Jump to content

பிரான்ஸ் தேர்தல் - மக்ரோனுக்கு மரண அடி.


nedukkalapoovan

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பிரான்ஸ் முதற்கட்ட பாராளுமன்ற தேர்தல் வாக்குகள் எண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில்..

அதிபர் மக்ரோனின் கட்சி மரண அடி வாங்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டபடியுள்ளன. 

அதேவேளை பிரான்ஸ் தேசியவாத வலது சாரிகள் அமோக வெற்றிகளை பெற்று வருகின்றனர்.

ஏலவே அமெரிக்காவில் பைடனின் உளறல் தேர்தல் பேச்சு அவரின் வெற்றியை கேள்விக்குறியாக்கிவிட்டுள்ள நிலையில்..

மேற்குலக புட்டின் எதிர்பாளர்கள் நடப்பு தேர்தல்களில் மக்களால் நிராகரிக்கப்பட்டு வரும் நிலையே காணப்படுவதோடு.. தேசியவாதம் எழுச்சி பெற்று வருகிறது.

https://www.bbc.co.uk/news/live/cn087x77g1dt

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜேர்மனியில் கூட  அடுத்த ஞாயிறு பொது தேர்தல் வைத்தால் AfD  கட்சிதான் வெற்றியடையும். அதில் நியாயமும் இருக்கின்றது.

அவர்கள் எம் நாடு என்கிறார்கள். நாங்கள் புலம்பெயர்ந்து இங்கு வந்து விட்டு தமிழீழம் கேட்கின்றோம்.

மேற்குலக புட்டின் எதிர்ப்பாளர்கள் வாய்ப்பாடு வைத்து கூட்டி கழித்து கணக்கு பார்க்க கடவீர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரான்சில் தேர்தல் முடிவுகளை தொடர்ந்து வன்முறை – வர்த்தக நிலையங்கள் வாகனங்கள் தீக்கிரை

Published By: RAJEEBAN   01 JUL, 2024 | 08:34 AM

image
 

பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தலில் தீவிரவலதுசாரி கட்சி முன்னிலை பெற்றதை தொடர்ந்து அதனை எதிர்க்கும் தரப்பினர் தலைநகர் பரிசில் கடும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

தீவிரஇடதுசாரிகள் இஸ்லாமிய ஆதரவாளர்கள் உட்பட சமூகத்தின் பலதரப்பட்டவர்கள் இந்த ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

வர்த்தகநிலையங்களும் வாகனங்களும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதை காண்பிக்கும் படங்கள் வெளியாகியுள்ளன.

பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களிற்கும் இடையில் மோதல்கள் இடம்பெறுகின்றன.

GQ1X0GHWMAAGXfm.jpg

பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தலில் தீவிரவலதுசாரிகள் முன்னிலைபெற்றுள்ள அதேவேளை தற்போதைய ஜனாதிபதி இமானுவேல் மக்ரோனின் கட்சி மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

குடியேற்றவாசிகளிற்கு எதிரான ஆர்என் கட்சி 33 வீத வாக்குகளை பெற்றுள்ள அதேவேளை இடதுசாரிகூட்டணி 28 வீத வாக்குகளை பெற்றுள்ளது.

ஜனாதிபதி இமானுவேல் மக்ரோனின் கூட்டணிக்கு 21 வீத வாக்குகள் கிடைத்துள்ளதாக பிரான்ஸ் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மக்ரோனின் கட்சி முற்றாக துடைத்தெறியப்பட்டுள்ளது என ஆர்என்கட்சியின் மரைன்லெபென் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் மக்கள் வாக்களித்தால் நான்; அனைத்துபிரான்ஸ் மக்களினதும் பிரதமராக தயார் என ஆர்என் கட்சி தலைவர் ஜோர்டன் பர்டெல்லா தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தலின் முதல் சுற்றில் தீவிரவலதுசாரிகள் வெற்றிபெற்றுள்ளமை அதன் வரலாற்றில் இதுவே முதல்தடவை என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/187350

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சனநாயகக் காவலர்களில் ஒன்றான கனடா,  ஈரானிய சனாதிபதித் தேர்தலின் போது கனடாவில் வாக்களிப்பை நடாத்த அனுமதிக்கவில்லை  எனச் செய்திகள் தெரிவிக்கின்றன. 

🤣

Edited by Kapithan
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தென் கொரியாவில் அரசு ஊழியராக பணியாற்றிய ரோபோ ஒன்று தற்கொலை செய்து கொண்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதனடிப்படையில், தற்கொலை செய்து கொண்ட உலகின் முதல் ரோபோ இது என தெரிவிக்கப்படுகின்றது. தென் கொரியாவின் குமி நகர சபையில் அரசு ஊழியராக குறித்த ரோபா பணியாற்றி வந்துள்ளது. ஆவணங்களை எடுத்துச் செல்லும் அலுவலக உதவியாளராகப் பணியாற்றிய ரோபோ, தான் பணிபுரிந்த கட்டிடத்தின் முதல் மற்றும் இரண்டாவது தளங்களுக்கு இடையே உள்ள படிக்கட்டுகளில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக சந்தேகிக்கப்படுவதாக குறித்த செய்திகளில் தெரிவிக்கப்படுகின்றது. தற்கொலை செய்து கொண்ட ரோபோவுக்கு குமியில் வசிப்பவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இவ்வாறு தற்கொலை செய்த ரோபோவை நகர அதிகாரிகள் எடுத்துச் சென்றுள்ளதாக கொரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது தொடர்பான விரிவான விசாரணைகளும் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன. https://thinakkural.lk/article/305134
    • முரல் மீன் குத்தி நபர் பலி! யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் இருந்து மீன் பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவர் முரல் மீன் குத்தி உயிரிழந்தார். குருநகர் கடலில் நேற்று முன்தினம் (01) இரவு இந்த அசம்பாவிதம் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் குருநகரைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 29 வயதான மைக்கேல் கொலின் டினோ எனத் தெரியவருகின்றது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர். https://thinakkural.lk/article/305109
    • 03 JUL, 2024 | 10:14 AM   யாழ்ப்பாணம், குறிகட்டுவானில் இருந்து நயினாதீவுக்கு பொருட்கள் ஏற்றிச் சென்ற படகொன்று கவிழ்ந்ததில் ஒருவர் கடலில் மூழ்கி பரிதாபகரமாக உயிரிழந்தார். புங்குடுதீவு 3ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த இந்திரலிங்கம் அருண் (42) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்தார். குறிகட்டுவானுக்கும் நயினாதீவுக்கும் இடையில் பொருட்கள் ஏற்றி இறக்கலில் ஈடுபட்ட படகொன்று நான்கு தொழிலாளர்களுடன் நேற்று (02) இரவு 7 மணியளவில் நடுக்கடலில் கவிழ்ந்தது. இதனால் படகில் பயணித்த நால்வரும் கடலில் வீழ்ந்தனர். அவர்கள் கரை நோக்கி நீந்தியவேளை, கிராம மக்களின் உதவியுடன் மூவர் மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர். எனினும், நால்வரில் ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்தார். உயிரிழந்தவரின் உடலானது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/187556
    • முன்னாள் பா.உ. அரியநேத்திரன் ஒரு வாட்ஸப் குழுமத்தில் பதிந்தது.. — சம்பந்தன் ஐயா தொடர்பாக அறிந்தும் அறியாத உண்மைகள்..! 1. இலங்கை தமிழரசுக்கட்சியின்  முன்னாள் தலைவரும் அப்போது அரசியல் குழுத் தலைவருமான இரா. சம்பந்தன் ஐயாவுக்கு தாயகத்தலைமகன் எனும் பட்டம்  2014, செப்டம்பர்,27, ம் திகதி இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட கிளையினால் கல்லடி துளசிமண்டபத்தில் நடாத்திய வரவேற்பு வைபவத்தின் போதே அவர் தாயகத்தலைமகன் எனும் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டார். 2. சம்பந்தன் ஐயா அவர்களுக்கு வாழும் வீரர்' விருது -2016, ஜனவரி,14, கனேடிய தமிழர் பேரவை நடத்திய பொங்கல் விழாவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு 'வாழும் வீரர்' (Living Hero Award) என்ற விருது வழங்கி மதிப்பளித்துள்ளது. இந்த விழாவில் கனேடிய வெளியுறவு அமைச்சர் ஸ்ரபேன் டியோன், குடிவரவு மற்றும் குடியுரிமை அமைச்சர் யோன் மக்கலம், ஒன்ரேறியோ மாகாண முதலமைச்சர் கத்லீன் வின், ஒன்ரேறியோ மாகாண எதிர்க்கட்சித் தலைவர் அன்ரியா கோர்வத், ரொறன்ரோ மாநகர சபை முதல்வர் யோன் ரோறி, மார்க்கம் நகர சபை மேயர் பிராங் ஸ்காப்பித்தி, இஸ்ரோவில் மாநகர முதல்வர், நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட மூன்று மட்ட அரசுகளில் உள்ள மக்களால் தெரிவுசெய்யப்பட்ட 50 இற்கு மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்டார்கள். 👉புலிக்கொடியும் சிங்கக்கொடியும்.. ! 3. சம்பந்தன் ஐயா 2012, மே,01, ல் யாழ்ப்பாண மேதினத்தில் மேடையில் வைத்து அப்போது பிரதமராக இருந்த ரணில் வேண்டுமென திட்டமிட்டு சிங்கக்கொடியை சம்பந்தன் ஐயாவின் கையில் பிடிக்கவைத்தார்.இந்தப்படம் ஊடகபரப்பில் வந்தபோது அவருக்கு எதிராக பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. அந்த கொடி ரணிலால் சம்பந்தன் ஐயாவுக்கு அவருக்கு தெரியாமல் கொடுக்கப்பட்டது என்பதே உண்மை. 4. ஆனால் சம்பந்தன் ஐயா திருகோணமலையில் 2004, அக்டோபர்,17, ல்  ஒரு நிகழ்வில் அவர் விரும்பி புலிக்கொடியை ஏற்றினார் அந்த நிகழ்வில் 22, தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டோம். 5. 2004,மாவீரர் நாள் 2004, நவம்பர்,27 அன்று சம்பந்தன் ஐயா தலைமையில் இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக நாடாளுமன்ற கட்டத்தொகுதியில் மாவீரர்களுக்கு 22, உறுப்பினர்களும் தீபம் ஏற்றி நினைவுகூரப்பட்டதுடன்.       சம்பந்தன் ஐயா மாவீரர்கள் தொடர்பாக புகழந்தும் பேசினார் என்பதும் வரலாறு. -பா.அரியநேத்திரன்- 03/07/2024    
    • தேர்தலை வைத்து பிரெஞ்சுமக்களை துவேசிகளாக்காதீர்கள். இங்கே வந்தவரும் கலந்தவரும் தான் அதிதீவிர வலதுசாரி. இதில் நம்மவர்களும் அடக்கம்.
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.