Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பெண்ணுக்கு போதை ஊசி செலுத்தி கும்பல் - பாலியல் துஸ்பிரயோகம்

Vhg ஏப்ரல் 23, 2024
1000228969.jpg

யாழில் கும்பல் ஒன்று பெண்ணுக்கு போதை ஊசி செலுத்தி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக பருத்தித்துறை பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றதை அடுத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

யாழ் நகர் பகுதியை அண்டிய கிராமத்தை சேர்ந்த 34 வயதுடைய பெண் ஒருவரின் தாய் தந்தை மரணமடைந்ததையடுத்து, குறித்த பெண்ணும், அவரது மூத்த சகோதரியும் பருத்தித்துறை பகுதியில் உள்ள ஆதரவற்றோர் பாதுகாப்பு இல்லத்தில் தங்கி இருந்துள்ளனர்.

1000228946.jpg

 

இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம், பெண்ணின் மூத்த சகோதரி உயிரிழந்த நிலையில், இவரது சகோதரன் இவரை தனது இல்லத்திற்கு அழைத்து சென்று இருந்தார்.

சகோதரனின் இல்லத்தில் தங்கியிருந்த வேளை ஐனவரி மாதம் வீட்டில் ஆட்களற்ற வேளை உள்நுழைந்த கும்பல் ஒன்று போதைப் பொருளை வழங்கி, அதனை பலவந்தமாக நுகர வைத்து, அடித்து துன்புறுத்தி வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளனர்.

இவ்வாறான நிலையில் நேற்றைய தினம் பருத்தித்துறை பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டில் குறித்த பெண் தங்கி நின்ற வேளை அங்கும் குறித்த கும்பல் சென்று, பெண்ணுக்கு போதை ஊசி செலுத்தி, தாக்கி வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளனர்.

இதில் காயமடைந்த பெண் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் தனக்கு நேர்ந்த கொடுமைகள் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் முதல் பல்வேறு தடவைகள் 10 பேரை உள்ளடக்கிய கும்பல் போதைப் பொருளை கட்டாயப்படுத்தி நுகர வைத்து, உயிர் அச்சுறுத்தல் விடுத்து தன்னை வன்புணர்வுக்கு உட்படுத்தி வந்தனர் என தெரிவித்துள்ளார்.

பெண்ணின் வாக்குமூலத்தை முறைப்பாடாக பதிவு செய்துள்ள பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

 

https://www.battinatham.com/2024/04/blog-post_413.html

 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கிருபன் said:

பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

தொடர்ந்து போலீசாரின் விசாரணை (வியாபாரம்) நடைபெறுமென நம்பலாம். பாதிக்கப்பட்டவர்களுக்கு அச்சுறுத்தலும் அநீதியுமே தொடரும்.

  • கருத்துக்கள உறவுகள்

போதைப் பொருள் கொடுத்து வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டையடுத்து பொலிஸார் விசாரணை

Published By: VISHNU   23 APR, 2024 | 11:14 PM

image
 

யாழ்ப்பாணத்தில் போதை ஊசி செலுத்தி பெண்ணொருவரை கும்பல் ஒன்று பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளதாக பருத்தித்துறை பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றதை அடுத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

யாழ்ப்பாண நகர் பகுதியை அண்டிய கிராமத்தை சேர்ந்த 34 வயதுடைய பெண்ணொருவரின் தாய் தந்தையர் உயிரிழந்ததை அடுத்து, குறித்த பெண்ணும், அவரது மூத்த சகோதரியும் பருத்தித்துறை பகுதியில் உள்ள ஆதரவற்றோர் பாதுகாப்பு இல்லத்தில் தங்கி இருந்துள்ளனர். 

இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் , பெண்ணின் மூத்த சகோதரி உயிரிழந்த நிலையில், இவரது சகோதரன் இவரை தனது இல்லத்திற்கு அழைத்து சென்று இருந்தார். 

சகோதரனின் இல்லத்தில் தங்கியிருந்த வேளை ஐனவரி மாதம் சகோதரன் வீட்டில் ஆட்களற்ற வேளை உள்நுழைந்த கும்பல் ஒன்று போதைப் பொருளை வழங்கி, அதனை பலாத்காரமாக நுகர வைத்து, அடித்து துன்புறுத்தி வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளனர். 

தொடர்ந்து வந்த நாட்களிலும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்று வந்துள்ளன. இந்நிலையில் நேற்றைய தினம் பருத்தித்துறை பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டில் குறித்த பெண் தங்கி நின்ற வேளை அங்கும் குறித்த கும்பல் சென்று, பெண்ணுக்கு போதை ஊசி செலுத்தி, தாக்கி வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளனர்.

இதில் காயமடைந்த பெண் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் தனக்கு நேர்ந்த கொடுமைகள் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

ஜனவரி மாதம் முதல் பல்வேறு தடவைகள் 10 பேரை உள்ளடக்கிய கும்பல் போதைப் பொருளை கட்டாயப்படுத்தி நுகர வைத்து, உயிர் அச்சுறுத்தல் விடுத்து. தன்னை வன்புணர்வுக்கு உட்படுத்தி வந்தனர் என தெரிவித்துள்ளார். 

பெண்ணின் வாக்குமூலத்தை முறைப்பாடாக பதிவு செய்துள்ள பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/181799

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் சகோதரிக்கு போதை ஊசி செலுத்தி, பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சகோதரன் கைது

Published By: DIGITAL DESK 3

26 APR, 2024 | 03:41 PM
image
 

தனது சகோதரியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி வந்ததுடன், சகோதரியை வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்த குற்றச்சாட்டில் சகோதரன் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

யாழ்ப்பாணம் நகர் பகுதியை அண்டிய கிராமத்தைச் சேர்ந்த 34 வயதுடைய பெண்ணொருவர் தனது பெற்றோர் உயிரிழந்த நிலையில், சகோதரியுடன் வடமராட்சி கிழக்கு பகுதியில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் வசித்து வந்துள்ளார். 

இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதம் பெண்ணின் சகோதரி உயிரிழந்துள்ளார். அதனை அடுத்து இல்லத்தில் வசித்து வந்த சகோதரியை , யாழ்.நகர் பகுதியை அண்டிய பிரதேசத்தில் வாழும் சகோதரன் தன்னுடன் அழைத்து வந்து தங்க வைத்துள்ளார். 

இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் குறித்த பெண்ணுக்கு போதைப்பொருட்களை வலுக்கட்டாயமாக நுகர வைத்தும், போதை ஊசிகளை செலுத்தியும் பாலியல் வன்புணர்வுக்கு கும்பல் ஒன்று உட்படுத்தி வந்துடன் பெண்ணை சித்திரவதைக்கு உள்ளாக்கியும் வந்துள்ளது. 

பின்னர் கடந்த வாரம் மீண்டும் ஆதரவற்றோர் இல்லத்தில் பெண்ணை கொண்டு சென்று சகோதரன் சேர்த்துள்ளார். இல்லத்தில் பெண்ணின் நடவடிக்கையில் மாற்றங்கள் தென்பட்டதுடன், உடலில் காயங்கள் காணப்பட்டமையால், இல்ல நிர்வாகத்தினரால் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் பெண்ணை சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். 

வைத்திய சிகிச்சையின் போதே பெண் தனக்கு நேர்ந்த கொடுமைகளை விபரித்துள்ளார். அதனை அடுத்து சட்ட வைத்திய அதிகாரியினால், முன்னெடுக்கப்பட்ட மருத்துவ பரிசோதனைகளின் போது, பெண் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமையும், பெண்ணை அடித்து துன்புறுத்தி சித்திரவதைக்கு உள்ளாக்கியமைக்கான காயங்கள் உடலில் காணப்பட்டுள்ளமையும் உறுதிப்படுத்தப்பட்டது. 

சம்பவம் தொடர்பில் ஆரம்ப விசாரணைகளை முன்னெடுத்த பருத்தித்துறை பொலிஸார், குற்றம் நடைபெற்ற பிரதேசம் யாழ்ப்பாண தலைமை பொலிஸ் நிலைய பிரிவுக்கு உட்பட்டது என்றதன் அடிப்படையில் , யாழ்ப்பாண பொலிஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டதை அடுத்து, யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர். 

விசாரணைகளின் அடிப்படையில் பெண்ணின் சகோதரனே, பெண்ணை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி வந்தமையும், போதைப்பொருட்களை கட்டாயப்படுத்தி நுகர வைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியமையும் தெரிய வந்துள்ளது. 

அதனை அடுத்து சகோதரனை கைது செய்த பொலிஸார் விசாரணைகளின் பின்னர் யாழ்,நீதவான் நீதிமன்றில் நேற்று வியாழக்கிழமை முற்படுத்தியவேளை, சகோதரனை விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டது. 

அதேவேளை, பெண்ணை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியவர்கள் என 08 பேரை அடையாளம் கண்டுள்ளதாகவும், அவர்களை கைது செய்வதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்து உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

யாழில் சகோதரிக்கு போதை ஊசி செலுத்தி, பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சகோதரன் கைது | Virakesari.lk

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

யாழில் சகோதரனால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்பட்ட சகோதரி

10 MAY, 2024 | 04:58 PM
image
 

யாழ்ப்பாணம் நகரை அண்மித்த பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவர் சகோதரன் உள்ளிட்ட கும்பல் ஒன்றினால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு சம்பவம் தொடர்பிலான பொலிஸ் விசாரணையில், சகோதரன் மாத்திரமே சகோதரியை வன்புணர்வுக்கு உட்படுத்தி வந்துள்ளமை தெரியவந்துள்ளது. 

பாதிக்கப்பட்ட பெண், தாய், தந்தையை இழந்த பின்னர் சகோதரியுடன் வடமராட்சி பகுதியில் உள்ள பெண்கள் காப்பகம் ஒன்றில் தங்கியிருந்த நிலையில் சகோதரி கடந்த டிசம்பர் மாதம் உயிரிழந்துள்ளார். 

அதனை அடுத்து சகோதரன் காப்பகத்தில் இருந்த தனது சகோதரியை வீட்டிற்கு கடந்த ஜனவரி மாதம் அழைத்து வந்துள்ளார். 

ஜனவரி மாதத்தில் இருந்து கடந்த ஏப்ரல் மாதம் வரையில் சகோதரிக்கு போதை ஊசியினை செலுத்தியும் மதுபானம் உள்ளிட்டவற்றை கொடுத்து பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி வந்துள்ளார். 

ஏப்ரல் மாதம் பெண்ணின் உடல் நிலை மோசமடைந்ததை அடுத்து மீண்டும் காப்பகத்தில் அவரை சேர்த்துள்ளார். பின்னர்  இந்த பெண் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். 

மருத்துவ பரிசோதனையில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்பட்டடு வந்தமையையும் , சித்திரவதைகளுக்கு உள்ளானமையும் கண்டறியப்பட்டது. அதனை அடுத்து சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டு யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய பெண்கள் சிறுவர் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்தனர். 

பாதிக்கப்பட்ட பெண்ணிடம் பெறப்பட்ட வாக்கு மூலத்தில் , தன்னை வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த கும்பல் ஒன்றே வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக தெரிவித்துள்ளார். 

பொலிஸாரின் தொடர் விசாரணைகளின் போது , சம்பவத்துடன் பெண்ணின் சகோதரனுக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்ததை அடுத்து அவரை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்தியதை அடுத்து நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் தொடர் விசாரணைகளை முன்னெடுத்த வேளை , தன்னை சகோதரனே பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி வந்ததாகவும், வேறு நபர்கள் எவரும் சம்பந்தப்படவில்லை எனவும், சகோதரன் மீதான பயத்திலேயே முன்னர் அவ்வாறு வாக்குமூலம் அளித்ததாகவும் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். 

சம்பவம் தொடர்பில் தொடர்ந்தும் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

https://www.virakesari.lk/article/183178

புலி நீக்கிய அரசியல் செய்ய சொல்கின்றவர்கள் விரும்புகின்ற மாற்றங்கள் தான் இப்படியான மனித விரோத சம்பவங்கள். 

இதைத் தான் சிங்களமும் விரும்புகின்றது. ஒரு இனத்தின் மனித விழுமியங்களை மழுங்கடித்து விட்டால், பண்பாட்டை அருவருக்கத்தக்கதாக மாற்றி விட்டால், அந்த இனம் எக்காலத்திலும் மீண்டு வராது என்பது அவர்களுக்கு தெரியும்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த செய்தி முதல் நாள் வாசித்த போதே - கூட இருந்த ஒருவர் ஈடுபடாமல் இப்படி நடக்க சாத்தியம் இல்லை என்றே நினைத்தேன்.

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

இந்த செய்தி முதல் நாள் வாசித்த போதே - கூட இருந்த ஒருவர் ஈடுபடாமல் இப்படி நடக்க சாத்தியம் இல்லை என்றே நினைத்தேன்.

அத்துடன் போதை பொருள் பாவிக்கும் ஒருவாரலே இப்படி மோசமாக  நடக்க முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, விளங்க நினைப்பவன் said:

அத்துடன் போதை பொருள் பாவிக்கும் ஒருவாரலே இப்படி மோசமாக  நடக்க முடியும்.

ஓம் ஒரு fix க்கு என்னவும் செய்வார்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.