Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணம் வருகின்றார் எரிக் சொல்ஹெய்ம்

April 29, 2024
 
யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டியில் அமைந்துள்ள ரப்றோபானா சீ பூட் நிறுவனத்திற்கு நோர்வேயின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் எரிக் சொல்கெய்ம் உள்ளிட்ட நோர்வே குழுவினர் வருகை தருகின்றனர்.

நியூசிலாந்தைச் சேர்ந்த ஒருவரின் முதலீட்டில் இயங்கும் இந்த நிறுவனத்தின் பணிகளை ஆராய்தல் மற்றும் எதிர்காலத் திட்டமிடல் போன்ற நடவடிக்கைகளுக்காகவே நாளை செவ்வாய்கிழமை மாலை 4 மணிக்கு இந்தக் குழுவினர் யாழ்ப்பாணம் வருகை தருகின்றனர்.

இக்குழுவில் நோர்வேயின் முன்னாள் வெளிவிவகார அமைச்சரும், இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவின் சுற்றுச் சூழல் விவகார ஆலோசகருமான எரிக் சொல்ஹெய்முடன் நோர்வேயின் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட குழுவினர் இவ்வாறு வருகை தருகின்றனர்.

https://www.ilakku.org/யாழ்ப்பாணம்-வருகின்றார்/

  • கருத்துக்கள உறவுகள்

"இலங்கைஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவின் சுற்றுச் சூழல் விவகார ஆலோசகருமான எரிக் சொல்ஹெய்முடன் நோர்வேயின் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட குழுவினர் இவ்வாறு வருகை தருகின்றனர்."

சிங்களத்தை முட்டாள் முட்டாள் என்று கூறியே தனது தலையில் தானே மண்ணை அள்ளிப் போட்டுக்கொண்ட தமிழர் நாங்கள்...... 🤦🏼‍♂️

  • கருத்துக்கள உறவுகள்

தமிழருக்கு தீர்வு கிடைப்பதை திட்டமிடப்பட்ட வகையில் இல்லாமல் செய்வதை வைத்து  சிங்களம் புத்திசாலித்தனம்  என்று முடிவு செய்ய முடியாது  இன்றைய எதிர்கால நாட்டின் நிலைமை வைத்து தான்  சிங்களம் இன் புத்திசாலித்தனத்தை  முடிவு செய்ய வேண்டும்   தமிழர்கள் இலங்கைக்கு வரவில்லை என்றால் தமிழர்கள் இலங்கைக்கு பணம் அனுப்பவில்லை என்றால்   சிங்களத்தின். புத்திசாலித்தனம் தெரியும்   உலகில் முதலாவது பிச்சைகார நாடு இலங்கை ஆகத் தான் இருக்கும் 

  • கருத்துக்கள உறவுகள்

புத்திசாலித்தனத்திற்கும் முட்டாள்தனத்திற்கும் வேறுபாடு தெரியாத ஆட்களாக நாம் இருக்கையில் சிங்களத்தின்பாடு கொண்டாட்டம்தான் 😩

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Kapithan said:

புத்திசாலித்தனத்திற்கும் முட்டாள்தனத்திற்கும் வேறுபாடு தெரியாத ஆட்களாக நாம் இருக்கையில் சிங்களத்தின்பாடு கொண்டாட்டம்தான் 😩

புத்திசாலித்தனத்துக்கும் நரித்தனத்துக்குமான வித்தியாசம் தெரிந்தால் நரித்தனத்தை விட்டு விலகி வாழ்தல் உன்னத இனத்தின் அடையாளம் என்பது புரியும்.😷

  • கருத்துக்கள உறவுகள்
Just now, விசுகு said:

புத்திசாலித்தனத்துக்கும் நரித்தனத்துக்குமான வித்தியாசம் தெரிந்தால் நரித்தனத்தை விட்டு விலகி வாழ்தல் உன்னத இனத்தின் அடையாளம் என்பது புரியும்.😷

சிறு திருத்தம். 

நரித்தனத்தைவிட்டு விலகி அகதியாக வாழ்தல் என்று வரவேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Kapithan said:

சிறு திருத்தம். 

நரித்தனத்தைவிட்டு விலகி அகதியாக வாழ்தல் என்று வரவேண்டும். 

ஆட்டுக்குள் மாடு??

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

ஆட்டுக்குள் மாடு??

2 hours ago, விசுகு said:

ஆட்டுக்குள் மாடு??

வித்தியாசத்தைக் கொஞ்சம் புரியும்படி விளக்கிவிடுறது,.   ? 

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, Kapithan said:

வித்தியாசத்தைக் கொஞ்சம் புரியும்படி விளக்கிவிடுறது,.   ? 

அதெல்லாம் நித்திரை கொள்பவனுக்கு மட்டும் தான். 

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, விசுகு said:

அதெல்லாம் நித்திரை கொள்பவனுக்கு மட்டும் தான். 

உங்களுக்கே தெரியாதா? 

😁

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விசுகு said:

புத்திசாலித்தனத்துக்கும் நரித்தனத்துக்குமான வித்தியாசம் தெரிந்தால் நரித்தனத்தை விட்டு விலகி வாழ்தல் உன்னத இனத்தின் அடையாளம் என்பது புரியும்.😷

சிங்களவரும்.  தமிழரும். இலங்கையில் சம எண்ணிக்கையில் இருந்திருந்தால்      சிங்களவர்கள்.  புத்திசாலிகள். என்ற பேச்சுக்கு இடம்மிருக்காது   

ஆகவே 

பெரும்பான்மை = புத்திசாலித்தனம் 🤣😀😂

இப்போது வெளிநாடுகளில் வாழும் இலங்கை தமிழர்கள் அனேகமனேர்.  அகதிகள் இல்லை  அந்தந்த நாட்டின் குடியுரிமை பெற்றவர்கள் வசிக்கும் நாட்டின் குடிமக்கள்  

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களத்தின் சாணக்கியத்தை ஏற்றுக்கொள்வதில் பலருக்கு கெளரவக் குறைச்சல். 

😏

2 minutes ago, Kandiah57 said:

அகதி என்றவுடன் கந்தையருக்கு பழைய ஞாபகங்கள் வந்து தொலைக்குதோ? 

😁

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Kapithan said:

சிங்களத்தின் சாணக்கியத்தை ஏற்றுக்கொள்வதில் பலருக்கு கெளரவக் குறைச்சல். 

😏

அகதி என்றவுடன் கந்தையருக்கு பழைய ஞாபகங்கள் வந்து தொலைக்குதோ? 

😁

நான் அகதி இல்லை  பல. வருடங்களாக உழைத்து  வரி காட்டி உள்ளேன்  என்னுடைய பிள்ளைகளும்  அதிகம் வரி. காட்டுகிறார்கள்    1998 இருந்து ஜேர்மன் குடிமகன்   அகதி என்றால் என்ன என்பதை தெளிவாக தெரிந்து கொள்ளுங்கள்   

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, Kandiah57 said:

நான் அகதி இல்லை  பல. வருடங்களாக உழைத்து  வரி காட்டி உள்ளேன்  என்னுடைய பிள்ளைகளும்  அதிகம் வரி. காட்டுகிறார்கள்    1998 இருந்து ஜேர்மன் குடிமகன்   அகதி என்றால் என்ன என்பதை தெளிவாக தெரிந்து கொள்ளுங்கள்   

தற்போது  😁

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

நான் அகதி இல்லை  பல. வருடங்களாக உழைத்து  வரி காட்டி உள்ளேன்  என்னுடைய பிள்ளைகளும்  அதிகம் வரி. காட்டுகிறார்கள்    1998 இருந்து ஜேர்மன் குடிமகன்   அகதி என்றால் என்ன என்பதை தெளிவாக தெரிந்து கொள்ளுங்கள்   

அகதியாய் ஆக்கியவனை தொழுதபடி அகதியாய் ஆக்கப்பட்ட அப்பாவி மக்களை கேலி செய்யும் இவர் போன்றவர் ஈனப் பிறவிகள் காண். 

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, விசுகு said:

அகதியாய் ஆக்கியவனை தொழுதபடி அகதியாய் ஆக்கப்பட்ட அப்பாவி மக்களை கேலி செய்யும் இவர் போன்றவர் ஈனப் பிறவிகள் காண். 

ஒருவனை துரோகி என்று கூறி முத்திரை குத்தி ஒதுக்குவீர்ள் அல்லது அவனைச் சுட்டுக் கொல்வீர்கள். அது முடியாவிட்டால் அவனைக் கேலி செய்வீர்கள். 

இது தவிர வேறேதும் தங்களால் முடியாது.  ஏன்  நீங்கள் அப்படி?  

இதற்கு அப்பால்  சிந்திக்க வேண்டும் விசுகர். சமூகத்தில் முக்கிய பொறுப்பில் இருந்ததாகக் கூறிக்கொள்ளும் தாங்கள் உங்களின் தகுதியை மேலும் வளர்த்துக்கொள்ள வேண்டும். அதுதான் உங்களுக்கு மேலும்  பெருமை சேர்க்கும்.  👍

(நானும் ஒரு காலத்தில் அகதிதான். ஆகவே நான்  இன்னொருவரைக் கேலி செய்வதாகக் கூறும் தங்களின் கூற்று வலுவிழந்து போகிறது )!

@விசுகு -1  போடுவதில் இருக்கும் வேகம் தங்களின் சிந்தனை வளர்ச்சியிலும்  காட்ட வேண்டும். 👍

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Kapithan said:

ஒருவனை துரோகி என்று கூறி முத்திரை குத்தி ஒதுக்குவீர்ள் அல்லது அவனைச் சுட்டுக் கொல்வீர்கள். அது முடியாவிட்டால் அவனைக் கேலி செய்வீர்கள். 

இது தவிர வேறேதும் தங்களால் முடியாது.  ஏன்  நீங்கள் அப்படி?  

இதற்கு அப்பால்  சிந்திக்க வேண்டும் விசுகர். சமூகத்தில் முக்கிய பொறுப்பில் இருந்ததாகக் கூறிக்கொள்ளும் தாங்கள் உங்களின் தகுதியை மேலும் வளர்த்துக்கொள்ள வேண்டும். அதுதான் உங்களுக்கு மேலும்  பெருமை சேர்க்கும்.  👍

நான் எழுதுவதற்கு மட்டுமே நான் பொறுப்பு. உங்கள் கற்பனை அல்லது புனைதல்களுக்கு அல்ல.

உங்களுக்கு நீங்களே துரோகிப்பட்டம் கொடுப்பதன் அரசியல் புரிந்தவன். ஏனெனில் உங்களை போன்ற பலரை தாண்டி வந்தவன். 

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, விசுகு said:

நான் எழுதுவதற்கு மட்டுமே நான் பொறுப்பு. உங்கள் கற்பனை அல்லது புனைதல்களுக்கு அல்ல.

உங்களுக்கு நீங்களே துரோகிப்பட்டம் கொடுப்பதன் அரசியல் புரிந்தவன். ஏனெனில் உங்களை போன்ற பலரை தாண்டி வந்தவன். 

அகதியாய் ஆக்கியவனை தொழுதபடி அகதியாய் ஆக்கப்பட்ட அப்பாவி மக்களை கேலி செய்யும் இவர் போன்றவர் ஈனப் பிறவிகள் காண்

உது தாங்கள் எழுதியது 👆 நாங்கள் இன்னும் அகதிகளாக அலைந்துகொண்டிருப்பதற்கு இதைப்போன்ற சிந்தனைகளே காரணம். 

(பலரைத்  தாண்டி வந்திருந்தால் இன்னும் அதிகம் பண்பட்டிருப்பீர்கள் என நினைக்கிறேன். )

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Bild

இரு நதிகள் ஒன்றாக இணைந்த பின்.....😂

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, குமாரசாமி said:

இரு நதிகள் ஒன்றாக இணைந்த பின்.....😂

இரு நரிகள என்று வந்திருக்க வேண்டும் . தாத்தா மப்பிலை எழுத்துப்பிழை விட்டிட்டார். ;

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதியின் சர்வதேச காலநிலை ஆலோசகர் எரிக் சொல்ஹெய்ம் வடக்கு மாகாண ஆளுநருடன் சந்திப்பு

Published By: DIGITAL DESK 7   01 MAY, 2024 | 09:19 AM

image
 
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சர்வதேச காலநிலை ஆலோசகரும், முன்னாள் நோர்வே வெளிவிவகார அமைச்சருமான எரிக் சொல்ஹெய்ம் (Mr. Erik Solheim) வடக்கு மாகாண ஆளுநர் பி. எஸ். எம். சார்ள்ஸ்  செவ்வாய்க்கிழமை  சந்தித்து கலந்துரையாடினார்.

IMG-20240430-WA0110__1_.jpg

வடக்கு மாகாண  ஆளுநரின் யாழ்ப்பாணத்திலுள்ள உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

வடக்கு மாகாணத்தின்  தற்போதைய நிலை, மீள்குடியேற்ற நடவடிக்கையின் முன்னேற்றம்,  எதிர்கால அபிவிருத்தி செயற்பாடுகள், சுற்றாடல் மற்றும் அனர்த்த முகாமைத்துவ நடவடிக்கைகள்  உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் இதன்போது  கலந்துரையாடப்பட்டது.

IMG-20240430-WA0109__1_.jpg

https://www.virakesari.lk/article/182377

  • கருத்துக்கள உறவுகள்

கிளிநொச்சி 8 மணி நேரம் முன்

1955948160.jpg

தமிழீழ விடுதலைப்புலிகளின் தடங்களை மீட்டுக்கொண்ட எரிக்சொல்ஹெய்ம்!

(அமுதரசி) 

நோர்வேயின் இலங்கைக்கான முன்னாள் சமாதான தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் இன்று (01) கிளிநொச்சிக்கு தனிப்பட்ட பயணமொன்றை மேற்கொண்டார். 

தான் சமாதான தூதுவராக பணியாற்றிய போது கிளிநொச்சிக்கு பயணம் செய்து விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன் ஆகியோரைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்திய இடங்களை மீண்டும் ஒரு தடவை பார்த்துவிட்டு செல்வதற்காக கிளிநொச்சிக்கு இன்று சென்றிருந்தார்.

இவ்வாறாக அவர் பரவிபாஞ்சானில் அமையப்பெற்றிருந்த அரசியல்துறை நடுவப் பணியகம், மற்றும் சமாதான செயலகத்தைப் பார்வையிட்டார். குறித்த இடங்களின் பௌதீக சூழல் மாறியிருந்ததன் காரணமாக அவரால் இடங்களை அடையாளப்படுத்த முடியாமல் போனதாகவும், அந்தக் காலத்தில் அவ்விடங்களில் வைத்து விடுதலைப்புலிகளின் தலைவரை சந்தித்த படங்களை இணையத்தளத்திலிருந்து தரவிறக்கி நிகழ்காலத்துடன் அவ்விடங்களை ஒப்பிட்டு பசுமையான நினைவுகளை அவர் மீட்டுக்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அவர் சமாதான தூதுவராக கிளிநொச்சிக்கு வருகை தந்த காலத்தில் ஈழநாதம் பத்திரிகையில் பணியாற்றிய தமிழ்ச்செல்வன் என்பவரையும்  சந்தித்து தனது கடந்தகால நினைவுகளை பகிர்ந்துகொண்டதாகவும் கூறப்படுகிறது.

தற்போது அங்கு வசிக்கின்ற ஒரு பெண்ணிடம் நாட்டின் நிலைமை பற்றி என்ன நினைக்கின்றீர்கள் என வினவிய போது சண்டை மட்டுமே இப்போது இல்லை, மற்றும்படி நாங்கள் எதிர்பார்த்த வேறு எதுவும் நடக்கவில்லை என்று ஒற்றை வரியில் ஆழமான ஒரு பதிலை வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. (ஏ)தமிழீழ விடுதலைப்புலிகளின் தடங்களை மீட்டுக்கொண்ட எரிக்சொல்ஹெய்ம்! (newuthayan.com)

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, பிழம்பு said:

கிளிநொச்சி 8 மணி நேரம் முன்

1955948160.jpg

தற்போது அங்கு வசிக்கின்ற ஒரு பெண்ணிடம் நாட்டின் நிலைமை பற்றி என்ன நினைக்கின்றீர்கள் என வினவிய போது சண்டை மட்டுமே இப்போது இல்லை, மற்றும்படி நாங்கள் எதிர்பார்த்த வேறு எதுவும் நடக்கவில்லை என்று ஒற்றை வரியில் ஆழமான ஒரு பதிலை வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

அங்கே மக்கள் சேர்ந்து வாழ்கின்றனர். நீங்கள் தான் வேறு உலகத்தில் இருந்து குழப்புகிறீர்கள் என்போர் வாசிக்க விரும்பாத கருத்து. 

  • கருத்துக்கள உறவுகள்

எரிக் ஈழத் தமிழர் எல்லோருடைய வாய்க்குள்ளும் ஒருசேர ஆப்பைச்  செருகியுள்ளார். 

ஈழத் தமிழரைக் கவனிப்பார் யாருமில்லை. 

🥺

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, பிழம்பு said:

தற்போது அங்கு வசிக்கின்ற ஒரு பெண்ணிடம் நாட்டின் நிலைமை பற்றி என்ன நினைக்கின்றீர்கள் என வினவிய போது சண்டை மட்டுமே இப்போது இல்லை, மற்றும்படி நாங்கள் எதிர்பார்த்த வேறு எதுவும் நடக்கவில்லை என்று ஒற்றை வரியில் ஆழமான ஒரு பதிலை வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இதுக்கும் எரிக் அண்டு சொன்ன வழமையான பதிலைத்தான் சொல்லியிருக்கும்......😎

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.