்த வீட்டில் குடியிருக்க முடியாது அவதியுறும் மக்கள்.

                           நியூயோர்க் வாழ் மக்கள் ஏதாவதொரு சிறிய விடுமுறையில் போனால் திரும்ப வந்து அவர்களது வீட்டில் குடியிருக்க முடியுமா என்ற சந்தேகம் மக்கள் மனதில் சிப்பிலியாட்டுகிறது.

                           நாளாந்தம் ஏதோ ஓர் மூலையில் இந்தப் பிரச்சனை நடக்கிறது.

                          மெக்சிக்கோ எல்லையால் வருபவர்களை ரெக்சாஸ் மாநிலம் அத்தனை பேரையும் தனக்கு(நாளாந்தம் 10000 பேர்வரை)இருப்பிட சாப்பாட்டு வசதிகள் செய்ய முடியாதென்று முடிவெடுத்து எல்லையால் வருபவர்களை ஒவ்வொரு பேரூந்துகளைப் பிடித்து சிகப்பு கட்சி நகரங்கள் அதாவது (Sanctuary City)சரணாலய நகரம் என்று சொல்லப்படுகின்ற வாசிங்டன் டிசி,நியூயோர்க்,இலினேஸ்,கலிபோர்ணியா போன்ற நகரங்களுக்கு அனுப்புகிறார்கள்.

                         ஆரம்பத்தில் நகரபிதாக்களில் இருந்து சகல பிரமுகர்களும் வரும் பேரூந்துகளை வரவேற்றார்கள்.நாளாந்தம் பேரூந்துகளின் தொகை கூடக்கூட வரவேற்பவர்களின் தொகையும் குறைந்துவிட்டது.
சரி வந்தவர்களை தங்க வைக்க என்று 2-3-4-5 ஸ்ரார் கொட்டல்களில் விட்டு நல்ல சாப்பாடுகளும் கொடுத்தார்கள்.வந்தவர்களின் தொகை கூடிக்கூடி ஒரு லட்சத்தைத் தாண்டும் போது தான் நிலமை மேசமாகிக் கொண்டு போவதை உணர்ந்தார்கள்.

                        மத்திய அரசோ மாநில ஆளுநரோ இதற்காக மேலதிக பணம் ஒதுக்கவில்லை.

                       கட்டிப் போட்டு பராமரிக்க பணம் இல்லை.எல்லோரும் விரும்பியபடி ஊர் சுற்றுகிறார்கள்.எங்கே போனாலும் களவு.பொலிசுக்கு கூப்பிட்டால் சம்பவம் நடந்து பலமணி நேரத்தின் பின்பே வருகிறார்கள்.

                       கையும் களவுமாக கள்வனைப் பிடித்தாலும் நீதிமன்றம் கொண்டு போனால் பிணை இல்லாமலே வெளியே வருகிறார்கள்.

                      அண்மையில் நியூயோர்க் நகரத்தில் 4-5 பேர் சேர்ந்து 2-3 பொலிசாருக்கு அடித்துவிட்டார்கள்.அவர்களைப் பிடித்து நீதிமன்றம் கொண்டு போனால் உடனேயே பிணை இல்லாமல் விடுவிக்கப்பட்டார்கள்.

                      வெளியே வந்தவர்கள் பொலிசாருக்கு நடுவிரலைக் காட்டிக் கொண்டு போகிறார்கள்.

                    அடுத்தடுத்த நாள் மக்களின் கொந்தளிப்பால் அவர்களைத் தேடினால் கலிபோர்ணியா போய்விட்டார்கள்.பின்பு அங்கு எங்கோ ஒரு மூலையில் வைத்து பிடித்தார்கள்.

                                                                                                பெரிய பிரச்சனை

                                  பகலில் தெருத்தெருவாக கூட்டமாக திரிபவர்கள் திடீர் திடீர் என்று ஆள்அரவமற்ற வீடுகளுக்குள் கதவுகள் யன்னல்களை உடைத்து உள்ளே போய் களவும் எடுக்கிறார்கள் அப்படியே தங்கவும் செய்கிறார்கள்.

                                வீட்டுக்காரர் வந்து பார்த்து அவர்களைக் கலைக்க பொலிசைக் கூப்பிட்டால் எம்மால் ஒன்றும் செய்ய முடியாது நீ நீதிமன்றம் போய் முறையிடு.

                                அதேநேரம் வீட்டின் 

தண்ணீரையோ

மின்சாரத்தையோ

சமையல் காசையொ

நிற்பாட்ட முடியாது.அப்படி நிற்பாட்டினால் உங்களை கைது செய்து நடவடிக்கை எடுப்போம் என்கிறார்கள்.

                                     இன்று நியூயோர்க் பிரவுன்ஸ் என்னும் நகரத்தில் சந்தேகத்தில் ஒருவரை துரத்த ஒரு வீட்டு நிலக்கீழ் அறைக்குள் ஓடியிருக்கிறார்.பின்னே சென்ற பொலிசார் உள்ளே போனால் 7 பேர் உள்ளே.போதை வஸ்துகள் குண்டுகள் நிரப்பப்பட்ட இரண்டு துப்பாக்கிகள் வெற்றுத் துப்பாக்கி ஏற்கனவே ஒரு கொலை வழக்கில் தேடப்படுபவர் அத்துடன் ஒரு 7 வயதுக் குழந்தை.

                                  அத்தனை பேரையும் நீதிமன்றம் கொண்டு போனால் கொலை வழக்கில் தேடப்பட்டவரைத் தவிர மற்றையோரை விடுவித்துள்ளார் நீதிபதி.

                                 வீட்டுக்காரர் மாதக் கணக்காக நீதிமன்றுக்கு அலைவதாக சொல்கிறார்கள்.

https://abc7ny.com/eight-suspected-migrants-arrested-in-the-bronx-after-police-found-them-squatting-with-guns-and-drugs/14605864/

Child found among guns, drugs in Bronx home occupied by several squatters.

NORWOOD, The Bronx (WABC) -- Police have arrested several suspected migrants who they found squatting with guns and drugs in the basement of a Bronx home.

The big bust happened last Wednesday when police received a call about a man with a gun just footsteps away from a school.

Officials say they chased 24-year-old Hector Desousa Villata, who is believed to be from Venezuela, into the home on Hull Avenue.

That is where police arrested him, long with seven other suspected migrants. One man, 22-year-old Javier Alborno, tried to flee with a weapon but was soon arrested.

When authorities obtained a search warrant, they found two more loaded guns, three loaded extended magazines, ammunition, and a bag of ketamine mixed with cocaine.

A 7-year-old child was also found in the home.

"Two of the people with the guns had open cases, one for an attempted murder in Yonkers, and one walking around with an open gun indictment, walking around," said NYPD Chief of Patrol John Chell.

A neighbor spoke out Tuesday and said the group had been squatting.

"They're squatters and the owner has been trying to get them out of the apartment for the longest period of time," said neighbor Alfred Munoz. "I think he has a court date set, apparently because they're squatters for more than 30 days..... they came, they were a disruptive force mainly because there were a lot of them. You didn't know who was staying, not staying there, and the owner of the building had a hell of a time trying to get them out."

Desousa Villata and the others were charged with criminal possession of a weapon, criminal possession of controlled substance and acting in a manner injurious to a child. Officials say all of the men, but two were released without bail.

Desousa Villalta was already charged with attempted murder for shooting another person in the leg during an argument in Yonkers.

The extent of the criminal activity at the house is the subject of investigation here while six of the suspects are out on release.

The suspect accused of shooting someone in the leg in Yonkers is out on supervised release. Some of the suspects are also under investigation in connection with a robbery pattern in Bergen County.

இந்தச் செய்தியை கூகிளில் மொழிபெயர்த்து போடலாம் என்று நினைத்தேன்.

இருந்தாலும் பண்டிதர் தம்பி @இணையவன் க்கு கூகிள் தமிழ் விளக்கம் குறைவாம்.அதனால் மொழிபெயர்ப்பை விட்டுவிட்டேன்.

இந்த செய்திகள் பற்றி  @ரசோதரன் @நீர்வேலியான்இன் அனுபவங்கள் தகவல்களை அறிய விரும்புகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, ஈழப்பிரியன் said:

டெக்சாஸ் முதல் தொகுதி மக்களை கலிபோர்னியாவிற்குத்தான் அனுப்பியது.......😀

இப்படியான ஒரு செய்தியையும் இங்கு நான் கேள்விப்படவில்லை. கலிபோர்னியா மிகக் கவனமாக பிரிக்கப்பட்டிருக்கின்றது. ஒவ்வொரு ஊரிலும் இன்னார் இன்னார் தான் இருக்கலாம் என்பது போல ஒரு எழுதாத சட்டம் இங்கே......🤣.....வீட்டு விலைகளும் அதற்கேற்ப ஒவ்வொரு மட்டங்களில். 

இங்கு இந்த அகதியாக வந்த மக்களை எங்கு குடியிருத்தி இருக்கின்றார்கள் என்று தெரியவில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரசோதரன் said:

இங்கு இந்த அகதியாக வந்த மக்களை எங்கு குடியிருத்தி இருக்கின்றார்கள் என்று தெரியவில்லை.

லாஸ்அங்கிலசில் நிலமை மோசம் என்கிறார்களே.

ஆனாலும் கடந்த மாதம் Glen Dale  நகரத்தில் நின்றபோது பெரிதாக ஒன்றும் தெரியவில்லை

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, ஈழப்பிரியன் said:

லாஸ்அங்கிலசில் நிலமை மோசம் என்கிறார்களே.

ஆனாலும் கடந்த மாதம் Glen Dale  நகரத்தில் நின்றபோது பெரிதாக ஒன்றும் தெரியவில்லை

இங்கு லாஸ் ஏஞ்சல்ஸில் வீடுகளை விட்டு வெளியேறி தெருவில் வாழும் மக்கள் மிக அதிகம். ஆனால் அவர்கள் எல்லோரும் இப்போது எல்லை தாண்டி வந்தவர்கள் அல்லர். பலர் பல வருடங்களாகவே இங்கேயே இருக்கின்றனர் என்று நினைக்கின்றேன். நான் இருக்கும் ஊரின் எல்லைகளிலும் இந்த நான்கு வருடங்களில் சிலர் வந்துவிட்டனர். போகப் போக தான் இதனால் வரும் விளைவுகள் தெரிய வரும். 

Edited by ரசோதரன்

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ஈழப்பிரியன் said:

லாஸ்அங்கிலசில் நிலமை மோசம் என்கிறார்களே.

ஆனாலும் கடந்த மாதம் Glen Dale  நகரத்தில் நின்றபோது பெரிதாக ஒன்றும் தெரியவில்லை

எனக்கு அப்பிடி ஒரு வித்தியாசமும் லாஸ் ஏஞ்சல்ஸ் இல் தெரியவில்லை, கேள்விப்படவும் இல்லை, சில வேளை வேறு இடங்களில் நடக்கிறதா தெரியவில்லை. நியூயோர்க்இல் இவ்வளவு தூரம் பிரச்சினை உள்ளது என்பது ஆச்சரியமாக உள்ளது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, நீர்வேலியான் said:

https://www.newsnationnow.com/us-news/southeast/florida-remove-squatters-rights/amp/

புளோரிடாவிலும் வீடற்றவர்களால் பூட்டியிருக்கும் வீடுகளுக்குள் பலவந்தமாக குடியேறி இருந்து வந்தவர்களை வெளியேற்ற முடியாமல் இருந்தது.அண்மையில் அப்படி யாராவது வீடுகளுக்குள் இருந்தால் உடனடியாக கைது செய்து உள்ளே போட சட்டம் போட்டுள்ளார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு காலமும் 1-2 மாதங்கள் பிள்ளைகளுடன் வேறுவேறு மாநிலங்களில் நிற்போம்.

மீண்டும் 5-10 நாட்கள் நியூயோர்க் வந்து நிற்போம்.நிம்மதியாக வீட்டைப் பூட்டிவிட்டு சுற்றுவோம்.

இப்போ அடி வயிற்றைக் கலக்குது.

அவசர அவசரமாக செக்குறிரி கமரா போடுகிறோம்.

இருந்தாலும் இனி நிம்மதியாக இருக்க முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

இனி வரும் காலங்களில் பேசாமல் ஒதுக்குப்புறமாக உள்ள சிறிய ஊர்களில்ப் போய் இருப்பது தான் சிறந்தது என்று நினைக்கின்றேன்.

 வீட்டு விலையும் குறைவு, அதே நேரம் லூசுகளின் பிரச்சினையும் குறைவு, வெள்ளைகளின் இனத்து வேசத்தை சகித்துக் கொள்ளலாம், ஆனால் அடங்காப்பிடாரிகளோடு வாழ முடியாது 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, பகிடி said:

இனி வரும் காலங்களில் பேசாமல் ஒதுக்குப்புறமாக உள்ள சிறிய ஊர்களில்ப் போய் இருப்பது தான் சிறந்தது என்று நினைக்கின்றேன்.

 வீட்டு விலையும் குறைவு, அதே நேரம் லூசுகளின் பிரச்சினையும் குறைவு, வெள்ளைகளின் இனத்து வேசத்தை சகித்துக் கொள்ளலாம், ஆனால் அடங்காப்பிடாரிகளோடு வாழ முடியாது 

நிலவுக்கு ஒளித்து பரதோசம் போனது போல

மிகமிக அதிக துவேசமுள்ள இடத்துக்கு அனுப்புகிற பிளானோ?

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, நீர்வேலியான் said:

எனக்கு அப்பிடி ஒரு வித்தியாசமும் லாஸ் ஏஞ்சல்ஸ் இல் தெரியவில்லை, கேள்விப்படவும் இல்லை, சில வேளை வேறு இடங்களில் நடக்கிறதா தெரியவில்லை. நியூயோர்க்இல் இவ்வளவு தூரம் பிரச்சினை உள்ளது என்பது ஆச்சரியமாக உள்ளது

😂 எந்த செய்தி ஊடகம் என்பதைப் பொறுத்து கதை மாறு படும்.

கீழே இருப்பது நியூ யோர்க் போஸ்ற் எனப்படும் "ட்ரம்ப்" ஆதரவு, சிவப்பு கட்சி ஊடகம்.

https://nypost.com/2024/02/13/opinion/migrant-crime-is-turning-cities-into-war-zones/

இவர்களைப் பொறுத்த வரை, பதிவு செய்யாத குடியேறிகள் நியூ யோர்க் தெருக்களில் போவோர் வருவோரையெல்லாம் துரத்தித் துரத்தி வெட்டுகிறார்கள், கொள்ளையடிக்கிறார்கள் என்று எழுதுவர்.

சி.என்.என், இதைப் பற்றி எழுதுப் போது கொஞ்சம் புள்ளி விபரங்களோடு சேர்த்து எழுதுகிறது. இவர்கள் சொல்வதின் படி, நியூ யோர்க் மட்டுமல்ல, அமெரிக்கா முழுவதும், பெரும் வன்முறைக் குற்றங்களில் ஈடுபடுவதில் குடியேறிகளுக்கு பாரிய பங்கு இல்லை.

https://www.cnn.com/2024/02/15/us/border-migrants-crime-cec/index.html

மேலே நியூ யோர்க்கில் குடியேறிகளின் குற்ற வீதம் பற்றி இணைக்கப் பட்டிருக்கும் செய்திகளைப் பார்த்தீர்களானால், எவையும் ஒழுங்கான ஊடகங்களாக இருக்காது. இவற்றை "குட்டிச் சுவர் ஊடகங்கள் - fringe media" என்று அழைப்பர். ஒரு அல்லது இரு சம்பவங்களை எடுத்து, பந்திகள் எழுதி, அமெரிக்காவில் இருக்கும் 12 மில்லியனுக்கு மேற்பட்ட தென்னமெரிக்கரில் அரை வாசிப்பேர் கிருமினல்கள் எனக் காட்டியிருப்பர்.

குற்றங்கள் நியூ யோர்க் மட்டுமன்றி சகல பெரிய அமெரிக்க நகரங்களிலும் நடக்கின்றன (உண்மையான தரவுகளின் படி, 90 களில் இருந்து அமெரிக்க நகரங்களில் மோசமான குற்றங்களின் எண்ணிக்கை குறைந்தே வந்திருக்கிறது என்கிறது FBI). பதிவு செய்யாத குடியேறிகளின் பங்களிப்பு இந்தக் குற்றங்களில் மிகக் குறைவு. பெரும்பாலானவை இங்கேயே பிறந்து வளர்ந்த "மண்ணின் மைந்தர்களால்" நிகழும் குற்றங்கள்.

மேலதிகமாக, கீழ் இணைப்பில் நியூ யோர்க்கில் பதிவு செய்யாத குடியேறிகளால் குற்றங்கள் அதிகரித்திருக்கின்றனவா என்ற நேரடியான கேள்விக்கு புள்ளி விபரங்களோடு பதில் தந்திருக்கிறார்கள்.  

https://abc7ny.com/us-politics-immigration-study-migrants-not-driving-violent-crime-rates/14618231/

Edited by Justin
கீழ் இணைப்பு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

NY post or Fox News 

இல் நீங்கள் சொல்வதைவிட கூடுதலாகவே சொல்கிறார்கள்.

நியூயோர்க் சிற்றியில் வழிப்பறி செல்போன் பறிப்பு இப்படி நிறையவே நடக்கிறது.காரணம் பொலிஸ் பிடித்து நீதிமன்றுக்கு கொண்டு போனால் எதுவித நிபந்தனையும் இல்லாமல் வெளியே விடுகிறார்கள்.

இப்படிப்பட்ட செய்திகளை தமது ஆட்களுக்கு உடனுக்குடன் அனுப்புவதாக சொல்கிறார்கள்.இதனால் மற்றவர்களும் இப்படியான குற்றங்களில் ஈடுபட தூண்டுகிறது.

பிறவுன்சில் நடந்த சம்பவத்தை மேலே பாருங்கள்.

2 தோட்டாக்கள் நிரப்பிய துவக்குகள் 2 வெறும் துப்பாக்கி போதைவஸ்து இவ்வளவும் கையும் களவுமாகப் பிடித்தும் நீதிபதி பிணை கூட இல்லாமல் வெளியே விடுகிறார்.

என்ன தான் பிரச்சனை என்றாலும் பொலிசார் முன்னரைப் போல ஓடி வருகிறார்கள் இல்லை.குற்றவாளிகளைக் கண்டால்  காணாததுமாக இருக்கிறார்கள்.பிடித்துக் கொண்டுபோய் பிரயோசனமில்லை என்கிறார்கள்.

மேலே உள்ள காணொளியைப் பாருங்கள் சிற்ரி பொலிசுக்கு அடிக்கிறார்கள்.அவர்கள் உடனேயே நிபந்தனையின்றி விடுவிக்கப்படுகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Justin said:

நானும் அப்பிடித்தான் நினைத்தேன்,இந்த சிவப்புகட்சிகாரர்களின் பிரச்சாரம் உண்மையிலேயே நாளுக்கு நாள் தரம் தாழ்ந்துகொண்டு போகிறது. குடியேற்றகாரர்கள் நீண்ட காலமாக வந்துகொண்டுத்தான் இருக்கிறார்கள்,  எனக்கு பெரிதாக வித்தியாசம் தெரிந்ததில்லை. ஆனால் homeless பிரச்சனை இங்கு, முக்கியமாக லாஸ் ஏஞ்சல்ஸ்இல் அதிகரித்து கொண்டு செல்கிறது, இதில் குடியேறிகளின் பங்கு பெரிதாக இல்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, நீர்வேலியான் said:

நானும் அப்பிடித்தான் நினைத்தேன்,இந்த சிவப்புகட்சிகாரர்களின் பிரச்சாரம் உண்மையிலேயே நாளுக்கு நாள் தரம் தாழ்ந்துகொண்டு போகிறது. குடியேற்றகாரர்கள் நீண்ட காலமாக வந்துகொண்டுத்தான் இருக்கிறார்கள்,  எனக்கு பெரிதாக வித்தியாசம் தெரிந்ததில்லை. ஆனால் homeless பிரச்சனை இங்கு, முக்கியமாக லாஸ் ஏஞ்சல்ஸ்இல் அதிகரித்து கொண்டு செல்கிறது, இதில் குடியேறிகளின் பங்கு பெரிதாக இல்லை.

நியூயொர்க் சிற்றியில் யாராவது இருந்தால் விசாரித்துப் பாருங்கள்.

இந்தப் பிரச்சனை ஏன் வருகிறதென்றால் குற்றவாளிகளை இலகுவில் தப்பிக்க விடுகிறார்கள்.இதனால் அவர்கள் திரும்ப திரும்ப குற்றங்களை செய்வதுடன் சும்மா இருப்பவர்களையும் தூண்டுகிறார்கள்.

ஏற்கனவே கிரிமினல்களாக கொடிகட்டி பறந்தவர்கள் இப்போது சாதாரண பொதுமகன் வேலைக்கு போய்வரவே சிந்திக்கிறான்.

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ஈழப்பிரியன் said:

NY post or Fox News 

இல் நீங்கள் சொல்வதைவிட கூடுதலாகவே சொல்கிறார்கள்.

நியூயோர்க் சிற்றியில் வழிப்பறி செல்போன் பறிப்பு இப்படி நிறையவே நடக்கிறது.காரணம் பொலிஸ் பிடித்து நீதிமன்றுக்கு கொண்டு போனால் எதுவித நிபந்தனையும் இல்லாமல் வெளியே விடுகிறார்கள்.

இப்படிப்பட்ட செய்திகளை தமது ஆட்களுக்கு உடனுக்குடன் அனுப்புவதாக சொல்கிறார்கள்.இதனால் மற்றவர்களும் இப்படியான குற்றங்களில் ஈடுபட தூண்டுகிறது.

பிறவுன்சில் நடந்த சம்பவத்தை மேலே பாருங்கள்.

2 தோட்டாக்கள் நிரப்பிய துவக்குகள் 2 வெறும் துப்பாக்கி போதைவஸ்து இவ்வளவும் கையும் களவுமாகப் பிடித்தும் நீதிபதி பிணை கூட இல்லாமல் வெளியே விடுகிறார்.

என்ன தான் பிரச்சனை என்றாலும் பொலிசார் முன்னரைப் போல ஓடி வருகிறார்கள் இல்லை.குற்றவாளிகளைக் கண்டால்  காணாததுமாக இருக்கிறார்கள்.பிடித்துக் கொண்டுபோய் பிரயோசனமில்லை என்கிறார்கள்.

மேலே உள்ள காணொளியைப் பாருங்கள் சிற்ரி பொலிசுக்கு அடிக்கிறார்கள்.அவர்கள் உடனேயே நிபந்தனையின்றி விடுவிக்கப்படுகிறார்கள்.

இவை எதுவுமே நடக்கவில்லை என்று சொல்லவில்லை. ஆனால், இப்போது நியூ யோர்க்கில் அதிகரித்து விட்ட பதிவு செய்யாத குடியேறிகளால் தான் இவை நடக்கின்றன என்பது தரவுகளால் நிறுவப் படாத ஒரு கற்பிதம் என்றே சொல்கிறேன்.

பெரிய நகரங்கள் - சான் பிரான், பிலாடெல்பியா, பொஸ்ரன், LA இவற்றில் எல்லாம் இப்படியான குற்றங்கள் எப்போதும் நடந்தே வந்திருக்கின்றன. உள்ளூர் செய்திகளில் மட்டும் வரும், யாரும் கவனிப்பதில்லை.

ஆனால், இப்போது சந்தேக நபர்கள் பதிவு செய்யாத குடியேறிகள் என்றதும், இதை பல யூ ரியூப் வழி செய்தி ஊடகங்களில் நாடு முழுவதும் பகிர்கிறார்கள். இந்தப் பகிர்வின் பின்னால் இருக்கும் எதிர் பார்ப்பு எல்லா வன்முறைக் குற்றங்களையும் கடுமையாக தண்டிக்க வேண்டுமென்பதை விட, பதிவு செய்யாத குடியேறி என்றால் கொஞ்சம் அதிகமாகத் தண்டிக்க வேண்டுமென்பதாக இருக்கிறது. இந்த எதிர்ப் பார்ப்பில் உணர்வு ரீதியான நியாயம் இருந்தாலும், சட்ட ரீதியில் அமெரிக்காவில் இது சாத்தியமில்லை- இப்படி குற்றம் சாட்டப் பட்டவரின் குடிவரவு நிலை, இனம் என்பன பார்த்து சட்டம் பாய ஆரம்பித்தால் விரைவில் நியூயோர்க் போர்க்கால கொழும்பு போல மாறி விடும்.

பிணை (bail) என்பது அமெரிக்காவில் இன்னும் நீதிபதியின் தெரிவாக (discretion) பெரும்பாலும் இருக்கும் ஒரு முடிவு. இப்படியான simple assault கேஸ்களுக்கு பிணையில்லாமல் வெளியே விடும் இளகிய நடைமுறை பெருந் தொற்றுக் காலத்தில் நியூ யோர்க்கில் கொண்டு வரப் பட்டது. பதிவு செய்யாத குடியேறிகளுக்கு இதை இறுக்கமாக்க வேண்டுமென்ற எதிர்பார்ப்பு பலரிடம் இருக்கிறது.

ஆனால், இவர்களைப் பிணையில்லாமல் வெளியே விட்ட நீதிபதியின் செயல் இனி மீளாய்வுக்குள்ளாகும். ஏன்? குற்றமொன்றில் சந்தேக நபரான ஒரு குடியேறியை, ஒரு குறிப்பிட்ட காலம் தடுப்புக் காவலில் வைத்து விட்டு, உள்ளூர் ICE இற்கு அறிவித்து குடிவரவுச் சட்டப் படி நடவடிக்கை எடுக்க அனுமதிப்பது தான் வழமையாக நடப்பது. இனி நீதிபதிகள் விழித்துக் கொள்வர் என நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, நீர்வேலியான் said:

நானும் அப்பிடித்தான் நினைத்தேன்,இந்த சிவப்புகட்சிகாரர்களின் பிரச்சாரம் உண்மையிலேயே நாளுக்கு நாள் தரம் தாழ்ந்துகொண்டு போகிறது. குடியேற்றகாரர்கள் நீண்ட காலமாக வந்துகொண்டுத்தான் இருக்கிறார்கள்,  எனக்கு பெரிதாக வித்தியாசம் தெரிந்ததில்லை. ஆனால் homeless பிரச்சனை இங்கு, முக்கியமாக லாஸ் ஏஞ்சல்ஸ்இல் அதிகரித்து கொண்டு செல்கிறது, இதில் குடியேறிகளின் பங்கு பெரிதாக இல்லை.

இது 2015 இல் ட்ரம்ப் முதன் முதலில் தேர்தல் அரசியலில் நுழைந்த போதே ஆரம்பித்து, தோல்வியடைந்த ஒரு முயற்சியின் தொடர்ச்சி. அந்த நேரம், கலிபோர்னியாவிலும், ஐயோவாவிலும் பதிவு செய்யாத குடியேறிகளால் இரு கொலைகள் நடந்தன (ஆனால் மண்ணின் மைந்தர்களால் பல மடங்கு எண்ணிக்கையான கொலைகள் நடந்தன).

ட்ரம்ப் அணி இந்த இரு  கொலைகளை மீள மீள நினைவுறுத்திக் கொண்டே இருந்தது. 2016 இல் ட்ரம்ப் வென்ற பின்னர் VICE என்ற ஒரு திட்டத்தை ஆரம்பித்தனர். இதன் விரிவு: Victims of Immigrant Crime Engagement. சட்ட விரோத, சட்ட ரீதியான குடியேறிகளால் அமெரிக்க பிரஜைகள் மீது மேற்கொள்ளப் படும் குற்றங்களை தொகுத்து, குடியேறிகளால் அமெரிக்கருக்கு ஆபத்து என்று ஒரு கற்பிதத்தை ஏற்படுத்துவதே நோக்கம்.

VICE ஆரம்பித்து 2 வருடங்கள் முக்கியும் கூட  பெரும் எண்ணிக்கையான பாதிக்கப் பட்டோரைத் திரட்ட இயலவில்லை. இதன் பிரதான காரணம், குடியேறிகளால் அமெரிக்காவில் நிகழும் வன்முறைக் குற்றங்கள் மிக மிகக் குறைவு. ஐயோவாவில் குடியேறியால் கொலை செய்யப் பட்ட பெண்ணின் பெற்றோர் கூட VICE திட்டத்திற்கு ஒத்துழைக்க முன்வரவில்லை. "பலியான என் மகள் இதை ஆதரிக்க மாட்டாள்" என்று தந்தை சொல்லியிருந்தார்.

இறுதியில் VICE செயலிழந்து மறைந்து போனது. இப்போது மீளவும், மேலே இருக்கும் பிரபலமான ஓரிரு சம்பவங்களை வைத்து பிரச்சாரம் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

அப்பிடிதான் இங்கையும் ப்ராம்ப்டன் இல் சும்மா சும்மா அடிக்கிறார்கள், அதை பறிக்கிறார்கள் இதை பறிக்கிறார்கள், கார் களவு எடுக்கிறார்கள், வீடு உடைக்கிறார்கள் என்று பொய் பிரச்சாரம் செய்கிறார்கள்.

1 hour ago, Sabesh said:

அப்பிடிதான் இங்கையும் ப்ராம்ப்டன் இல் சும்மா சும்மா அடிக்கிறார்கள், அதை பறிக்கிறார்கள் இதை பறிக்கிறார்கள், கார் களவு எடுக்கிறார்கள், வீடு உடைக்கிறார்கள் என்று பொய் பிரச்சாரம் செய்கிறார்கள்.

எனக்கு New York பற்றி தெரியாது ஆனால் பிரம்டன் பற்றி சொல்வதில் அநேகமானவை உண்மை தானே? நானே அனுபவப் பட்டுள்ளேன். Walmart போன்ற இடங்களில் வாகனத்தை வாகன பதிப்பிடத்தில் நிறுத்திவிட்டு வெளியே எடுப்பது என்பதே கடும் சிரமம். அத்துடன் மிக மோசமாக வாகனத்தை செலுத்தும் சாரதிகளை அங்கு தவிர வேறு எங்கும் நான் காணவில்லை. 

இங்கு அநேகமாகன வீடுகளிலும் ஆக குறைந்தது 10 பேராவது வாடகைக்கு இருப்பர். 

ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு பெரும் திருட்டு அல்லது சூட்டுச் சம்பவம் நிகழ்கிறது. ஒப்பீட்டளவில் அங்குள்ள பஞ்சாபி இனத்தவர்களே இவற்றில் ஈடுபடுகின்றனர்.

Common sense என்பது என்னவென்று தெரியாதவர்கள் பெருமளவு அங்குள்ளனர்.

என் நான்கு நண்பர்கள் குடும்பம் தொடர்ந்து அங்கிருக்க பயத்தில் விற்பி யிற்கு நகர்ந்துள்ளனர்.

  • கருத்துக்கள உறவுகள்

பிரான்சிலும் இதே நிலை தான். அதிலும் ரோமேனியர்கள் வந்த பின்னர். அதனால் தான் வெளியே போனால் படங்களை பகிர்வதில் லை. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, நிழலி said:

எனக்கு New York பற்றி தெரியாது

நியூயோர்க்கில் ஏற்கனவே களவு கொலை என்று ஈடுபட்டவர்கள் குடியேறிகளை வைத்து வழிப்பறி களவு கொள்ளையில் ஈடுபட்டுள்ளார்கள்.

இதற்கு முக்கிய காரணம் குடியேறிகள் பிடிபடும் போது எதுவித பிரச்சனையும் இல்லாமல் வெளியே விடுகிறார்கள்.

எல்லோர் கைகளிலும் கைபேசி உள்ளதால் உடனுக்குடன் மற்றவர்களுக்கும் இப்படி இப்படி செய்யலாம் இந்த இந்த இடங்களுக்கு உடனே வாங்கோ என்று குறுந் தகவல்கள் அனுப்புகிறார்கள்.(பொலிஸ் சார்பில் வந்த செய்தி)

IMG-6445-Original.jpg

மேலே உள்ள படத்தைப் பாருங்கள்.

தமிழ் டாக்ரர் குடும்பம் ஒன்றின் பின்பக்க யன்னலை உடைத்து அகப்பட்டதை சுருட்டிக் கொண்டு ஓடுகிறார்கள்.

IMG-2296.pngIMG-2297.jpg

இது இரண்டு தெரு தள்ளி நேற்று பகல் நடந்தது.

இருவர் வந்து அகப்பட்டதை சுருட்டிக் கொண்டு ஓடுகிறார்கள்.

வீடியோவாக இருப்பதால் இணைக்க முடியவில்லை.

இதைச் சொன்னால் கதை பரப்புவதாக சொல்கிறார்கள்.

நியூயோர்க்கில் தெரிந்தவர்கள் உறவினர்கள் யாராவது இருப்பார்கள் தானே?

தாராளமாக விசாரிக்கலாமே?

25 minutes ago, விசுகு said:

பிரான்சிலும் இதே நிலை தான். அதிலும் ரோமேனியர்கள் வந்த பின்னர். அதனால் தான் வெளியே போனால் படங்களை பகிர்வதில் லை. 

உங்களையும் பொய்பிரசாரம் செய்வதாக சொல்லப் போகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, ஈழப்பிரியன் said:

உங்களையும் பொய்பிரசாரம் செய்வதாக சொல்லப் போகிறார்கள்.

குளிர்காலம் தொடங்கி விட்டால் எழுப்புவது கடினம். சட்டமும் அவர்களுக்கு சார்பாக இருக்கும். அதிலும் பிள்ளைகள் உள்ளவர்கள் பிள்ளைத்தாச்சிகள் இருந்தால் கதை கந்தல். 

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, ஈழப்பிரியன் said:

நியூயோர்க்கில் ஏற்கனவே களவு கொலை என்று ஈடுபட்டவர்கள் குடியேறிகளை வைத்து வழிப்பறி களவு கொள்ளையில் ஈடுபட்டுள்ளார்கள்.

இதற்கு முக்கிய காரணம் குடியேறிகள் பிடிபடும் போது எதுவித பிரச்சனையும் இல்லாமல் வெளியே விடுகிறார்கள்.

எல்லோர் கைகளிலும் கைபேசி உள்ளதால் உடனுக்குடன் மற்றவர்களுக்கும் இப்படி இப்படி செய்யலாம் இந்த இந்த இடங்களுக்கு உடனே வாங்கோ என்று குறுந் தகவல்கள் அனுப்புகிறார்கள்.(பொலிஸ் சார்பில் வந்த செய்தி)

IMG-6445-Original.jpg

மேலே உள்ள படத்தைப் பாருங்கள்.

தமிழ் டாக்ரர் குடும்பம் ஒன்றின் பின்பக்க யன்னலை உடைத்து அகப்பட்டதை சுருட்டிக் கொண்டு ஓடுகிறார்கள்.

IMG-2296.pngIMG-2297.jpg

இது இரண்டு தெரு தள்ளி நேற்று பகல் நடந்தது.

இருவர் வந்து அகப்பட்டதை சுருட்டிக் கொண்டு ஓடுகிறார்கள்.

வீடியோவாக இருப்பதால் இணைக்க முடியவில்லை.

இதைச் சொன்னால் கதை பரப்புவதாக சொல்கிறார்கள்.

நியூயோர்க்கில் தெரிந்தவர்கள் உறவினர்கள் யாராவது இருப்பார்கள் தானே?

தாராளமாக விசாரிக்கலாமே?

உங்களையும் பொய்பிரசாரம் செய்வதாக சொல்லப் போகிறார்கள்.

நீங்கள் சில கருத்துக்களை தவறாக விளங்கிக் கொண்டிருக்கிறீர்கள். 

இந்த பதிவு செய்யாத குடியேறிகள் வீட்டை உடைப்பது, வழிப்பறி செய்வது அதிகரித்து விட்டது என்ற தகவலை எங்கே எடுத்தீர்கள்?

இது சமூக வலை ஊடகங்களில் வரும் தகவல்கள் என நம்புகிறேன். இதைக் காவல் துறை சொல்லியிருக்க முடியாது. ஏன்? நியூயோர்க் நகர அல்லது மாநில காவல் துறை, ஒரு சந்தேக நபரைக் கைது செய்தால் கூட  அவரது குடிவரவு நிலை என்னவென்று கேட்க முடியாது. பொலிசுக்கே இது தெரியாத போது எப்படி அவர்கள் இது பதிவு செய்யாத குடியேறிகள் என்று வெளியே சொல்ல முடியும்?

எனவே தான் இது இரண்டு சம்பந்தமில்லாத போக்குகளை கற்பனையாக முடிச்சுப் போடும் செயல் என சந்தேகிக்கிறேன்:

1. நியூ யோர்க்கில் பதிவு செய்யாத குடியேறிகளின் வருகை அதிகரித்தது.

2. வழிப் பறி , வீடுடைப்பு குற்றங்கள் (இவை எண்ணிக்கையில் அதிகரித்தனவா என்பது கூட இது வரை தெரியவில்லை).

இந்த இரு போக்குகளையும் வைத்து, 1 நிகழ்ந்ததால் 2 நிகழ்ந்தது என்று சொல்ல இயலுமா? 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Justin said:

இந்த பதிவு செய்யாத குடியேறிகள் வீட்டை உடைப்பது, வழிப்பறி செய்வது அதிகரித்து விட்டது என்ற தகவலை எங்கே எடுத்தீர்கள்?

அண்மையில் ஸ்கூட்டரில் ஓடிஓடி செல்போன் கான்பாக் போன்றவற்றை உருவிக் கொண்டு ஓடினார்கள்.பொலிசாரின் விசாரணையில் வெனிசூலாவை சேர்ந்த இங்கு ஏற்கனவே குடியிருப்பவர் இவர்கள் பலரை வைத்து தினம்தினம் வேறுவேறு இடங்களில் தொழிலைக் காட்டியுள்ளனர்.

நான் சொல்ல வருவது குற்றம் செய்பவர்களுக்கு தண்டனை கொடுத்தால் இதை நிற்பாட்டலாம்.

சென்ற கிழமை நியூயோர்க் பொலிஸ் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

பிரபல கேடியை நிபந்தனை இன்றி வெளியில் நடமாட விடுவதே.

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, ஈழப்பிரியன் said:

அண்மையில் ஸ்கூட்டரில் ஓடிஓடி செல்போன் கான்பாக் போன்றவற்றை உருவிக் கொண்டு ஓடினார்கள்.பொலிசாரின் விசாரணையில் வெனிசூலாவை சேர்ந்த இங்கு ஏற்கனவே குடியிருப்பவர் இவர்கள் பலரை வைத்து தினம்தினம் வேறுவேறு இடங்களில் தொழிலைக் காட்டியுள்ளனர்.

நான் சொல்ல வருவது குற்றம் செய்பவர்களுக்கு தண்டனை கொடுத்தால் இதை நிற்பாட்டலாம்.

சென்ற கிழமை நியூயோர்க் பொலிஸ் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

பிரபல கேடியை நிபந்தனை இன்றி வெளியில் நடமாட விடுவதே.

இதற்கும் நியூ யோர்க் நோக்கி வரும் பதிவில்லா குடியேறிகளுக்கும் தொடர்பில்லை என்பதற்கான ஆதாரங்கள் அல்லவா இவை? முதலே இங்கு வசிக்கிற ஒருவர் (அவர் சட்ட ரீதியாக இருந்தாரா தெரியாது) செய்ததும், ஏற்கனவே 4 தரம் கைதாகி வெளியில் விடப் பட்ட ஒருவர் பொலிசைக் கொன்றிருப்பதும் சீரியசான குற்றங்கள்.

ஆனால், அதைத் தாண்டி இந்தக் குற்றங்களை பதிவில்லா குடியேறிகளின் மீது போட்டு விடும் முயற்சி உள் நோக்கம் கொண்டது. சொல்லப் போனால், உண்மையாக உள்ளே போட வேண்டிய மண்ணின் மைந்தர்களை விட்டு விட்டு குடியேறிகளை கண்காணிக்க அதிக பொலிஸ் வளங்களைச் செலவழித்தால் அது இன்னும் வாய்ப்பாக அல்லவா போகும் உண்மையான கிரிமினல்களுக்கு? 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Justin said:

இதற்கும் நியூ யோர்க் நோக்கி வரும் பதிவில்லா குடியேறிகளுக்கும் தொடர்பில்லை என்பதற்கான ஆதாரங்கள் அல்லவா இவை? முதலே இங்கு வசிக்கிற ஒருவர் (அவர் சட்ட ரீதியாக இருந்தாரா தெரியாது) செய்ததும், ஏற்கனவே 4 தரம் கைதாகி வெளியில் விடப் பட்ட ஒருவர் பொலிசைக் கொன்றிருப்பதும் சீரியசான குற்றங்கள்.

பதிவில்லா குடியேறிகளை வைத்து இவர்கள் சுலபமாக செய்விப்பது ஏனென்றால் பிடிபட்டால் எதுவித பிரச்சனையும் இல்லாமல் வெளியே விடுகிறார்கள் என்பதால்.

இருபகுதியினருக்கும் சுலபமாக பணம் வருகிறது.

நானும் இந்த குடியேறிகளை மிகவும் ஆதரிக்கிறேன்.இன்னமும் வரட்டும்.
ஆனால் சட்டத்தை மதியுங்கள்.

சிற்றியும் இன்னமும் பொலிசை கட்டுப்படுத்துவது ஏன் என்று தெரியவில்லை.

இறந்த பொலிசின் மரண வீட்டுக்கு சென்ற நியூயோர்க் மேயர் உட்பட பலரை கரைச்சல் கொடுத்துள்ளனர்.

சந்தடி சாக்கில் உள்ளே வந்த டெனாட் ரம் நல்ல பெயர் வாங்கி சென்றுள்ளார்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.