Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மன்ஹாட்டன் நடுவர் மன்றம், டொனால்ட் டிரம்ப் தனது 34 வணிகப் பதிவுகளை பொய்யாக்கும் குற்றவியல் விசாரணையில் குற்றவாளி என்று கண்டறிந்தது, இது ஒரு முன்னோடியில்லாத மற்றும் வரலாற்றுத் தீர்ப்பாகும், இது அமெரிக்க வரலாற்றில் ஒரு குற்றத்திற்கு தண்டனை பெற்ற முதல் முன்னாள் ஜனாதிபதியாக அவரை மாற்றியது.

https://www.cnn.com/politics/live-news/trump-hush-money-trial-05-30-24/index.html

ஆடி மாதம் 11ம் திகதி தீர்ப்பளிக்கப்படும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
  • Judge Juan Merchan set a sentencing hearing for July 11. Trump's sentence is up to the judge, and it could include prison time or probation.
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

Column-Will-Donald-Trump-Go-to-Prison-fo

டொனால்ட் டிரம் குற்றவாளி என தீர்ப்பு-4 ஆண்டுகள் சிறைத் தண்டனை!

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின் வழக்கு விசாரணையில் அவர் குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

2016 ஆம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில் தம்மைப் பற்றிய தவறான செய்திகளை மறைக்க டிரம்ப் பணம் வழங்கியதாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. இது தொடர்பில் டிரம்ப் 34 குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கினார்.

இதன்படி ஜூலை 11 ஆம் திகதியன்று தண்டனை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதுடன் ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் டிரம்ப்பிற்கு அதிகபட்சமாக 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

https://athavannews.com/2024/1384915

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு

- ஜூலை 11ஆம் திகதி தண்டனை விவரங்கள் வெளியிடப்படும்

PrashahiniMay 31, 2024
donald-3.jpg

அமெரிக்க நாட்டின் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப், கடந்த 2016 தேர்தல் நிதியை முறைகேடாக கையாண்ட வழக்கில் குற்றவாளி என 12 ஜூரிகள் அடங்கிய குழு அறிவித்துள்ளது. சுமார் இரண்டு நாட்கள் நடந்த தீவிர ஆலோசனைக்கு பிறகு நியூயார்க் ஜூரிகள் இதனை அறிவித்தனர்.

77 வயதான ட்ரம்ப், கடந்த 2017 முதல் 2021 வரையில் அமெரிக்க நாட்டு அதிபராக இயங்கியவர். அவர் அந்த நாட்டின் 45ஆவது அதிபராக அறியப்பட்டார். குடியரசு கட்சி சார்பில் தற்போது மீண்டும் அதிபர் வேட்பாளராக களம் கண்டுள்ளார். இந்த நிலையில்தான் அவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் நீதிபதி ஜுவான் மெர்ச்சன், வரும் ஜூலை 11ஆம் திகதி தண்டனை விவரங்களை அறிவிக்க உள்ளார்.

குற்ற வழக்கில் அமெரிக்க அதிபரோ அல்லது முன்னாள் அதிபரோ விசாரிக்கப்படுவது மற்றும் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்படுவது அமெரிக்க அரசியல் வரலாற்றில் இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

என்ன வழக்கு? – முன்னாள் அதிபர் ட்ரம்ப், தன்னுடனான பாலியல் தொடர்பை மறைக்க ஆபாச நடிகை ஸ்டோமி டேனியல்ஸுக்கு சுமார் 1.3 இலட்சம் டொலர்களை 2016ஆம் ஆண்டுக்கான தேர்தல் பிரச்சார நிதியில் இருந்து கொடுத்ததாக சொல்லப்பட்டது.

இதையடுத்து இந்த குற்றச்சாட்டை மறைக்கும் விதமாக 11 இன்வாய்ஸ், 11 காசோலை மற்றும் 12 வவுச்சர் உள்ளிட்ட ஆவணங்களை போலியாக ட்ரம்ப் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டதாகவும் சொல்லப்பட்டது. அந்த 34 ஆவணங்களும் போலி என்பதை தான் தற்போது ஜூரிகள் கண்டறிந்துள்ளனர். அதையடுத்து அவர் குற்றவாளி என்றும் அறிவித்தனர். அமெரிக்க முன்னாள் அதிபர் ஒருவர் முறைகேட்டு வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்படுவது இதுவே முதல் முறை.

வரும் நவம்பர் மாதம் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த ரேஸில் குடியரசு கட்சி சார்பில் ட்ரம்ப் மற்றும் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடனும் உள்ளனர். இந்நிலையில், இந்த வழக்கு விவகாரம் ட்ரம்புக்கு பின்னடைவாக அமைந்துள்ளது. இருந்தாலும் ட்ரம்ப் தேர்தலில் போட்டியிட தடை ஏதும் இருக்காது என தகவல்.

ட்ரம்ப் கருத்து: “இது எனக்கு அவமானம் ஏற்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட விசாரணை. இதை மேற்கொண்ட நீதிபதி ஊழல்வாதி. நமது தேசமே இந்த மாதிரியான மோசடியை இப்போது எதிர்கொண்டு வருகிறது. எதிர்க்கட்சியினரை பழிக்கும் வகையில் பைடன் நிர்வாகம் இதை செய்து வருகிறது. நமது அரசியல் சாசனத்துக்காக நாம் போராட வேண்டி உள்ளது” என ட்ரம்ப் மிகவும் ஆக்ரோஷமாக தெரிவித்தார்.

அதிபர் பைடன் தரப்பு: “யாரும் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் இல்லை” என அதிபர் ஜோ பைடனின் செய்தித் தொடர்பாளர் ட்ரம்ப் வழக்கு குறித்து கருத்து தெரிவித்திருந்தார். தனது ஆட்சி காலத்தில் பல்வேறு சர்ச்சைகளுக்கு அதிபர் ட்ரம்ப் ஆளாகியிருந்தார். அதன் பின்பு அவரை அந்த சர்ச்சைகள் சூழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தேர்தலில் போட்டியிட முடியுமா? அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கு குறைந்தபட்ச தகுதிகளையே அமெரிக்க அரசியலமைப்பு வரையறுத்துள்ளது. போட்டியிடுபவர் அமெரிக்க குடிமகனாகவும் குறைந்தபட்சம் 35 வயதுடையவராகவும் 14 ஆண்டுகள் அமெரிக்காவில் வசித்தவராகவும் இருக்க வேண்டும். குற்ற பின்னணி உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிடுவதை தடுக்க எந்த சட்டமும் இல்லை. சிறையில் உள்ள நபர்களும் தேர்தலில் போட்டியிட முடியும்.

https://www.thinakaran.lk/2024/05/31/breaking-news/63527/அமெரிக்க-முன்னாள்-அதிபர்/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

டொனால்ட் டிரம் குற்றவாளி என தீர்ப்பு-4 ஆண்டுகள் சிறைத் தண்டனை!

என்ன தண்டனை என்று ஆடி 11ம் திகதி தான் தெரியும்.

அனேகமாக நன்நடத்தைப் பிணையில் விடலாம் என்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஈழப்பிரியன் said:

என்ன தண்டனை என்று ஆடி 11ம் திகதி தான் தெரியும்.

அனேகமாக நன்நடத்தைப் பிணையில் விடலாம் என்கிறார்கள்.

நன்நடத்தைப் பிணை என்றால்... அவர் மீண்டும் ஜனாதிபதி ஆவதில் சிக்கல் வருமா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
Just now, தமிழ் சிறி said:

நன்நடத்தைப் பிணை என்றால்... அவர் மீண்டும் ஜனாதிபதி ஆவதில் சிக்கல் வருமா?

ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள்.

குற்றவாளி என்றபடியால் முடியாதென்றும் சொல்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, ஈழப்பிரியன் said:

என்ன தண்டனை என்று ஆடி 11ம் திகதி தான் தெரியும்.

அனேகமாக நன்நடத்தைப் பிணையில் விடலாம் என்கிறார்கள்.

23 minutes ago, ஈழப்பிரியன் said:

ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள்.

குற்றவாளி என்றபடியால் முடியாதென்றும் சொல்கிறார்கள்.

நன்னடத்தைப் பிணை (தண்டனைக் குறைப்பு) முன்னர் ஒரு போதும் குற்றவாளியாகக் காணப்படாத ஒருவருக்கு மட்டும் தான் சாத்தியம். இந்த வழக்கு நடந்த 6 வாரங்களிலேயே "தம்பு" 9 தடவைகள் நீதிமன்ற கட்டளையை மீறினார் என்று பத்தாயிரம் டொலர்கள் இதே நீதிம்ன்றில் அபராதம் கட்டியிருக்கிறார். எனவே, தம்புவின் "நன்னடத்தையை" முன்னிட்டு  தண்டனைக் குறைப்பு வராது.

ஆனால், சிறைக்கு அனுப்புவதில் இருக்கும் நடைமுறைச் சிக்கலால் சிறைத் தண்டனை கிடைக்காமல் போகலாம்.

சிறை சென்றால் கூட இவர் தேர்தலில் நிற்கலாம், வெல்லலாம், ஜனாதிபதியாகலாம். அமெரிக்க அரசியலமைப்பில் இதைத் தடை செய்யும் எந்த சரத்துகளும் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

அவருக்கு தண்டனை கிடைத்தால் ...... குற்றத்தை மறைப்பதற்காக அவர் கொடுத்த பணம் எல்லாவற்றையும் அம்மணிகள் கொண்டுவந்து குடுப்பார்களா ........  (இப்பொழுதுதான் அவரது குற்றங்கள் பரகசியமாகி விட்டதே) ........ குடுத்தால் அவரின் தேர்தல் செலவுக்கு உதவுமே என்ற ஆதங்கம்தான்........!  😴

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Justin said:

சிறை சென்றால் கூட இவர் தேர்தலில் நிற்கலாம், வெல்லலாம், ஜனாதிபதியாகலாம். அமெரிக்க அரசியலமைப்பில் இதைத் தடை செய்யும் எந்த சரத்துகளும் இல்லை.

தேர்தலில் நின்று வென்றால் கில்லாரியிலிருந்து பலர் பழி வாங்கப்படலாம்.

தேர்தல் பற்றி எதுவும் இன்னும் முடிவாகவில்லை.

பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ஈழப்பிரியன் said:

தேர்தலில் நின்று வென்றால் கில்லாரியிலிருந்து பலர் பழி வாங்கப்படலாம்.

தேர்தல் பற்றி எதுவும் இன்னும் முடிவாகவில்லை.

பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

தேர்தல் பற்றி என்ன முடிவாகவில்லை என்கிறீர்கள்? சிவப்புக் கட்சியின் வேட்பாளர் தம்பு தான், இது ஜூன் மாத RNC மாநாட்டில் தான் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப் படும், ஆனால் வேறெல்லா வழிகளிலும் உறுதியாகி விட்ட முடிவு இது. வேறு யார் நிற்கிறார்கள் தம்புவை எதிர்த்து?

உறுதியாகாத ஒரே விடயம், நடுவில் இருக்கும் பக்கம் சாரா வாக்காளர்கள் ஒரு குற்றவாளிக்கு வாக்களிப்பார்களா என்பது மட்டும் தான்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

உறுதியாகாத ஒரே விடயம், நடுவில் இருக்கும் பக்கம் சாரா வாக்காளர்கள் ஒரு குற்றவாளிக்கு வாக்களிப்பார்களா என்பது மட்டும் தான்.

இப்போதிருக்கும் நிலையில் ரம்ப் ஜனாதிபதி வேட்பாளராக இறங்கினால் முன்னர் எதிர்பார்த்ததை விட அதிகமான வாக்குகள் பெறுவார் என்கிறார்கள்.

அதற்கேற்ற மாதிரி பைடனும் தட்டுத் தடுமாறி கதைப்பது கூடிக் கொண்டே போகிறது.

விவாதத்துக்கு வேறு ஒப்புக் கொடுத்துள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, ஈழப்பிரியன் said:

இப்போதிருக்கும் நிலையில் ரம்ப் ஜனாதிபதி வேட்பாளராக இறங்கினால் முன்னர் எதிர்பார்த்ததை விட அதிகமான வாக்குகள் பெறுவார் என்கிறார்கள்.

அதற்கேற்ற மாதிரி பைடனும் தட்டுத் தடுமாறி கதைப்பது கூடிக் கொண்டே போகிறது.

விவாதத்துக்கு வேறு ஒப்புக் கொடுத்துள்ளார்.

இந்த "இப்போதிருக்கும் நிலை" என்ன? ட்ரம்ப் இருந்ததை விட, அல்லது ட்ரம்ப் இனி வந்தால் இருக்கப் போவதை விட எவ்வளவு கீழான நிலை அல்லது மேலான நிலை?

நான் ஏற்கனவே பல முறை குறிப்பிட்டிருப்பது போல, மனனப் போட்டியில், அல்லது ஒலிம்பிக்கில் ஓடிப் பதக்கம் வாங்கக் கூடிய ஒருவர் அமெரிக்க ஜனாதிபதியாக வர வேண்டியதில்லை. அதற்கு தனியாக அமெரிக்காவில் ரீம் இருக்கிறதென நினைக்கிறேன்😂.

இது புரியாத வாக்காளர்களுக்கு பைடனை விட ட்ரம்ப் உசத்தியாகத் தெரிவதில் வியப்பில்லை. ஆனால், இப்படியான வாக்காளர்களால் தேர்தல் வெற்றி தீர்மானிக்கப் படப் போவதுமில்லை!

  • கருத்துக்கள உறவுகள்

போன மாதம் ராய்ட்டர்ஸ் இங்கு ஒரு கருத்துக் கணிப்பினை நடத்தியது. அதில் ட்ரம்ப் குற்றவாளி என்று தீர்ப்பு வந்தால், அவரது கட்சியைச் சேர்ந்தவர்களில் 25% ஆனவர்கள் இவருக்கு வாக்களிக்க மாட்டோம் என்று சொல்லியிருந்தனர். எந்தக் கட்சியையும் சாராதவர்கள் என்று தங்களை அடையாளப்படுத்திய வாக்காளர்களில் 60% ஆனவர்கள் இவருக்கு வாக்களிக்க மாட்டோம் என்று சொல்லியிருந்ததாகவும் ஞாபகம்.

இவரின் தீவிர ஆதரவாளர்கள் இன்னும் தீவிரமாக மாறுவார்கள். தீக்குளிக்கும் வழக்கம் இங்கு இல்லாதது நல்ல ஒரு விடயம். மற்றபடி, இந்த தீர்ப்பு, கிடைக்கப் போகும் தண்டனை எதுவாகினும், இவருக்கு ஒரு பின்னடைவு என்றே நினைக்கின்றேன். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ரசோதரன் said:

இவரின் தீவிர ஆதரவாளர்கள் இன்னும் தீவிரமாக மாறுவார்கள். தீக்குளிக்கும் வழக்கம் இங்கு இல்லாதது நல்ல ஒரு விடயம். மற்றபடி, இந்த தீர்ப்பு, கிடைக்கப் போகும் தண்டனை எதுவாகினும், இவருக்கு ஒரு பின்னடைவு என்றே நினைக்கின்றேன். 

அண்மையில் புளோரிடாவிலிருந்து புறூக்லீன் நீதிமன்றுக்கருகில் ரம்புக்கு ஆதரவானவர் தீக்குளித்து இறந்துவிட்டார்.

இங்கேயும் தீக்குளிக்க தொடங்கிவிட்டனர்.

இழகிய மனம் கொண்டவர்கள் பார்க்காதீர்கள்.

28 minutes ago, Justin said:

இந்த "இப்போதிருக்கும் நிலை" என்ன?

அவரது ஆதரவாளர்கள் தலைவரை பழி வாங்கிவிட்டதாக ஆதங்கப்படுகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ஈழப்பிரியன் said:

அண்மையில் புளோரிடாவிலிருந்து புறூக்லீன் நீதிமன்றுக்கருகில் ரம்புக்கு ஆதரவானவர் தீக்குளித்து இறந்துவிட்டார்.

இங்கேயும் தீக்குளிக்க தொடங்கிவிட்டனர்.

இழகிய மனம் கொண்டவர்கள் பார்க்காதீர்கள்.

🫣........

பின்னே இது மனிதர்களின் மரபணுவில் அடிப்படையாக இருக்கும் ஒரு விடயமோ.............  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ரசோதரன் said:

பின்னே இது மனிதர்களின் மரபணுவில் அடிப்படையாக இருக்கும் ஒரு விடயமோ......

அமெரிக்க அரசியல் ஆசிய அரசியலுக்கு சமாந்திரமாக வந்துவிட்டது.

26 minutes ago, ரசோதரன் said:

எந்தக் கட்சியையும் சாராதவர்கள் என்று தங்களை அடையாளப்படுத்திய வாக்காளர்களில் 60% ஆனவர்கள் இவருக்கு வாக்களிக்க மாட்டோம்

2000 ஆண்டு குடியுரிமை பெற்றதிலிருந்து ஜனநாயக கட்சியில் சேர்ந்தேன்.

இப்போ நடுநிலமையாக மாறுவமா என்று யோசிக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

2000 ஆண்டு குடியுரிமை பெற்றதிலிருந்து ஜனநாயக கட்சியில் சேர்ந்தேன்.

இப்போ நடுநிலமையாக மாறுவமா என்று யோசிக்கிறேன்.

அண்ணை, அரசியல் கட்சியில் எல்லாம் உறுப்பினராக இருக்கிறீர்கள், இவ்வளவு நாளும் இது தெரியாமல் போய்விட்டது. நீங்களும் ஒரு அரசியல் பழம்தான்

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரசோதரன் said:

போன மாதம் ராய்ட்டர்ஸ் இங்கு ஒரு கருத்துக் கணிப்பினை நடத்தியது. அதில் ட்ரம்ப் குற்றவாளி என்று தீர்ப்பு வந்தால், அவரது கட்சியைச் சேர்ந்தவர்களில் 25% ஆனவர்கள் இவருக்கு வாக்களிக்க மாட்டோம் என்று சொல்லியிருந்தனர். எந்தக் கட்சியையும் சாராதவர்கள் என்று தங்களை அடையாளப்படுத்திய வாக்காளர்களில் 60% ஆனவர்கள் இவருக்கு வாக்களிக்க மாட்டோம் என்று சொல்லியிருந்ததாகவும் ஞாபகம்.

இவரின் தீவிர ஆதரவாளர்கள் இன்னும் தீவிரமாக மாறுவார்கள். தீக்குளிக்கும் வழக்கம் இங்கு இல்லாதது நல்ல ஒரு விடயம். மற்றபடி, இந்த தீர்ப்பு, கிடைக்கப் போகும் தண்டனை எதுவாகினும், இவருக்கு ஒரு பின்னடைவு என்றே நினைக்கின்றேன். 

வாக்களிப்பில் இப்பிடி நடந்தால் நல்லது, சட்டத்தை மதிக்கும் பல சிவப்பு கட்சிக்காரர்கள் இவருக்கு வாக்களிக்கப்போவதில்லை என்று சொல்லுகிறார்கள், பார்க்கலாம் 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, நீர்வேலியான் said:

வாக்களிப்பில் இப்பிடி நடந்தால் நல்லது, சட்டத்தை மதிக்கும் பல சிவப்பு கட்சிக்காரர்கள் இவருக்கு வாக்களிக்கப்போவதில்லை என்று சொல்லுகிறார்கள், பார்க்கலாம் 

நேற்றைய தீர்ப்பின் பின்பு இதுவரை 38 லட்சம் கொடுத்திருக்கிறார்களாம்.

6 வீதம் வாக்கும் அதிகரித்திருக்காமே.

32 minutes ago, நீர்வேலியான் said:

அண்ணை, அரசியல் கட்சியில் எல்லாம் உறுப்பினராக இருக்கிறீர்கள், இவ்வளவு நாளும் இது தெரியாமல் போய்விட்டது. நீங்களும் ஒரு அரசியல் பழம்தான்

கையைத் தூக்கியநேரம் எந்த அரசியல் கட்சி என்று இப்போதே பதியலாம் என்றார்கள்.

எதுக்கு பதிவதென்றே தெரியவில்லை.

ஆனாலும் நம்மவர்கள் ஜனனாயக கட்சியைத் தான் பெரிதாக வந்தான் வரத்தானுக்கு நல்ல கட்சி என்று கதைப்பார்கள்.

 Primary Election க்கு வாக்குப் போடலாம்.வேறு என்ன இருக்குதோ தெரியவில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

☝️ மேலே தம்பு பாவிக்கும் "வாழைப்பழக் குடியரசு - Banana Republic" என்றால் என்னவென்று பார்க்கலாம். (தம்புவிற்கே அர்த்தம் தெரியாமல் இருக்கும்):

பலம் குன்றிய அரச நிர்வாகம், ஊழல்

ஒரு சிறு குழு- அனேகமாக செல்வந்தர்களின் குழு- கையில் அவர்கள் நலனுக்காக ஆட்சி

ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிகள் சாதாரணமாக நிலவுதல்...

வெயிற் அ மினிற்: இதெல்லாம் தம்பு வெள்ளை மாளிகையில் இருந்த 4 வருடத்தில் அல்லவா நடந்தன😂?

நேற்று நியூ யோர்க்கில் நடந்தது, இதெல்லாவற்றிற்கும் நேர் எதிரான, சட்ட ஆட்சி, 34 வர்த்தக ஆவணங்களின் உண்மைத் தன்மையை வற்புறுத்தும் நிர்வாக நேர்மை, ஊழல் பேர்வழிக்கு அவரது பண, பதவி நிலையைக் கடந்து 12 ஜூரர்கள் வைத்த ஆப்பு!

எனவே, "வாழைப்பழக் குடியரசு" நன்மை என்று  யோசிப்போர் தம்புவை ஆதரிக்கலாம்! ஏனையோருக்கு தெரிவு மிகவும் தெளிவு!

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க நீதித்துறை அரசியல்மயமாகி விட்டது ஆச்சரியமில்லை. அமெரிக்க சனநாகயமே தூக்கில தொங்கிக்கிட்டு கிடக்குது. இதில.. நீதித்துறை சொல்லி வேலையில்லை.

ரம்ப் மீதான இந்தக் குற்றச்சாட்டுகளில் இருந்து அவர் வெளி வருவார். தேர்தலிலும் வெல்ல வாய்ப்பிருக்குது. வென்றால் பைடனும் குடும்பமும் இதே நீதித்துறையால்.. 340 குற்றங்களுக்கு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டாலும் ஆச்சரியமில்லை. அந்த அளவுக்கு அமெரிக்க நீதித்துறை அரசியல்மயமாகிவிட்டது. டொலருக்கு அடிமையாகிவிட்டது. 

Thousands of U.S. judges who broke laws or oaths remained on the bench

https://www.reuters.com/investigates/special-report/usa-judges-misconduct/

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தமிழ் சிறி said:

நன்நடத்தைப் பிணை என்றால்... அவர் மீண்டும் ஜனாதிபதி ஆவதில் சிக்கல் வருமா?

அமெரிக்கச் சட்டத்தின்படி அவர் போட்டியிடுவதிலோ அல்லது ஜனாதிபதியாக வருவதையோ இந்தத் தீர்ப்பு பெரிதாகத் தாக்கத்தை ஏற்படுத்தும்போலத் தெரியவில்லை. ஆனால், குடியரசுக் கட்சித் தலைமை நினைத்தால் இவரை நீக்கிவிட்டு இன்னொருவரை பிரேரிக்க முடியும். ஆனால், இவை எல்லாம் அடுத்த 40 நாட்களுக்குள் சாத்தியமா என்றால் கேள்விக்குறியே

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.