Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

“ராஜினாமா செய்யப் போறேன்” : அண்ணாமலை பரபரப்பு!

christopherJun 06, 2024 07:32AM
"I am going to resign" : Annamalai

மக்களவைத் தேர்தல் முடிவுகள் ஜூன் 4 ஆம் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், நேற்று ஜூன் 5-ம் தேதி பத்திரிகையாளர்களை சந்தித்தார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.

அப்போது அவர், ‘தமிழகத்தில் பாஜக வளர்ந்து இருக்கிறது என்பதை தேர்தல் முடிவுகள் எடுத்துக்காட்டுகிறது’ என்று குறிப்பிட்டார். மேலும், ‘சற்று ஓவர் கான்ஃபிடன்ஸ் ஆகவே சொல்கிறேன் பாஜக தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடிக்கும், 2026 இல் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி நடக்கும்’ என்றெல்லாம் தெரிவித்தார். அதிமுகவையும் மிக கடுமையாக சாடினார்.

பத்திரிக்கையாளர் சந்திப்பில் இவ்வளவு நம்பிக்கையாக கருத்துக்களை அண்ணாமலை வெளியிட்ட போதும்… நேற்று ஜூன் 5 காலை மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகனிடம், ‘தேர்தல் முடிவுகளுக்காக என்னோட மாநில தலைவர் பதவியை நான் ராஜினாமா பண்றதா முடிவு செஞ்சிருக்கேன்’ என்று சொல்லி இருக்கிறார் அண்ணாமலை.

இதைக் கேட்ட கேசவ விநாயகன், ‘அப்படி ஒரு முடிவு எடுக்காதீங்க’ என்று அண்ணாமலையை சமாதானப்படுத்தி உள்ளார்.

அண்ணாமலையோ, ‘என்னுடைய சுபாவத்துக்கு இந்த பதவியை ஏற்று நடத்த முடியவில்லை. உத்திர பிரதேச மாநிலத்தில் ஏற்பட்ட தோல்விக்கு பொறுப்பேற்று அம்மாநில மேலிட பொறுப்பாளரான தேவேந்திர பட்னாவிஸ் தன்னுடைய மகராஷ்டிரா துணை முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய அனுமதி கேட்டு தலைமைக்கு கோரிக்கை வைத்திருக்கிறார். அதைப் பின்பற்றி நானும் தமிழக தோல்விக்கு பொறுப்பேற்று ராஜினாமா செய்ய முடிவு எடுத்திருக்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

இதை கேசவவிநாயகன் ஏற்கவில்லை. இந்த தகவல் அறிந்து மேலும் சில பாஜகவின் முக்கிய நிர்வாகிகளும் அண்ணாமலையை தொடர்பு கொண்டு, ‘பாஜக தலைமையில் கூட்டணி அமைத்து முக்கியமான ஒரு விஷயத்தை செய்திருக்கோம். இந்த நிலையில் இப்படி ஒரு முடிவு எடுக்க வேண்டாம். தேர்தல் தோல்வி என்பது அரசியலில் சகஜம்’ என்று அண்ணாமலையிடம் பேசியிருக்கிறார்கள்.

நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், தமிழிசை உள்ளிட்டோர் இது தொடர்பாக அண்ணாமலையிடம் பேசி வருவதாக பாஜக வட்டாரத்தில் கூறுகிறார்கள்.

இந்த நிலையில் இன்னொரு பக்கம் அண்ணாமலைக்கு எதிராக டெல்லி தேசிய தலைமைக்கு புகார்களை அனுப்பும் பணி ஜூன் 4 மாலையில் இருந்தே தொடங்கப்பட்டு விட்டது.

“தமிழ்நாட்டில் அதிமுக பாஜக கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்திருந்தால் இந்நேரம் தமிழ்நாட்டில் இருந்து 20 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு கிடைத்திருப்பார்கள். அது டெல்லியில் இப்போதைய ஒரு இக்கட்டான சூழ்நிலையை தவிர்க்கும் வகையில் அமைந்திருக்கும்.

ஆனால் தமிழ்நாட்டில் இருந்து தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 20 எம்பிக்கள் வரை கிடைக்க இருந்ததை தடுத்தது அண்ணாமலையின் செயல்பாடுகள் தான்.

தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்வதாக சில விஷயங்களை செய்து தமிழ்நாட்டில் பாஜகவுக்கும் பாஜக கூட்டணிக்கும் கிடைக்கவேண்டிய எம்பிக்கள் எண்ணிக்கையை காவு கொடுத்து விட்டார்.

அதிமுக தலைவர்களோடு அண்ணாமலை மோதல் போக்கை பின்பற்றாமல் இருந்திருந்தால்… அதிமுக கூட்டணியை விட்டு போயிருக்காது.

எனவே தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஏற்பட்ட இழப்புக்கு அண்ணாமலை தான் பொறுப்பு” என்று அவர் மீது புகார்கள் தெரிவித்து தேசிய தலைமைக்கு கடிதங்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.

இதை அறிந்து தான் நேற்று பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய அண்ணாமலை, “என்னை இங்கே அனுப்பியது கட்சியை வளர்க்கத் தான். இந்த மைதானத்தில் இப்படி ஆட வேண்டும் என்று சொல்லிக் கொடுத்துதான் என்னை இங்கே அனுப்பினார்கள். மற்றவர்களோடு அட்ஜஸ்ட் செய்து கொண்டு வளர வேண்டும் என்றால் அதற்கு வேறு ஆளை பார்த்துக் கொள்வார்கள்” என்று சற்று பூடகமாகவே பேசி இருக்கிறார் அண்ணாமலை.
 

https://minnambalam.com/political-news/i-am-going-to-resign-annamalai/

 

  • கருத்துக்கள உறவுகள்

எதிர்பார்த்த வெற்றியை பெறாத மாநில தலைவர்களின் பதவியை பறிக்க பாஜக திட்டம்?

06 JUN, 2024 | 03:45 PM
image

நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்பார்த்த வெற்றியை பெறாத மாநிலங்களில் கட்சி அமைப்புகளை மாற்ற பாஜக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று முன்தினம் (ஜூன் 4) எண்ணப்பட்டன. இத் தேர்தலில் காங்கிரஸ்,  திமுக, சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணிக்கும்,  அதிமுக – தேமுதிக அணிக்கும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், நாம் தமிழர் கட்சிக்கும் இடையே நேரடி போட்டி நிலவியது.

மக்களவைத் தேர்தல் 2024இன் முடிவுகள் வெளியான நிலையில்,  பாஜக தலைமை வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி 292 இடங்களிலும், காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 234 இடங்களிலும்,  மற்றவை 17 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. இதில் பாஜக 240 தொகுதிகளிலும், காங்கிரஸ் 99 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.

எனவே, நாடாளுமன்ற மக்களவை தேர்தல் முடிவில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இருப்பினும்,  தெலுங்கு தேசம் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளின் ஆதரவோடு பாஜக ஆட்சி அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்நிலையில், நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்பார்த்த வெற்றியை பெறாத மாநிலங்களில் கட்சி அமைப்புகளை மாற்ற பாஜக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல், குஜராத் மாநில முதலமைச்சரை மாற்ற பாஜக தலைமை திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.  மேலும் பீகார், உத்தரப் பிரதேசம், குஜராத், தமிழ்நாடு உள்ளிட்ட மாநில பாஜக தலைவர்களுக்கு டெல்லி தலைமை அழைப்புவிடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

https://www.virakesari.lk/article/185447

  • கருத்துக்கள உறவுகள்

தள்ள முதல் குதிக்கப் பார்கிறார் அண்ணாமலை.

இவருக்கு டெல்லியில் ஒரு டம்மி அமைச்சர் பதவி கொடுத்துவிட்டு, தமிழிசையை மீள மாநில தலைவராக்கப்போகிறார்களாம் என கதை அடிபடுது.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

தள்ள முதல் குதிக்கப் பார்கிறார் அண்ணாமலை.

இவருக்கு டெல்லியில் ஒரு டம்மி அமைச்சர் பதவி கொடுத்துவிட்டு, தமிழிசையை மீள மாநில தலைவராக்கப்போகிறார்களாம் என கதை அடிபடுது.

யாரோ காணாமல் போய் விடுவார் என்றார் இன்று தானே???

  • கருத்துக்கள உறவுகள்
On 5/6/2024 at 22:58, கிருபன் said:

நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், தமிழிசை உள்ளிட்டோர் இது தொடர்பாக அண்ணாமலையிடம் பேசி வருவதாக பாஜக வட்டாரத்தில் கூறுகிறார்கள்.

இவர்கள் மூவரும் என்ன இரண்டு பக்கமும் பேசுகின்றார்கள்..........இவர்களே போட்டுக் கொடுக்கின்றார்கள், பின்னர் இவர்களே தட்டியும் கொடுக்கின்றார்கள்.

எல்லா இடத்திலும் தோற்றாலும், பாஜக தலைமையில் ஒரு கூட்டணி அமைத்து தமிழ்நாட்டில் போட்டியிட்டது என்பது தான் பாஜகவின் உச்சமாக இருக்கும் தமிழ்நாட்டில். இப்படியே அண்ணாமலையார் அவரேயாக ஒதுங்குவதும் அவருக்கு நல்லது தான்.

நடிகர் விஜய் நாதகவிற்கும், விசிகவிற்கும் வாழ்த்துகள் தெரிவித்து இருக்கின்றார். அடுத்த தேர்தலிற்கு இன்னொரு புதுக் கூட்டணி, அணி தயாராகின்றதோ?

  • கருத்துக்கள உறவுகள்
On 6/6/2024 at 07:06, ஏராளன் said:

எனவே, நாடாளுமன்ற மக்களவை தேர்தல் முடிவில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இருப்பினும்,  தெலுங்கு தேசம் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளின் ஆதரவோடு பாஜக ஆட்சி அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.

 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ரசோதரன் said:

நடிகர் விஜய் நாதகவிற்கும், விசிகவிற்கும் வாழ்த்துகள் தெரிவித்து இருக்கின்றார். அடுத்த தேர்தலிற்கு இன்னொரு புதுக் கூட்டணி, அணி தயாராகின்றதோ?

விஜை+விசிக+நாதக+பாமக+கம்யூனிஸ்ட்+ தேமுதிக கூட்டணி.

விஜை அல்லது அன்புமணி அல்லது திருமா முதல்வர் வேட்பாளர்.

மக்கள் நல கூட்டணி + நாதக + விஜை - பாஜக - மதிமுக, என இருந்தாலும், இந்த கூட்டணிக்கு என் ஆதரவு இருக்கும்.

தமிழ் நாட்டில் ஆளும், எதிர் கட்சிகள் பாஜக எதிர்ப்பு மோடில் இருக்க வேண்டும் என்பது இப்போதைய காலத்தின் கட்டாயம்.

 

  • கருத்துக்கள உறவுகள்

 

 

448001007_823404119848190_81211822837465

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்ணாமலையை யாரும்  ஒரு அரசியல்வாதியாக பார்க்கப்பட்டதாய் தெரியவில்லை.
அவர் ஒரு கட்சியால் இறக்கப்பட்ட முகவர் ஆகவே இருந்தார். அல்லது அரசியல் வியாபாரி.

  • கருத்துக்கள உறவுகள்
அண்ணாமலை உண்மையில் தனக்கென்று தலைவருக்குண்டான தகுதியோ செல்வாக்கோ இல்லாத நபர் என்று தான் போட்டியிட்ட கோவை தெகுதியில் நிருபித்திருக்கிறார்.
அண்ணாமலை பெற்றது மிகப்பெரிய தோல்வி அந்த தொகுதியில்
ஏற்கனவே கோவை தொகுயில் 2014 ல் பாசக தனித்து போட்டியிட்டது
2014 நிலவரம்
பதிவான வாக்குகள் -1159192
ராதாகிருஷ்ணன் பாசக -389701
அதிமுக -431717
திமுக -217083
காங்கிரஸ் -56902
2024 பதிவான வாக்குகள்
1366177
பாசக -450132
திமுக -568200
அதிமுக -236490
நாதக-82657
இப்போது புரிகிறதா
ஏற்கனவே மிக வலுவான வாக்கு வங்கி உள்ள இடத்திலேயே புதிய வாக்காளர் இரண்டு லட்சம் சேர்த்து கூட அண்ணாமலையால் இந்த தொகுதியில் தலைவர் என்ற முறையில் செயிக்க முடியவில்லை வாக்கு வங்கியையும் உயர்த்த முடியவில்லை. ஆனால் தான் போலி தலைவர் என்ற உண்மை தெரிந்தும் தன்னால் பாசக வளர்ந்து வாக்கு வங்கி உயர்ந்து விட்டது என்று பிம்பத்தை கட்டமைக்க முயல்கிறார். இதே போல் தான் நாகர்கோவில் கன்னியாகுமரி தொகுதிகளும்.
இவரை தலைவர் என்று ஒரு அறிவிலி கூட்டம் நம்பிகொண்டிருக்கிறது
May be an image of 3 people and text that says 'NEWS 18 தமிழ்நாடு நா 08 JUNE 2024 2014இல் 2014 இல் பாஜகவின் சி.பி. .பிராதாகிருஷ்ணன் பெற்றதை விட குறைவான வாக்குகளையே அண்ணாமலை பெற்றுள்ளார் -அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நியூஸ்18 தமிழ்நாடு NEWS18 TAMILNADU'
 
 
 
 
 
  • கருத்துக்கள உறவுகள்
On 7/6/2024 at 22:00, goshan_che said:

விஜை+விசிக+நாதக+பாமக+கம்யூனிஸ்ட்+ தேமுதிக கூட்டணி.

விஜை அல்லது அன்புமணி அல்லது திருமா முதல்வர் வேட்பாளர்.

மக்கள் நல கூட்டணி + நாதக + விஜை - பாஜக - மதிமுக, என இருந்தாலும், இந்த கூட்டணிக்கு என் ஆதரவு இருக்கும்.

தமிழ் நாட்டில் ஆளும், எதிர் கட்சிகள் பாஜக எதிர்ப்பு மோடில் இருக்க வேண்டும் என்பது இப்போதைய காலத்தின் கட்டாயம்.

 

பழைய பாண்டவர் அணி நினைவில் வந்து  துலைக்குது.  தமிழக அரசியலில் வைகோ போன இடமெல்லாம் விளங்கும்! 😂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.