Jump to content

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் 2024 - செய்திகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கமலா ஹாரிஸ் முன்னிலை; புதிய கருத்துக் கணிப்புகளில் வெளியான தகவல்

kamala-harris-trump.jpg

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், புதிதாக வெளியான கருத்துக் கணிப்புகளில் ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் முன்னிலையில் உள்ளார். குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் பின்னடைவு கண்டுள்ளார்.

கடந்த ஜூலை இறுதியில் வெளியான தேர்தல் கருத்துக் கணிப்புகளில் கமலா ஹாரிஸுக்கான ஆதரவு அதிகமாக இருந்தது. ட்ரம்பைவிட அவருக்கு கூடுதலாக 3 சதவீதம் பேர் ஆதரவு அளித்தனர். ஆனால், செப்டம்பர் மாதத்துக்குப் பிறகு அவருக்கான ஆதரவு சற்று குறையத் தொடங்கியது. கடந்த அக்டோபரில் வெளியான பெரும்பாலான கருத்துக் கணிப்புகளில் ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலாவுக்கு 44 சதவீதம் பேரும், குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு ட்ரம்புக்கு 43 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்தனர். இருவருக்குமான இடைவெளி ஒரு சதவீதமாக இருந்தது.

கடந்த நவம்பர் 1-ம் திகதி ‘குக் பொலிடிக்கல் ரிப்போர்ட்’ வெளியிட்ட கருத்துக் கணிப்பில் கமலாவுக்கு 48.6%, ட்ரம்புக்கு 47.7% ஆதரவு கிடைத்தது. நவம்பர் 2-ம் தேதி ‘தி ஹில்’ நாளிதழ் வெளியிட்ட கருத்துக் கணிப்பில், கமலாவுக்கு 48.1%, ட்ரம்புக்கு 48.3% வாக்குகள் கிடைத்தன. இந்நிலையில், நேற்று (நவ.2) 538 என்ற அமை்பபு வெளியிட்ட கருத்துக் கணிப்பில் கமலாவுக்கு 47.9%, ட்ரம்புக்கு 46.9% வாக்குகள் கிடைத்தன. இவை உட்பட புதிதாக வெளியான பல்வேறு கருத்துக் கணிப்புகளில் கமலா ஹாரிஸ் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரத்துக்காக கமலா சார்பில் இதுவரை ரூ.6,640 கோடியும் ட்ரம்ப் சார்பில் ரூ.3,000 கோடியும் செலவிடப்பட்டிருக்கிறது என்பது கவனிக்கத்தக்கது.

மாகாணங்களில் நிலவரம் என்ன? – அமெரிக்காவில் 50 மாகாணங்கள் உள்ளன. இதில் அலபாமா, அலாஸ்கா, ஆர்கன்சா, புளோரிடோ, ஜார்ஜியா, ஐடஹோ, இன்டியானா, லோவா, லூசியானா, மிசிசிப்பி, மிசூரி, மொன்ட்டானா, நெப்ராஸ்கா, நெவாடா, நியூ ஹாம்சயர், நார்த் டகோடா, ஓகியோ, ஓக்லகோமா, சவுத் கரோலினா, சவுத் டகோடா, டென்னிசி, டெக்சாஸ், யூட்டா, வெர்மான்ட், வெர்ஜினியா, வெஸ்ட் வெர்ஜினியா, வயோமிங் ஆகிய மாகாணங்களில் குடியரசு கட்சி ஆட்சி நடத்தி வருகிறது.

அரிசோனா, கலிபோர்னியா, கொலராடோ, கனெடிகட், டெலவெயர், ஹவாய், இலினொய், கன்சாஸ், கென்டக்கி, மேய்ன், மேரிலேண்ட், மாசச்சூசெட்ஸ், மிச்சிகன், மினசோட்டா, நியூ ஜெர்சி, நியூ மெக்ஸிகோ, நியூயார்க், நார்த் கரோலினா, ஓரிகன், பென்சில்வேனியா, ரோட் தீவு, வாஷிங்டன், விஸ்கான்சின் ஆகிய மாகாணங்களில் ஜனநாயக கட்சி ஆட்சி நடத்தி வருகிறது.

அமெரிக்காவின் 50 மாகாணங்களில் அரிசோனா, ஜார்ஜியா, மிச்சிகன், நெவேடா, நார்த் கரோலினா, பென்சில்வேனியா, விஸ்கான்சின் ஆகியவை அணி மாறும் மாகாணங்கள் என்று அழைக்கப்படுகின்றன. அதிபர் தேர்தலின்போது இந்த 7 மாகாணங்களின் மக்கள் ஒருமுறை குடியரசு கட்சிக்கும், மறுமுறை ஜனநாயக கட்சிக்கும் ஆதரவாக வாக்களிக்கின்றனர்.

எனவே அமெரிக்க அதிபர் தேர்தலில் 7 மாகாணங்களின் முடிவுகள் முக்கியத்துவம் வாய்ந்தவையாக கருதப்படுகிறது. நவம்பர் 5-ம் தேதி (இந்திய நேரப்படி நவ.6) நடக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் இந்த மாகாணங்களின் தீர்ப்பின் அடிப்படையில் அமெரிக்காவின் புதிய அதிபர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

பிரச்சாரம்: ட்ரம்பின் Vs கமலா எப்படி? – தேர்தல் பிரச்சாரத்தின்போது ட்ரம்ப் அரசியல் நாகரிக வரம்புகளை அப்பட்டமாக மீறினார். இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலாவின் பெயரை மோசமாக விமர்சித்தார். இதெல்லாம் ஒரு பெயரா, இந்த பெயரை உச்சரிக்க முடியுமா என்று கிண்டல் செய்தார். அவர் இந்தியரா, ஆப்பிரிக்கரா என்று கேள்வி எழுப்பினார். கமலாவின் கணவர் டக்ளஸை மிகவும் மோசமாக விமர்சனம் செய்தார்.

ஆரம்ப காலத்தில் பிரபல ஓட்டல் ஒன்றில் பணியாற்றியதாக கமலா தனது பிரச்சாரத்தில் கூறினார். இதை கிண்டல் செய்யும் வகையில் குறிப்பிட்ட ஓட்டலில் சர்வராக நடித்த ட்ரம்ப், அங்கு இந்தியர் ஒருவருக்கு உணவு வகைகளை விநியோகம் செய்து தரக்குறைவான பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

“கமலாவுக்கு அறிவு கிடையாது, அவர் சோம்பேறி. அமெரிக்க அதிபராக அவருக்கு எந்த தகுதியும் கிடையாது. அவருக்கு எதிராக வாக்களியுங்கள். அப்போதுதான் அமெரிக்காவை காப்பாற்ற முடியும்” என்று அதிபர் ட்ரம்ப் தனது பிரச்சாரத்தில் தொடர்ந்து கூறி வருகிறார். அதோடு ஒவ்வொரு பிரச்சாரத்தின்போதும் வெள்ளையினவாதத்தை தூண்டும் வகையில் பேசுவதை அவர் வாடிக்கையாக கொண்டுள்ளார்.

“முன்னாள் அதிபர் ட்ரம்ப் சர்வாதிகாரி, நாஜி சிந்தனை கொண்டவர், மனித உரிமைகளை மீறுபவர், பெண் உரிமைகளை மதிக்காதவர், பலவீனமானவர்” என்று கமலா ஹாரிஸ் தனது பிரச்சாரங்களில் குற்றம் சாட்டி வருகிறார்.

மேலும் பொருளாதார வளர்ச்சி, வரி சீர்திருத்தம், கருக்கலைப்புக்கு ஆதரவு, எல்லை பாதுகாப்புக்கு முன்னுரிமை, உக்ரைனுக்கு ஆதரவு, இஸ்ரேல்- காசா பிரச்சினைக்கு தீர்வு காண இரு நாடுகள் கொள்கை, முதியோர், மாற்றுத்திறனாளிகள், ஏழைகளுக்கான மருத்துவ காப்பீடு விரிவாக்கம், குற்றங்களை கட்டுப்படுத்துவது உள்ளிட்டவை குறித்து கமலா பல்வேறு வாக்குறுதிகளை அளித்துள்ளார். இவை அவருக்கான ஆதரவை பெருகச் செய்துள்ளது கவனிக்கத்தக்கது.

 

https://akkinikkunchu.com/?p=297899

Link to comment
Share on other sites

  • Replies 98
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ஈழப்பிரியன் said:

ஜேர்மனி மட்டுமல்ல பல ஐரோப்பிய நாடுகள் ரம் வருவதை விரும்பவில்லை.

இத்தாலிக்கு ரம்ப் வருவதுதான் பிடிக்குமாம். 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

இத்தாலிக்கு ரம்ப் வருவதுதான் பிடிக்குமாம். 😂

இங்குள்ள கோடீஸ்வரர்கள் பலர் ரம் தோற்றால் கலவரஙடகள் உண்டாகலாம் என்றும் விவைவாசி குறைந்த பல ஐரோப்பிய நாடுகளான போர்த்துக்கல் இத்தாலி கிறீஸ் போன்ற நாடுகளில் போய் வாழ ஆரம்பித்து விட்டதாகவும் சொல்கிறார்கள்.

 

Millionaires are moving to these 5 European cities — and London doesn’t make the list

Millionaires are eyeing up European cities as they look to relocate — but London doesn’t make the top five, according to a new report.

Some 83% of high-net-worth individuals — defined as those earning $1 million or more — who are considering moving countries favor city living for the cultural and economic opportunities it provides, Knight Frank’s European Lifestyle Report, published on Wednesday, revealed. Meanwhile, 17% cited a preference for rural and resort locations for the natural scenery and slower lifestyle.

 

Real estate consultants Knight Frank surveyed 700 high-net-worth individuals from 11 different countries including the U.K. and U.S. about their view of the most attractive European cities and resorts. It ranked 10 cities and resorts based on the “European Lifestyle Monitor” which evaluated them on five key metrics: the economy, quality of life, environment, infrastructure and mobility, and human capital.

Paris topped the list and stood out in categories including economy and human capital, which includes factors like universities, corporate headquarters and cultural investment. However, London — often thought of as a hub for the super-rich — didn’t even make the top five, coming seventh.

Henley & Partners, a consultancy that tracks migration trends, says a record 128,000 millionaires are planning on relocating globally in 2024, compared with 120,000 in 2023, according to the Knight Frank report.

Additionally, 19% of ultra-high-net-worth individuals — those worth $30 million or more — are planning to apply for a second passport or gain citizenship in another country, Knight Frank found.

The main priorities for millionaires when relocating are security and privacy, followed by employment, tax, and education, according to the report. Gen Z and millennials tend to prioritize employment, while older generations are more preoccupied with taxation.

“Security and taxation are more critical for HNWIs [high-net-worth individuals] than visa concerns when relocating. With rising geopolitical volatility and privacy challenges in the digital age, this focus is unsurprising,” the report said.

“Geopolitical tensions and policy changes are driving HNWIs to relocate to more favourable jurisdictions,” Kate Everett-Allen, Knight Frank’s head of European residential research, said in the report. “The swift withdrawal of CHF 1.5 billion [Swiss francs, or $1.8 billion] from Credit Suisse in late 2022 by wealthy account holders highlighted how quickly affluent individuals can react to perceived financial risks.”

The Top 5

These are the top five European cities high-net-worth individuals are considering relocating to in 2024, according to the Knight Frank report:

  1. Paris
  2. Berlin
  3. Barcelona
  4. Vienna
  5. Madrid

It comes after a separate report by Henley & Partners showed the U.K. is no longer a millionaire haven, with Britain expected to lose at least 9,500 high-net-worth-individuals in 2024, up from 4,200 the previous year.

Henley noted that in the 1950s and early 2000s, large numbers of rich families from Europe, Africa, Asia and the Middle East were flocking to the U.K., but post-Brexit, between 2017 to 2023, the U.K. lost 16,500 millionaires to migration.

A major reason behind the exodus is the U.K. recently scrapping its ‘non-dom’ tax status which previously meant foreign citizens were not taxed on their international income — which was especially popular with billionaires.

Other reasons include potential increases to private school tuition fees and high taxation on real estate. These changes could see the U.K. millionaire population dwindle by 17% from 3,061,553 in 2023 to 2,542,464 in 2028, according to the UBS Global Wealth Report, which came out in June.

https://www.cnbc.com/2024/09/06/top-5-european-cities-millionaires-are-moving-to-and-none-are-london.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதல் 5 இடங்களுக்குள் இங்கிலாந்தும் வரவில்லை என்பதையும் கவனிக்கவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

இவர்  சொன்ன 10 தடவைகளில் 9 தடவைகள் ஜனாதிபதியாக தெரிவாகியுள்ளனர்.

ஒன்றே ஒன்று அல்கோர் தெரிவாகாமல் விட்டார்.

அது கூட உண்மையிலேயே அல்கோர் தான் வந்திருக்க வேண்டும்.புஸ்இன் தம்பி புளோரிடாவை ஆண்டதால் புஸ் ஜனாதிபதியானார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த அமெரிக்க அதிபர் ஆகப்போவது கமலாவா, டிரம்பா? - 10 காரணங்கள்

அமெரிக்க அதிபர் தேர்தல் 2024,  கமலா ஹாரிஸ், டொனால்ட் டிரம்ப்

பட மூலாதாரம்,GETTY IMAGES

  • எழுதியவர், பென் பெவிங்டன்
  • பதவி, பிபிசி செய்திகள், வாஷிங்க்டன்

அமெரிக்க அதிபர் தேர்தல் இன்று (நவம்பர் 5) நடைபெறவுள்ள நிலையில், தேசிய அளவிலும், முக்கியமான மாகாணங்களிலும் வெள்ளை மாளிகைக்கான போட்டி கடுமையாக உள்ளது.

சிறு வாக்கு வித்தியாசத்திலேயே வெற்றி தீர்மானிக்கப்பட உள்ளதாகக் கருதப்படும் சூழலில், டொனால்ட் டிரம்போ, கமலா ஹாரிஸோ இரண்டு அல்லது மூன்று புள்ளிகளில் முன்னேறி வெற்றியை உறுதி செய்யலாம் என்று பார்க்கப்படுகிறது.

முக்கியமான மாகாணங்களில் வாக்காளர்களை ஈர்க்கவும், அவர்களுக்கு வாக்களிக்க ஊக்கம் தரவும் தாங்கள் வலுவான காரணங்களைக் கொண்டிருப்பதாக இரண்டு வேட்பாளர்களும் நம்புகின்றனர்.

இந்நிலையில் அமெரிக்காவின் 130 ஆண்டுக்கால வரலாற்றில் முதன்முறையாக, தோல்வி அடைந்த அதிபர் வேட்பாளர் ஒருவர் மீண்டும் அதிபர் ஆவதற்குத் தேவையான வாய்ப்புகள் எந்த அளவுக்கு இருக்கிறது?

டிரம்ப் அதிபராகக் கூடும், ஏன் தெரியுமா?

1. அவர் அதிகாரத்தில் இல்லை

இந்தத் தேர்தலில் வாக்காளர்களின் முக்கியமான பிரச்னை பொருளாதாரம் தான். வேலைவாய்ப்பின்மை குறைவாக இருக்கும் சூழலில், பங்குச் சந்தையில் முன்னேற்றம் இருக்கின்ற நிலையில், விலைவாசி உயர்வைச் சமாளிக்க முடியவில்லை என்று அநேக அமெரிக்கர்கள் கூறுகின்றனர்.

கடந்த 1970களுக்குப் பிறகு இதுவரை இல்லாத வகையில், கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு அதிகரித்துள்ள பணவீக்கம், ‘நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட நீங்கள் நலமாக இருக்கிறீர்களா?’ என்று வாக்காளர்களை நோக்கிக் கேட்க டிரம்பிற்கு ஒரு வாய்ப்பை வழங்கியுள்ளது.

கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு அதிகரித்து வரும் விலைவாசி உயர்வைக் காரணம் காட்டி, 2024-ஆம் ஆண்டு உலகெங்கிலும் நடைபெற்ற தேர்தல்களில் பல தலைவர்களை மக்கள் அதிகாரத்தில் இருந்து தூக்கி எறிந்துள்ளனர். அமெரிக்க வாக்காளர்களும் மாற்றத்திற்காக ஏங்கிக் கொண்டிருக்கின்றனர்.

 

அமெரிக்கர்களில் கால்வாசி பேர் மட்டுமே அமெரிக்கா சென்று கொண்டிருக்கும் பாதையில் திருப்தி அடைந்துள்ளனர். மூன்றில் இரண்டு பங்கு மக்கள் பொருளாதாரம் மோசமாக உள்ளது என்ற கண்ணோட்டத்தைக் கொண்டுள்ளனர்.

கமலா ஹாரிஸ் மாற்றத்திற்கான வேட்பாளர் என்று தன்னை நிறுவ முயன்றார். ஆனால் துணை அதிபராக, மக்களின் அபிப்பிராயத்தைப் பெறாத அதிபரான ஜோ பைடனிடம் இருந்து விலகி நிற்க முயல்கிறார்.

2. டிரம்புக்கு குறையாத ஆதரவு

அமெரிக்க நாடாளுமன்றமான கேபிட்டலில் (Capitol) 2021-ஆம் ஆண்டு ஜனவரி 6-ஆம் தேதி நடைபெற்ற வன்முறை, தொடர்ச்சியான குற்றச்சாட்டுகள், குற்ற நிரூபனங்கள், ஆகியவை இருந்தும் கூட ஆண்டு முழுவதும் டிரம்புக்கான ஆதரவு 40% அல்லது அதற்கு மேல் இருந்தது.

ஜனநாயகக் கட்சியினரும், டிரம்ப் வேண்டாம் என்றும் கூறும் பழமைவாதிகளும், அவர் மீண்டும் அதிகாரத்திற்கு வரக்கூடாது என்று கூறுகிறார்கள். ஆனால் டிரம்ப் அரசியல் ஆதாயத்திற்காக பழிவாங்கப்பட்டேன் என்று கூறிய போது அவரின் ஆதரவாளர்கள் பலரும் அதனை ஒப்புக் கொண்டனர்.

‘அவர் இப்படிப்பட்டவர் தான்’ என்ற முன்முடிவு இல்லாத வாக்களர்களை டிரம்ப் வென்றுவிட்டால் போதும்.

 
அமெரிக்க அதிபர் தேர்தல் 2024: டொனால்ட் டிரம்ப்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, அமெரிக்க வாக்காளர்களும் மாற்றத்திற்காக ஏங்கிக் கொண்டிருக்கின்றனர்

3. சட்டத்திற்குப் புறம்பாக குடியேறுபவர்கள் பற்றிய எச்சரிக்கை

பொருளாதார நிலை மட்டுமின்றி, தேர்தல் பல நேரங்களில் உணர்ச்சிப்பூர்வமான முடிவுகளாலும் தீர்மானிக்கப்படுகிறது.

ஜனநாயகக் கட்சியினரைப் பொறுத்தவரை அது ‘கருக்கலைப்பு’ உரிமை பற்றியது.

டிரம்புக்கோ அந்த உணர்ச்சிப்பூர்வமான பிரச்னை ‘குடியேறிகள்’ தொடர்பானது.

பைடன் ஆட்சியில், எல்லையில் நுழைந்து வரும் குடியேறிகளின் எண்ணிக்கை வரலாறு காணாமல் உயர்ந்திருக்கும் நிலையில், சட்டவிரோதக் குடியேறிகளின் பிரச்னை எல்லையைத் தாண்டி வெகு தூரத்திற்கு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரத்தில் வாக்காளர்கள் டிரம்பையே அதிகம் நம்புகின்றனர் என்று கருத்துக்கணிப்பு காட்டுகிறது. மேலும், கடந்த தேர்தலோடு ஒப்பிடுகையில் தற்போது அவர் லத்தீன் அமெரிக்க மக்களுடன் சிறப்பாகப் பணியாற்றுகிறார் என்றும் மக்கள் கருதுவதாக அந்த கருத்துக்கணிப்பு கூறுகிறது.

 

4. கல்லூரி படிப்பை முடிக்காதவர்களின் ஆதரவு

சங்கப் பணியாளர்கள் போன்ற மறக்கப்பட்ட, கைவிடப்பட்ட வாக்காளர்களை டிரம்ப் அணுகிய விதம் அமெரிக்காவின் அரசியலை புரட்டிப்போட்டுள்ளது. இது பாரம்பரியமாக ஜனநாயகக் கட்சிக்கு ஆதரவு அளித்து வந்த பலரை குடியரசுக் கட்சியின் ஆதரவாளர்களாக மாற்றியிருக்கிறது. அமெரிக்கத் தொழிற்சாலைகளைப் பாதுகாக்கும் பொருட்டு சுங்கக் கட்டணங்களை விதிக்கும் அவரது கொள்கையும் இதற்கு உதவியிருக்கிறது.

முக்கியமான மாகாணங்களின், கிராமப்புற மற்றும் புறநகர் பகுதிகளில் டிரம்பிற்கு ஆதரவு அதிகரிக்கும் பட்சத்தில், கல்லூரி படிப்பை முடித்த குடியரசுக் கட்சியினர் அவரிடமிருந்து விலகியதன் இழப்பை ஈடுசெய்யும்.

 
அமெரிக்க அதிபர் தேர்தல் 2024: டொனால்ட் டிரம்ப்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, முன்னாள் அதிபரோ தன்னுடைய நிச்சமயற்ற தன்மையை தன்னுடைய பலமாக காண்கிறார்

5. நிலையற்ற உலகில் பலமான மனிதராகப் பார்க்கப்படும் டிரம்ப்

டிரம்பின் விமர்சகர்கள், சர்வாதிகார ஆட்சி நடத்தும் தலைவர்களுடன் அவர் கூட்டாகச் செயல்படுவது, அமெரிக்காவின் சர்வதேச உறவுகளை பாதிக்கிறது என்கின்றனர்.

டிரம்ப் ‘எதிர்பாராத வகையில் முடிவுகள் எடுக்கும் தனது குணத்தை’ தன்னுடைய பலமாகக் கருதுகிறார். மேலும், அவர் அதிபராக இருந்த காலத்தில் பெரிய போர்கள் ஏதும் ஆரம்பமாகவில்லை என்றும் குறிப்பிடுகிறார்.

கோடிக்கணக்கில் நிதியை யுக்ரேனுக்கும், இஸ்ரேலுக்கும் அமெரிக்கா அனுப்புகின்ற சூழலில், நிறைய அமெரிக்கர்கள் ஆத்திரம் அடைந்துள்ளனர். மேலும் அமெரிக்கா பைடனின் ஆட்சியின் கீழ் பலவீனமாக இருக்கிறது என்று கருதுகின்றனர்.

பல வாக்காளர்கள், குறிப்பாக ஆண்கள், கமலா ஹாரிஸைக் காட்டிலும் டிரம்ப் மிகவும் பலமானவர் என்று நம்புகின்றனர்.

அமெரிக்க அதிபர் தேர்தல் 2024: டொனால்ட் டிரம்ப் Vs கமலா ஹாரிஸ்

கமலா ஹாரிஸ் வெல்லக் கூடும், ஏன் தெரியுமா?

1. அவர் டிரம்ப் இல்லை

டிரம்பிடம் பல சாதகங்கள் இருப்பினும் கூட, அவர் மக்களைப் பிளவுபடுத்தும் நபராகவே இருக்கிறார்.

2020-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில், குடியரசுக் கட்சியின் வேட்பாளராக அதிக வாக்குகளைப் பெற்ற நபராக டிரம்ப் வரலாறு படைத்தார். ஆனாலும் அதனைவிட 70 லட்சம் வாக்காளர்கள் பைடனுக்கு ஆதரவு அளித்தனர்.

இந்த முறை, கமலா ஹாரிஸ், டிரம்ப் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் என்ன நடக்கும் என்ற அச்சத்தைப் பயன்படுத்துகிறார். அவரை ஒரு ‘பாசிஸ்ட்’ என்று அழைத்தார் கமலா ஹாரிஸ். மேலும், டிரம்ப் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக அவரை விமர்சித்தார்.

ஜூலை மாதம் ராய்ட்டர்ஸ் / இப்சோஸ் ( Reuters/Ipsos) நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகளில், அமெரிக்காவின் நிலைமை ‘கைமீறிப் போவதாக’, ஐந்தில் நான்கு அமெரிக்கர்கள் உணர்வதாகத் தெரிய வந்துள்ளது.

மிதமான குடியரசுக்கட்சி ஆதரவாளர்களும், சார்பற்ற நிலையைக் கொண்ட மக்களும் அமெரிக்காவின் நிலைத்தன்மையை மீட்டெடுக்கும் வேட்பாளராக தன்னைக் காண்பார்கள் என்று கமலா ஹாரிஸ் நம்பிக்கையுடன் இருக்கிறார்.

 
அமெரிக்க அதிபர் தேர்தல் 2024: கமலா ஹாரிஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, கமலா ஹாரிஸ், டிரம்ப் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் என்ன நடக்கும் என்ற அச்சத்தை பயன்படுத்துகிறார்.

2. அவர் பைடனும் இல்லை

ஜோ பைடன் தேர்தலில் இருந்து பின்வாங்கிய போது, ஜனநாயகக்கட்சி ஆதரவாளர்களே அக்கட்சி இந்தத் தேர்தலில் தோற்றுவிடும் என்ற முடிவுக்கு வந்துவிட்டார்கள்.

டிரம்பை வீழ்த்த வேண்டும் என்ற ஒற்றைக் கொள்கையில் இணைந்து, கட்சி உடனடியாக கமலா ஹாரிஸை வேட்பாளராகத் தேர்வு செய்தது.

ஆரம்ப காலத்தில் இருந்தே வேகமாகச் செயல்பட்ட அவர், மிக தெள்ளத்தெளிவான செய்தியை மக்களிடம் கூறி அவர்களுக்கு ஆர்வமூட்டினார்.

பைடனின் மோசமான கொள்கைகளுடன் கமலா ஹாரிஸை இணைத்து குடியரசுக் கட்சியினர் அவரை விமர்சித்து வந்தாலும் கூட, அவர்களது சில விமர்சனங்களை ஒன்றுமில்லாமல் ஆக்கிவிட்டார் ஹாரிஸ்.

மற்றொரு முக்கியமான விஷயம், வயது.

பைடன் மீண்டும் ஆட்சிக்கு வரத் தேவையான உடற்தகுதிகளைக் கொண்டிருக்கிறாரா என்ற கவலை வாக்காளர்களுக்கு இருந்தது என்பதை கருத்துக்கணிப்பு முடிவுகள் தொடர்ச்சியாக நிரூபித்தன.

ஆனால் இப்போது நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. தற்போது டிரம்ப் வெற்றி பெற்றால், வெள்ளை மாளிகைக்குச் செல்லும் மிகவும் வயதான அதிபராக இருப்பார்.

 

3. பெண்கள் உரிமைகளுக்கு முன்னுரிமை

பெண்களின் கருக்கலைப்பு உரிமையையும், கருக்கலைப்பிற்கான அரசியல் சாசன உரிமையையும் அமெரிக்காவின் உச்ச நீதிமன்றம் ரத்து செய்த பிறகு நடக்கும் முதல் அதிபர் தேர்தல் இதுவாகும்.

கருக்கலைப்பு உரிமைகள் மீது கவனம் செலுத்தும் வாக்காளர்கள் அனைவரும் ஹாரிஸுக்கு ஆதரவு அளித்துள்ளனர். கடந்த காலத்தில் நடைபெற்ற தேர்தல்களிலும் இதை நாம் பார்த்தோம். குறிப்பாக 2022-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல். இந்தப் பிரச்னை நிச்சயமாக முடிவுகளில் உண்மையான தாக்கத்தை ஏற்படுத்தும்.

இந்த முறை, அரிசோனா உள்பட வெற்றியை தீர்மானிக்கும் 10 மாகாணங்களில், கருக்கலைப்புச் சட்டங்களை எவ்வாறு ஒழுங்குமுறை செய்ய வேண்டும் என்று கேட்கப்பட்டது. இது ஹாரிஸுக்கு ஆதரவாக முடியக்கூடும்.

அமெரிக்காவின் முதல் பெண் அதிபர் என்ற வரலாற்றை உருவாக்கக் கூடும் என்பதும், பெண் வாக்காளர்கள் மத்தியில் கமலாவின் முக்கியத்துவத்தை பலப்படுத்தும் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.

 
அமெரிக்க அதிபர் தேர்தல் 2024: கமலா ஹாரிஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, இவரின் முயற்சி முதல் அமெரிக்க பெண் அதிபர் என்ற வரலாற்றை உருவாக்கக் கூடும்

4. கமலாவின் ஆதரவாளர்கள் நிச்சயம் வாக்குச்சாவடிக்கு வருவார்கள்

ஹாரிஸுக்கு ஆதரவு அளிக்கும் குழுக்களான, கல்லூரிப் படிப்பை முடித்தவர்கள், முதியவர்கள் ஆகியோர் நேரடியாக வந்து வாக்களிப்பார்கள்.

வாக்களிக்க அதிகமாக ஆர்வத்தைக் காட்டும் குழுக்கள் (high-turnout groups) மத்தியில் ஜனநாயகக் கட்சியினர் சிறப்பாகப் பணியாற்றியுள்ளனர்.

இளம் ஆண்கள் மற்றும் கல்லூரிப் படிப்பை முடிக்காத குழுக்கள் என்று குறைவான ஆர்வத்தை வெளிப்படுத்தும் குழுக்களின் ஆதரவை டிரம்ப் பெற இயலும்.

நியூயார்க் டைம்ஸ்/சியென்னா நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகள், பதிவு செய்த வாக்காளர்களில் டிரம்பிற்கான ஆதரவு அதிகமாக இருந்தாலும் 2020-ஆம் ஆண்டு தேர்தலில் அவர்கள் வாக்களிக்க வாக்குச்சாவடிகளுக்கு வரவில்லை, என்று தெரிவிக்கிறது.

இந்தச் சூழலில் இப்போதைய கேள்வி, இந்த முறையாவது அவர்கள் வாக்களிக்க வருவார்களா?

 

5. அதிக நன்கொடை- அதிக செலவு

அமெரிக்கத் தேர்தல் அதிகமான செலவீனங்களைக் கொண்டது என்பதில் எந்த ரகசியமும் இல்லை. ஆனால் 2024-ஆம் ஆண்டு தேர்தல் மிகப்பெரும் செலவில் நடத்தப்படும் அமெரிக்க அதிபர் தேர்தல் ஆகும்.

ஆனால், அதிகம் செலவு செய்யும் ஆற்றல் ஹாரிஸுக்கு உள்ளது. ஜூலை மாதம் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட காலத்தில் இருந்து அவர் அதிகமான நன்கொடைகளைப் பெற்றிருக்கிறார். இது 2023-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் குடியரசுக் கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட காலத்தில் இருந்து டிரம்புக்கு வந்த நன்கொடைகளைக் காட்டிலும் அதிகம் என்று கூறுகிறது ‘ஃபினாசியல் டைம்ஸ்’ பத்திரிகையின் சமீபத்திய கருத்துக்கணிப்பு.

மேலும், விளம்பரங்களுக்காக டிரம்பை விட இரண்டு மடங்கு கமலா ஹாரிஸ் செலவிட்டிருக்கிறார் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த கடுமையான போட்டியில் இந்த அம்சமும் தாக்கத்தை ஏற்படுத்தும். அரசியல் விளம்பரங்களின் வெள்ளத்தால் ஆடிப்போயிருக்கும் முக்கியமான மாகாணங்களின் (swing states) வாக்காளர்களின் கையில் இந்தத் தேர்தலின் முடிவு இருக்கிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க ஜனாதிபதி யார்?; தாய்லாந்து நீர் யானை கணிப்பு

உலகம் முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்படும் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் இன்று, செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. அந்த நாட்டின் நேரப்படி நவம்பர் 5-ம் திகதி காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்நிலையில் தாய்லாந்தில் ‘கா கியோவ்’ திறந்தவெளி உயிரியல் பூங்காவில் உள்ள நீர்யானை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறப்போவது யார் என கணித்த காட்சிகள் அடங்கிய வீடியோ வைரலாகி வருகிறது. அந்த நீர்யானை அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்டு ட்ரம்ப் வெற்றி பெறுவார் எனக் கணித்துள்ளது.

கவனம் ஈர்த்த ‘ஹிப்போ’ – மூ டெங் (Moo Deng) என்ற பெயரிடப்பட்ட அந்த நீர்யானையின் முன் பூங்கா பராமரிப்பாளர்கள் இரண்டு தர்பூசணிப் பழங்களை வைத்தனர். ஒன்றில் ட்ரம்ப் பெயரும், மற்றொன்றில் கமலா ஹாரிஸ் பெயரும் பொறிக்கப்பட்டிருந்தது. அந்த குட்டி நீர்யானை நேராக ட்ரம்ப் பெயர் பொறித்திருந்த தர்பூசணியை நோக்கிச் சென்று அதை புசித்தது. அருகிலிருந்த மற்றொரு பெரிய நீர் யானை கமலா ஹாரிஸ் பெயர் இருந்த தர்பூசணிப் பழத்தை உண்டது. இதன் மூலம் மூ டெங், அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ட்ரம்ப் தான் வெற்றி பெறுவார் எனக் கணித்ததாகக் கூறப்பட்டது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் இரு வேட்பாளர்களுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுவதாகக் கூறப்படுகிறது. அதேபோல், அணி மாறும் மாகாணங்களில் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பு ட்ரம்ப்புக்கு சாதகமாக அமைந்துள்ளது. இந்நிலையில், இந்த ‘ஹிப்போ ஜோசியம்’ வீடியோ கவனம் பெற்றுள்ளது.

இத்தகைய பரபரப்புக்கு மத்தியில் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல்  நடைபெறுகிறது. அந்த நாட்டின் நேரப்படி நவம்பர் 5-ம் திகதி காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. திங்கள்கிழமை நிலவரப்படி அமெரிக்க மக்கள் 70 லட்சத்து 80 ஆயிரம் பேர் ஏற்கெனவே தங்கள் வாக்குகளை செலுத்திவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த நாட்டில் தேர்தல் திகதி அறிவிக்கப்பட்ட பின்னர் வாக்காளர்கள் எப்போது வேண்டுமானாலும் தபால் மூலம் வாக்களிக்கலாம்.

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் முடிந்த உடன் அனைத்து மாகாணங்களிலும் வாக்கு எண்ணிக்கை தொடங்கும். பெரும்பாலும் அன்றிரவே புதிய அதிபர் யார் என்பது உறுதி செய்யப்படும். இழுபறி நீடித்தால் ஓரிரு நாட்களுக்குப் பிறகே முடிவு தெரியவரும். எனினும் ஜனவரி 6ஆம் திகதியே அமெரிக்க ஜனாதிபதி யார் என்பது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும். ஜனவரி 20 ஆம் அமெரிக்க ஜனாதிபதி  பதவியேற்பு விழா நடைபெறும்.

https://thinakkural.lk/article/311564

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க தேர்தலின் நேர்மைக்கு ரஸ்யாவினால் பெரும் ஆபத்து - புலனாய்வு அமைப்புகள்

image

ரஸ்யாவே அமெரிக்க தேர்தலிற்கான மிகப்பெரிய அச்சுறுத்தல் என அமெரிக்க புலனாய்வு அமைப்புகள் தெரிவித்துள்ளன.

அமெரிக்க புலனாய்வு அமைப்புகள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் அமெரிக்க தேர்தலின் நேர்மை தன்மைக்கு ரஸ்யாவே மிகப்பெரிய அச்சுறுத்தல் என தெரிவித்துள்ளன.

ரஸ்யாவுடன் தொடர்புடையவர்கள் தேர்தலின் பாரம்பரியத்திற்கு குறைமதிப்பீட்டினை ஏற்படுத்துவதற்காகவும், தேர்தல் நடைமுறை தொடர்பில் மக்களின் மனதில் அச்சத்தை ஏற்படுத்துவதற்காகவும், தேர்தல் காரணமாக அமெரிக்கர்கள் ஒருவருக்கு ஒருவர் மோதுகின்றனர் என தெரிவிப்பதற்காகவும் போலி வீடியோக்களையும்  கட்டுரைகளையும் வெளியிடுகின்றனர் என  புலனாய்வு அமைப்புகள் தெரிவித்துள்ளன.

https://www.virakesari.lk/article/197919

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

May be an image of text

தேர்தல் முடிவுகள் என்ன மாதிரி????    

ஈழப்பிரியன்.  கூட்டணி வாக்களித்து விட்டார்களா?? யாருக்கு போட்டார்கள்??? 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

தேர்தல் முடிவுகள் என்ன மாதிரி????    

ஈழப்பிரியன்.  கூட்டணி வாக்களித்து விட்டார்களா?? யாருக்கு போட்டார்கள்??? 😀

வாக்களிப்பு சில மணித்தியாலத்துக்கு முன்பு தான் ஆரம்பித்தது.
ஜேர்மன் செய்திகளின் படி... வாக்களித்து விட்டு வந்தவர்களிடம் கருத்துக் கணிப்பு நடத்திய போது  இருவரும் சம நிலையில் இருக்கின்றார்கள்.

எங்களுடைய ஆட்கள் நித்திரையாலை எழும்பி வாக்களிக்கப்  போக  மத்தியானம் தாண்டும். 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, தமிழ் சிறி said:

வாக்களிப்பு சில மணித்தியாலத்துக்கு முன்பு தான் ஆரம்பித்தது.
ஜேர்மன் செய்திகளின் படி... வாக்களித்து விட்டு வந்தவர்களிடம் கருத்துக் கணிப்பு நடத்திய போது  இருவரும் சம நிலையில் இருக்கின்றார்கள்.

எங்களுடைய ஆட்கள் நித்திரையாலை எழும்பி வாக்களிக்கப்  போக  மத்தியானம் தாண்டும். 🤣

முற்பகலில்.  தேனீர்  சாப்பாடு ஒன்றும் எடுப்பதில்லையா ??   🤣😂

ஒரு நாளைக்கு இரண்டு நேரம் மட்டுமே சாப்பாடு    நல்லா மிச்சம் பிடிக்கிறார்கள்.  🤣🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, Kandiah57 said:

முற்பகலில்.  தேனீர்  சாப்பாடு ஒன்றும் எடுப்பதில்லையா ??   🤣😂

ஒரு நாளைக்கு இரண்டு நேரம் மட்டுமே சாப்பாடு    நல்லா மிச்சம் பிடிக்கிறார்கள்.  🤣🙏

இரவு மூன்று மணிக்குத்தான் படுக்கப் போகின்றவர்கள் என்ற படியால்,
இரவு 7 மணிக்கு ஒரு சாப்பாடும், இரவு 2 மணிக்கு ஒரு சாப்பாடுமாக 
இருட்டில்... இரண்டு நேரம் சாப்பிடுகின்றார்கள்.  😂

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kandiah57 said:

தேர்தல் முடிவுகள் என்ன மாதிரி????    

ஈழப்பிரியன்.  கூட்டணி வாக்களித்து விட்டார்களா?? யாருக்கு போட்டார்கள்??? 😀

முதல்தடவையாக மனைவியும் நானும் தபால் மூலமாக வாக்களித்தோம்.

கிழக்குக் கரையோரங்களில் இரவு 8 -9 மணிக்கு முடிவுகள் வெளியாகத் தொடங்கிவிடும்.

மேற்குக்கரைகளில் உங்கள் நேரம் நாளைக் காலை 6 மணிக்கு தான் முடிவுகள் சொல்வார்கள்.

பல மாநிலங்களில் சமபலம் உள்ளதால் நீண்ட நேரமோ காலமோ எடுக்கலாம்.

  • Like 4
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

எங்களுடைய ஆட்கள் நித்திரையாலை எழும்பி வாக்களிக்கப்  போக  மத்தியானம் தாண்டும். 

வழமையில் எமது வீட்டிலிருந்து 100 யார் தூரத்திலுள்ள பாடசாலையில் 11 மணிபோல் வாக்குப் போட போவோம்.

காலை 6 மணிக்கே வாக்குச் சாவடிகள் திறந்திருக்கும்.வேலைக்குப் போகிறவர்கள் அவசரப்பட்டு 9 மணிவரை வாக்களிப்பார்கள்.அதன் பிற்பாடு 10-20 பேரே நிற்பார்கள்.

அதே மாதிரி பிற்பகல் 4-9 கொஞ்சம் கூடுதலானவர்கள் வாக்களிப்பார்கள்.

வழமையில்  Early Votes குறைவாகவே இருக்கும்.இந்த தடவை ஏறத்தாள 80 மில்லியன் மக்கள் வாக்களித்துள்ளனர்.
 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க அதிபர் தேர்தல் 2024: தொடங்கியது வாக்குப்பதிவு - சமீபத்திய தகவல்கள்

அமெரிக்க அதிபர் தேர்தல் 2024: தொடங்கியது வாக்குப்பதிவு - சமீபத்திய தகவல்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இன்று (நவம்பர் 5) அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற்று வருகிறது. அமெரிக்கர்களில், 8.1 கோடிக்கும் அதிகமான மக்கள் ஏற்கெனவே வாக்களித்துள்ளனர். ஆனால் இன்னும் ஏராளமான மக்கள் வாக்களிக்க உள்ளனர்.

ஓஹையோ, மேற்கு விர்ஜீனியா மற்றும் வட கரோலினாவில் இந்த முறை அதிக வாக்குப் பதிவு மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இதுவரை 11 அமெரிக்க மாகாணங்களில் வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது.

முடிவுகளைத் தீர்மானிக்கும் மாகாணங்களில் ஒன்றான வட கரோலினாவில் வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. சமீபத்திய ஹெலென் சூறாவளியால் இந்த மாகாணம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இந்தச் சூறாவளிக்குப் பலியானோரின் மொத்த எண்ணிக்கையில் பாதிப் பேர் வட கரோலினாவை சேர்ந்தவர்கள்.

கடந்த 2020இல், டொனால்ட் டிரம்ப் 2 சதவீதத்திற்கும் குறைவான வித்தியாசத்தில் இங்கு வெற்றி பெற்றார். 2022இல், அமெரிக்காவில் வாக்களிக்க சுமார் 16.1 கோடி மக்கள் பதிவு செய்திருந்தனர்.

 

தேர்தல் முடிவுகளைத் தீர்மானிக்கக்கூடிய மாகாணங்களில் ஒன்றான பென்சில்வேனியாவில் நடந்த ஒரு பேரணியில் வாக்காளர்களுக்கான தனது இறுதி பிரசார உரையை வழங்கினார் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ். தனது பிரசாரத்தை ‘ஆற்றல், நம்பிக்கை, மகிழ்ச்சியுடன்’ முடிக்க விரும்புவதாக அவர் கூறினார்.

குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் முடிவுகளைத் தீர்மானிக்க வல்ல மாகாணங்களில் மற்றொன்றான மிச்சிகனில் தனது பிரசாரத்தை முடித்துக் கொண்டார். அங்கு உரையாற்றியபோது, தனது எதிரியை (கமலா ஹாரிஸ்) ‘தீவிர இடதுசாரி பைத்தியம்’ என்று குற்றம் சாட்டினார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் 2024: தொடங்கியது வாக்குப்பதிவு - சமீபத்திய தகவல்கள்

பட மூலாதாரம்,IYAPPAN KOTHANDARAMAN

வெள்ளை மாளிகைக்கு வேலி

இந்நிலையில், அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்து வருவதைத் தொடர்ந்து, வெள்ளை மாளிகையைச் சுற்றி வேலிகள் அமைத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

துணை அதிபர் கமலா ஹாரிஸின் அதிகாரப்பூர்வ இல்லத்தின் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

00:41
p0k2hzt9.jpg.webp
காணொளிக் குறிப்பு,

தேர்தல் குறித்த போலி வீடியோக்களை ரஷ்யர்கள் வெளியிட்டனரா?

அரிசோனாவில் தேர்தல் மோசடிகள் நடந்ததாகக் கூறப்படும் போலி வீடியோவின் பின்னணியில் “ரஷ்ய நடிகர்கள்” இருப்பதாக அமெரிக்க உளவுத்துறை அமைப்புகள் கூறுகின்றன.

தற்போது இடைநிறுத்தப்பட்ட கிரெம்ளின் சார்பு எக்ஸ் பக்கத்தின் மூலம் இந்த வீடியோ வெளியிடப்பட்டது. அந்த வீடியோ 2 லட்சம் பார்வைகளைப் பெற்றிருந்தது.

அரிசோனா மாகாண செயலர் ஏட்ரியன் ஃபோன்டெஸின் உதவியாளர் எனக் கூறி, “டொனால்ட் டிரம்புக்கு எதிரான பெரிய மோசடிக்கான” ஆதாரங்களைத் தான் கண்டதாக அந்த வீடியோவில் ஒருவர் குற்றம் சாட்டினார்.

ஃபோன்டெஸ் இந்தக் கூற்றுகளை பொய் என்று நிராகரித்தார்.

வீடியோவில் உள்ள நபரின் முகம் பிக்சலேட்டாக உள்ளது மற்றும் அவரது குரல், ரோபோடிக்கான, சலிப்பான மற்றும் இயற்கைக்கு மாறான இடைநிறுத்தங்களைக் கொண்டுள்ளது. இது AI-உருவாக்கிய ஆடியோவுடன் இணக்கமான அடையாளங்களைக் காட்டுகிறது.

இந்த வீடியோவை ஃபவுண்டேஷன் டு பேட்டல் இன்ஜஸ்டிஸ் என்ற ரஷ்ய அறக்கட்டளையால் தயாரிக்கப்பட்டது. இது மறைந்த யெவ்ஜெனி பிரிகோஜினால் 2021இல் அமைக்கப்பட்டது. அவர் இறப்பதற்கு முன் அமெரிக்க தேர்தலில் குறுக்கீடு செய்ததற்காகத் தடை செய்யப்பட்டிருந்தார்.

இந்த அமைப்பின் உள்ளடக்கம் பெரும்பாலும் ரஷ்ய ஆதரவு நடவடிக்கையான 'ஸ்டார்ம்-1516' மூலம் பெரிதாக்கப்படுகிறது. இந்த அமைப்பு பல சந்தேகத்திற்குரிய தேர்தல் போலிகளுடனும் இணைக்கப்பட்டுள்ளது.

 

கருத்துக் கணிப்புகளில் முன்னிலை வகிப்பது யார்?

அமெரிக்க அதிபர் தேர்தல் 2024: தொடங்கியது வாக்குப்பதிவு - சமீபத்திய தகவல்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கமலா ஹாரிஸ் கடந்த ஜூலை மாதம் அதிபர் தேர்தல் பந்தயத்தில் நுழைந்ததில் இருந்து தேசிய கருத்துகணிப்புச் சராசரியில் டிரம்பை விட சிறிய அளவில் முன்னிலை வகிக்கிறார். மேலும் அவர் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். இரண்டு வேட்பாளர்களின் சமீபத்திய தேசியக் கருத்துகணிப்புச் சராசரிகள் கீழே காட்டப்பட்டுள்ளன. புள்ளிகள், அருகிலுள்ள முழு எண்ணுக்குத் திருத்தப்பட்டுள்ளன.

ஆனால், இந்தத் தேர்தலில், அதிக வாக்குகள் பெற்ற வேட்பாளர் தோல்வி அடைவதற்கும் கூட வாய்ப்பு உள்ளது.

ஏன்?

ஏனென்றால், அமெரிக்காவில் அதிபர் என்பவர் நேரடியாக வாக்காளர்களால் (பொது மக்களால்) தேர்வு செய்யப்படுவதில்லை. மாறாக ‘தேர்வாளர் குழு’ (Electoral college) என்ற குழுவால் தேர்ந்தெடுக்கப்படுவார்.

யாருக்கு வெற்றி என்பதை மக்களின் வாக்குகள் நேரடியாகத் தீர்மானிக்காது. இந்த வாக்குப்பதிவு, தேசிய அளவிலான போட்டி என்பதற்குப் பதிலாக மாகாண அளவிலான போட்டியாக இருக்கும்.

ஒரு வேட்பாளர் அதிபர் பதவிக்கு வெற்றிபெற, பெரும்பான்மையான தேர்வாளர் குழு வாக்குகளைப் (270 அல்லது அதற்கு மேற்பட்ட வாக்குகளை) பெற வேண்டும். வெற்றி பெற்றவரின் துணை அதிபர் வேட்பாளரே, துணை அதிபராக பொறுப்பேற்றுக் கொள்வார்.

கமலா ஹாரிஸ் தனது பிரசாரத்தின் முதல் சில வாரங்களில் தனது கருத்துகணிப்பு எண்ணிக்கையில் சற்று ஏற்றத்தைக் கண்டார். ஆகஸ்ட் மாத இறுதியில் சுமார் நான்கு சதவீத புள்ளிகளில் முன்னிலை பெற்றார்.

செப்டம்பர் 10ஆம் தேதி இரு வேட்பாளர்களுக்கிடையில் நடந்த அதிபர் தேர்தலுக்கான விவாதத்தை சுமார் 7 கோடி மக்கள் பார்வையிட்டனர். செப்டம்பர் மாதம் வரை இந்த எண்ணிக்கை நிலையானதாக இருந்தன.

கடந்த சில நாட்களாக அவர்களின் புள்ளிவிவரங்களின் இடைவெளி மிகவும் நெருணக்கமானதாக இருக்கிறது. கீழே உள்ள கருத்துக்கணிப்பு டிராக்கர் விளக்கப்படம், ஒவ்வொரு வேட்பாளருக்கும் கருத்துக்கணிப்பின் சராசரிகளைக் காட்டும் போக்குக் கோடுகளுடன் தனிப்பட்ட வாக்கெடுப்பு முடிவுகளைக் காட்டும் புள்ளிகள் இடம்பெற்றுள்ளன.

அமெரிக்க அதிபர் தேர்தல் 2024: தொடங்கியது வாக்குப்பதிவு - சமீபத்திய தகவல்கள்

பட மூலாதாரம்,IYAPPAN KOTHANDARAMAN

கமலா ஹாரிஸின் வெற்றிக்காக சிறப்பு பூஜை

கமலா ஹாரிஸின் வெற்றிக்காக, தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அவரது பூர்வீக கிராமமான துளசேந்திரபுரத்தில் இன்று அதிகாலை (நவம்பர் 5) சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டதாக பிபிசி செய்தியாளர் சாரதா தெரிவித்தார்.

கமலா ஹாரிஸின் தாய்வழி தாத்தாவின் சொந்த ஊரான திருவாரூர் மாவட்டம் மன்னார்குடிக்கு அருகே இருக்கும் துளசேந்திரபுரத்தில், தர்ம சாஸ்தா ஆலயத்தில் இந்தச் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

தர்மா சாஸ்தா கோவிலின் முன், ஊர் மக்கள் சார்பாக கமலா ஹாரிஸின் புகைப்படம் கொண்ட பேனர் வைக்கப்பட்டிருந்தது. காலையில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற வேண்டி கோவிலில் பால் அபிஷேகம் மற்றும் பன்னீர் அபிஷேகம் செய்யப்பட்டது. பிறகு துளசேந்திரபுரம் கவுன்சிலர் அருள்மொழி சுதாகரின் குடும்பத்தினர் சார்பாக அர்ச்சனை நடைபெற்றது.

 
துளசேந்திரபுரத்தில் சிறப்பு பூஜைகள்

பட மூலாதாரம்,ANI

படக்குறிப்பு, கமலா ஹாரிஸின் வெற்றிக்காக பூர்வீக கிராமமான துளசேந்திரபுரத்தில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன

இந்தச் சிறப்பு பூஜையின்போது, கமலா ஹாரிஸுக்கு தங்கள் ஆதரவை தெரிவிக்கும் வகையில், சென்னையில் வாழும் அமெரிக்கர்கள் இருவரும், பிரிட்டன் நாட்டை சேர்ந்த ஒருவரும் பங்கேற்றனர். அமெரிக்காவில் சியாட்டில் பகுதியை சேர்ந்த டெவோனி எவான்ஸ், இந்தத் தேர்தலில்தான் முன்கூட்டியே வாக்களித்துவிட்டு வந்ததாக பிபிசி தமிழ் செய்தியாளர் சாரதாவிடம் பேசும்போது தெரிவித்தார்.

"இந்தத் தேர்தல் மிகவும் கடினமாக இருந்தது. நான் வாக்களித்து விட்டேன். எங்கள் வேலை முடிந்தது. இப்போது கமலாவின் இந்த ஊருக்கு வருவது மிகுந்த மகிழ்ச்சியையும், அமைதியையும் தருகிறது" என்றார். அவர் கடந்த மூன்று ஆண்டுகளாக சென்னையில் வசித்து வருகிறார்.

‘கமலா ஃப்ரீக்கிங் ஹாரிஸ்’ (Kamala Freaking Harris) என்று எழுதிய டி-ஷர்டுகளை அவரும் அவரது நண்பர்கள் இருவரும் அணிந்திருந்தனர்.

கமலா ஹாரிஸின் குடும்பத்தினர் சார்பாக கோவிலுக்கு இந்த முறை யாரும் வரவில்லை என்றாலும், ஊர் மக்கள் சார்பாக கமலா ஹாரிஸுக்கு ஆதரவாக சிறப்பு பூஜை நடத்தியதாக துளசேந்திரபுரம் கவுன்சிலர் அருள்மொழி சுதாகர் தெரிவித்தார்.

அவர், "கமலா ஹாரிஸ் வெற்றி பெறுவது ஊர் மக்கள் அனைவருக்கும் முக்கியமானது. நாங்கள் அனைவரும் அவரது வெற்றிக்காக மகிழ்ச்சியுடன் காத்திருக்கிறோம்" என்றார்.

கமலா ஹாரிஸ், துளசேந்திரபுரம்
படக்குறிப்பு, டெவோனி எவான்ஸ் (இடதுபுறம் இருப்பவர்) இந்தத் தேர்தலில் முன்கூட்டியே வாக்களித்துவிட்டு வந்ததாக பிபிசியிடம் தெரிவித்தார்

ஏழு முக்கிய மாகாணங்களில் முந்துவது யார்?

அரிசோனா, ஜார்ஜியா, மிச்சிகன், நெவாடா, வட கரோலினா, பென்சில்வேனியா மற்றும் விஸ்கான்சின் ஆகியவை வெள்ளை மாளிகை யாருக்கு என்பதை தீர்மானிக்கும் முக்கியமான மாகாணங்கள்.

இரு கட்சிகளின் பிரசாரக் குழுக்களும் இந்த மாகாணங்களில் பிரசாரங்களை வேகப்படுத்தின. இந்த மாகாணங்களில் முந்துவது யார்?

இறுதி பிரசார உரையில் கமலா ஹாரிஸ் கூறியது என்ன?

இறுதி பிரசார உரையில் கமலா ஹாரிஸ் கூறியது என்ன?

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு, ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ்

கமலா ஹாரிஸ், 2024 அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான தனது இறுதி பிரசார உரையை பென்சில்வேனியா மாநிலத்தின் மிகப்பெரிய நகரமான பிலடெல்பியாவில் நிகழ்த்தியுள்ளார்.

‘நாட்டின் அனைத்து மூலைகளிலிருந்தும், அனைத்து தரப்பு மக்களையும் தனது பிரசாரம் ஒன்றிணைத்தது’ என்று பல வாரங்கள் தொடர்ந்த தனது பிரசார பயணத்தை அவர் விவரித்திருந்தார். அத்தகைய பிரசார பயணத்தின் முடிவாக தனது உரையை அவர் வழங்கியுள்ளார்.

இறுதி பிரசார உரையில் கமலா ஹாரிஸ் கூறியது என்ன?

பட மூலாதாரம்,IYAPPAN KOTHANDARAMAN

"நாம் ஏதோவொன்றைப் பெறுவதற்காக போராடிக் கொண்டிருக்கிறோம், எதற்கும் எதிராக அல்ல. நமது பிரசாரத்தை எவ்வாறு தொடங்கினோமோ, அதே உற்சாகத்துடனும், நம்பிக்கை உணர்வுடனும், மகிழ்ச்சியுடனும் முடிக்கிறோம்.” என்று கமலா ஹாரிஸ் கூறினார்.

இளம் மற்றும் புதிய வாக்காளர்களுக்கு அவர் ஒரு வழக்கமான வேண்டுகோளை விடுத்தார். "குறிப்பாக உங்களிடம் நான் சொல்கிறேன், நான் உங்கள் சக்தியைப் பார்க்கிறேன், உங்களைப் நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன்." என்றார்.

இன்றைய தேர்தலில் அவர் வெற்றி பெற வேண்டுமானால் அவருக்கு அதிக எண்ணிக்கையில் ஆதரவளிக்க இளம் வாக்காளர்கள் தேவை என்பதை துணை அதிபர் கமலா ஹாரிஸ் நன்றாகவே அறிவார்.

 
டிரம்ப்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, "நீங்கள் கமலாவுக்கு வாக்களித்தால், இன்னும் நான்கு ஆண்டுகள் துன்பம், தோல்வி மற்றும் பேரழிவு ஏற்படும்" என்று டிரம்ப் எச்சரித்தார்

இறுதி பிரசார உரையில் டிரம்ப் கூறியது என்ன?

டிரம்ப், மிச்சிகன் மாநிலத்தின் கிராண்ட் ராபிட்ஸில் உள்ள வான் ஆண்டெல் அரங்கத்தில், 2024 அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான தனது இறுதி பிரசார உரையை வழங்கினார். தனது பிரசார பயணத்தின் முக்கிய கருப்பொருளாக இருந்த பொருளாதாரம் மற்றும் குடியேற்றம் குறித்தே மீண்டும் டிரம்ப் வலியுறுத்தினார்.

ஒரு சட்ட அமலாக்க அதிகாரியை அல்லது ஒரு அமெரிக்க குடிமகனைக் கொல்லும் எந்தவொரு புலம்பெயர்ந்தவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்பது உட்பட அவரது சில தேர்தல் வாக்குறுதிகளை அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

முன்னாள் அதிபர் டிரம்ப், தனது உரையின் பெரும்பகுதியை கமலா ஹாரிஸ் மற்றும் ஜோ பைடனை விமர்சிப்பதிலும், கடந்த நான்கு ஆண்டுகளில் அவர்கள் செய்ததைக் குறித்து விமர்சிப்பதிலும் செலவிட்டார். ‘அமெரிக்கா எதிர்கொள்ளும் ஒவ்வொரு பிரச்னையையும் சரிசெய்வது’ என்ற தனது லட்சியத்தையும் அவர் மேற்கோள் காட்டி பேசினார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் 2024: தொடங்கியது வாக்குப்பதிவு - சமீபத்திய தகவல்கள்

பட மூலாதாரம்,IYAPPAN KOTHANDARAMAN

அமெரிக்க அதிபர் தேர்தல் 2024: தொடங்கியது வாக்குப்பதிவு - சமீபத்திய தகவல்கள்

பட மூலாதாரம்,IYAPPAN KOTHANDARAMAN

"விரைவில் ஒரு சிறந்த தேர்தல் முடிவை நாம் பெறப் போகிறோம் என்று நினைக்கிறேன். மிச்சிகனில் நாம் வெல்லப் போகிறோம் என்று நினைக்கிறேன்." என்று அவர் கூடியிருந்த ஆதரவாளர்களிடம் கூறினார்.

பேரணியின் முடிவில், டிரம்பின் பிள்ளைகள் அவருடன் மேடையில் தோன்றினர். மக்கள் அனைவரும் டிரம்புக்கு ஆதரவாக வாக்களிக்குமாறு அவர்கள் கோரிக்கை வைத்தனர்.

"இறுதியில், உங்கள் வாக்குகளால் நாங்கள் கமலா ஹாரிஸை விரட்டப் போகிறோம், அமெரிக்காவைக் காப்பாற்றப் போகிறோம். நாங்கள் வரிகளையும் பணவீக்கத்தையும் குறைப்போம், விலைவாசியைக் குறைப்போம், உங்கள் ஊதியங்களை உயர்த்துவோம். ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகளை அமெரிக்காவிற்கும் மிச்சிகனுக்கும் மீண்டும் கொண்டு வருவோம். அதில் பெரும்பாலானவை எனக்கு பிடித்த வார்த்தையைப் பயன்படுத்தும் - ‘வரி’" என்று டிரம்ப் உற்சாகமாக கூறினார்.

ரஷ்ய அதிபர் புதினுடன் டொனால்டு டிரம்ப் (கோப்புப் படம்)

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, ரஷ்ய அதிபர் புதினுடன் டொனால்டு டிரம்ப் (கோப்புப் படம்)

‘அமெரிக்க தேர்தலுக்கு ரஷ்யா மிகப்பெரிய அச்சுறுத்தல்'

அமெரிக்கப் புலனாய்வுச் சமூகம் (The US intelligence community) திங்களன்று வெளியிட்ட ஒரு கூட்டு அறிக்கையில் “அமெரிக்காவின் தேர்தல் ஒருமைப்பாட்டிற்கு ரஷ்யா மிகத் தீவிரமான ஒரு அச்சுறுத்தல்," என்று விவரித்துள்ளது.

இது தேசியப் புலனாய்வு இயக்குநர் அலுவலகம் (ODNI), ஃபெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன் (எஃப்.பி.ஐ - FBI) மற்றும் சைபர் செக்யூரிட்டி மற்றும் உள்கட்டமைப்பு பாதுகாப்பு நிறுவனம் (CISA) ஆகியவற்றால் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிக்கை.

"குறிப்பாக ரஷ்யாவுடன் தொடர்புடையவர்கள், தேர்தலின் சட்டபூர்வமான தன்மையை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதற்கும், தேர்தல் செயல்முறை குறித்து வாக்காளர்களிடையே அச்சத்தை ஏற்படுத்துவதற்கும், அரசியல் வேறுபாடுகள் காரணமாக அமெரிக்கர்கள் வன்முறையில் ஈடுபடுகிறார்கள் என பரப்புவதற்கும், வீடியோக்கள் மற்றும் போலி கட்டுரைகளை உருவாக்குவதாக,” புலனாய்வு சமூகம் கூறுகிறது.

 
முன்கூட்டியே வாக்களிக்கும் முறை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, முன்கூட்டியே வாக்களிக்கும் முறைபடி (Early voting) பதிவான வாக்குகளின் எண்ணிக்கையை 81,379,684

முன்கூட்டியே வாக்களித்த 8.1 கோடி அமெரிக்கர்கள்

அமெரிக்காவின் முன்கூட்டியே வாக்களிக்கும் முறைபடி (Early voting) பதிவான வாக்குகளின் எண்ணிக்கை 8.1 கோடியைத் தாண்டியுள்ளது என்று புளோரிடா பல்கலைக்கழக தேர்தல் ஆய்வகம் தெரிவித்துள்ளது.

இது மொத்த முன்கூட்டியே வாக்களிக்கும் முறைபடி (Early voting) பதிவான வாக்குகளின் எண்ணிக்கையை 81,379,684 என்று கூறுகிறது.

இதில், 44,402,375 பேர் (4.4 கோடி பேர்) நேரில் வாக்களித்துள்ளனர். 36,977,311 தபால் வாக்குகள் திருப்பி அனுப்பப்பட்டன

கடந்த அதிபர் தேர்தலில் (2020), கொரோனா பெருந்தொற்று பலரை நெரிசலான வாக்குச் சாவடிகளிலிருந்து விலக்கி வைத்தபோது, இந்த ஆண்டின் முன்கூட்டியே பதிவான வாக்குகள் என்பது 2020-இல் பதிவான 10.15 கோடி வாக்குகளை விட மிகவும் குறைவு. இருப்பினும், 2016 (4.72 கோடி) அல்லது 2012ஆம் ஆண்டில் (4.62 கோடி) முன்கூட்டியே பதிவான வாக்குகளை (Early voting) விட அதிகமாகும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Trump says he doesn’t think he needs to tell his supporters not to be violent if he loses.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ஈழப்பிரியன் said:

Trump says he doesn’t think he needs to tell his supporters not to be violent if he loses.

Because he has a firm belief that he will succeed!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, வாலி said:
8 minutes ago, ஈழப்பிரியன் said:

Trump says he doesn’t think he needs to tell his supporters not to be violent if he loses.

Because he has a firm belief that he will succeed!

ஒரு செய்தியை சொல்லாமல் சொல்லுகிறார்.

எப்படி வேணுமானாலும் எடுத்துக்கலாம்.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி: இரண்டாவது முறையாக அதிபராகிறார்

அமெரிக்க அதிபர் தேர்தல், டிரம்ப் - கமலா ஹாரிஸ்
படக்குறிப்பு, டிரம்பை அதிபர் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கத் தேவையான தேர்வாளர் குழு வாக்குகளை அவர் இன்னும் பெறவில்லை

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று, டொனால்ட் டிரம்ப் மீண்டும் அமெரிக்க அதிபராகவுள்ளார். ஹிலாரி கிளின்டனை அதிர்ச்சியடைச் செய்த 8 ஆண்டுகளுக்குப் பிறகு, ஜோ பைடன் அவரை வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேற்றிய 4 ஆண்டுகளுக்குப் பிறகு, அமெரிக்காவின் அதிபராகவுள்ளார் டொனால்ட் டிரம்ப்.

இதுவரையிலான முடிவுகளின்படி, ஒக்லஹோமா, மிசௌரி, இண்டியானா, கென்டக்கி, டென்னஸ்ஸி, அலபாமா, ஃபுளோரிடா, மேற்கு விர்ஜினியா உள்ளிட்ட மாகாணங்களில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். அவர் இதுவரை 279 தேர்வாளர் குழு (எலக்ட்டோரல் காலேஜ்)வாக்குகளைப் பெற்றுள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் மொத்தமுள்ள 538 தேர்வாளர் குழு வாக்குகளில் யார் 270 அல்லது அதற்கும் அதிகமான வாக்குகளைப் பெறுகிறாரோ அவரே வெற்றி பெறுவார். எனவே டிரம்பின் வெற்றி உறுதியாகி விட்டது. முன்னதாக, அவரது வெற்றி கிட்டத்தட்ட உறுதியானபோது, அவர் புளோரிடாவில் தனது ஆதரவாளர்களிடையே உரையாற்றினார்.

கமலா ஹாரிஸைப் பொருத்தவரை, கலிபோர்னியா, ஒரேகான், வாஷிங்டன், நியூயார்க், வெர்மான்ட், நியூ ஹாம்ப்ஷயர், மசாசூசெட்ஸ், மேரிலேன்ட், ஓரிகன், இல்லினாய்ஸ், டிஸ்ட்ரிக்ட் ஆஃப் கொலம்பியா உள்ளிட்ட மாகாணங்களை வசப்படுத்தியுள்ள அவர் இதுவரையிலும் 219 தேர்வாளர் குழு வாக்குகளைப் பெற்றுள்ளார்.

டிரம்ப் உரை

புளோரிடாவில் உள்ள தனது பிரசாரக் குழுவின் தலைமையகத்தில், ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய டிரம்ப், "இந்த நாட்டை மீட்டெடுக்க நாங்கள் உதவப் போகிறோம்" என்று கூறினார்.

டிரம்பை அதிபர் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்க தேவையான தேர்வாளர் குழு வாக்குகளை அவர் இன்னும் பெறவில்லை என்றாலும் கூட, தான் வெற்றி பெற்றுவிட்டதாக டிரம்ப் அறிவித்துக் கொண்டுள்ளார்.

“இது அமெரிக்காவின் பொற்காலம்" என்று கூறிய டிரம்ப், "இது அமெரிக்க மக்களுக்கு கிடைத்த அற்புதமான வெற்றியாகும், இது அமெரிக்காவை மீண்டும் சிறந்த தேசமாக மாற்றும்" என்றார்.

“அமெரிக்கர்கள், வரும்காலத்தில் இந்த நாளைப் பற்றி எண்ணிப் பார்க்கையில், இதுதான் தங்கள் வாழ்க்கையின் மிக முக்கியமான நாள் எனக் கருதுவார்கள்” என்றார் டிரம்ப்.

அமெரிக்க அதிபர் தேர்தல், டிரம்ப் - கமலா ஹாரிஸ்

பட மூலாதாரம்,REUTERS

மேடையில் தன்னுடன் இருந்த மனைவி மெலனியா மற்றும் தனது குழந்தைகளுக்கு நன்றி தெரிவித்த டிரம்ப், “அவர் (மெலனியா) ஒரு சிறந்த வேலையைச் செய்துள்ளார். மக்களுக்கு உதவ மிகவும் கடினமாக உழைக்கிறார்" என்று கூறினார்.

தனது பிரசாரக் குழுவில் முக்கிய பங்கு வகித்த ஈலோன் மஸ்க் குறித்து பேசிய டிரம்ப், அவரை குடியரசுக் கட்சியின் ‘புதிய நட்சத்திரம்’ என்றும், அவர் ஒரு மிகச்சிறந்த மனிதர் என்றும் விவரித்தார்.

வடக்கு கரோலினாவில் டிரம்ப் வெற்றி

அமெரிக்காவின் அடுத்த அதிபரைத் தீர்மானிக்கும் மாகாணங்களில் ஒன்றாக கருதப்படும் வடக்கு கரோலினாவில் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 16 தேர்வாளர் குழு வாக்குகளை டிரம்ப் வென்றுள்ளார்.

வடக்கு கரோலினாவில் இதுவரை 90.1% வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், டிரம்ப் 50.7% வாக்குகளையும், கமலா ஹாரிஸ் 47.8% வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

வடக்கு கரோலினாவின் வெற்றி குடியரசுக் கட்சியினருக்கு முக்கியமானது என்றாலும், இது கடந்த காலங்களில் இந்த மாகாணம் எவ்வாறு வாக்களித்தது என்பதற்கு ஏற்பவே உள்ளது. டிரம்ப், 2016இல் வடக்கு கரோலினாவை 3.66% வித்தியாசத்திலும், 2020இல் 1.34% என்ற சிறிய வித்தியாசத்திலும் வென்றார்.

ஜனநாயகக் கட்சி கடைசியாக 2008ஆம் ஆண்டு இங்கு வெற்றி பெற்றது. அப்போது முன்னாள் அதிபர் பராக் ஒபாமா வெற்றி பெற்றார். பின்னர் ஒபாமா 2012ஆம் ஆண்டில் மீண்டும் தேர்தலில் போட்டியிட்ட போது, குடியரசுக் கட்சி வேட்பாளர் மிட் ரோம்னியிடம் இந்த மாகாணத்தை இழந்தார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் - கமலா ஹாரிஸ் - டொனால்ட் டிரம்ப்

ஜார்ஜியாவிலும் டிரம்ப் வெற்றி

ஜார்ஜியாவில் குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் டிரம்ப், 50.7% வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் டிரம்புக்கு கூடுதலாக 16 தேர்வாளர் குழு வாக்குகள் கிடைத்துள்ளன.

இந்த மாகாணத்தில் 98.4% வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், கமலா ஹாரிஸ் 48.3% வாக்குகளைப் பெற்றுள்ளார். கடந்த 2020 தேர்தலில் இந்த மாகாணத்தில் ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடன் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க அதிபர் தேர்தல்
படக்குறிப்பு, அமெரிக்க அதிபர் தேர்தலில் மொத்தமுள்ள 538 தேர்வாளர் குழு வாக்குகளில் யார் 270 அல்லது அதற்கும் அதிகமான வாக்குகளைப் பெறுகிறாரோ அவரே வெற்றி பெறுவார்

பென்சில்வேனியாவைக் கைப்பற்றிய டிரம்ப்

வடக்கு கரோலினா, ஜார்ஜியாவைத் தொடர்ந்து மூன்றாவது மற்றும் மிக முக்கியமான ‘முடிவைத் தீர்மானிக்கும் மாகாணமான’ பென்சில்வேனியாவில் வெற்றி பெற்று, அதன் 19 தேர்வாளர் குழு வாக்குகளை வென்றுள்ளார் டிரம்ப்.

இங்கு டிரம்ப் 50.9% வாக்குகளைப் பெற்றுள்ளார், கமலா ஹாரிஸ் 48% வாக்குகளைப் பெற்றுள்ளார்.

அமெரிக்க செனட் சபையைக் கைப்பற்றும் குடியரசுக் கட்சி

அமெரிக்க செனட் சபையை குடியரசுக் கட்சி கைப்பற்றும் என்று பிபிசியின் அமெரிக்க கூட்டு நிறுவனமான சிபிஎஸ் செய்தி முகமை கணித்துள்ளது.

இன்னும் வாக்கு எண்ணிக்கை முழுமையடையவில்லை, ஆனால் ஜனநாயகக் கட்சியினர் தனிப் பெரும்பான்மையை இழக்க நேரிடும் என்பது தெளிவாகத் தெரிகிறது.

இந்த 2024 அமெரிக்க அதிபர் தேர்தலில் இதுவரை வெளியான முடிவுகளில், அமெரிக்க செனட் சபையில் 51 இடங்களை குடியரசுக் கட்சியினரும், 40 இடங்களை ஜனநாயகக் கட்சியினரும் பெற்றுள்ளனர். ஒரு இடத்தை சுயேட்சை வேட்பாளர் பெற்றுள்ளார். 8 இடங்களுக்கான முடிவுகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

அமெரிக்க செனட் சபையில் பெரும்பான்மையை பெற ஒரு கட்சிக்கு 51 இடங்கள் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.

தீர்மானிக்கும் மாகாணங்களில் என்ன நடக்கிறது?

அமெரிக்க அதிபரைத் தீர்மானிக்கும் 7 முக்கிய மாகாணங்களில் வடக்கு கரோலினா, ஜார்ஜியா மற்றும் பென்சில்வேனியா ஆகியவற்றில் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். ஆனால் மற்ற தீர்மானிக்கும் மாகாணங்களில் முடிவுகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

தற்போதைய நிலவரப்படி, அரிசோனா, மிச்சிகன், நெவாடா, பென்சில்வேனியா மற்றும் விஸ்கான்சின் ஆகிய மற்ற 4 மாகாணங்களிலும் டிரம்பே முன்னிலை வகிக்கிறார்.

பென்சில்வேனியா டிரம்ப்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, பென்சில்வேனியாவில் டிரம்ப் 50.9% வாக்குகளைப் பெற்றுள்ளார்

கமலா ஹாரிஸ் தரப்பு என்ன செய்கிறது?

“இன்றிரவு கமலா ஹாரிஸ் இங்கு வரமாட்டார்" என்று பிரசாரக் குழுவின் மூத்த உறுப்பினர் ஒருவர் அறிவித்த பின்னர், ஜனநாயகக் கட்சியின் தலைமையகத்தில் கூடியிருந்த கூட்டம் கிட்டத்தட்ட காணாமல் போனது.

வடக்கு கரோலினா, ஜார்ஜியா மற்றும் பென்சில்வேனியா ஆகிய 3 முடிவை தீர்மானிக்கும் மாகாணங்களில் டிரம்ப் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதும், கமலா ஹாரிஸின் ஆதரவாளர்கள் உற்சாக மனநிலையை இழந்துவிட்டனர்.

சில மணிநேரங்களுக்கு முன்புவரை கூட, ஹாவர்ட் பல்கலைக்கழக வளாகத்தில் கமலா ஹாரிஸின் ஆதரவாளர்கள் மிகுந்த உற்சாகத்துடன் குழுமியிருந்தனர். ஆனால் பின்னர் அவர்கள் கலைந்து செல்லத் தொடங்கிவிட்டனர்.

இந்நிலையில், இன்று இரவு நடக்கவிருந்த கொண்டாட்ட நிகழ்வு ரத்து செய்யப்பட்டதாகவும், கமலா ஹாரிஸ் உரை நிகழ்த்தப் போவதில்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

2024 அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் எப்போது வெளியாகும்?

அமெரிக்க அதிபர் தேர்தலின் முதல் வாக்கெடுப்புகள் செவ்வாய்க்கிழமை மாலை அமெரிக்க நேரப்படி மாலை 6 மணிக்கு (1800 EST), அதாவது இந்திய நேரப்படி புதன்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு முடிவடைந்தது. கடைசி வாக்கெடுப்புகள் அமெரிக்க நேரப்படி புதன்கிழமை அதிகாலை 1 மணிக்கு (0100 EST), அதாவது இந்திய நேரப்படி காலை 11.30 மணிக்கு முடிவடையும்.

சில அதிபர் தேர்தல்களில், வெற்றி பெற்றவர் யார் என்பது தேர்தல் நாளன்று இரவில் தாமதமாகவோ அல்லது அடுத்த நாள் அதிகாலையிலோ அறிவிக்கப்படும்.

இந்த முறை, பல மாகாணங்களில் இரு வேட்பாளர்களுக்கும் இடையே கடும் போட்டி நிலவுவதால், யார் வெற்றியாளர் என்பதை விரைவாக அறிவிப்பதில் சிக்கல் ஏற்படலாம்.

ஆனால் வெற்றி யாருக்கு என்பதை முன்கூட்டியே எளிதில் கணிக்கக்கூடிய வகையில் இருந்த மாகாணங்களில் இருந்து, எதிர்பார்க்கப்பட்ட முடிவுகள் வெளிவரத் தொடங்கியுள்ளன.

ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளரும், தற்போதைய துணை அதிபருமான கமலா ஹாரிஸ் மற்றும் குடியரசுக் கட்சியின் வேட்பாளரும், முன்னாள் அதிபருமான டொனால்ட் டிரம்ப் ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

எனவே மிகக் குறைவான வாக்கு வித்தியாசமே இருந்தால், அது மறு வாக்கு எண்ணிக்கையின் அறிகுறியாக இருக்கலாம்.

உதாரணமாக, பென்சில்வேனியாவில், வெற்றியாளருக்கும் தோல்வியுற்றவருக்கும் இடையில் 0.5 சதவீத வாக்கு வித்தியாசம் மட்டுமே இருந்தால், மறுவாக்கு எண்ணிக்கை தானாகவே நடைமுறைக்கு வந்துவிடும். 2020ஆம் ஆண்டில், இந்த வித்தியாசம் 1.1 சதவீதமாக இருந்தது.

சட்ட ரீதியான சிக்கல்கள் எழவும் சாத்தியங்கள் உள்ளன. ஏற்கனவே,100க்கும் மேற்பட்ட வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அவற்றில் பெரும்பாலானவை வாக்காளர் தகுதி மற்றும் வாக்காளர் பட்டியல் நிர்வாகத்தை எதிர்த்து குடியரசுக் கட்சியினரால் தாக்கல் செய்யப்பட்டவை ஆகும்.

கடந்த தேர்தலை விட இம்முறை குறைவான தபால் வாக்குகளே பதிவாகியுள்ளன. 2020 அதிபர் தேர்தல் கொரோனா பெருந்தொற்று காலத்தின் போது நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

வாக்கு எண்ணிக்கை எப்படி நடைபெறுகிறது?

வழக்கமாக, தேர்தல் நாளில் பதிவு செய்யப்பட்ட வாக்குகள் முதலில் கணக்கிடப்படும். அதைத் தொடர்ந்து முன்கூட்டியே பதிவு செய்யப்பட்ட வாக்குகள், தபால் வாக்குகள், சந்தேகத்திற்குரிய வாக்குகள், பின்னர் வெளிநாட்டு மற்றும் ராணுவ வாக்குகள் கணக்கிடப்படும்.

உள்ளூர் தேர்தல் அதிகாரிகள் கேன்வாசிங் (Canvassing) என்று அழைக்கப்படும் ஒரு செயல்முறையில் தனிப்பட்ட வாக்குகளைச் சரிபார்க்கிறார்கள் மற்றும் எண்ணுகிறார்கள்.

கேன்வாசிங் செயல்முறையில் யார் பங்கேற்கலாம், வாக்குகள் செயலாக்கப்படும் வரிசை மற்றும் எந்தெந்த பகுதிகள் பொதுமக்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன, வாக்கு எண்ணிக்கையில் பக்கச்சார்பான பார்வையாளர்கள் எவ்வாறு கண்காணிக்கலாம் மற்றும் தலையிடலாம் என்பது உள்பட ஒவ்வொரு மாகாணத்திலும் வட்டாரத்திலும் தேர்தல் தொடர்பான கடுமையான விதிகள் உள்ளன.

குறைவான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக முடிவுகள் வெளியானால், அது செய்தி ஊடகங்கள் தங்கள் கணிப்புகளை வெளியிடக் காத்திருக்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தும்.

அது மட்டுமல்லாது அத்தகைய முடிவுகள் மறுவாக்கு எண்ணிக்கை மற்றும் சட்டரீதியான சவால்கள் போன்ற பெரிய பிரச்னைகளையும் எழுப்புகின்றன.

 

அதிபர் தேர்தல் முடிவுகளில் சிக்கல் ஏற்பட்டால் என்ன நடக்கும்?

அமெரிக்க அதிபர் தேர்தல் 2024 முடிவுகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஒவ்வொரு அதிகாரப்பூர்வ வாக்கும் இறுதி முடிவுகளில் சேர்க்கப்பட்டவுடன், மறுவாக்கு எண்ணிக்கை போன்ற செயல்முறைகள் முடிந்த பிறகு, தேர்தல் முடிவுகள், முதலில் உள்ளூர் அதிகார வரம்புகளில், பின்னர் மாகாண அளவில், சான்றளிக்கப்படுகின்றன.

பிறகு ஒரு மாகாண நிர்வாகி (பொதுவாக ஆளுநர்) ‘தேர்வாளர் குழுக்களில்’ தங்கள் மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வாக்காளர்களின் பட்டியலுக்கு சான்றளிக்கிறார். இந்த வாக்காளர்கள் டிசம்பர் 17 அன்று அந்தந்த மாகாணங்களில் கூடி வாக்களித்து, அதை வாஷிங்டனுக்கு அனுப்புகிறார்கள்.

ஜனவரி 6 அன்று, புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட அமெரிக்க நாடாளுமன்ற செனட் சபை கூடி, தேர்வாளர் குழு வாக்குகளை எண்ணும் செயல்முறையில் ஈடுபடும். அதற்கு தற்போதைய துணை அதிபர் தலைமை தாங்குவார்.

புதிய அதிபர் எப்போது பதவி ஏற்பார்?

இந்த தேர்தலில் வெற்றி பெற்று அடுத்த அமெரிக்க அதிபராகத் தேர்வு செய்யப்படுபவர், 2025, ஜனவரி 20ஆம் தேதி திங்கட்கிழமை அன்று அமெரிக்க நாடாளுமன்ற வளாகத்தின் மைதானத்தில் அறிமுகப்படுத்தப்படுவார்.

அமெரிக்க வரலாற்றில் நடைபெறவிருக்கும் 60வது அதிபர் பதவியேற்பு விழா இது.

இந்த நிகழ்வில் புதிய அதிபர் அரசியலமைப்பை நிலைநிறுத்துவதற்கான உறுதிமொழியுடன் பதவியேற்பார், பின்னர் தொடக்க உரையை நிகழ்த்துவார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க அதிபர் தேர்தல்: கமலா ஹாரிஸ் தோல்விக்கான 5 முக்கிய காரணங்கள்

கமலா ஹாரிஸ், அமெரிக்க அதிபர் தேர்தல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, டிரம்பிடம் தோற்கும் ஜனநாயகக் கட்சியின் இரண்டாவது பெண் வேட்பாளர் கமலா ஹாரிஸ்

அமெரிக்க துணை அதிபராக உள்ள கமலா ஹாரிஸை தோற்கடித்து, அமெரிக்க அதிபராக மீண்டும் வெள்ளை மாளிகைக்குள் நுழைகிறார் டொனால்ட் டிரம்ப்.

டிரம்புக்கும் ஹாரிஸுக்கும் இடையிலான போட்டி, பலர் எதிர்ப்பார்த்தது போல மிக நெருக்கமானதாக இல்லை. 2020-ஆம் ஆண்டு போல் அல்லாமல், ஆரம்பம் முதலே டிரம்ப் முன்னிலை வகித்து வந்தார். வெற்றியை தீர்மானிக்கும் முக்கிய மாகாணங்களில் பெரும்பாலான அமெரிக்கர்கள் டிரம்புக்கு தங்கள் வாக்குகளை செலுத்தியுள்ளனர்.

அதிபர் தேர்தலில் இருந்து ஜோ பைடன் கடந்த ஜுலை மாதம் விலகிய பிறகு, ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார் கமலா ஹாரிஸ். 2016-ஆம் ஆண்டு டிரம்ப் அதிபரான போது ஹிலாரி கிளிண்டன் அவரிடம் தோல்வியை தழுவினார். அதன் பிறகு டிரம்புக்கு எதிராக போட்டியிட்டு தோற்ற பெண் வேட்பாளர் கமலா ஹாரிஸ் ஆவார்,

அவர் தோற்றதற்கு முக்கியமான ஐந்து காரணங்கள் என்னென்ன?

 

பொருளாதாரம்

வேலையின்மை குறைவாகவும், பங்குச் சந்தை வலுவாகவும் இருந்த போதிலும் கூட அமெரிக்கர்கள் பலர் பணவீக்கத்தின் விளைவுகளை சந்தித்து வருவதாக கூறுகின்றனர். நாட்டின் பொருளாதாரம் அவர்களுக்கு ஒரு பெரும் கவலையாக உள்ளது.

கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு பணவீக்கம் கடுமையாக உயர்ந்தது. 1970-களில் இருந்ததை விட பணவீக்கம் அதிகரித்தது. இந்த விவகாரத்தில் கேள்வி எழுப்ப டிரம்புக்கு ஒரு வாய்ப்பாக இது அமைந்தது. “நீங்கள் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட இப்போது செழிப்பாக இருக்கிறீர்களா?” என்ற கேள்வியை அவர் மக்களிடம் முன் வைத்தார்.

2024-ஆம் ஆண்டில் உலகின் பல்வேறு பகுதிகளில், ஆட்சியில் இருக்கும் கட்சியை மக்கள் தூக்கி எறிந்துள்ளனர். கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு நிலவும் பணவீக்கம் இதற்கு ஒரு காரணமாகும். அமெரிக்க வாக்காளர்களும் மாற்றத்துக்காக காத்திருந்துள்ளனர்.

நான்கில் ஒரு அமெரிக்கர் மட்டுமே நாட்டின் போக்கு குறித்து திருப்தியாக இருக்கின்றனர். மூன்றில் இரண்டு பேர் நாட்டின் பொருளாதாரம் குறித்து பெரிய நம்பிக்கைக் கொள்ளவில்லை.

பண வீக்க உயர்வுக்கு பைடனின், பெரிய செலவுகளை உள்ளடக்கிய திட்டங்களும் காரணமாகும். இது மக்களுக்கு கவலை அளிக்கக் கூடியதாகவே இருந்தது. பைடனின் திட்டங்கள் குறித்து மக்களிடம் எதிர்மறையான எண்ணங்கள் உருவாகின. இதனால் கமலா ஹாரிஸுக்கு தேர்தல் வெற்றி சவாலானது” என்று வெளியுறவுக் கொள்கைகள் குறித்து எழுதி வரும் மைக்கேல் ஹிர்ஷ் கூறினார்.

சி.என்.என் ஊடகத்தின் தேர்தலுக்கு பிந்தையை கருத்து கணிப்புகளின் படி, பொருளாதாரத்தை கையாள்வதில் ஹாரிஸை விட டிரம்புக்கே தங்கள் ஆதரவு என 50%க்கும் மேலானவர்கள் தெரிவித்துள்ளனர். பொருளாதாரம் தங்களின் பிரதான பிரச்னை என்று 31% வாக்காளர்கள் தெரிவித்துள்ளனர்.

பைடனின் செல்வாக்கின்மை

கமலா ஹாரிஸ், அமெரிக்க அதிபர் தேர்தல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, பைடனின் பொருளாதாரக் கொள்கைகள் மீது மக்களுக்கு அதிருப்தி இருந்ததாக கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன

மாற்றத்துக்கான வேட்பாளர் என்று கமலா ஹாரிஸ் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டாலும், ஜோ பைடன் ஆட்சியின் துணை அதிபராக இருந்து கொண்டு, தனது தலைமையிடமிருந்து தன்னை தனித்துக் காட்டுவதில் அவர் சிரமப்பட்டார்.

பணவீக்கத்தை கையாள்வதிலும், அமெரிக்கா - மெக்சிகோ எல்லை பிரச்னையை கையாள்வதிலும் அமெரிக்கர்களுக்கு பைடன் மீது அதிருப்தி இருந்த போதிலும், கமலா ஹாரிஸ் பைடனுக்கு விசுவாசமாக இருந்துள்ளார்.

இதற்கு முக்கியமான எடுத்துக்காட்டாக, ஏபிசி ஊடகத்தின் தி வியூ என்ற நேர்காணல் நிகழ்ச்சியில் கமலா ஹாரிஸ் பங்கேற்ற போது நிகழ்ந்ததை அரசியல் நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

தனது பின்புலத்தைப் பற்றி தெரியாத அமெரிக்கர்களுக்கு கமலா ஹாரிஸ் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்பாக பலர் இந்த நிகழ்ச்சியைப் பார்த்தனர். ஆனால், பைடனை விட தான் எவ்வாறு மாறுபட்டவராக இருப்பார் என்று கேட்டதற்கு விளக்கமளிக்க கமலா தடுமாறினார். “எனக்கு எதுவும் தோன்றவில்லை” என்று அவர் பதிலளித்தார்.

இது டிரம்பின் பிரசார விளம்பரத்தில் பின்பு பயன்படுத்தப்பட்டது. இந்த உரையாடல் கமலாவுக்கு ‘நாசகரமானதாக’ அமைந்தது என்று பராக் ஒபாமாவின் முன்னாள் ஆலோசகர் டேவிட் எக்செல்ராட் தெரிவித்தார்.

ஜனநாயகக் கட்சியில் ஒரு “பிம்பச் சிக்கல்” நிலவுவதாக அந்தக் கட்சியுடன் தொடர்புடையவர்கள் பிபிசியிடம் தெரிவித்தனர். ஜனநாயகக் கட்சியுடன் தொடர்புடைய வாஷிங்டன் டி.சி.யில் உள்ள ஒருவர், முதலில் கட்சியில் வாஷிங்டன் டி.சி.யில் உள்ள மேல்தட்டு ஆட்களை வெளியே அனுப்ப வேண்டும் என்று பிபிசியின் லோன் வெல்ஸிடம் கூறினார்.

வேறு சிலர், கட்சியின் பிரசாரத்துக்கான முயற்சிகளை பாராட்டினர். விலைவாசி உயர்வு போன்ற விவகாரங்கள் வாக்காளர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது, கட்சியின்‘பிம்பச் சிக்கலுக்கு’ காரணம் என்று கருதினர்.

குடியரசு கட்சி ஆதரவாளருடன் டிரம்பின் பிரசாரக் கூட்டத்தின் போது நடந்த உரையாடல் தனக்கு நினைவுக்கு வருவதாக வெல்ஸ் கூறுகிறார்.

குடியரசுக் கட்சியை டிரம்ப் முற்றிலும் ‘மறு உருவாக்கம்’ செய்துள்ளார் என்று அந்த ஆதரவாளர் கூறினார். மேல் தட்டு மக்களின் கட்சி என்ற பிம்பத்திலிருந்து விலகி, உழைக்கும் வர்க்கத்தினரை டிரம்ப் அணுகினார். அதே நேரம் ஜனநாயகக் கட்சியினர் ஹாலிவுட்டின் கட்சியாக மாறிவிட்டதாக அவர் கூறினார்” என்று வெல்ஸ் தெரிவித்தார்.

 

சமூக பிரச்னைகள்

கமலா ஹாரிஸ், அமெரிக்க அதிபர் தேர்தல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, கருத்தடை விவகாரத்தை கமலா ஹாரிஸ் கையில் எடுத்த வேளையில் குடியேற்ற விவகாரத்தை டிரம்ப் பேசினார்

பொருளாதாரத்தை தவிர, தேர்தலை தீர்மானிக்கக் கூடியவை உணர்ச்சி மிகுந்த விவகாரங்கள் ஆகும்.

கருத்தடை விவகாரத்தை ஜனநாயகக் கட்சியினர் கையில் எடுத்த போது, குடியேற்ற விவகாரம் குறித்து டிரம்ப் பேசினார்.

பைடனின் ஆட்சியில் நடைபெற்ற வரலாறு காணாத எல்லை மோதல்களும், குடியேற்றம் காரணமாக எல்லைக்கு அருகில் இல்லாத மாகாணங்களிலும் ஏற்பட்ட தாக்கங்களும், இந்த விவகாரத்தில் பைடனை விட டிரம்ப் மீது மக்கள் அதிக நம்பிக்கைக் கொள்ள காரணமாக இருந்தன என்று ப்யூ ஆய்வு மையம் நடத்திய கருத்து கணிப்பு தெரிவிக்கிறது.

எடிசன் ஆய்வு கருத்துக்கணிப்புகளின் படி, கருத்தடை உரிமைகளை மீட்டெடுப்பது குறித்த கமலா ஹாரிஸின் தீவிர பிரசாரம், பெண் வாக்காளர்கள் மத்தியில் அவருக்கு 54% ஆதரவை பெற்றுத் தந்தது. டிரம்புக்கு 44% ஆதரவு மட்டுமே இருந்தது. எனினும், 2020-ஆம் ஆண்டில் தனது போட்டியாளருக்கு 42% பெண் வாக்காளர்களின் ஆதரவு இருந்த போது, பைடனுக்கு 57% பெண்களின் ஆதரவு இருந்தது. தனது போட்டியாளரை விட கமலா பெற்றிருந்த முன்னிலை, பைடன் பெற்றிருந்ததை விட குறைவாகும். டிரம்பின் ஆதரவாளர்களில் 54% ஆண்கள், 44% பெண்கள் ஆவர்.

இறுதியில், 2022-ஆம் ஆண்டு கருத்தடை விவகாரத்துக்கு இருந்த தாக்கம் இந்த முறை இல்லை.

ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக் கழகத்தின் ஹூவர் நிறுவனத்தில் உள்ள பிரிட்டன் அமெரிக்க வரலாற்று ஆய்வாளர் நியால் ஃபெர்குசன், “அமெரிக்க வாக்காளர்கள் சந்தேகத்துக்கு இடமின்றி கடந்த நான்கு ஆண்டுகளின் கொள்கைகளை மறுத்துள்ளனர்” என்கிறார்.

பண வீக்கத்தை உண்டாக்கிய பொருளாதாரக் கொள்கைகள், மத்திய கிழக்கில் போருக்கு இட்டுச் சென்ற வெளியுறவுக் கொள்கை, சமூக கொள்கைகள் ஆகியவற்றுக்கு எதிராக அமெரிக்கர்கள் வாக்களித்துள்ளனர் என்று அவர் கூறுகிறார்.

“ஜனநாயக கட்சி தனது பல முற்போக்கான முன்னெடுப்புகளில், வெள்ளை அமெரிக்கர்கள் மட்டுமல்ல, அமெரிக்க உழைக்கும் வர்க்கத்தை மட்டுமல்ல, லத்தீன் அமெரிக்கர்களையும், ஹிஸ்பானிக் மக்களையும் அந்நியப்படுத்தியது. நாடு முழுவதிலும் மக்களை அந்நியப்படுத்தியது” என்று அவர் பிபிசி ரேடியோ-4 நிகழ்ச்சியில் பேசிய போது தெரிவித்தார்.

ஜனநாயகக் கட்சிக்கு தெளிவான செய்தி கிடைத்துள்ளது. அமெரிக்க மக்களுக்கு இந்த கொள்கைகள் தேவை இல்லை. அவர்களுக்கு வலிமையின் மூலம் அமைதி வேண்டும். பணவீக்கம் இல்லாத செழிப்பு வேண்டும்.

 

கருப்பின மற்றும் லத்தீன் வாக்காளர்களிடையே குறைந்த செல்வாக்கு

கமலா ஹாரிஸ், அமெரிக்க அதிபர் தேர்தல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, லத்தீன் அமெரிக்கர்கள், குறிப்பாக ஆண்களிடம் டிரம்ப் அதிக வாக்குகளைப் பெற்றார்.

பென்சில்வேனியா மாகாணத்தையும் அதன் 19 தேர்வாளர் குழு வாக்குகளையும் டிரம்ப் கைப்பற்றிய போது, அவர் வெள்ளை மாளிகைக்குள் மீண்டும் நுழையப் போகிறார் என்பது உறுதியானது. 1988-ஆம் ஆண்டு முதல் அந்த மாகாணத்தை ஜனநாயகக் கட்சி ஒரே ஒரு முறை மட்டுமே, 2016-ஆம் ஆண்டு ஹிலாரி கிளிண்டனை டிரம்ப் தோற்கடித்த போது மட்டுமே இழந்துள்ளது.

அரிசோனா, நெவேடா, ஜார்ஜியா, வட காரோலினா போன்ற முக்கியமான மாகாணங்களில் ஹாரிஸ் தனது பிரசாரத்தின் போது அதீத கவனம் செலுத்தியிருந்தார். டிரம்ப் ஆட்சியின் போது ஏற்பட்ட பிரிவினைகளால் வெறுப்படைந்த, அங்குள்ள ஜனநாயகக் கட்சியின் ஆதரவாளர்களையும் தன் பக்கம் ஈர்க்க இந்த முயற்சிகளை ஹாரிஸ் மேற்கொண்டார். ஆனால் அது பலனளிக்கவில்லை.

கருப்பினத்தவர், லத்தீன் அமெரிக்கர்கள், இளம் வாக்காளர்களிடம் ஜனநாயகக் கட்சிக்கு வழக்கமாக கிடைக்கும் ஆதரவு இந்த முறை சிதறியது. கல்லூரி படிப்பை முடிந்த நகரவாசிகளிடம் கமலா தனது ஆதரவை தக்க வைத்துக் கொண்டாலும், ஜனநாயகக் கட்சியின் கோட்டைக்குள் டிரம்புக்கு கிடைத்த ஆதரவை தோற்கடிக்க அது போதவில்லை.

எடிசன் ஆய்வு மையத்தின் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளின் படி, கமலா ஹாரிஸ் கருப்பின மக்களின் 86% வாக்குகளையும் லத்தீன் அமெரிக்கர்களின் 53% வாக்குகளையும் பெறுவார் என்று கூறியது. எனினும் 2020-ஈல் பைடன் இதை விட அதிக முன்னிலை வகித்திருந்தார். அவர் கருப்பின மக்களின் 87% வாக்குகளையும் லத்தீன் அமெரிக்கர்களின் 65% வாக்குகளையும் பெற்றிருந்தார்.

லத்தீன் ஆண் வாக்காளர்களிடம் டிரம்ப் அதிக வாக்குகளைப் பெற்றிருந்தார். அவர்களிடம் கமலாவுக்கு 44% வாக்குகளும் டிரம்புக்கு 54% வாக்குகளும் இருந்தன. இதே பிரிவு மக்களிடம் பைடனுக்கு 2020-ஈல் 59% வாக்குகள் இருந்தன.

குடியரசுக் கட்சிக்கு ஆதரவான கிராமப்புற பகுதிகளில், 2020-ஆம் ஆண்டு பைடனுக்கு கிடைத்ததை விட, ஹாரிஸுக்கு குறைவான வாக்குகளே கிடைத்தன. இது 2016-ஆம் ஆண்டு கிளிண்டனுக்கு கிடைத்த ஆதரவுக்கு நிகராக குறைவாகவே இருந்தது.

 

டிரம்பை மையப்படுத்திய பிரசாரம்

கமலா ஹாரிஸ், அமெரிக்க அதிபர் தேர்தல்

பட மூலாதாரம்,GETTY

2016-ஆம் ஆண்டு ஹிலாரி கிளிண்டன் செய்தது போலவே, கமலா ஹாரிஸும் டிரம்பை மையப்படுத்தியே தனது பிரசாரத்தை மேற்கொண்டார். இந்த தேர்தலை டிரம்ப் மீதான பொது வாக்கெடுப்பாக அவர் முன்னிறுத்தினார். பிரசாரத்தின் கடைசி வாரங்களில், வெள்ளை மாளிகையின் தலைமைப் பணியாளர் (chief of staff) ஜான் கெல்லி, டிரம்ப் ஹிட்லரை ஆராதிப்பவர் என்று கூறியிருந்ததை சுட்டிக்காட்டி, "டிரம்பை பாசிசவாதி, மனநோயாளி, நிலையற்றவர்" என்று கமலா ஹாரிஸ் குறிப்பிட்டார். இந்த தேர்தலை ஜனநாயகத்துக்கான போராட்டம் என்று கமலா ஹாரிஸ் வர்ணித்தார். ஜூலை மாதம் அதிபர் தேர்தலில் இருந்து விலகும் முன் பைடனும் இதையே தான் கூறியிருந்தார்.

“டொனால்ட் டிரம்பை தாக்குவதில் மட்டுமே கவனம் செலுத்திய கமலா ஹாரிஸ் இந்த தேர்தலில் தோல்வியை தழுவினார்” என்று தனது எக்ஸ் பக்கத்தில், தேர்தல் கருத்து கணிப்பாளர் ஃப்ராங் லுண்ட்ஸ் பதிவிட்டிருந்தார்.

“டிரம்பைப் பற்றி வாக்காளர்களுக்கு ஏற்கனவே தெரியும். கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றால் அவர் முதலாம் ஆண்டில் என்ன செய்வார் என்று தெரிந்துக் கொள்ளவே மக்கள் விரும்பினர்” என்று அவர் கூறியிருந்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி தேர்தலில் தோற்றாலும் போராட்டத்தை கைவிடமாட்டேன்; சிலவேளைகளில் போராட்டம் சில காலம் நீடிக்கும்; இதன் அர்த்தம் நாங்கள் வெற்றி பெறமாட்டோம் என்பதல்ல - கமலா ஹரிஸ்

image

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தோற்றாலும்  சுதந்திரத்திற்கான, வாய்ப்பிற்கான, அனைத்து மக்களினதும் நியாயம், கௌவரத்திற்கான, எங்கள் தேசத்தின் இதயமாக உள்ள கொள்கைகளிற்கான  போராட்டத்தை நான் ஒருபோதும் கைவிடமாட்டேன் என கமலா ஹரிஸ் தெரிவித்துள்ளார்.

வோசிங்டன் டிசியில் தனது ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றுகையில் இதனை தெரிவித்துள்ள அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது.

BtMjZr7L.jpg

இந்த தேர்தல் முடிவு நாங்கள் எதிர்பார்த்த ஒன்றல்ல, நாங்கள் போராடியது இந்த முடிவிற்காக இல்லை, நாங்கள் இதற்காக வாக்களிக்கவில்லை, ஆனால் நான் சொல்வதை செவிமடுங்கள். நாம் கைவிடாத வரை, நாங்கள் தொடர்ந்து போராடும் வரை அமெரிக்காவின் வாக்குறுதியின் வெளிச்சம் என்றும் பிரகாசமாக ஒளிரும்.

நாங்கள் போட்டியிட்டது குறித்தும் போட்டியிட்ட விதம் குறித்தும், நான் மிகவும் பெருமிதமடைகின்றேன். இந்த பிரச்சாரத்தை முன்னெடுத்த 107 நாட்களாக, நாங்கள் சமூகங்களை உருவாக்குவது, கூட்டணிகளை உருவாக்குவது குறித்த நோக்கத்துடன் செயற்பட்டோம்.

அமெரிக்காவினது அன்பினால் பிணைக்கப்பட்ட, அமெரிக்காவின் எதிர்காலத்திற்காக போராடும் உற்சாகமும் மகிழ்ச்சியையும் உடைய, வாழ்க்கையின் அனைத்து தரப்பையும், பின்னணியை சேர்ந்த மக்களையும், ஒன்றிணைக்க  முயன்றோம். எங்களை பிரிப்பதை விட எங்களிற்கு இடையில் பொதுவான விடயங்கள் உள்ளன என்ற அடிப்படையில் நாங்கள் இதனை செய்தோம்.

தற்போது நீங்கள் பல்வேறுபட்ட உணர்ச்சி பாதிப்புகளிற்கு உள்ளாகியிருப்பது எனக்கு தெரியும், ஆனால் நாங்கள் இந்த தேர்தலின் முடிவுகளை ஏற்றுக்கொள்ளவேண்டும். நான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப்புடன் தொலைபேசி மூலம் உரையாடினேன் எனது வாழ்த்துக்களை தெரிவித்தேன்.

அதிகார மாற்றத்தின் போது அவருக்கும் அவரது குழுவினருக்கும் நாங்கள் உதவுவோம் என நான் தெரிவித்தேன். அமைதியான அதிகார மாற்றத்தில் நாங்கள் ஈடுபடுவோம்.

தேர்தலில் நாங்கள் தோற்றால் அந்த முடிவை ஏற்றுக்கொள்வதே அமெரிக்க தேர்தலின் அடிப்படை கொள்கை.

அந்த கொள்கை மற்றையவற்றை போல முடியாட்சி சர்வாதிகாரத்திலிருந்து ஜனநாயகத்தை வேறுபடுத்துகின்றது. மக்களின் நம்பிக்கையை பெற முயலும் எவரும் இதனை மதிக்கவேண்டும்.

அதேவேளை எங்கள் தேசத்தில் நாங்கள் ஜனாதிபதிக்கோ கட்சிக்கோ விசுவாசமானவர்கள் இல்லை, மாறாக அமெரிக்காவின் அரசமைப்பிற்கே விசுவாசமானவர்கள், எங்கள் மனசாட்சி மற்றும் கடவுளுக்கு விசுவாசமானவர்கள்.

நான் இந்த தேர்தல் தோல்வியை ஒப்புக்கொண்டாலும், இந்த பிரச்சாரத்தை தூண்டிய போராட்டத்தில் தோல்வியை ஏற்றுக்கொள்ளமாட்டேன்.

அந்த போராட்டம் -சுதந்திரத்திற்கான போராட்டம், வாய்ப்பிற்கான போராட்டம், அனைத்து மக்களினதும் நியாயம், கௌவரத்திற்கான போராட்டம், எங்கள் தேசத்தின் இதயமாக உள்ள கொள்கைகளிற்கான போராட்டம். இந்த போராட்டத்தை நான் ஒருபோதும் கைவிடமாட்டேன்.

துப்பாக்கி வன்முறையிலிருந்து எங்கள் வீதிகளையும், பாடசாலைகளையும் பாதுகாப்பதற்கான போராட்டத்தை நாங்கள் ஒருபோதும் கைவிடமாட்டோம்.

ஜனநாயகம் சட்டத்தின் ஆட்சி அனைவருக்கும் சமநீதி மற்றும்  எங்கள் ஒவ்வொருவருக்கும், நாங்கள் யாராகயிருந்தாலும்  எங்கிருந்து ஆரம்பித்திருந்தாலும் சில அடிப்படை உரிமைகளும், சுதந்திரங்களும் உள்ளன அவை மதிக்கப்படவேண்டும், உறுதிப்படுத்தப்படவேண்டும் என்பதற்கான போராட்டத்தை ஒருபோதும் கைவிடமாட்டோம்.

kamala_support1111.jpeg

நாங்கள் இந்த போராட்டத்தை தேர்தல் வாக்களிப்பு நிலையங்களிலும், நீதிமன்றங்களிலும், பொதுசதுக்கங்களிலும் முன்னெடுப்போம்.

மேலும் நாங்கள் இன்று வாழ்வது போன்று, ஒருவரையொருவர் அன்புடன் இரக்கத்துடன் நடத்துவதன் மூலம், அந்நியர் ஒருவரின் முகத்தை பார்த்து அயலவரின் முகத்தை பார்ப்பது போல, எங்கள் பலத்தை எப்போதும் கௌரவத்திற்காக போராடுவதற்காக மக்களிற்கு கைகொடுப்பதற்கு போராடுவது போல அமைதியான விதத்திலும் நாங்கள் போராடுவோம்.

எங்கள் சுதந்திரத்திற்கான போராட்டத்திற்கு கடின உழைப்பு தேவைப்படுகின்றது. ஆனால் நான் எப்போதும் தெரிவிப்பதை போல நாங்கள் கடினமாக உழைப்பதை விரும்புபவர்கள் கடின உழைப்பு என்பது சிறந்த உழைப்பு, கடின உழைப்பு  என்பது மகிழ்ச்சியான உழைப்பு, எங்கள் நாட்டிற்காக போராடுவது எப்போதும் பெறுமதியான விடயம்,

இளம் வயதினருக்கு - கவலைப்பவதும் ஏமாற்றமடைவதும் நியாயமான விடயங்கள், ஆனால் அனைத்தும் சரியானதாகிவிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

நாங்கள் போராடினால் நாங்கள் வெற்றிபெறுவோம் என தேர்தல் பிரச்சாரத்தின் போது நான் அடிக்கடி தெரிவித்திருக்கின்றேன்.

ஆனால் ஒரு விடயம் உள்ளது, சிலவேளைகளில் போராட்டம் சில காலம் நீடிக்கும். இதன் அர்த்தம் நாங்கள் வெற்றிபெறமாட்டோம் என்பதல்ல.

மிக முக்கியமான விடயம் போராட்டத்தை ஒருபோதும் கைவிடாமலிருப்பதே. ஒருபோதும் கைவிடாதீர்கள்.  உலகினை மிகச்சிறந்த இடமாக மாற்றும் செயற்பாடுகளை ஒருபோதும் கைவிடாதீர்கள். உங்களிடம் அதற்கான சக்தி உள்ளது.

உலகிற்கு மிகச்சிறந்த நன்மையை செய்வதற்கான திறன் உங்களிடம் உள்ளது.

ஆகவே எனது உரையை அவதானித்து கொண்டிருக்கும் அனைவருக்கும் ஒரு விடயத்தை தெரிவிக்க விரும்புகின்றேன்- விரக்தியடையவேண்டாம்.

இது நாம் கைகளை உயரஉயர்த்தும் நேரமில்லை, இது நீங்கள் ஒரு குழுவாக கடினமாக முயற்சி செய்வதற்கான தருணம், சுதந்திரம் நீதிக்காக, நாங்கள் அனைவரும் இணைந்து கட்டியெழுப்ப கூடிய எதிர்காலத்திற்காக, ஒழுங்கமைக்கவேண்டிய அணிதிரட்டவேண்டிய தருணம்.

kamala_harris_1122.jpg

உங்களில் பலருக்கு தெரியும் நான் ஒரு வழக்கறிஞராக எனது வாழ்க்கையை ஆரம்பித்தேன், எனது வாழ்க்கை முழுவதும் தங்கள் வாழ்க்கையில் மிக மோசமான நிலையில் உள்ள பலரை நான் சந்தித்தேன்.

பெரும் தீமையை எதிர்கொண்டவர்களை பெரும் துயரத்தினை அனுபவித்தவர்களை நான் சந்தித்தேன்.

ஆனால் அவற்றின் மத்தியிலும் அவர்களிற்குள் ஒரு உறுதியான நிலைப்பாட்டை எடுப்பதற்கான நீதிக்காக போராடுவதற்கான, மற்றவர்களிற்காக போராடுவதற்கான தைரியமும், உறுதியும் காணப்படுவதை பார்த்துள்ளேன்.

எனவே அவர்களின் துணிச்சல் எங்களிற்கான உந்துசக்தியாக விளங்கட்டும், அவர்களின் உறுதி நமது பொறுப்பாக விளங்கட்டும்.

நான் எனது உரையை இதனுடன் நிறைவு செய்கின்றேன் - ஒரு பழமொழி உள்ளது, வரலாற்றாசிரியர் ஒருமுறை இதனை வரலாற்றின் சட்டம் என்றார், காலங்காலமாக அனைத்து சமூகத்திலும் இதுவே உண்மை.

அந்த பழமொழி இதுதான் - இருட்டில்தான்  நட்சத்திரங்களை பார்க்க முடியும்.

பலர் நாங்கள் இருண்ட யுகத்திற்குள் நுழைகின்றோம் என எண்ணுவதை என்னால் உணரமுடியும். ஆனால் எங்கள் அனைவரினதும் நன்மைக்காகவும் இது இடம்பெறாது என நாங்கள் கருதுவோம்.

kama_supr1111111111111111.jpeg

ஆனால் இன்னுமொரு விடயம் - அமெரிக்கா - நாங்கள் இருண்ட யுகத்திற்குள் நுழைந்தால் நாங்கள் இரவை பில்லியன் கணக்காண திறமைவாய்ந்த நட்சத்திரங்களால் ஒளிரவிடுவோம். வெளிச்சம் , நம்பிக்கையின் வெளிச்சம், உண்மையின் சேவையின் வெளிச்சம், அது பின்னடைவுகளின் போதும், அமெரிக்காவின் அசாதரண வாக்குறுதியை நோக்கி  வழிகாட்டட்டும்.

https://www.virakesari.lk/article/198099

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

ஜனாதிபதி தேர்தலில் தோற்றாலும் போராட்டத்தை கைவிடமாட்டேன்; சிலவேளைகளில் போராட்டம் சில காலம் நீடிக்கும்; இதன் அர்த்தம் நாங்கள் வெற்றி பெறமாட்டோம் என்பதல்ல - கமலா ஹரிஸ்

நீங்கள் ஏன் விடமாட்டீர்கள்? உங்களுக்கு பணம்கொடுத்து உசுப்பிவிட மருத்துவ தீயசக்தி பில் கேட்ஸ் போன்ற பணமுதலைகள் இருக்கேக்கை நீங்கள் ஏன் கைவிடப் போறீங்கள்! ஆனால் ஒன்று என்னதான் நாடகம் போட்டாலும் இந்தியன் (வம்சாவளி) ஒருவன் அமெரிக்காவின் அதிபராக முடியாது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, வாலி said:

நீங்கள் ஏன் விடமாட்டீர்கள்? உங்களுக்கு பணம்கொடுத்து உசுப்பிவிட மருத்துவ தீயசக்தி பில் கேட்ஸ் போன்ற பணமுதலைகள் இருக்கேக்கை நீங்கள் ஏன் கைவிடப் போறீங்கள்! ஆனால் ஒன்று என்னதான் நாடகம் போட்டாலும் இந்தியன் (வம்சாவளி) ஒருவன் அமெரிக்காவின் அதிபராக முடியாது!

வாலி, என்னப்பா சொல்கிறீர்கள்😂? "மருத்துவ தீயசக்தி" பில் கேட்சா? கொரனா தடுப்பூசி விரைவாக உருவாக பண உதவி செய்ததால் பில் கேட்ஸ் தீய சக்தியாகி விட்டரென்ற kool aid "ஐ நீங்களும் அப்படியே குடித்து விட்டீர்களா?

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.