Jump to content

பைடன்- ட்ரம்ப் நாளை நேருக்கு நேர் விவாதம்!

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

trump-1.jpg?resize=750,375&ssl=1

பைடன்- ட்ரம்ப் நாளை நேருக்கு நேர் விவாதம்!

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு ஜனாதிபதி வேட்பாளர்களான தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆகியோர் நாளை உள்ளூர் நேரடி இரவு 9 மணிக்கு ஜோர்ஜியா தலைநகர் அட்லாண்டாவில் விவாதத்தில் ஈடுபடவுள்ளனர்.

அமெரிக்காவில் வரும் நவம்பர் 5ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில், ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடனும், அவரை எதிர்த்து குடியரசு கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி ட்ரம்பும்  போட்டியிடவுள்ளனர்.

இத்தேர்தலின் முக்கிய அம்சமாக, வேட்பாளர்கள் பல்வேறு கட்டங்களில் நேருக்கு நேர் விவாதிப்பது வழக்கம். அந்த வகையில் முதலாவது நேரடி விவாத நிகழ்ச்சி நாளை நடைபெற உள்ளது.

இதன்போது குடியேற்றம், பொருளாதாரம் மற்றும் பணவீக்கம் தொடர்பான விவகாரங்கள், ரஷ்யா உக்ரேன் போர் மற்றும் காசாவில் இஸ்ரேலின் போர் பற்றிய கேள்விகள், சீன விவகாரம் போன்றவை விவாதத்தில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மொத்தம் 90 நிமிடம் இவ் விவாதம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1389828

Link to comment
Share on other sites

On 26/6/2024 at 07:02, தமிழ் சிறி said:

மொத்தம் 90 நிமிடம் இவ் விவாதம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ்வளவு நேரம் ட்ரம்புக்குத் தேவைப்படாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நந்தி said:

இவ்வளவு நேரம் ட்ரம்புக்குத் தேவைப்படாது.

ஜேர்மன் தொலைக்காட்சிகளில் பைடன் தடக்குப்பட்டு  விழ்ந்த காட்சிகள் காட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 26/6/2024 at 13:02, தமிழ் சிறி said:

பைடன்- ட்ரம்ப் நாளை நேருக்கு நேர் விவாதம்!

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு ஜனாதிபதி வேட்பாளர்களான தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆகியோர் நாளை உள்ளூர் நேரடி இரவு 9 மணிக்கு ஜோர்ஜியா தலைநகர் அட்லாண்டாவில் விவாதத்தில் ஈடுபடவுள்ளனர்.

அமெரிக்காவில் வரும் நவம்பர் 5ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில், ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடனும், அவரை எதிர்த்து குடியரசு கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி ட்ரம்பும்  போட்டியிடவுள்ளனர்.

என்னப்பா இந்தா பார் டொனால்ட் ரம்ப ஜெயிலுக்கு அனுப்புறம்....ஆளை தூக்கிறம் எண்டுச்சினம்.....இப்ப என்னடாவெண்டால்  நேருக்கு நேர் விவாதம் எண்டுறாங்கள். ஒண்டுமாய் விளங்குதில்லை.... 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜோ பைடனை சீன வடகொரிய சர்வாதிகாரிகள் மதிப்பதில்லை – நேரடி விவாதத்தின் போது டிரம்ப் தெரிவிப்பு

Published By: RAJEEBAN    28 JUN, 2024 | 08:23 AM

image
 
யாரும் கற்பனை செய்ய முடியாத அளவிற்கு உலகம் மூன்றாம் உலக யுத்தத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது  என அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுடனான நேரடி விவாதத்தின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதியின் வெளிவிவகார பாதுகாப்பு கொள்கைகளை கடுமையாக சாடியுள்ள அவர் வடகொரிய ஜனாதிபதி, சீனா ஜனாதிபதி போன்ற வெளிநாட்டு சர்வாதிகாரிகள் பைடனை மதிப்பதில்லை அவரை பார்த்து அச்சப்படுவதில்லை என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள ஜோ பைடன் நேட்டோவின் உறுப்புநாடு தாக்கப்பட்டதும் தான் நேட்டோவின் சரத்து ஒன்றை பயன்படுத்தியதை சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போதைய தருணத்தில் அமெரிக்கா உலகிற்கு தேவைப்படுகின்றது. எங்கள் சமூகத்தின் இருப்பே கேள்விக்குறியாகியுள்ளதால் உலகின் ஒரு பகுதியை பாதுகாக்க நாங்கள் அவசியம் என பைடன் தெரிவித்துள்ளார்.

விளாடிமிர் புட்டின் தடையின்றி உக்ரைன் மீது தாக்குதலை மேற்கொள்ள அனுமதிப்பதே மூன்றாம் உலகத்திற்கு இட்டுச்செல்லும் என பைடன் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/187135

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தடுமாறிய பைடன் - கலக்கத்தில் ஜனநாயக கட்சியினர்

Published By: RAJEEBAN   28 JUN, 2024 | 11:26 AM

image
 
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனிற்கும் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கும் இடையில் இன்று இடம்பெற்ற நேரடி விவாதத்தின் போது ஜோ டைபனின் தடுமாற்றம் மிகுந்த பதில்களும் செயற்பாடுகளும் கரிசனையை ஏற்படுத்தியுள்ளன.

சிஎன்என் ஏற்பாடு செய்திருந்த ஜனாதிபதி தேர்தல் விவாதம் பைடனின் பிரச்சாரகுழுவினருக்கு பல  கேள்விகளிற்கு பதில் சொல்லவேண்டிய நிலையை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து அவரது பிரச்சார குழுவினர் பாதிப்புகளை சரிசெய்யும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர்.

பைடனும் டிரம்பும் குடியேற்றவாசிகள், பொருளாதாரம், கருக்கலைப்பு உரிமை போன்றவை குறித்து விவாதித்தனர்.

பைடனின் மெதுவான ஆரம்பம் ஜனநாயக கட்சியின் சிலருக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.

ஜோ பைடனின் கரடுமுரடான குரலும்( உடல்நிலை சரியில்லை என அவரது பிரச்சாரகுழுவினர் தெரிவித்துள்ளனர்)பைடன் தனது சிந்தனையை இழந்ததாக தோன்றிய சில தருணங்களும், பார்வைக்கு தென்பட்ட சிறந்த விடயங்கள் இல்லை என பிபிசி தெரிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து நவம்பரில் பைடன் வெற்றிபெறுவதற்கான வாய்ப்புகள் குறித்து அமெரிக்க ஊடகங்களில் ஆய்வாளர்கள் கரிசனை வெளியிட்டுள்ளனர்.

குடியரசுக் கட்சியினரும் இதே விடயத்தினை சுட்டிக்காட்டியுள்ளனர்.

அதேவேளை ஜனநாயக கட்சியினர் உடனடியாக ஜனாதிபதியின் பின்னாள் அணி திரண்டுள்ளனர்.

https://www.virakesari.lk/article/187160

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

02-10.jpg?resize=750,375

ஜோ பைடனுக்கும் – டொனால்ட் ட்ரம்புக்கும் இடையேயான முதல்நாள் விவாதம் நிறைவு!

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கும், முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கும் இடையேயான முதல்நாள் விவாதம் நிறைவடைந்துள்ளது.

ஜார்ஜியா தலைநகர் அட்லாண்டாவில் நடைபெற்ற இந்த நிகழ்வில், ஜோ பைடனும், டொனால்ட் டிரம்பும் நேருக்கு நேர் சந்தித்து விவாதித்தனர்.

இந்த விவாதத்தில் அவர்கள் இருவரும் ஒருவரையொருவர் குற்றஞ்சாட்டிக்கொண்டுள்ளமையை அவதானிக்க முடிந்தது.

ஜனாதிபதி ஜோ பைடனுக்கும், முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கும் வெளியுறவுக் கொள்கை, பொருளாதாரம் மற்றும் கருக்கலைப்பு சட்டம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக விவாதிக்கப்பட்டிருந்தன.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் பொருளாதார பிரச்சனையை மையமாக கொண்டு இந்த விவாதம் நடைபெற்றது.

இந்த விவாதத்தின்போது தான் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டால் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை பட்டியலிட்டு ஜோ பைடனும், டொனால்ட் ட்ரம்பும் வாக்காளர்களிடம் ஆதரவு கேட்டனர். தங்களின் செயல்பாடுகள் எப்படி இருக்கும்? என்பது குறித்தும் விளக்கமளித்தனர்.

இதில் முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் அமெரிக்க பொருளாதாரம் மற்றும் அவரது வெளியுறவுக் கொள்கை பதிவுக்காக ஜோ பைடனை பலமுறை தாக்கி விவாதித்துள்ளார்.

மொத்தம் 90 நிமிடம் விவாதம் நடத்தப்பட்ட இந்த விவாதத்தில் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தக்கூடாது உள்ளிட்ட பல விதிமுறைகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில் பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1390102

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, ஏராளன் said:

ஜோ பைடனின் கரடுமுரடான குரலும்( உடல்நிலை சரியில்லை என அவரது பிரச்சாரகுழுவினர் தெரிவித்துள்ளனர்)பைடன் தனது சிந்தனையை இழந்ததாக தோன்றிய சில தருணங்களும், பார்வைக்கு தென்பட்ட சிறந்த விடயங்கள் இல்லை என பிபிசி தெரிவித்துள்ளது.

பி.பி.சி. யே... பைடனுக்கு, அறளை பேர்ந்து விட்டது என கூறியுள்ளது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

பி.பி.சி. யே... பைடனுக்கு, அறளை பேர்ந்து விட்டது என கூறியுள்ளது. 

„Good Night, Joe!

https://www.bild.de/politik/ausland-und-internationales/us-medien-urteilen-vernichtend-gute-nacht-joe-biden-667e38a523778e6a23b2dd96

அமெரிக்க சம்பந்தன் 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

ட்றம்புடன் நேரடி விவாதத்துக்குப் போகாமல்… பைடன் காய் வெட்டி திரிந்திருக்கலாம்.
இப்ப முழு மானமும் கப்பல்லை இல்லை ராக்கெட்டிலை ஏறி பறக்குது. 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவில் எவர் ஐனதிபதியாக வந்தாலும் பென்டகனின்.  ஆலோசனைகளை மீறி ஆட்சி செய்ய முடியாது    இரண்டு வேட்பாளர்களும். வயோதிபர்கள். தான்   பைடனிடம். குறைபாடுகளுண்டு அதை சுட்டி காட்டுவது  மூலம் ரம்டபு. சிறந்தவர்  என்று நிறுவ முடியாது,.ரம்புடன். என்ன திறமைகளுண்டு.   ??  ரம்டபு உலகம் முழுவதும் வியாபாரம் செய்ய வேண்டும்   ஆனால் ஜேர்மனி   மொச்சிகோவில். காரை உற்பத்தி செய்து அமெரிக்காவில் விற்கக்கூடாது     இது என்ன நியாயம்?? இரண்டு பேரும். ஒதுங்கி இருந்து  இளைஞர்கள்  போட்டி இட. ஊக்கப்படுத்தலாம் ஆலோசனைகளை வழங்கலாம்     🙏 இது பற்றி அமெரிக்கர்கள் கருத்துகளை அறிய ஆவலுடன் இருக்கிறேன்  🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, தமிழ் சிறி said:

ட்றம்புடன் நேரடி விவாதத்துக்குப் போகாமல்… பைடன் காய் வெட்டி திரிந்திருக்கலாம்.
இப்ப முழு மானமும் கப்பல்லை இல்லை ராக்கெட்டிலை ஏறி பறக்குது. 🤣

காய் வெட்டிக்கொண்டு திரிய இதென்ன கிந்தியாவே? 😂
பல ஊடகங்களில் அடுத்த அமெரிக்க  ஜனாதிபதி டொனால்ட் ரம்ப் தான் என முடிவு கட்டிவிட்டார்கள் போலிருக்கின்றது.:cool:
நான் நினைக்கிறன் புரோ செலென்ஸ்கிக்கு இப்பவே வயித்தை கலக்க தொடங்கியிருக்குமெண்டு 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, Kandiah57 said:

அமெரிக்காவில் எவர் ஐனதிபதியாக வந்தாலும் பென்டகனின்.  ஆலோசனைகளை மீறி ஆட்சி செய்ய முடியாது    இரண்டு வேட்பாளர்களும். வயோதிபர்கள். தான்   பைடனிடம். குறைபாடுகளுண்டு அதை சுட்டி காட்டுவது  மூலம் ரம்டபு. சிறந்தவர்  என்று நிறுவ முடியாது,.ரம்புடன். என்ன திறமைகளுண்டு.   ??  ரம்டபு உலகம் முழுவதும் வியாபாரம் செய்ய வேண்டும்   ஆனால் ஜேர்மனி   மொச்சிகோவில். காரை உற்பத்தி செய்து அமெரிக்காவில் விற்கக்கூடாது     இது என்ன நியாயம்?? இரண்டு பேரும். ஒதுங்கி இருந்து  இளைஞர்கள்  போட்டி இட. ஊக்கப்படுத்தலாம் ஆலோசனைகளை வழங்கலாம்     🙏 இது பற்றி அமெரிக்கர்கள் கருத்துகளை அறிய ஆவலுடன் இருக்கிறேன்  🤣

இது உணமை, ஆனால் இனி யாராலும் அமெரிக்காவினை காப்பாற்ற முடியாது, ஏனென்றால் அவர்களை வேறு யாரும் அழிப்பதில்லை, அவர்களது எதிரிகள் வேறு யாருமல்ல அவர்களேதான். 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, குமாரசாமி said:

காய் வெட்டிக்கொண்டு திரிய இதென்ன கிந்தியாவே? 😂
பல ஊடகங்களில் அடுத்த அமெரிக்க  ஜனாதிபதி டொனால்ட் ரம்ப் தான் என முடிவு கட்டிவிட்டார்கள் போலிருக்கின்றது.:cool:
நான் நினைக்கிறன் புரோ செலென்ஸ்கிக்கு இப்பவே வயித்தை கலக்க தொடங்கியிருக்குமெண்டு 🤣

செலன்ஸ்கி வெகுவிரையில் எல்லோராலும் கைவிடப்படும் நாள் கண்ணுக்கெட்டிய தூரத்தில் தெரிகிறது.. பிரான்சில் பிரித்தானியாவில் ஜேர்மனியில் அமெரிக்காவில் என முக்கிய வல்லரசு நாடுகளில் வலதுசாரிகள் கைகள் மேலோங்குகின்றன.. அவர்கள் உள்ளூர் மக்களின் குரலாக ஒலிக்கிறார்கள்.. இடதுசாரிகளும் நடு நிலைவாதிகளும் உள்ளூர் மக்களின் கஸ்ரங்களையும் பிரச்சினைகளையும் தீர்க்காமல் உக்கிரேனுக்கு பில்லியன்களில் அள்ளிவழங்கும் அறிவிப்பை வெளியிடும்போது எண்ணெய்க்கும் கரண்டுபில்லுக்கும் அல்லாடும் உள்ளூர் வெள்ளைகள் செம காண்டாகிறார்கள.. அனைத்து வலதுசாரிகளின் முக்கிய அறிவுப்புகளில் ஒன்று உக்கிரேன் போருக்கு ஆதரவு இல்லை என்பது..

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க அதிபர் தேர்தல்: நேருக்கு நேர் மோதிய பைடன் - டிரம்ப் - விவாதத்தில் என்ன பேசினர்?

அமெரிக்க அதிபர் தேர்தல் - நேருக்கு நேர் விவாதத்தில் பைடனும் டிரம்ப்பும் என்ன பேசினர்?

பட மூலாதாரம்,GETTY IMAGES

3 மணி நேரங்களுக்கு முன்னர்

அமெரிக்க அதிபர் தேர்தலை முன்னிட்டு, ஜனநாயக கட்சி வேட்பாளரும் தற்போதைய அதிபருமான ஜோ பைடன், குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் இருவரும் முதன்முறையாக நேருக்கு நேர் விவாதித்தனர்.

இந்த விவாதத்தில் தனிப்பட்ட தாக்குதல்களுக்குக் குறை இல்லை. மேலும், பைடன் அவ்வப்போது கம்மிய குரலில் பேசினார். இதனால், ஜனநாயக கட்சியினர் தங்கள் வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளனர். எனினும், “மெதுவாக ஆரம்பித்தாலும் வலுவாக விவாதத்தை நிறைவு செய்ததாக,” பைடனுக்கு ஆதரவாக துணை அதிபர் கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.

மறுபுறம், டொனால்ட் டிரம்ப், பைடனை பொருளாதாரம் மற்றும் வெளியுறவுக் கொள்கை சார்ந்து தாக்கிக்கொண்டே இருந்தார்.

அமெரிக்காவில் இந்த ஆண்டு நவம்பர் 5 அன்று அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், போட்டியிடும் வேட்பாளர்கள் நேருக்கு நேர் விவாதித்துக்கொள்வது அமெரிக்க அதிபர் தேர்தலின் முக்கிய நிகழ்வு. அதன்படி, ஜூன் 27, வியாழக்கிழமை அன்று ஜார்ஜியாவில் உள்ள அட்லான்டாவில் முதல் விவாதம் நடைபெற்றது.

ஜோ பைடன், டொனால்ட் டிரம்ப் இருவருக்கும் இடையே 90 நிமிடங்கள் இந்த விவாதம் நீடித்தது. 2020 அதிபர் தேர்தலுக்குப் பிறகு நான்கு ஆண்டுகள் கழித்து இரு தலைவர்களும் நேருக்கு நேர் விவாதத்தில் ஈடுபட்டனர்.

வாட்ஸ் ஆப்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

பொருளாதாரம்

பொருளாதாரம் சார்ந்துதான் இந்த விவாதம் தொடங்கியது.

விவாதத்தில் பணவீக்கம் பிரச்னை எழுப்பப்பட்டபோது, வேலை வாய்ப்பின்மையுடன் வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தையே டொனால்ட் டிரம்ப் தனக்குக் கையளித்ததாகத் தெரிவித்தார் பைடன். அப்போது, தன்னுடைய ஆட்சிக் காலத்தில் அமெரிக்க பொருளாதாரம் ‘சிறப்பாக’ இருந்ததாக டிரம்ப் தெரிவித்தார்.

டிரம்ப் ஒன்றும் செய்யவில்லை எனக் கூறிய பைடன், அவருடைய ஆட்சிக் காலத்தில் நிலைமை “மோசமாக” இருந்ததாகக் கூறினார். “எல்லாவற்றையும் சரிசெய்ய வேண்டியிருந்ததாக” பைடன் கூறினார். அப்போது, “பெருங்குழப்பம்” என்ற வார்த்தையை அடிக்கடி பைடன் உபயோகித்தார்.

“டிரம்ப் பணக்காரர்களுக்கு ஆதரவாக இருந்ததாக” பைடன் தெரிவித்தார். அப்போது டிரம்ப், தான் மக்களுக்கு முன்பு இல்லாத வகையில் வரியை குறைத்ததாகக் கூறினார்.

ஆப்கானிஸ்தான் விவகாரம்

அமெரிக்க அதிபர் தேர்தல்: நேருக்கு நேர் மோதிய பைடன் - டிரம்ப் - விவாதத்தில் என்ன பேசினர்?

பட மூலாதாரம்,REUTERS

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகளை திரும்பப் பெற்றுக் கொண்டது குறித்தும் கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் அரசின் நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

டிரம்ப் ஆட்சிக் காலத்தில்தான் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகள் சண்டையிட்டதாக, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகளை கண்ணியம் மற்றும் பலத்துடன் திரும்பப் பெறத் தான் திட்டமிட்டிருந்ததாகவும் ஆனால், “அப்படைகளை (பைடன் ஆட்சிக் காலத்தில்) திரும்பப் பெற்றபோது அது அமெரிக்க வரலாற்றிலேயே மிகவும் அவமானகரமான நிகழ்வாக இருந்ததாகவும்” டிரம்ப் கூறினார்.

கொரோனா

கொரோனா பெருந்தொற்று விவகாரம் இந்த விவாதத்தில் முக்கிய இடம் பிடித்தது.

கொரோனா காலத்தை டிரம்ப் எப்படி கையாண்டார் என்பது குறித்துப் பேசிய பைடன், அச்சமயம் “பெருங்குழப்பங்களுடன் கூடியது” எனக் குறிப்பிட்டார்.

“கொரோனா பெருந்தொற்றுப் பேரிடரின்போது தேவைகளுக்கு ஏற்ப நாங்கள் பணத்தைச் செலவழித்தோம். இதனால், மிகுந்த அழுத்தத்திற்குள் நாங்கள் தள்ளப்படவில்லை. எல்லாம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது” என்றார் டிரம்ப்.

எல்லைகள் குறித்த பிரச்னை

அமெரிக்க எல்லைகள் சார்ந்த கொள்கைகளில் பைடனை டிரம்ப் தாக்கிப் பேசினார்.

அப்போது, சிறைவாசிகள், மனநல சிகிச்சை மையங்களில் உள்ளவர்கள் மற்றும் பயங்கரவாதிகள் எல்லைகள் வாயிலாக நாட்டுக்குள் வருவதாக டிரம்ப் கூறினார்.

ஆனால், டிரம்ப் கூறுவதை ஆதரிப்பதற்கான எவ்வித ஆதாரங்களும் இல்லை என பைடன் கூறினார்.

அமெரிக்கப் படையினர் மரணங்கள்

ஜோ

பட மூலாதாரம்,REUTERS

கடந்த பத்து ஆண்டுகளில் உலகின் எந்தப் பகுதியிலும் அமெரிக்கப் படையினர் தன்னுடைய ஆட்சியில்தான் உயிரிழக்கவில்லை என பைடன் கூறினார்.

பிபிசி உண்மை சரிபார்ப்புக் குழுவின்படி, பைடனின் இந்தக் கூற்று தவறானது. இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் ஜோர்டானில் ட்ரோன் தாக்குதலில் அமெரிக்கப் படையினர் கொல்லப்பட்டனர்.

இதுதவிர, ஆகஸ்ட் 2021ஆம் ஆண்டில் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறும்போது காபூல் விமான நிலையத்தில் நிகழ்ந்த தற்கொலை தாக்குதலில் அமெரிக்கப் படையினர் 13 பேர் உயிரிழந்தனர். ஐ.எஸ். அமைப்பின் ஐ.எஸ்-கே பிரிவு இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றது.

போரில் உயிரிழக்கும் படையினர் குறித்த ஆய்வு அமைப்பு (Defense Casualty Analysis System) அளித்தத் தகவலின்படி, டொனால்ட் டிரம்ப் ஆட்சிக் காலத்தில் அமெரிக்கப் படைகளைச் சேர்ந்த 65 பேர் உயிரிழந்ததாகக் குறிப்பிட்டுள்ளது.

டிரம்ப் மீதான வழக்கு

டொனால்ட் டிரம்ப்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கடந்த 2006ஆம் ஆண்டு டொனால்ட் டிரம்ப்புடன் உடலுறவு கொண்டதாக ஆபாசப் பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ் ஒரு குற்றச்சாட்டை முன்வைத்தார். அதை டிரம்ப் மறுத்தார். மேலும் 2016ஆம் ஆண்டு தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றதற்கு முன்னதாக இந்த விவகாரம் பற்றி வெளியே பேசாமல் இருக்கத் தனக்குப் பணம் கொடுக்கப்பட்டதாக (hush money) டேனியல்ஸ் கூறியுள்ளார்.

இந்த வழக்கில் டொனால்டு டிரம்ப் குற்றவாளி என நியூயார்க் நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்தது. இதை விவாதத்தின்போது ஜோ பைடன் குறிப்பிட்டார்.

பைடன் கூறுகையில், “குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்ட ஒருவர் இங்கு இருக்கிறார், அவரைத்தான் நான் இப்போது பார்த்துக் கொண்டிருக்கிறேன்” என கூறினார்.

டிரம்ப் ஒழுக்கமான நபர் அல்ல என பைடன் கூறினார். அதேநேநேரம், பைடனின் குற்றச்சாட்டுகளை டிரம்ப் மறுத்தார்.

இஸ்ரேல்-ஹமாஸ் போர்

ஜோ பைடன் - டொனால்ட் டிரம்ப்

பட மூலாதாரம்,REUTERS

காஸா குறித்த கேள்வி எழுகையில், முன்னாள் அதிபர் டிரம்ப் இஸ்ரேல் தன் வேலையை முடிக்க வேண்டும் எனக் கூறினார். பைடன் பாலத்தீனியராகவே மாறிவிட்டதாக டிரம்ப் கூறினார்.

மேலும், யுக்ரேனுக்கு அமெரிக்கா உதவுவது குறித்தும் டிரம்ப் எழுப்பினார். யுக்ரேனுக்கு உதவுவதில் அமெரிக்காவை விட ஐரோப்பிய நாடுகள் குறைவாக செலவழித்துள்ளன என தெரிவித்தார்.

யுக்ரேனுக்கு உதவ அதிகமாக பணம் செலவழிக்குமாறு நேட்டா (NATO) நாடுகளுக்கு பைடன் ஏன் அழுத்தம் தரவில்லை என்றும் டிரம்ப் கேள்வியெழுப்பினார்.

இஸ்ரேல்-ஹமாஸ் போரை முடிவுக்குக் கொண்டு வர என்ன செய்வீர்கள் என பைடனிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது, போரை நிறுத்த ஹமாஸ் விரும்பவில்லை என பைடன் தெரிவித்தார்.

இஸ்ரேலின் உறுதியை மீண்டும் வலியுறுத்திய பைடன், ஹமாஸ் அழிக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.

ஜோ பைடன் - டொனால்ட் டிரம்ப்

பட மூலாதாரம்,GETTY IMAGES / REUTERS

இருவரும் எப்படி விவாதித்தனர்?

வட அமெரிக்கா குறித்து செய்தி சேகரிக்கும் பிபிசி செய்தியாளர் ஆண்டனி ஸர்ச்செர், முன்னாள் அதிபர் டிரம்ப்பின் விவாதம் கட்டுப்பாட்டுடனும் அமைதியுடனும் இருந்ததாகக் கூறினார்.

வாக்குவாதம் செய்தல், மிகைப்படுத்தப்பட்ட பதில்களைத் தருவதிலிருந்து டிரம்ப் விலகியிருந்தார்55. ஏனெனில், கடந்த தேர்தல் விவாதத்தின்போது, இந்த விஷயங்கள் அவரை பலவீனமாக்கின.

டிரம்ப்பின் சில கூற்றுகள் முழுமையான தரவுகளின் அடிப்படையில் இல்லாவிட்டாலும், அவை முழுவதும் தவறான தகவல்கள் இல்லை. எனினும், டிரம்ப்பை பைடனால் மடக்க முடியவில்லை.

உதாரணத்திற்கு கருக்கலைப்பு குறித்த விவாதம் எழுந்தபோது, டொனால்டு டிரம்ப் அதை ‘ஜனநாயக (கட்சியினரின்) தீவிரவாதம்’ எனக் குறிப்பிட்டார்.

மேலும், பைடன் கட்சியின் தலைவர்கள் குழந்தைகள் பிறந்த பிறகு, கருக்கலைப்பை ஆதரிப்பதாக, தவறான தகவலைத் தெரிவித்தார்.

இந்த விவகாரத்தில் பைடன் வெற்றி பெற்றிருக்கலாம், ஆனால் அதைச் செய்ய பைடன் தவறிவிட்டார்.

விவாதத்தின்போது பல நேரங்களில் பைடனின் குரல் கரகரப்பாக இருந்தது, இதற்கு கடந்த சில தினங்களாகவே அவருக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவே காரணம் என, அவருடைய பிரசார அதிகாரிகள் தெரிவித்தனர்.

பைடன் விவாதத்தின்போது சில நேரங்களில் தடுமாறியதாகவும் அவருடைய வாதங்கள் தட்டையாக இருந்ததாகவும் பிபிசி செய்தியாளர் ஆண்டனி ஸர்ச்செர் குறிப்பிட்டுள்ளார். விவாதத்தின் ஆரம்பத்தில் அவருடைய வாதங்கள் அறிவுபூர்வமற்றதாக இருந்ததாகவும் அவர் தெரிவித்தார். வயதைக் கடந்து தனக்கு போதிய ஆற்றல், வலு இருப்பதாக நிரூபிக்க பைடன் தவறிவிட்டார் என ஸர்ச்செர் குறிப்பிட்டுள்ளார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜேர்மனியில் பெரும்பாலான மக்கள் மீண்டும் கிட்லர் ஆட்சி வேண்டாம் என்பதில் மிகவும் தெளிவாக உள்ளார்கள் 

வலதுசாரிகள் வளர்ச்சி உண்மை தான்  ஆனால் அவர்கள் ஜேர்மனியில் உள்ள 16  மாநிலத்தில்  ஒரு மாநிலத்தில் கூட ஆட்சி அமைக்க முடியாது பாராளுமன்றத்தில் கொண்டு வரப்படும் சட்டஙள். அங்கீகாரம்…………………… வழங்குவது. புண்டாஸ்  ராட். ஆகும்  இது 16 மாநிலத்திலிருந்தும்  முதலமைச்சர்  ...உள் நாட்டு அமைச்சர்   என்று இருவர் வீதமும். பிரதமர் ஐனதிபதி,[இவர் தான் தலைவர் ]35.  பேர் அளவில் அங்கம் வகிப்பார்கள். SPD.  CDU.  தான்  மாநிலத்தில் ஆள்வதுண்டு  தமிழ் சிறியின. மாநிலம்  GRUNE. கட்சி ஆள்கிறது  பையர் மாநிலம் CSU. ஆட்சி செய்யுது  இது CDU. இன். கூட்டணி கட்சி  மற்றைய எந்தவொரு கட்சியும். மாநிலங்களை ஆளவில்லை.முடியாது  இந்த வளர்ந்து வரும் வலதுசாரிகளும் ஒருபோதும் மாநிலங்களை ஆளப்போவதில்லை   மத்தியில் ஆளும் கட்சி  7 மாநிலங்களை  ஆள வேண்டும்  அப்போ தான்  சட்டம்களை இயற்றி அங்கீகரிக்க முடியும்   நடைமுறையில் வரும  இந்த வலதுசாரிகள் 25 %   மேல் வளரப்போவதில்லை.  எப்படி மாநிலத்தில் அல்லது மத்தியில் ஆட்சி அமைக்க முடியும்  ??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

செலன்ஸ்கி வெகுவிரையில் எல்லோராலும் கைவிடப்படும் நாள் கண்ணுக்கெட்டிய தூரத்தில் தெரிகிறது.. பிரான்சில் பிரித்தானியாவில் ஜேர்மனியில் அமெரிக்காவில் என முக்கிய வல்லரசு நாடுகளில் வலதுசாரிகள் கைகள் மேலோங்குகின்றன.. அவர்கள் உள்ளூர் மக்களின் குரலாக ஒலிக்கிறார்கள்.. இடதுசாரிகளும் நடு நிலைவாதிகளும் உள்ளூர் மக்களின் கஸ்ரங்களையும் பிரச்சினைகளையும் தீர்க்காமல் உக்கிரேனுக்கு பில்லியன்களில் அள்ளிவழங்கும் அறிவிப்பை வெளியிடும்போது எண்ணெய்க்கும் கரண்டுபில்லுக்கும் அல்லாடும் உள்ளூர் வெள்ளைகள் செம காண்டாகிறார்கள.. அனைத்து வலதுசாரிகளின் முக்கிய அறிவுப்புகளில் ஒன்று உக்கிரேன் போருக்கு ஆதரவு இல்லை என்பது..

வளர்ச்சி அடைந்த நாடுகளில் வலதுசாரிகளும், அப்பட்டமான இனவாதிகளும் ஆட்சிக்கு வரவேண்டும். அதேபோல வளர்ச்சியடைந்து வரும் நாடுகளில் சர்வாதிகாரிகளும், பின்தங்கிய நாடுகளில் இராணுவ ஆட்சியும் வரவேண்டும். இப்படி உலகம் முழுவதும் கொடூரமான ஆட்சிகள் வந்தால்தான் 8 பில்லியன் தாண்டிய உலகின் சனத்தொகை வளர்ச்சியைக் குறைக்கலாம். வேகமாக பூமியைச் சூடாக்கவும், போர்களை நடாத்தி மக்களைக் கொல்லவும், பஞ்சம், பட்டினிகளை உருவாக்கவும் இவர்களை விட்டால் சிறந்தவர்கள் கிடையாது.😎

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

அப்படி எனில் இலங்கையில் நடந்த     நடக்கும்   ஆட்சியாளர்கள் சரியானவர்கள் 🤣🤣🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

வளர்ச்சி அடைந்த நாடுகளில் வலதுசாரிகளும், அப்பட்டமான இனவாதிகளும் ஆட்சிக்கு வரவேண்டும். அதேபோல வளர்ச்சியடைந்து வரும் நாடுகளில் சர்வாதிகாரிகளும், பின்தங்கிய நாடுகளில் இராணுவ ஆட்சியும் வரவேண்டும். இப்படி உலகம் முழுவதும் கொடூரமான ஆட்சிகள் வந்தால்தான் 8 பில்லியன் தாண்டிய உலகின் சனத்தொகை வளர்ச்சியைக் குறைக்கலாம். வேகமாக பூமியைச் சூடாக்கவும், போர்களை நடாத்தி மக்களைக் கொல்லவும், பஞ்சம், பட்டினிகளை உருவாக்கவும் இவர்களை விட்டால் சிறந்தவர்கள் கிடையாது.😎

வெள்ளையர்கள் உலக நாடுகளை அடிமைப்படுத்திய  காலம் தொடக்கம்  இன்று வரைக்கும் நாடுகளை கூறுபோட்டு இனங்களை அழித்து கொள்ளையடித்து  தங்கள் இராணுவங்களை நிறுவி அஜாரகங்கள் செய்தது/செய்வது வலதுசார கொள்கையுள்ள நாடுகளா அல்லது இடதுசார கொள்கையுள்ள நாடுகளா?   😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Kandiah57 said:

அமெரிக்காவில் எவர் ஐனதிபதியாக வந்தாலும் பென்டகனின்.  ஆலோசனைகளை மீறி ஆட்சி செய்ய முடியாது    இரண்டு வேட்பாளர்களும். வயோதிபர்கள். தான்   பைடனிடம். குறைபாடுகளுண்டு அதை சுட்டி காட்டுவது  மூலம் ரம்டபு. சிறந்தவர்  என்று நிறுவ முடியாது,.ரம்புடன். என்ன திறமைகளுண்டு.   ??  ரம்டபு உலகம் முழுவதும் வியாபாரம் செய்ய வேண்டும்   ஆனால் ஜேர்மனி   மொச்சிகோவில். காரை உற்பத்தி செய்து அமெரிக்காவில் விற்கக்கூடாது     இது என்ன நியாயம்?? இரண்டு பேரும். ஒதுங்கி இருந்து  இளைஞர்கள்  போட்டி இட. ஊக்கப்படுத்தலாம் ஆலோசனைகளை வழங்கலாம்     🙏 இது பற்றி அமெரிக்கர்கள் கருத்துகளை அறிய ஆவலுடன் இருக்கிறேன்  🤣

அவர் சிறந்தவரா அல்லது இவர் சிறந்தவரா என்ற ஒப்பீடு இவர்கள் இருவருக்கும் இடையில் இல்லை என்று நினைக்கின்றேன். இப்பொழுது நாடு இருக்கும் நிலையில் அது சிறந்ததா அல்லது இது சிறந்ததா என்பதே நடுநிலையான வாக்காளர்களின் சிந்தனையாக இருக்கும். என்னுடையது அதுவே. நாட்டையே, அமெரிக்காவை மட்டுமே, முன்னிலைப்படுத்தியே இவர்கள் ஒரு பக்கம் சாய்வார்கள். பொதுவாக உலக நடப்புகள் வெறும் ஊறுகாய் மட்டுமே, வேறு எதுவுமே இல்லாவிட்டால் அதை கையில் எடுப்பார்கள்.   

இரண்டு கட்சிகளினதும் தீவிர ஆதரவாளர்களும், ட்ரம்பின் ரசிகர்களும் என்ன ஆனாலும் மாறப் போவதில்லை. 

பங்குச் சந்தை போன்றே இந்த நாடும். வல்லுநர்கள் ஏதேதோ சொல்வார்கள், ஆனால் நடப்பதோ வேறு ஒன்று. ஏற்கனவே இருக்கும் பொறிமுறையில், சில சின்ன மாற்றங்களுடன், தான் நாடு போய்க் கொண்டிருக்கும், ஆனாலும் ட்ரம்ப் வந்தால் குடியேறிய மற்றும் அகதிகளாக வந்த முதலாவது தலைமுறைக்கு உள்ளூர ஒரு பயம் இருக்கும். இனவாதம், தூய்மைவாதம் போன்றன வெளியில் வந்து நடனமிடும். விவேக் ராமசாமி போன்றும் பலர் முன்னே வருவார்கள். மாற்றுக் கருத்துகள் சொல்வார்கள். நாங்கள் சிரித்துக் கொண்டேயிருக்க நான்கு வருடங்கள் ஓடி விடும்.

இளைஞர்கள் இங்கு மெதுமெதுவாகவே முன்னுக்கு வரலாம். அவர்கள் அதி வேகத்தில் முன்னே வருவதற்கு இங்கு ஒரு வெற்றிடம் பொதுவாக ஏற்படுவதில்லை. ஏற்கனவே ஒரு அதிகார, பதவி வரிசை இரு கட்சிகளிலும் இருந்து கொண்டேயிருக்கும். ஆனாலும் இரு கட்சிகளிலும் இப்பொழுது அந்த வரிசை பலமாக இல்லை, முக்கியமாக ஜனநாயக் கட்சியில். கலிஃபோர்னியா கவர்னர், நியூசம், அடுத்த தலைவராகப் பார்க்கப்படுகின்றார். அமெரிக்காவைப் பொறுத்த வரை அவர் ஒரு இடதுசாரி, அது ஒரு பலவீனம். விவேக் தவிர வேறு எந்த இளையவரும் தொடுவானம் வரை இல்லை. விவேக்கை ஒருவரும், அவர் தவிர, பெரிதாக பொருட்படுத்துவதில்லை. நடைமுறை சாத்தியமற்ற அதிரடியான கருத்துகள் மூலம் கவனம் பெறுவார், வேறு எதுவும் இல்லை. 

Edited by ரசோதரன்
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ரசோதரன் said:

உங்கள் பதில்களுக்கு நன்றி பல. நான் முன்பு வாசித்து உள்ளேன்    ட்ரம்பு  அமெரிக்கா படைகளை அனுப்ப வேண்டும்  எனக் கோரிக்கை விடுத்த போது   பென்டகன் தலைவர் மறுத்து விட்டார்  .....பென்டகன்.  விரும்பிய போது போர் நடந்து உள்ளது   அமெரிக்கா ஐனதிபதி பதவி பொம்மை பதவியா??? அவர்கள் விரும்பியதை செய்ய முடியுமா?? அல்லது பென்டகன். விரும்பியதை செய்ய வேண்டுமா??. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Kandiah57 said:

அமெரிக்காவில் எவர் ஐனதிபதியாக வந்தாலும் பென்டகனின்.  ஆலோசனைகளை மீறி ஆட்சி செய்ய முடியாது  

அடி செருப்பால அம்மன் கோயில் புக்கை எண்டானாம். 🤣

அமெரிக்க நாட்டில் எவர் சனாதிபதியாக வந்தாலும் ஒரு கட்டுப்பாட்டுக்குள் தான் செயற்பட முடியும் என்றால்......?

 KGB  சட்ட திட்டங்களுக்கமைய புட்டினும் தன் நாட்டின் பாதுகாப்பிற்காக சில நடவடிக்கைகளை  முன்னெடுத்து செல்கின்றார் என எடுத்துக்கொள்ளலாமா?

அமெரிக்காவில் எவர் ஆட்சிக்கு வந்தாலும்  பென்டகனின் ஆலோசனை முக்கியம் என்றால்...
புட்டினும் அவர் தம் புலனாய்வு மற்றும் பாதுகாப்பு  ஆலோசனைகளின்  முன்னெடுப்பிலேயே பல நடவடிக்கைகளை எடுக்கின்றார் என முடிக்கலாமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Kandiah57 said:

உங்கள் பதில்களுக்கு நன்றி பல. நான் முன்பு வாசித்து உள்ளேன்    ட்ரம்பு  அமெரிக்கா படைகளை அனுப்ப வேண்டும்  எனக் கோரிக்கை விடுத்த போது   பென்டகன் தலைவர் மறுத்து விட்டார்  .....பென்டகன்.  விரும்பிய போது போர் நடந்து உள்ளது   அமெரிக்கா ஐனதிபதி பதவி பொம்மை பதவியா??? அவர்கள் விரும்பியதை செய்ய முடியுமா?? அல்லது பென்டகன். விரும்பியதை செய்ய வேண்டுமா??. 

இது ஒரு பொம்மை பதவி இல்லை. ஆனால், கூட்டுப் பொறுப்பின் ஒரு பகுதியே அரச தலைவர். உலகமகா யுத்தங்கள் போன்ற விதிவிலக்குகள் தவிர, எந்த முடிவும் பலராலேயே எடுக்கப்படும். ஒவ்வொரு துறைக்கும் செனட் கமிட்டி என்று ஒன்று உள்ளது. அவர்கள் மிகவும் பலம் வாய்ந்தவர்கள். 20, 30, 40 வருடங்களாக செனட் பதவிகளில் இருப்பவர்கள். அதை விட பாதுகாப்பு, இராணுவம், உளவு என்று பல அதிகார மையங்கள் உள்ளது. வெளி உலகத்திற்கே இன்னும் தெரியாத சில மையங்கள் அல்லது அதிகாரங்கள் கூட இருக்கக்கூடும். அரச தலைவர் தன்னிச்சையாக ஒரு முடிவை எடுக்கவே முடியாது, விதிவிலக்கான பெரும் நெருக்கடி காலங்களைத் தவிர.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, குமாரசாமி said:

அடி செருப்பால அம்மன் கோயில் புக்கை எண்டானாம். 🤣

அமெரிக்க நாட்டில் எவர் சனாதிபதியாக வந்தாலும் ஒரு கட்டுப்பாட்டுக்குள் தான் செயற்பட முடியும் என்றால்......?

 KGB  சட்ட திட்டங்களுக்கமைய புட்டினும் தன் நாட்டின் பாதுகாப்பிற்காக சில நடவடிக்கைகளை  முன்னெடுத்து செல்கின்றார் என எடுத்துக்கொள்ளலாமா?

அமெரிக்காவில் எவர் ஆட்சிக்கு வந்தாலும்  பென்டகனின் ஆலோசனை முக்கியம் என்றால்...
புட்டினும் அவர் தம் புலனாய்வு மற்றும் பாதுகாப்பு  ஆலோசனைகளின்  முன்னெடுப்பிலேயே பல நடவடிக்கைகளை எடுக்கின்றார் என முடிக்கலாமா?

🤣.........

நீங்கள் ஒரு வக்கீல் ஆகியிருக்க வேண்டியவர்....

எங்கிருந்து கட்டளைகள் எங்கு போகின்றன என்பது முக்கியம் என்று நினைக்கின்றேன். 

என்னுடைய அனுமானத்தின் பிரகாரம், ரஷ்யா மற்றும் அது போன்ற நாடுகளில் கட்டளைகள் அரச தலைவரிடமிருந்தே ஆரம்பிக்கின்றது. ஆரம்பகட்ட தகவல்களை அவர் பலரிடமிருந்து அல்லது நம்பிக்கையான ஒரு சிலரிடமிருந்தோ பெற்றுக் கொள்வார்.

அமெரிக்கா போன்ற நாடுகளில் கட்டளைகள் அரச தலைவரிடமிருந்து ஆரம்பிப்பதில்லை. அவர் ஓரளவு பின்னரேயே கலந்து ஆலோசிக்கப்படுவார். இறுதி முடிவில் அவரின் பங்களிப்பு நிச்சயம் இருக்கும்.

கிட்டத்தட்ட இங்கு தனியார் நிறுவனங்களும் இப்படியே நடத்தப்படுகின்றன. 

Edited by ரசோதரன்
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, ரசோதரன் said:

அரச தலைவர் தன்னிச்சையாக ஒரு முடிவை எடுக்கவே முடியாது, விதிவிலக்கான பெரும் நெருக்கடி காலங்களைத் தவிர.

ரொம்ப நன்றி   🙏. புரிந்தது     வாழ்த்துக்கள் 

11 minutes ago, ரசோதரன் said:

என்னுடைய அனுமானத்தின் பிரகாரம், ரஷ்யா மற்றும் அது போன்ற நாடுகளில் கட்டளைகள் அரச தலைவரிடமிருந்தே ஆரம்பிக்கின்றது.

கிட்டத்தட்ட இலங்கை   இந்தியா  போன்றது 

27 minutes ago, குமாரசாமி said:

அடி செருப்பால அம்மன் கோயில் புக்கை எண்டானாம். 🤣

அமெரிக்க நாட்டில் எவர் சனாதிபதியாக வந்தாலும் ஒரு கட்டுப்பாட்டுக்குள் தான் செயற்பட முடியும் என்றால்......?

 KGB  சட்ட திட்டங்களுக்கமைய புட்டினும் தன் நாட்டின் பாதுகாப்பிற்காக சில நடவடிக்கைகளை  முன்னெடுத்து செல்கின்றார் என எடுத்துக்கொள்ளலாமா?

அமெரிக்காவில் எவர் ஆட்சிக்கு வந்தாலும்  பென்டகனின் ஆலோசனை முக்கியம் என்றால்...
புட்டினும் அவர் தம் புலனாய்வு மற்றும் பாதுகாப்பு  ஆலோசனைகளின்  முன்னெடுப்பிலேயே பல நடவடிக்கைகளை எடுக்கின்றார் என முடிக்கலாமா?

புட்டின். தனி மனித ஆட்சி    அதாவது மன்னர் ஆட்சி      அமெரிக்கா அப்படியில்லை   பல. தடைகளுண்டு அந்த தடைகளை உடைத்து அல்லது தாண்டி தான்   ஒரு விடயத்தை நிறைவேற்ற வேண்டும்    

Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.