Jump to content

மோதல்களால் சூழ்ந்துள்ள உலகம் : மனிதநேயத்திற்கு பாதுகாப்பான புகலிடம் இந்தியா – பிரதமர் மோடி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

modi-will-also-deliver-the-keynote-addre

மோதல்களால் சூழ்ந்துள்ள உலகம் : மனிதநேயத்திற்கு பாதுகாப்பான புகலிடம் இந்தியா – பிரதமர் மோடி.

மோதல்கள் சூழ்ந்த இன்றைய உலகம், இந்தியாவிடம் இருந்து அமைதியை எதிர்பார்ப்பதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

டெல்லி பாரத மண்டபத்தில் நடைபெற்ற மகாவீர் ஜெயந்தி நிகழ்ச்சியில் நிகழ்ந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது, மனிதநேயத்திற்கு பாதுகாப்பான புகலிடமாக திகழும் இந்தியா, தமக்காக மட்டுமின்றி உலகம் முழுமைக்கும் சிந்திப்பதாக கூறினார்.

மேலும் தற்போது நிலவும் பிரச்சனைகளுக்கு நாட்டின் பழமையான கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தில் தீர்வு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

https://athavannews.com/2024/1379132

  • Haha 8
Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

ஹலோ @P.S.பிரபா சீரியசாக கதைக்கும் போது, சிரிக்கப் படாது. 😁😂🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
41 minutes ago, தமிழ் சிறி said:

ஹலோ @P.S.பிரபா சீரியசாக கதைக்கும் போது, சிரிக்கப் படாது. 😁😂🤣

காமடி பண்ண எங்கே கற்றுக் கொண்டீர்கள் என்று இப்போ தான் தெரியுது.😀

Edited by யாயினி
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மோடி ஐயா இன்னும் மணிப்பூர் போகவில்லை........ அது சம்பந்தமாக ஒரு பத்திரிகை மாநாடு கூட இன்னும் நடத்தவில்லை.

இவரின் தீவிர முஸ்லிம் எதிர் நிலைப்பாட்டால் தான், இலங்கையிலிருந்தே நான்கு பேர்கள் அங்கு போய் பிடிபட்டு இருக்கின்றார்கள் போல.

இந்த வாரம் ஒடிசாவில் ஒரு மேடைப் பேச்சில் ஒடிசாவையும், தமிழ்நாட்டையும் கொழுவியிருக்கின்றார்.

குஜராத் கலவரத்தில் இருந்து ஆரம்பித்தவர், அப்படியே ஒரே ஏறு முகம் தான்.... இவரால் தெற்குமே, அமைதியில், தேய்ந்து விடும் போல கிடக்குது.   

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன கொடுமை... இது.  😂
ஒரு நாட்டின் பிரதமர் என்றும் பார்க்காமல், ஆறு பேர் வந்து சிரிச்சிட்டு போயிருக்கிறார்கள். 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாரோ கிரவுட் எண்டு சொன்னாங்கள் ஆனால் யாரையுமே காணோம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மோடி தான் சொல்வதை தானே நம்பப்போவதில்லை. இதில் நாம் வேறு கடிக்க வேண்டுமா? 

2 hours ago, Elugnajiru said:

யாரோ கிரவுட் எண்டு சொன்னாங்கள் ஆனால் யாரையுமே காணோம். 

😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 22/4/2024 at 00:20, தமிழ் சிறி said:

மோதல்களால் சூழ்ந்துள்ள உலகம் : மனிதநேயத்திற்கு பாதுகாப்பான புகலிடம் இந்தியா – பிரதமர் மோடி.

மோடிஜீ பத்திரிகையே பார்க்கிறல்லைப் போல.

தினம்தினம் எத்தனை கொலைகள் பாலியல் வல்லுறவுகள் ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதெல்லாம் இருக்கட்டும், குஜாரத்தில் தானே தீவைத்த இந்துக்களின் ரயிலுக்குப் பழிவாங்க ஆயிரமாயிரம் முஸ்லீம்களைப் படுகொலை செய்ததற்காக அமெரிக்காவே இவருக்கு தடை விதித்திருந்தது. இந்த லட்சணத்தில் இந்தியஅ மனிதநேயத்திற்குப் பாதுகாப்பான நாடாம். 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர் நாட்டின் தலைமை அமைச்சராக இருக்கும்போதுதான் குஜராத்திலோ அல்லது உ பியிலோ சரியாகத் தெரியாது பூசாரிகள் ஆடு மேய்க்கப்போன தலித் சிறுமியை கோவிலுக்குள்ள கூட்டிக்கொண்டுபோய் பாலியல் வன்புணர்வு செய்தவயள்.

ஆனால் ப ஜ க ஆட்சிக்கு வந்தால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஸ்மீரை இந்தியாவுடன் இணைப்போம் என அமித் ஸா சொல்லுறார். இதில் என்ன வேடிக்கை என்றால் இப்பவும் பஜ க தான் ஆட்சியில இருக்கு என்பதை அதுவும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் என்பதை இலகுவாக மறந்துவிட்டினம்.

ஒடிசாவில போய் தமிழ்நாடு வடநாட்டை வஞ்சிக்குது என மேடியில் பேசியதற்கு தமிழக ப ஜ க ஒத்தூதிகள் எதுவும் சொல்லாமல் கதைவை அடிச்சுச்சாத்திவிட்டு கொல்லையில ஒழிச்சிட்டினம்.

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.