Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நவீன வேவு விமான சேவையை அமெரிக்கா இலங்கையுடன் பகிரவுள்ளது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நவீன வேவு விமான சேவையை அமெரிக்கா இலங்கையுடன் பகிரவுள்ளது

வீரகேசரி இணையத்தளம்

ஆசிய பசுபிக் வலையத்தின் பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கில் அமெரிக்கா அதிநாவீன வேவு பார்க்கும் விமானத் தொழினுட்பத்தை இலங்கை உட்பட ஏனைய ஆசிய நாடுகளுடன் பகிரவுள்ளது.

இவ்விடயம் தொடர்பில் அமெரிக்கா மற்றும் இலங்கை அதிகாரிகளிடையே உத்தியார்பூர்வ கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளதாக டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.

குளோபல் ஹெவாக் எனும் இவ் அதி நவீன வேவு விமானம் 2001 செப்டம்பர் 11ம் திகதிக்கு பின் சேவையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளது. இவ் விமானம் துல்லியமாக இலக்குகளை 65,000 அடி உயரத்திலிருந்து 35 மணித்தியாலங்கள் வரை வேவு பார்க்கவுள்ளது.

அத்துடன் சேகரித்த தரவுகளை விரைவாக தரைப்படைக்கு அனுப்பகூடியது.

அத்துடன் நவீன ராடர் இன்பிராசெட் செண்டர் தொழினுட்பமும் காணப்படுவதால் அமெரிக்க புலனாய்வு பிரிவின் இவ் வேவு விமானம் ஆசியா மற்றும் பசுபிக் வலயத்தில் பாதுகாப்பு சொத்தாகும்,

அமெரிக்கா இவ் குளோபல் ஹேவார் வேவு விமான சேவையை ஜப்பான், தென்கொரியா, அவுஸ்திரேலியா, சிங்கபூர், பிலிபைன்ஸ், இந்தேனேசியா, மலேசியா, தாய்லாந்து, இந்தியா, புரூனே, மற்றும் இலங்கைக்கு விஸ்தரிக்கவுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்திச்செவை தெரிவித்துள்ளதாக டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.

அப்ப இலங்கை பெறப்போகும் நன்மைகளை விட (வேவு தகவல்களை விட) அமெரிக்கா அதிகமாக பெற்று கொள்ள போகிறது...!

இந்தியா- சிறிலங்கா உள்ளிட்ட ஆசிய-பசுபிக் பிராந்தியங்களில் உயர் தொழில்நுட்பங்களைக் கொண்ட ஹவ்க் உளவு வானூர்தியின் சேவைகளை பயன்படுத்த அமெரிக்கா திட்டமிட்டு வருவதாக சிறிலங்காவின் உயர் பாதுகாப்புத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க

இலங்கைக்கு என்னத்தை தான் கொடுத்தாலும் அவங்க ரொம்ப நல்லவங்க கண்டே பிடிக்க மாட்டாங்க!! :)

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப இந்தியாவுக்கு வைக்கப் போறாங்க ஆப்பு..! இந்தியாவின்ர வல்லரசுக் கனவு அம்போ தான்...! :wub::)

65000 அடி உயரமா? :)

நவீனங்களுக்குரிய பரீட்சார்த்தக் களம். டம்மி களைக்கண்டும் ஏமாறாதா?

நவீனங்களுக்குரிய பரீட்சார்த்தக் களம். டம்மி களைக்கண்டும் ஏமாறாதா?

பத்து அடி தூரத்தில் இருந்து பார்க்கும் கண்களையே உரு மறைப்பு எண்டு ஏமாற்ற முடியும்.. 65000 அடி தூரத்தில் இருந்து பார்க்கும் கமராக்களையா ஏமாற்ற முடியாது...??

சில குறிப்பிட்ட உலோக தன்மைகள் கொண்ட பொருட்களை இனம்காட்டும் வல்லமை அந்த விமானத்தின் ராடர்களுக்கு உண்டாம்... அதே குறிப்பிட்ட உலோகங்கள் ((உடந்து போனவை)) இருந்தால் ஏமாற்றமுடியும்...!

65000 அடி உயரமா? :D

:rolleyes::lol: ஆமாம். அமெரிக்கா முன்பு இதை ரஷ்யாவின் மேல் பறக்க விட்டு உளவுத் தகவல்களை சேகரித்தது. எந்தவித ஏவுகணை வீச்சுக்கும் அப்பாற்பட்டு பறக்கலாம் என்ற நம்பிக்கையில் 65000 அடி உயரத்தில் பறந்தார்கள். ஆனாலும் ரஷ்யா இவ்வகை விமானம் ஒன்றை சுட்டு வீழ்த்தி அதன் பாகங்களை கைப்பற்றி இருந்தது.

இதை இலங்கையில் பயன்படுத்துவதென்பது வேடிக்கையானது. இலங்கையின் பாதுகாப்பு அதிகாரிகள் அதிர்வேட்டுக்கள் விடுவதில் வல்லவர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த விமானம் பற்றிய மேலதிக விபரங்கள் அறிவது இந்த விமானம் பற்றிய தன்மைகளை விளங்கிக் கொள்ள உதவும்...

http://en.wikipedia.org/wiki/RQ-4_Global_Hawk

அப்ப இந்தியாவுக்கு வைக்கப் போறாங்க ஆப்பு..! இந்தியாவின்ர வல்லரசுக் கனவு அம்போ தான்...!

நானும் உடனே நினைத்தது இந்தியா வை தான்! :o

ஈழத்திருமகன், நீங்கள் சொல்வது 1960 இல் சுட்டு விழுத்தப்பட்ட U2உளவு விமானம். அது மாலுமியோடு இயங்குவது. இது UAV.

சீனாவின் தெற்கு தென்கிழக்கு முதல் கிழக்கு பகுதிகளை தொடர்ச்சியான கண்காணிப்பில் வைத்திருப்பதற்கான ஆகாயத்தில் கண் asia pacific eye in sky network என்ற திட்டத்திற்கு தான் குழுச் சேர்க்கப்படுகிறது.

இந்தியாவை உள்ளடக்காதது பாக்கிஸ்தானை உள்ளடக்க முடியாது என்பதால் என்று நினைக்கிறன். சிறீலங்காவின் பங்கு இதில் சுவார்சியமானதாக இருக்கும். இந்தியாவுடனான link இற்கு proxy ஆக இயக்க வைக்கும் நோக்கம் இருக்கலாம். இதற்கு சிறீலாங்கா ஒத்துளைத்தால் சீனவுடனான உறவு பாதிப்புள்ளாகும். இது சிறீலங்காவின் அமெரிக்க-இந்திய கூட்டணி அழுத்தத்திற்கு எதிரான counter weight அய் இழக்கும் என்ற கவலை இருக்கும்.

அமெரிக்கா ஆயுத உதவிகளை நிறுத்தப்போவதாக வெருட்டுவது இந்த சலுகையை சிறீலங்காவிடம் இருந்து கறப்பதற்கான carrots & sticks இன் ஒரு அங்கம். இறுதியில் carrots ஆகப் போவது நிதியுதவி ஆயுத உதவி தமிழர் தரப்பு மீதான அழுத்தம் உளவுத்தகவல்கள்.

இவற்றை வெளிப்படையாக இல்லாது ஆரவாரம் அற்ற முறையில் செய்ய வேண்டிய தேவை இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இருக்கும். அதன் பிரதிபலிப்புகளை தற்போதைய எதிர்மறையான (deceptive) ஊடகத் தலையங்களில் காணலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்ப இந்தியாவுக்கு வைக்கப் போறாங்க ஆப்பு..! இந்தியாவின்ர வல்லரசுக் கனவு அம்போ தான்...! :lol::lol:

நிச்சயமாக இந்தியாவுக்கு அல்ல!!!!இந்தியாவை பழம் திண்டு கொட்டை போட்டவர்கள் அமெரிக்கர்களும் ரஷ்சியர்களும் ????இந்தியர்களிடம் எந்த பருப்புமே வேகாது.உண்மையிலேயே இந்தியாதான் இவ்வுலகின் வல்லரசு. விபரமறிந்தவர்களுக்கு இது நன்றாகத்தெரியும் :(

  • கருத்துக்கள உறவுகள்

நிச்சயமாக இந்தியாவுக்கு அல்ல!!!!இந்தியாவை பழம் திண்டு கொட்டை போட்டவர்கள் அமெரிக்கர்களும் ரஷ்சியர்களும் ????இந்தியர்களிடம் எந்த பருப்புமே வேகாது.உண்மையிலேயே இந்தியாதான் இவ்வுலகின் வல்லரசு. விபரமறிந்தவர்களுக்கு இது நன்றாகத்தெரியும் :(

இந்திய - அமெரிக்க அணு உலைகள் சம்பந்தப்பட்ட உடன்படிக்கை தொடர்பில் இந்தியா மீது அமெரிக்காவுக்கு ஒரு சந்தேகம் உண்டு. அமெரிக்க - இந்திய கூட்டுறவு என்பது நிரந்தரமானதும்.. நெருக்கமானதும் அன்று. உலக மாற்றங்களுக்கு ஏற்ப ஏற்பட்டுள்ள தற்காலிக நிலையது. அது மாற்றமடையக் கூடியது என்பது அமெரிக்காவுக்குத் தெரியும்.

இந்தியாவுக்கு சீனாவின் வளர்ச்சி அச்சுறுத்தலாக இருப்பதால் அமெரிக்காவை அரவணைக்க முயல்கிறது. அமெரிக்காவுக்கு தெற்காசியாவில் பாகிஸ்தான் மீதான நம்பிக்கை தளர்ந்துள்ள நிலையில்.. இது அவசியமாகிறது.

சீனாவை கண்காணிக்க அமெரிக்காவுக்கு பல முனைகள் உண்டு. சீனாவை அமெரிக்கா கண்காணிக்க ஆரம்பித்து தசாப்தங்கள் கடந்து போயாயிற்று. ஆனால் 1998 இல் இந்தியா செய்த ரகசிய அணுகுண்டு வெடிப்பு அதிர்வலைகள் அமெரிக்காவை இன்னும் அதிரவைத்துக்கொண்டே உள்ளது. அது அடங்காது.

அமெரிக்காவோடு ஒத்துழைப்பின் சீனா மற்றும் இந்தியாவுடனா சிறீலங்காவின் உறவுகள்..நெருக்கமாவது குறையலாம். ஆனால் இந்த இரண்டு நாடுகளும் சிறீலங்காவை அமெரிக்காவின் அணுகுமுறைக்காக கைவிடமாட்டா..! :lol:

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.