Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ரஷ்யாவில் இடம்பெற்ற பாதுகாப்பு கூட்டத்தில் ஜெனரல் கமல் குணரத்ன பங்கேற்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Published By: DIGITAL DESK 7   28 APR, 2024 | 08:59 PM

image

(எம்.மனோசித்ரா)

ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் கூடிய பாதுகாப்பு விடயங்களுக்குப் பொறுப்பான உயர் அதிகாரிகளின் 12ஆவது சர்வதேச கூட்டத்தில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற கமல் குணரத்ன பங்குபற்றியுள்ளார்.

ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் கடந்த 22 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை நடைபெற்றுக் கொண்டிருக்கும் பாதுகாப்பு விடயங்கள் தொடர்பான  12ஆவது சர்வதேச கூட்டத்திற்கு உலகெங்கிலும் உள்ள உயர்மட்ட அதிகாரிகள் கலந்துக்கொண்டனர்.

தற்போது நாடுகள் எதிர்கொள்ளும்  பாதுகாப்பு சவால்களைப் பற்றி விவாதிப்பதற்கும், அதற்கு தீர்வு காண்பதற்கும் உலகளாவிய தலைவர்களுக்கு இந்ந கூட்டம் ஒரு தளமாக விளங்குகிறது.

இக்கூட்டத்தொடரின் ஓர்  அங்கமாக பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவுக்கும் ரஷ்ய கூட்டமைப்பின் பாதுகாப்புச் சபையின் செயலாளர் நிகோலாய் பட்ருஷேவுக்கும் இடையிலான இருதரப்பு கலந்துரையாடல் நடைபெற்றமை விஷேட அம்சமாகும்.

பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதிலும், பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதிலும் சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் புரிந்துணர்வை வளர்ப்பதன் முக்கியத்துவத்தை மேலும் மேம்படுத்த  இந்த சந்திப்பு முக்கியமானதாக அமைந்திருந்தது.

பயங்கரவாத எதிர்ப்பு முயற்சிகள், இணையப் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் இதன் போது கலந்துரையாடகள் நடைபெற்றன.

இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கும் பாதுகாப்புத் துறையில் மேம்பட்ட ஒத்துழைப்பிற்கான வழிகளை ஆராய்வதற்கும் இரு தரப்பினரும் தங்கள் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

பாதுகாப்பு விடயங்களுக்குப் பொறுப்பான உயர்மட்ட அதிகாரிகளின் 12ஆவது சர்வதேசக் கூட்டம், உலகளாவிய சமூகம் எதிர்கொள்ளும் பொதுவான பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்ளும் நோக்கில், நுண்ணறிவுகளைப் பரிமாறிக் கொள்ளவும், சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்ளவும், கூட்டு முயச்சிகளை உருவாக்கவும் பங்கேற்பாளர்களுக்கு வாய்ப்பு அளிக்குமுகமாக அமைந்துள்ளது.

https://www.virakesari.lk/article/182163

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரசியாவும் ஈரானும் வட்டியில்லாக்கடன் கொடுக்கினமோ ...அல்லது வராக்கடன் கொடுக்கினமோ..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யுத்த குற்றவாளி ரசியாவில்.

இது தான் ரசிய முகம். எம்மவர் இந்த சிறீலங்கா அமெரிக்கா முறுகலை பாவிக்க வேண்டும். 

  • Like 2
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
8 hours ago, விசுகு said:

எம்மவர் இந்த சிறீலங்கா அமெரிக்கா முறுகலை பாவிக்க வேண்டும். 

எமக்கு இந்திய சீன முறுகலையே பாவிக்கத்தெரியாமல் *** திரிகிறோம் 
இந்த லெவலில் அமெரிக்காவின் முறுகலை வேற பாவிக்கப்போறமோ ...?

Edited by இணையவன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
6 hours ago, விசுகு said:

யுத்த குற்றவாளி ரசியாவில்.

இது தான் ரசிய முகம். 

இது ஒரு சர்வதேச ஒன்றுகூடல் ஐயா!

🤦🏼‍♂️
 

The bilateral meeting occurred on the sidelines of the 12th International Meeting of High-Ranking Officials Responsible for Security Matters in St. Petersburg, Russia, held from April 22 to April 25.

This significant gathering provided a platform for global leaders to exchange insights, discuss pressing security challenges, and formulate partnerships aimed at addressing shared security concerns on a global scale.

https://lankanewsweb.net/archives/55026/sls-defence-secretary-holds-bilateral-talks-with-russian-security-council-secretary/

 

 

Edited by Kapithan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரஸ்ஸியாவில் பணம்பார்க்கச் சென்று தற்போது மாட்டுப்பட்டிருக்கும் பல நூற்றுக்கணக்கான முன்னாள் சிறிலங்கா இராணுவ வீரர்களைப் பாதுகாப்பாக வீட்டிற்குக் கூட்டிவரவும் இதனைப் பயன்படுத்தியிருக்கலாம். 

2 hours ago, Kapithan said:

The bilateral meeting occurred on the sidelines of the 12th International Meeting of High-Ranking Officials Responsible for Security Matters in St. Petersburg, Russia, held from April 22 to April 25.

சர்வதேச நாடுகளின் பாதுகாப்புத் துறைசார் தலைவர்களின் மாநாடு நடைபெற்று முடிந்ததன் பின்னர் நடைபெற்றிருக்கும் இருதரப்பு மாநாடு என்றுதான் கூறப்பட்டிருக்கு. இதுவே சர்வதேச மாநாடு அல்ல. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரஞ்சித் said:

ரஸ்ஸியாவில் பணம்பார்க்கச் சென்று தற்போது மாட்டுப்பட்டிருக்கும் பல நூற்றுக்கணக்கான முன்னாள் சிறிலங்கா இராணுவ வீரர்களைப் பாதுகாப்பாக வீட்டிற்குக் கூட்டிவரவும் இதனைப் பயன்படுத்தியிருக்கலாம். 

சர்வதேச நாடுகளின் பாதுகாப்புத் துறைசார் தலைவர்களின் மாநாடு நடைபெற்று முடிந்ததன் பின்னர் நடைபெற்றிருக்கும் இருதரப்பு மாநாடு என்றுதான் கூறப்பட்டிருக்கு. இதுவே சர்வதேச மாநாடு அல்ல. 

அதாவது சர்வதேச மாநாடு ஒன்றிற்குச் சென்று அதன் பின்னர் அவர்களிடையே இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. 

ஆக இது ஒரு சர்வதேச மாநாடு. தனியே இலங்கை - இரஸ்ய மாநாடு அல்ல. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

அதாவது சர்வதேச மாநாடு ஒன்றிற்குச் சென்று அதன் பின்னர் அவர்களிடையே இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. 

ஆக இது ஒரு சர்வதேச மாநாடு. தனியே இலங்கை - இரஸ்ய மாநாடு அல்ல. 

அதாவது உங்கள் கூற்றுப்படி குடும்ப நிகழ்வுக்கு போய் விட்டு சின்ன வீட்டை ரகசியமாக போய் வந்திருக்கிறார். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
1 hour ago, விசுகு said:

அதாவது உங்கள் கூற்றுப்படி குடும்ப நிகழ்வுக்கு போய் விட்டு சின்ன வீட்டை ரகசியமாக போய் வந்திருக்கிறார். 

Nope…..

ஊர் அல்லது பாடசாலை ஒன்றுகூடலுக்குப் போன இடத்தில் நீண்ட நாட்களாக சந்திக்காத ஆட்களைக் கண்டால் அவர்களுடன் சிறிது நேரம் தனியே அளவுலாவுதல் போன்றதுதான் இந்தச் சந்திப்பு. 

😁

1 hour ago, விசுகு said:
Edited by Kapithan
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: VISHNU 16 MAY, 2024 | 01:40 AM   முல்லைத்தீவு மாவட்டம் மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்திற்குற்பட்ட கரும்புள்ளியான் குள நீர் விநியோக திட்ட அடிக்கல் நாட்டு விழா புதன்கிழமை (14) இடம்பெற்றது  வடமாகாண ஆளுநர் சாள்ஸ் அவரக்ளினால் குறித்த குடிநீர் திட்டத்திற்கான பெயர்பலகை திரை நீக்கம் செய்துவைக்கப்பட்டிருந்தது  அதனை தொடர்ந்து அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்களினால் குடிநீர் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டதுடன்,  சம நேரத்தில் ஏனைய அதிதிகளினாலும் அடிக்கல் நாட்டப்பட்டிருந்தது  நிகழ்வில் வடமாகாண ஆளுநர், மாகாண பிரதம செயலாளர்,அமைச்சின் செயலாளர் ,பாராளுமன்ற உறுப்பினர்களான  காதர் மஸ்தான் , குலசிங்கம் திலீபன்,மாகாண நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் அதிகாரிகள்,மாகாண நீர்ப்பாசன திணைக்கள அதிகாரிகள், மற்றும் முல்லை மாவட்ட செயலாளர், மற்றும்  யாழ்மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், மற்றும் மாந்தை கிழக்கு  பிரதேச செயலாளர் , பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், மற்றும் பொது அமைப்புக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர் குறித்த குடிநீர் திட்டமானது உலக வங்கியின் 1856 மில்லியன் மேற்பட்ட நிதிப்பங்களிப்பில் நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினர் மற்றும் நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையினரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/183651
    • ஸ்லோவாக்கியா பிரதமரை துப்பாக்கியால் சுட்டது யார்? - என்ன நடந்தது? பட மூலாதாரம்,GETTY IMAGES 15 மே 2024 புதுப்பிக்கப்பட்டது 50 நிமிடங்களுக்கு முன்னர் ஸ்லோவாக்கியாவின் பிரதமர் ராபர்ட் ஃபிகோ மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஸ்லோவாக்கியா பிரதமர் ராபர்ட் ஆபத்தான நிலையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. என்ன நடந்தது? உள்ளூர் செய்தி தொலைக்காட்சி நிறுவனமான TA3 வெளியிட்டுள்ள செய்தியின்படி, "ஸ்லோவாக்கியாவின் தலைநகரான பிராட்டிஸ்லாவாவிலிருந்து வட கிழக்கே 180 கிமீ தொலைவில் உள்ள ஹன்ட்லோவா நகரில் இந்த துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. ஹன்ட்லோவா நகரில் உள்ள கலாசார சமூக மையத்தில் நடந்த அரசு நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட பின்னர் ராபர்ட் அங்கிருந்து கிளம்புவதற்காக வெளியே வந்தபோது மீது துப்பாக்கி குண்டு பாய்ந்துள்ளது. இதை ஸ்லோவாக்கியாவின் உள்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளரும் உறுதிப்படுத்தியுள்ளார். பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,ஸ்லோவாக்கியா பிரதமர் சுடப்பட்ட இடம் அந்நாட்டு ஊடகங்களிடம் பேசிய சாட்சிகள், "துப்பாக்கி சூட்டுக்கு பிறகு பிரதமர் தரையில் வீழ்ந்ததாகவும், பாதுகாவலர்கள் அவரை காரில் ஏற்றி உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்" என்றும் தெரிவித்துள்ளனர். பின்னர், ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,ராபர்ட் ஃபிகோ படக்குறிப்பு,பான்ஸ்கா பைஸ்ட்ரிகா நகரில் உள்ள மருத்துவமனைக்கு பிரதமர் ராபர்ட் ஃபிகோ கொண்டுவரப்பட்ட காட்சி உயிருக்கு ஆபத்தான நிலையில் பிரதமர்? பிரதமரின் கை, கால் மற்றும் வயிற்றுப்பகுதியில் குண்டுகள் பாய்ந்துள்ளதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் கூறுகின்றன. பிபிசியால் அதை தனிப்பட்ட முறையில் உறுதி செய்யமுடியவில்லை. இந்த சம்பவத்தை நேரில் கண்ட ஒருவர் பிபிசியிடம் பேசுகையில், "நான் பிரதமரின் கைகளைக் குலுக்க சென்ற போது மூன்று குண்டுகள் சுடப்பட்ட சத்தத்தை கேட்டேன். பின் பிரதமரின் தலையில் ஒரு கீறலையும் பார்த்தேன்" என்றார். பிரதமர் படுகொலை செய்ய முயற்சிகள் நடந்திருப்பதாக ஸ்லோவாக்கியா உள்துறையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். ஆனால், பிரதமரின் உடல்நிலை குறித்து எந்த தகவலையும் அவர் குறிப்பிடவில்லை. பிரதமரின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில், “பிரதமர் பல முறை சுடப்பட்டார், அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கிறார். அவர் ஹெலிகாப்டர் மூலமாக பான்ஸ்கா பைஸ்ட்ரிகா நகருக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.   பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,2018 இல் புலனாய்வுப் பத்திரிகையாளரான ஜான் குசியாக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ஃபிகோ பிரதமர் பதவியில் இருந்து விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. யார் இந்த ராபர்ட் ஃபிகோ? கடந்த செப்டம்பரில் நடந்த தேர்தலுக்குப் பிறகு ஸ்லோவாக்கியாவின் பிரதமராக மீண்டும் ஆட்சி பொறுப்பை ஏற்றுக் கொண்டார் ராபர்ட் ஃபிகோ. இடதுசாரி ஸ்மெர்-எஸ்எஸ்டி கட்சிக்கு தலைமை தாங்கி வரும் ராபர்ட், கடந்த செப்டம்பரில் நடந்த தேர்தலில், ரஷ்யாவுக்கு எதிரான போரில் யுக்ரேனுக்கான போர் உதவிகளை நிறுத்துவதாக உறுதிமொழி கொடுத்திருந்தார். அதே சமயம் தான் ஒரு ரஷ்ய சார்பற்றவன் என்பதையும் அவர் தெரிவித்துக் கொண்டார். 2018 இல் புலனாய்வுப் பத்திரிகையாளரான ஜான் குசியாக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ஃபிகோ பிரதமர் பதவியில் இருந்து விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. "தங்களது கட்சி ஆட்சிக்கு வந்தால், யுக்ரேனுக்கு ஒரு சுற்று வெடிமருந்துகளை கூட அனுப்பமாட்டோம்” என்று தேர்தல் பரப்புரையின் போது ராபர்ட் உறுதியளித்தார். . ரஷ்யா மீதான மேற்கத்திய நாடுகள் விதித்துள்ள பொருளாதாரத் தடைகளை எதிர்ப்பதாக அவர் அளித்த உறுதிமொழியும், சிலரிடம் வரவேற்பை பெற்றது. இவரையும், ஹங்கேரியின் வலதுசாரி பிரதமரான விக்டர் ஓர்பனையும் ஒப்பிட்டு ஐரோப்பிய அரசியல் அரங்கில் விவாதங்கள் நடந்தன. ஒருவர் கைது ஸ்லோவாக்கியா பிரதமர் சுடப்பட்டது தொடர்பாக சம்பவ இடத்தில் ஒரு நபர் காவலர்களால் கைது செய்யப்பட்டார். அவர் யார்?, அவர்தான் பிரதமரை துப்பாக்கியால் சுட்டாரா? பிரதமர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட என்ன காரணம்? என்பன போன்ற விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,பிரதமர் மீது தாக்குதல் நடத்தியதாக ஒருவரை கைது செய்துள்ளனர் காவல்துறையினர்.   பட மூலாதாரம்,EPA படக்குறிப்பு,ஸ்லோவாக்கியா பிரதமர் மீதான தாக்குதலை உலகத் தலைவர்கள் கண்டித்துள்ளனர். உலகத் தலைவர்கள் கண்டனம் ஸ்லோவாக்கியா பிரதமர் ராபர்ட் மீதான தாக்குதலை உலக தலைவர்கள் பலரும் கண்டித்துள்ளனர். ஸ்லோவாக்கியா அதிபர் சுசானா கேப்புட்டவா, இந்த தாக்குதலை மிருகத்தனமானது மற்றும் இரக்கமற்றது என விமர்சித்துள்ளார். “நான் இந்த தகவலைக் கேட்டு அதிர்ச்சியடைந்தேன். இந்த மோசமான சூழ்நிலையில், தாக்குதலில் இருந்து மீண்டு வர ராபர்ட் ஃபிகோவுக்கு கூடுதல் வலிமை கிடைக்க வேண்டுகிறேன்” என்று அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன், ஃபிகோ மீதான இந்த மோசமான தாக்குதலை தான் கண்டிப்பதாக கூறியுள்ளார். ருமேனிய பிரதமர் மார்செல் சியோலாகு, துப்பாக்கிச் சூடு பற்றிய செய்தியைக் கேட்டு தான் "ஆழ்ந்த அதிர்ச்சியில்" இருப்பதாககூறியுள்ளார். செக். குடியரசு நாட்டின் பிரதமர் பீட்டர் ஃபியாலா, இந்த சம்பவம் "அதிர்ச்சியூட்டுவதாகவும்”, ஃபிகோ விரைவில் குணமடைய விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். ஹங்கேரி பிரதமர் விக்டர் ஓர்பன் கூறுகையில், "எனது நண்பரான பிரதமர் ராபர்ட் ஃபிகோவுக்கு எதிரான இந்த கொடூரமான தாக்குதலால் நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன்" என்று கூறியுள்ளார். இங்கிலாந்து பிரதமரான ரிஷி சுனக் தனது எக்ஸ் பக்கத்தில், “இந்த பயங்கரமான தாக்குதல் சம்பவத்தை கேட்டு அதிர்ச்சியடைந்துள்ளேன். நாங்கள் அனைவரும் ஃபிகோ மற்றும் அவரது குடும்பத்தாரையே நினைத்துக் கொண்டிருக்கிறோம்” என்று பதிவிட்டுள்ளார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஸ்லோவாக்கியா பிரதமர் மீதான தாக்குதலை கண்டித்துள்ளார் யுக்ரேனிய அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி யுக்ரேன் அதிபர் கண்டனம் யுக்ரேன் அதிபர் வோலோதிமிர் ஜெலென்ஸ்கி இந்த தாக்குதலை பயங்கரமானது என்று கூறியுள்ளார். எந்த ஒரு நாட்டிலும், எந்த வடிவத்திலும் வன்முறைக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். நேட்டோ தலைவர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க், தங்களது சிந்தனை முழுவதும் ராபர்ட் ஃபிகோ மற்றும் அவரது அன்புக்குரியவர்கள், ஸ்லோவாக்கியாவின் மக்களோடு இருப்பதாக தெரிவித்துள்ளார். https://www.bbc.com/tamil/articles/c9rzrlekkn1o
    • தங்கள் உறவுகளை நினைவேந்தும் உரிமை மக்களுக்கு உண்டு. அதைச் சட்டத்தாலும் மறுக்க முடியாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.  நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன்(Charles Nirmalanathan) மற்றும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன்(Mano Ganesan ) ஆகிய இருவரிடமும் தொடர்பு கொண்டு பேசிய போதே இதனை கூறியுள்ளார். மேலும், ‘‘திருகோணமலை, மூதூர் - சம்பூரில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறியமைக்காகக் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டவர்கள் விரைவில் பிணையில் விடுவிக்க வழி செய்யப்படுவார்கள். பொலிஸ் கெடுபிடி அது தொடர்பாக பொதுப் பாதுகாப்பு அமைக்க டிரான் அலஸ் உரிய தரப்புகளுக்கு வழிகாட்டல் விடுத்திருக்கின்றார்.” என்றும் இந்த உரையாடல்களின்போது ஜனாதிபதியால் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மனோ கணேசன் எம்.பி. நேற்று (15) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, ‘‘கிழக்கில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் பொலிஸ் கெடுபிடி, அராஜகம் குறித்து விசனத்துடன் முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதை விவரமாகச் செவிமடுக்க முன்னரே, இவ்விடயம் குறித்து சார்ள்ஸ் நிர்மலநாதன் எம்.பி. தன்னுடன் தொடர்பு கொண்டு பேசினார் என்றும், சம்பூரில் கைதானோரைப் பிணையில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மனோ கணேசனுக்குத் தெரிவித்துள்ளார். "உயிரிழந்தவர்களுக்காக உறவுகள் நினைவேந்தல் செய்வது அந்த உறவுகள் ஒவ்வொருவரினதும் உரிமை. அதை ஏன் தடை செய்யப் பொலிஸார் முனைகின்றனர் என்பது எனக்கு விளங்கவில்லை." என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார். மனோ கணேசன் எம்.பி. வலியுறுத்து “இது தொடர்பில் அரசுத் தலைவராக நீங்கள் ஒரு கொள்கை ரீதியான முடிவு எடுத்து, அதைப் பகிரங்கமாக அறிவித்துப் பொலிஸாருக்கும் நாட்டுக்கும் தெளிவான வழிகாட்டுதலை வழங்க வேண்டும்.   அதற்கான காலம் இதுதான். 'தடை செய்யப்பட்ட இயக்கத்துடன் அல்லது அமைப்புடன் தொடர்பு படுத்தாமல் தங்கள் உறவுகளை நினைவேந்த அனைத்து மக்களுக்கும் உரிமையுண்டு. அதை அங்கீகரிக்கின்றோம். அதைத் தடுக்க முடியாது. தடுக்கக் கூடாது. என்ற கொள்கைப் பிரகடனத்தை நீங்கள் தெளிவாக வெளிப்படுத்த வேண்டும்.''  என்று ஜனாதிபதியிடம் இதன்போது மனோ கணேசன் எம்.பி. வலியுறுத்தியுள்ளார். ஒவ்வொருவருக்கும் மறைந்த தங்கள் உறவுகளை நினைவேந்த உரிமையுண்டு என ஏற்கனவே தாம் ஜனாதிபதி பதவிக்கு வந்த உடனேயே ரணில் விக்ரமசிங்க அறிவித்திருந்தார். எனினும் அவரின் கீழே இயங்கும் பொலிஸ் கட்டமைப்பு வேறு நிகழ்ச்சி நிரலில் விடயங்களைக் கையாள்வது இப்போது நிரூபணமாகி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. https://tamilwin.com/article/mullivaikkal-remembrance-ranil-speech-1715819542
    • இது ரணிலை விழுத்தவென்றே யாரோ செய்த சதி. ரணில் தான் தமிழர்களிள் நண்பனாச்சே.
    • ஒரு ஜென்ட்ரல் நொலேட்ஜ்ஜுக்காக: எங்கண்ட ஜூயிஸ் பீப்பிளும் போர்க், ஹம் ஒண்டும் சாப்பிட்றேல்ல!
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.