Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
On 15/4/2024 at 20:54, பெருமாள் said:

அண்மைய நாட்களில் வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் பாரிய அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

குறிப்பாக, போக்குவரத்து மற்றும் உணவுப் பெற்றுக்கொள்ளுதல் போன்றவற்றில் பாரிய சிரமங்களுக்கு சுற்றுலாப் பயணிகள் முகம்கொடுத்து வருகின்றனர்.

குறுந்தூர பயணங்களுக்கு வாகன சாரதிகள் அதிக பணம் அறவிடுதல், உடமைகளைக் கொள்ளையடித்தல் சேவைக் கட்டணங்கள் மற்றும் விலைகளை அதிகரித்தல் போன்ற முகம் சுழிக்க வைக்கும் செயற்பாடுகளை சுற்றுலாப் பயணிகள் எதிர்கொள்கின்றனர்.

அண்மையில், சைவ உணவகம் ஒன்றுக்குச் சென்ற ஜேர்மனிய பிரஜைக்கு ஒரு வடை 800 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டது.

இது தொடர்பில் குறித்த பயணி காணொளி மூலமாக தனது அதிருப்தியை வெளியிட்டிருந்தார். இந்த நிலையில், இது போன்ற மீண்டும் ஒரு இது போன்ற சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இலங்கைக்கு வருகைத் தந்துள்ள ஒரு பயணி உணவு உண்பதற்காக வீதியோரக் கடை ஒன்றில் விலை விசாரித்த போது அங்கு சொல்லப்பட்ட விலையைக் கேட்டு அதே இடத்தில் வெளிப்படையாகவே தனது அதிர்ச்சியை வெளியிட்டுள்ளார்.

ஒரு கொத்து ரொட்டியின் விலை 1900 ரூபா என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைக் கேட்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணி விலையைக் கேட்டு அதிர்ச்சியடைந்த நிலையில், குறித்த கடையின் உரிமையாளர் விரும்பினால் வாங்குங்கள் இல்லை என்றால் சென்று விடுங்கள் என்று கடும் தொணியில் தெரிவித்துள்ளார்.

இவற்றை காணொளியாக பதிவு செய்துள்ள அந்த பயணி தன்னுடைய ஆதங்கத்தை வெளியிட்டுள்ளார்.

குறிப்பாக, பொருளாதார நெருக்கடியால் சிக்கித் தவித்த இலங்கை மீளெழுவதற்கான பிரதான இலக்கு அண்ணியசெலாவணியை ஈட்டுவதாகும்.

சுற்றுலாப் பயணிகள் மூலமாக அதிகமான வெளிநாட்டு வருமானம் கிடைக்கின்ற நிலையில், இவ்வாறான முகம் சுழிக்க வைக்கும், சுற்றுலாப் பயணிகளை அசௌகரியத்திற்கு உள்ளாக்கும் விடயங்கள் எமது நாட்டின் வருமானத்தையும் பாதிக்கின்றது.

அத்துடன், இப்போதைய டிஜிட்டல் மயமான காலத்தில் நாட்டுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தங்களது சமூக வலைத்தளங்களில் தங்களது சுற்றுலா அனுபவங்களை நேரலையாக பகிர்ந்து கொள்ளும் போது இது போன்ற மோசடி நடவடிக்கைகள் நம் நாட்டின் மீதான நன் மதிப்பையும் பாதிக்கின்றன.

சுற்றுலாவுக்காக நமது நாட்டை நோக்கி வருகின்றவர்கள், எமது கலாசாரத்தையும், உணவு பழக்க வழக்கங்களையும், எமது பண்பாடையும் கற்றுக் கொள்ளவும், அனுபவத்தைப் பெற்றுக் கொள்ளவும் வருகின்றார்களேத் தவிர இவ்வாறான இக்கட்டான சூழ்நிலைகளை அல்ல...  

https://tamilwin.com/article/sri-lanka-tourism-1713179824?itm_source=parsely-detail

பெருமாள் அண்ணா உந்த‌ வ‌டை ச‌ம்ப‌வ‌ம் இது ந‌ட‌ந்து ஒரு வ‌ருட‌த்துக்கு மேல‌
அந்த‌ காணொளிய‌ பார்த்த‌தும் உண்மையில் என‌க்கு க‌வ‌லை வ‌ந்த‌து..............ஒரு வடை ப‌ச்சை ச‌ட்டினி கொடுத்து 800ரூபாய் வேண்டின‌வ‌ர்

அந்த‌ வ‌ழியால் வ‌ந்த‌ சிங்க‌ள‌ பெண்னிட‌ம் வெள்ளைக் கார‌ன் கேக்கிறார்  இந்த‌ உண‌வு என்ன‌ விலை என்று சிங்க‌ள‌ பெண் சொல்லுறா 150ரூபாய்க்கு உள்ள‌ என்று...................க‌டைக் கார‌ன் செய்த‌து ப‌ச்சை துரோக‌ம் அண்ணா....................மோச‌டி செய்வ‌தில் சிங்க‌ள‌வ‌ர்க‌ள் வ‌ல்ல‌வ‌ர்க‌ள்..................................

15 minutes ago, goshan_che said:

பதிலுக்கு நன்றி. 

இது பழைய மேட்டரா? 

சிறிதரன் எம்பி ட மச்சாண்ட தானே பதிவு? அவர்ட பொட்டுகேட்ட மறைக்க பழைய செய்தியை எல்லாம் மீள் சுழற்சி செய்யினம் போல?

————

என்ன @பெருமாள் நித்திரைபாயால எழும்பி “இலங்கை பற்றிய மோசமான செய்திகள்” என கூகிள் பண்ணி, அவற்றை இங்கே வெட்டி ஒட்டி போட்டுத்தான் - பல்லு தீட்டுறனியள் தெரியும்.

ஆனால் இப்படி அதர பழைய நியூசையுமா, ரிசைக்கிள் பண்ணுவீங்க?

(நீங்கள் சுமந்திரனை எதிர்ப்பது, சிறிததரனுக்கு ஆதரவாகவா? சந்தேகம் மட்டுமே.).

இதில் ஏன் பெருமாள் அண்ணாவை குற்ற‌ம் சாட்டுறீங்க‌ள் ச‌கோ

அவ‌ர் ஊட‌க‌த்தில் வ‌ந்த‌தை யாழில் இணைத்தார்....................இதில் அர‌சிய‌ல் உள் குத்து இருப்ப‌தாக‌ என‌க்கு தெரிய‌ வில்லை😏............................

Edited by பையன்26

  • Replies 138
  • Views 10.3k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • goshan_che
    goshan_che

    இதுக்கெல்லாம் ஏன் இப்படி வளைஞ்சு முட்டு கொடுக்க வேண்டும். உலகில் எந்த நாட்டில் தான் களவு இல்லை. அதுவும் டூரிஸ்ட் போகும் நாடுகளில் - இலண்டனில் இல்லாத களவா? திப்பு சுல்தானின் வாளை களவெடுத்து,

  • நிழலி
    நிழலி

    நான் இவ்வாறான, வெளி நாட்டவர்களின் காணொளிகளுக்கு வழக்கமாக இடும் பின்னூட்டம், "ஒரு பெரும் இனப்படுகொலையை, தடை செய்யப்பட்ட பொஸ்பரஸ் குண்டுகளை பாவித்து போர் நடாத்திய ஒரு அரசிடம் இருந்து, சிங்கள இனத்திலும்

  • ஏராளன்
    ஏராளன்

    இடத்தை தனிமடலில் போடுங்கோ, தெரிஞ்ச பொதுச் சுகாதார பரிசோதகர்கள் காதில போட்டுவிடுவம்.

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, பையன்26 said:

இதில் ஏன் பெருமாள் அண்ணாவை குற்ற‌ம் சாட்டுறீங்க‌ள் ச‌கோ

அவ‌ர் ஊட‌க‌த்தில் வ‌ந்த‌தை யாழில் இணைத்தார்....................இதில் அர‌சிய‌ல் உள் குத்து இருப்ப‌தாக‌ என‌க்கு தெரிய‌ வில்லை😏............................

இது வெறும் சந்தேகமே….தனியே இது மட்டும் அல்ல….மேலும் சில சந்தர்ப சாட்சியங்களும், circumstantial evidence இருக்கிறது….இது நீண்ட நாளாக அவதானித்து வந்த ஒரு விடயம்தான்.

ஆனால் குற்றசாட்டு இல்லை. சந்தேகம் மட்டுமே.

பார்ப்போம்….பெருமாள் என்ன சொல்கிறார் என.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

அந்த முஸ்லீம் கடைக்காரர், அல்லா பாத்துக் கொண்டிருக்கிறான் என்று சொல்லித்தான் 1350 கொத்து ரொட்டியை, 1900 ருபாய்க்கு  விற்க முயற்சி பண்ணினவர்.

Edited 6 hours ago by தமிழ் சிறி

சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றும் இலங்கையர்கள்! கடை உரிமையாளர் ஒருவரின் திமிர் பேச்சு

Sri Lanka Economic CrisisSri Lanka TourismSri Lankan PeoplesTourism
 2 days ago
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

இந்த செய்தியில் ஆரம்பம் முதலே என்னை யோசிக்க வைத்த விடயம் இது.

அந்த வீடியோ வாட்சப்பில் உள்ளது. தோற்றத்தை பார்த்தால் சைவக் கடைதான் சந்தேகமே இல்லை

பரிமாறும் பெண்ணை பார்த்தால் சிங்களவராக தெரிகிறது.

ஒரு ஆளும், உரிமையாளரும் சேர்ந்து ஏமாற்றுகிறனர். இருவரை பார்த்து இனம் அறிய கடினமாக இருக்கிறது. ஆனால் ஏமாற்று ஆள் தன்னை பெளத்தர் என்கிறார்.

ஆனால் சைவக்கடை சிங்களவர் நடத்தி நான் கேள்விபட்டதில்லை.

வேறு யாரும் கேள்விபட்டதுண்டா? @நிழலி @விசுகு @colomban

பெருமாள் பிள்ளையார் பிடித்தால், அது குரங்காகியே தீரும் என்பது விதி.

இங்கேயும் கள்ளர்கள் இருவரும் அல்லது ஒருவராவது தமிழர் என முடியப்போது போல இருக்கே ?

அப்புறம்….

# அசிங்கப்பட்டான் ஆட்டோகாரன் என்றாகிவிடும்.

நான் அறிந்த வரையில் சைவ உணவகம் தமிழர்களால் நடாத்தப்படுபவை தான். ஈழ மற்றும் இந்திய தமிழர்கள். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, goshan_che said:

இலங்கை உண்மையிலே கொலைகளமாக இருந்த போதே சுற்றுலா போன வெள்ளைகள் பல கோடி.

எனவே இப்படி செய்வது பெரிய தாக்கத்தை தராவிடினும் - ஒரு செய்தியையாவது சொல்லும்.

ஆனால் இப்படியா சுத்துமாத்தோடு வாழ்ந்து வளர்ந்த எமக்கே இதை வைத்து பிம்பம் எழுப்ப முனைவது பேதமை.

ஈழத்தமிழரின் ஆயுத போராட்டத்தை பயங்கரவாதிகளின் போராட்டம் அல்லது தீவிரவாதிகளின் போராட்டம் என்றே வெளியுலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டது. அதற்கிணைய வடகிழக்கு தமிழர் பிரதேசங்கள் யுத்த வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டது. 
அந்த நேரத்தில் வெளிநாட்டு உல்லாச பயணிகள் அங்கு செல்ல அனுமதிக்கப்பட்டார்களா? சில வேளை சுற்றுலா பயணிகளையும் யுத்தம் நடந்து கொண்டிருக்கும் பகுதிகளுக்கு செல்ல அனுமதித்திருந்தால் படங்களும் காணொளிகளும் வெளியுலகிற்கு வந்திருக்கலாம்.

வன்னியில் யுத்தம் நடந்துகொண்டிருக்கும் போது மட்டக்களப்பு மற்றும் வடபகுதிகளுக்கு எந்தவொரு அசுமாத்தமும் தெரியவில்லை என்பது வேறு விடயம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, goshan_che said:

இதெல்லாம் சப்பை மேட்டர்.

நீங்கள் சொல்லும் சப்பை மேட்டருக்காகவா கொழும்பு நீதிமன்றம் சம்பந்தப்பட்ட விற்பனையாளருக்கு  ஐம்பதாயிரம் ரூபாய் ரொக்க பிணையும்  பத்து லட்சம் ரூபாய் சரீர பிணையும் கொடுத்து விடுதலை செய்துள்ளது? 🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, goshan_che said:

நக்கலாக இல்லை….தகவலுக்காகவே கேட்கிறேன். 

நீங்கள் கடைசியாக ஊர் போனது எப்போ?

நீங்கள் ஊருக்கு போனததால்த் தான் உண்மை நிலவரங்கள், நீங்கள் சொல்வதெல்லாம் உண்மையென்றால்......😂

இங்கே யாழ்களத்தில் உக்ரேன் திரிகளிலும், ஈரான் சம்பந்தப்பட்ட திரிகளிலும் நீங்கள் சொல்லும் கருத்துக்கள் மற்றும்  தகவல்கள் களத்தில் நின்று சேகரிக்கப்பட்டதா?🤣.....🤣.....🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, goshan_che said:

என்ன @பெருமாள் நித்திரைபாயால எழும்பி “இலங்கை பற்றிய மோசமான செய்திகள்” என கூகிள் பண்ணி, அவற்றை இங்கே வெட்டி ஒட்டி போட்டுத்தான் - பல்லு தீட்டுறனியள் தெரியும்.

ஆனால் இப்படி அதர பழைய நியூசையுமா, ரிசைக்கிள் பண்ணுவீங்க?

(நீங்கள் சுமந்திரனை எதிர்ப்பது, சிறிததரனுக்கு ஆதரவாகவா? சந்தேகம் மட்டுமே.).

அரைகுறையா எந்த விடயத்தையும் தூக்கி பிடித்து கொண்டு ஆடி காலை உடைப்பது உங்கள் வழமையான தொன்று முதலில் யாழில் எப்படி ஒரு செய்தியை இணைப்பது என்பதை புரிந்துகொள்ளுங்க உங்களுக்கு அது பற்றி தெரியாது எப்ப பார்த்தாலும் பழம் சீலை  கிழிந்தது போல் மல்லுக்கு மல்லு பல்லுக்கு பல்லு  அதுவும் இல்லையா உபரி அவதர்களில் உங்களுக்கு நீங்களே யாழ்ரா அடிப்பது அதை விடுங்க சொல்ல வந்த விடயம் எங்கிருந்து அந்த இணைப்பு எடுக்கப்பட்டது அந்த செய்தி எப்போது வந்தது என்பதுவா உங்களுக்கு தெரிவதில்லை தெரியவில்லை என்றால் கேட்டு அறிந்து கொள்ளுங்க சக கருத்தாளர்களிடம் .கீழே இந்த திரிக்கான இணைப்பு லிங்க் தந்துள்ளேன் பார்த்து அறிந்து கொண்டு உங்கள் நக்கல் நளினம்களை நிறுத்தி கொள்ளுங்க .

https://tamilwin.com/article/sri-lanka-tourism-1713179824?itm_source=parsely-detail

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, பெருமாள் said:

இணைப்பு முதல் பதிவில் போட்டுள்ளீர்கள்.

என் கேள்வி அதுவல்ல.

இந்த பழைய செய்தியை, அண்மைய செய்தி என ஏன் தமிழ்வின்னும் நீங்களும் பரப்புகிறீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
On 17/4/2024 at 04:15, goshan_che said:

சுய அனுபவம்.

இலண்டனில், பரிசில் ஒரு கணிசமான விலையுள்ள பொருளை, பையை கண்ணுக்கு புலப்படும் வகையில் காரில் விட்டு நாம் யாரும் காரை பார்க் செய்வதில்லை. ஒன்றில் கையோடு எடுத்துப்போவோம் அல்லது டிக்கியில் பூட்டுவோம்.

கொழும்பில் சர்வசாதாரணமாக காரில் இவற்றை விட்டு போகிறார்கள்.

நீங்களுமா விட்டுபோனீர்கள்? சந்தேகமாக இருக்கிறது! திறைசேரியில் பல அடுக்கு பாதுகாப்போடு இருந்ததையே காணேலையாமே? சொல்லக்கேள்வி! 

23 hours ago, goshan_che said:

சரி விடுங்கோ…இலங்கையில் போய் இறங்கின உடன என்னை எல்லாத்தையும் உருவி போட்டு அம்மணாய் ஓட விட்டார்கள்…

அவர்கள் அம்மணமாய் திரிந்தாலும் உருவுவதை தகுதி பார்த்தே உருவுவார்கள். நம்மைப்பாத்தா ஏதாவது போடுவமா என்று யோசிப்பார்கள்  அல்லது விலகிப்போவார்கள். அப்படி ஒரு செற்றப் நம்மளது. விமானத்திலேயே அதிக பொதிகளை எப்படி குறைந்த கட்டணத்தில்  தள்ளுவது என யோசனை பண்ணி பொதி செய்து பயணம் செய்பவர்களல்லவா நாம்! இதில அவர்கள் என்னத்தை உருவுவது நம்மளிடம்? ஏமாற்றுபவர்களுக்கு தெரியும் யாரை இலகுவாக ஏமாற்றலாமென்பது. அதிலும் அவர்கள் கஸ்ரப்பட விரும்புவதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, satan said:

திறைசேரியில் பல அடுக்கு பாதுகாப்போடு இருந்ததையே காணேலையாமே?

அது திருடன் கையில் திறப்பை கொடுத்த கதை. காணாமல் போகாவிட்டால்தான் ஆச்சரியம். அதிகாரவர்கம் திருடர்களே என்பதில் மாற்று கருத்தில்லை.

7 hours ago, satan said:

அவர்கள் அம்மணமாய் திரிந்தாலும் உருவுவதை தகுதி பார்த்தே உருவுவார்கள். நம்மைப்பாத்தா ஏதாவது போடுவமா என்று யோசிப்பார்கள்  அல்லது விலகிப்போவார்கள். அப்படி ஒரு செற்றப் நம்மளது. விமானத்திலேயே அதிக பொதிகளை எப்படி குறைந்த கட்டணத்தில்  தள்ளுவது என யோசனை பண்ணி பொதி செய்து பயணம் செய்பவர்களல்லவா நாம்! இதில அவர்கள் என்னத்தை உருவுவது நம்மளிடம்? ஏமாற்றுபவர்களுக்கு தெரியும் யாரை இலகுவாக ஏமாற்றலாமென்பது. அதிலும் அவர்கள் கஸ்ரப்பட விரும்புவதில்லை.

இது மிகையல்ல. 

எந்தந்தை எனக்கு கற்றுத்தந்த முதல் பாடம் - being frugal. 
கடைசி வரை மாறாது.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விசுகு said:

நான் அறிந்த வரையில் சைவ உணவகம் தமிழர்களால் நடாத்தப்படுபவை தான். ஈழ மற்றும் இந்திய தமிழர்கள். 

நன்றி அண்ணை. எனது அறிவும் அப்படியே.

களுத்தறை கடை ஒரு சைவக்கடையாம்.

எதுக்கும் கொஞ்சம் அடக்கி வாசிப்பம்🤣.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

சிறீலங்காவில் அரசாங்கமே உள்ளூர் வாசிகளிக்கு ஓர் கட்டணம் வெளிநாட்டவர்களுக்கு ஓர் கட்டணம் என்று நிர்ணயம் செய்யும் போது இது பெரிய விடயம் அல்ல. ஆனால் காவல்துறையும் நீதிமன்றும் தலையிடுகிறது என்றால் விடயம் சற்று பாரதூரமானது.

ஆனால் பிரித்தானியாவில் நீங்கள் பின்லாந்துக்காரான் என்றாலும் பிரித்தானியக்காரன் என்றாலும் கட்டணம் ஒன்றே!

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

ஈழத்தமிழரின் ஆயுத போராட்டத்தை பயங்கரவாதிகளின் போராட்டம் அல்லது தீவிரவாதிகளின் போராட்டம் என்றே வெளியுலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டது. அதற்கிணைய வடகிழக்கு தமிழர் பிரதேசங்கள் யுத்த வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டது. 
அந்த நேரத்தில் வெளிநாட்டு உல்லாச பயணிகள் அங்கு செல்ல அனுமதிக்கப்பட்டார்களா? சில வேளை சுற்றுலா பயணிகளையும் யுத்தம் நடந்து கொண்டிருக்கும் பகுதிகளுக்கு செல்ல அனுமதித்திருந்தால் படங்களும் காணொளிகளும் வெளியுலகிற்கு வந்திருக்கலாம்.

வன்னியில் யுத்தம் நடந்துகொண்டிருக்கும் போது மட்டக்களப்பு மற்றும் வடபகுதிகளுக்கு எந்தவொரு அசுமாத்தமும் தெரியவில்லை என்பது வேறு விடயம்.

இல்லை. ஆனால் ஒரு கொடிய யுத்தம், இனவொதுக்கல் நடக்கிறது என தெரிந்தும், தெற்கு கரை பாதுகாப்பானது, மலிவானது என்பாதால், இதை எல்லாம் சட்டை செய்யாமல் வந்து போனார்கள்.

ஆகவே 2 வருடமாய் ஊசிப்போன பெருமாள்/தமிழ்வின் சுட்ட வடை இவர்கள் மனதில் அதிக பாதிப்பை தராது. வரும்போது கொஞ்சம் அதிக கவனம் எடுப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

சிக்கனமாக இருப்பது தவறல்ல, பிச்சையெடுப்பதை, மற்றவரை ஏமாற்றுவதை விட  சிக்கனமாக வாழுவது நன்றே. ஆனா ஒரு ஏமாற்றை நிஞாயப்படுத்துவதும் ஏழைகள் இப்படித்தான் வாழவேண்டும் எனும் எதிர்பார்ப்பதுந்தான் சிக்கனத்தை சந்தேகம் கொள்ளச்செய்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

@goshan_che உங்களுக்கு கடலை பிரச்சனை பெரும் பிரச்சனை போல???🤣

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

நீங்கள் சொல்லும் சப்பை மேட்டருக்காகவா கொழும்பு நீதிமன்றம் சம்பந்தப்பட்ட விற்பனையாளருக்கு  ஐம்பதாயிரம் ரூபாய் ரொக்க பிணையும்  பத்து லட்சம் ரூபாய் சரீர பிணையும் கொடுத்து விடுதலை செய்துள்ளது? 🤣

அண்ணை கொஞ்சம் யோசிக்கவும் 1000 க்கு பதிலாக, 1800 க்கு வித்தது சப்பை மேட்டர்தானே?

ஆனால் இது நீதிமன்று போவது - பிரச்சாரம்.

பார்தீர்களா நாம் எப்படி சட் சட் என கள்ளனை பிடித்து, நடவடிக்கை எடுத்தோம்? அதிதிகளை காத்தோம்!

இவர்களைதான் நாம் மோடயர் என்கிறோம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 minutes ago, MEERA said:

சிறீலங்காவில் அரசாங்கமே உள்ளூர் வாசிகளிக்கு ஓர் கட்டணம் வெளிநாட்டவர்களுக்கு ஓர் கட்டணம் என்று நிர்ணயம் செய்யும் போது இது பெரிய விடயம் அல்ல. ஆனால் காவல்துறையும் நீதிமன்றும் தலையிடுகிறது என்றால் விடயம் சற்று பாரதூரமானது.

ஆனால் பிரித்தானியாவில் நீங்கள் பின்லாந்துக்காரான் என்றாலும் பிரித்தானியக்காரன் என்றாலும் கட்டணம் ஒன்றே!

அப்படியென்றால் வெளிநாட்டாக்களுக்கான அந்த வடை வடை விலையையும் கொத்துரொட்டி விலையையும் ஆதரிக்கின்றீகள்.

8 minutes ago, goshan_che said:

இல்லை. ஆனால் ஒரு கொடிய யுத்தம், இனவொதுக்கல் நடக்கிறது என தெரிந்தும், தெற்கு கரை பாதுகாப்பானது, மலிவானது என்பாதால், இதை எல்லாம் சட்டை செய்யாமல் வந்து போனார்கள்.

வெள்ளைக்காரன் எப்பவும் தனக்கு வில்லங்கம் எண்டால் தான் கத்துவான்....இது தெரியாமலா இவ்வளவுகாலமும்....? 🤣

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, satan said:

சிக்கனமாக இருப்பது தவறல்ல, பிச்சையெடுப்பதை, மற்றவரை ஏமாற்றுவதை விட  சிக்கனமாக வாழுவது நன்றே. ஆனா ஒரு ஏமாற்றை நிஞாயப்படுத்துவதும் ஏழைகள் இப்படித்தான் வாழவேண்டும் எனும் எதிர்பார்ப்பதுந்தான் சிக்கனத்தை சந்தேகம் கொள்ளச்செய்கிறது.

இங்கே நான் ஏமாற்றை நியாப்படுத்தவில்லை. அதை களவு என்று மிக தெளிவாக கூறியுள்ளேன்.

ஏழைகள் எல்லாம் களவு செய்து வாழ வேண்டும் எனவும் சொல்லவில்லை. 

ஆனால் இந்தளவுக்கு ஊதி பெருபிக்க வேண்டிய விடயங்கள் அல்ல.

நாம் எல்லாரும் அங்கே இருந்தவர்கள்தான் - அங்கே உள்ள சுத்துமாத்துகள் எல்லாரும் அனுபவித்ததுதான் - பலர் இங்கே வந்தும் அதையே செய்கிறார்கள் - நிலமை இப்படி இருக்க - தாம் ஏதோ யேசு வீட்டின் கடைசிபிள்ளை போல் எழுதுவது - நகைப்புக்குரியது.

8 minutes ago, MEERA said:

@goshan_che உங்களுக்கு கடலை பிரச்சனை பெரும் பிரச்சனை போல???🤣

உண்மைதான் மீரா - நல்லூர் ஆதீனம் அருகில் ஒரு அம்மாவிடம் சிறுவயதில் வாங்கி சாப்பிடுவேன். அன்று முதல் விருப்ப உணவு. கெடுதல் அதிகம் இல்லை.

கொண்டு வந்ததை 3 கிழமையில் அரைத்து முடித்தாயிற்று.

இங்கே இலக்கியா அவனில் வறுப்பது, கடிக்க மா போல் வரும். ஊரில் வறுத்தது பதமாக கடிபடும். கடலை போல் இருக்கும். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Just now, goshan_che said:

ஆனால் இந்தளவுக்கு ஊதி பெருபிக்க வேண்டிய விடயங்கள் அல்ல.

வேண்டாம்.....வேண்டாம் எண்டு சொல்லிக்கொண்டு இந்த திரியை ஊதி பெருப்பிச்சது ஆரெண்டு போய் பாத்தால்.... தலை வெடிக்குது 😎
27,28 எண்டுபெரும்பான்மையாய் எழுதி  திரியையே ஊத்தி ஊதி வைச்சிருக்கிறியள்....🤣

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, goshan_che said:

நாம் எல்லாரும் அங்கே இருந்தவர்கள்தான் - அங்கே உள்ள சுத்துமாத்துகள் எல்லாரும் அனுபவித்ததுதான் - பலர் இங்கே வந்தும் அதையே செய்கிறார்கள் - நிலமை இப்படி இருக்க - தாம் ஏதோ யேசு வீட்டின் கடைசிபிள்ளை போல் எழுதுவது - நகைப்புக்குரியது.

இப்படி எல்லாவற்றையும் எடுத்துக் கொள்ளவும்  எண்ணவும் தலைப்படுவோமானால் எல்லாமே நாங்கள் அனுபவித்து பழகியவைதானே என்று நமது இழப்புகள் அழிவுகள் எல்லாம் அடிபட்டுப்போகும்,  நமக்கு நடந்தவையை பெரிது படுத்த தேவையேயில்லை என்று போய்விடும்.

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, குமாரசாமி said:

அப்படியென்றால் வெளிநாட்டாக்களுக்கான அந்த வடை வடை விலையையும் கொத்துரொட்டி விலையையும் ஆதரிக்கின்றீகள்.

நிச்சயமாக இல்லை அண்ணா. அரசாங்கமே கொள்ளயடிக்கும் போது சாதாரண மக்கள் எம்மாத்திரம்?

அதனால் தான் விலை கூட என்றாலும் நான் பொருட்களின் விலையை காட்சிப்படுத்தி விற்கும் கடைகளை நாடுவது.

நாங்கள் என்னதான் வேட்டியைக் கட்டி வெறுங்காலுடன் போனாலும் எம்மை அடையாளம் கண்டு கொள்வார்கள். 

ஏற்கனவே பலர் கூறியது போல் கடை வைத்திருக்கும் நண்பன் கூறியது …..,.

எமது தோல், வாசனைத் திரவியங்கள், கைத் தொலைபேசி & Cover, நகைகள்,

கைப்பைகள் ( உள்ளூர் கைப்பைகள் ஏதாவது ஓரிடத்தில் தேய்ந்து கறுப்பாக ஏதாவது ஒட்டி அல்லது சிப் இற்கு அண்மையாக சிறிதளவு தூசி படித்து இருக்கும்)

, உடுப்புகளின் தன்மை ( சாரமோ வேட்டியோ புதிதாக இருக்கும்) அதேபோல் காலணிகள் ( பாட்டா செருப்பு என்றாலும் புதிதாக இருக்கும்) மிக முக்கியம் Self hygiene சுய சுத்தம். இப்படி பல….

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, satan said:

இப்படி எல்லாவற்றையும் எடுத்துக் கொள்ளவும்  எண்ணவும் தலைப்படுவோமானால் எல்லாமே நாங்கள் அனுபவித்து பழகியவைதானே என்று நமது இழப்புகள் அழிவுகள் எல்லாம் அடிபட்டுப்போகும்,  நமக்கு நடந்தவையை பெரிது படுத்த தேவையேயில்லை என்று போய்விடும்.

அப்படி இல்லை. இனத்தின், போரின் இழப்பையும், வடைக்கு இரு மடங்கு விலை கொடுப்பதையும் வேறு படுத்தி பார்க்க முடியாவிடின் - பிழை எம்மில்தான்.

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, goshan_che said:

உண்மைதான் மீரா - நல்லூர் ஆதீனம் அருகில் ஒரு அம்மாவிடம் சிறுவயதில் வாங்கி சாப்பிடுவேன். அன்று முதல் விருப்ப உணவு. கெடுதல் அதிகம் இல்லை.

கொண்டு வந்ததை 3 கிழமையில் அரைத்து முடித்தாயிற்று.

இங்கே இலக்கியா அவனில் வறுப்பது, கடிக்க மா போல் வரும். ஊரில் வறுத்தது பதமாக கடிபடும். கடலை போல் இருக்கும். 

அடுத்த தடவை நீங்கள் Wembley இல் உள்ள Ganapathy cash & carry க்கு செல்லும் போது கடையின் பின் பக்கம் மரக்கறிகள் வைத்திருக்கும் Cool Room வாசலுக்கு அண்மையில் இடது பக்கமாக பல brand களில் இந்த மஞ்சள் கடலை உள்ளது. வாங்கிப் பாருங்கள்.

Edited by MEERA

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, MEERA said:

நிச்சயமாக இல்லை அண்ணா. அரசாங்கமே கொள்ளயடிக்கும் போது சாதாரண மக்கள் எம்மாத்திரம்?

அதனால் தான் விலை கூட என்றாலும் நான் பொருட்களின் விலையை காட்சிப்படுத்தி விற்கும் கடைகளை நாடுவது.

நான் இதன் மறுவளமாகவே பார்க்கிறேன்.

அங்கே மண்னெணை, முதல், மா, சகலதும் மானிய விலையில்தான் மக்களுக்கு தரப்படுகிறது.  ஏன் என்றால் அதை விட கூட விலைக்கு விற்றால் அந்த மக்களால் வாங்க முடியாது.

அதே போலவே வடையும்.

அங்கே இவற்றுக்கான விலை அந்த மக்களின் வாங்கு திறனை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது.

ஆனால் நாம் ஒரு பிரிதானியா வாங்கு திறனோடு போய், இலங்கை வாங்குதிறனுக்குரிய விலையில் பொருட்களை வாங்குவது - ஒரு வகையில் அந்த மக்களிடம் அடிக்கும் கொள்ளையே. ஆனால் எம் அந்நிய செலவாணி வரவால் அதை விட அதிகம் கொடுக்கிறோம் என்பதால் நன்மையே அதிகம்.

இது எல்லா 3ம் உலக நாட்டுக்கும் பொருந்தும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.