Jump to content

திருமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராகிறாா் குகதாசன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

திருமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராகிறாா் குகதாசன்

July 1, 2024
 

kuhathasan திருமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராகிறாா் குகதாசன்இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக ச.குகதாசன் நியமிக்கப்படுவார்.

இலங்கை தமிழ் அரசுக் கடசியின் பெருந்தலைவரும் திருகோணமலை மாவட்ட எம்.பியுமான இரா.சம்பந்தன் நேற்று ஞாயிற்றுக் கிழமை இரவு காலமானார். இதையடுத்து, திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்புரிமை வறிதானது.

இதனால், அந்த இடத்துக்கு கடந்த 2020 பாராளுமன்றத் தேர்தலில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு இரண்டாவது அதிக விருப்பு வாக்குகளை பெற்ற குகதாசன் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படுவார்.
 

https://www.ilakku.org/பாராளுமன்ற-உறுப்பினராக-2/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சண்முகம் குகதாசன் பாராளுமன்ற உறுப்பினராகிறார்; வர்த்தமானி வெளியீடு

Published By: DIGITAL DESK 3    03 JUL, 2024 | 09:39 AM

image
 

தமிழ் தேசிய கூட்டமைப்பின் சிரேஷ்ட தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அமரர்  இரா.சம்பந்தனின் மறைவினால் ஏற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் வெற்றிடத்திற்கு சண்முகம் குகதாசனின் பெயர் வர்த்தமானியில் தற்போது வௌியிடப்பட்டுள்ளது.

இலங்கை தமிழரசுக் கட்சியின் சார்பில் 2020 ஆம் ஆண்டு இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலில் சண்முகம் குகதாசன் திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிட்டிருந்தார்.

அந்த தேர்தலில் இலங்கை தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவர் காலஞ்சென்ற பெருந்தலைவர் இராஜதவரோதயம் சம்பந்தனுக்கு பின்னர் அதிகூடிய வாக்குகளை அவர் பெற்றிருந்தார்.

பொதுத் தேர்தலில் அவர் 16,770 வாக்குகளைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எதிர் வரும் ஓரிரு சில தினங்களில் இலங்கை பாராளுமன்றில் நாடாளுமன்ற உறுப்பினராக சண்முகம் குகதாசன் சத்தியப்பிரமானம் செய்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

IMG-20240703-WA0001.jpg

https://www.virakesari.lk/article/187555

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரசு கட்சியின் தலைவர் இனி என்ன சுமா தானே . சம்பந்தரின் சாதனைகளில் ஒன்று ...பின்வாசல் புகழ் சுமா ....

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கூட்டமைப்பு அரசாங்கத்தை ஆதரித்த பின்பு தான் மாற்றங்கள் வந்தன என்பதும் அவர்கள் மறுத்தாலும் வெளிப்படையாக மற்றவர்களுக்கும் தெரிந்த நிகழ்வு இது. இந்த மாற்றத்தை பயன் படுத்தி தான் தமிழ் தேசியவாதிகள் இலங்கை சென்று அங்கே பார்த்த அவர்கள் தான் இவர்களா என்று சந்தேககபடும்  அளவுக்கு நன்றாக என்ஜோய் பண்ணினார்கள்.
    • ஒற்றுமையாக இருக்க மக்கள் தயாராகத்தான் இருந்தார்கள் என்பதை ஏற்றுக் கொள்கிறீர்கள். அப்படியானால் தலமைகள்தான் மக்களைப் பிரித்தார்கள் என்பதுதானே உண்மை. அடக்குமுறைக்குள்ளான மக்கள் தங்களுக்கான மீட்பாளர்களாக தலமைகளைத்தான் பார்த்தார்கள். உயிர், உறவு, உடமைகளைத் தந்தார்கள். ஏமாந்து போனார்கள். இன்னும் இன்னும் கீழே அடித்தளத்துக்குள் தள்ளப்பட்டு துன்பத்துக்குள் இருக்கிறார்கள். இனி எதுவுமே இல்லை இப்படித்தான் வாழ வேண்டும் என்று அந்த வாழ்க்கையை பழகிக் கொண்டார்கள். ஆக நாங்கள் தேடும் உண்மையான  தலமை எங்கே இருக்கிறார். எப்பொழுது  தன்னை வெளிக்காட்டுவார்? கண்ணுக்கு எட்டிய தூரத்தில் காண முடியவில்லையே. தனது  சரியான   கொள்கைகள், செயற்பாடுகளைக் கொண்டு மக்களை ஒருங்கிணைத்துச்  செல்லக் கூடிய தலமைக்காக நானும் உங்களைப் போல் காத்திருக்கிறேன். அப்படி ஒரு நிலமை வந்தால் மக்கள் நிச்சயமாக ஒற்றுமையாக அணி அணியாக வருவார்கள்.  
    • ஒரு நிமிடம் 20 வினாடி பார்த்தேன். குப்பை  பெயரோ தமிழா தமிழா பாண்டின் 🙆‍♂️ ஒளிமயமான எதிர்காலம் தெரிகின்றது  🤣 பிரபாகரனே மலையாளி என்று நிறைய செய்திகள் உண்டு.
    • வீம்புக்கு விதண்டாவாதம் செய்யக்கூடாது. ஆமா, தாம் உண்டு தம் தொழிலுண்டு என்று இருந்த தமிழரை கொன்று அவர் தம் சொத்துக்களை எரித்து உங்கள் பிரதேசத்துக்கு ஓடுங்கள் என்று கப்பலிலேற்றி சொந்தநாட்டிலேயே ஏதிலிகளாக விரட்டியவர்கள் வெற்றிக்களிப்பில் இருந்துகொண்டு மக்களை ஏற்ற கப்பல் விடுவார்களாம் அதை அவர்கள் அனுமதிக்கவில்லையாம். சாதாரண  பொதுமக்களே தஞ்சம் அடைந்திருக்கிறார்கள் என்று தெரிந்தும் கோயில், வைத்தியசாலைகள் மீது குண்டு பொழிந்தது ஏன்? தொண்டு நிறுவனங்களை பலாத்காரமாக வெளியேற்றியது ஏன்? உணவுக்களஞ்சியங்களை குண்டு போட்டு அழித்ததும் ஏன்? போர்வலயத்தில் சிக்குண்டிருந்த மக்களின் தொகையை குறைத்து கணக்கு காட்டியது ஏன்? மீட்கப்படும் மக்களுக்கு தேவையான உணவு, குடிநீர், சுகாதாரம், தங்குமிட வசதி ஏற்படுத்தப்படாதது ஏன்? போரிலே சம்பந்தப்படாத சிறுவர் தங்கியிருந்த செஞ்சோலை மீது குண்டு போட்டு கொன்றதும் அங்கவீனர்களாக்கியதும் ஏன்? வன்னியில் சிக்குண்டவர்கள் தப்பித்துச் செல்லாதவாறும் அங்கு என்ன நடக்கிறது என்பதை வெளியுலகு அறியாதவாறு தடுத்ததும் யார்? அந்த மக்களுக்கான உணவு மருந்துகளை மறுத்தது யார்? பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு கொண்டுவந்த கப்பலை நடுக்கடலில் தடுத்து நிறுத்தி திருப்பியனுப்பியது யார் மக்கள் மீது அவ்வளவு அக்கறையிருந்திருந்தால்? ஏன்.... கோத்தபாய கொம்பனி பலதடவை  சொல்லியிருக்கிறார்கள், சர்வதேசம் போர்நிறுத்ததை வலியுறுத்தி தம்மை கட்டாயப்படுத்தியும் அதை ஏற்காமல் தாமே போரை நடத்தி புலிகளை அழித்து போரை முடிவுக்கு கொண்டுவந்தோம் என்றாரே. அப்போ, சர்வதேசம் புலிகளை காப்பாற்றவா போர்நிறுத்தம் கோரியது? போரை உருவாக்கியதே சிங்களந்தான். புலிகள் எங்கிருந்து உருவானார்கள்? ஏன் உருவானார்கள்? அவர்கள் உருவாவதற்கு முன் தமிழ் மக்கள் காயப்படவில்லையா கொல்லப்படவில்லையா? அல்லது வன்னியில் மட்டுந்தான் மக்கள் கொல்லப்பட்டார்களா? மக்கள் ஏன் வன்னிக்கு சென்றார்கள்? தங்கள் சொந்த இடங்களை விட்டு, ஏன் மக்கள் தம் நாட்டை விட்டு புலம்பெயர்ந்தார்கள் அரசாங்கம் மக்களை காப்பாற்றியிருந்தால்?
    • அவை என்னவென்று கூறுங்கள் தெரிந்து கொள்கிறோம் 🙂   மக்றோனின் கட்சி இரண்டாம் சுற்றுத் தேர்தலில் போட்டியிடுவது வெல்வதற்காக அல்ல என்பதுகூடத் தெரியவில்லை போலுள்ளது.
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.