Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, வாலி said:

அது ஈழப் போராட்டங்கள் தொடர்பான அறிவுள்ளவர்களுக்குத் தெரியும். என் போன்ற 2009 வரை ஈழத்தில்/இலங்கையில் வாழ்ந்தவர்களுக்கு காக்கா இராதாகிருஸ்ணனை மட்டும்தான் தெரியும்!

https://tamil.oneindia.com/news/tamilnadu/k-s-radhakrishnan-shares-about-cbi-raid-held-1982-283071.html

இப்போ காசு பணத்துக்காக சிபிஐ ரெய்டு… ஆனால் அப்போ… "தம்பி பிரபாகரன்" வீட்டில் தங்கியதால் ரெய்டு!

வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததால் இப்போது சிபிஐ ரெய்டு நடக்கிறது. ஆனால் 1982ல் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் தங்கி இருந்ததால் ரெய்டு நடந்தது.

AmudhavalliUpdated: Thursday, May 18, 2017, 12:57 [IST]

அதாவது அரசியலில் பழிவாங்கும் போக்கிலோ, நாட்டு விரோதிகளோ என சூழல்களை சொல்லிக் கொண்டு மத்திய, மாநில அரசுகள் சிலர் வீடுகளில் மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் ரெய்டு நடத்தப்படுவது வாடிக்கையாகிவிட்டது. இந்த வாடிக்கை 1991ல் இருந்து நடந்து கொண்டு வருகிறது.

எம்ஜிஆர் காலத்தில்…

கடந்த 22-05-1982 அன்று திரு. பழ.நெடுமாறன் அவர்கள் வீட்டிலும் எனது வீட்டிலும் ரெய்டு நடத்தப்பட்டது. மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் ஆட்சிக்காலத்தில் உளவுத்துறை ஐ.ஜி. மோகன்தாஸ் மேற்பார்வையில் காவல் துறையின் ரெய்டு நடத்தப்பட்டது. ஏனெனில் என்னுடன் விடுதலைப்புலிகள் பிரபாகரனும், அவருடைய சகாக்களும் தங்கியிருந்தனர். மயிலாப்பூரில் தங்கியிருந்த போது இந்த நிகழ்வு நடந்தேறியது.

நெஞ்சை நிமிர்த்தி

35 ஆண்டுகள் கடந்துவிட்டன. சுதந்திரம் பெற்றதில் இருந்து அதுவரை இதுபோல காவல்துறையின் சோதனைகள் அதிகம் நடந்தது இல்லை. இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது அவசர நிலை காலங்களில் ஓரிரு இடங்களில் நடந்தது. அப்படி காவல் துறையினர் சோதனை நடத்திய போது நாங்கள் நெஞ்சை நிமிர்த்தி நின்றோமே தவிர முகத்தை துணியால் மறைத்துக் கொண்டு செல்லவில்லை.

பிரபாகரனுடன்..

இன்று முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தில் தம்பி பிரபாகரன் பற்றி பதிவு செய்யவும் இந்த ரெய்டுகள் உதவியாக இருக்கின்றன. அன்று 1982ல் என் வீட்டில் ரெய்டு நடத்தப்படுவதற்கு சொல்லப்பட்ட காரணம் என்னவெனில் தம்பி பிரபாகரனும் அவரது ஆரம்பக்கால சகாக்களான பேபி சுப்ரமணியன், நேசன், செல்லக்கிளி ஆகியோர் என் வீட்டில் தங்கியிருந்தனர் என்பது தான். என்னிடம் அது குறித்து விசாரித்தார்கள். ஆம், தங்குவதற்கு இடம் அளித்தேன். என் இனப் போராளிக்கு, தமிழின விடுதலைப் போராளிகள் தங்குவதற்கு இடம் அளித்தேன் என்பதை பெருமிதத்துடன் வாக்குமூலம் அளித்தேன்.

வழக்கு

அந்த வழக்கில், நானே சாட்சியாகவும், வழக்கறிஞராகவும் ஆஜரானேன். பிற்காலத்தில் இந்த வழக்கு பிரபாகரன் நீதிமன்றத்துக்கு வராததால் 23-11-2012ல்  சென்னை மாநகர் 7வது கூடுதல் நீதிமன்றத்தில் (வழக்கு எண். எஸ்.சி.8/1983) தள்ளுபடியானது.

திரும்பவும் பழைய செய்திக்கு வருகின்றேன்.

அள்ளிச் சென்ற பொக்கிஷம்

அந்த சோதனையில் ஆயுதங்களோ, பணக்கட்டுகளோ பறிமுதல் செய்யப்படவில்லை. அவற்றை எல்லாம் விட விலை மதிப்பிடமுடியாத புத்தகங்கள், சில நினைவுகளின் அடையாளங்களை காவல் துறையினர் அள்ளிச் சென்றனர். காமராஜரிடம் அறிமுகமாகி, மாணவர் அரசியல் இயக்கங்களில் பணியாற்றியதெல்லாம் நெஞ்சத்தை தணிக்கும் பழைய நினைவுகள் தாங்கிய கருப்புவெள்ளைப் படங்கள், பிரதமர் இந்திரா காந்தி, மொராஜி தேசாய், ஜெயப்ரகாஷ் நாராயணன், கவிஞர் கண்ணதாசன் போன்ற ஆளுமைகளோடு எடுத்த கருப்பு, வெள்ளை புகைப்படங்கள் யாவும் காவல் துறை எவ்வித மனித நேயமில்லாமல் எடுத்து சென்றுவிட்டது.

பிரபாகரனின் உடைமைகள்

விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் - முகுந்தன் இடையே  சென்னைபாண்டி பஜாரில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தை காரணம் காட்டி பிரபாகரன் தங்கியிருந்த இடம் என கூறி காவல் துறை சோதனை நடத்தியது. உடன் தங்கியிருந்த பிரபாகரனின் உடைமைகளையும் என் மயிலாப்பூர் இல்லத்தில் இருந்து எம்.ஜி.ஆர். ஆட்சி காலத்தில் ஐ.ஜி. மோகன்தாஸ் தலைமையில் 6 மணி நேரம் சோதனை நடத்தி அனைத்து உடைமைகளையும் அள்ளிக்கொண்டு சென்றுவிட்டனர்.

பிரபாகரனின் புகைப்படம்

இந்த சோதனை, பாண்டிபஜார் சம்பவத்திற்கு பின்னர் ஈழப்போரில் விடுதலைப் புலிகள் என்றொரு இயக்கமும் அதன் தலைவராக பிரபாகரன் இருப்பதும் வெளிச்சத்திற்கு வந்தது என்றால் அது மிகையாகாது. தலைமறைவு வாழ்க்கையில் இருந்த பிரபாகரனின் படம் முதன்முறையாக தமிழக பத்திரிக்கைகளில் அன்று தான் வெளியானது. அதுவரை ஈழத்தந்தை செல்வா, அ.அமிர்தலிங்கம் ஆகியோர்களை மட்டுமே ஈழத்தமிழர்களின் தலைவர்களாக உலகம் அறிந்திருந்தது.

எதிர்க் கேள்வி

தலைவர்களோடு நான் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களாவது கிடைக்குமா என்ற ஏக்கத்தில் ஐ.ஜி மோகன்தாஸை கடற்கறை சாலையில் உள்ள காவல் துறை இயக்குநரகத்தில் சென்று சந்தித்தேன். 'என் கட்சிக்காரர்களுக்காக வழக்கு நடத்தும் கேஸ்கட்டுகளை கொண்டு சென்று விட்டீர்கள், நான் எப்படி அந்த வழக்குகளை நடத்த முடியும்' என அவரிடம் கேள்வி எழுப்பினேன்.

டைப்ரைட்டிங் மிஷின்

எம்.ஜி.ஆரின் அரசாங்கத்தில் அதிகார பலம் வாய்ந்த ஒருவர் என்ற அதிகார போதையில் கிண்டலும் கேலியாகவும் பதில் அளித்தார் மோகன்தாஸ். கோபத்தில் உச்சத்திற்கு சென்ற நான் 'போயா, நான் முடிந்ததை பார்க்கின்றேன்' என்று கூறிவிட்டு எம்.ஜி.ஆரை நேரில் சந்தித்து முறையிட்டேன். அவர் அன்றைய உள்துறை செயலாளர் டி.வி.வெங்கட்ராமனை சென்று பார்க்கும்படி கூறினார். அந்த சோதனையில் மேசை, நாற்காலி, கட்டில், மெத்தை, துணிகள், சமையல் பாத்திரங்கள் தவிர அனைத்து பொருட்களையும், பிரபாகரன் பயன்படுத்திய சில உடமைகளை அள்ளிச் சென்றனர். வெங்கட்ராமனை சந்தித்த போது அவரும் பார்க்கிறேன் என்றார். தலைமைச் செயலகத்துக்கும், கடற்கரை எதிரே உள்ள காவல்துறை தலைமையகத்திற்கும் அலைந்து அலைந்து என் காலணிகளே தேய்ந்தது. தம்பி பிரபாகரன் அவர் பயன்படுத்தி வந்த ரெமிங்டன் டைப்ரைட்டிங் மிஷினை மட்டும் மீட்டுத் தரும்படி என்னிடம் கேட்டுக் கொண்டார். அதனை நீதிமன்றத்தின் மூலம் பெற்றுக் கொடுத்தேன்.

சிறையில் பிரபாகரன்

இதற்கிடையில் தினமும்  சென்னை மத்திய சிறைச்சாலைக்கு சென்று பிரபாகரன், முகுந்தனை சந்திப்பது வாடிக்கை. பிரபாகரனை இலங்கை அரசிடம் ஒப்படைக்க கூடாது என்று பழ.நெடுமாறன் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் 29-06-1982ல் நடைபெற்றது.

பிரபாகரனுக்கு பிணை

பிரபாகரனை  சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீனில் விடுவிக்க 05-08-1982ல் நான் மனு தாக்கல் செய்து அவருக்கு பிணை உயர்நீதிமன்றம் வழங்கியது. ஆனால் அவர் சிறையில் இருந்து 06-08-1982 மாலை விடுவிக்கப்பட்டு மதுரையில் தங்க வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் வெளியே வந்தார்.

நெடுமாறன் முயற்சி

பின்னர் பிரபாகரன், முகுந்தன், சபாரத்தினம், சிவசிதம்பரம், அமிர்தலிங்கம் உள்ளிட்டோரை அழைத்து சமாதானப் பேச்சுவார்த்தையை நெடுமாறன் ஏற்பாடு செய்தார். ஆனால் அந்த முயற்சி பலன் தரவில்லை. பின்னர் மதுரையில் நெடுமாறன் வீட்டில் பிரபாகரன் தங்கியிருந்தார். முகுந்தன்  சென்னையில் தங்கியிருந்தார். 1985-ல் பிரபாகரன் இந்த வழக்கு விசாரணைக்காக வருவார் என காத்திருந்த தருணத்தில் இலங்கைக்கு சென்றுவிட்ட தகவல் கிடைத்தது. பின்னர் 1986-87 கால கட்டத்தில் மீண்டும் தமிழகம் வந்தார் பிரபாகரன்.

இவ்வாறு கே.எஸ். ராதாகிருஷ்ணன் பதிவிட்டுள்ளார்.

  • Replies 50
  • Views 3.9k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • பெருமாள்
    பெருமாள்

    ஆறு தடவை பொய்யான வாக்குறுதிகளை தமிழ் மக்களுக்கு சொல்லி தான் மட்டுமே பதவி சுகம் அடைந்த கடைந்து எடுத்த சுயநலவாதி க்கு வடகிழக்கில் தமிழ் மக்கள் கொடுத்த மரியாதையே கூடத்தான் அது மட்டும் சந்தோசபடுங்க .

  • விசுகு
    விசுகு

    பின்னர் எதுக்காக அவரை தேசியத் தலைவர் என்று பட்டியல் இடுகிறீர்கள்??? உங்கள் பட்டியல்ப்படி புலம்பெயர் தேச முட்டாளா நீங்கள்??

  • Kapithan
    Kapithan

    பையா, என்னால் கூறப்பட்டவைக்கும் தங்களால் கூறப்படுபவைக்கும் இடையில் ஏதாவது தொடர்பு இருக்கிறதா?  🥺

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kapithan said:

இப்படிப்பார்த்தால் செல்வா காலத்தில் இருந்து சம்பந்தன் சுமந்திரன்வரை எல்லோரும் சொந்த மக்களுக்குச் சேவகம் புரியவில்லை. 

அப்பாடா ஒன்றுமே செய்யவில்லை தமிழருக்கு என்று ஒத்துகொண்டதுக்கு நன்றி நடையை கட்டுவமா?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வீரப் பையன்26 said:

1 பிர‌பாக‌ர‌ன் ஜாதியை ஒழித்தார்

2 த‌மிழ‌ர்க‌ளை ஒரு கோட்டுக்குள் ஒற்றுமையாய் வைத்து இருந்தார்

3 கொண்ட‌ கொள்கையில் உறுதியாய் நின்ற‌வ‌ர்

4 ஈழ‌ த‌மிழ‌ர்க‌ளுக்கு நாடு வேணும் என்று போராடி த‌ன் குடும்ப‌த்தையே இழ‌ந்த‌வ‌ர்

5 இந்த‌ நூற்றாண்டில் த‌மிழ் இன‌ம் என்ர‌ ஒன்று இருக்கு என்று உலகத்துக்கு உணர்த்தியவர்

6 வாழ்வா சாவா என்ர‌ போராட்ட‌த்தில் 2009க‌ளில் ப‌ல‌ நாடுக‌ளை எதிர்த்து போர் செய்த‌வ‌ர்

7 காசுக்கு ஆசைப் ப‌டாம‌ சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப் ப‌டாம‌ எளிமையாய் வாழ்ந்த‌ த‌லைவ‌ர்

8 க‌ருப்பு யூலை க‌ல‌வ‌ர‌த்தின் போது த‌மிழ‌ர்க‌ளுக்காக‌ போராடின‌வ‌ர்

9 த‌மிழ‌ர்க‌ளின் போராட்ட‌ மீட்ப்புக்காக‌ ப‌சித்த‌ போது அவியாத‌ மரவள்ளி கிழங்கு சாப்பிட்டவ‌ர்

10 சொல்லுக்கு முன் செய‌ல் இருக்க‌னும் என்று சொன்ன‌வ‌ர் . அதை செயலிலும் செய்து காட்டினவர்

11 நான் பெரிது நீ பெரிது என்று வாழாம‌ நாடு பெரிது என்று வாழ‌னும் என்று உர‌க்க‌ சொன்ன‌வ‌ர் /க‌போதி ச‌ம்ப‌ந்த‌ர் த‌மிழ‌ர்க‌ளுக்கு செய்த‌ வேத‌னையை நீங்க‌ள் எழுதுங்கோ நான் வாசிக்க‌ ஆவ‌லுட‌ன் இருக்கிறேன்😉.......................

இதற்குப் 👆 பதில் சொன்னால், மல்லாந்து படுத்துக்கொண்டு வானத்தைப் பார்த்து துப்புவதாகிவிடும் எமது எல்லோரினதும் நிலைமை. 

எனவே 

அவசரப்படாமல், எனது பதிவு என்ன என்பதை நிதானமாக வாசித்து அதற்குப் பதில் எழுதுங்கள் 

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kapithan said:

விசுகர் 😁

வாயைக் கிளறாதீர்கள்,.🙏

உங்களிடம் இருப்பதை தானே என்னால் கிளற முடியும்🙃 

  • கருத்துக்கள உறவுகள்
On 6/7/2024 at 09:11, சுண்டல் said:

யாழில் நிர்க்கதியாய் விடப்பட்ட சம்பந்தனின் உடல்! சுமந்திரனின் பிடிவாதத்தால் ஏற்பட்ட தர்மசங்கடம்

449746428_8293497937351007_3556431345054

யாழில்... சம்பந்தனுக்கு கிடைத்த இறுதி மரியாதையை பார்த்து,
சுமந்திரன் தான் செத்தால்... தனது பிரேதத்தை, யாழ்ப்பாணம் கொண்டு போகக் கூடாது என்று நினைத்திருப்பார்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Kapithan said:

தந்தை செல்வா முதல் தேசியத் தலைவர் பிரபாகரன் வரை இலங்கைத் தமிழர்களுக்குச் செய்த ஆக்கப்பூர்வமான செயல்களால் ஏற்பட்ட பயன்களை உங்களால் பட்டியலிட முடியுமென்றால், சம்பந்தர்  கூட்டணியால் கிடைக்கப்பெற்ற பலன்களை  என்னாலும் பட்டியலிட முடியும். 

அட சம்பந்தன் சுமத்திரன் செய்த ஒரு நன்மையாவது சொல்லுங்க என்று கேட்டால் .

 பிரபாகரன் பெயரை இங்கு இழுக்கிரியல் உண்மையிலே சிந்திக்கும் சக்தி இருக்கிறதா உங்களுக்கு. 

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, Kapithan said:

இதற்குப் 👆 பதில் சொன்னால், மல்லாந்து படுத்துக்கொண்டு வானத்தைப் பார்த்து துப்புவதாகிவிடும் எமது எல்லோரினதும் நிலைமை. 

எனவே 

அவசரப்படாமல், எனது பதிவு என்ன என்பதை நிதானமாக வாசித்து அதற்குப் பதில் எழுதுங்கள் 

த‌ந்தை செல்வா கால‌த்தில் நான் பிற‌க்க‌ வில்லை

தேசிய‌ த‌லைவ‌ர் ஆயுத‌ம் தூக்கி 1992க‌ளுக்கு பிற‌க்கு போர் புரிந்த‌து என‌க்கு நினைவு இருக்கு..........................

த‌ந்தை செல்வா அகிம்சை வ‌ழியில் போராடினார் த‌லைவ‌ர் ஆயுத‌ம் தூக்கினார்

ஆயுத‌ம் தூக்க‌ தூண்டின‌து யார்

த‌லைவ‌ர் ஆயுத‌ம் தூக்காட்டி ஈழ‌ ம‌ண்ணில் நீங்க‌ளும் உயிருட‌ன் இருந்து இருக்க‌ மாட்டிங்க‌ள் நானும் உயிருட‌ன் இருந்து இருக்க‌ மாட்டேன்....................அதுக்கு சிறு உதாரணம் க‌ருப்பு யூலை ப‌டுகொலை தொட‌ர்ந்து இருக்கும் ம‌ற்றும்  கிளாலி க‌ட‌ல்..................கிளாலி க‌ட‌லில் வைச்சு சிங்க‌ள‌ க‌ட‌ல் ப‌டை எத்த‌னை த‌மிழ‌ர்க‌ளை கொன்று குவித்தார்க‌ள் தெரியுமா.....................சிங்க‌ள‌ க‌ட‌ல் ப‌டையின் அட்டூழிய‌ம் தாங்க‌ முடியாம‌ல் தான் கிளாலி க‌ட‌லில் நின்ற‌ சிங்க‌ள‌ க‌ட‌ல்ப‌டைக்கு க‌ட‌ல் க‌ரும்புலிக‌ள் மூல‌ம் த‌லைவ‌ர் ந‌ல்ல‌ பாட‌ம் புக‌ட்டின‌வ‌ர்👏👏👏👏👏......................

நீங்க‌ள் என்னை விட‌ 10 வ‌ய‌தில் மூத்த‌வ‌ராய் கூட‌ இருக்க‌லாம் ஆனால் என‌க்கு உங்க‌ளை விட‌ சிங்க‌ள‌வ‌ன் 1992க‌ளில் இருந்து 1996 வ‌ரை செய்த‌ அட்டூழிய‌ங்க‌ள் அதிக‌ம் தெரியும் . அந்த‌ கொடுமைக‌ள்  என் கண்ணை விட்டு அகலவில்லை........................

1993 ம் ஆண்டு என்ற சித்தியை கிளாலி க‌ட‌லில் சிங்க‌ள‌ நேவி கண்டம் துண்டமாய் வெட்டி கொன்றவங்க‌ள்😡......................

Qn-Cy-UKv-D2-JP8xyt45vlk.png

maj-nilavan-723x1024.jpg

capt-mathan-723x1024.jpg

1996ம் ஆண்டு இதே கிளாலி க‌ட‌லால் தான் வ‌ன்னிக்கு வ‌ந்தேன்................அப்போது ஒரு சிங்க‌ள‌ க‌ட‌ல் ப‌டையின‌ரின்  க‌ப்ல்க‌ளை என் க‌ண்ணால் நான் காண‌ வில்லை

நான் மேல‌ இணைச்ச‌ இரு க‌ரும்புலி ம‌ற‌வ‌ர்க‌ளால் ப‌ல‌ ஆயிர‌ம் உயிர்க‌ள் கிளாலி க‌ட‌லில் காப்பாற்ற‌ ப‌ட்ட‌து....................இவ‌ர்களை நான் இன்னும் ம‌ற‌க்க‌ வில்லை இவ‌ர்க‌ளை நான் மறப்பது என்றால் அது என்ர‌ உட‌ம்பில் இருந்து உயிர் போன‌ பிற‌க்கு தான்.....................இந்த‌ இர‌ண்டு க‌ரும்புலிக‌ளை ப‌ற்றி யாழில் ஏற்க‌ன‌வே எழுதி இருக்கிறேன்..............................ஒரு பாட்டு கேட்டால் என் நினைவுக்கு வ‌ருவ‌து வ‌ர‌த‌ன் ம‌ற்றும் ம‌த‌ன் முக‌ம் தான்🙏🙏🙏........................

நீங்க‌ளும் கிளாலி க‌ட‌லால் ப‌ய‌ணித்து இருந்தால் அது இவ‌ர்க‌ள் செய்த‌ தியாக‌த்தால் தான் உயிர் த‌ப்பி வ‌ந்து இருப்பிங்க‌ள்😉..............................

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, vaasi said:

2024 ல் இதைவிட தமிழ் மக்கள் கூட்டத்தை ஒரு அரசியல் தலைவருக்கு எதிர்பார்க்க முடியாது. அப்போது இருந்த கட்சி தலைவருக்கு ஒரு கால் நுற்றாண்டுக்கு முன்பு வந்திருக்கலாம்   அதே மக்கள் கூட்டத்தை இப்போது எதிர்பார்க்க முடியாது. மக்களுக்கு இப்போது வேறு பல வேலைகள் இருக்கின்றது.  பழைய கட்சி தலைவர்   இப்போது இறந்திருந்தாலும் அவருக்கு  சம்பந்தன் அய்யாவுக்கு வந்த மக்கள் அளவு தான் வந்திருப்பார்கள்.

Edited by விளங்க நினைப்பவன்

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, விளங்க நினைப்பவன் said:

2024 ல் இதைவிட தமிழ் மக்கள் கூட்டத்தை ஒரு அரசியல் தலைவருக்கு எதிர்பார்க்க முடியாது. அப்போது இருந்த கட்சி தலைவருக்கு ஒரு கால் நுற்றாண்டுக்கு முன்பு வந்திருக்கலாம்   அதே மக்கள் கூட்டத்தை இப்போது எதிர்பார்க்க முடியாது. மக்களுக்கு இப்போது வேறு பல வேலைகள் இருக்கின்றது.  பழைய கட்சி தலைவர்   இப்போது இறந்திருந்தாலும் அவருக்கு  சம்பந்தன் அய்யாவுக்கு வந்த மக்கள் அளவு தான் வந்திருப்பார்கள்.

ஆறு தடவை பொய்யான வாக்குறுதிகளை தமிழ் மக்களுக்கு சொல்லி தான் மட்டுமே பதவி சுகம் அடைந்த கடைந்து எடுத்த சுயநலவாதி க்கு வடகிழக்கில் தமிழ் மக்கள் கொடுத்த மரியாதையே கூடத்தான் அது மட்டும் சந்தோசபடுங்க .

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

2024 ல் இதைவிட தமிழ் மக்கள் கூட்டத்தை ஒரு அரசியல் தலைவருக்கு எதிர்பார்க்க முடியாது. அப்போது இருந்த கட்சி தலைவருக்கு ஒரு கால் நுற்றாண்டுக்கு முன்பு வந்திருக்கலாம்   அதே மக்கள் கூட்டத்தை இப்போது எதிர்பார்க்க முடியாது. மக்களுக்கு இப்போது வேறு பல வேலைகள் இருக்கின்றது.  பழைய கட்சி தலைவர்   இப்போது இறந்திருந்தாலும் அவருக்கு  சம்பந்தன் அய்யாவுக்கு வந்த மக்கள் அளவு தான் வந்திருப்பார்கள்.

பையா,

என்னால் கூறப்பட்டவைக்கும் தங்களால் கூறப்படுபவைக்கும் இடையில் ஏதாவது தொடர்பு இருக்கிறதா? 

🥺

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தமிழ் சிறி said:

449746428_8293497937351007_3556431345054

யாழில்... சம்பந்தனுக்கு கிடைத்த இறுதி மரியாதையை பார்த்து,
சுமந்திரன் தான் செத்தால்... தனது பிரேதத்தை, யாழ்ப்பாணம் கொண்டு போகக் கூடாது என்று நினைத்திருப்பார்.

பிணவாடை தாங்காமல் நீல சேர்ட் மூக்கை பொத்துறார்போல அதுதான் ஒருவரும் கிட்ட வரேல்லை.
அட நம்ம சும்மும் ஒருகை போடவில்லை என்றால் பாருங்கோவன் 

7 hours ago, vaasi said:

இடம் கொள்ள ஏலாமலுக்கு தமிழ் தலைமகனை வழியனுப்ப சனம் நிரம்பி வழியுதுகள். பார்க்கவே ஆனந்தம் 
ஆனால் உட்கார்ந்திருக்கும் அனைத்துசனத்தையும் எனக்கும்  தெரியும் என்பதுதான் மெடிக்கல் மிராக்கிள்  

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Kapithan said:

பையா,

என்னால் கூறப்பட்டவைக்கும் தங்களால் கூறப்படுபவைக்கும் இடையில் ஏதாவது தொடர்பு இருக்கிறதா? 

🥺

இல்லை
நீங்கள் கூறியயது எவருமே தமிழர்களுக்கு நன்மைகள் செய்யவில்லை என்ற உண்மையை.
நான் இங்கே எழுதியது சம்பந்தன் அய்யாவின் உடலை தூக்குவதற்கு ஆட்கள் தமிழர்கள் இல்லை என்று கற்பனை செய்து குதூகலிப்பவர்களுக்கு.

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Kapithan said:

பையா,

என்னால் கூறப்பட்டவைக்கும் தங்களால் கூறப்படுபவைக்கும் இடையில் ஏதாவது தொடர்பு இருக்கிறதா? 

🥺

தந்தை செல்வா முதல் தேசியத் தலைவர் பிரபாகரன் வரை இலங்கைத் தமிழர்களுக்குச் செய்த ஆக்கப்பூர்வமான செயல்களால் ஏற்பட்ட பயன்களை உங்களால் பட்டியலிட முடியுமென்றால்,/ இது நீங்க‌ள் எழுதின‌ ப‌திவு ///////////////

அதுக்கான‌ ப‌திலை நான் எழுதினேன்

நீங்க‌ள் எழுதின‌தை மீண்டும் வாசியுங்கோ அப்ப‌ புரியும் நான் எழுதின‌து...................இன்னொரு திரியிலும் உப்ப‌டி தான் க‌ண்ட‌ மேனிக்கு அடிச்சு விட்ட‌ நீங்க‌ள்  அத‌ற்க்கு ப‌தில் அளித்தால் உங்க‌ளிட‌த்தில் இருந்து ப‌தில் வ‌ராது மெள‌வுன‌த்தை க‌டை பிடித்த‌ நீங்க‌ள் ......................

த‌ந்தை செல்வாவும் பிர‌பாக‌ர‌னும் த‌மிழ‌ர்க‌ளுக்கு என்ன‌ செய்தார்க‌ள் என்று கேட்டு இருந்த‌து நீங்க‌ள்😉......................

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, வீரப் பையன்26 said:

த‌ந்தை செல்வாவும் பிர‌பாக‌ர‌னும் த‌மிழ‌ர்க‌ளுக்கு என்ன‌ செய்தார்க‌ள் என்று கேட்டு இருந்த‌து நீங்க‌ள்😉......................

என்ன செய்தார்கள் என்று கேட்கவில்லை. 

பலன் என்ன என்றுதான் கேட்டிருந்தேன். 

பலன்:

விதைத்தவனுக்கு அறுவடை பலன். முதலிட்டவனுக்கு இலாபம் பலன். 

இதற்காகத்தான் நான் எழுதியதை திரு

பவும் வாசிக்கும்படி கூறினேன். 

☹️

1 hour ago, விளங்க நினைப்பவன் said:

இல்லை
நீங்கள் கூறியயது எவருமே தமிழர்களுக்கு நன்மைகள் செய்யவில்லை என்ற உண்மையை.
நான் இங்கே எழுதியது சம்பந்தன் அய்யாவின் உடலை தூக்குவதற்கு ஆட்கள் தமிழர்கள் இல்லை என்று கற்பனை செய்து குதூகலிப்பவர்களுக்கு.

👆

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Kapithan said:

என்ன செய்தார்கள் என்று கேட்கவில்லை. 

பலன் என்ன என்றுதான் கேட்டிருந்தேன். 

பலன்:

விதைத்தவனுக்கு அறுவடை பலன். முதலிட்டவனுக்கு இலாபம் பலன். 

இதற்காகத்தான் நான் எழுதியதை திரு

பவும் வாசிக்கும்படி கூறினேன். 

☹️

👆

2009க்கு பிற‌க்கு ஒன்று ப‌ட்ட‌ இல‌ங்கைக்குள் த‌மிழ‌ர்க‌ள் இருந்து

த‌மிழ‌ர்க‌ள் அடைந்த‌ ப‌ல‌ன் என்ன‌ அண்ணா😉?....................

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, வீரப் பையன்26 said:

2009க்கு பிற‌க்கு ஒன்று ப‌ட்ட‌ இல‌ங்கைக்குள் த‌மிழ‌ர்க‌ள் இருந்து

த‌மிழ‌ர்க‌ள் அடைந்த‌ ப‌ல‌ன் என்ன‌ அண்ணா😉?....................

இப்பொழுது,

 என்னால் கூறப்பட்ட பதிலை  ஆரம்பத்தில் இருந்து வாசிக்கவும். 

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Kapithan said:

இப்பொழுது,

 என்னால் கூறப்பட்ட பதிலை  ஆரம்பத்தில் இருந்து வாசிக்கவும். 

பிர‌பாக‌ர‌னால் த‌மிழ‌ர்க‌ள் அடைந்த‌ ப‌ல‌னை நான் ஆர‌ம்ப‌த்திலே எழுதி விட்டேன்

உங்க‌ளுக்கு இன்னும் புரிய‌ வில்லை என்றால் இந்த‌ க‌ல‌ந்துரையாட‌ல‌ இதோட‌ நிறுத்துவோம்

ந‌ன்றி வ‌ண‌க்க‌ம்...............................

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வீரப் பையன்26 said:

பிர‌பாக‌ர‌னால் த‌மிழ‌ர்க‌ள் அடைந்த‌ ப‌ல‌னை நான் ஆர‌ம்ப‌த்திலே எழுதி விட்டேன்

உங்க‌ளுக்கு இன்னும் புரிய‌ வில்லை என்றால் இந்த‌ க‌ல‌ந்துரையாட‌ல‌ இதோட‌ நிறுத்துவோம்

ந‌ன்றி வ‌ண‌க்க‌ம்...............................

1 பிர‌பாக‌ர‌ன் ஜாதியை ஒழித்தார்

2 த‌மிழ‌ர்க‌ளை ஒரு கோட்டுக்குள் ஒற்றுமையாய் வைத்து இருந்தார்

3 கொண்ட‌ கொள்கையில் உறுதியாய் நின்ற‌வ‌ர்

4 ஈழ‌ த‌மிழ‌ர்க‌ளுக்கு நாடு வேணும் என்று போராடி த‌ன் குடும்ப‌த்தையே இழ‌ந்த‌வ‌ர்

5 இந்த‌ நூற்றாண்டில் த‌மிழ் இன‌ம் என்ர‌ ஒன்று இருக்கு என்று உலகத்துக்கு உணர்த்தியவர்

6 வாழ்வா சாவா என்ர‌ போராட்ட‌த்தில் 2009க‌ளில் ப‌ல‌ நாடுக‌ளை எதிர்த்து போர் செய்த‌வ‌ர்

7 காசுக்கு ஆசைப் ப‌டாம‌ சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப் ப‌டாம‌ எளிமையாய் வாழ்ந்த‌ த‌லைவ‌ர்

8 க‌ருப்பு யூலை க‌ல‌வ‌ர‌த்தின் போது த‌மிழ‌ர்க‌ளுக்காக‌ போராடின‌வ‌ர்

9 த‌மிழ‌ர்க‌ளின் போராட்ட‌ மீட்ப்புக்காக‌ ப‌சித்த‌ போது அவியாத‌ மரவள்ளி கிழங்கு சாப்பிட்டவ‌ர்

10 சொல்லுக்கு முன் செய‌ல் இருக்க‌னும் என்றுசொன்ன‌வ‌ர் . அதை செயலிலும் செய்து காட்டினவர்

11 நான் பெரிது நீ பெரிது என்று வாழாம‌ நாடு பெரிது என்று வாழ‌னும் என்று உர‌க்க‌ சொன்ன‌வ‌ர் /க‌போதி ச‌ம்ப‌ந்த‌ர் த‌மிழ‌ர்க‌ளுக்கு செய்த‌ வேத‌னையை நீங்க‌ள் எழுதுங்கோ நான் வாசிக்க‌ ஆவ‌லுட‌ன் இருக்கிறேன்😉.......................

இதில் எது பலன்? 👆

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, விளங்க நினைப்பவன் said:

இல்லை
நீங்கள் கூறியயது எவருமே தமிழர்களுக்கு நன்மைகள் செய்யவில்லை என்ற உண்மையை.
நான் இங்கே எழுதியது சம்பந்தன் அய்யாவின் உடலை தூக்குவதற்கு ஆட்கள் தமிழர்கள் இல்லை என்று கற்பனை செய்து குதூகலிப்பவர்களுக்கு.

நீங்கள் தான் பையனா. ???. இப்படி தான்  வாசிப்பும். நடக்கிறது 🤣

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kapithan said:

என்ன செய்தார்கள் என்று கேட்கவில்லை. 

பலன் என்ன என்றுதான் கேட்டிருந்தேன். 

பலன்:

விதைத்தவனுக்கு அறுவடை பலன். முதலிட்டவனுக்கு இலாபம் பலன். 

இதற்காகத்தான் நான் எழுதியதை திரு

பவும் வாசிக்கும்படி கூறினேன். 

☹️

👆

ஏன் இல்லை  .....எந்தவொரு தோல்வியும் அனுபவங்களை கொடுக்கும்    தோல்வி பயன். தரவில்லை என்று சொல்ல முடியாது   

இங்கே முக்கியமாக  பெண்கள் துணிவு பெற்றுள்ளார்கள்  ..அவர்களின் தன்னம்பிக்கை வளர்த்து உள்ளது எற்றத்தாழ்வுகள் பெரும்பாலும் குறைத்து உள்ளது  ...இலங்கையில் தமிழர்கள் பகுதி வளர்ச்சி அடைநதுள்ளது    

தமிழா.   இலங்கையில் முதலீடு செய். என்று இலங்கை அரசாங்கம் கேட்கிறது   ...முன்பு இப்படி கேட்டதில்லை   நிறையவே இருக்கிறது  எழுதலாம் ...ஆனால் முட்டாள் தான்  புரிந்து கொள்வார்கள்   🤣🤣🤣

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:
2 hours ago, Kapithan said:

இதில் எது பலன்? 👆

குட்ட. குட்ட   குனிபவனில்லை  தமிழன்  என்று செயல் முறையில் பதில்கள் அளிக்கப்பட்டுள்ளது 

தமிழர்கள் இலங்கையில்  பெரும்பான்மை ஆக. வேண்டும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது 

இலங்கையின் பொருளாதாரத்தில் நினைத்து பார்க்க முடியாத அடி. தாக்கம் எற்ப்பட்டுள்ளது   இதனையடுத்து சிங்கள மக்களின் இனவிருத்தி என்றும் இல்லாதவாறு குறைந்துள்ளது 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kapithan said:

1 பிர‌பாக‌ர‌ன் ஜாதியை ஒழித்தார்

2 த‌மிழ‌ர்க‌ளை ஒரு கோட்டுக்குள் ஒற்றுமையாய் வைத்து இருந்தார்

3 கொண்ட‌ கொள்கையில் உறுதியாய் நின்ற‌வ‌ர்

4 ஈழ‌ த‌மிழ‌ர்க‌ளுக்கு நாடு வேணும் என்று போராடி த‌ன் குடும்ப‌த்தையே இழ‌ந்த‌வ‌ர்

5 இந்த‌ நூற்றாண்டில் த‌மிழ் இன‌ம் என்ர‌ ஒன்று இருக்கு என்று உலகத்துக்கு உணர்த்தியவர்

6 வாழ்வா சாவா என்ர‌ போராட்ட‌த்தில் 2009க‌ளில் ப‌ல‌ நாடுக‌ளை எதிர்த்து போர் செய்த‌வ‌ர்

7 காசுக்கு ஆசைப் ப‌டாம‌ சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப் ப‌டாம‌ எளிமையாய் வாழ்ந்த‌ த‌லைவ‌ர்

8 க‌ருப்பு யூலை க‌ல‌வ‌ர‌த்தின் போது த‌மிழ‌ர்க‌ளுக்காக‌ போராடின‌வ‌ர்

9 த‌மிழ‌ர்க‌ளின் போராட்ட‌ மீட்ப்புக்காக‌ ப‌சித்த‌ போது அவியாத‌ மரவள்ளி கிழங்கு சாப்பிட்டவ‌ர்

10 சொல்லுக்கு முன் செய‌ல் இருக்க‌னும் என்றுசொன்ன‌வ‌ர் . அதை செயலிலும் செய்து காட்டினவர்

11 நான் பெரிது நீ பெரிது என்று வாழாம‌ நாடு பெரிது என்று வாழ‌னும் என்று உர‌க்க‌ சொன்ன‌வ‌ர் /க‌போதி ச‌ம்ப‌ந்த‌ர் த‌மிழ‌ர்க‌ளுக்கு செய்த‌ வேத‌னையை நீங்க‌ள் எழுதுங்கோ நான் வாசிக்க‌ ஆவ‌லுட‌ன் இருக்கிறேன்😉.......................

இதில் எது பலன்? 👆

த‌லைவ‌ரும் அவ‌ரின் த‌ம்பி மார்க‌ளும் சுட்டெரிக்கும் வெய்யில்ல‌ நின்று க‌டும் போர் செய்ய‌ அதை சாட்டி தான் புல‌ம்பெய‌ர் நாட்டில் 7ல‌ச்ச‌ ம‌க்க‌ளுக்கு மேல் எங்க‌ட‌ நாட்டில் பிர‌ச்ச‌னை என்று புல‌ம்பெய‌ர் நாட்டில் சொகுசு வாழ்க்கை வாழுகின‌ம்

உங்க‌ளுக்கு அடைக்க‌ல‌ம் த‌ந்த‌ நாடு ஆர‌ம்ப‌த்தில் கேட்க்க‌ வில்லையா எத‌ற்காக‌ எங்க‌ள் நாட்டுக்கு வ‌ந்தீங்க‌ள் என்று.......................த‌லைவ‌ரும் போராளிக‌ளும் சிங்க‌ள‌ இன‌வாத‌ அர‌சை எதிர்த்து போர் செய்ய‌ அதை சாட்டி புல‌ம்பெய‌ர் நாட்டில் ப‌ல‌ன் அடைந்த‌ ந‌ப‌ர்க‌ளில் நீங்க‌ளும் ஒருத‌ர்......................

பிர‌பாக‌ர‌னால் ப‌ல‌ன் அடைந்த‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் நிறைய‌ இருக்கு 

எப்ப‌டி தான் எழுதினாலும் அது உங்க‌ளுக்கு புரியாது.......................

இப்ப‌ வெளி நாட்டுக்கு வ‌ருப‌வ‌ர்க‌ளை ஒரு நாடும் அவ‌ர்க‌ளுக்கு த‌ங்க‌ட‌ நாடுக‌ளில் த‌ங்கும் வ‌ச‌தி கொடுக்கின‌ம் இல்லை உட‌ன‌ நாட்டுக்கு திரும்பி போங்கோ என்று தான் சொல்லுகின‌ம்......................இப்ப‌ தெரியுதா பிர‌பாக‌ர‌னால் ப‌ல‌ன் அடைஞ்ச‌வ‌ர்க‌ள் எத்த‌னை பேர் என்று😉................................

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, வீரப் பையன்26 said:

அறுவடை என்ன என்று கேட்டால், வயலுக்கு காவல் காத்தது, பன்றி கலத்தது பற்றிக் கதைக்கிறீர்கள் ☹️

5 hours ago, Kandiah57 said:

குட்ட. குட்ட   குனிபவனில்லை  தமிழன்  என்று செயல் முறையில் பதில்கள் அளிக்கப்பட்டுள்ளது 

தமிழர்கள் இலங்கையில்  பெரும்பான்மை ஆக. வேண்டும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது 

இலங்கையின் பொருளாதாரத்தில் நினைத்து பார்க்க முடியாத அடி. தாக்கம் எற்ப்பட்டுள்ளது   இதனையடுத்து சிங்கள மக்களின் இனவிருத்தி என்றும் இல்லாதவாறு குறைந்துள்ளது 

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Kapithan said:

அறுவடை என்ன என்று கேட்டால், வயலுக்கு காவல் காத்தது, பன்றி கலத்தது பற்றிக் கதைக்கிறீர்கள் ☹️

ம்ம்ம்ம் 

உண்மையை எழுதினால் 

உங்க‌ளிட‌த்தில் இருந்து ப‌தில் இதை தான் எதிர் பார்க்க‌ முடியும்🫤

ச‌ம்ப‌ந்த‌ர் கூட்ட‌த்தால் த‌மிழ‌ர்க‌ள் அடைந்த‌ ப‌ல‌ன் என்ன‌ அதை

4வ‌ரி எழுதிட்டு போங்கோ😁..................கூடுத‌லா த‌லைவ‌ர் மூல‌ம் த‌மிழ‌ர்க‌ள் அடைந்த‌ ப‌ல‌னை ஆதார‌த்தோடு எழுதுகிறேன்.........................

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.