Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

visa-free-sri-lanka-e1714215746267-750x3

ரஷ்யா உள்ளிட்ட 7 நாடுகளுக்கு இலவச விசா.

இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக 7 நாடுகளுக்கு இலவச விசா வழங்க, அமைச்சரவை இணக்கம் தெரிவித்துள்ளதாக,

சுற்றுலா, காணி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ நேற்று (26) நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இதன்படி இந்தியா, இந்தோனேசியா, ரஷ்யா, சீனா, தாய்லாந்து உள்ளிட்ட 7 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச விசா வழங்கப்படவுள்ளது.

மேலும் 60 நாடுகளுக்கு இலவச விசா வழங்குவதற்கான தீர்மானத்தை மேற்கொள்ள குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.

https://athavannews.com/2024/1380064

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, தமிழ் சிறி said:

மேலும் 60 நாடுகளுக்கு இலவச விசா வழங்குவதற்கான தீர்மானத்தை மேற்கொள்ள குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்கா கனடா இங்கிலாந்து அவுஸ்திரேலியா இதற்குள் அடங்குமா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, ஈழப்பிரியன் said:

அமெரிக்கா கனடா இங்கிலாந்து அவுஸ்திரேலியா இதற்குள் அடங்குமா?

ஸ்ரீலங்கா பாஸ்போட்டுக்கு.... அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா.... இலவச விசா கொடுக்குமா. என்று ஒருக்கால்  கேட்டு சொல்லுங்கள். 🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

அமெரிக்கா கனடா இங்கிலாந்து அவுஸ்திரேலியா இதற்குள் அடங்குமா?

60 நாடுகள் எனில் அதில் கட்டாயம் சில மேற்கு நாடுகள் அடங்கும் என நினைக்கிறேன்.

ஆனால் இதை கிடப்பில் போட்டு விடுவார்கள். ஏன் ரஸ்யா, சீனா வுக்கு மட்டும் விசேட சலுகை என கேட்டால் - உங்களையும் பரிசீலிக்கிறோம் என சொல்லும் உத்தி.

இலங்கைக்கு, சீனா, ரஸ்யா, இந்தியா எண்டால் எப்பவும் ஸ்பெசல்தான்.

41 minutes ago, தமிழ் சிறி said:

ஸ்ரீலங்கா பாஸ்போட்டுக்கு.... அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா.... இலவச விசா கொடுக்குமா. என்று ஒருக்கால்  கேட்டு சொல்லுங்கள். 🤣

இதுவரை reciprocal நீங்கள் எப்படியோ நாங்களும் அப்படி) முறையில்தான் இலங்கையின் வீசா நடைமுறை, கட்டணங்கள் இருந்தது.

இப்போ 7 நாடுகளை இலவசமாக விடப்போவதாக சொல்கிறார்கள்.

இதில், ரஸ்யா, சீனா, இந்தியா இலங்கை வருவோரில் முதல் 5 க்குள் வரும். 

இதனால் வரும் வீசா வருவாய் அரசுக்கு கணிசமான நட்டத்தை தரும்.

சிலவேளை அதிக அளவில் வந்தால் - வரும் இலாபம் இதை ஈடு செய்கல்ய கூடும்.

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, தமிழ் சிறி said:

ஸ்ரீலங்கா பாஸ்போட்டுக்கு.... அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா.... இலவச விசா கொடுக்குமா. என்று ஒருக்கால்  கேட்டு சொல்லுங்கள். 🤣

ஓ இப்படியும் ஒரு பிரச்சனை உள்ளதா?

அப்ப 60 நாடுகளையும் இலங்கை இலவசமாக உள்ளே விடுறாங்களா குமாரூ?

7 minutes ago, goshan_che said:

60 நாடுகள் எனில் அதில் கட்டாயம் சில மேற்கு நாடுகள் அடங்கும் என நினைக்கிறேன்

இதை முன்னரும் சொன்னார்கள் ஆனால் கிடப்பில் போட்டவிட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ஈழப்பிரியன் said:

இதை முன்னரும் சொன்னார்கள் ஆனால் கிடப்பில் போட்டவிட்டார்கள்.

ஓம்….மேற்கை சாந்தபடுத்த சொல்வது.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

இந்தியா, இந்தோனேசியா, ரஷ்யா, சீனா, தாய்லாந்து

மேற்படி நாருகளில் இருந்து அதிக உல்லாசப்பயணிகள் வருகையும் மேலும் வருகையை ஊக்கப்படுத்தவுமாக இருக்கலாம்.
அத்தோடு மேற்கு  நச்டுகளின்  விசா கட்டணம் டொலர் வருவாய்க்கு தேவை என நினைக்கிறேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

இதுவரை reciprocal நீங்கள் எப்படியோ நாங்களும் அப்படி) முறையில்தான் இலங்கையின் வீசா நடைமுறை, கட்டணங்கள் இருந்தது.

இப்போ 7 நாடுகளை இலவசமாக விடப்போவதாக சொல்கிறார்கள்.

இதில், ரஸ்யா, சீனா, இந்தியா இலங்கை வருவோரில் முதல் 5 க்குள் வரும். 

இதனால் வரும் வீசா வருவாய் அரசுக்கு கணிசமான நட்டத்தை தரும்.

சிலவேளை அதிக அளவில் வந்தால் - வரும் இலாபம் இதை ஈடு செய்கல்ய கூடும்.

அண்மையில் எங்கோ வாசித்த செய்தியில்.... ரஷ்ய, சீனர்கள் இலங்கையிலேயே கடைகளை திறந்து வியாபாரம் செய்கின்றார்களாம். வரும் நாட்டு சுற்றுலாப் பயணிகளும் அவர்களின் கடையில்தான் பொருட்களை கொள்வனவு செய்வதால்... உள்ளூர் வியாபாரிகள் மனவருத்தத்தில் இருப்பதாக வாசித்தேன்.

இந்திய சுற்றுலாப் பயணிகளை பற்றி சொல்லத் தேவையில்லை. அவர்கள் ஊரில்  இருந்து வரும்போதே புளிச்சாதத்தை கட்டிக் கொண்டு வந்து கைலாயம் வரை போகக் கூடிய ஆட்கள்.
இவர்களிடமிருந்து...  அந்நிய செலவாணியை எடுக்கிறதெண்டால், "கல்லில் நார் உரிக்கிற வேலை" கண்டியளோ.... 😂 🤣

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, தமிழ் சிறி said:

அண்மையில் எங்கோ வாசித்த செய்தியில்.... ரஷ்ய, சீனர்கள் இலங்கையிலேயே கடைகளை திறந்து வியாபாரம் செய்கின்றார்களாம். வரும் நாட்டு சுற்றுலாப் பயணிகளும் அவர்களின் கடையில்தான் பொருட்களை கொள்வனவு செய்வதால்... உள்ளூர் வியாபாரிகள் மனவருத்தத்தில் இருப்பதாக வாசித்தேன்

எங்கேயோ இல்லை அண்ணை - எனது பயணக்கட்டுரையில்தான் இதை எழுதி இருந்தேன்🤣.

56 minutes ago, தமிழ் சிறி said:

இந்திய சுற்றுலாப் பயணிகளை பற்றி சொல்லத் தேவையில்லை. அவர்கள் ஊரில்  இருந்து வரும்போதே புளிச்சாதத்தை கட்டிக் கொண்டு வந்து கைலாயம் வரை போகக் கூடிய ஆட்கள்.
இவர்களிடமிருந்து...  அந்நிய செலவாணியை எடுக்கிறதெண்டால், "கல்லில் நார் உரிக்கிற வேலை" கண்டியளோ.... 😂 🤣

வரும் போது லக்கேஜில் பிளாஸ்டிக் சாமனை கொண்டு வந்து வித்து, உள்ள செலாவணியையும் அள்ளி கொண்டு போவார்கள்🤣.

ஆனால் இப்போ இதில் ஒரு சின்ன மாற்றம் -மாலைதீவுடன் லடாய் என்பதால் செலவழிக்கும் கோஷ்டிகள் இலங்கை வருவது கூடியுள்ளது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, goshan_che said:

எங்கேயோ இல்லை அண்ணை - எனது பயணக்கட்டுரையில்தான் இதை எழுதி இருந்தேன்🤣.

ஓம்... கோசான். இப்போ நீங்கள் எழுதியது நினைவிற்கு வருகின்றது.   🙂

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, goshan_che said:

60 நாடுகள் எனில் அதில் கட்டாயம் சில மேற்கு நாடுகள் அடங்கும் என நினைக்கிறேன்.

ஆனால் இதை கிடப்பில் போட்டு விடுவார்கள். ஏன் ரஸ்யா, சீனா வுக்கு மட்டும் விசேட சலுகை என கேட்டால் - உங்களையும் பரிசீலிக்கிறோம் என சொல்லும் உத்தி.

இலங்கைக்கு, சீனா, ரஸ்யா, இந்தியா எண்டால் எப்பவும் ஸ்பெசல்தான்.

இதுவரை reciprocal நீங்கள் எப்படியோ நாங்களும் அப்படி) முறையில்தான் இலங்கையின் வீசா நடைமுறை, கட்டணங்கள் இருந்தது.

இப்போ 7 நாடுகளை இலவசமாக விடப்போவதாக சொல்கிறார்கள்.

இதில், ரஸ்யா, சீனா, இந்தியா இலங்கை வருவோரில் முதல் 5 க்குள் வரும். 

இதனால் வரும் வீசா வருவாய் அரசுக்கு கணிசமான நட்டத்தை தரும்.

சிலவேளை அதிக அளவில் வந்தால் - வரும் இலாபம் இதை ஈடு செய்கல்ய கூடும்.

சீன இந்திய ரஷ்ய பயணிகள் இலங்கையில் ஒரு நாளில் செலவு செய்யும் பணம் சராசரியாக $20-50 டாலர் க்குள் தான் உண்டு. இதை ரணிலே ஒருமுறை பிச்சைக்கார உல்லாசப் பிரயாணிகள் என்ற பொருள் படக் கூறி  எம் நாட்டுக்கு மேற்கு ஐரோப்பிய பயணிகள் வேண்டும் என கூறி இருந்தார். 

போற போக்கைப் பார்த்தால் இலங்கை இன்னும் பிச்சைக்காரர்களிடம் கையெந்தும் நிலையில் இருந்து விடுபடவில்லை என்றே தோன்றுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிறிலங்கா நல்ல முடிவைத்தான் எடுத்திருக்கு. 👍🏼

இப்ப காசு பணம் ஆரிட்ட இருக்கெண்டால் ரஷ்யா,சீனாவிட்ட தானே. அதிலையும் சீனாக்காரன் ரஷ்யாக்காரன்கள் தான்  காசை காசெண்டு பாராமல் விசுக்கி தள்ளுறாங்கள். :cool:

உக்ரேன் சண்டைக்கு முதல் மேற்குலக நாடுகளுக்கு வாற காசுக்காறர் ஆரெண்டு பார்த்தால் எல்லாம் ரஷ்யர்கள்தான். இப்ப அவங்களையும் தடை செய்து போட்டு இப்ப முழுசிக்கொண்டு திரியினம்.🤣

ரஷ்யங்களின்ர கையில எப்பவும் பச்சை தாள். மஞ்சள் தாள்,கத்தரி பூ கலர் தாள் தான்.😎

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, பகிடி said:

இதில் மூன்று விடயம்.

Small businesses are the engine of the economy என்பது யூகே அரசியலில் தாரக மந்திரம். பொருளாதாரம் முன்னேற சிறு வியாபாரம் உயர்வது அவசியம்.

அடி மட்டத்தில் பணம் புழங்கினால்தான், மக்கள் காசை செலவிடுவர், மக்கள் காசை செலவிட்டால்தான் பொருளாதாரம் வளரும். 

இந்த 50 டொலர் காரர் நேரடியாக ஹோஸ்டல் நடத்துபவர், கொத்து ரொட்டிகாரார், இளனி விற்பவருக்கு நேரடியாக 50 டொலரை கொடுப்பார்கள், ஆனால் 300 டொலர் காரர் 5 நட்சத்திர ஓட்டலில் செலவழித்து அது கீழ் மட்டத்துக்கு ஒழுகி வரும் போது (trickle down economy) 30 டொலர் வருவதே பெரிய விடயமாக இருக்கும்.

அடுத்தது எண்ணிக்கை. 4x250 = 20x50. நாட்டின் பொருளாதாரத்துக்கு 4 நட்டத்திர விடுதி இலாபம் பார்பதை விட 20 ஹொஸ்டல் லாபம் பார்ப்பது நல்ல பலனை தரும்.

மூன்றாவது Trail Blazers. எப்போதுமே ஒரு இடத்துக்கு முதலில் போவது backpackers, shoe-string budgeters எனப்படும் 30 டொலர் பேர்வழிகள்தான். அவர்கள் போய் ஒரு vibe ஐ உருவாக்க, பின் tour operators 300 டொலர் பார்ட்டிகளை கூட்டி வருவார்கள். இன்றைய insta உலகில் - இந்த 30 டொலர் பார்ட்டிகள் கிட்டதட்ட ஒரு நாட்டுக்கு brand ambassadors போல.

ஆகவே எல்லாரையும் கவரும் விதமாகவும், எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாகவும் சுற்றுலா துறையை கட்டி எழுப்பலாம் என நான் நினைக்கிறேன்.

#அதிதி தேவோ பவ🤣

48 minutes ago, குமாரசாமி said:

சிறிலங்கா நல்ல முடிவைத்தான் எடுத்திருக்கு. 👍🏼

இப்ப காசு பணம் ஆரிட்ட இருக்கெண்டால் ரஷ்யா,சீனாவிட்ட தானே. அதிலையும் சீனாக்காரன் ரஷ்யாக்காரன்கள் தான்  காசை காசெண்டு பாராமல் விசுக்கி தள்ளுறாங்கள். :cool:

உக்ரேன் சண்டைக்கு முதல் மேற்குலக நாடுகளுக்கு வாற காசுக்காறர் ஆரெண்டு பார்த்தால் எல்லாம் ரஷ்யர்கள்தான். இப்ப அவங்களையும் தடை செய்து போட்டு இப்ப முழுசிக்கொண்டு திரியினம்.🤣

ரஷ்யங்களின்ர கையில எப்பவும் பச்சை தாள். மஞ்சள் தாள்,கத்தரி பூ கலர் தாள் தான்.😎

இதில் உண்மை இல்லாமல் இல்லை.

இந்தியாவும், சீனாவும், ரஸ்யாவும் சராசரி மனிதருக்கு ஏழை நாடுகள்தான், அதே சமயம் பெரும் பணக்காரரின் நாடுகள் கூட. 

  • கருத்துக்கள உறவுகள்

விரைவில் 67 நாடுகளுக்கு இலவச விசா!

சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்கும் பொருட்டு 67 நாடுகளுக்கு இலவச விசா வழங்குவது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் விரைவில் சமர்ப்பிக்கப்படும் என சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (29) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஏற்கனவே ஏழு நாடுகளுக்கு இலவச விசா வழங்கப்படுவதாகவும் இராஜாங்க அமைச்சர் கூறினார்.

ஏப்ரல் 25 ஆம் திகதி வரையில் மாத்திரம் 121,500 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளதாகவும். முதல் நான்கு மாதங்களில் 700,000 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்து தமது யூடியூப் சேனல்கள் மூலம் இலங்கையை விளம்பரப்படுத்தினாலும், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கையில் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ளதாகவும், கண்டி பிரதேசத்தில் வெளிநாட்டுப் பெண் ஒருவருக்கு பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும் கண்டியில் இருந்து எல்ல வரையிலான ஒடிசி ரயிலின் டிக்கெட் கட்டணம் 3000 ரூபாவாக இருந்தாலும், புகையிரத திணைக்களத்தில் பணிபுரியும் சில அதிகாரிகள், சுற்றுலா பயணிகளுக்கு 8,000 ரூபா போன்ற அதிக விலைக்கு புகையிரத சீட்டை விற்பனை செய்வதாக தகவல் கிடைத்துள்ளதாகவும், இந்த அதிகாரிகளுக்கு எதிராக கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் மேலும் 45 சுற்றுலா வலயங்களை வர்த்தமானியில் வெளியிடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

https://thinakkural.lk/article/300543

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 28/4/2024 at 00:40, goshan_che said:

இதில் உண்மை இல்லாமல் இல்லை.

இந்தியாவும், சீனாவும், ரஸ்யாவும் சராசரி மனிதருக்கு ஏழை நாடுகள்தான், அதே சமயம் பெரும் பணக்காரரின் நாடுகள் கூட. 

மேற்கத்திய பிரமாண்டம் கொஞ்சம் கொஞ்சமாக கரைக்கப்படுகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, குமாரசாமி said:

மேற்கத்திய பிரமாண்டம் கொஞ்சம் கொஞ்சமாக கரைக்கப்படுகின்றது.

அப்படியில்லை, லண்டனில் கடைக்கு போன போது தன்னை அவமானப்படுத்தினர் என்பதால், பத்து ரோல்ஸ்ரொய்ஸ் காரை வாங்கி இந்தியாவில் ஊர் கூட்டும் குப்பை லாரியாக பாவித்த மஹாராஜக்கள் எல்லாம் இருந்திருக்கிறார்கள்.

இந்த நாடுகளில் எப்போதும் வளம், செல்வம் இருந்தது ஆனால் அது சிலரிடம் குவிந்து இருந்தது.

மேற்கில் இது ஒப்பீட்டளவில் பரலவாக்கப்பட்டுள்ளது.

பிரமாண்டம் என பார்த்தால்….

விமானம் தாங்கி கப்பல்கள் சீனா, ரஸ்யாவிடம் எத்தனை அமெரிக்கவிடம் எத்தனை என பார்த்தால் வேறுபாடு புரியும்.

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, goshan_che said:

அப்படியில்லை, லண்டனில் கடைக்கு போன போது தன்னை அவமானப்படுத்தினர் என்பதால், பத்து ரோல்ஸ்ரொய்ஸ் காரை வாங்கி இந்தியாவில் ஊர் கூட்டும் குப்பை லாரியாக பாவித்த மஹாராஜக்கள் எல்லாம் இருந்திருக்கிறார்கள்.

ஆதாரம் உள்ளதா? அல்லது  அம்புலி மாமாவா?

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, kalyani said:

ஆதாரம் உள்ளதா? அல்லது  அம்புலி மாமாவா?

அம்புலி மாமாதான்

ஆதாரம்👇

https://www.india.com/viral/maharaja-of-alwar-once-as-a-revenge-used-rolls-royce-to-collect-garbage-from-the-streets-2944690/amp/

வாசித்து, கிரகிக்க முடியுமாய் இருக்கும் என நம்புகிறேன்.

பிகு

6 கார், 10 அல்ல.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

அம்புலி மாமாதான்

ஆதாரம்👇

https://www.india.com/viral/maharaja-of-alwar-once-as-a-revenge-used-rolls-royce-to-collect-garbage-from-the-streets-2944690/amp/

வாசித்து, கிரகிக்க முடியுமாய் இருக்கும் என நம்புகிறேன்.

பிகு

6 கார், 10 அல்ல.

அதெப்படி ரஸ்ய உக்ரேன் போருக்கு இந்தியம் ஊடகம்பொய்.  உ  உங்கள் தரவுக்கு மட்டும் இந்திய  ஊடகம் ஆதாரம்???

 எப்படியான டக்லஸ் புரோ?? நேரத்துக்கு ஏற்ப பிரட்டும் தி**** கும்மல்.
அதெப்படி ரஸ்ய உக்ரேன் போருக்கு இந்தியம் ஊடகம்  உங்கள் .தரவுக்கு மட்டும் இந்திய  ஊடகம் ஆதாரம்???

 எப்படியான டக்லஸ் புரோ?? நேரத்துக்கு ஏற்ப பிரட்டும் தி**** கும்மல்.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, kalyani said:

ஆடிக்கொருக்கா அமாவாசைக்கு ஒருக்கா கோசானோடு தனக எண்டே யாழ்களம் வாற கள்ள ஐடிக்கெல்லாம் இந்த ஆதாரமே ஓவர்….

கவ்வி கொண்டு ஓடவும்🤣

  • கருத்துக்கள உறவுகள்

பிகு

ஒருத்தர் என் இக்னோர் லிஸ்டில் 3 வது நபராக சேர்ந்து விட் ரொம்பவே துடிக்கிறார்🤣.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

ஆடிக்கொருக்கா அமாவாசைக்கு ஒருக்கா கோசானோடு தனக எண்டே யாழ்களம் வாற கள்ள ஐடிக்கெல்லாம் இந்த ஆதாரமே ஓவர்….

கவ்வி கொண்டு ஓடவும்🤣

எந்த *************** இருந்தாலும்
ஒவ்வொரு நாளும்யாழுக்கு வந்து தமிழ் மக்களுக்காக பாடுபடும் ***************

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.