Jump to content

இலங்கை தமிழருக்கு தமிழீழம் - இந்திய பிரதமர் மோடியிடம் மதுரை ஆதினம் கோரிக்கை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை தமிழருக்கு தமிழீழம் - இந்திய பிரதமர் மோடியிடம் மதுரை ஆதினம் கோரிக்கை

Vhg ஜூன் 11, 2024
1000259750.jpg

இலங்கையில் உள்ள தமிழ் மக்களை பாதுகாக்க இந்திய பிரதமர் நரேந்திர மோடி தமிழீழத்தை ஏற்படுத்த வேண்டும் எனவும் இது தொடர்பான கோரிக்கையை தாம் அவரிடம் முன்வைக்கவுள்ளதாகவும் மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார்.

மதுரை 293 ஆவது ஆதீனமான ஹரிஹர தேசிக பரமாச்சாரியர் நேற்று (10-06-2024) மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போதே, இதனை குறிப்பிட்டுள்ளார்.

1000259746.jpg

இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர், “இந்தியாவின் 3 ஆம் முறையாக பிரதமராக பதவி ஏற்றுள்ள மோடிக்கும், அமைச்சர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள். இலங்கையில் லட்சக்கணக்கான தமிழர்களே கொன்று குவிக்க காரணமானவர்களும் வெற்றி பெற்று விட்டார்களே என மன வருத்தம் உள்ளது.

இரண்டு கோரிக்கைகள்

வெற்றி பெற்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு இரண்டு கோரிக்கைகளை முன் வைக்கிறேன்.

இந்திரா காந்தி தாரை வார்த்து கொடுத்த கச்சத்தீவை மீட்டெடுக்க வேண்டும். கச்சத்தீவு  மீட்டெடுத்தால் தமிழகத்தின் மீன்வளம் அதிகரிக்கும்.

ஆகவே கச்சத்தீவு மீட்டு தமிழ்நாட்டோடு இணைக்க வேண்டும். இலங்கையில் உள்ள தமிழ் மக்களே பாதுகாக்க பிரதமர் மோடி தமிழ் ஈழத்தை ஏற்படுத்த வேண்டும்.

கச்சத்தீவு விவகாரம்

இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வீடுகளை கட்டிக் கொடுத்துள்ளார். கச்சத்தீவு மீட்டு கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க வேண்டும்.

60 ஆண்டுகளாக கச்சத்தீவு விவகாரம் குறித்து யாரும் பேசவில்லை. பாஜகவின் கூட்டணி ஆட்சி சரியாக வரும். தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளுக்கும் மக்கள் முறையாக வாக்களித்துஅங்கீகாரம் கொடுத்திருக்கிறார்கள். மக்களின் முடிவு சரியானதாக உள்ளது.

இருந்தபோதிலும் இலங்கை தமிழர்களை கொன்று குவித்தவர்களுக்காக வாக்கு அளித்துஇருக்கிறார்களே அதுதான் எனக்கு வருத்தமாக உள்ளது.

இலங்கை தமிழர்கள் விவகாரம்

மற்றும் கச்சத்தீவு விவகாரம் என இரண்டிற்காக நான் பிரதமர் மோடியை ஆதரிக்கிறேன். பிரதமர் மோடி எதையும் தாங்கும் இதயம் கொண்டவர். பாஜக குறைந்த தொகுதிகளில்வெற்றி பெற்றதால் அக்கட்சியை தோல்வி அடைந்த கட்சி என விமர்சனம் செய்கிறார்கள்.

பாஜக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று இருந்தால் பட்டனை அமுக்கியவுடன் தாமரைக்கு ஓட்டு விழுகிறது என கூறியிருப்பார்கள்.

ஜனநாயக நாட்டில் தோல்வி வெற்றி என்பது மக்கள் கொடுக்கக்கூடிய தீர்ப்பாகும்.60 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தவர்களே 90 தொகுதிகளில் தான் வெற்றி பெற முடிந்தது. காங்கிரஸ் ஆட்சி கால கட்டத்தில் எத்தனை முறை ஆட்சி கலைக்கப்பட்டது. ஆனால் பாஜக ஆட்சி புரிந்த காலகட்டத்தில் யாருடைய ஆட்சிகளையும் கலைக்கவில்லை.

தமிழர்களுக்கு ஆதரவு 

இலங்கை தமிழர்களுக்காக தனி நாடு அமைக்க வேண்டுமென விரைவில் பிரதமர் மோடியை சந்தித்து கோரிக்கை விடுக்க உள்ளேன். பிரதமர் மோடி சிவபெருமான் மீது பக்தியாக இருக்கிறார். தியானம் செய்கிறார், விபூதி பூசி கொள்கிறார். காசி விசுவநாதர் பிரதமர் எல்லா நாடுகளுக்கும் செல்கிறார் எல்லா மதங்களையும் ஆதரிக்கிறார்.

ஆகவே அவரை நான் ஆதரிக்கிறேன், பாஜகவிற்காக நான் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டதில்லை. நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைக்காத காரணத்தால் அதிமுக தோல்வி தழுவியுள்ளது.

அதிமுக கட்டமைப்புகளை மேம்படுத்தவில்லை. இந்த தேர்தலில் பாஜக, நாம் தமிழர் கட்சி ஆகிய கட்சிகள் தமிழகத்தில் நல்ல கட்டமைப்புகளை உருவாக்கி உள்ளது.

இலங்கை தமிழர்களுக்கு ஆதரவு கொடுக்கும் அனைவருக்கும் நான் ஆதரவு கொடுப்பேன். இலங்கைக்கு நான் நேரில் சென்றால் என்னை சுட்டு விடுவார்கள். இலங்கையில் தமிழர்கள் இருந்தாலும் சிங்கள வெறியர்கள் அங்கே தான் இருக்கிறார்கள்” என கூறினார்.
 

 

https://www.battinatham.com/2024/06/blog-post_672.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாம் தமிழர் கட்சியினர் சொல்லித்தான் கேட்டதாக சொல்லி இருக்கிறார்

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

நாம் தமிழர் கட்சியினர் சொல்லித்தான் கேட்டதாக சொல்லி இருக்கிறார்

அப்படி என்றால் எமக்கு தமிழீழம் வேண்டாம்.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"தமிழக மக்கள் இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்களை கொன்றவர்களை ஆதரித்தமை வருத்தமே" 

"ஈழத்தமிழர்களுக்காக தனி நாடு / தமிழீழம் அமைக்க வேண்டுமென பிரதமரிடம் நேரில் கோரிக்கை வைக்கவுள்ளேன்"  

 

 

28 minutes ago, ஈழப்பிரியன் said:

அப்படி என்றால் எமக்கு தமிழீழம் வேண்டாம்.

எனக்கும் வேண்டாம்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, குமாரசாமி said:

"தமிழக மக்கள் இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்களை கொன்றவர்களை ஆதரித்தமை வருத்தமே" 

"ஈழத்தமிழர்களுக்காக தனி நாடு / தமிழீழம் அமைக்க வேண்டுமென பிரதமரிடம் நேரில் கோரிக்கை வைக்கவுள்ளேன்"  

 

 

எனக்கும் வேண்டாம்.

நீங்கள் வயோதிபர்கள். எங்கிருந்தாலும். ஒன்று தான்   😂😂😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த சாமியார் உளறும் போது சீமான் பெயரையும் சொல்லிவிட்டார் அதனால் இவருக்கு இங்கு மதிப்பு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Kandiah57 said:

நீங்கள் வயோதிபர்கள். எங்கிருந்தாலும். ஒன்று தான்   😂😂😂

நான் நினைக்கிறேன் நீங்கள் ஈழத்தமிழர்கள் சகல  உரிமையுடன் வாழ்வதை விரும்பாதவர் என...
மாற்றுக்கருத்துக்களை வரவேற்கின்றேன். ஆனால் நீங்கள் போகும் வரும் இடமெல்லாம் ஈழமக்கள் ஆதரவு கருத்துக்களை ஓரம் கட்டியே வருகின்றீர்கள்.

இதிலிருந்து தெரிகின்றது நீங்கள் சிங்கள இனவாதியை விட மோசமானவர் என..... 

அந்த சாமியார்  ஏற்கனவே ஈழ ஆதரவாளர்.பல வருடங்களுக்கு முன்னரே ஈழ மக்களுக்கு ஆதரவாக பேசியுள்ளார்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, குமாரசாமி said:

நான் நினைக்கிறேன் நீங்கள் ஈழத்தமிழர்கள் சகல  உரிமையுடன் வாழ்வதை விரும்பாதவர் என...
மாற்றுக்கருத்துக்களை வரவேற்கின்றேன். ஆனால் நீங்கள் போகும் வரும் இடமெல்லாம் ஈழமக்கள் ஆதரவு கருத்துக்களை ஓரம் கட்டியே வருகின்றீர்கள்.

இதிலிருந்து தெரிகின்றது நீங்கள் சிங்கள இனவாதியை விட மோசமானவர் என..... 

அந்த சாமியார்  ஏற்கனவே ஈழ ஆதரவாளர்.பல வருடங்களுக்கு முன்னரே ஈழ மக்களுக்கு ஆதரவாக பேசியுள்ளார்.

அதை பற்றி நான்  இந்த திரியில். எழுதவில்லை   நீங்கள் தமிழ் ஈழம் வேண்டாம் என்பதற்காக தான் மேறமடி பதில்   

நான்  எழுதிய கருத்துகள் பிழை என்றால் அந்த திரியில்,அதாவது சம்பந்தப்பட்ட திரியில் எழுத வேண்டும் பதில்கள் தரலாம்.  நான் சிங்கள இனவாதி இல்லை தமிழ் இனவாதியும் இல்லை  உங்கள் சிந்தனை தவறானது    தமிழர் விடுதலை ஆதரவளான்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, விளங்க நினைப்பவன் said:

இந்த சாமியார் உளறும் போது சீமான் பெயரையும் சொல்லிவிட்டார் அதனால் இவருக்கு இங்கு மதிப்பு

அது அப்படியில்லை. அவர் சீமான் பெயரை சொல்லிவிட்டார் என்று சிலருக்கு கொதிப்பு!

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா தமிழீழம் என்பதற்கு மிகவும் எதிரானது. இன்னும் சொல்லப்போனால் சமஷ்ட்டி, ஒன்றுபட்ட நாட்டிற்குள் அதிகாரம் மிக்க பிராந்தியங்கள் ஆகியவற்றிற்கும் கூட இந்தியா எதிரானது. ஆகவே, மதுரை ஆதீனம் தன் பங்கிற்கு இதனைச் சொல்லிவிட்டுப் போகலாம், மோடிக்குத் தெரியும் என்ன செய்ய வேண்டும் என்பது. அண்மையில்க் கூட இலங்கை அரசாங்கத்தை மகிழ்ச்சிப்படுத்த இல்லாத புலிகள் மீதான தடையினை மேலும் 5 வருடங்களுக்கு நீட்டித்துக் காட்டியிருக்கிறார் அவர். 

தமிழர்களுக்கு ஈழத்தை எடுத்துக் கொடுப்பதில் உண்மையான அக்கறையுடன் செயற்ப்பட்டவர்கள் புலிகள் மட்டும்தான். வேறு எவரிடமும் நாம் வைக்கும் கோரிக்கைகள் செவிடன் காதில் பேசுவதற்கு ஒப்பானது. 

  • Thanks 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Trump Shuttle எனும் விமானசேவை நான் வந்த காலத்தில் இருந்தது.
    • அதற்கான வேலையில் இந்தியா ஏற்கனவே இறங்கிவிட்டது.
    • "தேயாதே வெண்ணிலவே"     முன்னொரு காலத்தில், மலைகளுக்கு மத்தியில் அமைந்திருந்த ஒரு விசித்திரமான கிராமத்தில், அல்லி என்ற இளம் பெண் வசித்து வந்தாள். இந்த கிராமம் அதன் வளமான நாட்டுப்புறக் கதைகளுக்கும், தலைமுறை தலைமுறையாகக் கடந்து வந்த வசீகரிக்கும் புராண கதைகளுக்கும் பெயர் பெற்றது. அத்தகைய ஒரு புராணக்கதை ஒன்று "தேயாதே வெண்ணிலவே" என்பதைப் பற்றிப் பேசியது, இது சந்திரன் அதன் வழக்கமான குறைந்து வரும் கட்டத்தை எதிர்க்கும் ஒரு மாயாஜால நிகழ்வாகும்.   அல்லி, ஆர்வமுள்ள, சாகச மற்றும் அழகான இளம் பெண்ணாகும், குழந்தை பருவத்தில் இருந்தே தன் தாயிடமும் மற்றும் மூத்தவர்களிடமும் இருந்து இந்த வசீகரிக்கும் கதையைக் கேட்டு வளர்ந்தாள். தேயாத வெண்ணிலவை ஒரு முறையாவது தான் பார்க்க வேண்டும் என்று அவள் கனவு கண்டாள். பலர் அதை கற்பனையான கட்டுக்கதை என்று கருதினாலும். மற்றவர்களின் சந்தேகத்திற்கு ஆளாகாமல், புராணத்தின் பின்னால் உள்ள மர்மத்தை அவிழ்க்கும் தேடலை அவள் தொடங்கினாள்.   அல்லி கிராமப் பெரியவர்களைக் கலந்தாலோசித்தார், அவர்கள் 'சந்திரன் மறையாதே' என்று பேசும் பண்டைய நூல்களின் குறிப்புகளை அவளுடன் பகிர்ந்து கொண்டனர். என்றாலும் சந்திரன் மறைய மறுப்பது வரவிருக்கும் அழிவின் அறிகுறி என்று நூல்கள் சுட்டிக்காட்டின. எனவே பேரழிவு நிகழ்வுகள் குறித்து அவர்கள் எச்சரித்ததுடன் அப்படியான ஒரு நிகழ்வு என்றும் நடக்கக்கூடாது என்றும் வலியுறுத்தினர்.   எது எப்படியாகினும் அல்லி தனது உறுதியால் உந்தப்பட்டு, தனது ஆராய்ச்சியில் ஆழ்ந்தார். வானியல் நிகழ்வுகளைப் பற்றி தனது கிராமத்தில் உள்ள நூலகத்தில் பண்டைய நூல்களில், புராணங்களில் எழுதிய பல பழைய குறிப்புகளைக் கண்டுபிடித்தார். அந்த குறிப்பில் சந்திரனின் முழுமையை பாதுகாக்கும் மற்றும் தேயும் வெண்ணிலாவை தடுக்கும் திறன் கொண்ட, இன்று மறந்துபோன சடங்கு பற்றிய ரகசிய குறிப்புகள் இருந்தன. அது அவளுக்கு உத்வேகம் கொடுத்தது. நீண்ட நேரம் வாசித்த களைப்பில் அவள் நூலக மேசையிலேயே கண்ணயர்ந்து விட்டாள்.   அல்லி, புராண கதையில் கூறிய அந்த மர்ம இடத்தை நோக்கி, எவருக்கும் சொல்லாமல் தன்னந் தனிய தனது சவாலான பயணத்தைத் தொடங்கினாள், எவராலும் உள்போகாத, ஆராயப்படாத காடுகள் மற்றும் பயங்கர மலைகளுக்குள் நுழைந்தாள், புராண நூல்களில், வாசித்து அறிந்த, ரகசிய துப்புகளால் அவள் வழிநடத்தப்பட்டாள். அவளுடைய பாதையில், அவளின் தைரியத்தையும் உறுதியையும் சோதிக்கும் பல்வேறு தடைகளை எதிர்கொண்டாள். அவள் பயங்கரமான பள்ளத்தாக்குகளை கடந்தாள், புராண கதைகளில் காணப்படும் பல அதிசய உயிரினங்களை எதிர்கொண்டாள், அத்துடன் சக்திவாய்ந்த புயல்களை, மின்னல்களை எதிர்கொண்டாள், என்றாலும் எதற்கும் சற்றும் சளையாது தன் பயணத்தை தொடர்ந்தாள்.   பல வாரங்கள் இடைவிடாத நடைகளின் பின், அல்லி ஒரு கம்பீரமான மலை உச்சியில் ஒரு ஒதுக்குப்புற தோப்புக்கு வந்தடைந்தாள். பழங்கால கல் தூண்களால் சூழப்பட்டு, சந்திரனின் வெள்ளி ஒளியில் அவள் முற்றாக நனைந்தாள். சற்று தேடுதலின் பின், புராணக் குறிப்பில் கூறப்பட்ட சடங்கு செய்ய வேண்டிய இடத்தைக் கண்டுபிடித்தாள். புராண கதையில் கூறப்பட்ட அறிவுரைகளின் படி புனிதமான பொருட்களை ஏற்பாடு செய்தாள் மற்றும் கடந்த தலைமுறையிலிருந்து வழி வழி வந்த மந்திரங்களை உச்சரித்தாள்.   அல்லி சடங்கை முடித்தவுடன், அவள் பூசை செய்த அமைதியான அழகான தோப்பை சூழ்ந்து, அதன் இயற்கையான சுழற்சியை மீறி, சந்திரன் தனது தேய்தலை இடைநிறுத்தி, அவளுக்கு மேலே பிரகாசமாக பிரகாசித்தது.. அல்லியின் முயற்சிகளை அறியாத கிராமம், தங்களின் வீடுகளின் மேலே தேயாத வெண்ணிலாவின் ஒளிர்வைப் பார்த்து பிரமித்தார்கள்!   அடுத்தடுத்த நாட்களில், கிராமவாசிகள் நிலவின் மறையாத, தேயாத பிரகாசத்தைக் கண்டு வியந்தனர், என்றாலும் வரவிருக்கும் பேரழிவிலிருந்து தங்கள் உலகம் காப்பாற்றப் பட வேண்டும் என்று பெரும் பூசைகள் செய்யத்தொடங்கினர். அதன் முழக்கம் அல்லியின் காதிலும் பல நூறு மைல்கள் தாண்டி கேட்டது. அவள் திடுக்கிட்டு கண் விழித்தாள். தான் இன்னும் தனது கிராமத்து நூலகத்தில், புராணக் கதைகளின் நடுவில் இருப்பதைக் கண்டு மிக மிக வெட்கப்பட்டு தலை குனிந்தபடி தள்ளாடி தள்ளாடி வீட்டை நோக்கி புறப்பட்டாள், தனது முடியாத தேடுதலை நோக்கி, "தேயாத வெண்ணிலா"வாக!!     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]    
    • முரளிதரனுக்கு வாழ்த்துக்கள். இதற்கான பயிற்சிகள் எடுத்தாரோ?
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.