Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
கார் திருட்டின் தலைநகரமாக கனடா மாறியது எப்படி?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,கார் திருட்டைத் தடுப்பதற்காக டொரண்டோவில் தனியார் வாகனப் பாதையில் பொருத்தப்பட்டுள்ள தானாக இயங்கும் தடுப்பு அமைப்புகள். கட்டுரை தகவல்
  • எழுதியவர், நாடின் யூசிஃப்
  • பதவி, பிபிசி நியூஸ்,
  • 5 மணி நேரங்களுக்கு முன்னர்

கடந்த 2022, அக்டோபர் மாதத்தின் ஒரு காலை வேளையில் லோகன் லாஃபிரெனியெர் தன்னுடைய வாகன நிறுத்தும் இடம் காலியாக இருப்பதை பார்த்தார். அவருடைய புதிய ரேம் ரெபெல் டிரக் கார் காணாமல் போயிருந்தது.

ஒண்டாரியோ மாகாணத்தில் உள்ள மில்டன் நகரத்தில் அமைந்துள்ள அவருடைய வீட்டுக்குள் நடுநிசியில் முக்காடு அணிந்திருந்த இரு நபர்கள் உள்ளே நுழைந்து அவரின் காரை எளிதாக ஓட்டிச் செல்வது பாதுகாப்பு கேமராவில் பதிவாகியிருந்தது.

சில மாதங்கள் கழித்து, அதே டிரக், சுமார் 8,500 கி.மீ. தொலைவில் ஆப்பிரிக்காவின் கானாவில் விற்பனைக்கு உள்ள வாகனங்களின் இணையதளத்தில் இடம்பெற்றிருந்தது.

“காரின் ஓட்டுநர் இருக்கைக்கு பின்புறத்தில் என் மகன் லேப்டாப் வைப்பதற்காக அமைக்கப்பட்ட தாங்கியில், அவன் வைத்திருந்த குப்பை அதில் தெளிவாக தெரிந்தது,” என லோகன் லாஃபிரெனியெர் பிபிசியிடம் கூறுகிறார்.

“அது என்னுடைய வாகனம் தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.”

அவருடைய இந்த கதை தனித்துவமானது அல்ல. கனடாவில் கடந்த 2022-ம் ஆண்டு ஒரு லட்சத்துக்கும் அதிகமான கார்கள் திருடப்பட்டுள்ளன. அதாவது ஒவ்வொரு ஐந்து நிமிடத்திற்கும் ஒரு கார் திருடப்பட்டுள்ளது. கனடாவின் நீதித்துறை அமைச்சரும் பாதிக்கப்பட்டவர்களுள் ஒருவராவார். அரசு அவருக்கு வழங்கிய டொயோட்டோ ஹைலேண்டர் XLE இருமுறை கொள்ளையர்களால் திருடப்பட்டது.

137 நாடுகளில் கார் திருட்டு நடைபெறுவதில் மோசமாக உள்ள முதல் பத்து நாடுகளில் கனடா முதலிடத்தில் உள்ளதாக இண்டர்போல், சர்வதேச போலீஸ் இந்த கோடைக்காலத்தில் பட்டியலிட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் தான் கனடா தங்கள் தரவுகளை இண்டர்போல் உடன் ஒருங்கிணைக்கத் தொடங்கிய நிலையில், இது “குறிப்பிடத்தக்க ஒன்று” என அதன் செய்தித்தொடர்பாளர் ஒருவர் கூறியுள்ளார்.

 
கார் திருட்டின் தலைநகரமாக கனடா மாறியது எப்படி?

பட மூலாதாரம்,GETTY IMAGES

காவலரை நிறுத்தும் உரிமையாளர்கள்

கார்கள் திருடப்பட்டவுடன் அவை மற்ற மோசமான குற்றங்களுக்கு பயன்படுத்துதல், உள்ளூரிலேயே சந்தேகமில்லாத நபர்களுக்கு விற்பனை செய்தல் அல்லது வெளிநாடுகளுக்கு மறுவிற்பனைக்காக அனுப்புதல் ஆகியவை மேற்கொள்ளப்படுவதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

கடந்த பிப்ரவரி மாதத்திலிருந்து கனடாவிலிருந்து திருடப்பட்ட 1,500-க்கும் மேற்பட்ட கார்களை உலகம் முழுவதிலுமிருந்து கண்டுபிடித்துள்ளதாகவும் ஒவ்வொரு வாரமும் சுமார் 200 கார்கள், குறிப்பாக மற்ற நாடுகளின் துறைமுகங்களில் கண்டுபிடிக்கப்படுவதாகவும் இண்டர்போல் தெரிவித்துள்ளது.

கார் திருட்டு வேகமாக பரவிவரும் நிலையில், அதனை “தேசிய நெருக்கடியாக” கனடா காப்பீடு செயலகம் அறிவித்துள்ளது. கடந்தாண்டு வாகன திருட்டு காரணமாக, காப்பீட்டுதாரர்கள் ஒரு பில்லியன் டாலர்கள் (சுமார் ரூ.8,300 கோடி) அளவுக்கு அதிகமாக செலுத்த வேண்டியிருந்ததாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

திருட்டிலிருந்து எப்படி வாகனங்களை பாதுகாக்க வேண்டும் என்பது குறித்து, பொதுமக்களுக்கு நாடு முழுவதும் அறிவுறுத்தல்களை வழங்கும் கட்டாயத்திற்கு காவல்துறையினர் ஆளாகியுள்ளனர்.

இதனிடையே, தங்கள் கார்களை பாதுகாக்க அவற்றில் டிராக்கர்களை நிறுவுதல் முதல் தனியார் செக்யூரிட்டியை பணிக்கு அமர்த்துதல் வரை, அனைத்து பாதுகாப்பு முயற்சிகளையும் கனடா மக்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

வங்கிகள் மற்றும் தூதரகங்களில் காணப்படுவது போன்று, திருடர்களை தடுக்கும் விதமாக, தானாகவே இயங்கும் பெரிய கட்டைத் தூண்களுடன் கூடிய அமைப்பை ( retractable bollards) அதனை வாங்க முடிந்தவர்கள் நிறுவிக்கொள்கின்றனர்.

டொரண்டோ புறநகரான மிசிசௌகாவை சேர்ந்த நௌமன் கானும் அவருடைய சகோதரரும் கார் திருட்டால் பாதிக்கப்பட்ட நிலையில், இத்தகைய ரீடிராக்டபிள் பொல்லார்டுகளை நிறுவும் தொழிலை தொடங்கினர்.

ஒருசமயம் திருட்டு முயற்சியின்போது தன் மனைவி மற்றும் குழந்தைகள் தூங்கிக்கொண்டிருந்தபோது, திருடர்கள் வீட்டுக்குள் நுழைந்ததாக கான் கூறுகிறார். வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த மெர்சிடெஸ் ஜி.எல்.இ-யின் சாவியை அவர்கள் தேடியதாக கூறும் அவர், தன்னிடம் சிக்கிக்கொண்டதையடுத்து அவர்கள் ஓடிவிட்டதாக கூறுகிறார்.

இந்த “அதிர்ச்சிகரமான” சம்பவத்திற்கு பிறகு, அவர்கள் குடும்பத்திற்காக இரண்டு “எளிய” வாகனங்களை தவிர்த்து தங்களுடைய மற்ற வாகனங்களை விற்றுவிட்டதாக கூறுகின்றனர்.

தன்னுடைய இந்த தொழில் மூலமாக, டொரண்டோ முழுவதும் பரவலாக இத்தகைய கதைகளை பலரிடமிருந்து தான் கேட்பதாக கான் கூறுகிறார்.

“இப்போது இந்த தொழிலில் நாங்கள் பிஸியாக இருக்கிறோம்” என்கிறார் அவர். “வாடிக்கையாளர் ஒருவரின் தெருவில் இப்படி நிறைய சம்பவங்கள் நடந்துள்ளதால், பாதுகாப்பின்மை காரணமாக, ஒவ்வொரு இரவும் வீட்டுக்கு வெளியே காவலரை நிறுத்துவதாக தெரிவித்தார்” என்கிறார் அவர்.

 

கேள்விக்குள்ளாகும் துறைமுக அமைப்புகள்

கார் திருட்டின் தலைநகரமாக கனடா மாறியது எப்படி?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,சித்தரிப்புப் படபடம்

இத்தகைய குற்ற சம்பவங்கள் அதிகளவில் உள்ள அமெரிக்கா மற்றும் பிரிட்டனுடன் ஒப்பிடுகையில் குறைந்த மக்கள்தொகை கொண்ட கனடாவில் இவ்வளவு பரவலாக கார் திருட்டு சம்பவங்கள் நடப்பது ஆச்சர்யத்தைத் தருகிறது என, அமெரிக்க நீதி புள்ளியியல் செயலகத்தின் இயக்குநர் அலெக்சிஸ் பிகுவெரோ தெரிவித்தார்.

“மேலும் கனடாவில் அமெரிக்காவில் உள்ளது போன்று அதிக துறைமுக நகரங்களும் இல்லை,” என அவர் கூறுகிறார்.

கொரோனா பெருந்தொற்று காலத்திலிருந்து அமெரிக்கா, கனடா , பிரிட்டன் போன்ற நாடுகள் அதிகமான கார் திருட்டு சம்பவங்களை எதிர்கொண்டுள்ளன. கனடாவில் (ஒரு லட்சம் பேருக்கு 262.5) இந்த விகிதம், இங்கிலாந்து மற்றும் வேல்ஸ்-ஐ விட (ஒரு லட்சம் பேருக்கு 220) அதிகமாக உள்ளது என அந்த நாடுகளின் சமீபத்திய தரவுகள் கூறுகின்றன.

2022ம் ஆண்டு தரவுகளின் படி ஒரு லட்சம் பேருக்கு 300 வாகனங்கள் என்ற அமெரிக்காவின் எண்ணிக்கையுடன் இது நெருக்கமாக உள்ளது.

பெருந்தொற்று காரணமாக உலகளவில் கார்களுக்கு எழுந்த பற்றாக்குறை காரணமாக, புதிய மற்றும் ஏற்கெனவே பயன்படுத்திய வாகனங்களுக்கான தேவை அதிகரித்ததும் இந்த உயர்வுக்குக் காரணமாக உள்ளது.

சில கார்களுக்கு சர்வதேச அளவில் பெரிய சந்தை இருப்பதாகவும் ஒருங்கமைந்த குற்ற குழுக்களுக்கு வாகன திருட்டு முக்கிய வருமான ஆதாரமாக இருப்பதாகவும் கனடா ஆட்டோமொபைல் சங்கத்தின் அரசாங்க உறவுகள் இயக்குநர் எலியட் சில்வர்ஸ்டெயின் கூறுகிறார்.

கனடா துறைமுகங்கள் இயங்கும் விதத்தினாலும் மற்ற நாடுகளை விட கனடா இத்தகைய திருட்டு சம்பவங்களால் பாதிக்கப்படுவதாக அவர் கூறுகிறார்.

துறைமுக அமைப்புகளில் நாட்டைவிட்டு என்ன வெளியே செல்கின்றது என்பதைவிட நாட்டுக்குள் என்ன வருகிறது என்பதற்கே அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது,” எனக்கூறும் அவர், துறைமுகங்களில் கண்டெயினர்களில் வாகனங்கள் ஏற்றப்பட்ட பின்னர் அதை அடைவது கடினமாகிவிடுகிறது.

 
கார் திருட்டின் தலைநகரமாக கனடா மாறியது எப்படி?

பட மூலாதாரம்,AFP VIA GETTY IMAGES

படக்குறிப்பு,திருடப்படும் வாகனங்கள் பெரும்பாலும் மாண்ட்ரியல் போன்ற துறைமுகங்கள் வாயிலாக வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுகின்றன.

பிரச்னை என்ன?

திருடப்பட்ட சில கார்களை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

கடந்தாண்டு அக்டோபர் மாதம் டொரண்டோ காவல்துறை அறிவித்த 11 மாத விசாரணையில், சுமார் 60 மில்லியன் கனடா டாலர்கள் (சுமார் ரூ.367 கோடி) மதிப்பிலான, 1,080 வாகனங்கள் மீட்கப்பட்டன. 550க்கும் அதிகமான குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.

டிசம்பர் மத்தியிலிருந்து மார்ச் இறுதிவரை எல்லை போலீசார் மற்றும் காவல்துறை அதிகாரிகள், மாண்ட்ரியல் துறைமுகத்தில் 400 கண்டெயினர்களை சோதித்த நிலையில் அங்கிருந்து திருடப்பட்ட சுமார் 600 வாகனங்களை மீட்டனர்.

துறைமுகத்தில் கையாளப்படும் சரக்குகளின் அளவை வைத்துப் பார்க்கும்போது இத்தகைய நடவடிக்கைகள் கடினமானவை என நிபுணர்கள் கூறுகின்றனர்.

2023-ஆம் ஆண்டில் மட்டும் மாண்ட்ரியல் துறைமுகத்தில் 17 லட்சம் கண்டெயினர்கள் இடம்பெயர்ந்துள்ளன.

பல சம்பவங்களில் கண்டெயினர்களை சோதனையிட துறைமுக பணியாளர்களுக்கும் அதிகாரம் இல்லை. மேலும், சுங்கத்துறையால் கட்டுப்படுத்தப்படும் பகுதிகளில் மட்டுமே எல்லை அதிகாரிகள் வாரண்ட் இல்லாமல் கண்டெயினரை திறக்க முடியும்.

அதேசமயம், கனடா எல்லை சேவை முகமை (CBSA) நீண்டகாலமாக ஆள்பற்றாக்குறையால் போராடிவருவதாக, அந்த அமைப்பின் சங்கம் அரசாங்கத்திற்கு கடந்த ஏப்ரல் மாதம் அளித்த அறிக்கையில் தெரியவந்துள்ளது.

பழைய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதும் பிரச்னையாக உள்ளது.

 

பலனளிக்காத பாதுகாப்பு முயற்சிகள்

கார் திருட்டின் தலைநகரமாக கனடா மாறியது எப்படி?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,நியூஜெர்சியில் உள்ள நீவார்க் துறைமுகம் (கோப்புப்படம்)

கார் திருட்டுகளால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மற்றொரு ஒண்டாரியோ நகரமான பிராம்ப்டன் நகரத்தின் மேயர் பேட்ரிக் பிரௌன், அமெரிக்கா மற்றும் கனடாவுக்கு இடையில் துறைமுக சோதனை உத்திகளை ஒப்பிடுவதற்காக, நியூஜெர்சியில் உள்ள நீவார்க் துறைமுகத்தின் கண்டெயினர் முனையத்தைப் பார்வையிட்டார்.

அமெரிக்க அதிகாரிகளிடம் ஸ்கேனர்கள் உள்ளன. அவர்களால் சரக்குகளை அளவிட முடிகிறது. உள்ளூர் சட்ட அமைப்புகளுடன் நெருக்கமாக அவர்கள் பணியாற்றுகின்றனர்” என, அவர் நேஷனல் போஸ்ட் செய்தித்தாளிடம் கூறினார்.

இவற்றை நாங்கள் கனடாவில் செய்வதில்லை,” என்றார் அவர்.

கண்டெயினர்களை சோதிப்பதற்காக சிபிஎஸ்ஏ-வை வலுவூட்ட நாங்கள் பல லட்சங்கள் முதலீடு செய்ய உள்ளதாக கனடா அரசாங்கம் தெரிவித்தது. வாகனங்கள் திருட்டை தடுக்க காவல்துறையினருக்கும் கூடுதல் பணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால், வாகன உற்பத்தியாளர்கள் தான் இவ்விவகாரத்தில் புரியாத புதிராக உள்ளதாக, சில்வர்ஸ்டெயின் நம்புகிறார்.

வாகனங்களை மீட்பது குறித்து எல்லோரும் பேசுகின்றனர். ஆனால், வாகனங்களை திருட முடியாத அளவுக்கு தயாரிப்பது குறித்து நாம் ஏன் முதலில் பேசவில்லை”, என்கிறார் அவர்.

இதனிடையே, லோகன் லாஃபிரெனியெர் போன்ற கார் உரிமையாளர்கள், தங்கள் வாகனங்களை பாதுகாப்பாக வைப்பதற்காக போராடிவருகின்றனர்.

அவருடைய ரேம் ரெபெல் டிரக் திருடப்பட்ட பின்னர், டொயோட்டோ டுண்ட்ரா அந்த இடத்தை நிரப்பியது. இதனை தன்னுடைய “கனவு டிரக்” என அவர் கூறுகிறார்.

காரை திருடர்கள் எளிதாக இயக்க முடியாத வகையில் பாதுகாப்பு கருவியை (எஞ்சின் இம்மொபைலைசர்) பொருத்தியுள்ளார். மேலும், கார் திருடப்பட்டால் அதனை கண்டறிய காரில் டிராக்கரையும் பொருத்தியுள்ளார். மேலும், ஸ்டியரிங்கில் லாக் ஒன்றையும் இணைத்துள்ளார்.

திருடர்கள் ஊக்கம் இழக்காதவர்கள். அவருடைய டுண்ட்ரா காரையும் திருட இருவர் வந்துள்ளனர். அவர்களுக்கு இம்முறை கடினமாக இருந்தது, எனினும் பின் கண்ணாடி வழியாக உள்ளே சென்றனர்.

இதனால் நடந்த சலசலப்பில் எழுந்த லாஃபிரெனியெர் 911-க்கு (உதவி எண்) அழைத்தார். ஆனால் போலீசார் வருவதற்கு நான்கு நிமிடங்களில் அவர்களால் தப்பிக்க முடிந்தது.

அவருடைய புதிய டிரக்கை பழுதுநீக்கம் செய்து பின்னர் விற்றுவிட்டார்.

இந்த சம்பவத்தால், தான் “மனமுடைந்துவிட்டதாக” அவர் கூறினார்.

  • கருத்துக்கள உறவுகள்

 

 

66687f3510e80877ec789e52_Top%2010%20Most

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, nunavilan said:

 

 

66687f3510e80877ec789e52_Top%2010%20Most

அப்பாடா,...

என்னுடைய வாகனம் எதுவும் இதற்குள் வரவில்லை. 

😁

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, nunavilan said:

 

 

66687f3510e80877ec789e52_Top%2010%20Most

இங்கே உள்ளூர் செய்திகளைப் பார்க்கும் போதும், இதே போன்ற பட்டியல் தான் கிடைக்கிறது. பணக்காரர்களின் வாகனங்களாகக் கருதப் படும், லாண்ட்றோவர், ரேஞ் றோவர், பென்ஸ் ஆகியவை தான் அதிகம் திருடப் படுகின்றன. ஆயுத முனையில் கடத்தினால் ஒழிய இந்த நவீன வாகனங்களைத் திட்டமிட்டுத் தான் திருட முடியும். ஒரு பென்ஸ் காரை, அதனை ஒரு சிறு திருத்த வேலைக்காக விட்ட திருத்தகத்தில் அதனுடைய  திறப்பை குளோன் செய்து, பின்னர் வீட்டில் வந்து திருடிப் போயிருக்கிறார்கள்.

இன்னொரு பக்கம், இந்த கார் திருடர்களுக்கு "உடன் நீதி- swift justice" கிடைப்பது போன்ற சம்பவங்களும் நடந்து வருகின்றன. கார் திருட்டுக்கு பெயர் போன வாசிங்ரன் டி.சியில், போன வாரம் ஒரு சம்பவம். ஒரு உயர் நீதி மன்ற நீதிபதியின் வீட்டுக்கு வெளியே காவலுக்காக வாகனத்தில் US Marshals என்ற சமஷ்டிப் பாதுகாப்புப் பிரிவின் அதிகாரி காத்திருக்க, ஒரு கார் திருடன் வந்து கைத்துப்பாக்கியால் ஜன்னலில் தட்டியிருக்கிறார். காவல் அதிகாரி ஜன்னலைத் திறந்து சரமாரியாகச் சுட்டதில் வாய் முகமெல்லாம் குண்டு பாய்ந்து கார் திருடன் மருத்துவ மனையில்😂. இதே போன்ற இன்னொரு சம்பவம் சில மாதங்கள் முன்பு பைடனின் பேத்தியின் வீட்டின் அருகிலும் நடந்திருக்கிறது.  

  • கருத்துக்கள உறவுகள்

உலக ஏற்றத் தாழ்வின் விளைவுகள் இவை. தொடரும்....

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Justin said:

. ஒரு பென்ஸ் காரை, அதனை ஒரு சிறு திருத்த வேலைக்காக விட்ட திருத்தகத்தில் அதனுடைய  திறப்பை குளோன் செய்து, பின்னர் வீட்டில் வந்து திருடிப் போயிருக்கிறார்கள்.

பழைய காலத்தில் இருக்கிறார் தற்போதைய பென்ஸ் க்கு திறப்பு கிடையாது அது தெரியாமல் சும்மா அடித்து விடுகிறார் காசா பணமா ?😁

பழைய காரை திருடுவான்கள் என்பார் அந்த பென் சின் பெறுமதி 5௦௦ பவுனுக்கும் குறைவு லண்டனில் .

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு லண்டனிலும் களவுகள் உண்டு landரோவர் டபுள் காப்புறுதி கட்டனும்  அதை விட ஸ்டேரிங் மூடி வீல் லோக்  மூடியது மிகுந்த பாதுகாப்பு கொண்டது இரண்டாவது கோஸ்ட் அலாரம் சிஸ்ட்டம் நான் அதிகம் விரும்புவது இதுதான். மூன்றாவது retractable bollards இது சிலநேரம் வேலைக்கு ஆவாது மேலிருந்து தூக்கி போவார்கள் அதுக்கு தினமும்  நினைவில் வைத்து லாக் போட்டனோ போடலியா என்று குழம்ப வேண்டி வரும் நித்திரை வராது யாழில் தமிழ் அரசியல் மூன்று கால் விசருகளுடன் கொள்ளுபடனும்.அதற்காவே  கொஸ்ட் அலராம் மெயின் கி ஆண் பண்ணி 15 செக்கனுக்குள் உங்கள் பாஸ் வேர்ட் அக்டிவ் பண்ணனும் இல்லையென்றால் உடனே போலிஸ் உக்கு இடத்தின் வரை படம் சென்று விடும் .

  • கருத்துக்கள உறவுகள்

 

York-regionStolen-Vehicles-800x445.jpeg
 

ரொறோண்டோவில் வாகனத் திருட்டு: உங்கள் வாகனங்களைப் பாதுகாப்பது எப்படி?

 

கடந்த சில வருடங்களாக ரொரோண்டோ பெரும்பாகத்தில் வாகனத் திருட்டுகள் அதிகரித்து வருகின்றன. திருடப்படும் வாகனங்களாக அறியப்பட்ட பெரும்பாலான வாகனங்கள் உயர் ரக சொகுசு SUV, Truck வகைகளாக இருக்கின்றன. கோவிட் வருகையின் தாக்கத்தால் ஏற்பட்ட பொருளாதார மந்த நிலையைத் தொடர்ந்து வாகனங்களின் தயாரிப்புக்கான கணனி சிப்ஸ் (computer chips) பற்றாக்குறை காரணமாக புதிய வாகனங்களைத் தருவிப்பதிலும் பழைய வாகனங்களைத் திருத்துவதிலும் ஒன்ராறியோ மாகாண வாகன விற்பனையாளர்கள் நீண்டகால தாமதத்தை எதிர்கொள்கிறார்கள். சிப்ஸ் பற்றாக்குறை காரணமாக 2021 இற்குப் பின்னர் தயாரிக்கப்பட்ட பல வாகனங்களில் பழைய வாகனங்களிலுள்ளதைப் போல சொகுசு வசதிகள் செய்யப்படவில்லை. இதன் காரணமாக 2016 முதல் 2021 வருட காலத்தில் தயாரிக்கப்பட்ட வாகனங்கள் திருடர்களிடையே மிகப் பிரபலம் பெற்று வருகின்றன.

மே 2023 இல் ஒன்ராறியோ பீல் பிரதேசத்தில் பொலிசார் மேற்கொண்ட தேடுதல் வேட்டையின்போது $2.8 மில்லியன் பெறுமதியான 31 வாகனங்கள், $30,000 காசு, ஸ்கானர் கருவிகள், திறப்புகளை புரோகிராம் செய்யும் கருவிகள், 100 க்கும் மேற்பட்ட மாஸ்டர் திறப்புகள் ஆகியன மீட்கப்பட்டுள்ளன. இது சம்பந்தமாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

2022 இல் ஒன்ராறியோ மாகாணத்தில் அதிகம் திருடப்பட்ட வாகனங்கள்

எக்குயிட்டே (Équité) என்ற நிறுவனத்தின் ஆய்வின்படி 2022 இல் ஒன்ராறியோவில் அதிகம் திருடப்பட்டவையாகப் பின்வரும் வாகனங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

  1. 2016-2021 Lexus RX Series
  2. 2016-2021 Honda CR-V
  3. 2015-2020 Ford F-150 Series
  4. 2013-2019 Toyota Highlander
  5. 2016-2021 Honda Civic
  6. 2015-2021 Land Rover Range Rover Sport
  7. 2018-2021 Honda Accord
  8. 1999-2006 Chevrolet/GMC Silverado/Sierra 1500 Series
  9. 2009-2018 RAM 1500 Series
  10. 2016-2021 Toyota Tacoma

திருடர்களின் வித்தைகள்

http://veedu.com/wp-content/uploads/2023/08/Trailer2-scaled-e1692269382269-300x169-1.jpg
திருடர்களிடமிருந்து மீட்கப்பட்ட ஸ்கானர் கருவிகள் (Sorce: Peel Police)

பெரும்பாலான வாகனங்களின் திறப்புகள் எலெக்ட்றோனிக் வகைகளாலானவை. திறப்புக் கோர்வையில் கையடக்கமாகக் கொழுவிக்கொள்ளும் ஒரு சிறு கருவியிலிருக்கும் (Fob) பொத்தான்களை அழுத்தும்போது புறப்படும் மின்காந்த அலைகள் (transmitters) வாகனத்திலுள்ள இன்னுமொரு கருவியினால் (receivers) பெறப்பட்டு சரிபார்க்கப்பட்ட பின்னர் கதவுகள் திறக்கப்படுவதோடு எஞ்சினை ஸ்ரார்ட் பண்ணுவதற்கான ஆயத்தத்தையும் அது செய்துவிடுகிறது. இதற்காகவே இக் கருவிகளில் (fobs) உள்ளே சிறிய மின்கலம் வைக்கப்பட்டிருக்கிறது. இக்கலம் பலமிழந்து போகையில் இக்கருவியிலிருந்து புறப்படும் மின்காந்த அலைகளும் பலமிழந்து போவதால் சிலவேளைகளில் பூட்டுகள் திறக்கப்படுவதில்லை.

இக் கருவிகளை வாகன உரிமையாளர்கள் பொதுவாக வீட்டு வாசலினுள்ளே கொழுக்கியில் தொங்கவிடுவதோ அல்லது தட்டுகளில் வைப்பதோ வழக்கம். வீட்டுக்கு வெளியே தமக்கு விருப்பமான வாகனத்தைக் காணும் திருடர்கள் தம்மிடமுள்ள ஸ்கானர் கருவிகளால் ஸ்கான் செய்து பார்க்கும்போது வீட்டினுள்ளே வைக்கப்பட்டிருக்கும் திறப்புக் கருவிகள் என்ன அதிர்வெண்ணில் அல்லது சங்கேதக் குறிகளை (codes) எழுப்பி கதஹ்வைத் திறக்கின்றன என்பதை அறிந்துவிடுவார்கள். பின்னர் அவ்வெண்ணைத் தமது கருவியில் புரோகிராம் செய்து வாகனத்தைத் திறந்து அதைத் திருடிச் சென்று விடுவார்கள். இதற்கு அவர்களுக்குத் தேவையானது சில நிமிடங்கள் மட்டுமே.

தவிர்க்கும் வழிகள்

வாகனத் திருட்டைத் தவிர்க்க சில வழிகளைப் பொலிசார் பரிந்துரைக்கிறார்கள். அவற்றில் சில:

http://veedu.com/wp-content/uploads/2023/08/Faraday-Box.jpg
Faraday Box
  1. திறப்புக் கருவிகளை வாசலுக்கு அருகில் வைக்காதீர்கள். வாகனத்திலிருந்து எவ்வளவு தூரத்தில் அவை வைக்கப்படுகின்றனவோ அவ்வளவுக்கு மின்காந்த அலைகள் பலமிழந்து போகின்றன. அதே வேளை இம் மின்காந்த அலைகளைத் தடுக்கும் பெட்டிகளை மிக மலிவான விலையில் அமசோன் அல்லது பெஸ்ட் பை போன்ற இடங்களில் வாங்கலாம். Faraday Box என அழைக்கப்படும் இப்பெட்டிகள் மின்காந்த அலைகளைத் தடுக்கும் சுவர்களால் ஆக்கப்பட்டவை. சகல எலெக்ட்றோனிக் திறப்புக்களையும் இப்பெட்டிக்குள் போட்டு மூடிவிட்டால் திருடர்களால் ஸ்கான் செய்ய முடியாது.
  2. கராஜ் வசதி உள்ளவர்கள் வாகனத்தை உள்ளே வைத்துப் பூட்டிக்கொள்ளுங்கள். கராஜ் திறப்பும் எலெக்ட்றோனிக் வகையானால் அதைத் திறக்கும் மோட்டாருக்கு ஒரு தனி சுவிட்சைப் போட்டு உள்ளே போனதும் அதை ‘ஓஃப்’ செய்துகொள்ளலாம். அல்லது கராஜ்க்கு உள்ளே மெக்கானிக்கல் பூட்டு இருப்பின் அதைப் பூட்டிக் கொள்ளலாம்.
  3. வாகனங்களில் ஸ்டீயரிங் வளையத்துக்கு பூட்டுப் போடலாம். திருடர்கள் இதைக் கண்டவுடன் இதை வெட்டுவதற்கு அதிக நேரமெடுக்கும் என்பதால் திருட்டில் மினக்கெட மாட்டார்கள்.
  4. வாகனத்தின் ‘டேற்றா போர்ட்’ (Data Port) இற்கு ஒரு எலெட்றோனிக் பூட்டு ஒன்றைப் போடுங்கள். இதை ஒரு அதிகாரம் பெற்ற மெக்கானிக் ஒருவரே செய்யலாம். இப்பூட்டு திருடர்கள் எஞ்சினை ஸ்டார்ட் செய்ய முடியாமல் எஞ்சினின் டேற்றா போர்ட்டை மூடிவிடுகிறது (ignition immobilizer). Anti Theft System எனப்படும் இந்நடைமுறை பல புதிய வாகனங்களில் இணைக்கப்படுகிறது. மேற்குறிப்பிட்ட திருடப்படும் வாகனங்கள் இவ்வசதிகளைக் கொண்டிருக்கவில்லை.
  5. வீட்டுக்கு வெளியே சீ.சீ.ரி.வி. வீடியோ வசதிகளைச் செய்துகொள்ளுங்கள்.

https://veedu.com/ரொறோண்டோவில்-வாகனத்-திரு/

  • கருத்துக்கள உறவுகள்

 

How high-tech thieves steal cars in just minutes

 

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் ஒரு கார் களவு போகுதென்றால் அந்த காரை தயாரித்த நிறுவனத்தின் குறைபாடே காரணம் மேல் உள்ள லிஸ்ர்ரில் டெஸ்லா இல்லை .

அதே போல் புதிய மொடல் வெளிவந்த உடனே போட்டி கொம்பனிகள் மாத்திரம் அல்ல டார்க் வெப் கூட்டமும் அடித்து பிடித்து வாங்கி கொள்கிறார்கள் அதன் பின் அக்கு வேறு ஆணி வேறாக ரிவேர்ஸ் எஞ்சினியரிங் செய்து அதன் முக்கிய பலவீனத்தை எப்படி இலகுவாக அந்த புதிய மொடல் காரை திருடும் உத்திகளை அதே டார்க் வெப்பில் பிட் காயின்களுக்கு விற்கிறார்கள் இப்படி திருடர்கள் உலகம் அடுத்த கட்டத்துக்கு பாய்ந்து விட்டது நாங்கதான் இன்னும் சம்பந்தருக்கு ஏன் அஞ்சலி செய்யவில்லை என்று அடிபட்டு கொண்டு இருக்கிறம் 😀

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பெருமாள் said:

- - - நாங்கதான் இன்னும் சம்பந்தருக்கு ஏன் அஞ்சலி செய்யவில்லை என்று அடிபட்டு கொண்டு இருக்கிறம் 😀

அட… கார் களவு திரியிலும் சம்பந்தரா… 😂 🤣

  • கருத்துக்கள உறவுகள்
On 12/7/2024 at 15:34, தமிழ் சிறி said:

அட… கார் களவு திரியிலும் சம்பந்தரா… 😂 🤣

இதெல்லாம் ஒரு உவமைக்கே பாஸ் .😀

 

 

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு கொடுமை துரோகம் தமிழருக்கு  செய்த  அவரின் அடிவருடிகள் ஏன் அஞ்சலி புன்சலி செலுத்தவில்லை என்று கேட்ட கேள்வி இருக்கே அதுதான் என்னால் சகிக்க முடியலை .

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பெருமாள் said:

இதெல்லாம் ஒரு உவமைக்கே பாஸ் .😀

 

2 hours ago, பெருமாள் said:

இவ்வளவு கொடுமை துரோகம் தமிழருக்கு  செய்த  அவரின் அடிவருடிகள் ஏன் அஞ்சலி புன்சலி செலுத்தவில்லை என்று கேட்ட கேள்வி இருக்கே அதுதான் என்னால் சகிக்க முடியலை .

நீங்கள் சொன்னது நியாயம். அதில் மாற்றுக் கருத்து இல்லை. 
உங்களது குசும்பை ரசித்தேன் அம்புட்டுத்தான். 😂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.