Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
ஏமாற்றம்
---------------
எங்கே போனாலும் அங்கே நீங்கள் ஏமாற்றப்படுவீர்கள், அதனால் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என்று சொல்லிச் சொல்லியே எல்லோரும் வளர்க்கப்பட்டிருக்கின்றோம். கடைக்காரர்கள் ஏமாற்றுவார்கள், ஆட்டோக்காரர்கள் ஏமாற்றுவார்கள், வேலைக்கு வருபவர்கள் ஏமாற்றுவார்கள், இவ்வளவும் ஏன், நண்பர்களே ஒரு நாள் ஏமாற்றுவார்கள் என்று அவரவர்களின் பல சொந்த அனுபவங்களும், கதைகளும் எங்கள் எல்லோருக்கும் சொல்லப்பட்டிருக்கும்.
 
கடவுளே எங்களை ஏமாற்றி விடுவார் என்று சொல்லுகின்றவர்களும் இருக்கின்றார்கள். நாங்கள் கடவுளை ஏமாற்ற முயன்ற கதைகளை இதுவரை எவரும் வெளியில் சொல்லவில்லை.
 
மொழி தெரியாமல் ஏமாற்றப்படுவது மிகச் சாதாரணமாக உலகெங்கும் நடக்கும் ஒரு நிகழ்வு. சிங்கள மொழி தெரியாததால் கொழும்பில் ஏமாற்றப்பட்டவர்கள் எங்களில் பலர். பல வருடங்களின் முன் ஒரு தடவை நண்பன் ஒருவன் இடுப்பு பட்டி ஒன்றை அங்கு சந்தையில் வாங்கினான். பட்டியில் ஓட்டைகள் போட்டிருக்கப்பட்டிருக்கவில்லை. ஐந்து ஓட்டைகள் வேண்டும் என்றான். ஐந்து ஓட்டைகளை போட்டு விட்டு மேலதிகமாக ஐந்நூறு ரூபாய்கள் கொடு என்று அவர்கள் கட்டாயப்படுத்தி வாங்கிக் கொண்டனர். முன்னமே சொன்னோமே, சிங்களத்தில், என்றார்களாம்.
 
பல வருடங்களின் முன் சென்னை விமான நிலையத்தில் இறங்கி சென்னையில் இருக்கும் வேறோர் இடத்திற்கு, அண்ணா நகருக்கு, போக வேண்டி இருந்தது. என்னை ஏற்றிக் கொண்டு போக இருந்தவர் கடைசி நேரத்தில் வர முடியாத நிலை. ஒரு பிரச்சனையும் இல்லை, நானே சமாளித்துக் கொள்கின்றேன் என்று அங்கு இருக்கும் உறவினர்களுக்கு சொன்னேன். அவர்கள் நான் போக வேண்டிய இடத்திற்கு கார் வாடகை எவ்வளவு, எங்கே கார் எடுக்க வேண்டும், எங்கே கார் எடுக்கக் கூடாது என்று ஒரு நாலு பக்கங்கள் வரும் அளவிற்கு தகவல்கள் கொடுத்திருந்தனர். மிக முக்கியமாக, நான் வெளிநாட்டிலிருந்து அங்கு வந்திருப்பதாக சொல்லக் கூடாது என்றனர். இந்தியப் பணம் இங்கிருந்து கிளம்பும் போதே என்னிடம் கொடுக்கப்பட்டும் விட்டது. அப்பொழுது சென்னை விமான நிலையத்திலிருந்து அண்ணா நகருக்கு வாடகைக் கார் கட்டணம் அறுநூறு ரூபாய்கள்.
 
விமான நிலையத்தில் இறங்கி ஏற்கனவே எனக்கு சொல்லப்பட்டிருந்த இடத்திற்கு போனேன். சொல்லப்பட்டது போலவே பதிவு செய்த மற்றும் பதிவு செய்யாத கார்கள் அங்கு நின்றன. பதிவு செய்யும் இடத்திற்கு போய், அண்ணா நகருக்கு போக வேண்டும் என்றேன். ஒரு காரைக் காட்டி அதில் போங்கள் என்றனர். பற்றுச்சீட்டு கொடுங்கள் என்றேன். பற்றுச்சீட்டு கட்டாயமாக கேட்டு வாங்க வேண்டும் என்று எனக்கு சொல்லப்பட்டிருந்தது. பற்றுச் சீட்டு வேணும் என்றால், உள்ளே போய் அங்கிருக்கும் ஒரு இடத்தில் காத்திருக்கச் சொன்னார்கள். காத்துக்கொண்டே இருந்தேன். எவரும் வரவில்லை.
 
பின்னர் இது வேலைக்கு ஆகாது என்று வெளியில் வந்ததும் பதியாத கார்கள் ஓடுபவர்கள் என்னைச் சூழ்ந்து கொண்டனர். பல வித பேரங்கள். கடைசியாக ஒருவர் அறுநூறு ரூபாய்க்கு வருவதாக சொன்னார். ஃபோனில் படம் எடுத்தேன், கூப்பிட்டு உறவினர்களுக்கு சொன்னேன். அவர்களும் அந்த சாரதியுடன் கதைத்தனர்.
 
இலங்கையிலிருந்து அங்கு வருவதாக சாரதிக்கு சொன்னேன். அவர் கோயம்புத்தூர் சொந்த ஊர் என்றார். காதலித்து, இரு வீட்டார்களையும் எதிர்த்து மணம் முடித்ததாகவும், அப்படியே ஓடி வந்து சென்னையில் தங்கி விட்டதாகவும் சொன்னார். இந்தக் கார் அவருடைய சொந்தக் கார், வங்கிக் கடனில் வாங்கியது என்றார்.
 
சென்னைக்கு வந்து விடுங்கள் என்றார். கொஞ்சம் கொஞ்சமாக சம்பாதித்து ஒரு கார் வாங்கி விடலாம் என்றார். இலங்கையில் படும் கஷ்டம் எதுவும் இங்கு படத் தேவையில்லை என்றார். கலங்கின கண்களை மூடி, கைகளால் பொத்தினேன்.
 
ஏன் அவர்கள் வீட்டில் காதலுக்கு எதிர்த்தார்கள் என்று கேட்டேன். அவருடைய ஒரு கால் செயற்கை என்றார். அவர்களுக்கு ஒரு பெண் பிள்ளை. மிக நன்றாக படிக்கிறாராம் அவர். எப்படியும் ஒரு கலெக்டர் ஆக்கி விடுவோம் என்றார். முத்திரைகள் சேர்க்கின்றார் என்றார். நானும் சிறுவயதில் முத்திரைகள் சேர்த்திருக்கின்றேன். அப்படியே வெளிநாட்டு நாணயங்களும் சேர்க்கின்றாராம். இலங்கை முத்திரைகள், நாணயங்கள் எல்லாம் தங்கள் வீட்டில் இருக்கின்றது என்றார்.
 
இறங்கிய பின் அவரின் காலைக் கவனித்தேன். பேசியது போலவே அறுநூறு ரூபாய்கள் கொடுத்தேன். அப்படியே ஒரு இருபது டாலர்களும், அப்பொழுது ஒரு டாலரின் பெறுமதி அறுபது ரூபாய்கள், கொடுத்தேன். இது என்ன சார் என்று நின்றார். இது உங்களின் மகளுக்கு என்று சொல்லி விட்டு, அவரைப் பார்க்காமலேயே திரும்பி நடந்தேன். உண்மையில் பார்க்கும் துணிவு இருக்கவில்லை.  

Edited by ரசோதரன்

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, ரசோதரன் said:

இது உங்களின் மகளுக்கு என்று சொல்லி விட்டு, அவரைப் பார்க்காமலேயே திரும்பி நடந்தேன். உண்மையில் பார்க்கும் துணிவு இருக்கவில்லை.  

ஏமாறாமலே போய்ச் சேர்ந்துட்டீங்க.

தெரியாத இடங்களில் தமது பணத்தை செலவு செய்தே உதவுபவர்களும் இருக்கிறார்கள்.

ஆனால் இப்போ நம்மை ஏமாற்றும் இடமென்றால் நம்ம பிறந்த இடம் தான்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரசோதரன் said:

இறங்கிய பின் அவரின் காலைக் கவனித்தேன். பேசியது போலவே அறுநூறு ரூபாய்கள் கொடுத்தேன். அப்படியே ஒரு இருபது டாலர்களும், அப்பொழுது ஒரு டாலரின் பெறுமதி அறுபது ரூபாய்கள், கொடுத்தேன். இது என்ன சார் என்று நின்றார். இது உங்களின் மகளுக்கு என்று சொல்லி விட்டு, அவரைப் பார்க்காமலேயே திரும்பி நடந்தேன். உண்மையில் பார்க்கும் துணிவு இருக்கவில்லை.  

‘ஆற்றில் போட்டு குளத்தில் தேடுவது’  என்பது இப்பொழுது சற்றுப் புரிகிறது.

கில்லாடி சார் நீங்கள். ‘இட்டார் கெட்டார்’இல் விட்ட தவறை ‘ஏமாற்றம்’ இல் சரி செய்திருக்கிறீர்கள். 

ஏமாறாமல் மட்டுமல்ல ஏமாற்றாமலும் இருக்க வாய்ப்பில்லை. ஏதோ ஒரு வழியில் நாங்களும் அதை செய்து கொண்டுதான் இருக்கிறோம். சில சமயங்களில் எங்களை நாங்களே.  

சின்ன வயதில் படித்த ஈசாப் நீதிக்கதைகள் நினைவுக்கு வருகிறது. வரும் காலத்தில் உங்கள் குறுங்கதைகளைத் தொகுத்து ‘ரசோதரன் நீதிக்கதைகள்’ என யாராவது வெளியிட வாய்ப்பிருக்கிறது. (ஏமாந்திட்டீங்களா?)

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோரும் ஏமாற்றுவார்கள் என்றில்லை ......... 500 பேர் நிற்கும் வாடகை வண்டி நிலையத்தில் ஒரு 4 பேர் ஏமாற்றுபவர்கள் இருப்பார்கள் ....... என்ன .......எங்களது காலக்கொடுமை அந்த நாளில் ஒன்றுதான் நாங்கள் போகும் நேரம் வந்து நிக்கும்.......!

எங்களிடம் ராக்சி இருந்தது ........ அதில் அப்பப்ப சிலர் பொருட்கள் பார்சல்கள் தவறவிட்டு விடுவார்கள்.......அவற்றை சாரதிகள் பத்திரப்படுத்தி அன்றோ அடுத்தநாளோ உரிமையாளர் வந்து தேடும்போது கொடுத்து விடுவார்கள்........பக்கத்து சவாரி என்றால் மற்ற டாக்சி சாரதிகள் சொல்வார்கள் அவர் இப்ப வந்து விடுவார் கொஞ்சம் நில்லுங்கள் என்று சொல்லுவினம், தூர சவாரி என்றால் இன்னொரு நல்ல சாரதியிடம் குடுத்து விட்டு செல்வார்கள்......இப்படி ஒரு எழுதப்படாத விதி அன்று அவர்களுக்குள் இருந்தது .........! (இன்னொன்றும் இருக்கு இப்ப நேரமில்லை பிறகு).

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ஈழப்பிரியன் said:

ஏமாறாமலே போய்ச் சேர்ந்துட்டீங்க.

தெரியாத இடங்களில் தமது பணத்தை செலவு செய்தே உதவுபவர்களும் இருக்கிறார்கள்.

ஆனால் இப்போ நம்மை ஏமாற்றும் இடமென்றால் நம்ம பிறந்த இடம் தான்.

🤣....

ஏமாற்றப் போகின்றார்கள், நான் ஏமாறப் போகின்றேன் என்று நினைத்து 'தெளிவாக' இருக்க, கடைசியில் நான் தான் ஏமாற்றுக்காரன் ஆகி நின்றேன் அங்கே..........😌.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Kavi arunasalam said:

சின்ன வயதில் படித்த ஈசாப் நீதிக்கதைகள் நினைவுக்கு வருகிறது. வரும் காலத்தில் உங்கள் குறுங்கதைகளைத் தொகுத்து ‘ரசோதரன் நீதிக்கதைகள்’ என யாராவது வெளியிட வாய்ப்பிருக்கிறது. (ஏமாந்திட்டீங்களா?)

🤣...........

'களத்தில் வந்த அரைப்பக்க அனுபவங்கள்' என்ற தலைப்பு  தான் சரியாக இருக்கும். ஒரு எட்டு பத்து உறவுகள் சேர்ந்து தானே இவற்றை எழுதிக் கொண்டிருக்கின்றோம். உங்கள் சிலரின் பின்னூட்டங்கள் இல்லாமல் இந்த அனுபவக் கதைகள் ஒன்றுமேயில்லை..............👍

ஏமாந்தாலும் ஒரு கூட்டமாக ஏமாறுவம்..........🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, suvy said:

எல்லோரும் ஏமாற்றுவார்கள் என்றில்லை ......... 500 பேர் நிற்கும் வாடகை வண்டி நிலையத்தில் ஒரு 4 பேர் ஏமாற்றுபவர்கள் இருப்பார்கள் ....... என்ன .......எங்களது காலக்கொடுமை அந்த நாளில் ஒன்றுதான் நாங்கள் போகும் நேரம் வந்து நிக்கும்.......!

எங்களிடம் ராக்சி இருந்தது ........ அதில் அப்பப்ப சிலர் பொருட்கள் பார்சல்கள் தவறவிட்டு விடுவார்கள்.......அவற்றை சாரதிகள் பத்திரப்படுத்தி அன்றோ அடுத்தநாளோ உரிமையாளர் வந்து தேடும்போது கொடுத்து விடுவார்கள்........பக்கத்து சவாரி என்றால் மற்ற டாக்சி சாரதிகள் சொல்வார்கள் அவர் இப்ப வந்து விடுவார் கொஞ்சம் நில்லுங்கள் என்று சொல்லுவினம், தூர சவாரி என்றால் இன்னொரு நல்ல சாரதியிடம் குடுத்து விட்டு செல்வார்கள்......இப்படி ஒரு எழுதப்படாத விதி அன்று அவர்களுக்குள் இருந்தது .........! (இன்னொன்றும் இருக்கு இப்ப நேரமில்லை பிறகு).

❤️...........

இது தான் உண்மை, சுவி ஐயா. 

மனிதர்கள் அடிப்படையில் நல்லவர்கள் என்று நினைத்து ஒரு விடயத்தை ஆரம்பிக்க வேண்டுமா, அல்லது மனிதர்கள் தீயவர்கள் என்று நினைத்து ஆரம்பிக்க வேண்டுமா என்ற கேள்விக்கு மனிதர்கள் அடிப்படையில் நல்லவர்கள் என்பதே சரியான தெரிவாக இருக்கக்கூடும்..............

  • கருத்துக்கள உறவுகள்

 அறியாத தெரியாத இடங்களுக்கு போகும் போது ஒரு விழிப்புணர்வு  alert   இருக்க வேண்டியது கடடாயம் தானே . நல்ல சேவை கிடைக்கும்போது அமையறியாமலே கொடுக்கும் உணர்வு வரும்.

சின்ன வயதில் படித்த ஈசாப் நீதிக்கதைகள் நினைவுக்கு வருகிறது. வரும் காலத்தில் உங்கள் குறுங்கதைகளைத் தொகுத்து ‘ரசோதரன் நீதிக்கதைகள்’ என யாராவது வெளியிட வாய்ப்பிருக்கிறது. (ஏமாந்திட்டீங்களா?)... Kavi arunasalam

‘ரசோதரன் நீதிக்கதைகள்’    தொகுப்பை விரைவில் எதிர் பார்க்கிறோம்.   

  • கருத்துக்கள உறவுகள்

யாரையும் ஏமாற்றியதில்லை.
நானும் பெரியளவில் யாரிடமும் ஏமாறவில்லை. சங்கானையில் கடை வைத்திருக்கும்போது 2/3 தடவை கடைக்கு வந்த தம்பி ஒருவன் 500 ரூபாவிற்கு றீசார்ச் செய்துவிட்டு கொண்டுவந்து தருகிறேன் என்று போனவன் தான்! றீசார்ச் செய்த இலக்கத்திற்கு எடுத்தால் பதில் இல்லை.
கொழும்பில் கடை வைத்திருந்த போது றீசார்ச் செய்யும் சிறிய நொக்கியா போன்களை காகம் தூக்கிச் செல்வது போல் இரண்டு மூன்று தடவை தூக்கிக் கொண்டு ஓடிவிடுவார்கள். எம்மால் துரத்தி வர முடியாதென நன்கு தெரிந்தே செய்வார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிலாமதி said:

 அறியாத தெரியாத இடங்களுக்கு போகும் போது ஒரு விழிப்புணர்வு  alert   இருக்க வேண்டியது கடடாயம் தானே . நல்ல சேவை கிடைக்கும்போது அமையறியாமலே கொடுக்கும் உணர்வு வரும்.

👍.....

அந்தச் சிறுபெண் வெளிநாட்டு நாணயங்களை சேகரிப்பவர் என்பதால் அவர்களுக்கு சில அமெரிக்க நாணயங்களை கொடுக்க வேண்டும் என்றே நினைத்தேன், ஆனால் என்னிடம் நாணயங்கள் எதுவும் இருக்கவில்லை. நான் செய்ய நினைத்தது ஒரு பிராயச்சித்தமே..........

திட்டவட்டமாக தெரியாத ஒன்றிற்காக சந்திக்கும் எல்லா மனிதர்களையும் சந்தேகித்து கொண்டே இருப்பது எங்கள் வாழ்வில் ஒரு அன்றாட நிகழ்வாகிவிட்டது......... நாங்கள் எல்லோரும் சேர்ந்து இப்படியான ஒரு சூழலை உருவாக்கி விட்டோம் போல........  

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, ரசோதரன் said:

ஆனால் என்னிடம் நாணயங்கள் எதுவும் இருக்கவில்லை. நான் செய்ய நினைத்தது ஒரு பிராயச்சித்தமே..........

நாணயங்கள் இல்லாட்டி என்ன நீங்களே நாணயமாக  இருந்திருக்கிறீர்களே.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

சங்கானையில் கடை வைத்திருக்கும்போது 2/3 தடவை கடைக்கு வந்த தம்பி ஒருவன் 500 ரூபாவிற்கு றீசார்ச் செய்துவிட்டு கொண்டுவந்து தருகிறேன் என்று போனவன் தான்! றீசார்ச் செய்த இலக்கத்திற்கு எடுத்தால் பதில் இல்லை.

கொழும்பில் கடை வைத்திருந்த போது றீசார்ச் செய்யும் சிறிய நொக்கியா போன்களை காகம் தூக்கிச் செல்வது போல் இரண்டு மூன்று தடவை தூக்கிக் கொண்டு ஓடிவிடுவார்கள். எம்மால் துரத்தி வர முடியாதென நன்கு தெரிந்தே செய்வார்கள்.

இவர்களை என்னவென்று சொல்வது, ஏராளன். இந்த மாதிரியான சில செயல்கள் தான் ஒட்டுமொத்த நம்பிக்கையையும் இல்லாமல் செய்கின்றன..........😌

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

யாரையும் ஏமாற்றியதில்லை.
நானும் பெரியளவில் யாரிடமும் ஏமாறவில்லை. சங்கானையில் கடை வைத்திருக்கும்போது 2/3 தடவை கடைக்கு வந்த தம்பி ஒருவன் 500 ரூபாவிற்கு றீசார்ச் செய்துவிட்டு கொண்டுவந்து தருகிறேன் என்று போனவன் தான்! றீசார்ச் செய்த இலக்கத்திற்கு எடுத்தால் பதில் இல்லை.
கொழும்பில் கடை வைத்திருந்த போது றீசார்ச் செய்யும் சிறிய நொக்கியா போன்களை காகம் தூக்கிச் செல்வது போல் இரண்டு மூன்று தடவை தூக்கிக் கொண்டு ஓடிவிடுவார்கள். எம்மால் துரத்தி வர முடியாதென நன்கு தெரிந்தே செய்வார்கள்.

ஏராளன் இங்கு சில்லறை வியாபாரம் மதுக்கடை வைத்திருப்பவர்களின் கதைகளைக் கேட்டால் 

இரத்த நரம்புகள் வெடிக்கும்.அந்தளவுக்கு களவு.கண்ணுக்கு முன்பே பொருள்களை தூக்கிக் கொண்டோடுவார்கள்.

இது திரும்ப திரும்ப நடக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ரசோதரன் said:

இவர்களை என்னவென்று சொல்வது, ஏராளன். இந்த மாதிரியான சில செயல்கள் தான் ஒட்டுமொத்த நம்பிக்கையையும் இல்லாமல் செய்கின்றன..........😌

உள்ளூரில் ஓரளவு ஆட்களை விசாரித்து உறுதிப்படுத்தலாம் அண்ணை. புதிய இடங்களில் அறிவு சொல்வதை விட மனம் இரங்கினால் செய்துவிட வேண்டியது தான்.

நண்பர் ஒருவர் கடன் தொகை கூடி(வட்டி குட்டி போட்டு) தற்கொலை செய்யும் நிலையில் இருந்தார். கனடிய நண்பன் ஒருவன் பல இலட்சம் கொடுத்து உதவியதோடு பகுதி பகுதியாகத் தருமாறு கூறி இருந்தான். 3 ஆண்டுகள் ஆகியும் ஒரு ரூபா கூட திருப்பி வழங்கவில்லை.

இதே நண்பரின் நிலையை அறிந்து வேறு நண்பர்களிடம் அவர் பேசிய காணொளியை தனிப்படப் பகிரந்திருந்தேன். அவர்களும் உதவி இருக்கிறார்கள், ஆனால் இவர் எனக்கு சொல்லவில்லை. சற்று வருத்தமாக இருந்தாலும் அவருடைய நிலை இப்போது நன்றாகிவிட்டதை நினைத்து நிம்மதி.

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, ரசோதரன் said:

இது என் வாழ்வின் ஏமாற்றம் 

https://www.facebook.com/groups/978753388866632/posts/8131844686890764/?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, kandiah Thillaivinayagalingam said:

கண் கலங்க வைத்து விட்டீர்கள், தில்லை ஐயா...........

'கடவுளே......' என்று சொல்வதை விட வேறு என்ன சொல்வதென்றும் எனக்குத் தெரியவில்லை....🙏.

Edited by ரசோதரன்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

நாணயங்கள் இல்லாட்டி என்ன நீங்களே நாணயமாக  இருந்திருக்கிறீர்களே.

இது எந்த நாட்டு நாணயமாக இருக்கும்..யோசித்துக்கொண்டே இருக்கின்றேன்..அடுத்த குறும்கதை வரும்வரை...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, alvayan said:

இது எந்த நாட்டு நாணயமாக இருக்கும்..யோசித்துக்கொண்டே இருக்கின்றேன்..அடுத்த குறும்கதை வரும்வரை...

🤣......

வீட்டில் இரு பிள்ளைகளும் சிறுவர்களாக இருந்த நாட்களில் மத்தியானம் சாப்பிட்டுக் கொண்டே இரவுக்கு என்ன சாப்பாடு என்று தாயைக் கேட்பார்கள். இனித்தான் யோசிக்க வேண்டும் என்று அவரும் சொல்லுவார். இப்ப என்னுடைய நிலையும் கிட்டத்தட்ட அப்படித்தான், 'இனித்தான் யோசிக்க வேண்டும்' .........🤣.

நான் தான் ஆரம்பிக்கின்றேன் என்றாலும், உண்மையில் இங்கு களத்தில் உள்ள சிலரும் சேர்ந்து தான் இவை எழுதப்பட்டுக் கொண்டிருக்கின்றது............🙏.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, kandiah Thillaivinayagalingam said:

இது என் வாழ்வின் ஏமாற்றம் 

https://www.facebook.com/groups/978753388866632/posts/8131844686890764/?

மிகத் துயரமானது.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, kandiah Thillaivinayagalingam said:

மீள முடியாத ஏமாற்றம்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, kandiah Thillaivinayagalingam said:

மறக்க முடியாத தருணம். நினைவில் இருந்து அகற்றுவது கடினமானது. அது தான் மனதை திசை திருப்ப எழுதுகிறீர்கள் என நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, kandiah Thillaivinayagalingam said:

மிகவும் துன்பமான சம்பவம்........காலம் எல்லாவற்றையும் மறக்கடிக்கும் ஆனால் காலமும் தோற்றுப் போகும்படி  சில நினைவுகள் என்றும் வாழ்வில் நீங்காதிருக்கும்.......! 

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோருக்கும் நன்றிகள்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.