Jump to content

மீண்டும் தமிழக மீனவர்கள் இலங்கையில் கைது; ஸ்டாலின் சீற்றம்; ஜெய்சங்கருக்கு கடிதம்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Published By: DIGITAL DESK 3

20 JUN, 2024 | 11:39 AM
image
 
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழ்நாட்டு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

தமிழக அரசு சார்பில் வெளியிட்ட செய்திக்குறிப்பில்,

இலங்கைக் கடற்படையினரால் நேற்று (18) கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த நான்கு மீனவர்களை உடனடியாக விடுவிக்க மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய வெளிவிவகார அமைச்சர் அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து IND-TN-08-MM-05 என்ற பதிவு எண் கொண்ட விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த நான்கு மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் 18-6-2024 அன்று கைது செய்யப்பட்டு, அவர்களது மீன்பிடி படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இத்தகைய சம்பவங்கள் மீனவர்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைப்பதோடு மட்டுமல்லாமல், மீனவ சமுதாயத்தினரிடையே அச்ச உணர்வையும், நிச்சயமற்ற தன்மையையும் ஏற்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் தற்போது 15 மீனவர்களும், 162 மீன்பிடிப் படகுகளும் உள்ளது. எனவே, இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாடு மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட உரிய தூதரக நடவடிக்கைகள் மூலம் இலங்கை அரசை வலியுறுத்திட வேண்டுமென்று வெளியுறவுத் துறை அமைச்சரை கேட்டுக் கொண்டுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/186536

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்க வோஷ்ரூமுக்குள்ள நிண்டுகொண்டு ஸ்டாலின் சீறினவரோ?!👀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

இதில் நான் இலங்கை இராணுவத்தின் பக்கம்.

தன் இனத்தின் வயிற்றில் அடிப்பது போன்ற துயரம் வேறு எதுவுமில்லை. 

Edited by விசுகு
எழுத்துப்பிழை
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்ராலினின் தகப்பனும் மத்திய அரசுக்கு கடிதம்தான் எழுதுறவர்.
ஸ்ராலினும் அவர்வழி தான்...
தலைமுறை தலைமுறையாக தொடரும் கடிதப் போக்குவரத்து.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஏராளன் said:

இத்தகைய சம்பவங்கள் மீனவர்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைப்பதோடு மட்டுமல்லாமல், மீனவ சமுதாயத்தினரிடையே அச்ச உணர்வையும், நிச்சயமற்ற தன்மையையும் ஏற்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.

large.IMG_6785.jpeg.2a1cbaa8412472e41ccb

  • Thanks 4
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஏராளன் said:

அந்த கடிதத்தில் புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து IND-TN-08-MM-05 என்ற பதிவு எண் கொண்ட விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த நான்கு மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் 18-6-2024 அன்று கைது செய்யப்பட்டு, அவர்களது மீன்பிடி படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

'நெடுந்தீவிற்கு அருகில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது.....' என்ற வரியையும், தயவு செய்து, சேர்த்து வாசிக்கவும்........... 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 ஸ்டாலின் சீற்றம்; ஜெய்சங்கருக்கு கடிதம்

களவு எடுக்க போனவர்கள் பிடிபட்டதிற்காக ஸ்டாலின் சீற்றம்  கொள்ளலாமா  இப்படி ஒரு முதல்வர் செய்யலாமா  😭

  • Haha 1
Link to comment
Share on other sites

5 hours ago, ஏராளன் said:

இலங்கைக் கடற்படையினரால் நேற்று (18) கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த நான்கு மீனவர்களை உடனடியாக விடுவிக்க மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய வெளிவிவகார அமைச்சர் அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

ஸ்டாலினுக்கு மற்றொரு நாட்டின் கடலில் மீன் பிடிக்க கூடாது என்பது தெரியாது என நான் நம்பவில்லை. 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ரசோதரன் said:

'நெடுந்தீவிற்கு அருகில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது.....' என்ற வரியையும், தயவு செய்து, சேர்த்து வாசிக்கவும்........... 

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன் பிடித்த குற்றச்சாட்டில் நான்கு இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் நேற்று திங்கட்கிழமை (17) இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.  

யாழ்ப்பாணம் காரைநகர் கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ஒரு படகையும் அதிலிருந்த நான்கு இந்திய மீனவர்களையும் எல்லை தாண்டி மீன் பிடித்த குற்றச்சாட்டில் கடற்படையினர் கைது செய்தனர்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.