Jump to content

பிரித்தானியாவின் பொதுத் தேர்தலில் தொழிற்கட்சி வெற்றி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

11111111111111111111111111111.jpg?resize

பிரித்தானியாவின் பொதுத் தேர்தலில் தொழிற்கட்சி வெற்றி.

பிரித்தானியாவின் பொதுத் தேர்தலில் தொழிற்கட்சி வெற்றி பெற்றுள்ளது. அதற்கமைய புதிய பிரதமராக Keir Starmer பதவியேற்பார் என பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.

https://athavannews.com/2024/1391016

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

11111111111111111111111111111.jpg?resize

பிரித்தானியாவின் பொதுத் தேர்தலில் தொழிற்கட்சி வெற்றி.

பிரித்தானியாவின் பொதுத் தேர்தலில் தொழிற்கட்சி வெற்றி பெற்றுள்ளது. அதற்கமைய புதிய பிரதமராக Keir Starmer பதவியேற்பார் என பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.

https://athavannews.com/2024/1391016

தமிழர்கள் எல்லோரும் வென்று விட்டார்களா?? மற்றைய விபரங்களையும். பதிவிடவும்.  🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, Kandiah57 said:

தமிழர்கள் எல்லோரும் வென்று விட்டார்களா?? மற்றைய விபரங்களையும். பதிவிடவும்.  🙏

uma_kumaran.jpg

ஆளப் போகும்  தொழில் கட்சியில் இருந்து 
உமா குமரன் 19,145 வாக்குகளுடன்  வெற்றி பெற்றுள்ளார். 🙂

05-1.jpg?resize=750,375

பிரித்தானியாவின் புதிய பிரதமர் – யார் இந்த கெய்ர் ஸ்டார்மர்? !

பிரித்தானிய நாடாளுமன்றத் தேர்தலில் தொழில் கட்சி வேட்பாளர் கெய்ர் ஸ்டார்மர் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றிருக்கும் நிலையில், பிரித்தானியாவின் அடுத்த பிரதமராக அவர் விரைவில் பதவியேற்கவுள்ளார்.

அதன்படி, பிரித்தானியாவில் 14 ஆண்டுகளுக்குப் பின்னர் தொழில் கட்சியின் ஆட்சி இடம்பெறவுள்ளது.

இந்த தேர்தலில் ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சி படுதோல்வியை சந்தித்துள்ளது.

அதாவது, பிரித்தானிய தேர்தல் வரலாற்றில் மோசமான ஒரு படு தோல்வியையே கன்சர்வேடிவ் கட்சி சந்தித்துள்ளது.

இதேவேளையில், தொழில் கட்சி வேட்பாளர் கெய்ர் ஸ்டார்மர் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ள நிலையில், பிரித்தானியவின் புதிய பிரதமராக கீர் ஸ்டார்மர் பதிவியேற்கவுள்ளார்.

யார் இந்த கெய்ர் ஸ்டார்மர்? அவரது பின்னணி என்ன?

1962 ஆம் ஆண்டு செப்டம்பர் 2 ஆம் திகதி லண்டனில் சர்ரே ஆக்ஸ்டெட் பகுதியில் ஒரு தொழிலாளர் குடும்பத்தில் பிறந்தார் கீர் ஸ்டார்மர்.

இவரின் தாய் செவிலியராக வேலை செய்து வந்துள்ளார். இருடன் உடன் பிறந்தவர்கள் மூன்று பேர்.

பாடசாலை கல்வியை நிறைவுசெய்த கெய்ர் ஸ்டார்மர், லீட்ஸ் பல்கலைக்கழகத்தில் சட்டக் கல்வி பயின்றுள்ள நிலையில், சட்டத்துறையில் நிபுணத்துவம் கொண்டவராக அறியப்படுகின்றார். அத்துடன் இவரொரு இசைக்கலைஞர் எனவும் குறிபப்பிடப்படுகின்றது.

கெய்ர் ஸ்டார்மர் அரசியலுக்கு வருவதற்கு முன்னர், மனித உரிமைகளைப் பாதுகாக்கும் வழக்கறிஞராக செயற்பட்டு வந்தவர் ஆவார்.

மனித உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் இவரது சேவையைப் பாராட்டி, கடந்த 2014 இல் மறைந்த ராணி எலிசபெத் கெய்ர் ஸ்டார்மர்க்கு நைட்ஹுட் பட்டம் வழங்கி சிறப்பித்தார்.

 

பிரித்தானிய பிரதமராக டோனி பிளேயர் இருந்த காலத்தில், பிரிட்டன் அரசு ஈராக் மீது படையெடுத்த போது, கெய்ர் ஸ்டார்மர் அதனை கடுமையாக எதிர்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கெய்ர் ஸ்டார்மர் கடந்த 2015 ஆம் ஆண்டு அரசியலுக்குள் பிரவேசித்தார்.

ஹோல்போர்ன் மற்றும் செயின்ட் பான்க்ராஸ் தொகுதியில் போட்டியிட்ட இவர் நடாளுமன்ற உறுப்பினராக தெரிவானார்.

கெய்ர் ஸ்டார்மரின் உழைப்பை அங்கீகரிக்கும் விதமாக உடனடியாக லேபர் கட்சியில் முக்கிய பதவிகள் கிடைத்தன.

இதையடுத்து, 2020 ஆம் ஆண்ட லேபர் கட்சியின் தலைவராக கெய்ர் ஸ்டார்மர் நியமிக்கப்பட்டார். தற்போது பிரித்தானியாவின் புதிய பிரதமராக பதவியேற்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1391080

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, தமிழ் சிறி said:

பிரித்தானியாவின் பொதுத் தேர்தலில் தொழிற்கட்சி வெற்றி.

பிரித்தானியாவின் தொழிற்கட்சி பற்றி செயல்பாடுகள் பற்றி விபரம் தெரிந்த பிரித்தானிய உறவுகள் யாராவது விபரமாக விளக்க முடியுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, ஈழப்பிரியன் said:

பிரித்தானியாவின் தொழிற்கட்சி பற்றி செயல்பாடுகள் பற்றி விபரம் தெரிந்த பிரித்தானிய உறவுகள் யாராவது விபரமாக விளக்க முடியுமா?

கோஷான். ஜேர்மனி தேர்தல் பற்றி தான் பிய்த்தெடுத்துப்பார்.   ஆனால் பிரித்தானியா தேர்தல் பற்றி எதுவுமே தெரியாது   🤣🤣. ஈழப்பிரியன்    விரைவில் விபரங்கள் வரும்    

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, ஈழப்பிரியன் said:

பிரித்தானியாவின் தொழிற்கட்சி பற்றி செயல்பாடுகள் பற்றி விபரம் தெரிந்த பிரித்தானிய உறவுகள் யாராவது விபரமாக விளக்க முடியுமா?

தொழிற்கட்சி ஈழத்தமிழருக்கு ஆற்றிய கைங்கரியங்கள்..

1. விடுதலைப்புலிகள் மீதான தடை - ரொனி பிளேயர்.

2. தமிழர் புனர்வாழ்வுக்கழகம் மீதான தடையும் சொத்துப் பறிப்பும் 

3. முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை தொடர்பில் பாராமுகத்துடனாக ஊக்குவிப்பு - ஹோடன் பிரவுன். 

சர்வதேசத்தில்..

1. ஈராக் மீதான பேரழிவு ஆயுத போலிக் கூச்ச போர் - ரொனி பிளேயர்.

உள்ளூரில்..

1. பல அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்தியது.

2. கிழக்கு ஐரோப்பியர்களுக்கு பிரித்தானியாவை திறந்து விட்டது.

3. சலுகை அளிப்பு என்ற பெயரில் வரி உயர்வுக்கு வழி சமைத்தது.

4. வீட்டு கடன் சுமையை அதிகரித்தது.

5. மாணவர் கடன் சுமையை அதிகரித்தது.

7. தேசிய சுகாதார சேவைக்குள் தனியார் மயப்படுத்தலை புகுத்தியதும் இன்றி காத்திருப்பு காலம் இவர்கள் காலத்தில் தான் நீடிக்க முடிந்தது.

8. மாலை 5 மணிக்கு பின்னரான வேலை நேர கூடிய ஊதியத்தை மாலை 8 மணி ஆக்கி இல்லாமல் செய்தமை.

9. தொழிலாளர்கள் நலனில் அக்கறையின்மை போக்கை கடைப்பித்ததோடு தேசிய விடுமுறை நாட்களையும் வேலை நாட்கள் ஆக்கியது.

இப்படி சொல்லிக்கிட்டே போகலாம்.

என்ன மக்களுக்கு மறதி அதிகம்.. தேர்வுக்கு ஒரு மாற்றும் இல்லை. பேயை விரட்ட மீண்டும் பிசாசை இழுத்து வந்து கதிரையில் இருத்தி இருக்கினம். விளைவை இன்னும் சில வாரங்களிலேயே காணலாம். 

Edited by nedukkalapoovan
  • Like 4
  • Thanks 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nedukkalapoovan said:

என்ன மக்களுக்கு மறதி அதிகம்.. தேர்வுக்கு ஒரு மாற்றும் இல்லை. பேயை விரட்ட மீண்டும் பிசாசை இழுத்து வந்து கதிரையில் இருத்தி இருக்கினம். விளைவை இன்னும் சில வாரங்களிலேயே காணலாம். 

நல்வவை வல்லவை என்று எதுவுமே காணவில்லை.

தகவலுக்கு நன்றி நெடுக்ஸ்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியன் ஒருவனை பிரதமராக்கியதுக்கு கொன்சர்வேட்டிவ் விலைகொடுத்துள்ளது. பிரித்தானிய மக்கள் சரியான செருப்படிகொடுத்துள்ளார்கள். இனியாவது கொன்சர்வேட்டிவ் திருந்தவேண்டும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

எது எப்படியானாலும் இந்தியன் தோற்றது மகிழ்வே... 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

britan.jpg?resize=600,375

பிரிட்டனின் ஆட்சிமாற்றம் – தமிழா்களுக்குச் சாதகமாக அமையுமென தமிழ்க்கட்சிகள் நம்பிக்கை!

பிரிட்டனில் நிகழ்ந்திருக்கும் ஆட்சிமாற்றமானது, இனப்படுகொலை மற்றும் பொறுப்புக்கூறல் உள்ளிட்ட விடயங்களில், எதிர்வருங்காலங்களில் முன்னேற்றகரமான நிலையை நோக்கி நகருமென எதிா்பாா்ப்பதாக நாடாளுமன்ற உறுப்பினா் சிவஞானம் சிறிதரன் குறிப்பிட்டுள்ளாா்.

14 வருடங்களுக்குப் பின்னர் பிரிட்டனில் நிகழ்ந்திருக்கும் இந்த ஆட்சிமாற்றம் ஈழத்தமிழர் நலனில் ஏற்படுத்தக்கூடிய தாக்கங்கள் குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தொிவித்தபோதே அவா் இதனைத் தொிவித்துள்ளாா்.

அத்துடன், ஆங்கிலேயர்கள் இலங்கையிலிருந்து வெளியேறியபோது, தமிழர்களுக்கான நியாயமானதொரு அதிகாரப்பகிர்வை வழங்காததன் காரணமாக இவ்விடயத்தில் அவர்கள் பொறுப்புக்கூறவேண்டிய நிலையில் இருக்கிறார்கள் எனவும் அவா் சுட்டிக்காட்டியுள்ளாா்.

இந்நிலையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் எதிர்வரும் செப்டெம்பர் மாதக் கூட்டத்தொடரிலும், அதன் பின்னரும் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்குக் கொண்டுசெல்வதை இலக்காகக்கொண்ட செயற்பாடுகளை தொழிற்கட்சியினா் விரைந்து முன்னெடுக்கவேண்டும்’ என  தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் வலியுறுத்தினார்.

இதேவேளை, தொழிற்கட்சியைப் போன்றே கொன்சவேட்டிவ் கட்சியும் கடந்த காலங்களில் தமிழர் விவகாரத்தில் முனைப்புடன் செயலாற்றி வந்திருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினா் எம்.ஏ.சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளாா்.

 

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை கொண்டுவருவதற்கு முழுமையான ஒத்துழைப்பை கொன்சவேட்டிவ் கட்சியும் வழங்கியதைச் சுட்டிக்காட்டிய சுமந்திரன்,

தொழிற்கட்சியின் வெற்றியினால் மாற்றமொன்று நிகழுமெனில் அது தமிழர்களுக்கு சிறந்த மாற்றமாகவே அமையும் எனவும் அவா்  நம்பிக்கை வெளியிட்டுள்ளாா்.

https://athavannews.com/2024/1391217

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6/7/2024 at 12:55, nedukkalapoovan said:

என்ன மக்களுக்கு மறதி அதிகம்.. தேர்வுக்கு ஒரு மாற்றும் இல்லை. பேயை விரட்ட மீண்டும் பிசாசை இழுத்து வந்து கதிரையில் இருத்தி இருக்கினம். விளைவை இன்னும் சில வாரங்களிலேயே காணலாம். 

இன்னிக்கே தொடங்கிட்டார் ருவாண்டா கான்செல் .

1௦ வதாய் இன்னும் கொஞ்ச நாட்களில் முதுகில் பையுடன் சந்திகளில் கூட்டம் கூட்டமாக பியர் அருந்தியபடி கிழக்கு ஐரோப்பிய முஸ்லிம் நிப்பினம்  களவுகள் அதிகரிக்கும் .

பிரான்ஸ் கரையில் இருக்கும் அகதிகளுக்கு பிரான்ஸ் போலிசே எப்படி பிரிட்டன் போவது என்பது பற்றி பாடமே எடுக்கிறார் களாம் முழங்கால் அளவு கடல் தண்ணிக்குள் போனால் பிடிக்க கூடாது என்று ஓடர் உள்ளதாம் காரணம் பிடிக்க போலிஸ் வரும்போது தண்ணிக்குள் அகதி விழுந்து போனால் பல நேரம்களில் மரணம் ஆகி விடும் சந்தர்ப்பம் உள்ளபடியால் .

On 5/7/2024 at 13:34, தமிழ் சிறி said:

uma_kumaran.jpg

ஆளப் போகும்  தொழில் கட்சியில் இருந்து 
உமா குமரன் 19,145 வாக்குகளுடன்  வெற்றி பெற்றுள்ளார். 🙂

05-1.jpg?resize=750,375

பிரித்தானியாவின் புதிய பிரதமர் – யார் இந்த கெய்ர் ஸ்டார்மர்? !

பிரித்தானிய நாடாளுமன்றத் தேர்தலில் தொழில் கட்சி வேட்பாளர் கெய்ர் ஸ்டார்மர் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றிருக்கும் நிலையில், பிரித்தானியாவின் அடுத்த பிரதமராக அவர் விரைவில் பதவியேற்கவுள்ளார்.

அதன்படி, பிரித்தானியாவில் 14 ஆண்டுகளுக்குப் பின்னர் தொழில் கட்சியின் ஆட்சி இடம்பெறவுள்ளது.

இந்த தேர்தலில் ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சி படுதோல்வியை சந்தித்துள்ளது.

அதாவது, பிரித்தானிய தேர்தல் வரலாற்றில் மோசமான ஒரு படு தோல்வியையே கன்சர்வேடிவ் கட்சி சந்தித்துள்ளது.

இதேவேளையில், தொழில் கட்சி வேட்பாளர் கெய்ர் ஸ்டார்மர் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ள நிலையில், பிரித்தானியவின் புதிய பிரதமராக கீர் ஸ்டார்மர் பதிவியேற்கவுள்ளார்.

யார் இந்த கெய்ர் ஸ்டார்மர்? அவரது பின்னணி என்ன?

1962 ஆம் ஆண்டு செப்டம்பர் 2 ஆம் திகதி லண்டனில் சர்ரே ஆக்ஸ்டெட் பகுதியில் ஒரு தொழிலாளர் குடும்பத்தில் பிறந்தார் கீர் ஸ்டார்மர்.

இவரின் தாய் செவிலியராக வேலை செய்து வந்துள்ளார். இருடன் உடன் பிறந்தவர்கள் மூன்று பேர்.

பாடசாலை கல்வியை நிறைவுசெய்த கெய்ர் ஸ்டார்மர், லீட்ஸ் பல்கலைக்கழகத்தில் சட்டக் கல்வி பயின்றுள்ள நிலையில், சட்டத்துறையில் நிபுணத்துவம் கொண்டவராக அறியப்படுகின்றார். அத்துடன் இவரொரு இசைக்கலைஞர் எனவும் குறிபப்பிடப்படுகின்றது.

கெய்ர் ஸ்டார்மர் அரசியலுக்கு வருவதற்கு முன்னர், மனித உரிமைகளைப் பாதுகாக்கும் வழக்கறிஞராக செயற்பட்டு வந்தவர் ஆவார்.

மனித உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் இவரது சேவையைப் பாராட்டி, கடந்த 2014 இல் மறைந்த ராணி எலிசபெத் கெய்ர் ஸ்டார்மர்க்கு நைட்ஹுட் பட்டம் வழங்கி சிறப்பித்தார்.

 

பிரித்தானிய பிரதமராக டோனி பிளேயர் இருந்த காலத்தில், பிரிட்டன் அரசு ஈராக் மீது படையெடுத்த போது, கெய்ர் ஸ்டார்மர் அதனை கடுமையாக எதிர்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கெய்ர் ஸ்டார்மர் கடந்த 2015 ஆம் ஆண்டு அரசியலுக்குள் பிரவேசித்தார்.

ஹோல்போர்ன் மற்றும் செயின்ட் பான்க்ராஸ் தொகுதியில் போட்டியிட்ட இவர் நடாளுமன்ற உறுப்பினராக தெரிவானார்.

கெய்ர் ஸ்டார்மரின் உழைப்பை அங்கீகரிக்கும் விதமாக உடனடியாக லேபர் கட்சியில் முக்கிய பதவிகள் கிடைத்தன.

இதையடுத்து, 2020 ஆம் ஆண்ட லேபர் கட்சியின் தலைவராக கெய்ர் ஸ்டார்மர் நியமிக்கப்பட்டார். தற்போது பிரித்தானியாவின் புதிய பிரதமராக பதவியேற்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1391080

இந்த நாடுகளில் வந்து அரசியலில் வெற்றி பெற்று பாராளுமன்றம் கூட போக முடியும்  ஆனால் தொப்பிள் கொடி உறவாம் தமிழ்நாட்டில் அகதியா போனவன் இன்றுவரை அகதிதான் .

Link to comment
Share on other sites

ஒரு உருப்படியான கட்சி இல்லையா?  பல கட்சிகள் போட்டியிட்டனவே.  

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அரசாங்க துறையில் மீண்டும் இவ்வருடம் சம்பளத்தை அதிகரிக்க முடியாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இந்த வருடம் தேர்தல் காலம் நெருங்கி வருவதால் அதனை செய்ய முடியாது என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். ஊவா மாகாண சமூக பொலிஸ் குழுக்களை வலுவூட்டுவதற்கான முதல் அமர்வு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் வெல்லவாய பொது மைதானத்தில் (06) நடைபெற்றது.  இதில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி மேற்கொண்டவாரு தெரிவித்தார். மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, அடுத்த வருட வரவு செலவுத்திட்டத்தின் ஊடாகவே சம்பளத்தை அதிகரிக்க முடியும் என சுட்டிக்காட்டினார். https://thinakkural.lk/article/305450
    • தந்தை செல்வா முதல் தேசியத் தலைவர் பிரபாகரன் வரை இலங்கைத் தமிழர்களுக்குச் செய்த ஆக்கப்பூர்வமான செயல்களால் ஏற்பட்ட பயன்களை உங்களால் பட்டியலிட முடியுமென்றால்,/ இது நீங்க‌ள் எழுதின‌ ப‌திவு ///////////////     அதுக்கான‌ ப‌திலை நான் எழுதினேன்   நீங்க‌ள் எழுதின‌தை மீண்டும் வாசியுங்கோ அப்ப‌ புரியும் நான் எழுதின‌து...................இன்னொரு திரியிலும் உப்ப‌டி தான் க‌ண்ட‌ மேனிக்கு அடிச்சு விட்ட‌ நீங்க‌ள்  அத‌ற்க்கு ப‌தில் அளித்தால் உங்க‌ளிட‌த்தில் இருந்து ப‌தில் வ‌ராது மெள‌வுன‌த்தை க‌டை பிடித்த‌ நீங்க‌ள் ......................   த‌ந்தை செல்வாவும் பிர‌பாக‌ர‌னும் த‌மிழ‌ர்க‌ளுக்கு என்ன‌ செய்தார்க‌ள் என்று கேட்டு இருந்த‌து நீங்க‌ள்😉......................
    • 2022ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு அரச சார்பற்ற உயர்கல்வி நிறுவனங்களில் கற்கைநெறிகளை தொடர்வதற்கு வட்டியில்லாக் கடன் வழங்கும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அரச பல்கலைக்கழகங்களுக்கு நுழைவதற்கு வாய்ப்பு கிடைக்காத உயர்தரம் சித்தியடைந்த மாணவர்களுக்காக இந்த வட்டியில்லாக் கடன் திட்டம், 2017ஆம் ஆண்டுக்கான பாதீட்டின் முன்மொழிவுகளின்படி நடைமுறைப்படுத்தப்படவுள்ளதுடன், அதிகபட்சமாக 8 இலட்சம் ரூபாய் வரை வட்டியில்லாக் கடன் பெற்றுக் கொடுக்கப்படவுள்ளது. கல்வி அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட 17 அரச சார்பற்ற உயர்கல்வி நிறுவனங்களில் 100 பட்டப்படிப்புகளை கற்பதற்கு 7 மாணவர் குழுக்களின் கீழ் உள்ள 17,313 மாணவர்களுக்கு ஏற்கனவே கடன் வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. https://thinakkural.lk/article/305491
    • பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தலில் அதிர்ச்சி முடிவுகள் - குழப்பமான சூழலால் பல இடங்களில் வன்முறை பட மூலாதாரம்,ANDRE PAIN/EPA-EFE/REX/SHUTTERSTOCK 4 மணி நேரங்களுக்கு முன்னர் பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தலில் யாரும் எதிர்பார்க்காத அதிர்ச்சிக்குரிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. இடதுசாரி கூட்டணி 182 இடங்களை பெற்று தனிப்பெரும் கூட்டணியாக உருவெடுத்துள்ளது. எந்த அணிக்கும் பெரும்பான்மை கிடைக்காமல், தொங்கு நாடாளுமன்றம் அமைவதால், தற்போது அனைவரின் பார்வையும் பிரதமர் பதவியை நோக்கியே உள்ளது. அடுத்த பிரதமர் யார் என்பது தெளிவாகத் தெரியவில்லை. நாடாளுமன்ற தேர்தலின் முதல் சுற்றில், தீவிர வலதுசாரி கட்சியான தேசிய பேரணிக் கட்சி (ஆர்என்) முன்னிலையில் இருந்த நிலையில், இறுதி முடிவில் இடதுசாரி கூட்டணியான புதிய பாப்புலர் ஃப்ரண்ட் கூட்டணி அதிக இடங்களைப் பெற்றுள்ளது. பிரான்ஸின் டிவி சேனல்களில், தேர்தல் முடிவுகளை காண்பித்தபோது, அதில் தீவிர வலதுசாரி கட்சியான தேசிய பேரணிக் கட்சியின் தலைவர் மரைன் லே பென்னோ, அடுத்த பிரதமாவதற்கு காத்திருந்த அவரது கட்சியை சேர்ந்த ஜோர்டான் பர்டெல்லாவோ வெற்றியை கொண்டாடவில்லை. திடீர் திருப்பமாக, இடதுசாரி கூட்டணியே வெற்றியை பெற்றது. யாரும் எதிர்பாராத வகையில் பிரான்ஸ் அதிபர் எமானுவேல் மக்ரோங்கின் மையவாத கூட்டணி இரண்டாம் இடத்திற்கு முன்னேறி, தேசிய பேரணிக் கட்சியை மூன்றாம் இடத்திற்கு தள்ளியது. தீவிர இடதுசாரி கொள்கை கொண்டவர் என விமர்கர்களால் அழைக்கப்படும் மூத்த இடதுசாரி தலைவரான ஜா-லுக் மெரான்ஷன் அதிக நேரம் காத்திருக்காமல் தங்களது கூட்டணி நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதாக அறிவித்தார். இந்த கூட்டணி 182 இடங்களை பெற்று தனிப்பெரும் அணியாக உருவெடுத்துள்ளது.   பட மூலாதாரம்,EPA ’’புதிய பாப்புலர் ஃப்ரண்ட் கூட்டணியை ஆட்சி அமைக்க அதிபர் அழைக்க வேண்டும்’’ என ஸ்டாலின்கிராட் சதுக்கத்தில் கட்சியின் ஆதரவாளர்களிடம் மெரான்ஷன் கூறினார். மேலும் தானும் தனது கூட்டணியும் தோல்வியடைந்ததை, அதிபர் எமானுவேல் மக்ரோங் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். பிரான்ஸ் அதிபர் எமானுவேல் மக்ரோங் திடீரென முன்கூட்டியே தேர்தல்களை அறிவித்த நிலையில், சோசலிஸ்டுகள், கம்யூனிஸ்ட்கள், பசுமைவாதிகள் மற்றும் பிரான்ஸ் அன்பௌட் (LFI) உள்ளடங்கிய இடதுசாரிக் கட்சிகள் புதிய பாப்புலர் ஃப்ரண்ட் கூட்டணியை உருவாக்கின. ஆனால், ஆட்சி அமைக்கும் அளவுக்கு இந்த கூட்டணி வெற்றி பெறவில்லை. பிரான்ஸில் தொங்கு நாடாளுமன்றம் அமையவுள்ளது. 577 இடங்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் 289 இடங்களைப் பெற்று, எந்த கூட்டணியும் தனிப் பெரும்பான்மையை பெற முடியவில்லை. அதிபர் எமானுவேல் மக்ரோங்கின் மையவாத கூட்டணி 168 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். ஒரு வாரத்திற்கு முன்பு வரை தீவிர வலதுசாரி கட்சியான தேசிய பேரணிக் கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்கும் என்ற பேச்சே இருந்தது. முதல் சுற்றுத் தேர்தலில் பெரும்பான்மையை நோக்கி தேசிய பேரணி நகர்ந்து கொண்டிருந்தது, ஆனால், இரண்டாவது மற்றும் இறுதிக் சுற்றில் அந்த கட்சி மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டது. மரைன் லே பென் மற்றும் ஜோர்டான் பர்டெல்லா ஆகியோர் வாக்களிப்புக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு கூட தங்கள் கட்சிக்கு இருக்கும் வாய்ப்புகளைப் பற்றி பேசிக் கொண்டிருந்தனர். முடிவுகளை தைரியமாக எதிர்கொண்ட லே பென்,’’ இரண்டு வருடங்களுக்கு முன்பு நமக்கு 2 எம்.பிகள் மட்டுமே இருந்தனர். இன்று தேர்தலில் அதிக எம்.பிக்களை பெற்ற கட்சியாக உள்ளோம்’’ என கூறினார். கடந்த நாடாளுமன்றத்தில் 88 எம்.பி.க்களைக் கொண்டிருந்த தேசிய பேரணி கட்சி இப்போது 140க்கும் அதிகமான எம்.பி.க்களை பெற்றிருக்கிறது. லே பென் சொன்னதுபோல, இந்த தேர்தலில் வேறு எந்த கட்சியும் 100 இடங்களை தாண்டவில்லை. மக்ரோங் கட்சியும், பாப்புலர் ஃப்ரண்ட் கட்சியும் கூட்டணி அமைத்தே போட்டியிட்டன. இயற்கைக்கு மாறான "மரியாதையற்ற கூட்டணிகளால்" தனது கட்சி தோல்வியடைந்ததாக ஜோர்டான் பர்டெல்லா புகார் கூறினார். தற்போது வெற்றி பெற்ற 200க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களை "குடியரசு முன்னணியின்" ஒரு பகுதியாகக் கருதுகின்றனர். இடதுசாரிகளின் அடுத்த இடத்தில் இவர்கள் உள்ளனர். இதன் மூலம் தேசிய பேரணிக் கட்சி மூன்றாம் இடத்திற்கு சென்றது. யாருக்கு எத்தனை இடம்? புதிய பாப்புலர் ஃப்ரண்ட் கூட்டணி- 182 மையவாத கூட்டணி- 168 தேசிய பேரணிக் கட்சி + கூட்டணி -143 குடியரசு + வலது- 60 பிற இடது- 13 பிற- 11 தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து வன்முறை பிரான்ஸ் அரசியல் தற்போது நிலையற்ற சூழ்நிலைக்கு சென்றுள்ளது. தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு தெருக்களில் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. பாரிஸ் மற்றும் நான்டெஸ் மற்றும் லியோன் உள்ளிட்ட நகரங்களில் ஒரு சில வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளன தற்போது அனைவரின் பார்வையும் பிரதமர் பதவியை நோக்கியே உள்ளது. தற்போது உள்ள முட்டுக்கட்டையான நிலையில் அடுத்த பிரதமர் யார் என்பது தெளிவாகத் தெரியவில்லை. மக்ரோங் கட்சியைச் சேர்ந்த தற்போதைய கேப்ரியல் அட்டல் பதவி விலகப் போவதாகத் தெரிவித்துள்ளார். தங்கள் கட்சியை சேர்ந்தவரே அடுத்த பிரதமாவார் என மூத்த இடதுசாரி தலைவரான ஜா-லுக் மெரான்ஷன் கூறியுள்ளார். https://www.bbc.com/tamil/articles/cw5y7ryx7v0o
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 0 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.