Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யேர்மனியில் நான் வசிக்கும் மாநிலத்தின் தலைநகரில் இரண்டு பிள்ளையார் கோவில்களும் ஒரு முருகன் கோவிலும் இருக்கின்றன. முத்தி விநாயகரோ? சித்தி விநாயகரோ? பிள்ளையார் கோவில்களுக்கு என்ன என்ன பெயர் வைத்தார்கள் என்று யாருமே பெரிதாகக் கவனிப்பதில்லை. ஒன்றை புலிப் பிள்ளையார் கோவில், மற்றையதை புளொட் பிள்ளையார் கோவில் என்றால் போதும். அடையாளம் கண்டுவிடலாம்.

மழை பெய்து, வெள்ளம் வந்து கிணற்று நீரோடு கலப்பது போல, 2009க்குப் பின்னர் நாட்டில் இருந்து யேர்மனிக்குப் புலம் பெயர்ந்து வந்த சிலரோடு, ஏற்கனவே பொறுப்பாளர்களுடன்  முரண்பட்டுக் கொண்டிருந்த  சில அதிருப்தியாளர்களும் கலந்து கொள்ளப் பிறந்ததுதான் ஶ்ரீ பால முருகன் கோவில். 2023 இல் உருவான முருகனுக்கு இந்த வருடம் யூனில் திருவிழா நடந்து முடிந்திருக்கிறது.

தேர் இல்லாமல் திருவிழா ஏது? முருகன் கோவில் நிர்வாகிகள் அலசி ஆராய்ந்து ஒரு பழையகாய்யைப் போய்ப் பார்த்தார்கள். அவருடன் என்ன பேசிக் கொண்டார்கள் என்று தெரியவில்லை. தேர் செய்வதற்கு அவர் 20,000 யூரோக்களை தூக்கிக் கொடுத்து விட்டார். தேரும் செய்தாயிற்று. திருவிழாவும் தொடங்கியாயிற்று. தேர்த்திருவிழாவுக்கு முதல்நாள், தேர் செய்ய உதவிய அன்பருக்கு நன்றி செலுத்த நிர்வாகிகள் முடிவெடுத்தார்கள். சாமியை விட சாமி அமரத் தேர் தந்த வள்ளல் பெரியவர் அல்லவா? அவர் இல்லாவிட்டால் சாமி வலம் வரத் தேரேது? சாமிக்கு முந்தி அவரைத் தேரில் அமர்த்தி வெள்ளோட்டம் செய்தார்கள். ஆள் கூடி அவரைத் தேரில் வைத்து இழுத்து மகிழ்ந்தார்கள்.

ac84d0e4-31b7-4dce-95a6-695a8e6b8380.jpg

திருவிழா முடிந்ததா? இப்பொழுது விமர்சனங்கள் வர ஆரம்பித்து விட்டன.

“சாமி இருக்கிற தேரிலை மனுசனை வைச்சு இழுக்கலாமோ, அதுவும் சாமிக்கு முந்தி?” 

“அவங்களுக்கு அறிவில்லாமல் இருக்கலாம், தேரிலை ஏறி இருக்கிறவனுக்கு அறிவில்லையோ?”

“20,000 குடுத்து வருசத்துக்கு ஒரு தடவை மட்டும் இழுக்கிறதுக்கு தேரைச் செய்யிறாங்களே, இவங்களை என்ன சொல்ல?”

“இந்தக் காசை நாட்டிலை கஷ்டப் பட்டுக் கொண்டிருக்கிற யாருக்காவது குடுத்திருக்கலாம்

“இந்தக் காசுக்கு நல்ல கார் ஒன்றை செக்கன் ஹாண்டா வாங்கி  வருசக் கணக்காக ஓடி இருக்கலாம்

“சந்தனம் மிஞ்சினால் எங்கெல்லாம் பூசுவாங்களோ?”

“இப்பத்தான் கிட்டடியிலை வந்தவங்கள் எங்களை விட அவையளுக்கெல்லோ  நாட்டு நிலமைகள் நல்லாத் தெரியோணும்

இப்படி இன்னும் பல வந்து கொண்டிருக்கின்றன.

5a36229a-5c88-4ead-acd9-491709028eab.jpg

பொறுங்கோ, நான் கடைசியா போட்ட படத்திலை யாரோ தெரிஞ்சவர் ஒருவர் நிக்கிறார். எல்லாரும் வெறும் மேனியோடை நிற்க அவர் மட்டும் சேட்டுப் போட்டுக் கொண்டு.. அவர் போலை கிடக்குஅட அவரேதான்..

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Kavi arunasalam said:

“சாமி இருக்கிற தேரிலை மனுசனை வைச்சு இழுக்கலாமோ, அதுவும் சாமிக்கு முந்தி?” 

“அவங்களுக்கு அறிவில்லாமல் இருக்கலாம், தேரிலை ஏறி இருக்கிறவனுக்கு அறிவில்லையோ?”

“20,000 குடுத்து வருசத்துக்கு ஒரு தடவை மட்டும் இழுக்கிறதுக்கு தேரைச் செய்யிறாங்களே, இவங்களை என்ன சொல்ல?”

“இந்தக் காசை நாட்டிலை கஷ்டப் பட்டுக் கொண்டிருக்கிற யாருக்காவது குடுத்திருக்கலாம்

“இந்தக் காசுக்கு நல்ல கார் ஒன்றை செக்கன் ஹாண்டா வாங்கி  வருசக் கணக்காக ஓடி இருக்கலாம்

“சந்தனம் மிஞ்சினால் எங்கெல்லாம் பூசுவாங்களோ?”

“இப்பத்தான் கிட்டடியிலை வந்தவங்கள் எங்களை விட அவையளுக்கெல்லோ  நாட்டு நிலமைகள் நல்லாத் தெரியோணும்

ஒவ்வொரு விசயத்திலும், நாட்டு நடப்புகளிலும் எவ்வளவு மாறுபட்ட சிந்தனைகள் எங்களுக்குள்ளே...........🤣.

ஒன்றோ இரண்டு மாதங்களின் முன், கர்நாடகாவில் என்று நினைக்கின்றேன், ஒரு தேரை இழுக்கும் போது, அது அப்படியே கவிழ்ந்து விழுந்து விட்டது. உயிர்ச்சேதங்கள் பற்றிய கணக்கு ஞாபகத்தில் இல்லை. இனிமேல் எங்கு தேர் இழுக்கப்பட்டாலும், தேரின் பின்னால் தான் இனி இடைவெளி ஒன்று விட்டு போவது என்று ஒரு முடிவை எடுத்திருந்தேன். இந்த இரண்டு பேருக்கும் அந்த விடயம் தெரியாது போல......... தேரில், அதுவும் சூலத்தோடு, ஏறி இருக்கின்றார்கள்...........😜

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ரசோதரன் said:

தேரில், அதுவும் சூலத்தோடு, ஏறி இருக்கின்றார்கள்...........😜

சூலத்தோடு இருப்பது ஐயர். சாமியோ, ஆசாமியோ தேர் இழுக்கும் போது பக்கத்தில் ஐயர் இருக்க வேணும்.

அவர் வாறது போறதுக்கு எல்லாம் கணக்கிருக்கு 

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Kavi arunasalam said:

சூலத்தோடு இருப்பது ஐயர். சாமியோ, ஆசாமியோ தேர் இழுக்கும் போது பக்கத்தில் ஐயர் இருக்க வேணும்.

அவர் வாறது போறதுக்கு எல்லாம் கணக்கிருக்கு 

தென்கலை போல.......... சாயல் எங்களையே மாதிரி..........

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவையெல்லாம் அடக்கி ஒடுக்கப்பட வேண்டிய விடயங்கள்.மதத்தின் பெயரால் நடத்தும் கோமாளி கூத்தாளர்களை தூக்கியெறிய வேண்டும்.

கொடுமையிலும் கொடுமை என்னெண்டால் அதில ஒண்டு வைரவர் மாலையோட காட்சி தருது.🤣

அடி செருப்பாலை....

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kavi arunasalam said:

5a36229a-5c88-4ead-acd9-491709028eab.jpg

பொறுங்கோ, நான் கடைசியா போட்ட படத்திலை யாரோ தெரிஞ்சவர் ஒருவர் நிக்கிறார். எல்லாரும் வெறும் மேனியோடை நிற்க அவர் மட்டும் சேட்டுப் போட்டுக் கொண்டு.. அவர் போலை கிடக்குஅட அவரேதான்..

அட… ஆமா…. அவரேதான். 😁

இறங்கின உடனே இன்னும் ஒரு 20000 யூரோக்கள் கொடுத்திருப்பாரே?

2 hours ago, ரசோதரன் said:

ஒன்றோ இரண்டு மாதங்களின் முன், கர்நாடகாவில் என்று நினைக்கின்றேன், ஒரு தேரை இழுக்கும் போது, அது அப்படியே கவிழ்ந்து விழுந்து விட்டது. உயிர்ச்சேதங்கள் பற்றிய கணக்கு ஞாபகத்தில் இல்லை. இனிமேல் எங்கு தேர் இழுக்கப்பட்டாலும், தேரின் பின்னால் தான் இனி இடைவெளி ஒன்று விட்டு போவது என்று ஒரு முடிவை எடுத்திருந்தேன். இந்த இரண்டு பேருக்கும் அந்த விடயம் தெரியாது போல......... தேரில், அதுவும் சூலத்தோடு, ஏறி இருக்கின்றார்கள்...........😜

சென்னை விமானநிலையம் 55 தடவைகள் உடைந்து விழுந்ததாக சொல்கிறார்கள்.

இப்போ நீங்க சென்னை போனால் விமான ஓடுபாதையில் ஓட்டம் பிடிப்பீர்கள் போல இருக்கே.

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, ஈழப்பிரியன் said:

சென்னை விமானநிலையம் 55 தடவைகள் உடைந்து விழுந்ததாக சொல்கிறார்கள்.

இப்போ நீங்க சென்னை போனால் விமான ஓடுபாதையில் ஓட்டம் பிடிப்பீர்கள் போல இருக்கே.

🤣....

அந்தக் கண்ணாடிக் கூரை.... தள்ளி நின்று சில தடவைகள் பார்த்திருக்கின்றேன்..... 

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளோட்டம் தேர் செய்த ஆசாரியரை வைத்துத் தானே இழுப்பது வழமை. 

  • கருத்துக்கள உறவுகள்

என் சுயநினைவால் ஓரளவு  உலகைப் புரிந்துகொள்ள வந்ததும், இந்துமதத்தில் அதன் சுய புராண ஏமாற்றுகளில் நம்பிக்கை அற்றுப் போய்விட்டது ஆயினும் அவற்றில் சில கோட்பாடுகள் வாழ்க்கையை ஆரோக்கியமாக வாழ்வதற்குரிய உபதேசங்களைக் கொண்டிருப்பதை மறுக்கவும் முடியாது. “தொட்டில் பழக்கம் சுடுகாடு வரைக்கும்”. பெற்றோரும், சுற்றத்தாரும் கடவுள்கள் பற்றியும், ஆலயவழிபாடு பற்றியும் என்னைத் தொட்டிலில் ஆட்டும்போதே ஊட்டியவை என் அறிவில் கல்மேல் எழுத்துப்போல் பதிந்துவிட்டது. தவிர திருநெல்வேலி பழங்கிணற்றடி பிள்ளையார் கோவிலில் அதன் பூசை புணர்கார வழிபாடுகளை என் பெரியப்பா ஒருவர், அவர் உடம்பு இயலாமல் போகும்வரை மேற்கொண்டு வந்தார், தும்பிக்கையான்மேல் அவர் எனக்கு ஏற்படுத்திய பக்தியும், நம்பிக்கையும் இன்றுவரை ஏற்பட்ட பெரும் துன்பங்களையும் நீர்த்துபோக வைத்துள்ளது. 

யேர்மனி சுற்காட் நகரில் ஆரம்பிக்கப்பட்ட சித்திவினாயகர் ஆலயத்தில் பிரபாகரன் தலைமையில் இயங்கிய விடுதலை இயக்கத்திற்கு ஆதரவானவர்கள் அதிகம் இருந்தும் அதற்கு எதிரானவர்கள்களின் கைகளிலேயே நிர்வாகம் இருந்ததினால் குழப்பங்கள் ஏற்படத் தொடங்கிது, நிர்வாகத்தைக் கையேற்று அதனைச் சீர்செய்ய முயன்ற வேளை பிரபாகரன் தலைமையில் இயங்கிய விடுதலை இயக்கத்தின் ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டது, அதன் பின்னரே விடுதலைக்கு ஆதரவுதந்த சிலரின் உண்மைச் சொரூபம் வெளிவரத் தொடங்கியது. இதனால்  ஏற்மபட்ட மனவுளைச்சலில் மௌனமாக இருந்த வேளையில்தான் பிள்ளையார் தன் தம்பி  பாலமுருகன் பெயரில் ஒரு கோவிலை எங்கள் இல்லத்தின் அருகே நிறுவினார். 

அந்தக் கோவிலுக்கு நான் சென்றதும் அதன் அழகும் நிர்வாகமும் என் மனவுளைச்சலுக்கு ஒரு ஆறுதல் தந்ததை உணர்ந்ததால் தொடர்ந்து அங்கு செல்ல முடிவுசெய்து செல்கிறேன்.  தமிழையும் அதன் கோட்பாடுகளையும் அழித்துவரும் வடவர் மொழியையும் அவர்கள் மதமான இந்து சமயக் கோட்பாடுகளையும் உணர்வுபூர்வமாக உள்வாங்கிய நிலைதான், நான் திருவிழாவில் மேலங்கியுடன் நிற்பதும், சில சமயப் பிறழ்வுகழும் இங்கு சில கள உறவுகளின் கண்களை உறுத்தியுள்ளது. கேலிச் சித்திரம் வரைவதில் புகழ் பெற்ற என் மதிப்புக்குரிய நண்பர் கவி அவர்கள் எனக்கு சித்திரம் வரைந்து என்னைக் கோமாளியாக்காமல் இருப்பதற்கு நன்றி!!🙏🙌

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Paanch said:

திருவிழாவில் மேலங்கியுடன் நிற்பதும், சில சமயப் பிறழ்வுகழும் இங்கு சில கள உறவுகளின் கண்களை உறுத்தியுள்ளது.

அப்படி அல்ல Paanch. எங்களுக்குத் தெரிந்தவர் அங்கே நிற்கின்றார் என்பதற்காகத்தான் சேட்டுப் போட்டுக் கொண்டு ஒருவர் நிற்கின்றார் என்று யாழ்  உறவுகளுக்கு அடையாளம் காட்டினேன்.  தவறாகப் புரிந்துவிட்டீர்கள் என்று நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

இன்று புலம்பெயர் நாடுகளில் நடக்கும் ஆலயங்கள் மற்றும் அவற்றைச் சுற்றி நடக்கும் விமர்சனங்களை அழகாக சொல்லியிருக்கிறீர்கள் ..........!  😂

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Kavi arunasalam said:

அப்படி அல்ல Paanch. எங்களுக்குத் தெரிந்தவர் அங்கே நிற்கின்றார் என்பதற்காகத்தான் சேட்டுப் போட்டுக் கொண்டு ஒருவர் நிற்கின்றார் என்று யாழ்  உறவுகளுக்கு அடையாளம் காட்டினேன்.  தவறாகப் புரிந்துவிட்டீர்கள் என்று நினைக்கிறேன்.

நீங்கள் தவறாகவே செய்திருந்தாலும் என்மனம் அதனை நிறைவாகவே ஏற்றுக்கொள்ளும் கவி அவர்களே.!😌

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
21 hours ago, தமிழ் சிறி said:

அட… ஆமா…. அவரேதான். 😁

மற்றவர்கள் வெறும் மேனியுடன் நிற்கும் போது  .....எங்கள் ஐயன் மேலங்கியுடன் நிற்பதும் ஒருவித  கால காட்டாற்றின் மாற்று கொள்கையினது வெளிப்பாடே.....:cool:

5a36229a-5c88-4ead-acd9-491709028eab.jpg

On 5/7/2024 at 23:56, Kavi arunasalam said:

பொறுங்கோ, நான் கடைசியா போட்ட படத்திலை யாரோ தெரிஞ்சவர் ஒருவர் நிக்கிறார். எல்லாரும் வெறும் மேனியோடை நிற்க அவர் மட்டும் சேட்டுப் போட்டுக் கொண்டு.. அவர் போலை கிடக்குஅட அவரேதான்..

துரோகி காட்டிக்கொடுத்து விட்டார்....😎

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

மற்றவர்கள் வெறும் மேனியுடன் நிற்கும் போது  .....எங்கள் ஐயன் மேலங்கியுடன் நிற்பதும் ஒருவித  கால காட்டாற்றின் மாற்று கொள்கையினது வெளிப்பாடே

4 hours ago, குமாரசாமி said:

துரோகி காட்டிக்கொடுத்து விட்டார்

மாம்பழம் கிடைக்காத கவலையில் எங்கள் சாமி முருகன் அங்கியைத் துறந்தாலும் அங்குள்ளதை மற்றவருக்கு காட்டாமல் கோமணத்துடனாவது நின்றார்.😌

எங்கள் குமாரசாமியோ தனது தீவிர பக்தனென்றும் பாராமல் என் அங்கியைக் காரணம் காட்டினாலும்… எனது கோமணத்தையும் உருவி அனைவருக்கும் காட்டிக் கொடுத்துவிட்டாரே என அவரது பின்னூட்டம் எண்ண வைக்கிறது.!!🤔😳😂

  • கருத்துக்கள உறவுகள்

அதிசாலை ஐந்து மணிக்கு எழுந்து தூக்கக் கலக்கத்தில் எங்கள் சாமியாரைச் சாடிவிட்டேன். மன்னித்தருளுக.😔🙏

  • கருத்துக்கள உறவுகள்
On 6/7/2024 at 09:22, Kavi arunasalam said:

அப்படி அல்ல Paanch. எங்களுக்குத் தெரிந்தவர் அங்கே நிற்கின்றார் என்பதற்காகத்தான் சேட்டுப் போட்டுக் கொண்டு ஒருவர் நிற்கின்றார் என்று யாழ்  உறவுகளுக்கு அடையாளம் காட்டினேன்.  தவறாகப் புரிந்துவிட்டீர்கள் என்று நினைக்கிறேன்.

யாரோ ஒரு யாழ் உறவு... ஆரா இருக்கும் என்று யோசித்தேன்.. அவரே வந்து கூறி விட்டார் :)
நான் பஞ் அண்ணா இன்னும் இளமையானவர் என்று தன நினைத்திருந்தேன்  😉

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, Sabesh said:

யாரோ ஒரு யாழ் உறவு... ஆரா இருக்கும் என்று யோசித்தேன்.. அவரே வந்து கூறி விட்டார் :)
நான் பஞ் அண்ணா இன்னும் இளமையானவர் என்று தன நினைத்திருந்தேன்  😉

நான் இன்னும் இளமையானவன்தான் தம்பி. என் வயது 18.

சஎழுத்துக்கு “அ” முன்னலை வகிப்பதுபோல் எண்ணுக்கு “1” முன்னலை, அதனால் 1றை முன்னுக்குப் போட்டேன்.🤪

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.