Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

பிரான்ஸ் முதற்கட்ட பாராளுமன்ற தேர்தல் வாக்குகள் எண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில்..

அதிபர் மக்ரோனின் கட்சி மரண அடி வாங்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டபடியுள்ளன. 

அதேவேளை பிரான்ஸ் தேசியவாத வலது சாரிகள் அமோக வெற்றிகளை பெற்று வருகின்றனர்.

ஏலவே அமெரிக்காவில் பைடனின் உளறல் தேர்தல் பேச்சு அவரின் வெற்றியை கேள்விக்குறியாக்கிவிட்டுள்ள நிலையில்..

மேற்குலக புட்டின் எதிர்பாளர்கள் நடப்பு தேர்தல்களில் மக்களால் நிராகரிக்கப்பட்டு வரும் நிலையே காணப்படுவதோடு.. தேசியவாதம் எழுச்சி பெற்று வருகிறது.

https://www.bbc.co.uk/news/live/cn087x77g1dt

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஜேர்மனியில் கூட  அடுத்த ஞாயிறு பொது தேர்தல் வைத்தால் AfD  கட்சிதான் வெற்றியடையும். அதில் நியாயமும் இருக்கின்றது.

அவர்கள் எம் நாடு என்கிறார்கள். நாங்கள் புலம்பெயர்ந்து இங்கு வந்து விட்டு தமிழீழம் கேட்கின்றோம்.

மேற்குலக புட்டின் எதிர்ப்பாளர்கள் வாய்ப்பாடு வைத்து கூட்டி கழித்து கணக்கு பார்க்க கடவீர்.

  • Downvote 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

பிரான்சில் தேர்தல் முடிவுகளை தொடர்ந்து வன்முறை – வர்த்தக நிலையங்கள் வாகனங்கள் தீக்கிரை

Published By: RAJEEBAN   01 JUL, 2024 | 08:34 AM

image
 
பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தலில் தீவிரவலதுசாரி கட்சி முன்னிலை பெற்றதை தொடர்ந்து அதனை எதிர்க்கும் தரப்பினர் தலைநகர் பரிசில் கடும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

தீவிரஇடதுசாரிகள் இஸ்லாமிய ஆதரவாளர்கள் உட்பட சமூகத்தின் பலதரப்பட்டவர்கள் இந்த ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

வர்த்தகநிலையங்களும் வாகனங்களும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதை காண்பிக்கும் படங்கள் வெளியாகியுள்ளன.

பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களிற்கும் இடையில் மோதல்கள் இடம்பெறுகின்றன.

GQ1X0GHWMAAGXfm.jpg

பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தலில் தீவிரவலதுசாரிகள் முன்னிலைபெற்றுள்ள அதேவேளை தற்போதைய ஜனாதிபதி இமானுவேல் மக்ரோனின் கட்சி மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

குடியேற்றவாசிகளிற்கு எதிரான ஆர்என் கட்சி 33 வீத வாக்குகளை பெற்றுள்ள அதேவேளை இடதுசாரிகூட்டணி 28 வீத வாக்குகளை பெற்றுள்ளது.

ஜனாதிபதி இமானுவேல் மக்ரோனின் கூட்டணிக்கு 21 வீத வாக்குகள் கிடைத்துள்ளதாக பிரான்ஸ் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மக்ரோனின் கட்சி முற்றாக துடைத்தெறியப்பட்டுள்ளது என ஆர்என்கட்சியின் மரைன்லெபென் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் மக்கள் வாக்களித்தால் நான்; அனைத்துபிரான்ஸ் மக்களினதும் பிரதமராக தயார் என ஆர்என் கட்சி தலைவர் ஜோர்டன் பர்டெல்லா தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தலின் முதல் சுற்றில் தீவிரவலதுசாரிகள் வெற்றிபெற்றுள்ளமை அதன் வரலாற்றில் இதுவே முதல்தடவை என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/187350

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

சனநாயகக் காவலர்களில் ஒன்றான கனடா,  ஈரானிய சனாதிபதித் தேர்தலின் போது கனடாவில் வாக்களிப்பை நடாத்த அனுமதிக்கவில்லை  எனச் செய்திகள் தெரிவிக்கின்றன. 

🤣

Edited by Kapithan
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 1/7/2024 at 01:07, குமாரசாமி said:

ஜேர்மனியில் கூட  அடுத்த ஞாயிறு பொது தேர்தல் வைத்தால் AfD  கட்சிதான் வெற்றியடையும். அதில் நியாயமும் இருக்கின்றது.

அவர்கள் எம் நாடு என்கிறார்கள். நாங்கள் புலம்பெயர்ந்து இங்கு வந்து விட்டு தமிழீழம் கேட்கின்றோம்.

மேற்குலக புட்டின் எதிர்ப்பாளர்கள் வாய்ப்பாடு வைத்து கூட்டி கழித்து கணக்கு பார்க்க கடவீர்.

நம் நாடு என்பதில் உடன்பாடே. ஆனால் இது வெள்ளை நாடு என்பது தான் தவறு. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 hours ago, விசுகு said:

நம் நாடு என்பதில் உடன்பாடே. ஆனால் இது வெள்ளை நாடு என்பது தான் தவறு. 

விசுகர்!  அவர்கள் சொல்லும் வெள்ளை நாடு என்பதிலும் தவறில்லை.

ஏனெனில்.....

இவர்கள் ஆசிய ஆபிரிக்க நாடுகள் மீது படையெடுத்து அந்த நாட்டு மக்களை அடிமைகளாக வைத்திருக்கா விட்டால், அந்த நாடுகளின் சொத்துக்களை கொள்ளையடிக்காமல் விட்டிருந்தால், இன்றும் அவர்கள் தம் கொலனி நாடுகள் என பெருமை அடிக்காமல் இருந்தால்.....
 
எனவே....

மூன்றாம் உலக நாடுகளின் பிந்தங்கிய நிலைக்கு இவர்களும் பதில் சொல்ல வேண்டியவர்கள் ஆகின்றார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 1/7/2024 at 01:07, குமாரசாமி said:

ஜேர்மனியில் கூட  அடுத்த ஞாயிறு பொது தேர்தல் வைத்தால் AfD  கட்சிதான் வெற்றியடையும். அதில் நியாயமும் இருக்கின்றது.

அவர்கள் எம் நாடு என்கிறார்கள். நாங்கள் புலம்பெயர்ந்து இங்கு வந்து விட்டு தமிழீழம் கேட்கின்றோம்.

மேற்குலக புட்டின் எதிர்ப்பாளர்கள் வாய்ப்பாடு வைத்து கூட்டி கழித்து கணக்கு பார்க்க கடவீர்.

16 %   வெற்றி இல்லை  ....ஆட்சி அமைப்பது,நாட்டை ஆள்வது தான்  வெற்றியாகும்.  இவர்களால்  தனித்து அல்லது  கூட்டணி  அமைத்து தேர்தலில் பின்னர் கூட்டணி அமைத்து  ஜேர்மனியை ஆள்வார்கள??  இல்லை எனபது எனது பதில்    

  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 minutes ago, Kandiah57 said:

16 %   வெற்றி இல்லை  ....ஆட்சி அமைப்பது,நாட்டை ஆள்வது தான்  வெற்றியாகும்.  இவர்களால்  தனித்து அல்லது  கூட்டணி  அமைத்து தேர்தலில் பின்னர் கூட்டணி அமைத்து  ஜேர்மனியை ஆள்வார்கள??  இல்லை எனபது எனது பதில்    

நீங்கள் பல இடங்களில் அடிக்கடி ஆட்சி அமைப்பதை பற்றியே கருத்தெழுதுகின்றீர்கள்.  ஒரு அரசியலில் அதுவல்ல முக்கியம்.

சீமான் 7வீதம் 8வீதம் முன்னேறியதற்கே கதறிய நீங்கள் 16 வீதம் என்பதை கடந்து போகின்றீர்கள்.

உங்களை நினைத்து கொடுப்புக்குள் சிரித்து விட்டு இடம் மாறுவதை தவிர வேறு வழியில்லை.

ஒரு நாட்டில் பதினாறு வீத அரசியல்  வெற்றி  என்பது குறைந்த விடயமல்ல. 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
25 minutes ago, குமாரசாமி said:

சீமான் 7வீதம் 8வீதம் முன்னேறியதற்கே கதறிய

நான் வாழ்த்துக்கள் தெரிவித்தேன். கதறவில்லை  🤣.  உங்களால்  அவர்கள் ஆட்சி அமைப்பார்கள் என்று சொல்ல முடியவில்லை      16 %பெரிய விடயம்   தான்  மற்ற கட்சிகள் இவர்களுடன் இணைந்து அரசாங்கம் அமைக்கும் போது மட்டுமே     கொஞ்ச காலம் முன்னர்  PDS.   என்ற கட்சியும்.  இப்படி தான்   அவர்களும் கிழக்கில் நிறைய ஆதரவு இருந்தது   இப்ப குறைத்து விட்டது  

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, குமாரசாமி said:

விசுகர்!  அவர்கள் சொல்லும் வெள்ளை நாடு என்பதிலும் தவறில்லை.

ஏனெனில்.....

இவர்கள் ஆசிய ஆபிரிக்க நாடுகள் மீது படையெடுத்து அந்த நாட்டு மக்களை அடிமைகளாக வைத்திருக்கா விட்டால், அந்த நாடுகளின் சொத்துக்களை கொள்ளையடிக்காமல் விட்டிருந்தால், இன்றும் அவர்கள் தம் கொலனி நாடுகள் என பெருமை அடிக்காமல் இருந்தால்.....
 
எனவே....

மூன்றாம் உலக நாடுகளின் பிந்தங்கிய நிலைக்கு இவர்களும் பதில் சொல்ல வேண்டியவர்கள் ஆகின்றார்கள்.

இதையே இன்னும் எத்தனை தலைமுறைகளுக்கு சொல்லிக்கொண்டே இருக்கப் போகிறோம்???

  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 minutes ago, விசுகு said:

இதையே இன்னும் எத்தனை தலைமுறைகளுக்கு சொல்லிக்கொண்டே இருக்கப் போகிறோம்???

இது எங்கள் கொலனி என மார்தட்டிக்கொண்டு திரியும் இவர்கள் அங்கு நடக்கும் பிரச்சனைனைகளை தீர்க்கும்  வரைக்கும்:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஐரோப்பா வெளிநாட்டவர்களை வெறுப்பதற்கும் வெளியேற்ற ஆசைப்படுவதற்கும் , எனதுநாடு எனக்கே என்று ஆவேசப்படுவதற்கும் 70%மான காரணம் எவனையாவது கொன்றால் சொர்க்கத்துக்கு போகலாம் என்ற இனிய மார்க்க இஸ்லாமியர்களே. 

ஏனைய காரணங்கள் மீதம்.

  • Thanks 1

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.