Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது
அமீபா குளம்
--------------------
அமீபா ஒரு  ஒரு கல விலங்கு என்று பள்ளிக்கூடத்தில் சொல்லித் தந்தார்கள். நுண்ணோக்கியினூடாக அதைப் பார்த்த மாதிரியும் ஒரு ஞாபகம். பார்க்காமலேயே பார்த்தது போலவே ஒரு உணர்வாகக் கூட இருக்கலாம். ஒரு அமீபாவில் ஒரே ஒரு கலம் மட்டும் இருக்கும் போது, ஒரு மனித உடம்பில் எத்தனை கலங்கள் இருக்கின்றன என்று நினைக்கின்றீர்கள்? 20லிருந்து 40 டிரில்லியன் கலங்கள் வரை இருக்குமாம். 20 இலட்சம் கோடியிலிருந்து 40 இலட்சம் கோடி வரை. இந்தியாவில் 2ஜி காற்றலை ஊழலில் தான் இப்படியான ஒரு எண்ணை கடைசியாகக் கேள்விப்பட்டது.
 
அமீபா இப்பொழுது திடீரென்று செய்திகளில் அடிபடுகின்றது. அமீபா மனிதர்களுக்குள் போய் அவர்களின் மூளையை அழிக்கின்றது, மூளையை தின்று விடுகின்றது என்று செய்திகளில் வந்து கொண்டிருக்கின்றது. பயப்பட வேண்டாம், இது எல்லோரையும் தாக்காது என்கின்றார்கள். மூளை இருப்பவர்களை மட்டும் தான் இது தாக்கும் என்று சொல்ல வருகின்றார்களா என்று குறுக்குமறுக்காக யோசிக்கக்கூடாது. அழுக்கு நீரில் குளித்தால், அதுவும் அதில் ஒருவரையோ அல்லது மிகச் சிலரையோ மட்டுமே இது தாக்குகின்றது. அழுக்கு நீரில் இருக்கும் அமீபா மூக்கினூடு அல்லது வாயினூடு உள்ளே போய், மூளை வரை போகும் என்கின்றனர்.
 
மாரியில் பெய்யும் மழை தான் ஊர்க் கோவில் குளங்களின் ஒரே ஒரு நீர் ஆதாரம். எந்தக் குளத்திலும் இயற்கையாக நீர் ஊற்று இருந்ததை நான் காணவில்லை. இரண்டு அல்லது மூன்று மாதங்களில் பெய்யும் மாரி மழையில் கோவில் குளங்கள் நிரம்பும். சில வருடங்களில் நிரம்பி வழிந்தும் இருக்கின்றன. மிகுதி மாதங்களில் அதே தண்ணி தான், அங்கேயே நிற்கும், பச்சை நிறமாக மாறும், வற்றும். என்ன நிறம் ஆனாலும் நாங்கள் அந்த நிறத் தண்ணீருக்குள் பாய்ந்து பாய்ந்து முங்கி முங்கி எழுந்திருக்கின்றோம்.
 
குளத்திற்கு அருகில் இருக்கும் மரத்தில் ஏறிக் குதிப்பது, கோவில் கூரையில் ஏறிக் குதிப்பது, எல்லாப் படிகளையும் நீளவாக்கில் தாண்டிக் குதிப்பது என்று மூளை கெட்ட தனமாக பலவற்றைச் செய்திருக்கின்றோம். ஒரு குளத்தின் அருகில் நின்ற கத்தேக்க மரத்தில் உயரத்தில் பலகையை கிடையாக கட்டி, அதில் இருந்து துள்ளிக் கூட குதித்திருக்கின்றோம்.
 
அமீபாவும் அங்கு குடியிருந்திருக்க வேண்டும் இப்பொழுது தெரிகின்றது. நிற்கும் அழுக்குத் தண்ணீர், இளஞ்சூடு என்று அமீபா வளர்வதற்கேற்ற எல்லா காரணிகளும் சரியாகப் பொருந்துவது மட்டும் தான் ஒரு காரணம் என்றில்லை. 'உன்ரை மூளையும் இரும்புச் சூளையும் ஒன்று............' என்று திட்டுகள் பல தடவைகள் விழுந்திருக்கின்றது. அமீபா தான் ஒரு பகுதியை எடுத்து விட்டதோ என்று இப்பொழுது சந்தேகமாக இருக்கின்றது. 'உங்களுக்கு மூளையே இல்லை.............' என்று இன்று அடிக்கடி வரும் வரியும் அதையே உறுதிப்படுத்துகின்றது.
 
ஐந்தாம் வகுப்பில் இருந்த வருடம். ஒரு கோவிலின் ஐயர் மகனும் எங்களின் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தான். பெரிய கோவில் ஒன்றிலும், சில சின்னக் கோவில்களிலும் அவர்களின் குடும்பம் பூசை செய்து கொண்டிருந்தது. ஒரு நாள் பெரிய கோவில் குளத்தில் எங்களுடன் குளித்தான். பல மணி நேரங்களின் பின், போதும் என்று நாங்கள் வெளியில் வந்து விட்டோம், அவன் வரவேயில்லை. குளித்துக் கொண்டேயிருந்தான்.
 
பின்னர் சில நாட்கள் சின்ன ஆஸ்பத்திரி, பெரிய ஆஸ்பத்திரி என்று படுக்கையில் கிடந்தான் ஐயர் நண்பன். அப்படியே போய்ச் சேர்ந்துவிட்டான். சன்னி ஆக்கி விட்டது என்று ஊரில் சொன்னார்கள். சிறுவர்களுக்கு என்று இருக்கும் இடுகாட்டில் ஒரு பெரிய சமாதி அவனுடைய பெயரில் கட்டினார்கள். இன்றும் அது அங்கே இருக்கின்றது.
 
சமீபத்தில் ஊர் போய் இருந்த போது, எல்லாக் கோவில் குளங்களையும் போய்ப் பார்த்தேன். கடும் வெயிலில் காய்ந்து, அடி மட்டத் தண்ணீருடன், கடும் பச்சை நிறத்தில் இருந்தன. எத்தனை டிரில்லியன் அமீபாக்கள் அங்கு நீந்திக் கொண்டிருக்கின்றனவோ.
  • Like 5
  • Haha 1
  • Sad 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
19 minutes ago, ரசோதரன் said:

உங்களுக்கு மூளையே இல்லை.

இது வீட்டுக்காரி தானே?

வீட்டுக்கு வீடு வாசல்படி.

20 minutes ago, ரசோதரன் said:

சமீபத்தில் ஊர் போய் இருந்த போது, எல்லாக் கோவில் குளங்களையும் போய்ப் பார்த்தேன். கடும் வெயிலில் காய்ந்து, அடி மட்டத் தண்ணீருடன், கடும் பச்சை நிறத்தில் இருந்தன. எத்தனை டிரில்லியன் அமீபாக்கள் அங்கு நீந்திக் கொண்டிருக்கின்றனவோ.

இறங்கி அமீபாவுக்கு ஒரு காய் சொல்லிப் போட்டு வந்திருக்கலாமே?

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஒரு பக்கம் உங்கடை கதை. மற்றப் பக்கம் இஸ்ரோ தலைவரின் விண் கல் பூமியை நோக்கி விரைந்து கொண்டிருக்கின்றது என்ற எச்சரிக்கை..!

எந்தப் பக்கத்தால திரும்பிறது????

பி. கு: கதை நல்லாருக்கு…!

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, ஈழப்பிரியன் said:

இது வீட்டுக்காரி தானே?

வீட்டுக்கு வீடு வாசல்படி.

👍....

வேற யாரும் எங்களை அப்படிக் கேட்டால், 'நீங்க தான் அடுத்த ஆல்பேர்ட் ஐன்ஸ்டைன் ஆக்கும்....' என்று ஒரு எதிர்க் கேள்வி கேட்டு விடுவோமே....🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, புங்கையூரன் said:

ஒரு பக்கம் உங்கடை கதை. மற்றப் பக்கம் இஸ்ரோ தலைவரின் விண் கல் பூமியை நோக்கி விரைந்து கொண்டிருக்கின்றது என்ற எச்சரிக்கை..!

எந்தப் பக்கத்தால திரும்பிறது????

பி. கு: கதை நல்லாருக்கு…!

🤣.....

இரண்டுக்கும் ஒரு தொடர்பு இருக்கின்றது..... ஆதவன் அந்தச் செய்தியில் 'மனித குளம்' என்று எழுத்துப்பிழை விட்டு இருப்பார்கள். அங்கேயிருந்து தான் 'அமீபா குளம்' என்ற இந்த தலைப்பு உருவானது...
 
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

அமீபாவுக்கும் மூளை இருந்திருக்க வேண்டும் அதனால் அது மூளை கெட்டுப்போனவர்களைத் தாக்குவதில்லை ......... அது பெண்களுக்கு முன்பே தெரிந்திருக்கின்றது.......!  😂

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 hours ago, ரசோதரன் said:

சில வருடங்களில் நிரம்பி வழிந்தும் இருக்கின்றன. மிகுதி மாதங்களில் அதே தண்ணி தான், அங்கேயே நிற்கும், பச்சை நிறமாக மாறும், வற்றும். என்ன நிறம் ஆனாலும் நாங்கள் அந்த நிறத் தண்ணீருக்குள் பாய்ந்து பாய்ந்து முங்கி முங்கி எழுந்திருக்கின்றோம்.

வல்லிபுரக் கோவில் குளம்தான் நான் ‘ஒல்லி’ கட்டி நீந்திப் பழகிய குளம். வெள்ளைக் களி மண் கலங்கி பச்சையாகவும் இல்லாமல்  மஞ்சளாக இல்லாமலும் இருக்கும் தண்ணீர். அங்கே குளித்தால் கண்டிப்பாக கேணியில் தண்ணி அள்ளிக் குளிக்க வேண்டும் என்று சொல்வார்கள்.

ஒருநாள் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருக்கும் போது கரையில் ஒருவர் குந்தியிருந்நு கொண்டு கழுவிக் கொண்டிருந்தார். “என்னடா செய்யிறான்?” என்று நண்பனைக் கேட்டேன். “பக்கத்திலே பத்தை ஒன்று இருக்கு கவனிக்க இல்லையே? அங்கையிருந்துதான் வந்தவன்” என்றான். விழுந்தடித்து கரைக்கு வந்தேன்.

சமீபத்தில் ஊருக்குப் போன போது அந்தக் குளத்தைப் போய்ப்பார்த்தேன்

IMG-4800.jpg

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

எங்கள் ஊரில் பறாளாய் முருகன் கோவில் கேணி பல்லாயிரம் பேர் நீந்தப்பழக உதவியது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, Kavi arunasalam said:

வல்லிபுரக் கோவில் குளம்தான் நான் ‘ஒல்லி’ கட்டி நீந்திப் பழகிய குளம். வெள்ளைக் களி மண் கலங்கி பச்சையாகவும் இல்லாமல்  மஞ்சளாக இல்லாமலும் இருக்கும் தண்ணீர். அங்கே குளித்தால் கண்டிப்பாக கேணியில் தண்ணி அள்ளிக் குளிக்க வேண்டும் என்று சொல்வார்கள்.

ஒருநாள் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருக்கும் போது கரையில் ஒருவர் குந்தியிருந்நு கொண்டு கழுவிக் கொண்டிருந்தார். “என்னடா செய்யிறான்?” என்று நண்பனைக் கேட்டேன். “பக்கத்திலே பத்தை ஒன்று இருக்கு கவனிக்க இல்லையே? அங்கையிருந்துதான் வந்தவன்” என்றான். விழுந்தடித்து கரைக்கு வந்தேன்.

சமீபத்தில் ஊருக்குப் போன போது அந்தக் குளத்தைப் போய்ப்பார்த்தேன்

IMG-4800.jpg

🤣.....

அச்சு அசலாக இதே போல ஒரு குளம் தீருவில் வயல்களின் நடுவிலும் இருக்கின்றது. அதன் முந்தைய பயன்பாடும் நீங்கள் சொல்லியிருப்பது போன்றே. பின்னர் அங்கே தூபி கட்டப்பட்டு, அருகில் இருக்கும் வயலூர் முருகன் கோவிலும் பெரிதான பின், குளம் சுத்தமாகியது. 

அந்த நாட்களில் ஜப்பான் மீன் குஞ்சுகளை யாரோ வருடா வருடம் அந்தக் குளத்தினுள் விடுவார்கள். பின்னர் ஒரு நாளில் போய் வளர்ந்த மீன்களை பிடிப்பார்கள். குளத்து மீன் என்று நாங்கள் பலர் ஒதுங்கி விடுவோம். தமிழ்நாட்டில் நடக்கும் மீன்பிடித் திருவிழா போல. 

நன்னீர் மீன்கள் கடல் மீன்களை விட சிறந்தவை என்று சில தமிழ்நாட்டு நண்பர்கள் சொல்லக் கேட்டிருக்கின்றேன். இவர்கள் கடலே பார்க்காதவர்கள் போல என்று நினைத்துக் கொள்ள வேண்டியதுதான். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 hours ago, suvy said:

அமீபாவுக்கும் மூளை இருந்திருக்க வேண்டும் அதனால் அது மூளை கெட்டுப்போனவர்களைத் தாக்குவதில்லை ......... அது பெண்களுக்கு முன்பே தெரிந்திருக்கின்றது.......!  😂

🤣.....

'அமீபா' என்ற பெயரே அந்தப் பக்கத்து பெயர் போலவும் இருக்கின்றது.................😜.

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 hours ago, ரசோதரன் said:

🤣.....

அச்சு அசலாக இதே போல ஒரு குளம் தீருவில் வயல்களின் நடுவிலும் இருக்கின்றது. அதன் முந்தைய பயன்பாடும் நீங்கள் சொல்லியிருப்பது போன்றே. பின்னர் அங்கே தூபி கட்டப்பட்டு, அருகில் இருக்கும் வயலூர் முருகன் கோவிலும் பெரிதான பின், குளம் சுத்தமாகியது. 

அந்த நாட்களில் ஜப்பான் மீன் குஞ்சுகளை யாரோ வருடா வருடம் அந்தக் குளத்தினுள் விடுவார்கள். பின்னர் ஒரு நாளில் போய் வளர்ந்த மீன்களை பிடிப்பார்கள். குளத்து மீன் என்று நாங்கள் பலர் ஒதுங்கி விடுவோம். தமிழ்நாட்டில் நடக்கும் மீன்பிடித் திருவிழா போல. 

நன்னீர் மீன்கள் கடல் மீன்களை விட சிறந்தவை என்று சில தமிழ்நாட்டு நண்பர்கள் சொல்லக் கேட்டிருக்கின்றேன். இவர்கள் கடலே பார்க்காதவர்கள் போல என்று நினைத்துக் கொள்ள வேண்டியதுதான். 

நன்னீர் மீன்கள் பங்களாதேசிகள் அதிகம் வாழும் லண்டனின் கிழக்குப் பகுதிக் கடைகளுக்குத் தினமும் வரும். வயிறு கடல் மீனை விட மிகவும் பெரிதாக இருக்கும். கடல் பேத்தை மீன்களைப் போலவே இவை இருக்கும். பங்களாதேசிகள் காத்திருந்து வாங்குவார்கள். சுவையாகத் தான் இருக்க வேணும் என நினைக்கிறேன்.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
21 hours ago, suvy said:

அமீபாவுக்கும் மூளை இருந்திருக்க வேண்டும் அதனால் அது மூளை கெட்டுப்போனவர்களைத் தாக்குவதில்லை ......... அது பெண்களுக்கு முன்பே தெரிந்திருக்கின்றது.......!  😂

இதுதான்  இவர் செலக்ட் பண்ணுப்பட முக்கிய காரணம்...எழுதுங்கோ நல்லயிருக்கு..

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
18 hours ago, Kavi arunasalam said:

வல்லிபுரக் கோவில் குளம்தான் நான் ‘ஒல்லி’ கட்டி நீந்திப் பழகிய குளம். வெள்ளைக் களி மண் கலங்கி பச்சையாகவும் இல்லாமல்  மஞ்சளாக இல்லாமலும் இருக்கும் தண்ணீர். அங்கே குளித்தால் கண்டிப்பாக கேணியில் தண்ணி அள்ளிக் குளிக்க வேண்டும் என்று சொல்வார்கள்.

ஒருநாள் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருக்கும் போது கரையில் ஒருவர் குந்தியிருந்நு கொண்டு கழுவிக் கொண்டிருந்தார். “என்னடா செய்யிறான்?” என்று நண்பனைக் கேட்டேன். “பக்கத்திலே பத்தை ஒன்று இருக்கு கவனிக்க இல்லையே? அங்கையிருந்துதான் வந்தவன்” என்றான். விழுந்தடித்து கரைக்கு வந்தேன்.

சமீபத்தில் ஊருக்குப் போன போது அந்தக் குளத்தைப் போய்ப்பார்த்தேன்

IMG-4800.jpg

இதை நாம சொல்லுறது தாமரைக்குளம்..பொடிநடையாய்..ஞாயிற்றுக் கிழமைகளில் போய் ..தாமரைக் குளத்தில் குளித்து விட்டு... (நீச்சல் கதைமட்டும் கேட்காதேங்கோ) கேணியில்  அள்ளி ஊத்தின சந்த்தோசம் சொல்லில் அடங்காது...ஆழ்வானில்  காதலியிடம்(மனிசியுடன்)கடலை போட்டதைக்கண்ட ...மூன்றாவது  அண்ணனிடம் பூவரசம்    தடிப்பூசை...இன்னமும் மறக்கேல்லை..

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, alvayan said:

பொதுவா முதல் அண்ணன்தான் பொறாமையில் அடிப்பார்.......காரணம் 1 - அப்ப அவருக்கு திருமணம் ஆகியிருக்காது..........காரணம் 2 - மணமாகியிருந்தால் டேய் தம்பி நான் படும் துன்பத்தை நீ படாதையடா என்னும், பாசத்தில்.....!

மூன்றாவது அண்ணனை ஒரு அண்ணானாகவே மதிப்பதில்லை.......நீ ....வாடா போடா நாயே பேயே என்று ஒரு நண்பனாகத்தான் புழங்குவது ........அவரே பூசை போடுறார் என்றால் ரொம்ப ரொம்ப  பொறாமை போல .......!  😂

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ரசோதரன் உங்கள் குறுங்கதைகள் மிகவும் அருமை.மீண்டும் தாயக இளமைக் கால நினைவுகளை இரைமீட்பதுபோல இருக்கின்றன. இவவளவு காலமும் இந்த நகைச்சுவைப்பட எழுதும் திறமை எங்கே ஒளிந்திருந்தன என எண்ணுவதுண்டு.

ஒரு பாரபட்ஷம் என்னவெனில் பெண் குட்டிகளுக்கு  பத்து வயதுக்கு முன்பு என்றாலும் நீச்சல் பகற்கனவு. சில வன்னிப்பகுதிகளில்  பெண்கள் கூட்டமாக சென்று வாய்க் கால் ஓடும் நீரில்  நீந்தி இருக்கிறார்கள்.தொடரட்டும்  குறுங்கதைகள் பாராட்டுக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
20 minutes ago, நிலாமதி said:

🙏..........

மிக்க நன்றி அக்கா. 

கடற்கரைகளிலும் இதே நிலை தான், அக்கா. அங்கும் அருகே வாழும் பெண்கள் நீச்சல் பழக விரும்புவார்கள், ஆனால் அது முடிவதில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எனது ஊரிலும் பெரியகுளம் மண்டாக்குளம் என்று இரு குளங்கள் உள்ளன.

இந்த குளங்களில் துருசு என்று சொல்லக் கூடிய சற்சதுர வடிவத்தில் ஆழமானமாக நாற்புறமும் இருக்கும்.

மண்டாக்குளம் கொஞ்சம் தூரமாக உள்ளது.

பெரியகுளம் நடந்து போகக் கூடிய தூரத்தில் உள்ளது.

இரண்டிலும் குளிக்கப் போய் இறந்திருக்கிறார்கள். இருந்தாலும்

அடிப்படை நீச்சலை இங்கு தான் கற்றுக் கொண்டோம்.

இன்னமும் அடிப்படை நீச்சலிலேயே நிற்கிறோம் என்பது வேறுகதை.

நீச்சல் தெரியாத காலத்திலேயே தேங்காயைக் கட்டிக் கொண்டு துருசுக்குள் குளிப்போம்.

உங்கள் அமீபாகுளம் பழைய நினைவுகளை கொண்டுவந்டு விட்டது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 minutes ago, ஈழப்பிரியன் said:

எனது ஊரிலும் பெரியகுளம் மண்டாக்குளம் என்று இரு குளங்கள் உள்ளன.

இந்த குளங்களில் துருசு என்று சொல்லக் கூடிய சற்சதுர வடிவத்தில் ஆழமானமாக நாற்புறமும் இருக்கும்.

நீச்சல் தெரியாத காலத்திலேயே தேங்காயைக் கட்டிக் கொண்டு துருசுக்குள் குளிப்போம்.

ஒரு இடம் பெயர்வின் போது இருபாலைப் பகுதியில் சில நாட்கள் தங்கியிருந்தோம். அப்பொழுது தான் துருசு என்ற சொல்லை நான் முதலில் அறிந்து கொண்டது. கடல் நீச்சல் மிக நல்லாகவே தெரிந்திருந்தும், குளத்தில் ஆரம்பத்தில் சிரமமாக இருந்தது. சேற்று மண், தாமரை, அல்லிக் கொடிகள், துருசு என்று இந்தக் குளங்கள் வேறொரு நீர் உலகம்.   

  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 hours ago, suvy said:

பொதுவா முதல் அண்ணன்தான் பொறாமையில் அடிப்பார்.......காரணம் 1 - அப்ப அவருக்கு திருமணம் ஆகியிருக்காது..........காரணம் 2 - மணமாகியிருந்தால் டேய் தம்பி நான் படும் துன்பத்தை நீ படாதையடா என்னும், பாசத்தில்.....!

மூன்றாவது அண்ணனை ஒரு அண்ணானாகவே மதிப்பதில்லை.......நீ ....வாடா போடா நாயே பேயே என்று ஒரு நண்பனாகத்தான் புழங்குவது ........அவரே பூசை போடுறார் என்றால் ரொம்ப ரொம்ப  பொறாமை போல .......!  😂

ஏழு கடுவனிலை  ஆறாவது நானென்றால் ...வரிசையில் அடிபோட ப்படும்தானே...😁

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, ரசோதரன் said:

ஒரு இடம் பெயர்வின் போது இருபாலைப் பகுதியில் சில நாட்கள் தங்கியிருந்தோம்.

ஒ இருபாலையில் எங்கே இருந்தீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
58 minutes ago, ஈழப்பிரியன் said:

ஒ இருபாலையில் எங்கே இருந்தீர்கள்?

இருபாலைச் சந்தியில் இருந்து கிழக்கு பக்கம் போகும் வீதியில் கொஞ்ச தூரம் போய், உள்ளே இறங்க வயல்கள் வரும் என்று ஞாபகம். அங்கே ஒரு வீட்டில் லிபரேஷன் ஆபரேஷனின் போது ஒன்றோ இரண்டோ மாதங்கள் இருந்தோம். அந்தப் பகுதியில் ஒரு பெரிய குளமும் துருசுடன், ஒரு கோவிலுக்கு அருகில், மற்றும் பல சின்னக் குளங்களும் இருந்தன.

எங்களூர் பக்கங்களில் சந்தைகளில் கூட நாங்கள் தாமரைக் கிழங்கு பார்த்தது கிடையாது. இங்கு தான் தாமரைக் கிழங்கை பார்த்ததும், சாப்பிட்டதும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, ரசோதரன் said:

  ஞாபகம். அங்கே ஒரு வீட்டில் லிபரேஷன் ஆபரேஷனின் போது ஒன்றோ இரண்டோ மாதங்கள் இருந்தோம். 

.

அப்ப கப்பலில் காலிக்கு போன அனுபவமும் இருக்கா...

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, ரசோதரன் said:

இருபாலைச் சந்தியில் இருந்து கிழக்கு பக்கம் போகும் வீதியில் கொஞ்ச தூரம் போய், உள்ளே இறங்க வயல்கள் வரும் என்று ஞாபகம். அங்கே ஒரு வீட்டில் லிபரேஷன் ஆபரேஷனின் போது ஒன்றோ இரண்டோ மாதங்கள் இருந்தோம். அந்தப் பகுதியில் ஒரு பெரிய குளமும் துருசுடன், ஒரு கோவிலுக்கு அருகில், மற்றும் பல சின்னக் குளங்களும் இருந்தன.

நீங்கள் சொல்லும் பகுதி கிழக்கிருபாலை என்பார்கள்.சந்தியில் இருந்து போகும்போது வலதுபக்கமாக வரும் குளம் பெரியகுளம்.

2 hours ago, ரசோதரன் said:

எங்களூர் பக்கங்களில் சந்தைகளில் கூட நாங்கள் தாமரைக் கிழங்கு பார்த்தது கிடையாது. இங்கு தான் தாமரைக் கிழங்கை பார்த்ததும், சாப்பிட்டதும்.

திருவிழா காலங்களில் நண்பர்களுடன் தாமரைக்கிழங்கு புடுங்க போவோம்.

சிலபேர் விறுவிறு என்று புடுங்கி அடுக்குவார்கள்.

நாங்க ஒன்றிரண்டு பேர் தாண்டுதாண்டு இழுக்கும் போது சேற்றுத்தண்ணி வாய்க்குள் போகும்.

இப்ப நினைத்தால் வாழ்க்கை வெறுக்கும்.

எமது பகுதி இருபாலைச் சந்தியில் இருந்து யாழ் போகும்போது கற்பக பிள்ளையார் கோவில் என்று வீதிக்கரையில் இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, alvayan said:

அப்ப கப்பலில் காலிக்கு போன அனுபவமும் இருக்கா...

பூஸா முகாம் தானே.... நான் போகவில்லை...... தப்பி விட்டேன்...

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, ஈழப்பிரியன் said:

எமது பகுதி இருபாலைச் சந்தியில் இருந்து யாழ் போகும்போது கற்பக பிள்ளையார் கோவில் என்று வீதிக்கரையில் இருக்கிறது.

அந்தப் பிள்ளையார் கோவில் நினைவில் இருக்கின்றது. அதன் அருகில் ஒரு பாலர் பாடசாலை இருந்தது போல.....

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.