Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

திருப்பூர்: திருப்பூரில் தமிழக இளைஞர்களை வடமாநிலத்தவர் ஓட ஓட விரட்டியதாக வெளியான வீடியோ பரபரப்பைக் கிளப்பியுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் குதித்துள்ளனர். பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பிழைப்பு தேடி தமிழ்நாட்டிற்கு வருகை தருவது தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. வடமாநிலங்களில் சம்பளம் குறைவாக உள்ளதாலும் வேலைவாய்ப்பு பெரியளவில் இல்லை என்பதாலும் அவர்கள் தமிழ்நாட்டிற்கு வருகிறார்கள்.

ஹோட்டல், கட்டிட பணிகளுக்கு வெளிமாநில தொழிலாளர்களே அதிகம் இங்கு வருகிறார்கள்.. இருப்பினும், இப்படி அதிகப்படியாக வரும் வடமாநிலத்தவரால் தமிழர்களுக்கு வேலை கிடைப்பதில்லை என்ற புகார் இருந்து கொண்டேதான் இருக்கிறது.

வடமாநிலத்தவர் ஊதியம், தொடர்ச்சியாக வேலை கிடைப்பது உள்ளிட்டவற்றால் வடமாநில தொழிலாளர்களைத் தொடர்ந்து தமிழ்நாட்டிற்கு வர ஆர்வம் காட்டுகிறார்கள். இது எப்போதோ நடக்கும் சம்பவம் இல்லை.. வட இந்தியாவில் இருந்து வரும் எந்தவொரு ரயில்களைப் பார்த்தாலும் நமக்கு இது புரியும். வடமாநிலத்தவர் மார்கெட்டை காட்டிலும் குறைந்த விலையில் வேலை பார்ப்பதாகவும் இதன் காரணமாகவே தமிழர்களுக்கு வேலை கிடைப்பதில்லை என்ற புகாரும் எழுந்துள்ளன. திருப்பூர் இருப்பினும், குறைந்த விலையில் ஆட்கள் தேவை இருப்பதால் வடமாநிலத்தவர் தொடர்ந்து இங்கு வந்து கொண்டு தான் இருக்கிறார்கள். முதலில் சென்னை உட்பட பெருநகரங்களில் மட்டுமே இவர்கள் அதிகம் வந்து கொண்டிருந்த நிலையில், இப்போது சென்னையைத் தாண்டி மற்ற சிறு நகரங்களிலும் செட்டில் ஆகத் தொடங்கியுள்ளனர். குறிப்பாகத் திருப்பூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களுக்குச் சென்றால் வடமாநிலத்தவரையே பெரும்பாலான இடங்களில் பார்க்க முடியும். பரபர வீடியோ இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு சமூக வலைத்தளங்களில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட வடமாநிலத்தவர்கள் தமிழக இளைஞர்களை ஓட ஓட விரட்டுவது போன்ற வீடியோ ஒன்று இணையத்தில் வேகமாகப் பரவி வந்தது. இது எங்கோ எடுத்தது இல்லை.. நம்ம திருப்பூரில் நடந்த சம்பவம் தான் இது. அங்கிருந்த தமிழக இளைஞர்களைப் பல நூறு வடமாநிலத்தவர்கள் இணைந்து ஓட ஓட விரட்டிய சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வெளியாகப் புயலைக் கிளப்பியது. போராட்டம் அனுப்பர் பாளையத்தில் தமிழக தொழிலாளர்களைத் தாக்க முயன்றவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தந்தை பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் வடமாநில தொழிலாளர்களின் செயலுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து சம்பந்தப்பட்ட பனியன் அலுவலகத்தைத் திருப்பூர் மேயர் ந.தினேஷ்குமார் ஆய்வு செய்து போராடியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆட்சியர் அலுவலகம் முற்றுகை இருப்பினும், தமிழர்களைத் தாக்கிய வடமாநிலத் தொழிலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டும் நேற்று பல்வேறு தரப்பினரும் போராட்டம் நடத்தினர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சமாதானப்படுத்தினர். இதனால் அங்குச் சற்று பதற்றமான ஒரு சூழல் உருவானது.

இதன் காரணமாகப் பாதுகாப்பு கருதிச் சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்குப் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இது தொடர்பாகத் திருப்பூர் போலீசார் தரப்பில் கூறுகையில், "புகை பிடித்தல் குறித்து இரு தரப்பிற்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினை தகராறாக மாறியுள்ளது. இந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். இருப்பினும், சமூக வலைத்தளங்களில் சிலர் தவறான தகவல் பரப்பி வருகின்றனர்" என்றார்

Read more at: https://tamil.oneindia.com/news/tiruppur/many-tamil-groups-are-protesting-against-north-indians-attacking-tamils-in-tiruppur/articlecontent-pf852979-496221.html
 

  • கருத்துக்கள உறவுகள்

இது தான் பிரச்சனை.

தமிழர் எங்கு சென்றாலும், எதிலும் குழு முனைப்பு இல்லை.

முக்கியமாக, சென்ற இடத்தில உள்ள வழங்ககங்கள், கலாசாரங்களை, பழக்கவழக்கங்களை . வேண்டும் என்றால் வீட்டுக்குள் கூட மாற்றி, எவ்வளவு இயைந்து வாழமுடியுமா அதுக்கிம் மேலான முயற்சி, அந்த சமூக பாரம்பரியங்களோடு சேர்ந்து ஒத்து வருவதற்கு    

தமிழர் நிர்வாக பகுதிக்கு வந்தோர், குழு முனைப்பு, அதுவும் மண்ணின் குடிகளான (இப்பொது) தமிழரை அடிப்பதில்.

உண்மையில், தமிழ்நாடு நிர்வாகம் ஓர் படிப்பனை வழங்காவிட்டால், கையில் இருந்ததும் பறிபோகும்.

நிச்சயம், யார் ஆட்சியாளர் என்பதை தமிழக அரசு அப்பட்டமாக எடுத்து காட்ட வேண்டும், கொடுக்கும் படிப்பினை மூலமாக.


(புகை பிடித்தல் பிரச்னைக்கே குழுவாக எதிர்க்கும்  முயறசி என்றால் ... )

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, Kadancha said:

இது தான் பிரச்சனை.

தமிழர் எங்கு சென்றாலும், எதிலும் குழு முனைப்பு இல்லை.

முக்கியமாக, சென்ற இடத்தில உள்ள வழங்ககங்கள், கலாசாரங்களை, பழக்கவழக்கங்களை . வேண்டும் என்றால் வீட்டுக்குள் கூட மாற்றி, எவ்வளவு இயைந்து வாழமுடியுமா அதுக்கிம் மேலான முயற்சி, அந்த சமூக பாரம்பரியங்களோடு சேர்ந்து ஒத்து வருவதற்கு    

தமிழர் நிர்வாக பகுதிக்கு வந்தோர், குழு முனைப்பு, அதுவும் மண்ணின் குடிகளான (இப்பொது) தமிழரை அடிப்பதில்.

உண்மையில், தமிழ்நாடு நிர்வாகம் ஓர் படிப்பனை வழங்காவிட்டால், கையில் இருந்ததும் பறிபோகும்.

நிச்சயம், யார் ஆட்சியாளர் என்பதை தமிழக அரசு அப்பட்டமாக எடுத்து காட்ட வேண்டும், கொடுக்கும் படிப்பினை மூலமாக.


(புகை பிடித்தல் பிரச்னைக்கே குழுவாக எதிர்க்கும்  முயறசி என்றால் ... )

ஸ்டாலின் அந்த செய்தியை தன்னுடைய தேர்தல் பிரசாரத்துக்கு பயன்படுத்தி கொண்டார் .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, Kadancha said:

உண்மையில், தமிழ்நாடு நிர்வாகம் ஓர் படிப்பனை வழங்காவிட்டால், கையில் இருந்ததும் பறிபோகும்.

நிச்சயம், யார் ஆட்சியாளர் என்பதை தமிழக அரசு அப்பட்டமாக எடுத்து காட்ட வேண்டும், கொடுக்கும் படிப்பினை மூலமாக.

 

போற போக்கைப் பார்த்தால் இலங்கைத் தமிழரின் நிலை தமிழ் நாட்டிலும் வருமோ என எண்ணத் தோன்றுகிறது.

22 minutes ago, பெருமாள் said:

ஸ்டாலின் அந்த செய்தியை தன்னுடைய தேர்தல் பிரசாரத்துக்கு பயன்படுத்தி கொண்டார் .

 

  • கருத்துக்கள உறவுகள்

இதற்கு ஒரே பரிகாரம் - இந்திய ஒன்றியத்தில் இருந்து தமிழ் நாட்டை பிரித்து தனித்தமிழ் நாடு ஆக்குவதே…

ப் பூ ஹா…ஹா.ஹா…🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, goshan_che said:

இதற்கு ஒரே பரிகாரம் - இந்திய ஒன்றியத்தில் இருந்து தமிழ் நாட்டை பிரித்து தனித்தமிழ் நாடு ஆக்குவதே…

ப் பூ ஹா…ஹா.ஹா…🤣

இதே பிரச்சனைதான் இலங்கையிலும் நடக்கின்றது.
அங்கேயும் இதே கொள்கையை பரிந்துரை செய்வீர்களா சார்?? :cool:

ப் பூ ஹா....ஹா....ஹா... 🤣

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, குமாரசாமி said:

இதே பிரச்சனைதான் இலங்கையிலும் நடக்கின்றது.
அங்கேயும் இதே கொள்கையை பரிந்துரை செய்வீர்களா சார்?? :cool:

ப் பூ ஹா....ஹா....ஹா... 🤣

இல்லை சார்….அங்கே இதே கொள்கையை முயற்சித்தும் முடியாமல் போய்விட்டது சார்….இப்போதைக்கு முயற்சிக்கும் வாய்ப்புகளும் இல்லை சார்.

ஆனால் தமிழ்நாட்டில் அப்படி இல்லையே சார்?

முன்னர் இன்னொரு திரியில் எழுதி இருந்தேன் விபரமாக, வட கிழக்கு மாநிலங்கள் தவிர இந்தியாவில் வேறு எங்கும் யாரும் போய் வாழலாம். கிட்டதட்ட ஈயுவில் இருக்கும் freedom of movement போல், இந்தியாவில் மாநிலங்கள் இடையே உள்ளது. 

இந்த freedom of movement பெரும்பான்மை பிரித்தானியருக்கு (எனக்கல்ல) பிடிக்காத படியால் பிரிட்டன் பிரெக்சிற் கேட்டு வெளியே வந்தது. இப்போ இங்கே ஐரோப்பிய எழுந்த மானமாக வந்து குடியேற முடியாது.

அதேபோல் இந்திய ஒன்றியத்தில் தமிழ் நாடு இருக்கும் வரை இதை தடுக்க முடியாது.

ஆக, TN-exit தான் ஒரே வழி.

எந்த தமிழ் நாட்டு அரசியல் கட்சி இதற்கு தயார்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 minutes ago, goshan_che said:

முன்னர் இன்னொரு திரியில் எழுதி இருந்தேன்

எந்த திரி ஐயா?

நீங்கள் எழுதின எல்லாத்தையும் மண்டைக்குள் திணிச்சு வைக்க இடமில்லை ஐயா?

லிங்க் பிளீஸ்  🙏🏼

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

எந்த திரி ஐயா?

நீங்கள் எழுதின எல்லாத்தையும் மண்டைக்குள் திணிச்சு வைக்க இடமில்லை ஐயா?

லிங்க் பிளீஸ்  🙏🏼

தேடுகிறேன். இதே போல் வட மாநிலத்தவர் பற்றிய திரி ஒன்றுதான்.

  • கருத்துக்கள உறவுகள்

சீமானின் இந்த கோரிக்கை மிக நியாயமானது.

ஆனால், வடகிழக்கு மாநிலங்கள் போன்ற சர்ச்சைகுரிய சர்வதேச எல்லை உள்ள பகுதியில், சர்வதேச எல்லைக்கும், நாட்டின் உள்ளக கோட்டுக்கும் (inner line) இடையே செல்ல, மட்டுமே இதுவரை இந்த பெர்மிட் பயன்பாட்டில் உள்ளது.

இந்தியாவின் அரசியல்சட்டம் இந்தியருக்கு, இந்தியாவுள் பூரண நடமாடும் சுதந்திரத்தை (Freedom of movement) கொடுக்கிறது.

இன்னர் லைன் பெர்மிட் என்பது அடிப்படையில் நாட்டின் பாதுகாப்பு, சர்வதேச நில எல்லை சம்ப்னதமானது.

மஹாராஸ்டிரா, கர்னாநடகா, டெல்லி, மேற்கு வங்கம், ஆந்திரா உட்பட எந்த வடகிழக்கு இந்தியாவுக்கு வெளியே உள்ள மாநிலத்திலும் இந்த நடைமுறை இல்லை.

அதேபோல் கஸ்மீரின் இதை ஒத்த காணி வாங்கும் “விசேட அந்தஸ்தை” இந்திய பாராளுமன்று சில வருடங்கள் முன் இல்லாமல் ஆக்கியது.

ஆகவே தமிழ்நாட்டில் இந்த இன்னர் லைன் பெர்மிட்டை கொண்டு வருவதில் பின்வரும் சிக்கல்கள் உண்டு.

1. கர்நாடகா, கேரளா, ஆந்திரா போன்ற தமிழ் நாட்டை போன்ற சர்வதேச கடல் எல்லை மட்டும் உடைய நாடுகள் எதுவும் இதை கோராதவிடத்து, தமிழ் நாடு மட்டும் கோருவது, எது இங்கே இன்னர் லைன் என்ற கேள்வியையும், கூடவே இது நாட்டின் எல்லை பாதுகாப்புக்கு தேவையற்ற கோரிக்கை என்பதையும் காட்டி நிற்கும்.

2. அப்போ தமிழ் நாடு அரசு இப்படி கோருவது, தனியே வேற்று மாநிலத்தவரை தடுக்க என்றே கருதப் படும். அப்போது இதஈ எதிர்த்து வழக்கு போட்டால் - உச்ச நீதிமன்றம் இந்த பெர்மிட்டை தள்ளுபடியாக்கலாம்.

ஆனால் வழக்கு போடும் மட்டும் தமிழ்நாடு அரசு முயலாலாம்.

3. உண்மையில் பாரிய பிரச்சனை தமிழ் நாட்டில் இருந்து வெளியே போய் வேலை செய்வோரின் நலன் பற்றியதே. ஏனைய மாநிலங்களும் இதையே செய்தால் டெல்லி, பம்பாய், பெங்களூர், ஹைதரபாத், இன்னும் பல வெளிமாநிலங்களில் நல்ல வேலைகளில் இருக்கும் தமிழ் நாட்டவருக்கு ஆப்பாக முடியும்.

ஆகவே இந்திய ஒருமைப்பாடு, அரசியல் சட்டத்துக்கு உட்பட்டு இதை செய்வது சுலபம் அல்ல.

ஆனால் தமிழ்நாட்டை இந்தியாவில் இருந்து பிரித்து எடுத்து விட்டால் இது மிக சாத்தியாமாகும்.

உண்மையில் இந்த வட மாநில குடிவரவு விடயத்தை தமிழ் தேசிய அரசியல் பேசுவோர் இதயசுத்தியுடன் அணுகில், அவர்கள் தனித்தமிழ் நாடு கோரிக்கையைதான் கையில் எடுக்க வேண்டும், இந்திய ஒருமைப்பாடு எனும் மொக்காட்டுகுள் இருந்து கையை காட்டாமல்.

Edited November 2, 2023 by goshan_che

3 hours ago, குமாரசாமி said:

எந்த திரி ஐயா?

நீங்கள் எழுதின எல்லாத்தையும் மண்டைக்குள் திணிச்சு வைக்க இடமில்லை ஐயா?

லிங்க் பிளீஸ்  🙏🏼

 

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைத்தமிழருக்கு தனிப்பிரதேசம், உரிமை கிடைத்துவிடக்கூடாது என்பதற்காக தலையால் நடக்கும் கிந்தியா அதற்கு சம்மதிக்குமா? அங்கே ஒரு இனவழிப்பு நடந்தேறும். 

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியன் இந்தியனுக்கு அடித்தான். இதுக்கை ஏன் வடக்கு  தெற்கு,.... ....என்று கதைக்க வேண்டும்??  இந்தியாவில் இந்தியன் வாழவும் வேலை செய்யவும் முடியும்   

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.