Jump to content

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் 2024 - செய்திகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

டிரம்பை முந்தும் கமலா ஹாரிஸ் - ஒரே வார்த்தையால் அமெரிக்க தேர்தல் களத்தை புரட்டிப் போட்டது எப்படி?

அமெரிக்க அதிபர் தேர்தல், கமலா ஹாரிஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், பில் மெக்கவுஸ்லேண்ட்
  • பதவி, பிபிசி செய்தி, நியூயார்க்
  • 16 நிமிடங்களுக்கு முன்னர்

"விசித்திரமானவர்கள்"

அமெரிக்க அதிபர் தேர்தலில் இந்த எளிய விமர்சன வார்த்தைகளுடன் கமலா ஹாரிஸ் செய்து வரும் பிரசாரம் கவனத்தை ஈர்ப்பதாக அமைந்துள்ளது. இந்த வாக்கியம் அதிபர் ஜோ பைடனின் பலவீனங்கள் பற்றிய உரையாடலை திசை மாற்றியிருப்பதுடன், அவரது போட்டியாளரான டொனால்ட் டிரம்ப் மீது கவனத்தை திருப்பியுள்ளது.

இந்த வாரம் நடந்த பிரசார பேரணிகளில் கமலா ஹாரிஸின் தொனியில் காணப்பட்ட மாற்றம் தெளிவாக தெரிந்தது. அவர் தனது துணை அதிபர் வேட்பாளரான மினசோட்டா கவர்னர் டிம் வால்ஸுடன் பிரசாரத்தில் தோன்றினார்.

"பியோனஸ் ஃப்ரீடம்” என்னும் பாடலின் பின்னணி இசையுடன் மேடையில் தோன்றிய இந்த ஜோடி அமெரிக்க மக்களின் சுதந்திரத்தைப் பாதுகாக்கத் தயாராக இருப்பதாகக் கூறியது.

பிலடெல்பியாவில் ஒரு உற்சாகமான கூட்டத்திற்கு மத்தியில் "நாங்கள் பின்வாங்கமாட்டோம்," என்று சூளுரைத்தார் கமலா ஹாரிஸ். அவரின் முழக்கம் மக்கள் மத்தியில் எதிரொலித்தது. அதுவே பிரசாரத்தின் முழக்கமாகவும் மாறியது.

இது இதற்கு முந்தைய தேர்தலில் டிரம்பை "ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல்" என்ற பைடன் விமர்சனத்தின் சற்று இலகுவான பதிப்பாகும். இது முன்னாள் அதிபர் டிரம்பை அமெரிக்காவின் யதார்த்தத்திலிருந்து மாறுப்பட்டவர் என்ற பிம்பத்தை காட்டுகிறது.

அதிபர் பைடனுக்கு துணை அதிபராக பணிபுரிந்த போது, கமலா ஹாரிஸ் வெளியிட்ட பிரசார செய்திக் குறிப்புகள் கூட, ஆழ்ந்த தீவிரமான தொனியில் இருந்து இன்னும் லேசான தொனிக்கு மாறுவதைப் பிரதிபலிக்கின்றன.

 

பைடன் தேர்தலில் இருந்து ஒதுங்கிய ஐந்து நாட்களுக்குப் பிறகு, கமலா ஹாரிஸின் செய்தித் தொடர்பாளர் டிரம்ப் பற்றி பேசுகையில் "அவரின் பேச்சு நீங்கள் உணவகத்தில் அருகில் உட்கார விரும்பாத ஒருவரின் பேச்சு போல ஒலித்தது” என்று கேலி செய்யும் தொனியில் குறிப்பிட்டார்.

டிரம்பை விசித்திரமானவர் போன்று சித்தரிக்கும் இந்த புதிய பிரசாரம், கமலா ஹாரிஸுக்கு வாக்களிப்பது ஒரு விவேகமான தேர்வாக மக்களை நினைக்க வைக்கிறது என்று பிரசார உத்தியாளர்கள் கூறுகின்றனர். ஆனால், சமீப காலம் வரை, அமெரிக்க வாக்காளர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காகப் போராடிய துணை அதிபர் கமலா ஹாரிஸ் மீது உருவாகியிருக்கும் நல்லெண்ணம், நவம்பர் தேர்தல் நாள் வரை நீடிக்குமா என்று கூறுவது கொஞ்சம் கடினம். இவ்வளவு சீக்கிரமாக அதனை முடிவு செய்ய முடியாது.

கமலா ஹாரிஸை நெருங்கிய நண்பராகக் கருதும் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த கலிபோர்னியா லெப்டினன்ட் கவர்னர் எலினி கவுனலகிஸ், இந்தப் பிரசாரத்தின் புதிய சொல்லாடல், ஹாரிஸின் "சிறந்த நகைச்சுவை உணர்வையும்", "அடிப்படை அளவில் ஒரு நல்ல பேச்சாளராகவும்" இருக்கும் அவரது திறனையும் பிரதிபலிக்கிறது என்றார்.

"உண்மை என்னவென்றால், இந்த விஷயங்கள் அவருடைய பலம் என்பதை நிரூபிக்கின்றன, மேலும் அவருடைய உற்சாகமான பேச்சுகள், டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது துணை அதிபர் வேட்பாளரின் அச்சுறுத்தும் தொனியினால் உருவாகும் இருளை உடைக்கிறது" என்றார்.

பதிலடி தர முடியாமல் தவிக்கும் டிரம்ப்

இதற்கிடையில், 2016 அதிபர் தேர்தல் பிரசாரத்தின் வாயிலாக அரசியலில் நுழைந்ததில் இருந்து ஆற்றல் மிக்க பிரசாரகர், குறிப்பாக அரசியல் எதிரிகள் பற்றி அவதூறாக பேசி தனிப்பட்ட தாக்குதல்களை மேற்கொள்வதில் திறன் பெற்றவர் என்று நீண்ட காலமாக அறியப்பட்ட டிரம்ப், கமலா ஹாரிஸின் "விசித்திரமானவர்" என்ற விமர்சனத்துக்கு பதிலடி கொடுக்க முடியாமல் திணறுகிறார்.

அவர்கள் தான் விசித்திரமானவர்கள். இதுவரை என்னை யாரும் விசித்திரமாக நடந்து கொள்கிறேன் என்று சொன்னதே இல்லை. என்னை பலவாறாக விமர்சிக்கலாம். ஆனால் ’`weird’ என்று என்னை சொல்வதை நான் ஏற்றுக் கொள்ளமாட்டேன்” என்று கடந்த வாரம் கன்சர்வேட்டிவ் வானொலி தொகுப்பாளர் கிளே டிராவிஸுக்கு அளித்த பேட்டியில் டிரம்ப் கூறினார்.

டிரம்பின் செல்வாக்கை புரட்டி போட்ட  ஒற்றை வார்த்தை! - கமலா ஹாரிஸ், டிம் வால்ஸ் ஜோடியின் பிரசார பாணி

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஊடகங்களில் கவனம் பெறும் கமலா ஹாரிஸ்

அதிபர் தேர்தலில் டிரம்பை பின்னுக்கு தள்ளி கமலா ஹாரிஸ், தற்போது முன்னணியில் இருப்பதாக கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.

ஆகஸ்ட் 4-6 தேதிகளில் நடத்தப்பட்ட சமீபத்திய `YouGov’ கருத்துக் கணிப்பு, கமலா மக்கள் வாக்கெடுப்பில் வெற்றி பெறுவார் என்பதை பிரதிபலித்தது. கருத்துக் கணிப்பில் பதிலளித்தவர்களில் 45% பேர் நவம்பரில் கமலா ஹாரிசுக்கு வாக்களிப்பதாகக் கூறினர், டிரம்பிற்கு 43% ஆதரவு இருந்தது.

இது ஒரு முக்கியமான திருப்பம். திசை மாறியுள்ளது. கிட்டத்தட்ட மூன்று வாரங்களுக்கு முன்பு `YouGov’ நடத்திய இதேபோன்ற கருத்துக்கணிப்பில் கமலா ஹாரிஸ் மூன்று புள்ளிகள் வித்தியாசத்தில் தோற்றார்.

புளோரிடாவின் குடியரசுக் கட்சி ஆளுநர் ரான் டிசாண்டிஸின் 2024 அதிபர் தேர்தல் பிரசாரத்தின் துணை பிரசார மேலாளராகப் பணியாற்றிய டேவிட் பாலியாங்க்ஸி, டிரம்பின் சொந்த களத்தில் அவரை ஹாரிஸ் தோற்கடித்ததால் இந்த மாற்றம் ஏற்பட்டிருக்கலாம் என்று கூறினார்.

அவர் முதன்முதலில் அதிபர் பதவிக்கு போட்டியிட்டதில் இருந்து, டிரம்ப் நாட்டின் மு க்கிய அரசியல் பிம்பமாக இருந்து கவனம் பெற்று வருகிறார். ஊடகங்களில் அவரை பற்றிய செய்திகள் தலைப்பு செய்திகளாகின.

ஆனால், தற்போது ஊடகங்களின் கவனம் கூட ஜனநாயகக் கட்சியின் தேசிய மாநாட்டிற்கு சில வாரங்களுக்கு முன்பில் இருந்து கமலா ஹாரிஸின் பக்கம் திரும்பியுள்ளது. சமீபத்திய வாரங்களில் தலைப்புச் செய்திகளிலும் அவர் இடம்பிடித்துவிட்டார். அவரை பற்றிய செய்திகள் ஆதிக்கம் செலுத்துகின்றன. அவர் எந்த ஒரு பெரிய ஊடகத்துக்கும் நேர்காணல் கொடுக்காமலே இந்த பெயரை சம்பாதித்துவிட்டார்.

 

துணை அதிபர் தேர்வால் உற்சாகமான அரங்கம்

சமீபத்தில் ஒரு படுகொலை முயற்சியை எதிர்கொண்ட முன்னாள் அதிபர் டிரம்பை மேடையேற்றுவது அவ்வளவு சாதாரண விஷயமல்ல என்று பாலியன்ஸ்கி கூறினார். "இது மிகவும் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம்," என்று அவர் கூறினார்.

வால்ஸை தனது துணை அதிபர் வேட்பாளராக தேர்ந்தெடுத்ததன் மூலம் கமலா ஹாரிஸ் பிரசாரம் மேலும் உற்சாகமாகிவிட்டது.

இந்த பிரசாரங்கள் மக்கள் மத்தியில் என்ன விளைவை ஏற்படுத்தி உள்ளது என்பதை இவ்வளவு சீக்கிரம் கணித்துவிட முடியாது. ஆனால் அரிசோனா, நெவேடா மற்றும் ஜார்ஜியா போன்ற முக்கிய மாநிலங்களில் அரசியல் ஆய்வாளர்கள் குடியரசுக் கட்சிக்கு சாதகமாக சூழல் இருப்பதாக கணித்துள்ளனர்.

உண்மையில், வால்ஸ் தான், கமலா ஹாரிஸின் புதிய வேட்புமனுவுக்கு ஆதரவாக பேச கடந்த மாதம் ஊடகங்களில் தோன்றியபோது "விசித்திரமான" என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார். ஹாரிஸுடன் சேர்ந்து பிலடெல்பியா பேரணியில் குடியரசுக் கட்சியின் எதிர்ப்பாளர்களைப் பற்றி பேசும்போது அவர் அதை மீண்டும் அழுத்தமாக பயன்படுத்தினார்: "இவர்கள் மிகவும் விசித்திரமானவர்கள் மற்றும் வினோதமானவர்கள்." என்றார்.

வால்ஸின் பிரசார பாணி பிபிசியிடம் பேசிய பல வாக்காளர்களிடம் எதிரொலித்தது. மினசோட்டா கவர்னர் வெளிப்படையாக பேசக் கூடியவர் என்பதால் அவரைப் பிடித்திருப்பதாக அவர்கள் சொன்னார்கள்.

புளோரிடாவின் செயின்ட் அகஸ்டின் நகரில் விடுமுறையில் இருக்கும் ஓஹியோ மாகாண வாக்காளர் டைலர் ஏங்கல், வால்ஸ் "ஒரு சாதாரண மனிதர், இயல்பானவர் போல் தெரிகிறது" என்று கூறினார்.

"இந்த நாட்டுக்கு மிகவும் தேவையான ஒன்று, இயல்பாக, சாதாரணமாக இருக்கும் ஆட்சியாளர்கள் தான்" என்று ஏங்கல் மேலும் கூறினார்.

மற்றொரு வாக்காளர், பென்சில்வேனியாவின் ஜான் பேட்டர்சன், "வால்ஸ் மிகவும் உண்மையான நபர்" என்று கூறினார்.

 

வாக்காளர்களின் மனதில் இடம் பிடித்த அந்த வார்த்தை

சில அரசியல் ஆலோசகர்கள் "விசித்திரமான" என்னும் வார்த்தையின் செயல்திறனைக் கண்டு வியந்தனர். இது இயல்பாக அனைவரின் மனதிலும் தாக்கம் ஏற்படுத்தக் கூடிய வார்த்தை.

ட்ரம்ப் மற்றும் ஜே.டி.வான்ஸை "விசித்திரமானவர்கள்" என்று அழைப்பது, அதிபர் பைடனின் "ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல்" என்ற கருப்பொருளை "மிகவும் புரிந்துகொள்ளக்கூடிய இலகுவான மற்றும் பேச்சுவழக்கு வார்த்தை என்று பிரையன் ப்ரோகாவ் கூறினார். இவர் கமலா ஹாரிஸின் பிரசாரங்கள் மற்றும் 2020 இல் அவரது அதிபர் பிரசாரத்தை ஆதரித்த சூப்பர் பிஏசியை நடத்தியவர்.

அவரைப் பொறுத்தவரை, ஜோ பைடனின் நான்கு ஆண்டுகள் பதவியில் இருந்ததைப் பற்றிய விமர்சனத்திலிருந்து பிரசாரத்தின் மையத்தை மாற்றுவதற்கு இந்த வார்த்தை உதவியது.

குடியரசுக் கட்சி கருத்துக்கணிப்பாளர் ஃபிராங்க் லண்ட்ஸ் அவரின் கட்சியின் செயல்பாடு மீதான சந்தேகம் உணர்வை வெளிப்படுத்தினார்.

செவ்வாயன்று பிபிசி நியூஸ்நைட்டில், ஹாரிஸை முன்னணி போட்டியாளராக குறிப்பிட்டார், கமலா ஹாரிஸ் ஒரு புதிய "வேகத்தை" பெற்றிருப்பதாகக் குறிப்பிட்டார்.

ஆனால் அவர் "விசித்திரமான" என்னும் முத்திரையை நிராகரித்தார், இது வாக்காளர்கள் மத்தியில் எதிரொலிக்கவில்லை என்று கூறினார்.

பிபிசி நேர்காணல் செய்த பல நடுநிலையான வாக்காளர்கள் மத்தியில் கமலா ஹாரிஸின் சொல்லாடல் தாக்கம் ஏற்படுத்தி இருப்பது போல் தெரிகிறது.

அட்லாண்டாவைச் சேர்ந்த ஒரு சுயாதீன வாக்காளர் ஜேக்கப் ஃபிஷர், டிரம்ப் மற்றும் வான்ஸை "விசித்திரமானவர்கள்" என்று அழைப்பது பொருத்தமானது என்று கூறினார்.

"இது நியாயமானது என்று நான் நினைக்கிறேன்," ஃபிஷர் கூறினார்.

"இது மிகவும் கடுமையான விமர்சனம் என்று நீங்கள் சொல்ல முடியாது, ஏனென்றால் குடியரசுக் கட்சியினர் மிகவும் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்துகின்றனர்” என்றார்.

இருப்பினும், டிரம்பை ஆதரிப்பதாகக் கூறிய வாக்காளர்கள் பலர் பிரசாரத்தின் சமீபத்திய வார்த்தைகளால் ஈர்க்கப்படவில்லை.

பைடன்-ஹாரிஸ் நிர்வாகத்தின் கீழ் அமெரிக்கா "நரகத்திற்குச் செல்கிறது" என்ற கருத்தை இல்லினாய்ஸின் ஃபிராங்க் மற்றும் தெரசா வாக்கர் பகிர்ந்து கொண்டனர். புளோரிடாவில் டிரம்ப் ஆதரவு வாக்காளரான ஜெம் லோவரி ஹாரிஸின் சொல்லாடல் பிடிக்கவில்லை என்று கூறினார்.

"ஜனநாயகக் கட்சியினர் தான் வித்தியாசமானவர்கள். எனவே குடியரசுக் கட்சியினரை 'விசித்திரம்’ என்று அழைப்பது சரியானது அல்ல " என்று லோரி பிபிசியிடம் கூறினார்.

Link to comment
Share on other sites

  • Replies 94
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்

ட்ரம்பின் சொத்துப் பெறுமதியிலும் வீழ்ச்சியை ஏற்படுத்திய கமலா ஹரிஸின் வருகை

12 AUG, 2024 | 06:20 PM
image

(ஆர்.சேதுராமன்)

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிடும் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தனது புதிய போட்டியாளரான கமலா ஹரீஸை எதிர்கொள்ள திணறி வருகிறார்.

ஜனநாயகக் கட்சி சார்பில் ஜனாதிபதி ஜோ பைடன் போட்டியிட்டபோது, 81 வயதான பைடனின் தடுமாற்றங்கள், மறதி போன்றவற்றை தூக்கிப்பிடித்து அவருக்கு எதிரான பிரச்சாரத்தில் ஈடுபட்டுவந்தார் 78 வயதான டொனால்ட் ட்ரம்ப்.

ஜூன் 27ஆம் திகதி நடைபெற்ற பைடன், ட்ரம்ப் விவாதத்தின்போது பைடனின் செயற்பாடுகள் மிக மந்தமாக இருந்ததால் ஜனநாயகக் கட்சி பெரும் பின்னடவை எதிர்கொண்டது. அதையடுத்து ட்ரம்பின் வெற்றி தடுக்க முடியாது என்றே பலர் கருதினர். கருத்துக் கணிப்புகளில் பைடனை விட ட்ரம்ப் முதலிடம் பெற்றிருந்தார்

ஆனால், ஜனாதிபதி தேர்தல் போட்டியிலிருந்து ஜோ பைடன் ஒதுங்கி, அக்கட்சியின் வேட்பாளராக கமலா ஹரீஸ் அறிவிக்கப்பட்ட பின்னர் நிலைமை தலைகீழாக மாறிவிட்டது.

download.jfif

ஜோ பைடனை விட கமலா ஹரிஸை தோற்கடிப்பது இலகுவானது என்றுதான், கமலா ஹரிஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்னர் ட்ரம்ப் முதலில் கூறினார்.

ஆனால், அவர் எதிர்பார்த்தவாறு களநிலைவரம் இல்லை. கமலா ஹரிஸின் வருகையால் தனது பிரச்சாரத் திட்டத்தையே மாற்றியமைக்க வேண்டிய நிர்ப்பந்தம் ட்ரம்ப்புக்கு ஏற்பட்டது.

இது குறித்து ட்ரம்ப்பும் ஆத்திரமடைந்துள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன.

பைடன் விலகிவிட்டதால் அனைத்து நடவடிக்கைகளையும் மீள ஆரம்பிக்க வேண்டியுள்ளதால், பைடனுக்கு எதிரான பிரச்சாரத்துக்காக குடியரசுக் கட்சி செலவிட்ட பணம் திருப்பிக் கொடுக்கப்பட வேண்டும் எனவும் ட்ரம்ப் கூறினார்.

தனது சொந்த சமூக வலைத்தளமான 'ட்ரூத் சோஷல்' தளத்தில் ஜூலை 22 ஆம் திகதி ட்ரம்ப் வெளியிட்ட பதிவொன்றில், 'நேர்மையற்ற ஜோ பைடனுக்கு எதிராக பெருமளவு நேரத்தையும் பணத்தையும் செலவிட நாம் நிர்ப்பந்திக்கப்பட்டோம்.  இப்போதும் நாம் அனைத்தையும் மீள ஆரம்பிக்க வேண்டியுள்ளது. இந்த மோசடிக்காக குடியரசுக் கட்சிக்கு பணம் மீளளிக்கப்பட வேண்டியதில்லையா?' என ட்ரம்ப் கேள்வி எழுப்பியிருந்தார்.

நன்கொடைகள்

பைடன் போட்டியிலிருந்து விலக வேண்டுமென வலியுறுத்தி, நன்கொடை வழங்குவதை இடைநிறுத்தி வைத்திருந்த அவரின் சொந்தக் கட்சி நன்கொடையாளர்கள் கமலா ஹரிஸின் வருகையால் பெரும் உற்சாகமடைந்தனர். இதனால் 24 மணித்தியாலங்களில் 81 மில்லியன் டொலர்கள் கமலா ஹரிஸின் பிரச்சாரத்துக்கு திரட்டப்பட்டது.

அதிக நன்கொடை கிடைப்பது வேட்பாளருக்கான ஆதரவு நிலையை ஊகித்துக் கொள்வதற்கான ஓர் அளவுகோலாக கருதப்படுவதும், அமெரிக்கத் தேர்தல்களின் வேட்பாளர்கள் தமக்கு கிடைத்த நன்கொடைகளை பெருமையுடன் வெளிப்படுத்திக் கொள்வதற்கு ஒரு காரணமாகும்.

கடந்த ஜூலை மாதத்தில் தனக்கு 138.7 மில்லியன் டொலர் நன்கொடை  கிடைத்ததாக டொனால்ட் ட்ரம்பின் தேர்தல் பிரச்சாரக் குழு அறிவித்தது. சில தினங்களில் கமலா ஹரிஸின் பிரச்சாரக் குழு ஜூலை மாத சேகரிப்பை அறிவித்தபோது அது ட்ரம்பின் கிடைத்த தொகையைவிட இரு மடங்கை விட அதிகமாக இருந்தது. ஜூலையில் 310 டொலர் கிடைத்ததாக அக்குழு அறிவித்தது.  இதில் 200 மில்லியனுக்கும் அதிகமான தொகை கமலா ஹரிஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு ஒரு வாரத்துக்குள் திரட்டப்பட்ட தொகை என்பது குறிப்பிடத்தக்கது.

ட்ரம்பின் சொத்துக்களின் பெறுமதி வீழ்ச்சி

பிரச்சாரத்துக்கான நிதி திரட்டலில் கமலா ஹரிஸ் தற்போது முன்னிலையில் இருக்கும் நிலையில், அவர் ஜனாதிபதி பதவிக்கான போட்டியில் இறங்கிய பின் ட்ரம்பின் தனிப்பட்ட சொத்துக்களிலும் 900 மில்லியன் டொலர் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என்றால் ஆச்சரியமாக இருக்கும். ஆனால் அது உண்மை.

டுவிட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் ட்ரம்புக்கு தடை விதிக்கப்பட்ட பின்னர் 2021 ஒக்டோபரில் ட்ரூத் சோஷல் எனும் டுவிட்டர் பாணி சமூக வலைத்தளத்தை ட்ரம்ப் ஸ்தாபித்தார்.  இதன் உரிமையாளராக ட்ரம்ப் மீடியா அன்ட் டெக்னோலஜிஸ் குரூப் எனும் நிறுவனம் உள்ளது. அந்நிறுவனத்தில் 1114.75 மில்லியன் பங்குகளை வைத்திருக்கிறார் ட்ரம்ப்.

கமலா ஹரிஸ் ஜனாதிபதி பதவிக்கான  போட்டியில் களமிறங்கிய பின்னர், மேற்படி நிறுவனத்தில்; ட்ரம்புக்குச் சொந்தமான பங்குகளின் பெறுமதி 23 சதவீதம் குறைந்துவிட்டது.

ஜூலை 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பைடன் போட்டியிலிருந்து விலகியதுடன், கமலா ஹரிஸை ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்தார். அதற்கு முந்தைய இறுதி பங்குச்சந்தை நாளான ஜூலை 19 ஆம் திகதி மேற்படி நிறுவனத்திலுள்ள ட்ரம்பின் பங்குகளின்  4 பில்லியன் டொலர்களைவிட சற்று அதிகமாக இருந்தது. ஆனால், அதன்பின் அப்பங்குகளின் பெறுமதி 3.1 பில்லியன் டொலர்களாக குறைந்துவிட்டது.

ஜனாதிபதியாக பதவி வகித்தபோது தனது தீர்மானங்களை அறிவிப்பதற்கு டுவிட்டரை பயன்படுத்தியவர் ட்ரம்ப், அவர் ஜனாதிபதி தேர்தலில் வென்றால், ட்ரூத் சோஷல் வலைத்தளமே ஜனாதிபதியின் பிரதான தொடர்பாடல் தளமாக இருப்பதற்கு வாய்ப்புள்ளது. அதனால் மேற்படி நிறுவனத்pன் பங்குகளின் பெறுமதி அதிகரிக்கக்கூடும். இந்நிலையில், ட்ரம்ப் மீண்டும் ஜனாதிபதியாகுவாரா என்பது தொடர்பாக பங்குச்சந்தை வர்த்தகர்களின் ஒரு பந்தய விடயமாக ட்ரூத் சோஷல் நிறுவன பங்கு விலைகளின் ஏற்ற இறக்கங்கள் கருதப்படுகின்றன. 

கடந்த ஜூன் இறுதியில் ஜோ பைடனின் மந்தமான விவாதத்தின் பின்னர் மேற்படி நிறுவனப் பங்குகளின் விலை தற்காலிகமாக அதிகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

உப ஜனாதிபதி வேட்பாளர்கள்

உப ஜனாதிபதி வேட்பாளர் தெரிவும் டொனால்ட் ட்ரம்புக்கு அதிகம் சாதகமாக அமையவில்லை எனக் கூறப்படுகிறது.

ஒஹையோ மாநிலத்தைச் சேர்ந்த 40 வயதான செனட்டர் ஜே.டி. வான்ஸை தனது உப ஜனாதிபதி வேட்பாளராக ஜூலை 15 ஆம் திகதி  ட்ரம்ப் அறிவித்தார்.

ஜோ பைடனுடான போட்டியை கருத்திற்கொண்டே வான்ஸை ட்ரம்ப் தெரிவு செய்தார். ஆனால், அடுத்த ஒரு வாரத்துக்குள் தேர்தலிலிருந்து பைடன் விலகி, கமலா ஹரிஸ் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டவுடன் ட்ரம்பின் தந்திரோபாயங்கள் கேள்விக்குறியாகிவிட்டன.

அத்துடன், ஜே.டி. வான்ஸ்  புதிய வாக்காளர்களை கவரும் வகையில் இல்லை. ஏற்கெனவே உள்ள ட்ரம்பின் தீவிர ஆதரவாளர்களை மேலும் தூண்டிவிடக்கூடியராகவே வான்ஸ் உள்ளார் என விமர்சனங்கள் உள்ளன.

உதாரணமாக, நிக்கி ஹாலே போன்ற ஒருவரை உப ஜனாதிபதி வேட்பாளராக ட்ரம்ப் தெரிவுசெய்திருந்தால் அவர் மிதவாத கொள்கையுடைய வாக்களர்களையும்  கவர்ந்திருப்பார் என சிலர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

உப ஜனாதிபதி வேட்பாளர்களில் மிக மோசமான தெரிவு வான்ஸ் என ட்ரம்பின் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த தன்னை இனங்காட்ட விரும்பாத பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார் என செய்தி வெளியாகியுள்ளது.

'இக்கட்டடத்தில் எமது தரப்பிலுள்ளவர்களிடம் கேட்டால், 10 பேரில் 9 பேர் அவர் ஒரு மோசமான தெரிவு எனக் கூறுவார்கள்' என மற்றொரு குடியரசுக் கட்சி எம்.பி. தெரிவித்துள்ளார். 

வாக்காளர்களிடம் சிறந்த அபிப்பிராயத்தை ஏற்படுத்த வான்ஸ் தவறியமை குறித்து ட்ரம்ப் அதிருப்தியடைந்துள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன.

மறுபுறம் கமலா ஹரிஸ் தனது உப ஜனாதிபதி வேட்பாளராக மினேசோட்டா மாநில ஆளுநர் டிம் வால்ஸை தெரிவுசெய்துள்ளார். 60 வயதான டிம் வால்ஸ், இராணுவ வீரராகவும் ஆசிரியராகவும் பணியாற்றியவர். கமலா ஹரீஸ் தன்னை இந்தியராகவும் கறுப்பினத்தராகவும் அடையாளப்படுத்தும் நிலையில், வெள்ளையின வாக்காளர்களைக் கவர்வதற்கு டிம் வால்ஸ் உதவுவார் எனக் கருதப்படுகிறது.

2016ஆம் ஆண்டின் ஜனாதிபதி தேர்தலில் பிரச்சாரக் கூட்டங்களுக்கு ஹிலாரி கிளின்டனைவிட அதிக மக்கள் பங்குபற்றும் பிரச்சாரக் கூட்டங்களை நடத்தியவர்   டொனால்ட் ட்ரம்ப். (2020 ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரங்கள் கொவிட் 19 பெருந்தொற்று பரவல்காலத்தில் நடைபெற்றன. அதனால் வேட்பாளர்கள், நேரடி பிரச்சாரக் கூட்டங்களை குறைத்துக்கொண்டனர்.)

ஆனால், கடந்த வாரம் கமலா ஹரிஸும், டிம் வால்ஸும் பிலடெல்பியா, பீனிக்ஸ் நகரங்களில்  நடத்திய பிரச்சாரக் கூட்டங்களில் 14,000 இற்கும் அதிகமானோர்  கலந்துகொண்டனர். சுமார் ஒரு தசாப்தகாலத்தில் ட்ரம்பின் பிரச்சாரக் கூட்டங்களுக்கே இவ்வாறு அதிக எண்ணிக்கையிலான மக்கள் திரள்வார்கள் என்ற அபிப்பிராயம் நிலவியது. தற்போது கமலா ஹரிஸ், டிம் வோல்ஸ் அதனையும் தகர்க்க ஆரம்பித்துள்ளனர்.

கருத்துக்கணிப்புகளிலும் தற்போது டொனால்ட் ட்ரம்ப்பைவிட கமலா ஹரிஸ் முன்னிலையில் உள்ளார். ஆனால், இத்தேர்தலுக்கு இன்னும் சுமார் 3 மாதங்கள் உள்ளதையும் கருத்திற்கொள்ள வேண்டும்.

https://www.virakesari.lk/article/190936

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 10/8/2024 at 18:52, ஏராளன் said:

டிரம்பை முந்தும் கமலா ஹாரிஸ் - ஒரே வார்த்தையால் அமெரிக்க தேர்தல் களத்தை புரட்டிப் போட்டது எப்படி?அமெரிக்க அதிபர் தேர்தல், கமலா ஹாரிஸ்

இதுகள் இரண்டும் ஏதோ சிறுவர் பூங்காவிலை நிண்டு கெக்கட்டம் விட்டு சிரிக்கிறது போல போற வாற இடமெல்லாம் 32 பல்லையும் காட்டி  வீம்புக்கு சிரிச்சுக்கொண்டு நிக்குதுகள்.🤣

வெற்றி  டொனால்ட் ரம்ப் அவர்களுக்கு மட்டுமே....😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈலோன் மஸ்க் உடனான பேட்டியில் கமலா ஹாரிஸ், கிம் ஜாங் உன், புதின் குறித்து டிரம்ப் கூறியது என்ன?

ஈலோன் மஸ்க் உடனான பேட்டி

பட மூலாதாரம்,GETTY IMAGES

7 மணி நேரங்களுக்கு முன்னர்

முன்னாள் அமெரிக்க அதிபரும் குடியரசுக் கட்சி வேட்பாளருமான டொனால்ட் டிரம்பை, எக்ஸ் (முன்னர் ட்விட்டர்) தள உரிமையாளர் ஈலோன் மஸ்க் நேர்காணல் செய்துள்ளார்.

நவம்பரில் நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் டொனால்ட் டிரம்புக்கு, ஈலோன் மஸ்க் தனது ஆதரவை முன்னரே தெரிவித்திருந்தார். இந்த நேர்காணல் எக்ஸ் தளத்தில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.

அப்போது ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் போட்டியில் முன்னணியில் உள்ள கமலா ஹாரிஸ், தற்போதைய அதிபர் பைடன், வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன், ரஷ்ய அதிபர் புதின் மற்றும் இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்பு (Iron dome) என டிரம்ப் பல விஷயங்களைப் பற்றி பேசியுள்ளனர்.

கடந்த மாதம் தன் மீது தாக்குதல் நடத்தப்பட்ட இடமான பென்சில்வேனியாவின் பட்லருக்கு மீண்டும் அக்டோபரில் செல்லவிருப்பதாகவும், தான் அதிபராக பதவியேற்றால் அமெரிக்க வரலாற்றில் இல்லாத அளவுக்கு சட்டவிரோதமாக குடியேறியவர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

கமலா ஹாரிஸ் பற்றி டிரம்ப் கூறியது என்ன?

கமலா ஹாரிஸ் பற்றி டிரம்ப் கூறியது என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,அதிபர் தேர்தலுக்கான போட்டியில் இறங்கிய பிறகு ஒரு முழு அளவிலான நேர்காணலை கமலா ஹாரிஸ் இதுவரை கொடுக்கவில்லை

“கமலா ஹாரிஸ் ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர்கள் பட்டியலில் இடம் பெற்ற பிறகும் கூட, இது போன்ற நேர்காணல்களை அவர் வழங்கவில்லை” எனக் கூறினார் டிரம்ப்.

அதற்கு பதிலளித்த ஈலோன் மஸ்க், “என்னுடன் ஒரு நேர்காணல் என்றால் கமலா ஹாரிஸ் நிச்சயமாக வர மாட்டார்” என்று கூறினார்.

தொடர்ந்து அதிபர் பைடனை விமர்சித்த டிரம்ப், “எனக்கு ஆச்சரியமாக உள்ளது. ஒரு முழுநேர அரசியல்வாதியாக (பைடன்) இருப்பவரால், ஒரு கேள்விக்கு சரியாக பதிலளிக்க முடியவில்லை. நேர்காணல்கள் என்றால் பயப்படுகிறார்” என்று கூறினார்.

ஆனால், அதிபர் பைடன் சில நாட்களுக்கு முன்பாக தான் அமெரிக்க ஒளிபரப்பு ஊடகமான சிபிஎஸ் (CBS) செய்திகளுக்கு நேர்காணல் அளித்திருந்தார்.

கமலா ஹாரிஸ் தொடர்ந்து பல பிரசாரக் கூட்டங்களை நடத்தி வந்தாலும், அதிபர் தேர்தலுக்கான போட்டியில் இறங்கிய பிறகு ஒரு முழு அளவிலான நேர்காணலை இதுவரை கொடுக்கவில்லை.

புதின் மற்றும் கிம் ஜாங் உன் பற்றி டிரம்ப் கூறியது என்ன?

புதின் மற்றும் கிம் ஜாங் உன் பற்றி டிரம்ப் கூறியது என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,யுக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பிற்கு அமெரிக்க அதிபர் பைடன்தான் காரணம் என்று டிரம்ப் கூறினார்

புதின் மற்றும் வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் ஆகியோர் குறித்து தனக்கு நன்றாகத் தெரியும் என்று டிரம்ப் கூறினார்.

"அவர்கள் இருவரும் புத்திசாலிகள், அதே சமயத்தில் ஆபத்தானவர்களும் கூட. கமலா ஹாரிஸ் மற்றும் பைடனின் செயல்பாடுகளை அவர்கள் நம்பவில்லை" என்றார்.

யுக்ரேனை தாக்க வேண்டாம் என்று புதினிடம் தான் கேட்டுக் கொண்டதாகவும், ஆனால் புதின் அதற்கு செவிசாய்க்கவில்லை என்றும் டிரம்ப் கூறினார்.

“நான் புதினுடன் அடிக்கடி பேசுவேன். அவர் என்னை மதிப்பார். அவரிடம் (புதின்) ‘யுக்ரேன் மீது போர் தொடுக்காதீர்கள், தொடுக்கவும் கூடாது’ என்று சொன்னேன். ஆனால் அவர் கேட்கவில்லை. ‘வேறு வழியில்லை’ என்று என்னிடம் கூறினார், நான் வழி உள்ளது என்றேன்” என்று கூறினார் டிரம்ப்.

ஆனால், யுக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பிற்கு அமெரிக்க அதிபர் பைடன்தான் காரணம் என்றும் கூறினார் டிரம்ப்.

 

இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்பு குறித்து டிரம்ப் கூறியது என்ன?

இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்பு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,குறுகிய இலக்குகளை தாக்கும் ஏவுகணைகளை முறியடிப்பதில் இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்பு பயனுள்ளதாக இருக்கிறது

இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்பு (Iron Dome), அந்நாட்டை ஏவுகணை தாக்குதல்களில் இருந்து தொடர்ந்து பாதுகாத்து வருகிறது.

"நாமும் ஏன் அமெரிக்காவிற்கென பிரத்யேகமாக ஒரு வான் வழி பாதுகாப்பு அமைப்பை ஏற்படுத்தக்கூடாது, இஸ்ரேலிடம் கூட அது உள்ளது." என்று கூறினார் டிரம்ப்.

குறுகிய இலக்குகளை தாக்கும் ஏவுகணைகளை முறியடிப்பதில் இஸ்ரேலின் இந்த பாதுகாப்பு கவசம் பயனுள்ளதாக உள்ளது. இது 2006இல் அமெரிக்க ஆதரவுடன் இஸ்ரேலிய நிறுவனங்களால் வடிவமைக்கப்பட்டது.

 

டிரம்ப்- ஈலோன் மஸ்க் இடையேயான முரண்பாடுகள்

டிரம்ப்- ஈலோன் மஸ்க் இடையேயான முரண்பாடுகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஈலோன் மஸ்க் மற்றும் டிரம்ப் இடையிலான பேட்டி திட்டமிட்ட நேரத்தை விட 40 நிமிடங்கள் தாமதமாகவே தொடங்கியது. இதற்கு எக்ஸ் தளம் மீது நடத்தப்பட்ட சைபர் தாக்குதல்களே காரணம் என்று ஈலோன் மஸ்க் குற்றம் சாட்டினார்.

இரண்டு மணிநேரங்கள் நடத்தப்பட்ட இந்த நேர்காணலில் டிரம்புக்கான தனது ஆதரவை மீண்டும் அழுத்தமாக வெளிப்படுத்தினார் ஈலோன் மஸ்க். நடுநிலை வாக்காளர்கள் அனைவரும் டிரம்பின் குடியரசுக் கட்சிக்கு ஆதரவளிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டிரம்பிற்கு 2021இல் எக்ஸ் தளத்தைப் (அப்போது ட்விட்டர்) பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. ஈலோன் மஸ்க் 2022இல் அதைக் கையகப்படுத்திய பிறகும் எக்ஸ் தளத்தை மீண்டும் பயன்படுத்த மறுத்து வந்தார் டிரம்ப்.

தன் மீதான எக்ஸ் தள தடைக்குப் பிறகு ட்ரூத் சோஷியல் (Truth social) என சொந்தமாக ஒரு சமூக ஊடக தளத்தை தொடங்கினார் டிரம்ப்.

இதற்கு முன்பாக பலமுறை மின்சார வாகனங்கள் குறித்த தனது சந்தேகத்தையும் நம்பிக்கையின்மையையும் வெளிப்படுத்தியுள்ளார் டிரம்ப். ஆனால் இன்றைய நேர்காணலில் ஈலோன் மஸ்கின் டெஸ்லா நிறுவனத்தின் மின்சார வாகனத் திட்டத்தை பாராட்டினார் டிரம்ப்.

அரசியல் விமர்சகர்களின் கூற்றுப்படி, இருவருக்கும் கடந்த காலத்தில் சில முரண்பாடுகள் இருந்திருந்தாலும் கூட, இந்த நேர்காணல் மூலம் அதிபர் தேர்தலில் தனக்கான ஆதரவை வலுப்படுத்த விரும்பினார் டிரம்ப். அதேபோல எக்ஸ் தளத்தை ஒரு முக்கிய செய்தி ஊடகமாக மக்களிடம் கொண்டுசேர்க்க விரும்பும் ஈலோன் மஸ்க்கும் இந்த நேர்காணலின் மூலம் பயனடைந்துள்ளார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஏராளன் said:

ஈலோன் மஸ்க் உடனான பேட்டியில் கமலா ஹாரிஸ், கிம் ஜாங் உன், புதின் குறித்து டிரம்ப் கூறியது என்ன?

ஈலோன் மஸ்க் உடனான பேட்டி

பட மூலாதாரம்,GETTY IMAGES

7 மணி நேரங்களுக்கு முன்னர்

முன்னாள் அமெரிக்க அதிபரும் குடியரசுக் கட்சி வேட்பாளருமான டொனால்ட் டிரம்பை, எக்ஸ் (முன்னர் ட்விட்டர்) தள உரிமையாளர் ஈலோன் மஸ்க் நேர்காணல் செய்துள்ளார்.

நவம்பரில் நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் டொனால்ட் டிரம்புக்கு, ஈலோன் மஸ்க் தனது ஆதரவை முன்னரே தெரிவித்திருந்தார். இந்த நேர்காணல் எக்ஸ் தளத்தில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.

அப்போது ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் போட்டியில் முன்னணியில் உள்ள கமலா ஹாரிஸ், தற்போதைய அதிபர் பைடன், வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன், ரஷ்ய அதிபர் புதின் மற்றும் இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்பு (Iron dome) என டிரம்ப் பல விஷயங்களைப் பற்றி பேசியுள்ளனர்.

கடந்த மாதம் தன் மீது தாக்குதல் நடத்தப்பட்ட இடமான பென்சில்வேனியாவின் பட்லருக்கு மீண்டும் அக்டோபரில் செல்லவிருப்பதாகவும், தான் அதிபராக பதவியேற்றால் அமெரிக்க வரலாற்றில் இல்லாத அளவுக்கு சட்டவிரோதமாக குடியேறியவர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

கமலா ஹாரிஸ் பற்றி டிரம்ப் கூறியது என்ன?

கமலா ஹாரிஸ் பற்றி டிரம்ப் கூறியது என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,அதிபர் தேர்தலுக்கான போட்டியில் இறங்கிய பிறகு ஒரு முழு அளவிலான நேர்காணலை கமலா ஹாரிஸ் இதுவரை கொடுக்கவில்லை

“கமலா ஹாரிஸ் ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர்கள் பட்டியலில் இடம் பெற்ற பிறகும் கூட, இது போன்ற நேர்காணல்களை அவர் வழங்கவில்லை” எனக் கூறினார் டிரம்ப்.

அதற்கு பதிலளித்த ஈலோன் மஸ்க், “என்னுடன் ஒரு நேர்காணல் என்றால் கமலா ஹாரிஸ் நிச்சயமாக வர மாட்டார்” என்று கூறினார்.

தொடர்ந்து அதிபர் பைடனை விமர்சித்த டிரம்ப், “எனக்கு ஆச்சரியமாக உள்ளது. ஒரு முழுநேர அரசியல்வாதியாக (பைடன்) இருப்பவரால், ஒரு கேள்விக்கு சரியாக பதிலளிக்க முடியவில்லை. நேர்காணல்கள் என்றால் பயப்படுகிறார்” என்று கூறினார்.

ஆனால், அதிபர் பைடன் சில நாட்களுக்கு முன்பாக தான் அமெரிக்க ஒளிபரப்பு ஊடகமான சிபிஎஸ் (CBS) செய்திகளுக்கு நேர்காணல் அளித்திருந்தார்.

கமலா ஹாரிஸ் தொடர்ந்து பல பிரசாரக் கூட்டங்களை நடத்தி வந்தாலும், அதிபர் தேர்தலுக்கான போட்டியில் இறங்கிய பிறகு ஒரு முழு அளவிலான நேர்காணலை இதுவரை கொடுக்கவில்லை.

புதின் மற்றும் கிம் ஜாங் உன் பற்றி டிரம்ப் கூறியது என்ன?

புதின் மற்றும் கிம் ஜாங் உன் பற்றி டிரம்ப் கூறியது என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,யுக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பிற்கு அமெரிக்க அதிபர் பைடன்தான் காரணம் என்று டிரம்ப் கூறினார்

புதின் மற்றும் வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் ஆகியோர் குறித்து தனக்கு நன்றாகத் தெரியும் என்று டிரம்ப் கூறினார்.

"அவர்கள் இருவரும் புத்திசாலிகள், அதே சமயத்தில் ஆபத்தானவர்களும் கூட. கமலா ஹாரிஸ் மற்றும் பைடனின் செயல்பாடுகளை அவர்கள் நம்பவில்லை" என்றார்.

யுக்ரேனை தாக்க வேண்டாம் என்று புதினிடம் தான் கேட்டுக் கொண்டதாகவும், ஆனால் புதின் அதற்கு செவிசாய்க்கவில்லை என்றும் டிரம்ப் கூறினார்.

“நான் புதினுடன் அடிக்கடி பேசுவேன். அவர் என்னை மதிப்பார். அவரிடம் (புதின்) ‘யுக்ரேன் மீது போர் தொடுக்காதீர்கள், தொடுக்கவும் கூடாது’ என்று சொன்னேன். ஆனால் அவர் கேட்கவில்லை. ‘வேறு வழியில்லை’ என்று என்னிடம் கூறினார், நான் வழி உள்ளது என்றேன்” என்று கூறினார் டிரம்ப்.

ஆனால், யுக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பிற்கு அமெரிக்க அதிபர் பைடன்தான் காரணம் என்றும் கூறினார் டிரம்ப்.

 

இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்பு குறித்து டிரம்ப் கூறியது என்ன?

இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்பு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,குறுகிய இலக்குகளை தாக்கும் ஏவுகணைகளை முறியடிப்பதில் இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்பு பயனுள்ளதாக இருக்கிறது

இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்பு (Iron Dome), அந்நாட்டை ஏவுகணை தாக்குதல்களில் இருந்து தொடர்ந்து பாதுகாத்து வருகிறது.

"நாமும் ஏன் அமெரிக்காவிற்கென பிரத்யேகமாக ஒரு வான் வழி பாதுகாப்பு அமைப்பை ஏற்படுத்தக்கூடாது, இஸ்ரேலிடம் கூட அது உள்ளது." என்று கூறினார் டிரம்ப்.

குறுகிய இலக்குகளை தாக்கும் ஏவுகணைகளை முறியடிப்பதில் இஸ்ரேலின் இந்த பாதுகாப்பு கவசம் பயனுள்ளதாக உள்ளது. இது 2006இல் அமெரிக்க ஆதரவுடன் இஸ்ரேலிய நிறுவனங்களால் வடிவமைக்கப்பட்டது.

 

டிரம்ப்- ஈலோன் மஸ்க் இடையேயான முரண்பாடுகள்

டிரம்ப்- ஈலோன் மஸ்க் இடையேயான முரண்பாடுகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஈலோன் மஸ்க் மற்றும் டிரம்ப் இடையிலான பேட்டி திட்டமிட்ட நேரத்தை விட 40 நிமிடங்கள் தாமதமாகவே தொடங்கியது. இதற்கு எக்ஸ் தளம் மீது நடத்தப்பட்ட சைபர் தாக்குதல்களே காரணம் என்று ஈலோன் மஸ்க் குற்றம் சாட்டினார்.

இரண்டு மணிநேரங்கள் நடத்தப்பட்ட இந்த நேர்காணலில் டிரம்புக்கான தனது ஆதரவை மீண்டும் அழுத்தமாக வெளிப்படுத்தினார் ஈலோன் மஸ்க். நடுநிலை வாக்காளர்கள் அனைவரும் டிரம்பின் குடியரசுக் கட்சிக்கு ஆதரவளிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டிரம்பிற்கு 2021இல் எக்ஸ் தளத்தைப் (அப்போது ட்விட்டர்) பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. ஈலோன் மஸ்க் 2022இல் அதைக் கையகப்படுத்திய பிறகும் எக்ஸ் தளத்தை மீண்டும் பயன்படுத்த மறுத்து வந்தார் டிரம்ப்.

தன் மீதான எக்ஸ் தள தடைக்குப் பிறகு ட்ரூத் சோஷியல் (Truth social) என சொந்தமாக ஒரு சமூக ஊடக தளத்தை தொடங்கினார் டிரம்ப்.

இதற்கு முன்பாக பலமுறை மின்சார வாகனங்கள் குறித்த தனது சந்தேகத்தையும் நம்பிக்கையின்மையையும் வெளிப்படுத்தியுள்ளார் டிரம்ப். ஆனால் இன்றைய நேர்காணலில் ஈலோன் மஸ்கின் டெஸ்லா நிறுவனத்தின் மின்சார வாகனத் திட்டத்தை பாராட்டினார் டிரம்ப்.

அரசியல் விமர்சகர்களின் கூற்றுப்படி, இருவருக்கும் கடந்த காலத்தில் சில முரண்பாடுகள் இருந்திருந்தாலும் கூட, இந்த நேர்காணல் மூலம் அதிபர் தேர்தலில் தனக்கான ஆதரவை வலுப்படுத்த விரும்பினார் டிரம்ப். அதேபோல எக்ஸ் தளத்தை ஒரு முக்கிய செய்தி ஊடகமாக மக்களிடம் கொண்டுசேர்க்க விரும்பும் ஈலோன் மஸ்க்கும் இந்த நேர்காணலின் மூலம் பயனடைந்துள்ளார்.

இந்த கொமெடி நிகழ்வைப் பற்றிய செய்திகள் பார்த்தேன்.

வழமை போல தொழில்னுட்பக் கோளாறுகளால் திக்கி முக்கி ஆரம்பித்து இருவரும் பல்வேறு "பொய்யான தகவல்களை" காற்றில் இருந்து பிடுங்கிப் போட்டு சகோதரத்துவ உணர்வோடு உரையாடியிருக்கிறார்களாம். சமூக நீதியை ஆதரிக்கும் பல நிறுவனங்கள் எக்ஸ் இல் விளம்பரம் செய்யாமல் விலகிக் கொண்டிருக்கின்றன. இதனால் எக்ஸ் இற்கு வருமான இழப்பு. ட்ரம்பிற்கு கமலா ரீம் செய்திகளில் முன்னணி வகிப்பது உறுத்தியிருக்கிறது.

வேலிக்கு ஓணான் சாட்சி போல இப்படியொரு SNL skit செய்திருக்கிறார்கள் இரு தரப்பும்😎!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கமலா ஹரிஸை விவாதத்திற்கு அழைத்த எலான் மஸ்க்

முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை தொடர்ந்து, ஜனாதிபதி வேட்பாளர் கமலா ஹாரிஸையும் நேர்காணல் செய்ய தயார் என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நவம்பர் 5ஆம் திகதி நடைபெற உள்ளது. இதில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து, குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் களம் காண்கிறார்.

ஜனாதிபதி தேர்தலில், டிரம்பை ஆதரிப்பதாக அறிவித்த உலகின் முன்னணி தொழிலதிபர் எலான் மஸ்க் டிரம்பின் தேர்தல் நிதியாக 375.80 கோடி ரூபாய் வழங்கியுள்ளார். இந்நிலையில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதியும், குடியரசு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளருமான டொனால்ட் டிரம்ப்பை எலான் மஸ்க் நேர்காணல் செய்தார். இந்த நேர்காணல் எக்ஸ் தளத்தின் ஸ்பேஸில் நடைபெற்றது. அதில் பல கேள்விகளுக்கு டிரம்ப் பதிலளித்தார்.

இந்த நேர்காணலில் கமலா ஹாரிஸ் குறித்து அவர் பேசியதாவது;

“கமலா ஹாரிஸ் அமெரிக்காவை அழித்து விடுவார். அவருடைய பொருளாதாரச் சிந்தனைகள் நாட்டுக்குக் கேடு விளைவிக்கும். ஏற்கெனவே பணவீக்கத்தால் அமெரிக்கப் பொருளாதாரம் பெரும் சரிவைச் சந்தித்துள்ளது. அமெரிக்கர்கள் மத்தியில் சேமிப்பு குறைந்துவிட்டது. மேலும் அமெரிக்கர்கள் கடன் வாங்கி செலவழிக்க ஆரம்பித்துவிட்டனர். கமலா ஹாரிஸ் அதிபரானால் இது மேலும் மோசமாகும். கமலா ஹாரிசை வரவேற்றுள்ள சட்டவிரோத நபர்களின் எண்ணிக்கை நாம் நினைப்பதை விட அதிகம். அவரைத் தேர்ந்தெடுத்தால் நாட்டில் வணிகம் இல்லாமல் போய்விடும்” என கமலா ஹாரிஸை தாக்கிப் பேசினார்.

இந்நிலையில், ‘கமலா ஹாரிஸை எக்ஸ் ஸ்பேஸஸிலும் நேர்காணல் செய்வதில் மகிழ்ச்சி’ என எலான் மஸ்க் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

https://thinakkural.lk/article/307860

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஏராளன் said:

முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை தொடர்ந்து, ஜனாதிபதி வேட்பாளர் கமலா ஹாரிஸையும் நேர்காணல் செய்ய தயார் என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

யார்யார் நேர்காணல் செய்வதென்ற விவஸ்தையே இல்லாமல் போய்விட்டது.

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

யார்யார் நேர்காணல் செய்வதென்ற விவஸ்தையே இல்லாமல் போய்விட்டது.

compressed_gm_40_img_709978_21b8f8d8_169

எலான் மஸ்குக்கு... இருக்கின்ற தொழில் காணாது என்று,
இங்கையும் வந்து, மற்றவனின் பிழைப்பில் மண் அள்ளிப் போடப் பார்க்கிறா(ன்)ர். 😂

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

An independent who avoided politics is now organizing for Harris. She’s not the only Indian American coming off the sidelines

On a recent Sunday afternoon, Vineeta Gupta hosted 20 Indian American women at her home in Silver Spring, Maryland. Fueled by chana masala, naan and rice pudding, they wrote hundreds of postcards in an appeal to fellow South Asians.

Their message: Vote Kamala Harris for the next president of the United States.

Organizing for a political candidate was a highly unusual move for Gupta, a 61-year-old physician and human rights lawyer who immigrated to the US from India in 2003. Despite advocating various social justice causes, Gupta — a registered independent — had never involved herself in electoral politics outside of voting.

That changed last month when Harris, the daughter of Indian and Jamaican immigrants, rose to the top of the Democratic ticket after President Joe Biden announced he wouldn’t seek reelection.

Gupta joined several WhatsApp groups of politically activated South Asian Americans. She participated in a “South Asian Women for Harris” Zoom call. She appealed to skeptical women of color on LinkedIn. On August 6, she drove to Philadelphia to watch Harris introduce Minnesota Gov. Tim Walz as her running mate — Gupta’s first election rally.

“It became impossible not to engage,” she told CNN. “The choice is not about Democrats or Republicans. The choice is between democracy and losing it.”

 

Gupta, who immigrated to the US from India in 2003, says she didn't engage much with electoral politics until Harris became the presumptive Democratic presidential nominee. She's seen here at an August 6 Harris rally in Philadelphia.

Gupta, who immigrated to the US from India in 2003, says she didn't engage much with electoral politics until Harris became the presumptive Democratic presidential nominee. She's seen here at an August 6 Harris rally in Philadelphia. 

Courtesy Vineeta Gupta

Many Indian Americans appear to share Gupta’s newfound enthusiasm and urgency. Over the past several weeks, national and grassroots political organizers from the community say they’ve seen a groundswell of support and energy for the Harris campaign. Aunties and uncles are exchanging “LOTUS for POTUS” memes in WhatsApp group chats (Kamala means lotus in Sanskrit). The Indian American Impact Fund said the South Asian women Zoom call that Gupta joined raised more than $275,000, and leaders from the advocacy group report an influx of small-dollar donations and volunteer sign-ups.

Indian Americans haven’t historically been a political force in US elections, but the 2024 race could mark a turning point for one of the fastest growing immigrant groups in the country. With the Indian American population more than doubling in key battleground states between 2010 and 2020, some organizers say a fired-up electorate could make a difference come November.

What’s driving the Harris enthusiasm

An estimated 4.8 million people in the US identify as Indian Americans – a relatively small slice of the US electorate – and more than 2.1 million of them are eligible voters, according to the research and policy organization AAPI Data.

Indian Americans tend to be a reliably Democratic voting bloc with high turnout rates: 55% of Indian American voters identified as Democrats or leaned Democratic, and 91% said they plan to vote in November, an AAPI Data survey conducted before Biden’s departure from the race found.

But while nearly half of Indian American voters (46%) indicated in the survey that they would vote for Biden, the figure was down nearly 20 points from 2020 (65%).

And many Indian Americans, like Gupta, weren’t engaged beyond the ballot box — until Harris catapulted to the top of the ticket.

https://www.cnn.com/2024/08/17/politics/indian-americans-kamala-harris-election-cec/index.html

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா,இங்கிலாந்தில் இந்திய வம்சாவழிகள் அரசியலில் கோலோச்சுவது போல்....
இந்தியாவில் வாழும் வெளிநாட்டு வம்சாவழிகளால் முடியுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கான மிகச்சிறந்த நம்பிக்கை - கமலா ஹரிஸ் - ஜனநாயக கட்சியின் மாநாட்டில் பைடன்

Published By: RAJEEBAN  20 AUG, 2024 | 12:28 PM

image
 

அமெரிக்க ஜனநாயகத்தினை பாதுகாப்பதற்கான மிகச்சிறந்த நம்பிக்கை கமலா ஹாரிஸ் என ஜனாதிபதி ஜோபைடன் தெரிவித்துள்ளார்

அமெரிக்காவின் ஜனநாயக கட்சியின் மாநாட்டில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

kamala_biden22.jpg

நன்றி ஜோ என்ற கோசங்களிற்கு இடையில்  ஜோ பைடன் தனது மகள் ஜோ ஆஸ்லேயுடன் மேடையில் தோன்றினார்.

தனது மகள் தன்னை அறிமுகப்படுத்திய பின்னர் கண்ணீருடன் உரையாற்றிய பைடன் நீங்கள் சுதந்திரத்திற்காக வாக்களிக்க தயாரா?அமெரிக்காவிற்கும் ஜனநாயக கட்சிக்கும் வாக்களிக்க தயாரா? கமலா ஹரிசையும் டிம் வோல்சினையும் தெரிவு செய்ய தயாரா என கேள்வி எழுப்பினார்.

டொனால்ட் டிரம்பினை பலமுறை தாக்கிய பைடன் ஹரிசிற்கான மிகச்சிறந்த தொண்டனாக விளங்குவேன் என்றார்.

kamala_biden.jpg

நான் ஜனாதிபதி பதவியை நேசிக்கின்றேன் ஆனால் அதனை விட அமெரிக்காவை நேசிக்கின்றேன் என அவர் தெரிவித்தவேளை மாநாட்டில் திரண்டிருந்தவர்கள் நாங்கள் ஜோவை நேசிக்கின்றோம் என கோசம் எழுப்பினர்.

அமெரிக்க பொருளாதாரத்தை வலுப்படுத்தியது,சர்வதேச ரீதியில் அதன் நட்புறவை வலுப்படுத்தியது போன்ற தனது அரசாங்கத்தின் சாதனைகளை பட்டியலிட்;ட பைடன் தனக்கு பின்னர் வெள்ளை மாளிகைக்கு கமலா ஹாரிசினை தெரிவு செய்யுமாறு வேண்டுகோள் விடுத்தார்.

அமெரிக்காவிற்கு தொடர்ந்தும் பாதிப்பு ஏற்படுத்தி வரும் நிறவெறி வெள்ளை மேலாதிக்கம் போன்றவற்றை சாடியுள்ள பைடன் அவற்றிற்கு அமெரிக்காவில் இடமில்லை என தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/191515

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜனநாயகக் கட்சி மாநாடு: ‘அமெரிக்காவுக்கு என்னால் முடிந்ததை எல்லாம் செய்துவிட்டேன்’- கண்கலங்கிய அதிபர் ஜோ பைடன்

அதிபர் ஜோ பைடன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், அந்தோனி ஸர்ச்சர்
  • பதவி, பிபிசி நிருபர், வட அமெரிக்கா
  • 4 மணி நேரங்களுக்கு முன்னர்

அதிபர் பதவிக்கு பிரியாவிடை கொடுக்கும் விதத்தில் ஒரு உணர்ச்சிகரமான சொற்பொழிவை இந்த ஆண்டு கொடுப்போம் என அமெரிக்க அதிபர் பைடன் நினைத்திருக்க மாட்டார். அதுவும் இந்த தேர்தல் சூழலில்.

ஆனால் ஒருவரது அதிர்ஷ்டம் எவ்வளவு விரைவாக மாறும் என்பதை யாராவது அறிந்துகொள்ள வேண்டுமென்றால், அதற்கு இன்னல்கள் மற்றும் துன்பங்களால் பாதிக்கப்பட்டுள்ள பைடனின் தனிப்பட்ட மற்றும் அரசியல் வாழ்க்கையே சான்றாகும்.

அமெரிக்காவின் சிகாகோவில் நடந்துவரும், ஜனநாயகக் கட்சியின் தேசிய மாநாட்டின் முதல் நாள் நிகழ்வில் (நேற்று), மக்கள் நிறைந்த அரங்கத்தில் உரையாற்றினார் பைடன்.

தனது ஆட்சி காலத்தின் நடவடிக்கைகளை முழுவதுமாக நியாயப்படுத்தி அவர் பேசினார். 2020 மற்றும் 2024 அதிபர் தேர்தலுக்கான பிரசாரத்தில் தான் எழுப்பிய பிரச்னைகள் குறித்தும், ஜுலை மாதத்தில் அதிபர் தேர்தல் போட்டியில் இருந்து விலகியது குறித்தும் பேசினார்.

"உங்களில் பலரைப் போலவே, நானும் என் இதயத்தையும் ஆன்மாவையும் இந்த தேசத்திற்காக கொடுத்துள்ளேன்," என்று அவர் கூறினார். கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் அவர் நிகழ்த்திய உரையின் முடிவில் "நன்றி, ஜோ" போன்ற பைடனுக்கு ஆதரவான குரல்கள் அரங்கம் முழுவதும் ஒலித்தது.

'கமலா மிகவும் தைரியமான பெண்'

'கமலா மிகவும் தைரியமான பெண்'

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, "உங்கள் மீது பேரன்பு உள்ளது" என்று துணை அதிபர் கமலா, பைடனிடம் கூறுவதைக் காண முடிந்தது

தனது மனைவி ஜில் மற்றும் மகள் ஆஷ்லே ஆகியோரது அறிமுக உரைக்குப் பிறகு, மேடையேறினார் பைடன்.

“அதிபர் தேர்தலில் இருந்து விலகுவதாக பைடன் எடுத்த முடிவு என்பது அவர் தீவிரமாக ஆராய்ந்து எடுத்த முடிவு, " என்று ஜில் அந்த அறிமுக உரையில் தெரிவித்தார்.

மேடையேறிய பைடன், தனது மகள் ஆஷ்லியை ஆரத்தழுவி, தன் கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்ததைக் காண முடிந்தது.

பிறகு அதிபர் பைடன் தனது நெஞ்சின் மீது கைவைத்து, நிமிர்ந்து நின்று, ஒரு புன்னகையுடன் கூட்டத்தினரைப் பார்த்தபோது அவர்கள் ஆரவாரம் செய்தனர்.

அவரது உரையில் பெரும்பாலும், அமெரிக்க வரலாற்றில் தனக்கான இடத்தைப் பற்றி பேசினாலும் கூட, துணை அதிபரான கமலா ஹாரிஸை புகழ்வதிலும் குறிப்பிட்ட நேரத்தைச் செலவிட்டார்.

"கமலாவை எனது துணை அதிபர் வேட்பாளராக தேர்வு செய்ததே, நான் அதிபர் வேட்பாளர் ஆனவுடன் எடுத்த முதல் முடிவாகும். அதுமட்டுமல்லாது இது எனது அரசியல் பயணத்தில் நான் எடுத்த சிறந்த முடிவும் அதுதான்" என்று அவர் கூறினார்.

"கமலா மிகவும் தைரியமான, அனுபவம் வாய்ந்த பெண். அவரிடம் நேர்மையும் வெளிப்படைத்தன்மையும் உள்ளது." என்றும் அவர் கூறினார்.

பைடன் தனது மனைவி ஜில் பைடனுடன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, பைடன் தனது மனைவி ஜில் பைடனுடன்

'பைடனை போன்ற இரக்கக்குணம் கொண்ட மனிதரை சந்தித்ததே இல்லை'

நான்கு வாரங்களுக்கு முன்பு அவரது ஓவல் அலுவலகத்தில் வைத்து பேசியது போலல்லாமல், ஒரு புதிய தலைமுறையிடம் பொறுப்பை அளிப்பது குறித்து அவர் நேரடியாக குறிப்பிடவில்லை, ஆனால் சொல்ல வந்த செய்தி தெளிவாகப் புரிந்தது.

அதிபர் தனது கருத்துகளைக் கூறி முடித்த பிறகு, பைடனையும் அவரது மனைவி ஜில்லையும் கட்டித் தழுவ, ஹாரிஸ் மற்றும் அவரது கணவர் டக் எம்ஹாஃப் மேடைக்கு வந்தனர்.

"உங்கள் மீது பேரன்பு உள்ளது" என்று துணை அதிபர் கமலா, பைடனிடம் கூறுவதைக் காண முடிந்தது.

பைடன் தனது உரையின் முடிவில், கணிசமான பகுதியை கமலா ஹாரிஸைப் புகழ்வதற்காகச் செலவிட்டார். இருப்பினும், பிற பேச்சாளர்கள் தற்போதைய அதிபர் பைடனைப் பாராட்டியே அதிகம் பேசினார்கள்.

பின்னர் மேடையில் பேச கமலா ஹாரிஸ் முன்வந்தபோது, மக்களின் பெரும் உற்சாகம், அரங்கம் முழுவதும் எதிரொலித்த கைத்தட்டல்களில் வெளிப்பட்டது.

"ஜோ, உங்கள் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தலைமைக்கும், எங்கள் தேசத்திற்கான உங்கள் வாழ்நாள் சேவைக்கும், நீங்கள் தொடர்ந்து செய்யப்போகும் அனைத்திற்கும் நன்றி," என்று கூறினார்.

"நாங்கள் உங்களுக்கு என்றென்றும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்." என்றும் கூறினார் கமலா ஹாரிஸ்.

பின்னர், டெலாவேர் மாநில செனட்டரும் பைடனின் நெருங்கிய நண்பர்களில் ஒருவருமான கிறிஸ் கூன்ஸ், அதிபரைப் பற்றி பாராட்டிப் பேசினார்.

"ஜோ பைடனை போன்ற ஒரு இரக்கக்குணம் கொண்ட மனிதரை நான் சந்தித்ததே இல்லை," என்று அவர் கூறினார்.

"தனிப்பட்ட இழப்புகளைக் கடந்து, நம்பிக்கையோடு பலரின் எதிர்காலத்திற்காக இவ்வளவு விஷயங்களைச் செய்த ஒரு மனிதனை நான் ஒருபோதும் அறிந்ததில்லை." என்றார்.

 
மாநாட்டு அரங்கத்தில் இருந்து பைடனுக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, ஜனநாயகக் கட்சியின் ஆதரவாளர்கள் நிரம்பிய மாநாட்டு அரங்கத்தில் இருந்து பைடனுக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது

பைடனின் அரசியல் வாழ்க்கை

அதற்கு முன்னதாக மாலையில் மேடையில் பேசிய ஹிலாரி கிளிண்டன், "வெள்ளை மாளிகை இழந்த கண்ணியம், நேர்மை மற்றும் ஆற்றலை மீண்டும் கொண்டு வந்தவர் ஜோ பைடன்" என்று கூறினார்.

ஜனநாயகக் கட்சியின் சார்பாக 2016 ஆம் ஆண்டில் அதிபர் வேட்பாளராக போட்டியிட்டவர் ஹிலாரி கிளிண்டன். அவர் மேடையேறியபோது பெரும் வரவேற்பு கிடைத்தது.

''அமெரிக்காவின் முதல் பெண் அதிபர் என்ற சாதனையை தன்னால் படைக்க முடியவில்லை, ஆனால் அதிபராக கமலா ஹாரிஸ் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொள்ளும்போது அது நிறைவேறும்’' என்று அவர் கூறினார்.

ஜனநாயகக் கட்சியின் ஆதரவாளர்கள் நிரம்பிய மாநாட்டு அரங்கத்தில் இருந்து பைடனுக்கு கிடைத்த வரவேற்பும் அதே அளவில், பெரும் உற்சாகத்துடன் இருந்தது.

சிகாகோவில் கூடியிருந்த ஜனநாயகக் கட்சியினர் நாள் முழுவதும் மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர்.

ஆனால் பைடனுக்கு அவர்கள் வெளிப்படுத்திய உற்சாக அலை என்பது, தேர்தலில் இருந்து விலகுவதாக அவர் எடுத்த முடிவுக்கு நன்றி தெரிவிப்பதன் அடையாளமாக இருக்கலாம் அல்லது அவரது நீண்ட கால அரசியல் வாழ்க்கைக்கான ஒரு பிரியாவிடையாகவும் இருக்கலாம்.

பைடனின் அரசியல் வாழ்க்கை தொடங்கியது 1972இல். அமெரிக்க அரசின் அவையான காங்கிரசுக்கு அவர் தனது 29வது வயதில் முதன்முதலில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பைடன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,பைடன் தனது மகள் ஆஷ்லேவுடன்

நாளை பராக் ஒபாமா இந்த மாநாட்டு கூட்டத்தில் உரையாற்றுகிறார். புதன்கிழமை, பில் கிளிண்டன் உரையாற்றுவார். இருவரும், தொடர்ந்து இரண்டாவது முறை தேர்தலில் நின்று வெற்றி பெற்ற முன்னாள் அதிபர்கள்.

பைடனுக்கு அந்த வாய்ப்பு கிடைக்காது. அவரால் ஒருமுறை மட்டுமே அமெரிக்க அதிபராக இருக்க முடிந்தது. அந்த பதவிக்காலத்தை குறித்து விளக்கவும் நியாயப்படுத்தவும் அவர் இந்த உரையில் கவனம் செலுத்தினார்.

அடுத்த ஐந்து மாதங்களில் முக்கிய தேசிய நிகழ்வு ஏதும் இல்லை என்றால், கணிசமான அமெரிக்க தொலைக்காட்சி பார்வையாளர்கள் முன் அவர் உரையாற்றுவது இதுவே கடைசியாக இருக்கும்.

உரையின் முடிவில், ‘அமெரிக்காவின் கீதம்’ என்ற பாடலில் இருந்து ஒரு வரியை மேற்கோள் காட்டினார்.

"எனது பணி நிறைவடையும்போது, நான் ஒன்றை மனதில் நினைவுபடுத்திக் கொள்கிறேன், அமெரிக்கா, அமெரிக்கா, நான் உங்களுக்கு என்னால் முடிந்த அனைத்தையும் வழங்கினேன்," என்று அவர் கூறினார்.

மீண்டும் அரங்கம் மக்களின் கைத்தட்டல்களால் நிறைந்தது.

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, அவர் ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளராக இருந்த போது, கொரோனா பெருந்தொற்று காரணமாக, இத்தகைய ஒரு ஜனநாயகக் கட்சி மாநாட்டையும், கட்சியினரின் பாராட்டுகளையும், மக்களின் உற்சாகத்தையும் அவரால் காண முடியவில்லை.

ஜனநாயகக் கட்சி மாநாட்டில் பைடனுக்கு கிடைக்கக்கூடிய மிகச்சிறந்த தருணமாக இது இருந்தது.

பைடன் தனது உரையை முடித்ததும், அரங்கை விட்டு வெளியேறி, ‘ஏர்ஃபோர்ஸ் ஒன்’ விமானத்தில் விடுமுறைக்காக கலிபோர்னியாவிற்குச் சென்றார். சிகாகோவில் நடக்கும் இந்த ஜனநாயகக் கட்சியின் தேசிய மாநாட்டிற்காக அவர் ஒதுக்கியது சில மணிநேரங்கள் மட்டுமே, நாட்கள் அல்ல.

அதேபோல, ஒரு சில மாதங்களுக்கு முன்பாக அமெரிக்காவின் அதிபராக மேலும் சில ஆண்டுகள் இருப்போம் என்ற ஆசை அவர் மனதில் இருந்தபோதிலும், இப்போது அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது சில மாதங்களே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் - கமலா ஹரிஸிற்கு ஆதரவை வெளியிட்டார் கிளின்டன் - மகிழ்ச்சியின் ஜனாதிபதி என தெரிவிப்பு

22 AUG, 2024 | 12:03 PM
image
 

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சியின் சார்பில் போட்டியிடும் கமலா ஹரிசிற்கு தனது ஆதரவை வெளியிட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி பில்கிளின்டன் மகிழ்ச்சியின் ஜனாதிபதிக்கு  அமெரிக்க ஜனாதிபதி வாக்களிக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

எங்களிற்கு மகிழ்ச்சியின் ஜனாதிபதி கமலா ஹரிஸ் தலைமை தாங்கவேண்டிய தேவையுள்ளது, நான் எனது கடமையை செய்கின்றேன் நீங்கள் உங்கள் கடமையை செய்யுங்கள் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அமெரிக்காவின் 42 வது ஜனாதிபதியான பில்கிளின்டன் அமெரிக்கா மேலும் அதிகளவிற்கு அனைவரையும் உள்வாங்குவதாகவும், அதிகளவிற்கு எதிர்காலம் குறித்து கவனம் செலுத்துவதாகவும் மாறவேண்டும் என விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

பல சந்தர்ப்பங்கள் வாய்ப்புகள் காணப்படுகின்ற சூழலில் பல பிரச்சினைகளிற்கு தீர்வை காணவேண்டிய நிலையில் அர்த்தமற்ற சொல்லாட்சிகளில் நாங்கள் சிக்குண்டு கிடப்பது எங்கள் மீதான எவ்வளவு பெரும் சுமை என்பதை நீங்கள் சிந்தித்து பாருங்கள், என வேண்டுகோள் விடுத்துள்ள பில்கிளின்டன், கமலா ஹரிஸ் தலைமை தாங்கும் அமெரிக்காவை விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/191690

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரசார கூட்டத்தில் திடீரென்று மருத்துவ உதவி கேட்ட ட்ரம்ப்: வெளியான காரணம்

துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு பின் முதல்முறையாக பொதுவெளியில் உரையாற்றிய முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) திடீரென உரையை நிறுத்திவிட்டு மருத்துவ உதவி கோரியமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவமானது நேற்று (22) வடக்கு - கரோலினாவில் (North Carolina) டெனால்ட் ட்ரம்ப் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது இடம்பெற்றுள்ளது.

மருத்துவ உதவி

சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில், தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங்குப்பற்றிய ஒருவருக்கு மருத்துவ உதவி தேவை என்று உணர்ந்ததை அடுத்து ட்ரம்ப் தனது உரையை நிறுத்தியுள்ளார்.

 

துப்பாக்கி குண்டு துளைக்காத கண்ணாடி கூண்டுக்குள் இருந்து உரையாற்றிக்கொண்டிருந்த ட்ரம்ப் குறித்த பெண்ணுக்கு மருத்துவ உதவிகளை வழங்குமாறு வைத்தியர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளதுடன் பெண் நின்று கொண்டிருந்த பெண்ணிடம் சென்று அவரின் உடல்நிலை தொடர்பில் விசாரித்துள்ளார்.

மேலும், டொனால்ட் ட்ரம்பின் இந்த செயலானது, பிரச்சாரக் கூட்டத்திற்கு வந்தவர்களிடையே பெரும் பாராட்டுக்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://ibctamil.com/article/trump-s-rally-halted-for-urgent-help-1724360425

Link to comment
Share on other sites

ஒபாமாவின்  கமலாவுக்கான ஆதரவு பேச்சை ஊடகங்கள் இருட்டடிப்பு செய்தனவா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வரலாற்று சிறப்பு மிக்க தருணத்தில் அம்மாவை நினைவு கூர்ந்த கமலா ஹாரிஸ்; ஜனநாயகக் கட்சி மாநாட்டில் நெகிழ்ச்சி

மாநாட்டில் கமலா ஹாரிஸை வாழ்த்திய மக்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, மாநாட்டில் கமலா ஹாரிஸை வாழ்த்திய மக்கள் கட்டுரை தகவல்
  • எழுதியவர், அந்தோணி சுர்ச்சர்
  • பதவி, பிபிசி செய்திகள், சிகாகோ
  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

வியாழன் இரவு அன்று அமெரிக்காவில் நடைபெற்ற ஜனநாயகக் கட்சியின் மாநாட்டில் பங்கேற்ற கமலா ஹாரிஸ், அதிகாரப்பூர்வமாக அந்த கட்சியின் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, அந்த அறிவிப்பை அவர் ஏற்றுக் கொண்டார்.

அமெரிக்க வரலாற்றில் முதல் கருப்பின மற்றும் ஆசிய - அமெரிக்க பெண் அதிபர் வேட்பாளர் என்ற சாதனையை நிகழ்த்தியிருக்கும் கமலா ஹாரிஸ், 45 நிமிடம் மாநாட்டில் பேசினார்.

அவர் யார்? அமெரிக்க மக்களுக்காக அவர் என்ன செய்ய இருக்கிறார்? தற்போது நடைபெற்று வரும் காஸா - இஸ்ரேல் போர் குறித்த நிலைப்பாடு என்ன? என்பது குறித்தும், அவரின் குடும்பப் பின்னணி, அவர் தாயாரின் பங்களிப்பு குறித்தும் மாநாட்டில் குழுமியிருந்த மக்கள் முன் கமலா ஹாரிஸ் பேசினார்.

நடுத்தர குடும்பப் பின்னணியில் இருந்து வருகிறேன் - கமலா ஹாரிஸ்

பலருக்கும் கமலா ஹாரிஸ் யார் என்று தெரியும். ஆனால் அவரின் பின்புலம், அவர் கொண்டிருக்கும் நம்பிக்கை போன்றவை பற்றி அறிந்திருக்கவில்லை. முதன்முறையாக தன்னுடைய குடும்பப் பின்னணி குறித்து பேசி தன்னைப் பற்றிய ஒரு முழுமையான அறிமுகத்தை மக்கள் முன்பு ஏற்படுத்தினார்.

தன்னுடைய அம்மாவைப் பற்றி பேசிய அவர், எவ்வாறு 19 வயதில் அவர் அம்மா அமெரிக்காவுக்கு வந்தார் என்றும், அவருடைய பெற்றோர்கள் எவ்வாறு சந்தித்துக் கொண்டனர், எவ்வாறு விவாகரத்து பெற்றனர் என்றும் கூறினார்.

கலிஃபோர்னியாவில் உள்ள ஓக்லாந்தில், உழைக்கும் வர்க்க மக்கள் வாழும் பகுதியில் கழிந்த தன்னுடைய பால்ய காலத்தைக் குறித்தும் அவர் பேசினார்.

"நான் ஒரு நடுத்தர குடும்பப் பின்னணியில் இருந்து வருகிறேன். என்னுடைய அம்மா இவ்வளவுதான் செலவழிக்க வேண்டும் என்ற பட்ஜெட்டை நிர்ணயம் செய்திருப்பார். அதில்தான் நாங்கள் எங்கள் வாழ்க்கையை வாழ்ந்தோம். எங்களுக்கு அந்த சூழலில் கிடைத்த அனைத்து வாய்ப்புகளையும் நாங்கள் முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று என்னுடைய அம்மா எதிர்பார்த்தார்," என்று கூறினார்.

மேற்கொண்டு பேசிய அவர் ஏன் ஒரு வழக்கறிஞராக வர ஆசைப்பட்டார் என்பதையும் கூறினார்.

"என்னுடைய வாழ்நாள் முழுவதும் நான் ஒரே ஒரு வாதிக்காகதான் வாதாடியுள்ளேன். அது மக்கள்தான்," என்று பேசினார்.

 
கணவர் டக் எம்ஹாஃப், மற்றும் துணை அதிபர் வேட்பாளர் டிம் வால்ட்ஸ் மற்றும் அவருடைய மனைவி க்வென்னுடன் கமலா ஹாரிஸ்

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு, கணவர் டக் எம்ஹாஃப், மற்றும் துணை அதிபர் வேட்பாளர் டிம் வால்ஸ் மற்றும் அவருடைய மனைவி க்வென்னுடன் கமலா ஹாரிஸ்

காஸா போரில் கமலா ஹாரிஸின் நிலைப்பாடு என்ன?

பாலத்தீன ஆதரவாளர்கள் பலரும் மாநாடு நடைபெற்றுக் கொண்டிருக்கும் பகுதிக்கு வெளியே பேரணி நடத்தி வருகின்ற சுழலில், தன்னுடைய உரையில் வெளியுறவுக் கொள்கை குறித்து பேசினார் கமலா ஹாரிஸ்.

தற்போது நடைபெற்று வரும் காஸா போர் குறித்து பேசிய அவர், "பைடனும், நானும் இது குறித்து தொடர்ந்து பணியாற்றி வருகிறோம். பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டுக்கும் நபர்களை காப்பாற்றி, போர் நிறுத்தத்தை அறிவிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது" என்று கூறினார்.

போர் நிறுத்தம் குறித்து பேசினாலும் கூட, இஸ்ரேல் தன்னை காத்துக் கொள்ளும் முழுத்திறனும் உள்ளது என்பதை உறுதி செய்த அவர் அக்டோபர் 7 ஆம் தேதி நடைபெற்ற தாக்குதல் குறித்தும் தன்னுடைய உரையில் குறிப்பிட்டார். மேலும் பாலத்தீனர்கள் தற்போது சந்தித்துக் கொண்டிருக்கும் சவால்கள் மன வேதனையை அளிக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.

இவரின் இந்த அறிவிப்பு, பைடனின் காஸா போர் குறித்த கொள்கைகளையே ஹாரிஸின் ஆட்சியும் பின் தொடரும் என்ற கருத்தை வெளிப்படையாக்கியுள்ளது.

 
தேசிய ஜனநாயகக் கட்சி மாநாடு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, தேசிய ஜனநாயகக் கட்சி மாநாடு

கருக்கலைப்பு தடை குறித்து கமலா ஹாரிஸ் கூறியது என்ன?

கொள்கைகள் தொடர்பாக தன்னுடைய உரையில் பேசிய ஹாரிஸ் மக்களின் அன்றாட தேவைகளுக்கான செலவீனத்தை குறைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று கூறினார். சுகாதார சேவை, வீட்டு வசதி மற்றும் உணவு என பல அன்றாட தேவைகளின் விலையை கட்டுப்படுத்த இருப்பதாக கூறினார்.

மேற்கொண்டு பேசிய அவர் பெண்களுக்கான கருக்கலைப்பு உரிமையை நிலை நாட்டுவது குறித்து தன்னுடைய கருத்தை வெளியிட்டார்.

"டொனால்ட் டிரம்ப் பதவிக்கு வரும் பட்சத்தில் தேசிய அளவில் கருக்கலைப்புக்கு தடை விதிக்கப்படும்," என்று மாநாட்டில் குறிப்பிட்டார்.

டொனால்ட் டிரம்ப் அதிபராக இருந்த போது மூன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கொண்ட அமர்வை நியமித்தார். 50 ஆண்டுகளாக பெண்களின் இந்த உரிமையை பாதுகாத்து வந்த ரோ Vs வேட் என்ற வழக்கின் தீர்ப்புக்கு எதிராக முடிவெடுத்து அந்த தீர்ப்பை செல்லாது என்று அறிவித்தனர்.

இதன் விளைவாக, தற்போது 22 மாகாணங்களில் கருக்கலைப்புக்கு தடை விதித்துள்ளன. அதில் 14 மாகாணங்களில் எந்த விதமான சூழலிலும் கருக்கலைப்புக்கு அனுமதி இல்லை. 10 மாகாணங்களில் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகிய பெண்களின் கருக்கலைப்புக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

 
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்

'டிரம்ப் ஒரு அச்சுறுத்தல்'- கமலா ஹாரிஸ்

''டொனால்ட் டிரம்பை மீண்டும் வெள்ளை மாளிகைக்குள் அனுமதித்தால் ஏற்படும் பின்விளைவுகள் மிகவும் தீவிரமாக இருக்கும் என்று மாநாட்டில் அவர் பேசினார்.

அமெரிக்க நாடாளுமன்றம் கூடும் கேப்பிடல் கட்டடத்தை 2021 ஜனவரி 6ம் தேதி அன்று டிரம்ப் ஆதரவாளர்கள் தாக்கியதை குறித்து பேசிய அவர், டொனால்ட் டிரம்ப் மீதான குற்றச்சாட்டுகள் குறித்தும் பட்டியலிட்டார்.

குடியரசுக் கட்சியினரால் அறிமுகம் செய்யப்பட்ட ஹெரிட்டேஜ் ஃபவுண்டேஷன் திட்டம் 2025 குறித்து விமர்சனம் செய்த கமலா ஹாரிஸ் இது அமெரிக்காவை பின்னோக்கி இழுத்து செல்லும் திட்டம் என்றும் குறிப்பிட்டார். ஏற்கனவே இந்த திட்டத்தை டொனால்ட் டிரம்ப் கைவிட்டிருந்த போதிலும், இது டிரம்பின் ஆலோசகர்களால் எழுதப்பட்டது என்றும் இது அமெரிக்காவின் வளர்ச்சிக்கு எதிரானது என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

கமலா ஹாரிஸின் பரப்புரையில் எதிர்காலம் மற்றும் கடந்த காலத்தின் ஒப்பீடு ஒரு முக்கியமான அம்சமாக கருதப்படுகிறது. இது அவருடைய அதிபர் வேட்பாளர் ஏற்புரையிலும் இடம் பெற்றிருக்கிறது.

இந்த ஒரு அம்சம் அவருடைய குடியரசுக் கட்சியின் வேட்பாளரிடம் இருந்து மட்டுமல்ல, தற்போதைய அதிபர் ஜோ பைடனிடம் இருந்தும் கமலா ஹாரிஸை தனித்து காட்டுகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கமலா ஹாரிசுக்கு எதிராக தடுமாறும் டிரம்ப் - அதிபர் தேர்தல் வரை இதேநிலை நீடிக்குமா?

அமெரிக்கா, கமலா ஹாரிஸ், டிரம்ப்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், சாரா ஸ்மித்
  • பதவி, வட அமெரிக்கா ஆசிரியர்
  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

சிகாகோவில் நடைபெற்ற ஜனநாயக கட்சி மாநாட்டில் வீறுநடையுடன் மேடையேறிய கமலா ஹாரிஸ், தன்னை ஆதரிப்பதற்கு சிறந்ததொரு வாய்ப்பு உள்ளதாக அமெரிக்கர்களிடம் தெரிவித்தார்.

இந்த வார தொடக்கத்தில் அம்மாநாட்டில் ஒபாமாவும் அவருடைய மனைவியும் ஆற்றிய எழுச்சிமிக்க உரை போன்று இல்லை எனினும், கமலா ஹாரிஸின் 40 நிமிட உரையின் போது அரங்கத்தில் பரவசமும் நம்பிக்கையும் எழுந்ததை தெளிவாக காண முடிந்தது.

உயர் அதிகார மட்டத்தில் உள்ள பிரபலங்களின் வலியுறுத்தல்கள் மற்றும் புதிய அத்தியாயத்தின் தொடக்கம் என ஜனநாயக கட்சியினரிடையே நம்பிக்கையும், உற்சாகமும் காணப்படுகிறது. 2008 அதிபர் தேர்தலில் பராக் ஒபாமா முதன்முறையாக போட்டியிட்ட போது கூட அக்கட்சி இந்தளவுக்கு நம்பிக்கையை வெளிப்படுத்தவில்லை.

மகிழ்ச்சியில் ஜனநாயக கட்சியினர்

ஜோ பைடனின் முதிர்ந்த வயது ஒரு சிக்கலாக எழுந்த நிலையில், அவர் இத்தேர்தலில் போட்டியிடாததும் கமலா ஹாரிஸ் மற்றும் துணை அதிபர் வேட்பாளர் டிம் வால்ஸ் இருவரும் எந்த தடையுமின்றி அந்த இடத்தை அடைந்ததும், அக்கட்சியினரின் மகிழ்ச்சிக்குக் காரணமாக அமைந்துள்ளது.

ஆனால், இந்த மகிழ்ச்சிக்குப் பின்னால், ஜனநாயக கட்சியின் வாக்காளர்களும் செயற்பாட்டாளர்களும் தங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை நவம்பர் 5 அன்று வாக்கு செலுத்த ஊக்கம் அளிப்பது குறித்து கட்சி வியூகவாதிகள் கவலை கொண்டுள்ளனர்.

அதிபர் பைடன் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து விலகியதையடுத்து, கருத்துக் கணிப்புகள் ஜனநாயக கட்சிக்கு ஆதரவாக வெளிவர தொடங்கினாலும் கடுமையான போட்டியே நிலவுகிறது. வெற்றி யாருக்கு என்பதை கணிக்க முடியாத ஜார்ஜியா, அரிசோனா, நெவாடா, விஸ்கான்சின், பென்சில்வேனியா, மிச்சிகன், வடக்கு கரோலினா ஆகிய 7 மாகாணங்களே அடுத்த அதிபரை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும்.

 
அமெரிக்கா, கமலா ஹாரிஸ், டிரம்ப்

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு, கணவர் டக் எம்ஹாஃப், மற்றும் துணை அதிபர் வேட்பாளர் டிம் வால்ஸ் மற்றும் அவருடைய மனைவி க்வென்னுடன் கமலா ஹாரிஸ்

கடந்த ஆறு வாரங்களை வைத்துப் பார்க்கும் போது, தேர்தலுக்கு இன்னும் மீதமுள்ள 70 நாட்களில் விரைவில் மீண்டும் அரசியல் சூழல் மாறலாம்.

பராக் ஒபாமாவின் 2012 தேர்தலின் பிரசாரத்தை நிர்வகித்தவரும் ஜனநாயக கட்சியின் மூத்த வியூகவாதியுமான ஜிம் மெசினா, பிபிசியின் அமெரிகாஸ்ட் எனும் பாட்காஸ்ட்டில், ஜனநாயக கட்சி உறுதியாக வெற்றி பெறும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்று கூறினார்.

“அமெரிக்க அரசியலில் நீண்ட காலமாக நான் பார்த்ததிலேயே, இந்த போட்டிக்குள் கமலா ஹாரிஸ் நுழைந்ததிலிருந்து சிறப்பான 30 நாட்களை அனுபவித்துள்ளார்” என அவர் கூறினார்.

“எனினும், அவர் இத்தேர்தலில் எதிராளியுடன் சம பலத்திலேயே உள்ளார். தேர்தலுக்கு இன்னும் சுமார் 70 நாட்கள் மீதம் உள்ள நிலையில், இன்னும் கடும் போட்டியே நிலவுகிறது” என தெரிவித்தார்.

ஒபாமா பேசியது என்ன?

கமலா ஹாரிஸ் உரையின் போது, அதீத உற்சாகம் தென்பட்டாலும், அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு ஜனநாயக கட்சியினர் செய்வதற்கு இன்னும் பல வேலைகள் உள்ளன.

கமலா ஹாரிஸுக்கு எதிராக எப்படி பரப்புரை செய்வது என்பதில் டிரம்ப் இன்னும் தடுமாறுவதாக தெரிகிறது. கமலா ஹாரிஸுக்கு எதிராக தாக்குதலை தொடுப்பது எப்படி என்பதையும் அவருடைய வழக்கமான பாணியில் ஹாரிஸுக்கு இன்னும் பட்டப்பெயரையும் அவர் தீர்மானிக்கவில்லை.

தன்னுடைய பரப்புரையை சிறப்பானதாக மாற்றும் வகையில், கமலா ஹாரிஸை வரையறுக்கும் வகையில் விரைவில் டிரம்ப் ஒரு திட்டத்தை உருவாக்குவார் என தான் நம்புவதாகவும், அதுதான் அவருடைய சிறப்பான அரசியல் திறன் என்றும் முக்கியமான ஜனநாயக வியூகவாதி ஒருவர் என்னிடம் கூறினார். அதை டிரம்ப் செய்யும் போது கமலா ஹாரிஸுக்கு இந்த தேர்தல் இன்னும் கடினமானதாக மாறும்.

 
அமெரிக்கா, கமலா ஹாரிஸ், டிரம்ப்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, 2022ம் ஆண்டு வெள்ளை மாளிகை நிகழ்ச்சி ஒன்றில் ஒபாமாவும், கமலா ஹாரிஸும்

ஜனநாயக கட்சி மாநாட்டு மேடையில் நம்பிக்கை தெரிந்தாலும், எச்சரிக்கை உணர்வும் இருந்தது.

செவ்வாய்க் கிழமை இரவு மிஷெல் ஒபாமா தன் உரையில், தேர்தலில் மிகக் கடுமையான போட்டி இருக்கும் என்று எச்சரித்தார். “எந்த சந்தேகத்தையும் அழித்தொழிக்கும் வகையிலான எண்ணிக்கையில் நாம் வாக்கு செலுத்த வேண்டும்,” என குழுமியிருந்தவர்கள் மத்தியில் உரையாற்றினார். “நம்மை ஒடுக்கும் எந்த முயற்சியையும் நாம் அடக்க வேண்டும்” என்றார் அவர்.

இதே கருத்தை வலியுறுத்திய பராக் ஒபாமா, அரங்கில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கானோர் நாடு முழுவதும் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பியதும் தெருக்களில் இறங்கி வேலை செய்வதற்கு ஊக்கமளிக்கும் வகையில் சில வலுவான வார்த்தைகளை பயன்படுத்தினார்.

நாம் மதிக்கும் அமெரிக்காவுக்காக போராடுவது நம் கையில்தான் உள்ளது,” என முன்னாள் அதிபர் தெரிவித்தார். “எந்த தவறும் செய்ய கூடாது, இது ஒரு போராட்டம்” என்றார் அவர்.

"கமலா ஹாரிஸ் வெற்றி பெறுவார்"

இந்த தேர்தலில் முடிவை தீர்மானிக்கக் கூடிய, இழுபறி நிலவும் முக்கியமான மாகாணங்களில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு செய்வதற்கு எவ்வளவு வேலைகள் உள்ளன என்பது நன்றாக தெரிந்திருக்கிறது.

இந்த வாரம் நான் செல்லும் எல்லா இடங்களிலும் ஜனநாயக கட்சியினரிடம், ‘உங்களை போன்றே எல்லோரும் சக்தியுடன் இருக்கிறார்கள் என எண்ணாதீர்கள்’ என கூறி வருகிறேன்,” என ஜனநாயக கட்சியின் பிரதிநிதியும் மிச்சிகன் மாகாணத்தில் செனட் உறுப்பினருக்கான போட்டியில் உள்ளவருமான எலிசா ஸ்லாட்கின், பொலிடிகோ என்ற இணைய ஊடகத்திடம் தெரிவித்தார்.

இந்த வாரம் நடைபெற்ற நிகழ்வுகள் காரணமாக ஊக்கம் பெற்றுள்ள ஜனநாயக கட்சி பிரதிநிதிகள், ஒபாமாவின் செய்தியை மனதில் கொண்டுள்ளதாக தெரிகிறது.

 
அமெரிக்கா, கமலா ஹாரிஸ், டிரம்ப்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, கமலா ஹாரிஸ்

முக்கிய போட்டி களமான ஜார்ஜியாவை சேர்ந்த 21 வயதான கேமரோ லேண்டின், வெற்றியை சாதாரணமாக பெற முடியாது என தெரிவித்தார். ஜார்ஜியாவில் 28 ஆண்டுகள் கழித்து முதன்முறையாக கடந்த தேர்தலில் ஜனநாயக கட்சி வெற்றி பெற்றது.

“கமலா ஹாரிஸ் வெற்றி பெறுவார் என நான் நம்புகிறேன்,” என, ஹாரிஸ் மேடை ஏறுவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு கூறினார்.

சவன்னா நகரை சேர்ந்த பிராந்திய ஒருங்கிணைப்பாளரான அவர், வாக்குப்பதிவை அதிகப்படுத்துவதில் தான் தன்னைப் போன்றவர்கள் கவனம் செலுத்துவதாக கூறினார்.

இதற்காக வாரத்தில் 60 மணி நேரத்திற்கும் அதிகமாக, ஏழு நாட்களும் ஒருங்கிணைக்கின்றனர். இதற்காக தன்னார்வலர்கள் தொலைபேசி அழைப்புகள் வாயிலாகவும் நேரில் சென்றும் பரப்புரை செய்கின்றனர்” என்றார்.

கமலா ஹாரிஸ் மற்றும் வால்ஸை நோக்கி அவர்களின் உருவப்படம் கொண்ட போஸ்டர்களை அசைத்த கட்சி பிரதிநிதிகளை சுட்டிக்காட்டி, “இதுதான் வெற்றி பெறும்” என்றார். “களத்தில் உள்ள மக்களால் தான் வெற்றி கிட்டும்” என்றார்.

"மாயையில் இல்லை"

நெவெடா மாகாணத்தின் ஜனநாயக கட்சி பிரதிநிதி சூசி லீ, லாஸ் வேகாஸ் பகுதிகளை உள்ளடக்கிய மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறார். தேர்தலில் கடும் போட்டி நிலவும் என்றும், குறிப்பாக சம பலம் உள்ள தன்னுடைய மாகாணத்தில் கடும் போட்டி நிலவும் என்றும், தான் எந்தவித மாயையிலும் இல்லை என்றும் அவர் கூறினார்.

வெற்றி குறித்து அதீத நம்பிக்கையில் இருக்கக் கூடாது” என அவர் கூறுகிறார். நெவாடாவில் சில பகுதிகளில் 50-100 வாக்குகளில் கூட வெற்றி தீர்மானிக்கப்படும் என்றார். “எனவே மக்களை வாக்கு செலுத்த ஊக்குவிக்க வேண்டும்.

ஆனால், டொனால்ட் டிரம்ப் குறித்து மக்கள் சோர்வடைந்து விட்டனர் என நான் நினைக்கிறேன்,” என அவர் தெரிவித்தார். “ஹாரிஸ் மற்றும் டிரம்ப்பில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது மிக தெளிவாக உள்ளது. மக்களுக்கு அதுகுறித்து தெரியும் என நினைக்கிறேன்.” என்கிறார் அவர்.

 
அமெரிக்கா, கமலா ஹாரிஸ், டிரம்ப்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, டொனால்ட் டிரம்ப்

சிகாகோவில் நடைபெற்ற ஜனநாயக கட்சியின் அரசியல் மாநாட்டை கோடிக்கணக்கான மக்கள் பார்த்தனர். முதல் மூன்று நாள் இரவிலும் ஒவ்வொரு நிகழ்ச்சியையும் 2 கோடிக்கும் அதிகமான பார்வையாளர்கள் பார்த்தனர்.

ஹாரிஸ்-வால்ஸ் கூட்டணி நிச்சயமாக மேலும் முன்னேற்றம் அடையும். ஆனால், மற்றொரு கட்சி மாநாட்டை தொடர்ந்தே இது நிகழும் என்று மாநாட்டுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன.

கமலா ஹாரிஸ் குறித்து அமெரிக்கா இப்போதுதான் அறிந்துவரும் நிலையில், கடினமான ஊடக நேர்காணல்களை இதுவரை அவர் தவிர்த்து வருவதாலும் கொள்கைகளை குறைவாகவே வெளிப்படுத்தியுள்ளதாலும் மாநாட்டின் மகிழ்ச்சி தருணம் நீடிக்குமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

கிட்டத்தட்ட பாதி அமெரிக்கா, டிரம்ப்பின் பிடியில் உள்ளது. மூன்று தொடர்ச்சியான அதிபர் தேர்தலுக்கான பரப்புரைகள் மூலம் அவர்கள் டிரம்ப்பை நன்கு அறிவார்கள்.

இந்த தேர்தலில் ஜனநாயக கட்சியினர் நிச்சயமாக வெற்றி பெறலாம், ஆனால் அவர்கள் செய்வதற்கு பல கடினமான வேலைகள் உள்ளன.

பெர்ன்ட் டெபுஸ்மன் ஜூனியர் வழங்கிய கூடுதல் தகவல்களுடன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வலுவான இஸ்ரேல் - தொடர்ந்தும் ஆயுதவிற்பனை - சிஎன்என் பேட்டியில் கமலா ஹரிஸ்

30 AUG, 2024 | 01:24 PM
image
 

இஸ்ரேலிற்கான ஆயுதவிற்பனையை நிறுத்தமாட்டேன் என அமெரிக்க ஜனநாயக கட்சியின் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் கமலா ஹரிஸ் தெரிவித்துள்ளார்.

சிஎன்என்னிற்கு வழங்கியுள்ள பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஜோ பைடன் போன்று இஸ்ரேலிற்கான வலுவான ஆதரவை  பேட்டியில் வெளியிட்டுள்ள கமலா ஹரிஸ் காஸாவில் பெருமளவு பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதன் காரணமாக அமெரிக்கா இஸ்ரேலிற்கு ஆயுதங்களை வழங்குவதை நிறுத்தவேண்டும் என ஜனநாயக கட்சியின் உறுப்பினர்கள் சிலர் விடுத்துள்ள வேண்டுகோளை நிராகரித்துள்ளார்.

நான் வலுவான இஸ்ரேலை ஆதரிக்கின்றேன் என தெரிவித்துள்ள எனினும் காசா மோதலில் யுத்த நிறுத்தத்தை சாதகமாக்குவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும் என  தெரிவித்துள்ளார்.

யுத்த நிறுத்தம் பணயக்கைதிகள் விடுதலையை சாத்தியமாக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/192385

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

டிரம்ப் vs கமலா ஹாரிஸ்: அமெரிக்க அதிபர் தேர்தல் விவாதத்தில் முன்னிலை பெறப்போவது யார்?

டிரம்ப் vs ஹாரிஸ்  : அதிபர் தேர்தல் விவாதத்தில் முன்னிலை பெறப்போவது யார் ?

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு, கமலா ஹாரிஸ் மற்றும் டொனால்ட் டிரம்ப் கட்டுரை தகவல்
  • எழுதியவர், ஜெர்மி ஹோவெல்
  • பதவி, பிபிசி உலக சேவை
  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

அமெரிக்க அதிபர் தேர்தலை முன்னிட்டு நடைபெறும் இரண்டாவது விவாதம் அடுத்த செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளது. இந்த விவாதத்தில் முதல்முறையாக டொனால்ட் டிரம்ப் மற்றும் கமலா ஹாரிஸ் நேருக்கு நேர் விவாதிக்க உள்ளனர்.

ஒவ்வோர் ஆண்டும் அமெரிக்க அதிபர் தேர்தலின்போது வேட்பாளர்கள் மத்தியில் நடக்கும் விவாதங்கள் உலகம் முழுவதும் கவனிக்கப்படுகிறது. இந்த விவாதங்கள் அமெரிக்காவில் மக்களின் வாக்களிக்கும் முடிவுகளில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

கமலா ஹாரிஸ் விவாதிக்கும் திறன் பெற்றவர் என்று கூறப்படுகிறது. அதே நேரம் டொனால்ட் டிரம்ப் கடந்த 2016 மற்றும் 2020 அதிபர் தேர்தல் விவாதங்களில் தான் ஒரு வலிமையான வேட்பாளர் என்பதை நிரூபித்தார்.

விவாதம் எப்போது நடக்கும்? அதன் விதிகள் என்ன?

பிலடெல்பியாவில் செப்டம்பர் 10ஆம் தேதி இந்த விவாதம் நடைபெறுகிறது.

இரவு 9 மணிக்கு (Eastern Time) தொடங்கும். இது 2024ஆம் ஆண்டில் அதிபர் தேர்தலை முன்னிட்டு நடக்கும் இரண்டாவது விவாதம்.

முதல் விவாதம் ஜூன் மாதம் டொனால்ட் டிரம்ப் மற்றும் அதிபர் ஜோ பைடனுக்கு இடையே நடைபெற்றது. அதன் பின்னர் பைடன் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து விலக முடிவு செய்தார்.

இந்த முக்கியத்துவம் வாய்ந்த விவாதம் ஏபிசி ஊடகத்தில் ஒளிபரப்பப்படும் மற்றும் ஏபிசி நியூஸ் லைவ், டிஸ்னி+ மற்றும் ஹுலு ஆகியவற்றில் ஒளிபரப்பப்படும்.

இந்த விவாதத்தில் நேர வரம்புகள் கடுமையாகப் பின்பற்றப்படும். மதிப்பீட்டாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்க ஒவ்வொரு வேட்பாளருக்கும் அதிகபட்சம் இரண்டு நிமிடங்கள் மட்டுமே கொடுக்கப்படும். அதன் பின்னர் எதிர் வேட்பாளரின் கருத்துகளுக்கு மறுப்பு தெரிவித்து விவாதிக்க இரண்டு நிமிடங்கள் வழங்கப்படும்.

ஒரு வேட்பாளர் பேசும்போது மற்றொரு வேட்பாளர்களின் மைக்ரோஃபோன்கள் ஆஃப் செய்து வைக்கப்படும். மேலும் விவாத அறையில் பார்வையாளர்கள் இருக்க மாட்டார்கள்.

கமலா ஹாரிஸ் மைக்ரோஃபோன்கள் ஆஃப் செய்யப்படக் கூடாது என்று விரும்பினார், ஆனால் சமீபத்தில் விவாத விதிகளுக்கு ஒப்புக் கொண்டார்.

இந்தக் குறிப்பிட்ட விதி, நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்டது. டிரம்புக்கும் பைடனுக்கும் இடையிலான முதல் விவாதம் பல்வேறு குறுக்கீடுகள் மற்றும் வாக்குவாதங்களால் நிறைந்திருந்தது. அதைத்தொடர்ந்து இது கொண்டு வரப்பட்டது.

செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள இந்த விவாதம் டேவிட் முயர் மற்றும் லின்சி டேவிஸ் ஆகிய இரண்டு மதிப்பீட்டாளர்கள் முன்னிலையில் நடத்தப்படுகிறது. இருவரும் ஏபிசி ஊடகத்தின் செய்தியாளர்கள்.

 

கமலா ஹாரிஸின் பலம் என்ன?

டிரம்ப் vs ஹாரிஸ்  : அதிபர் தேர்தல் விவாதத்தில் முன்னிலை பெறப்போவது யார் ?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, கமலா ஹாரிஸின் முதல் பிரசார விவாதம் 2003இல் நடந்தது

கமலா ஹாரிஸ் 2003இல் சான் பிரான்சிஸ்கோ வழக்கறிஞராக போட்டியிட்டு வெற்றி பெற்றதில் இருந்தே தேர்தல் விவாதங்களில் பங்கேற்று வருகிறார்.

கலிபோர்னியாவின் அட்டர்னி ஜெனரலாகவும், கலிபோர்னியாவுக்கான அமெரிக்க செனட்டராகவும் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்பு, அவரின் வெற்றிகரமான பிரசாரங்களின் போதும் அவர் விவாதங்களில் பங்கேற்றார்.

கமலா ஹாரிஸ் 2019இல் ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் பதவிக்குப் போட்டியிட்டபோது ஜோ பைடனுடன் விவாதித்தார். மேலும் அவர் 2020 துணை அதிபர் விவாதத்தில் மைக் பென்ஸை எதிர்கொண்டார்.

மேடையில் நிற்கும்போது அந்தச் சூழலைத் தனது பேச்சுத் திறனால் தன்னால் கட்டுப்படுத்த முடியும் என்பதை அவர் காட்டினார். 2020ஆம் ஆண்டு பென்ஸுட் உடனான விவாதத்தில் அவர் குறுக்கிட்டதற்காக அவரைத் தயங்காமல், "மதிப்பிற்குரிய துணை அதிபரே, நான் பேசி கொண்டிருக்கிறேன்" என்று கண்டித்தார்.

கமலா ஹாரிஸ் அமெரிக்க செனட்டில் நிறைய விவாத அனுபவங்களைப் பெற்றுள்ளார். அதற்கு முன், அவர் கலிபோர்னியா நீதிமன்றங்களில் ஒரு வழக்கறிஞராகப் பணியாற்றினார், ஒவ்வொரு வழக்கிலும் எதிர்க்கட்சியினரின் குறைபாடுகளை அடையாளம் காண்பதில் வல்லவர்.

விவாதத்தில் டொனால்ட் டிரம்ப் முன்வைக்கும் கருத்துகளை மறுத்து வாதிடும்போது இந்தத் திறமை அவருக்குப் பயனளிக்கும்.

இருப்பினும், 2020 ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஆவதற்கான முயற்சியில் கமலா ஹாரிஸ் தோல்வியடைந்தார். மேலும் அவர் நிலையான கொள்கை நிலைப்பாடுகளைக் கொண்டிருக்கவில்லை என்பதே அவர் மீது வைக்கப்பட்ட முக்கிய விமர்சனம்.

செவ்வாய்க் கிழமை நடக்கும் விவாதத்தில், கமலா ஹாரிஸிடம் மதிப்பீட்டாளர்கள் அவரது கொள்கைகள் பற்றிப் பல கடினமான கேள்விகளைக் கேட்க வாய்ப்பிருக்கிறது.

கமலா ஹாரிஸ் தனது பொது மேடைப் பேச்சுகளில் நீளமாகப் பேசக் கூடியவர் என்பதால் விவாதத்தில் காலக்கெடுவைப் பின்பற்றிச் சொல்ல வேண்டிய கருத்துகளைத் தெளிவாக, சுருக்கமாகச் சொல்ல வேண்டிய சூழலில் இருக்கிறார்.

அவரது சமீபத்திய சிஎன்என் நேர்காணலில் "ஒரு அவசரமான விஷயம் என்னவென்றால், காலக்கெடுவைக் கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்" என்றார்.

அதிபர் தேர்தல் விவாதங்களில், பொதுவாகப் பேசும் நேரம் மிகவும் குறைவாக இருக்கும். வேட்பாளர்களின் பிரசாரத் தகவல்கள் வாக்காளர்களுக்குத் தெளிவாகச் சென்றடைய வேண்டும்.

 

டிரம்பின் பலம் என்ன?

டிரம்ப் vs ஹாரிஸ்  : அதிபர் தேர்தல் விவாதத்தில் முன்னிலை பெறப்போவது யார் ?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, அக்டோபர் 2016இல் நடந்த அமெரிக்க அதிபர் விவாதத்தின் போது டொனால்ட் டிரம்ப் ஹிலாரி கிளிண்டனுக்கு பின்னால் நிற்கிறார்

கமலா ஹாரிஸுக்கு எதிராக டிரம்ப் எதிர்கொள்ளும் இந்த விவாதம் அவருக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும்.

அவர் 2016 மற்றும் 2020ஆம் ஆண்டுகளில் அதிபர் தேர்தலுக்கான 4 விவாதங்களில் பங்கேற்றார். அவர் மிகவும் வாக்குவாதம் செய்யும், வித்தியாசமான வேட்பாளர் என்பதை நிரூபித்தார்.

ஹிலாரி கிளிண்டனுக்கு எதிரான 2016 விவாதங்களின் போது, அவர் மேடையைச் சுற்றிச் சென்று, அவர் பேசிக் கொண்டிருக்கையில் அவருக்குப் பின்னால் சென்று நின்றார். இது "பயத்தை ஏற்படுத்தியது” என்று ஹிலாரி கூறினார்.

கடந்த 2020ஆம் ஆண்டு அதிபர் தேர்தலின் முதல் விவாதத்தில், அவர் ஜோ பைடன் பேசுகையில் குறுக்கிட்டு, "நீங்கள் வாயை மூடுங்கள்" என்று சொன்னார்.

இந்தத் தந்திரங்கள் அவரது தேர்தல் எதிரிகளைச் சீர்குலைத்து அவரைக் கவனத்தின் மையமாக மாற்றுகின்றன.

இருப்பினும், டிரம்ப் அடிக்கடி விவாதங்களின்போது பேச்சை மாற்றி, வேறு ஏதோ பேசி மழுப்புகிறார். அவர் பேசும் விஷயங்கள் உண்மைக்குப் புறம்பாக இருப்பதாக உண்மை சரிபார்ப்பாளர்கள் கூறுகின்றனர்.

 

கருத்துக்கணிப்புகளில் முன்னணியில் இருப்பது யார்?

டிரம்ப் vs கமலா ஹாரிஸ்: அமெரிக்க அதிபர் தேர்தல் விவாதத்தில் முன்னிலை பெறப்போவது யார்?

பட மூலாதாரம்,GETTY IMAGES

கடந்த ஜூலை மாதம் அதிபராக மீண்டும் தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்பு, ஜோ பைடன் தேசிய அளவிலும் பல டாஸ்-அப் மாகாணங்களிலும் வாக்காளர்களின் கருத்துக்கணிப்பில் டொனால்ட் டிரம்பைவிட பின்தங்கி இருந்தார்.

ஆனால், கமலா ஹாரிஸ் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக ஆனதில் இருந்து டிரம்பைவிட மிகவும் பிரபலமாகிவிட்டார் என்று தேசிய கருத்துக் கணிப்புகளின் சராசரியைத் தொகுக்கும் அரசியல் பகுப்பாய்வு அமைப்பான ``RealClearPolitics’’ கூறுகிறது.

செப்டம்பர் 3ஆம் தேதி நிலவரப்படி, அவர் தேசிய அளவில் 1.9 புள்ளிகள் என்ற அளவில் டிரம்பைவிட முன்னிலை வகிக்கிறார்.

இருப்பினும், ஹிலாரி கிளிண்டன் 2016இல் இதே கட்டத்தில் தேசிய வாக்கெடுப்பில் ஐந்து புள்ளிகள் முன்னிலையில் இருந்தார். ஆனால் தேர்தலில் டிரம்பிடம் தோல்வியடைந்தார்.

தேசிய தேர்தல்களைவிட, மாகாணங்களுக்குள் நடக்கும் கருத்துக் கணிப்புகள் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. ஏனென்றால், தேர்தல் கல்லூரி நடத்தும் தனிப்பட்ட மாகாணங்களின் கருத்துக்கணிப்பு முடிவுகள், ஒரு வேட்பாளர் பெறும் வாக்குகளின் எண்ணிக்கையைத் தீர்மானிக்கிறது, மேலும் யார் அதிபராக வர வேண்டும் என்பதைத் தேர்தல் கல்லூரி தீர்மானிக்கிறது.

அரிசோனா, ஜார்ஜியா, மிச்சிகன், வட கரோலினா மற்றும் பென்சில்வேனியா போன்ற சில டாஸ்-அப் மாகாணங்கள் உள்ளன. அவை வேட்பாளர்களின் வெற்றிக்கு முக்கியமானவை. இந்த இடங்களில் தேர்தல் முடிவுகளைக் கணிப்பது கடினம். அங்கு கட்சிகள் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.

செப்டம்பர் தொடக்கத்தில், RealClearPolitics, மிச்சிகன் மற்றும் ஜார்ஜியாவில் நடந்த கருத்துக் கணிப்பில் கமலா ஹாரிஸ் ட்ரம்பை முந்தினார். மேலும் பென்சில்வேனியாவில் அவருக்கு இணையான வாக்குகளைப் பெற்றிருந்தார். ஆனால் அரிசோனா மற்றும் வட கரோலினாவில் பின்தங்கினார்.

அரசியல் ஆய்வாளர்கள் மத்தியில் காணப்படும் ஒருமித்த கருத்து என்னவெனில், தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகளை மதிப்பிடுவது கடினம். ஒரு வேட்பாளருக்கு அதிபர் பதவிக்கு வர 270 தேர்தல் கல்லூரி வாக்குகள் தேவை.

ஜனநாயகக் கட்சிக்கு 226 தேர்தல் கல்லூரி வாக்குகளும், குடியரசுக் கட்சியினருக்கு 219 வாக்குகளும் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள 93 பேர் எந்த வழியிலும் செல்லலாம் என்றும் கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவின் அடுத்த அதிபரை தீர்மானிக்கும் 7 மாகாணங்களில் முந்துவது யார்?

கமலா ஹாரிஸ் - டிரம்ப், அமெரிக்கா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, கமலா ஹாரிஸ் மற்றும் டிரம்ப் கட்டுரை தகவல்
  • எழுதியவர், ஜேம்ஸ் ஃபிட்ஸ்ஜெரால்ட்
  • பதவி, பிபிசி செய்தியாளர்
  • 4 மணி நேரங்களுக்கு முன்னர்

அமெரிக்கத் தேர்தலில் இந்த ஆண்டு வாக்களிக்க சுமார் 24 கோடி பேர் தகுதி பெற்றுள்ளனர். அவர்களில் குறிப்பிட்ட சில மாகாணங்களை சேர்ந்த சிறிய எண்ணிக்கையிலான மக்கள் மட்டுமே அடுத்த அதிபர் யார் என்பதை தீர்மானிக்கும் இடத்தில் உள்ளனர்.

அதிபர் வேட்பாளர்களான கமலா ஹாரிஸ் மற்றும் டொனால்ட் டிரம்ப் ஆகியோரின் ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சிகளுக்கு இடையே உண்மையிலேயே கடுமையான போட்டி நிலவுவது ஒரு சில மாகாணங்களில் மட்டுமே என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.

அதில் ஏழு மாகாணங்கள் - அரிசோனா, ஜார்ஜியா, மிச்சிகன், நெவாடா, வட கரோலினா, பென்சில்வேனியா மற்றும் விஸ்கான்சின் ஆகியவை வெள்ளை மாளிகை யாருக்கு என்பதை தீர்மானிக்கும்.

தேர்தல் நெருங்கி வருவதால், இரு கட்சிகளின் பிரசாரக் குழுக்களும் இந்த மாகாணங்களில் பிரசாரங்களை வேகப் படுத்தியுள்ளன.

கமலா ஹாரிஸ் - டிரம்ப், அமெரிக்கா

அரிசோனா

1990களுக்குப் பிறகு முதன் முறையாக இந்த மாகாணத்தில் ஜனநாயகக் கட்சி குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அதிபர் பதவியையும் கைப்பற்றியது.

இந்த மாகாணம் மெக்சிகோவுடன் நூற்றுக்கணக்கான மைல் எல்லையைப் பகிர்ந்து கொண்டுள்ளது. நாட்டின் குடியேற்ற கொள்கைகள் தொடர்பான விவாதத்தின் மையப் புள்ளியாக இந்த மாகாணம் மாறியுள்ளது.

சமீபத்திய மாதங்களில் இங்கு எல்லை தாண்டி வருபவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

எல்லையில் நிலவும் சிக்கலான பிரச்னையை தீர்க்கும் முயற்சியில் கமலா ஹாரிஸை அதிபர் ஜோ பைடன் நியமித்தார். குடியேற்ற கொள்கை தொடர்பான கமலா ஹாரிஸின் கருத்துக்களை டிரம்ப் அடிக்கடி விமர்சித்து வருகிறார்.

அவர் மீண்டும் அதிபர் பதவிக்கு வந்தால், அமெரிக்க வரலாற்றில் "மிகப்பெரிய அளவிலான வெளியேற்றும் நடவடிக்கையை" மேற்கொள்ளப் போவதாகவும் அவர் சபதம் செய்துள்ளார்.

அரிசோனாவில் கருக்கலைப்பு தொடர்பான ஒரு சர்ச்சையும் நிலவுகிறது. இந்த மாகாணத்தில் குடியரசுக் கட்சியினர் கிட்டத்தட்ட இரண்டு நூற்றாண்டு பழமையான, கருக்கலைப்பு தடைச் சட்டத்தை மீண்டும் கொண்டு வர முயன்றனர். ஆனால் முடியவில்லை.

பெண்களுக்கு கருக்கலைப்பு செய்வதற்கான அரசியலமைப்பு உரிமையை வழங்கிய ஒரு முக்கிய தீர்ப்பை அமெரிக்க உச்ச நீதிமன்றம் 2022-ஆம் ஆண்டில் ரத்து செய்ததில் இருந்து இந்த பிரச்னை நாடு முழுவதும் பேசப்படும் ஒன்றாக மாறியுள்ளது.

ஜார்ஜியா

கமலா ஹாரிஸ் - டிரம்ப், அமெரிக்கா

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு, ஜார்ஜியாவில் ஒரு வழக்கு உட்பட டிரம்ப் நான்கு கிரிமினல் வழக்குகளை எதிர்கொள்கிறார்

2020 தேர்தலில் ஜார்ஜியாவின் ஃபுல்டன் கவுண்டியில், தேர்தல் நடைமுறையில் குறுக்கீடு செய்ததாக டிரம்ப் மீது வழக்கி பதிவானது. அவர் எதிர்கொள்ளும் 4 குற்றவியல் வழக்குகளில் இதுவும் ஒன்று. டிரம்ப் ஒரு வழக்கில் தண்டனை பெற்றுள்ளார், மீதமுள்ள வழக்குகள் நடந்து வருகின்றன.

டிரம்பும் மற்ற 18 பேரும் மாகாணத்தில் பைடன் வெற்றியை முறியடிக்க சதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. டிரம்ப் எந்த தவறும் செய்யவில்லை என்று மறுக்கிறார். இந்த வழக்கு தேர்தலுக்கு முன்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட வாய்ப்பில்லை.

ஜார்ஜியாவின் மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் ஆப்பிரிக்க-அமெரிக்கர்கள், இது நாட்டின் மிகப்பெரிய கறுப்பினத்தவர் வசிக்கும் பகுதிகளில் ஒன்றாகும். 2020 ஆம் ஆண்டில் பைடன் பெற்ற வெற்றியில் இந்த மாகாணம் முக்கிய பங்கு வகித்ததாக நம்பப்படுகிறது.

அமெரிக்காவின் கறுப்பின வாக்காளர்களிடையே பைடன் மீதான சில ஏமாற்றங்கள் பதிவாகியுள்ளன. ஆனால் கமலா ஹாரிஸின் பிரசாரக் குழு இவர்களின் ஆதரவை உயிர்ப்பிக்கும் என்று நம்புகிறது.

மிச்சிகன்

கமலா ஹாரிஸ் - டிரம்ப், அமெரிக்கா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, மத்திய கிழக்கு விவகாரத்தில் அதிபரின் கொள்கைகள் தொடர்பாக மிச்சிகனில் பின்னடைவை எதிர்கொண்டார்

கிரேட் லேக்ஸ் மாகாணம் கடந்த இரண்டு தேர்தல்களில் வெற்றி பெற்ற அதிபர் வேட்பாளருக்கு தான் அதிக வாக்குகள் அளித்திருந்தது.

2020 இல் பைடனை ஆதரித்த போதிலும், காஸாவில் இஸ்ரேலை அவர் ஆதரித்ததால் இங்கு அதிருப்தி நிலவியது.

பிப்ரவரியில் மிச்சிகனின் ஜனநாயகக் கட்சியின் முதன்மைப் போட்டியின் போது, 100,000க்கும் அதிகமான வாக்காளர்கள் தங்கள் வாக்குச்சீட்டில் "உறுதியற்ற" (uncommitted) என்ற முடிவை தேர்ந்தெடுத்தனர். இது அமெரிக்க அரசாங்கம் இஸ்ரேலுக்கு ராணுவ உதவியை நிறுத்த வேண்டும் என்று விரும்பும் ஆர்வலர்களின் பிரசாரத்தின் ஒரு பகுதியாக நிகழ்ந்தது.

மிச்சிகன் குறிப்பிடத்தக்க வகையில் நாட்டின் மிகப்பெரிய அரபு-அமெரிக்கர்களைக் கொண்டுள்ளது. இது பைடனுக்கு ஆதரவு கொடுப்பதில் சிக்கலை கொண்டுள்ளது.

ஆனால் கமலா ஹாரிஸ் இஸ்ரேல் மீது கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ளார்.

டிரம்ப் இந்த மாகாணத்தினருக்கு ஏற்றவாறு முக்கியமான நிலைப்பாட்டை எடுத்துள்ளார். மத்திய கிழக்கின் நிகழ்வுகள் குறித்து கருத்து தெரிவித்த அவர், காஸாவில் உள்ள ஹமாஸ் மீதான தனது ராணுவ நடவடிக்கையை இஸ்ரேல் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.

நெவாடா

கமலா ஹாரிஸ் - டிரம்ப், அமெரிக்கா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, நெவாடா கடந்த தேர்தலில் ஜனநாயகக் கட்சிக்கு வாக்களித்தது.

கடந்த பல தேர்தல்களில் இந்த `சில்வர் ஸ்டேட்’, ஜனநாயகக் கட்சிக்கு வாக்களித்துள்ளது. ஆனால் குடியரசுக் கட்சிக்கு சாதகமாக திரும்பும் அறிகுறிகளும் உள்ளன.

கருத்துக்கணிப்பு நடத்தும் நிறுவனமான `538’ வெளியிட்ட சமீபத்திய முடிவின் படி, அதிபர் பைடனை விட டிரம்ப் முன்னிலையில் இருப்பதாக கருத்துக் கணிப்புகள் காட்டின. ஆனால் கமலா ஹாரிஸ் அதிபர் வேட்பாளர் ஆனதில் இருந்து முன்னிலை நிலவரம் மாறிவிட்டது.

ஜனநாயகக் கட்சியினர் இளைய மற்றும் பலதரப்பட்ட வாக்காளர்களை ஈர்க்கும் ஒரு வேட்பாளர் அந்த இடைவெளியை சரி செய்வார் என்று நம்பினர்.

இரு வேட்பாளர்களும் மாநிலத்தில் கணிசமாக வசிக்கும் லத்தீன் இனத்தவரை வெல்ல போட்டியிடுகின்றனர்.

பைடன் அதிபராக பதவியேற்றதிலிருந்து அமெரிக்கப் பொருளாதாரம் வலுவான வளர்ச்சியையும் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதையும் உறுதி செய்தது. ஆனாலும், கோவிட் சூழலுக்கு பின்னர் இழப்புகளில் இருந்து மீள்வது மற்ற மாகாணங்களை விட நெவாடா பின்தங்கியுள்ளது.

சமீபத்திய அமெரிக்க அரசாங்க புள்ளிவிவரங்களின்படி, கலிபோர்னியா மற்றும் கொலம்பியாவுக்கு அடுத்தபடியாக, நெவாடாவில் 5.1% என்ற அளவில் வேலையின்மை விகிதம் அதிகமாக உள்ளது.

டிரம்ப் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், வரிக் குறைப்புகள் மற்றும் குறைவான விதிமுறைகள் என்ற தனது இலக்கை மீண்டும் நிலைநிறுத்துவதாக அவர் உறுதியளித்துள்ளார்.

 

வட கரோலினா

ஜனநாயகக் கட்சி வேட்பாளராக கமலா ஹாரிஸ் தேர்வான பிறகு, `தார் ஹீல்’ என்று அழைக்கப்படும் வட கரோலினா மாகாணத்தில் கருத்துக் கணிப்புகள் இறுக்கமடைந்ததாகத் தெரிகிறது. சில ஆய்வாளர்கள் இப்போது இந்த பகுதியில் யார் வெற்றிப் பெறுவார்கள் என்று தெரியாத சூழல் நிலவுவதாக கூறுகின்றனர்.

ஜூலை மாதம் டிரம்ப் மீது தாக்குதல் நடந்த பின்னர் அவர் மீண்டும் பிரசாரத்தை தொடர தேர்ந்தெடுத்த இடம் வட கரோலினா மாகாணம்.

"இந்த மாகாணம் வெற்றியை சாத்தியப்படுத்தும் மிகப் பெரிய மாகாணம்," என்று அவர் பிரசார கூட்டத்தில் பேசினார்.

தங்கள் பங்கிற்கு, ஜனநாயகக் கட்சியினர் தங்கள் கட்சி மாநாட்டின் இறுதி இரவில் மாகாண கவர்னர் ராய் கூப்பருக்கு ஒரு மேடை கொடுக்க முடிவு செய்தனர்.

வடக்கு கரோலினா ஜார்ஜியாவின் எல்லையாக உள்ளது. மேலும் மற்றொரு சன் பெல்ட் (Sun Belt) மாகாணமான அரிசோனாவை போலவே தேர்தலில் முக்கியத்துவம் பெற்றுள்ள சில முக்கிய பிரச்னைகளை கொண்டுள்ளது.

2020 இல் வட கரோலினாவில் அதிக வாக்குகளை பெற்ற டிரம்ப், வெறும் 70,000 வாக்குகள் வித்தியாசத்தில் இங்கு வென்றார். இது இந்த "ஊதா" மாகாணம் என்று கருதப்படுகிறது. அதாவது குடியரசு அல்லது ஜனநாயகக் கட்சி இரண்டில் எது வேண்டுமானாலும் வெல்ல வாய்ப்புள்ள மாகாணம் இது.

பென்சில்வேனியா

கமலா ஹாரிஸ் - டிரம்ப், அமெரிக்கா

பட மூலாதாரம்,EPA

படக்குறிப்பு, பென்சில்வேனியாவின் பட்லர் நகரில் நடந்த பேரணியின் போது, டிரம்ப் படுகொலை முயற்சியில் உயிர் தப்பினார்.

டொனால்ட் டிரம்ப் மீது படுகொலை முயற்சி நடத்தப்பட்ட இந்த முக்கிய மாகாணத்தில் இரு தரப்பினரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

2020 தேர்தலில் பைடனை ஆதரித்த மாகாணங்களில் இது முக்கியமானது. பைடன் வளர்ந்தது இங்கு தான். தொழிலாளர் வர்க்க நகரமான ஸ்க்ராண்டனுடன் அவருக்கு ஆழ்ந்த உணர்வு ரீதியான தொடர்பு உள்ளது.

பொருளாதாரம் இங்கே ஒரு முக்கிய பிரச்னை. பைடன் நிர்வாகத்தின் கீழ் நாடு முழுவதும் பணவீக்கம் அதிகரித்த போது இங்கு அதிக தாக்கம் ஏற்பட்டது. பின்னர் பணவீக்கம் படிப்படியாகக் குறைந்தது.

பணவீக்கத்தின் விளைவாக வாழ்க்கைச் செலவு அழுத்தங்களை அமெரிக்கர்கள் அனைவரும் அனுபவித்திருந்தாலும், பென்சில்வேனிய மக்கள் மிகவும் அவதிப்பட்டனர். மளிகைப் பொருட்களின் விலை மற்ற மாநிலங்களை விட இங்கு வேகமாக உயர்ந்துள்ளது என்று சந்தை நுண்ணறிவு வழங்குநரான டேட்டாசெம்பிளி தெரிவித்துள்ளது.

பென்சில்வேனியாவின் மற்ற பகுதிகளுக்கான `பெல்வெதர்’ கவுண்டியான எரே ( Erie) என்னும் பகுதியில் மக்கள் எவ்வாறு போராடுகிறார்கள் என்பதை பிபிசி முன்பு தெரிவித்தது, அங்கு எட்டு பேரில் ஒருவர் "உணவுக்கு உத்தரவாதம் இல்லாதவர்கள்" என்று கருதப்படுகிறார்கள்.

அதிக பணவீக்கம் அமெரிக்கா முழுவதும் கமலா ஹாரிசுக்கான ஆதரவு தளத்தை பாதிக்கலாம். பைடன் ஆட்சியின் பொருளாதாரத்தை முன்வைத்து டிரம்ப், கமலா ஹாரிஸை விமர்சித்துள்ளார்.

 

விஸ்கான்சின்

கமலா ஹாரிஸ் - டிரம்ப், அமெரிக்கா

பட மூலாதாரம்,EPA

படக்குறிப்பு, குடியரசுக் கட்சியினர் தங்கள் 2024 மாநாட்டை நடத்த மில்வாக்கியைத் தேர்ந்தெடுத்தனர்

2016 மற்றும் 2020 ஆகிய இரண்டு தேர்தலிலும் வெற்றி பெற்ற அதிபர் வேட்பாளரை 20,000 க்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் இந்த மாகாணம் தேர்ந்தெடுத்தது.

பெரிய இரண்டு வேட்பாளர்களின் கொள்கைகளுக்கு எதிராக பிரசாரம் செய்யும் மூன்றாம் தரப்பு வேட்பாளர்களால் இதுபோன்ற மாகாணங்களில் ஏற்படுத்த முடியும் என்று ஆலோசகர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

சுயேச்சை வேட்பாளரான ராபர்ட் எஃப் கென்னடி ஜூனியருக்கு கணிசமான ஆதரவு இருப்பது கமலா ஹாரிஸ் அல்லது டிரம்பின் வாக்கு எண்ணிக்கையை பாதிக்கலாம் என்று கருத்து கணிப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

கிரீன் கட்சி வேட்பாளர் ஜில் ஸ்டெய்னை இங்கே வேட்பாளர் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்று ஜனநாயகக் கட்சி வலியுறுத்தி வருகிறது. அந்தக் கட்சி மாகாணத் தேர்தல் சட்டங்களுக்கு இணங்கவில்லை என்று கூறி, இடதுசாரி சார்பான கல்வியாளரான கார்னல் வெஸ்ட் மீது புகாரையும் ஜனநாயகக் கட்சி பதிவு செய்துள்ளது.

டிரம்ப் அந்த மாகாணத்தை "உண்மையில் முக்கியமானது... நாங்கள் விஸ்கான்சினை வென்றால், முழு நாட்டையும் வெல்வோம்" என்று விவரித்தார். குடியரசுக் கட்சியின் கோடைக் கால தேசிய மாநாடு மில்வாக்கி நகரில் நடைபெற்றது.

கமலா ஹாரிஸ் தன் கட்சியின் அதிபர் வேட்பாளராக தேர்வான போது, இங்கு தான் முதன்முதலில் பிரசாரம் மேற்கொண்டார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கமலா ஹாரிஸ் - டொனால்ட் டிரம்ப் இடையே முதல் நேருக்கு நேர் விவாதம்: யார் கை ஓங்கியிருந்தது?

குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ்
2 மணி நேரங்களுக்கு முன்னர்

அமெரிக்காவில் அதிபர் தேர்தலுக்கு முன்னதாக, ஜனநாயகக் கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸுக்கும் குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்புக்கும் இடையே முதலாவது நேருக்கு நேர் விவாதம் செவ்வாய்க்கிழமை அன்று நடந்தது.

சுமார் 90 நிமிடங்கள் நீடித்த 'தி ஏபிசி நியூஸ் பிரசிடென்ஷியல் டிபேட்' (The ABC News Presidential Debate) நிகழ்ச்சியில், கமலா ஹாரிஸும், டிரம்பும், ஒருவருக்கொருவர் மற்றவரின் கொள்கைகளை கடுமையாக விமர்சித்தனர்.

இதன்போது ரஷ்யா-யுக்ரேன் போர், இஸ்ரேல்-ஹமாஸ் மோதல், எல்லைப் பிரச்னைகள், சட்டவிரோத குடியேற்றம், பொருளாதாரம், கேபிடல் ஹில் கலவரம், கருக்கலைப்பு போன்ற விவகாரங்களில் இரு வேட்பாளர்களுக்கும் இடையே கடும் விவாதம் நடந்தது.

இந்த விவாதத்தின்போது சீனா, ரஷ்யா, இஸ்ரேல் மற்றும் இரான் போன்ற நாடுகள் பற்றி பல முறை குறிப்பிடப்பட்டன.

 

அமெரிக்காவின் எதிர்காலம் குறித்து எனக்கும் டிரம்புக்கும் முற்றிலும் மாறுபட்ட கருத்துகள் உள்ளன. என் கவனம் எதிர்காலத்தின் மீது உள்ளது. டிரம்ப் கடந்த காலத்தில் சிக்கிக்கொண்டுள்ளார்,” என்று விவாதத்தின் முடிவில் கமலா ஹாரிஸ் குறிப்பிட்டார்.

"கமலா ஹாரிஸின் கொள்கைகள் அர்த்தமற்றவை. ஏனென்றால் கடந்த 4 ஆண்டுகளில் அவர் எதையும் சாதிக்கவில்லை", என்று டிரம்ப் கூறினார்.

"நம் நாடு அழிவின் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. உலகமே நம்மைப் பார்த்து சிரிக்கிறது. நவம்பரில் நடைபெறவுள்ள தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றால், மூன்றாம் உலகப்போர் ஏற்பட வாய்ப்புள்ளது”, என்றும் அவர் தெரிவித்தார்.

 
 

டிரம்ப் மீது நடந்து வரும் வழக்கின் விசாரணைகள் மற்றும் 2020-ஆம் ஆண்டின் தேர்தலில் அவர் தோல்வியை ஏற்க மறுத்தது ஆகியவை தொடர்பாக கமலா ஹாரிஸ் டிரம்பை தாக்கி பேசினார்.

கமலா ஹாரிஸின் இன அடையாளம் குறித்து டிரம்ப் பேசிய சர்ச்சைக்குரிய கருத்துகள் குறித்து நெறியாளர்கள் டிரம்பிடம் கேட்டபோது அவர் அந்த கேள்வியைத் தவிர்ப்பது போல் இருந்தது.

"கமலா ஹாரிஸ் எப்படிப்பட்டவர் என்பது பற்றி எனக்கு கவலையில்லை" என்று டிரம்ப் கூறினார்.

அமெரிக்காவை எப்போதும் இனரீதியாக பிரிக்க முயற்சிக்கும் டிரம்ப் அதிபராக விரும்புவது சோகமான விஷயமாக இருக்கிறது", என்று ஹாரிஸ் குறிப்பிட்டார்.

 
தற்போதைய அமெரிக்க துணை அதிபர் மற்றும் 2024 அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக போட்டியிடும் கமலா ஹாரிஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, தற்போதைய அமெரிக்க துணை அதிபர் மற்றும் 2024 அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக போட்டியிடும் கமலா ஹாரிஸ்

விவாதத்தில் ஆதிக்கம் செலுத்தியது யார்?

பிபிசி-யின் வட அமெரிக்க நிருபர் ஆண்டனி ஸச்சரின் பகுப்பாய்வு:

''90 நிமிட விவாதத்தின் போது கமலா ஹாரிஸ் டொனால்ட் டிரம்பை பலமுறை சிக்கல்களில் ஆழ்த்தினார்.

டிரம்ப்பின் பேரணியில் வரும் கூட்டத்தின் அளவு மற்றும் கேபிடல் ஹில் மீதான தாக்குதல் ஆகிய விஷயங்களை குறிப்பிட்டு கமலா ஹாரிஸ் டிரம்பை தாக்கி பேசினார்.

ஒரு காலத்தில் டிரம்புடன் இருந்த அதிகாரிகள் இப்போது அவரையே கடுமையாக விமர்சிப்பதை பற்றி கமலா ஹாரிஸ் குறிப்பிட்டார்.

அந்த அதிகாரிகளின் விமர்சனங்களுக்கு பதிலளிக்குமாறு கமலா ஹாரிஸ் டிரம்பை கேட்டுக்கொண்டார்.

வாக்காளர்களுடன் நேரடியாக தொடர்புடைய விஷயங்களை, ஒரு வேட்பாளர் எவ்வளவு சிறப்பாக அதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டார் என்ற அடிப்படையில் ஒரு விவாதத்தின் வெற்றி தோல்வி நிர்ணயிக்கலாம் என்றால், இந்த விவாதத்தில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றார் என்றே சொல்லலாம்.

விஷயங்களை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்வதிலும் கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றார்.

விவாதம் முன்னேற முன்னேற கமலா ஹாரிஸின் கருத்துகளை டிரம்ப் சமாளிக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டார்.

கமலா ஹாரிஸ் டிரம்ப்பை தாக்கி பேசினார், அவரை கிண்டலும் செய்தார். அதற்கு பதிலளிக்க வேண்டிய கட்டாயத்திற்கு டிரம்ப் ஆளானார்.

கமலா ஹாரிஸ் டிரம்ப்பை பலவீனமானவர் என்று கூறினார். வெளிநாட்டுத் தலைவர்கள் அவரைப் பார்த்து சிரிக்கிறார்கள் என்றும் அவர் சொன்னார்.

சோர்வு மற்றும் சலிப்பு காரணமாக மக்கள் அவரது பேரணிகளில் இருந்து சீக்கிரமே கிளம்பிச் செல்வதாக கமலா ஹாரிஸ் கூறினார்.

விலைவாசி உயர்வு, சட்டவிரோத குடியேற்றம் மற்றும் ஆஃப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க துருப்புகளின் வெளியேற்றம் போன்ற விஷயங்களில் கமலா ஹாரிஸ் பலவீனமாக இருப்பார் என்று பல அமெரிக்கர்கள் நினைத்தனர்.

பெரும்பாலான சந்தர்ப்பங்களில் தனது விவாதங்களை டிரம்பால் திறம்பட முன்வைக்க முடியவில்லை.

பைடன் நிர்வாகம் விலைவாசி உயர்வு மற்றும் பொருளாதாரத்தை கையாண்ட விதம் பல அமெரிக்கர்களுக்கு திருப்தி அளிக்கவில்லை என்பதை கருத்துக் கணிப்புகள் காட்டுகின்றன.

ஆனால், இந்த விவாதத்தை டிரம்ப் பக்கம் திருப்பிய கமலா ஹாரிஸ், டிரம்ப் ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட வரிகளே இதற்கு காரணம் என பதிலளித்தார்

விவாதத்தின் போது கமலா ஹாரிஸின் முகபாவனைகள் அனைவரையும் கவர்வது போல இருந்தது.

விவாதத்தின் பெரும்பகுதி நேரத்தில் டிரம்ப் பதில் கூறும்போது, கமலா ஹாரிஸ் அவரை நேருக்கு நேராகப் பார்த்தபடி இருந்தார். டிரம்ப் கூறிய கருத்துகளுக்கு உடன்படவில்லை என்ற போது கமலா ஹாரிஸ் தலையை அசைத்தார் அல்லது புன்னகைத்தார்.

கமலா ஹாரிஸை 'மார்க்சிஸ்ட்' என்று டிரம்ப் கூறிய போது கமலா ஹாரிஸ் தனக்குப் புரியவில்லை என்பதைக் குறிக்கும் வகையில் தனது கன்னத்தில் கை வைத்த படி இருந்தார்.

ஆனால் பொருளாதாரம் அல்லது கருக்கலைப்பு போன்ற பிரச்னைகள் பற்றிப் பேசும்போது கமலா ஹாரிஸ் வாக்காளர்களிடம் நேரடியாக பேசுவது போல் கேமராவை பார்த்து பேசினார்.

அதே நேரத்தில் டிரம்ப் விவாதம் முழுவதும் கமலா ஹாரிஸை கண்ணோடு கண் பார்ப்பதை தவிர்த்தார். கமலா ஹாரிஸ் கேள்விகள் கேட்டபோது அவரை நோக்கி டிரம்ப் விரலைக் காட்டியபடி பேசுவதை பார்க்க முடிந்தது.

கருக்கலைப்பு குறித்த விவாதத்தின் போது டிரம்ப் கோபத்தில் ஆவேசமாகப் பேசியதையும் பார்க்க முடிந்தது.''

 
டொனால்ட் டிரம்ப் மற்றும் கமலா ஹாரிஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, விஷயங்களை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்வதிலும் கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றார்.

விவாதத்தின் முக்கிய அம்சங்கள்

குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் குடியேறிகளுக்கு எதிராக சில குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அதை நிகழ்ச்சியின் நெறியாளரே தவறு என்று கூறினார்.

குடியேறிகள் 'தங்களது செல்லப்பிராணிகளை சாப்பிடுகிறார்கள்' என்று டிரம்ப் அபத்தமான கூற்றுக்களை முன்வைத்தார்.

"குடியேறிகள் செல்லப்பிராணிகளான நாய்களை சாப்பிடுகிறார்கள்," என அவர் கூறினார்

இதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று ஸ்பிரிங்ஃபீல்டின் நகர நிர்வாக மேலாளரே கூறியுள்ளார் என்று விவாதத்தின் நெறியாளர் டேவிட் முயர் குறிப்பிட்டார்.

"எங்கள் நாயை திருடி சாப்பிட்டுவிட்டனர் என்று மக்கள் தொலைக்காட்சியில் கூறுவதை நான் கேட்டேன்" என்றார் டிரம்ப்.

இதற்கு பதில் அளித்த கமலா ஹாரிஸ், ''டிரம்ப் மிகைப்படுத்தி பேசுகிறார்'' என்று கூறினார். இது உண்மையில் நடந்தது என்பதற்கான நம்பகமான தகவல்கள் எதுவும் இல்லை என்று ஸ்பிரிங்ஃபீல்ட் அதிகாரிகள் பிபிசி வெரிஃபையிடம் தெரிவித்தனர்.

 
டொனால்ட் டிரம்ப்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, ஜோ பைடனை ’எங்கும் காணப்படாத அமெரிக்க அதிபர்’ என்று டிரம்ப் அழைத்தார்.

ரஷ்யா-யுக்ரேன் போர்

விவாதத்தின் போது, ரஷ்யா - யுக்ரேன் போர் குறித்தும் பேசப்பட்டது.

"அப்போரில் யுக்ரேன் வெற்றி பெற வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களா?" என்று டொனால்ட் டிரம்பிடம் வினவப்பட்டது.

"போர் நிறுத்தப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்" என்று டிரம்ப் பதில் அளித்தார்.

யுக்ரேன்-ரஷ்யா போர் அமெரிக்கா மீது ஏற்படுத்தியுள்ள தாக்கம் குறித்துப்பேசிய டிரம்ப், ''ஐரோப்பாவை ஒப்பிடும்போது அமெரிக்கா மீதான தாக்கம் அதிகம்,” என்று குறிப்பிட்டார்.

யுக்ரேன் அதிபர் வொலோதிமிர் ஸெலென்ஸ்கி மற்றும் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் ஆகிய இருவரையும் தனக்கு நன்றாகத் தெரியும் என்று அவர் கூறினார்.

ஜோ பைடனை ’எங்கும் காணப்படாத அமெரிக்க அதிபர்’ என்று டிரம்ப் அழைத்தார்.

இதற்கு பதில் கொடுத்த கமலா ஹாரிஸ், "நீங்கள் பைடனுக்கு எதிராகப் போட்டியிடவில்லை. எனக்கு எதிராகப் போட்டியிடுகிறீர்கள்" என்றார்.

யுக்ரேன் போர் குறித்த கேள்விக்கு பதில் அளித்த கமலா ஹாரிஸ் யுக்ரேன் அதிபருடன் தனக்கு வலுவான நல்லுறவு இருப்பதாக தெரிவித்தார்.

அவர் டிரம்பிடம், "நீங்கள் அமெரிக்க அதிபராக இல்லை என்பதால் நேட்டோ நட்பு நாடுகள் மிகவும் நிம்மதியாக இருக்கின்றனர். இல்லையென்றால் புதின் கீவில் (யுக்ரேன் தலைநகர்) அமர்ந்திருந்து மற்ற ஐரோப்பிய நாடுகளை பார்த்துக்கொண்டிருப்பார்" என்று கூறினார்.

"புதின் ஒரு சர்வாதிகாரி" என்றார் கமலா ஹாரிஸ்.

இது குறித்து கருத்து தெரிவித்த டிரம்ப், ''இதுவரையிலான மிகவும் மோசமான துணை அதிபர் கமலா ஹாரிஸ்'' என்று கூறினார்.

படையெடுப்பிற்கு முன்னர் யுக்ரேனுக்கும் ரஷ்யாவிற்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தி போரைத் தடுக்க அவர் தவறிவிட்டதாக டிரம்ப் குற்றம் சாட்டினார்.

 
கமலா ஹாரிஸ் மற்றும் டொனால்ட் டிரம்ப்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, யுக்ரேன்-ரஷ்யா போர் நிறுத்தப்பட வேண்டும் என்று டிரம்ப் கூறினார்

இஸ்ரேல்-ஹமாஸ் மோதல்

விவாதத்தின்போது கமலா ஹாரிஸ் இஸ்ரேல்-காஸா பிரச்னையில் இதற்கு முன் அவர் தெரிவித்த கருத்துகளையே மீண்டும் கூறினார்.

"தன்னை தற்காத்துக்கொள்ள இஸ்ரேலுக்கு உரிமை உள்ளது. ஆனால் இஸ்ரேல் அதை எப்படிச்செய்கிறது என்பதும் முக்கியம்," என்றார் அவர்.

இந்தப் போர் உடனடியாக முடிவுக்கு வர வேண்டும் என்றார் கமலா ஹாரிஸ். போர் நிறுத்தம் மற்றும் ’இரு நாடு’ தீர்வு குறித்தும் அவர் பேசினார்.

"தான் அதிபராக இருந்திருந்தால் இந்த மோதல் ஒருபோதும் தொடங்கியிருக்காது" என்றார் டிரம்ப்.

"கமலா ஹாரிஸ் இஸ்ரேலை வெறுக்கிறார். கமலா ஹாரிஸ் அதிபரானால் இன்னும் இரண்டு ஆண்டுகளில் இஸ்ரேல் என்ற நாடே இருக்காது" என்றும் ”இந்தப் பிரச்னைக்கு நான் விரைவில் தீர்வு காண்பேன்,” என்றும் டிரம்ப் கூறினார்.

”நான் மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால், ரஷ்யா- யுக்ரேன் போரை விரைவில் முடிவுக்கு கொண்டு வருவேன்,” என்றார் டிரம்ப்.

இஸ்ரேலின் பாதுகாப்பை ஆதரிப்பதாக கமலா ஹாரிஸ் வலுவாக தெரிவித்தார். டிரம்பின் கூற்றை நிராகரித்த அவர், உண்மையை திசை திருப்பவும் பிரிக்கவும் டிரம்ப் விரும்புவதாகத் தெரிவித்தார்.

“டிரம்புக்கு சர்வாதிகாரிகளை பிடிக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். முதல் நாளிலிருந்தே ஒரு சர்வாதிகாரியாக மாற அவர் விரும்புகிறார்,” என்றும் கமலா ஹாரிஸ் குறிப்பிட்டார்.

 
டொனால்ட் டிரம்ப் மற்றும் கமலா ஹாரிஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, கமலா ஹாரிஸ் அதிபரானால் இன்னும் இரண்டு ஆண்டுகளில் இஸ்ரேல் என்ற நாடே இருக்காது என்று டிரம்ப் கூறினார்.

பொருளாதார கொள்கைகள்

விவாதத்தின் தொடக்கத்திலேயே கமலா ஹாரிஸ் டிரம்பின் பொருளாதாரக் கொள்கைகளை தாக்கி பேசினார்.

"நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட அமெரிக்கா தற்போது நல்ல நிலையில் இருப்பதாக நினைக்கிறீர்களா?" என்று டிரம்ப் கமலா ஹாரிஸிடம் கேட்டார்.

அனைவரும் பொருளாதார சுதந்திரத்தை அடையும் திட்டத்தை உருவாக்க தான் திட்டமிட்டுள்ளதாக கமலா ஹாரிஸ் அதற்கு பதில் அளித்தார்.

"பணக்காரர்கள் மற்றும் தொழிலதிபர்களுக்கு கடந்த முறை போல் வரிச்சலுகை அளிக்க டிரம்ப் திட்டமிட்டுள்ளார்" என்று கமலா ஹாரிஸ் குறிப்பிட்டார்.

"நோபல் பரிசு பெற்ற 16 பொருளாதார வல்லுநர்கள், டிரம்ப் முன்வைக்கும் திட்டத்தை விமர்சித்துள்ளனர். இவை செயல்படுத்தப்பட்டால் அடுத்த ஆண்டு பொருளாதாரத்தில் மந்தநிலை ஏற்படும் என்று அவர்கள் கருதுகின்றனர்,” என்றும் கமலா ஹாரிஸ் கூறினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

WWE, அழகிப் போட்டி, ரியல் எஸ்டேட் என பிசியாக இருந்த டிரம்ப் அரசியலில் நுழைந்தது எப்படி?

டொனால்ட் டிரம்ப், அமெரிக்கா

பட மூலாதாரம்,GETTY IMAGES

3 மணி நேரங்களுக்கு முன்னர்

அமெரிக்க அதிபர் பதவிக்கு தொடர்ச்சியாக மூன்று முறை போட்டியிடுவதற்கு முன்பு, டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவின் மிகவும் பகட்டான கோடீஸ்வரராக இருந்தார்.

டிரம்ப் நியூயார்க்கில் ரியல் எஸ்டேட் ஜாம்பவானாக வலம் வந்தார்.

அதிபர் பதவிக்கு போட்டியிடுவதற்கு முந்தைய 2015 முதல் 2016 வரையிலான பத்தாண்டுகளில் அவரது வாழ்க்கை பற்றி பத்திரிகைகளிலும் தொலைக்காட்சிகளிலும் பரவலாக பகிரப்பட்டது.

எனவே அவர் பிரபலமான பிம்பமாக மாறினார். அவரது செல்வாக்கு மற்றும் யதார்த்தமான பிரசார பாணி, அனுபவம் வாய்ந்த பல அரசியல்வாதிகளை தோற்கடிக்க உதவியது. ஆனால் அவரது சர்ச்சை நிறைந்த பதவிக்காலம் அடுத்த தேர்தலில் அவருக்கு வெற்றியை கொடுக்கவில்லை. மிக விரைவில் அவரை அதிபர் பதவியில் இருந்து வெளியேற்றியது.

இப்போது 78 வயதாகும் டிரம்ப், தடைகளை தாண்டி அரசியல் மறுபிரவேசத்தை மேற்கொண்டுள்ளார். இந்த மறுபிரவேசம் அவரை வெள்ளை மாளிகைக்கு மீண்டும் அழைத்து செல்லுமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

ரியல் எஸ்டேட் அதிபரின் வாரிசு

டொனால்ட் டிரம்ப், அமெரிக்கா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, டிரம்ப் 1971-ஆம் ஆண்டில் தன் குடும்ப வணிகத்தின் தலைவராக பொறுப்பேற்றார்.

நியூயார்க் ரியல் எஸ்டேட் அதிபர் பிரெட் டிரம்பின் (ஃபிரடெரிக் கிறைஸ்ட் டிரம்ப் சீனியர்) நான்காவது மகன் டொனால்ட் டிரம்ப்.

டிரம்ப் 13 வயதில், பள்ளியில் தவறான நடத்தைகளில் ஈடுபட்டதால் ராணுவ அகாடமிக்கு அனுப்பப்பட்டார். குடும்பத்தில் வசதி இருந்த போதிலும், அவர் தனது தந்தையின் நிறுவனத்தில் அடிமட்டப் பணியாளராக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கப்பட்டது.

அதன் பின்னர் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் வார்டன் பள்ளியில் பட்டம் பெற்றார்.

அவரது மூத்த சகோதரர் ஃப்ரெட் (ஃபிரடெரிக் கிறைஸ்ட் டிரம்ப் ஜூனியர்) விமானியாக முடிவு செய்த பிறகு, தந்தையின் தொழிலை பார்த்துக் கொள்ளும் இடத்திற்கு டிரம்ப் வந்தார்.

டிரம்பின் சகோதரர் ஃப்ரெட் டிரம்ப் குடிப்பழக்கத்தால் 43 வயதில் உயிரிழந்தார். இந்த காரணத்தினால்தான் டிரம்ப் தனது வாழ்நாள் முழுவதும் மது மற்றும் சிகரெட்டைத் தவிர்த்தார்.

தந்தையின் நிறுவனத்தில் சேர்வதற்கு முன்பு தனது தந்தையிடமிருந்து சிறிய தொகையை (1 மில்லியன் டாலர்) கடனாக பெற்று ரியல் எஸ்டேட்டில் ஈடுபட்டதாக கூறுகிறார் டிரம்ப் .

நியூயார்க் நகரத்தில் தனது தந்தையின் பரந்த அளவிலான குடியிருப்பு மேம்பாட்டு பணிகளை மேற்பார்வையிட டிரம்ப் அவருக்கு உதவினார், மேலும் 1971ஆம் ஆண்டில் அவர் வணிகத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றார், அதை `டிரம்ப் அமைப்பு’ என்று மறு பெயரிட்டார்.

1999-ஆம் ஆண்டில், அவரது தந்தை காலமானார். டிரம்ப், "தந்தை எனது உத்வேகம்" என்று குறிப்பிடுவது வழக்கம்.

`டிரம்ப்’ என்னும் பிராண்ட்

டொனால்ட் டிரம்ப், அமெரிக்கா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, டிரம்ப் தன் நிறுவனத்தின் கவனத்தை புரூக்ளின் மற்றும் குயின்ஸில் இருந்து மன்ஹாட்டனுக்கு மாற்றினார்

டிரம்ப் நிர்வாகத்தின் கீழ், அவரது குடும்ப வணிகம், புரூக்ளின் மற்றும் குயின்ஸில் உள்ள குடியிருப்பு திட்டங்களில் இருந்து முன்னேறி பளபளப்பான மன்ஹாட்டன் திட்டங்களாக மாறியது.

புகழ்பெற்ற ஐந்தாவது அவென்யூ, டிரம்ப் டவரின் இல்லமாக மாறியது, இது அவரின் மிகவும் பிரபலமான சொத்து. பல ஆண்டுகளாக இங்குதான் அவர் வசிக்கிறார்.

`டிரம்ப்’ என்ற பிராண்ட் பெயரைக் கொண்ட பிற சொத்துகள், கேசினோக்கள், குடியிருப்புகள், கோல்ஃப் மைதானங்கள் மற்றும் ஹோட்டல்கள் - அட்லாண்டிக் சிட்டி, சிகாகோ மற்றும் லாஸ் வேகாஸ் முதல் இந்தியா, துருக்கி மற்றும் பிலிப்பைன்ஸ் வரை அமைக்கப்பட்டன.

டிரம்ப் பொழுதுப்போக்கு துறையிலும் கால் பதித்து வெற்றி கண்டார். பொழுதுபோக்கு உலகில் ஒரு நட்சத்திரமாக அவரது எழுச்சி தொடர்ந்தது. அழகுப் போட்டிகள் நடத்தும் உரிமையாளராக, மிஸ் யுனிவர்ஸ், மிஸ் யுஎஸ்ஏ மற்றும் மிஸ் டீன் யுஎஸ்ஏ ஆகியவற்றை நடத்துவதில் வெற்றி பெற்றார். பின்னர் என்பிசி சேனலின் ரியாலிட்டி நிகழ்ச்சியான `தி அப்ரெண்டிஸின்’ (The Apprentice) தொகுப்பாளராகவும் இருந்தார்.

14 சீசன்களுக்கு மேல், அப்ரண்டிஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற போட்டியாளர்கள் அவரது வணிக சாம்ராஜ்யத்தில் நிர்வாக ஒப்பந்தத்திற்காக போட்டியிட்டனர். அந்த நிகழ்ச்சியில் அவர் பயன்படுத்திய "You're fired!" என்னும் வரி "டொனால்ட்" என்ற பெயரை பிரபலப்படுத்தியது.

டிரம்ப் பல புத்தகங்களை எழுதியுள்ளார், திரைப்படங்கள் மற்றும் மல்யுத்த நிகழ்ச்சிகளில் தோன்றியுள்ளார். பானங்கள் முதல் ஆடைகள் வரை பல பொருட்களின் வணிகத்தில் ஈடுபடுள்ளார்.

ஆனால் சமீபத்திய ஆண்டுகளில் அவரது நிகர சொத்து மதிப்பு குறைந்துள்ளது, ஃபோர்ப்ஸ் கூற்றுபடி, டிரம்பின் நிகர சொத்து மதிப்பு சுமார் $4 பில்லியன்.

டிரம்ப் ஆறு தனித்தனி சந்தர்ப்பங்களில் வணிக திவால் நோட்டீஸ்களை தாக்கல் செய்துள்ளார். மேலும் அவரது பல வணிக முயற்சிகள் சரிவை சந்தித்தன.

கூடுதலாக, அவர் தனது வரிப் பதிவுகளைப் பற்றிய விசாரணைகளை தவிர்த்துவிட்டார். டிரம்ப் பல ஆண்டுகளாக வருமான வரி ஏய்ப்பு செய்தார் என்றும், நிதி இழப்புகளை சந்தித்தார் என்றும் 2020-ஆம் ஆண்டு நியூயார்க் டைம்ஸ் கட்டுரை குறிப்பிட்டுள்ளது.

 
டொனால்ட் டிரம்ப், அமெரிக்கா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, டிரம்பின் பிரபலமும் மீடியா புகழும் அவரது வணிக சாம்ராஜ்யத்துடன் சேர்ந்தே விரிவடைந்தது

டிரம்பின் குடும்பம்

டிரம்பின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி பல்வேறு சந்தர்ப்பங்களில் பொது வெளியில் விவாதிக்கப்பட்டது, பரவலாகப் பேசப்பட்டது.

அவரது முதல் மனைவி இவானா ஜெல்னிகோவா மிகவும் பிரபலமானவர். அவர் விளையாட்டு வீராங்கனையும் மாடலும் ஆவார். டிரம்ப்-இவானா தம்பதிக்கு டொனால்ட் ஜூனியர், இவான்கா மற்றும் எரிக் ஆகிய மூன்று பிள்ளைகள். 1990-ஆம் ஆண்டில் அவர்களுக்கு விவாகரத்தானது.

விவாகரத்துக்கான அவர்களின் சர்ச்சைக்குரிய சட்டப் போராட்டம் ஊடகங்களில் கிசுகிசு கட்டுரைகளில் இடம்பிடித்தது. மறைந்த இவானா, டிரம்ப் தன்னை துஷ்பிரயோகம் செய்ததாக பலமுறை குறிப்பிட்டுள்ளார். அதன் பின்னர் அந்த கருத்தில் இருந்து அவர் பின்வாங்கினார்.

இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பான காட்சிகள், டிரம்பைப் பற்றி வெளியான புதிய திரைப்படத்தில் இடம்பெற்றது.

டிரம்ப் 1993-ஆம் ஆண்டில் நடிகை மார்லா மேப்பிள்ஸை மணந்தார். குழந்தை (டிஃப்பனி) பிறந்த இரண்டு மாதங்களுக்குப் பிறகு, 1999-ஆண்டில் இருவரும் விவாகரத்து செய்தனர்.

டொனால்ட் டிரம்ப், அமெரிக்கா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, டிரம்ப் `தி அப்ரெண்டிஸ்’ என்னும் நிகழ்ச்சியின் 14 சீசன்களை தொகுத்து வழங்கினார்.

டிரம்பின் தற்போதைய மனைவி முன்னாள் ஸ்லோவேனியா மாடலான மெலனியா நாஸ். அவர்கள் 2005-ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டனர். அவர்களின் மகன் பரோன் வில்லியம் டிரம்ப் சமீபத்தில் 18 வயதை நிறைவு செய்தார்.

பாலியல் அத்துமீறல் மற்றும் திருமணம் தாண்டிய உறவு தொடர்பான குற்றச்சாட்டுகள் டிரம்பை பல காலமாக பின்தொடர்கின்றன.

எழுத்தாளர் ஈ ஜீன் கரோலின் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டைப் டிரம்ப் நிராகரித்ததன் மூலம், அவரை அவதூறு செய்ததாக இரண்டு வெவ்வேறு ஜூரிகள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் குறிப்பிட்டனர். கரோலினுக்கு $88 மில்லியன் தொகையை டிரம்ப் கொடுக்க வேண்டும் என்று அவர்கள் உத்தரவிட்டனர். ஆனால் டிரம்ப் மேல்முறையீடு செய்தார்.

2006ஆம் ஆண்டு டொனால்ட் டிரம்ப் தன்னுடன் திருமணம் தாண்டிய உறவில் இருந்ததாக ஆபாசப் பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ் ஒரு குற்றச்சாட்டை முன்வைத்தார். அதை டிரம்ப் மறுத்தார்.

மேலும் 2016ஆம் ஆண்டு தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றதற்கு முன்னதாக இந்த விவகாரம் பற்றி வெளியே பேசாமல் இருக்கத் தனக்கு பணம் கொடுக்கப்பட்டதாக டேனியல்ஸ் குற்றம்சாட்டினார்.

 
டொனால்ட் டிரம்ப், அமெரிக்கா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, இவானா ஜெல்னிகோவா உடனான அவரது திருமணம் மற்றும் விவாகரத்து பொதுவெளியில் பேசுபொருளானது

அரசியல் குறித்த பார்வை

1980 ஆம் ஆண்டு ஒரு நேர்காணலில், 34 வயதான டிரம்ப் அரசியலை "மிகவும் சராசரி வாழ்க்கை" என்று விவரித்தார். "மிகவும் திறமையான மக்கள்" அதற்கு பதிலாக வணிக உலகத்தை தேர்வு செய்வார்கள் என்றும் குறிப்பிட்டார்.

1987 ஆம் ஆண்டு அவர் அதிபர் பதவிக்கான முயற்சியை கிண்டல் செய்தார்.

ஆனால் திருப்புமுனையாக, 2000-ஆம் ஆண்டில் குடியரசுக் கட்சியில் நுழைய நினைத்தார். அடுத்த ஆண்டு தேர்தலில் ரிஃபார்ம் பார்ட்டியின் உறுப்பினராகவும் போட்டியிட நினைத்தார். பின்னர் மீண்டும் 2012-ஆம் ஆண்டில் குடியரசுக் கட்சி பக்கம் சாய்ந்தார்.

பராக் ஒபாமா அமெரிக்காவில்தான் பிறந்தாரா? என்று அவர் பிறப்பிடத்தின் மீது சந்தேகத்தை ஏற்படுத்திய சதிக் கோட்பாட்டை (Birtherism) மிகவும் வெளிப்படையாக ஆதரித்தவர்களில் டிரம்ப் ஒருவராக இருந்தார். இதற்காக அவர் மன்னிப்பு கேட்கவில்லை, 2016 வரை அது பொய் என்பதை ஒப்புக் கொள்ளவில்லை.

டொனால்ட் டிரம்ப், அமெரிக்கா

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஜூன் 2015 இல் அதிபர் தேர்தலுக்கான தனது வேட்புமனுவை முதன்முதலில் அறிவித்தபோது "அமெரிக்கர்களின் கனவுகளை மீண்டும் பெரிதாகவும் சிறப்பாகவும் கொண்டு வருவேன்" என்று உறுதியளித்தார்.

அவரது அற்புதமான உரையின் போது, அவர் தனது செல்வம் மற்றும் பொருளாதார வலிமையைப் பற்றி பெருமையாகக் கூறினார், போதைப்பொருள் கடத்தல்காரர்களையும், பாலியல் குற்றவாளிகளையும் அமெரிக்காவிற்கு கடத்துவதாக மெக்சிகோ மீது குற்றம் சாட்டினார். எல்லைச் சுவரைக் கட்டுவதற்கு மெக்ஸிகோவை பணம் கொடுக்கச் செய்வதாக உறுதியளித்தார்.

தீவிர ஆதரவாளர்கள் ஒருபுறம், கடுமையான எதிர்ப்பாளர்கள் மறுபுறம் என விவாத மேடை ஊடக கவனத்தை பெற்றது.

விவாத மேடையில் ஆதிக்கம் செலுத்தும் காட்சிகள் மற்றும் சர்ச்சை கிளப்பும் கொள்கைகள் ஆகியவை அபிமான ரசிகர்களையும் கடுமையான விமர்சகர்களையும் சம அளவில் ஈர்த்தது, அத்துடன் பெருமளவில் ஊடக கவனத்தையும் ஈர்த்தது.

டொனால்ட் டிரம்ப், அமெரிக்கா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, 2015-16 குடியரசுக் கட்சியின் தேர்தலில் டிரம்ப் ஆதிக்கம் செலுத்தினார்

'அமெரிக்காவை மீண்டும் சிறப்பானதாக மாற்றுவோம்' எனும் பிரசார முழக்கத்தை எழுப்பினார். , ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஹிலாரி கிளிண்டனை எதிர்கொள்வதற்கு குடியரசுக் கட்சியில் இருந்த கடந்த கால போட்டியாளர்களை அவர் எளிதாக ஒன்றிணைத்தார்.

பாலியல் குற்றம் பற்றி தற்பெருமை பேசும் ஆடியோ பதிவு வெளியானது உட்பட புதிய பிரசாரம் சர்ச்சையில் சிக்கியது. அவர் பொதுத் தேர்தல் முழுவதும் கருத்துக் கணிப்புகளில் பின் தங்கியிருந்தார்.

ஆனால் டிரம்ப் ஒரு மூத்த அரசியல்வாதிக்கு எதிரான அவரது அற்புதமான வெற்றியின் மூலம் அரசியல் விமர்சகர்கள் மற்றும் கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கினார். அவர் 2017-ஆம் ஆண்டு ஜனவரி 20-ஆம் தேதியன்று அமெரிக்க 45வது அதிபராக பதவியேற்றார்.

 

அதிபர் பதவி

டொனால்ட் டிரம்ப், அமெரிக்கா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, டிரம்ப் அதிபர் பதவியானது அமெரிக்க நட்பு நாடுகளுக்கு நிச்சயமற்ற காலமாக இருந்தது

டிரம்ப் பதவியேற்ற முதல் சில மணிநேரங்களில் இருந்தே, அவர் நிகரற்ற நாடகத்தனமான செயல்களை மேற்கொண்டார். வெளிநாட்டு தலைவர்களுடன் வெளிப்படையாக மோதினார்.

பெரியளவிலான காலநிலை மற்றும் வர்த்தக உடன்படிக்கைகளில் இருந்து விலகினார். முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் ஏழு நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு பயணம் செய்ய தடை விதித்தார். பிற கடுமையான குடியேற்றக் கட்டுப்பாடுகளை அமல்படுத்தினார்.

சீனாவுடன் வர்த்தகப் போரைத் தொடங்கினார். வரிவிதிப்புகளில் மாற்றம் செய்தார். அவர், மத்திய கிழக்கு நாடுகளுடனான உறவுகளை மறுவடிவமைத்தார்.

ஒரு சிறப்பு ஆலோசகர் 2016 இல் ரஷ்யாவிற்கும் டிரம்ப் பிரசாரக் குழுவுக்கும் இடையிலான ஒத்துழைப்பின் கூறுகளை கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக ஆய்வு செய்தார். கணினி ஹேக்கிங் மற்றும் நிதிக் குற்றங்கள் போன்ற குற்றங்களில் 34 பேர் கிரிமினல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டனர். ஆனால் டிரம்ப் மீது எந்த குற்றமும் நிரூபிக்கப்படவில்லை. விசாரணையில் ரஷ்யா மற்றும் டிரம்ப் பிரசாரக் குழு இடையே தொடர்பு இருப்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று சொல்லப்பட்டது.

ஆனால் விரைவில், வரலாற்றில் டிரம்ப் பதவி நீக்க தீர்மானத்தை எதிர்கொண்ட மூன்றாவது அமெரிக்க அதிபராக மாறினார். எதிர்க்கட்சி போட்டியாளரான ஜோ பைடன் மீது அவதூறுகளை கூற வெளிநாட்டு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்த குற்றச்சாட்டில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஜனநாயகக் கட்சி ஆதிக்கம் செலுத்திய பிரதிநிதிகள் சபையில் பதவி நீக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் குடியரசுக் கட்சி தலைமையிலான செனட் அவை அவருக்கு ஆதரவாக இருந்தது.

2020 ஆண்டு தேர்தலின் போது கொரோனா தொற்றுநோய் சூழல் உருவானது.

தொற்றுநோயால் ஏற்பட்ட இறப்புகள் அதிகளவில் இருந்ததால், அமெரிக்கா நெருக்கடியை சந்தித்தது. இதனால் அவர் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டார். உடலில் கிருமிநாசினியை செலுத்துவதன் மூலம் வைரஸ் தொற்றுக்கு எதிராக சிகிச்சை அளிக்கப்படுமா என்பது பற்றிய ஆராய்ச்சியை பரிந்துரைப்பது போன்ற சர்ச்சைக்குரிய கருத்துகளுக்காக அவர் விமர்சிக்கப்பட்டார்.

டிரம்புக்கு கோவிட் தொற்று இருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து, அக்டோபரில் அவர் பிரசாரப் பணியில் இருந்து ஓய்வு எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

டொனால்ட் டிரம்ப், அமெரிக்கா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, டிரம்ப் மற்றும் அவரது தற்போதைய மனைவி மெலனியா டிரம்புக்கு 18 வயதில் ஒரு மகன் இருக்கிறார் (பரோன் டிரம்ப்)

அந்த தேர்தலில், அவர் பைடனிடம் 70 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

நவம்பர் 2020 மற்றும் ஜனவரி 2021 க்கு இடையில் தேர்தல் மோசடி மற்றும் வாக்குகள் மோசடி தொடர்பான குற்றச்சாட்டுகளை அவர் முன்வைத்தார்; இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக தொடரப்பட்ட 60 க்கும் மேற்பட்ட நீதிமன்ற வழக்குகள் தோல்வியடைந்தன.

முடிவுகளை ஏற்க மறுத்து, டிரம்ப் ஜனவரி 6 ஆம் தேதி வாஷிங்டனில் ஆதரவாளர்களைத் திரட்டினார். பைடனின் வெற்றியை காங்கிரஸ் முறையாகச் சான்றளிக்க வேண்டிய நாளில் ஆதரவாளர்களை கேபிட்டல் அலுவலகத்தில் ஒன்றிணைய வலியுறுத்தினார்.

அந்த பேரணி ஒரு கலவரமாக மாறியது. அவரது அரசியல் வரலாற்றின் இரண்டாவது பெரிய குற்றச்சாட்டு எழ அந்த நிகழ்வு வழிவகுத்தது.

அரசியல் மறுபிரவேசம்

டிரம்பின் அரசியல் வாழ்க்கை கேபிட்டல் நிகழ்வுக்கு (Capitol attack) பிறகு முடிவுக்கு வந்துவிடும் என்று பலர் நினைத்தனர்.

அவரின் நன்கொடையாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அவரை மீண்டும் ஒருபோதும் ஆதரிக்க மாட்டோம் என்று சபதம் செய்தனர். அவரது நெருங்கிய கூட்டாளிகள் கூட அவரை பகிரங்கமாக ஒதுக்கிவிட்டனர்.

அவர் அதிபர் பதவியேற்பு விழாவைத் தவிர்த்துவிட்டு, தனது குடும்பத்துடன் ஃபுளோரிடாவிற்கு சென்றார். ஆனால் அவருக்கு ஆதரவாக இருந்த விசுவாசமான ஒரு சிலரால், குடியரசுக் கட்சியில் செல்வாக்கைத் தக்க வைத்துக் கொண்டார்.

நீதிமன்றத்திற்கு அவர் பரிந்துரைத்த மூன்று வலதுசாரி நீதிபதிகள் கருக்கலைப்பு உரிமை விவகாரத்தில் ஒரு பழமைவாத கருத்தை உறுதிப்படுத்தினர்.

2022 இடைக்காலத் தேர்தல்களில் குடியரசுக் கட்சியின் மோசமான தோல்விக்காக அவர் மீது குற்றம் சாட்டப்பட்ட போதிலும், டிரம்ப் அதிபருக்கான போட்டியில் முன்னேறினார்.

அவரது கட்சியின் முன்னணி வேட்பாளராக ஆனார்.

அவரது முன்னாள் துணை அதிபர் உட்பட பலர் அவருக்கு எதிராக சவால் விடுத்தனர். ஆனால் டிரம்ப் தடைகளை முறியடித்து கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளரானார். விவாத மேடையில் பைடனை வெற்றிகரமாக எதிர்கொண்டார்.

 
டொனால்ட் டிரம்ப், அமெரிக்கா

பட மூலாதாரம்,GETTY IMAGES

டிரம்ப் தேர்தலில் போட்டியிடுகையில், நான்கு கிரிமினல் வழக்குகளில் 91 குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டார். இந்த வழக்குகளை தாமதப்படுத்தும் அவரது உத்தி பெரும்பாலும் வெற்றி பெற்றது.

ஜூலை 13-ஆம் தேதியன்று, பென்சில்வேனியாவின் பட்லர் நகரில் ஒரு பிரசார பேரணியின் போது 20 வயது இளைஞர் ஒருவர் டிரம்பை கொல்ல முயன்றார். அதில், டிரம்பின் வலது காதில் காயம் ஏற்பட்டது.

சில நாட்களுக்குப் பிறகு, குடியரசுக் கட்சியின் தேசிய மாநாட்டில் அவர் வெகுவாக புகழப்பட்டார். தொடர்ந்து மூன்றாவது முறையாக குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளராக அவர் அதிகாரப்பூர்வமாக தேர்வானார்.

அதிபர் வேட்பாளராக டிரம்ப் இம்முறையும் பைடனை எதிர்கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது.

பைடன் வரலாற்று ரீதியாக செல்வாக்கற்ற அதிபர். அவரின் பதவிக் காலம் பல்வேறு பாராட்டுகளையும் சில விமர்சனங்களையும் சந்தித்தது. கொரோனா சூழலுக்கு பிந்தைய பொருளாதார மற்றும் உள்கட்டமைப்பு முன்னேற்றங்கள் அவருக்கு சாதகமாக இருந்தன.

ஆனால் அதிக பணவீக்கம், குடியேற்ற கொள்கைகள், வெளியுறவுக் கொள்கை ஆகியவற்றில் குழப்பம் நிலவியது.

பைடன் தேர்தலில் இருந்து ஒதுங்கி தனது துணை அதிபர் கமலா ஹாரிஸை ஆதரிக்க தொடங்கியதில் இருந்து, அரசு நிர்வாகத்தின் தோல்விகளுக்கு கமலா ஹாரிஸை காரணம் காட்டி டிரம்ப் விமர்சித்தார்.

கமலா ஹாரிஸ் லட்சக்கணக்கான டாலர்களை நன்கொடையாக திரட்டியிருந்தாலும், இருதரப்புக்குமான போட்டி மதில் மேல் பூனை என்ற நிலையில் தான் உள்ளது என்பதை தேசிய கருத்துக்கணிப்புகள் பிரதிபலிக்கின்றன.

அமெரிக்காவில் இந்த ஆண்டு அதிபர் தேர்தல் நடக்கும் நவம்பர் 5-ம் தேதி "நம் நாட்டின் வரலாற்றில் மிக முக்கியமான தேதி" என்று டிரம்ப் தனது ஆதரவாளர்களிடம் கூறியுள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Trump Shuttle எனும் விமானசேவை நான் வந்த காலத்தில் இருந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ட்ரம்பை செலென்ஸ்கி சந்திப்பதற்கு இறுதியாக ஒப்புதல் வழ்ங்கியுள்ளார், அதற்கு முன்னதாக செலென்ஸ்கி முன்னாள் அதிபர் ட்ரம்பிற்கு சந்திப்பிற்க்காக மிக வினயமான கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

இதனிடையே நேற்று முந்தினம் உக்கிரேனின் விமான நிலையத்தின் மீது இரஸ்சியா மிக் 31 இரக விமானத்திலிருந்து கிஞ்சால் ஏவுகனை கொண்டு தாக்கியுள்ளது அதில் சில F - 16 இரக விமானங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக இணைய தளங்களில் வதந்தி உலவுகிறது அதனை உக்கிரேனோ இரஸ்சியாவோ இந்த அழிவுகள் பற்றி குறிப்பிடவில்லை, உக்கிரேன் தாக்குதலை உறுதிப்படுத்தி விமான நிலையத்திற்கு சேதம் ஏற்படவில்லை என கூற இரஸ்சியா இந்த தாக்குதல் பற்றி எதுவ்ம் கூறவில்லை.

இதனிடையே இந்த விமான நிலையத்தில் உக்கிரேன் விமானிகளுக்கு பயிற்சி வழங்கிய அமெரிக்க விமானியும் உயிரழந்தாக கூறுகிறார்கள்.

Image

விமானியின் மனைவியின் பதிவு என கூறப்படுகின்ற பதிவுகள் இணையத்தில் காணப்படுகின்றன அதன் உண்மைத்தன்மை தெரியவில்லை.

போரின் அழிவுகளின் தாக்கம் குறித்த இரு நாடுகளை தாண்டி மற்ற நாடுகளிலும் சிதறும் அபாய நிலைக்கு  நிலமை மாறிக்கொண்டுள்ளது. போரை சமாதானமாக முடிவிற்கு கொண்டுவர தன்னால் முடியும் என ட்ரம்ப் பிரச்சார மேடைகளில் கூறிவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இதனை செலன்ஸ்கியும் நம்புகிறார் என்பதனை அவரது மடலினை பார்க்கும் போது உறுதியாகிறது.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க அதிபர் தேர்தல்: மத்திய கிழக்கில் நிலவும் போர்ப் பதற்றம் யாருக்கு சாதகமாக அமையும்?

கமலா ஹாரிஸ் - டொனால்ட் டிரம்ப்

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு, கமலா ஹாரிஸ் - டொனால்ட் டிரம்ப்
3 மணி நேரங்களுக்கு முன்னர்

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு இன்னும் ஒருமாதமே உள்ள நிலையில், டொனால்ட் டிரம்ப் மற்றும் கமலா ஹாரிஸுக்கு இடையிலான போட்டி மிகவும் கடுமையானதாக மாறியுள்ளது.

தேசிய அளவிலும் சமபலம் கொண்ட மாகாணங்களிலும் கடும் போட்டி நிலவிவருவதால், மிகச்சிறிய வித்தியாசத்தில் அதிபர் தேர்தலில் வெற்றி தீர்மானிக்கப்படலாம். புதிய வாக்காளர்களும் வாக்களிப்பது குறித்து முடிவெடுக்காத வாக்காளர்களும் வெற்றியை தீர்மானிப்பவர்களாக இருப்பர்.

“மிகவும் சமபலத்துடன் கடுமையான போட்டி நிலவும்போது, ஒன்று அல்லது இரண்டு சதவிகித வாக்கு வித்தியாசம் கூட வெற்றியை தீர்மானிக்கும் வகையில் இருக்கும்,” என ரட்கர்ஸ் பல்கலைக்கழகத்தின் அதிபர் தேர்தல் குறித்த வரலாற்று ஆய்வாளர் டேவிட் க்ரீன்பெர்க் கூறுகிறார்.

வெற்றியை தீர்மானிக்க க்கூடிய வாக்குகளை பெறுவது எப்படி என கட்சியின் வியூகவாதிகள் கவனம் செலுத்திவரும் நிலையில், அது அவர்களின் கட்டுப்பாட்டுக்குள் இல்லாத, கடைசி வார பரப்புரைகளை தலைகீழாக திருப்பிப் போடும் எதிர்பாராத திருப்பங்கள் அல்லது சம்பவங்களாலும் நிகழலாம்.

 

இந்தாண்டு அமெரிக்க அரசியலில் பல சம்பவங்கள் அதிர்வலைகளை ஏற்படுத்தின. அதிபர் வேட்பாளர் ஒருவர் மீது இருமுறை கொலை முயற்சி, அவருக்கு எதிரான வழக்கில் குற்றவாளி என தீர்ப்பு ஆகியவை நடந்தேறின. அதிபர் ஜோ பைடன் தன்னைவிட இளம் வயதுடைய துணை அதிபருக்கு ஆதரவாக போட்டியிலிருந்து விலகினார்.

கடந்த காலத்தில் அமெரிக்க அரசியலில் அக்டோபர் மாதம் பல ஆச்சர்யங்கள் நிகழ்ந்துள்ளன. 2016 அக்டோபரில் டிரம்ப் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக வெளியான வீடியோ (Trump’s Access Hollywood tape) மற்றும் ஹிலாரி கிளிண்டனின் மின்னஞ்சல் சர்ச்சை ஆகியவை வெளியாயுன. தவறான செய்தி அல்லது விரும்பத்தகாத சம்பவங்களின் சுழற்சியிலிருந்து மீள்வதற்கு நேரம் இல்லை.

இந்த வாரத்தில் மட்டும், வரும் நவம்பர் 5-ம் தேதிக்குள் அரசியலில் சூறாவளியை கிளப்பக் கூடிய பல புதிய சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளன.

 
ஹெலென் சூறாவளியால் பாதிக்கப்பட்டுள்ள வட கரோலினாவில் டிரம்ப் நிச்சயம் வெற்றிபெற வேண்டிய சூழல் உள்ளது

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, ஹெலென் சூறாவளியால் பாதிக்கப்பட்டுள்ள வட கரோலினாவில் டிரம்ப் நிச்சயம் வெற்றிபெற வேண்டும் எனும் நிலை உள்ளது

ஹெலென் சூறாவளியின் அரசியல் தாக்கம்

அரசியல் புயலாக மாறுவதற்கு வாய்ப்புள்ள முதல் சர்ச்சை சூறாவளி உருவிலேயே வந்துள்ளது. இந்த தேர்தலில் கடும் போட்டி நிலவும் ஜார்ஜியா மற்றும் வட கரோலினா மாகாணங்களில் கடந்த வாரம் ஹெலென் சூறாவளி பெரும் சேதங்களை ஏற்படுத்தியது. அதிபர் தேர்தலில் இந்த இரு மாகாணங்கள் மீது செலுத்தப்பட்ட அதீத கவனம் செலுத்தப்படுகிறது.ஏற்கெனவே 130 பேரின் உயிரிழப்புகளுடன் மானுட பேரழிவை ஏற்படுத்தியிருக்கும் இந்த சூறாவளி அந்த மாகாணங்களில் அரசியல் பிரச்னையாக மாறியுள்ளது.

இந்த வார தொடக்கத்தில் ஜார்ஜியா சென்ற கமலா ஹாரிஸ் அப்பகுதிக்கு நீண்ட கால உதவியை செய்வதாக உறுதியளித்தார். கடந்த சனிக்கிழமையன்று வட கரோலினாவில் சூறாவளியால் பாதிக்கப்பட்ட பகுதிகளையும் அவர் பார்வையிட்டார்.

அதிபர் தேர்தலில் வெற்றிபெற இந்த இரு மாகாணங்களிலும் டிரம்ப் வெற்றிபெறுவது கட்டாயம் எனும் நிலை உள்ளது. இரு மாகாணங்களிலும் கடும் போட்டி நிலவுவதை கருத்துக்கணிப்புகள் காட்டுகின்றன. ஜார்ஜியாவுக்கு சென்ற முன்னாள் அதிபர் டிரம்ப், அவசரகால நிவாரண நிதியை புலம்பெயர்ந்தவர்களுக்காக செலவிடுவதால் அமெரிக்கர்கள் அதனை இழப்பதாக கூறினார். உண்மையில், இந்த இரு நிதியும் தனித்தனி பட்ஜெட். இதையடுத்து, குடியரசு கட்சியினர் பேரிடர் நிதி குறித்து “அப்பட்டமான பொய் கூறி வருவதாக” பைடன் நிர்வாகம் குற்றம்சாட்டியது.

பேரிடர் தாக்கும்போது, அனைத்துத் தரப்பையும் மகிழ்ச்சிப்படுத்துவது ஓர் அரசாங்கத்திற்கு எளிதானது அல்ல. டிரம்பின் இத்தகைய குற்றச்சாட்டுகள் இந்த இரு மாகாணங்களிலும் தேர்தல் முடிவுகளில் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

 
மத்திய கிழக்கில் அதிகரிக்கும் பதற்றம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள நெருக்கடி அமெரிக்க அரசியலில் தொடர்ந்து தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது

மத்திய கிழக்கில் நிலவும் போர்ப் பதற்றம் யாருக்கு சாதகமாக அமையும்?

பேரிடர் ஏற்பட்ட அமெரிக்காவின் தென்கிழக்கு பகுதியிலிருந்து ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் மனிதர்களால் ஏற்பட்ட நெருக்கடி, அமெரிக்க அரசியலில் தொடர்ந்து தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. தெற்கு லெபனானில் ஹெஸ்பொலா படைகளுடன் இஸ்ரேலிய படைகளின் சண்டை மற்றும் இந்த வார தொடக்கத்தில் இஸ்ரேல் மீது இரான் நூற்றுக்கணக்கான ஏவுகணைகளை ஏவியதால் காஸா போர் பிரதேச அளவிலான சண்டையாக உருவெடுக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

மாற்றத்திற்கான வேட்பாளராக தன்னை முன்னிறுத்தும் கமலா ஹாரிஸ், அமெரிக்கா-இஸ்ரேல் கொள்கை என வரும் போது தற்போதைய நிர்வாகத்திலிருந்து ஒதுங்கிக் கொள்ளவில்லை. இதனால் அவருக்கு சில சவால்கள் ஏற்படலாம்.

அமெரிக்க தேர்தலுக்கு முன்பாக காஸாவில் சண்டை நிறுத்தம் உறுதியாக ஏற்படாது என்று தோன்றும் நிலையில், இரான் தாக்குதலுக்கு இஸ்ரேல் தரப்பின் பதிலடி முழு வீச்சிலான போருக்கு இட்டுச் செல்வதை தடுக்க வெள்ளை மாளிகை முயற்சிக்கிறது.

“முழு வீச்சிலான போர் ஏற்படும் என நான் நம்பவில்லை,” என்று அமெரிக்க அதிபர் பைடன் கூறியுள்ளார். “அதை நாம் தவிர்க்க முடியும். ஆனால், அதற்கு இன்னும் நிறைய செய்ய வேண்டியுள்ளது.” என்பது அவரது கூற்று.

வழக்கமாக அமெரிக்க வாக்காளர்கள் வாக்கு செலுத்தும் போது வெளியுறவு கொள்கை குறித்து நேரடியாக சிந்திக்க மாட்டார்கள் என்றாலும், இந்த போர், அமெரிக்காவில் ஜனநாயக கட்சியினருக்கு சில விளைவுகளை ஏற்படுத்தும்.

இஸ்ரேலுக்கு தொடர்ந்து ஆயுதங்களை விநியோகிப்பதில் கமலா ஹாரிஸின் உறுதிப்பாடு, ஜனநாயக கட்சியின் வாக்காளர்களின் இரு முக்கிய பிரிவுகளுக்கு பிரச்னையாக உள்ளது. அவர்கள், மிச்சிகன் மாகாணத்தில் உள்ள அரபு-அமெரிக்கர்கள் மற்றும் போருக்கு எதிரான போராட்டங்கள் மீண்டும் தொடங்கலாம் என கருதப்படும் கல்வி நிலையங்களில் உள்ள இளம் வாக்காளர்கள்.

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக பொருளாதார ரீதியிலான கவலைகளும் எழுந்துள்ளன. இரானிய எண்ணெய் வளங்களை இஸ்ரேல் குறிவைக்கலாம் என பைடன் குறிப்பிட்டதால் வியாழக்கிழமை ஒரே நாளில் கச்சா எண்ணெய் விலை 5 சதவிகிதத்திற்கும் மேல் உயர்ந்தது.

பெட்ரோல் விலை உயர்வு குறித்து அமெரிக்கர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

 
கமலா ஹாரிஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, ஹாரிஸுக்கு சாதகமான சில சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன

ஜனநாயகக் கட்சியினருக்கு இன்ப அதிர்ச்சிகள்

அமெரிக்க வாக்காளர்களிடையே பொருளாதாரம் தான் முக்கியமாக பிரச்னையாக இருப்பதை பல்வேறு கருத்துக் கணிப்புகள் தொடர்ந்து காட்டுகின்றன. அதனடிப்படையில் ஹாரிஸ் மற்றும் ஜனநாயக கட்சியினருக்கு வெள்ளிக்கிழமை மகிழ்ச்சியான செய்தி கிடைத்துள்ளது. அதாவது, சமீபத்திய வேலைவாய்ப்பு புள்ளிவிவரங்களின்படி, கடந்த சில மாதங்களில் வேலைவாய்ப்புகள் அதிகரித்துள்ளன. வேலைவாய்ப்பின்மை 4.1% குறைந்துள்ளது.

வாக்காளர்களின் பொருளாதாரம் குறித்த கவலைகள் சமீபத்திய வேலைவாய்ப்பு புள்ளிவிவரங்கள் குறித்து மட்டுமல்ல என்கிறார், க்ரீன்பெர்க்.

“உண்மையில் மக்கள் நாட்டின் சில பகுதிகளில் நிலவும் நீண்ட கால தோல்வியை தான் குறை கூறுகின்றனர். குறிப்பாக கிராமப்புற அமெரிக்காவின் தொழில்மயமாக்கல் குறைந்துவருவது,” என்கிறார் அவர். “ஒரு நாட்டின் சிறப்பான பொருளாதாரத்தில் கூட இது பாதிப்பை ஏற்படுத்தும்.” என்று அவர் கூறுகிறார்.

இந்த தேர்தல் காலம் முழுவதும் பொருளாதாரத்தில் யார் சிறப்பாக பணியாற்றுவார் என்ற கேள்விக்கு, சமீபத்திய சி.என்.என் கருத்துக்கணிப்பு உட்பட, ஹாரிஸைவிட டிரம்பையே பலரும் தங்கள் தேர்வாக கூறினர். ஆனால், டிரம்பின் இந்த நிலை மாற்ற முடியாதது அல்ல. குறிப்பாக, குக் பொலிட்டிக்கல் ரிப்போர்ட் (Cook Political Report) கருத்துக்கணிப்பின்படி, பணவீக்கத்தை யார் சிறப்பாக கையாள்வார்கள் என்ற கேள்விக்கு சமபலம் உள்ள மாகாணங்களில், வேட்பாளர்கள் இருவரும் சமமான ஆதரவை பெற்றனர்.

ஜனநாயக கட்சியினருக்கு நெருக்கடியாக மாறுவதற்கு சாத்தியமான மற்றொரு விஷயமும் இந்த வாரம் தணிந்தது. கடந்த 50 ஆண்டுகளில் முதன்முறையாக கிழக்கு கடற்கரை மற்றும் மெக்சிகோ வளைகுடாவில் முக்கியமான துறைமுகங்களை மூடுவதற்கு காரணமாக இருந்த கப்பல்துறை தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் தான் அது. துறைமுகங்களை மீண்டும் திறக்கும் வகையில் பேச்சுவார்த்தைக்கு திரும்ப இருதரப்பும் முன்வந்துள்ளன. வேலைநிறுத்தம் தொடர்ந்திருந்தால், தேர்தலுக்கு முந்தைய வாரங்களில் சப்ளையில் ஏற்படும் பாதிப்பு காரணமாக பொருட்களின் விலை அதிகரித்திருக்கலாம்.

இதனிடையே, அமெரிக்கா-மெக்சிகோ எல்லையில் சட்டவிரோதமாக புலம்பெயர்ந்தோர் வருவது, கொரோனா காலகட்டத்திற்கு முந்தைய அளவுக்கு திரும்பியுள்ளது. அது, கடந்தாண்டு டிசம்பரில் சாதனை அளவாக 2,49,741 என்ற எண்ணிக்கையை அடைந்தது.

இதன் தாக்கம் பல அமெரிக்க நகரங்களில் உணரப்பட்டாலும், நிலைமையின் தீவிரம் குறையக்கூடும்.

 

மீண்டும் கேபிடல் தாக்குதல் குறித்து கவனம்

டொனால்ட் டிரம்ப்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, கேபிடல் கட்டடம் தாக்குதல் குறித்து மீண்டும் கவனம் எழுந்துள்ளது

இந்த வாரச் செய்திகளில் பெரும்பாலானவை ஹாரிஸ் மற்றும் ஜனநாயகக் கட்சியினருக்கு சிக்கலை ஏற்படுத்தக்கூடும் என்றாலும், டிரம்பிற்கும் அது சுமூகமானதாக இல்லை.

கடந்த 2020 ஆம் ஆண்டு தேர்தல் முடிவை மாற்றியமைக்க முயற்சித்ததாக டொனால்ட் டிரம்பிற்கு எதிரான வழக்கு மற்றும் ஆதாரங்களைக் கோடிட்டுக் காட்டும் சிறப்பு வழக்கறிஞர் ஜாக் ஸ்மித்தின் ஆவணத்தை நீதிபதி ஒருவர் வெளியிட்டார். இதனால், 2021, ஜனவரி 6 ஆம் தேதி அமெரிக்க நாடாளுமன்றம் இருக்கும் கேபிடல் கட்டடம் மீதான தாக்குதலில் டிரம்பின் செயல்பாடுகள் குறித்து கடந்த புதன்கிழமை மீண்டும் கவனம் பெற்றது.

இத்தாக்குதலுக்கு முன்பாக டிரம்பின் கருத்துகள் மற்றும் நடவடிக்கைகள், அவரது ஆதரவாளர்களால் கேபிடல் கட்டடம் தாக்கப்படுவதற்கு வழிவகுத்ததாக கூறும் புதிய தகவல்கள் அந்த ஆவணத்தில் அடங்கியுள்ளது. இதுதொடர்பாக விசாரிக்கப்படுவதில் இருந்து டிரம்ப்பிற்கு விலக்களிக்கக் கூடாது என அந்த ஆவணம் பரிந்துரைத்தது.

“ஜனநாயகத்தைக் காப்பது” தொடர்பாக வாக்காளர்கள் டிரம்பைவிட (40%) ஹாரிஸை (47%)அதிகமானோர் ஆதரிப்பதாக சமீபத்திய சி.என்.என் கருத்துக்கணிப்பு கூறுகிறது.

"எதிர்பாராத முடிவாக இருக்கும்"

கடந்த 50 ஆண்டுகளாக, அமெரிக்க அரசியல் அகராதியில் “அக்டோபர் ஆச்சர்யம்” என்பது நிலையானதாக உள்ளது. இதனால் போட்டியின் போக்கை மாற்றும் எதிர்பாராத தலைப்புச் செய்திகள் அல்லது நெருக்கடி குறித்த அச்சம் கட்சிகளிடையே ஏற்பட்டுள்ளது.

சம போட்டி நிலவும் மாகாணங்களில் வாக்கு வித்தியாசம் சில பத்தாயிரங்களில் மட்டுமே இருக்கும் எனும் நிலையில், பொதுக் கருத்தில் ஏற்படும் சிறிய மாற்றம் கூட வெற்றியை தீர்மானிக்கும் ஒன்றாக மாறலாம்.

நவம்பர் தேர்தல் முடிவு எதிர்பாராத ஒன்றாக இருக்கும் என்றார் க்ரின்பெர்க்.

“நீங்கள் எந்த தரப்பை ஆதரித்தாலும், உங்களின் வாக்கை பொறுத்து தீவிரமான விளைவுகள் ஏற்படும் என நான் யூகிக்கிறேன்.”

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • குற்றம் புரியாதவர்களை பொலிஸ் ஏன் தேடி வரபோறான் கோஷான், சுவிசிலும் பொலிஸ் அடியில் பிரபலமான அரோ, செங்காலன் என்று ஒரு சில கன்ரோனுகள் உண்டு   அடி வெளியில் தெரியாது. பிரான்சில் பொலிஸ் போகமுடியாத அடையார் கறுவல்  ஏரியாவுகளுமுண்டு என்று சொல்வார்கள். அடி பின்ன்னி எடுப்பதில் GIGN   எனப்படும் பிரெஞ்ச் பொலிஸ் பிரிவு பெயர் போனது என்றும் சொல்வார்கள்,    எதுக்கும்  GIGN   கிட்ட அந்தகாலத்தில் தவணை முறையில் கேட்டு வாங்கின நம்ம @விசுகு அண்ணா வந்து விளக்கம் தருவார் என்று நம்புகிறேன்,  சும்மா கலாய்க்கிறேன் டென்ஷன் ஆகுறாரோ தெரியல. இஸ்லாமியர்களுக்கு எதிராக உலகம் முழுவதும் வெறுப்புணர்வு தோன்றியதோ அதேபோல இந்தியர்களுக்கெதிராக மேற்குலகில் தோன்றிக்கொண்டிருக்கிறது. இந்த இரு சமூகமும் ஓரிடத்தில் தமது எண்ணிக்கை அதிகமானால் புறசூழல்பற்றி எதுவும் சிந்திக்காது ஒரு நாட்டிற்குள்  தமக்கென்று ஒரு தனிநாடு உருவாக்குவார்கள். அமெரிக்கா கனடாவில் எப்போதோ தோன்றிவிட்டது. இந்தியர்கள் பெரும்பான்மையான இடத்தில் இஸ்லாமியர்களைபோலவே அவர்கள் ஆட்களை தவிர வேறு எவருக்கும் வேலை கொடுக்கமாட்டார்கள் பகுதிநேர வேலைக்குகூட  எடுக்க மாட்டார்கள்,  அதனால் வெள்ளைக்காரர்கள்கூட வேலை வாய்ப்பு பெறமுடியாமல் நடுத்தெருவுக்கு வந்துவிட்டதுதான் சோகம். இந்த சம்பவங்கள் மட்டுமல்ல இந்தியாவில் புளூ பிலிமைபார்த்துவிட்டு  இங்கு வந்து வெள்ளைக்காரிகள் என்றால் எல்லோருமே படுக்கைக்கு உரியவர்கள் என்பதுபோல் நடந்து கொள்வது அவர்களை பார்த்து ஹிந்தி பாட்டு பாடுவது, சில வருடங்களின் முன்பு பாதாள ரயிலில்பயணம் செய்யவேண்டிய நிலை ஏற்பட்டது, எதிரே ஒரு வெள்ளைக்காரி அமைதியாக  புத்தகம் படித்துக்கொண்டிருந்தார் பார்த்தாலே ஏதோபெரிய உத்தியோகத்திலிருப்பதுபோல் தெரிந்தது, சைட் சீட்டில் இருந்த இந்தியர் அவளையே பார்த்துக்கொண்டிருந்தார் அவ கவனிக்கவே இல்லை ,  திடீரென்று எழுந்து நேரம் என்னமேடம் என்று கேட்டார் அவரும் சிரித்தபடியே சொன்னார் ,இத்தனைக்கும் அவனிடமும் போன் இருந்திருக்கும், ரயில் ஒரு ஸ்டேஷனில் நின்றபோது தேங்க்யூ மேடம் என்று சொல்லிட்டு அந்த பெண்ணின் தலையை பிடித்து உதட்டில் அழுத்தி கிஸ் பண்ணிட்டு இறங்கி போனான். கதவை பூட்டிட்டு ரயில் கிளம்பிவிட்டது அந்தபெண் அப்படியே நிலை குலைந்து போனார் இயல்புக்கு வரவில்லை , ரிசு எடுத்து வாயை துடைத்துக்கொண்டே இருந்தார். அடுத்த ஸ்டேஷன் வந்ததும் நான் ஜம்ப் பண்ணி அடுத்த பெட்டியில ஏறிட்டன், அவனில உள்ள கோபத்தில் எனக்கு ஒரு காட்டு காட்டிவிட்டால் என்னாகும் மானம்?   
    • மக்களுக்கு அரசியலில் ஈடுபாடு குறைவடைந்து விட்டது – பெப்ரல் பொதுத் தேர்தலில் 8888 வேட்பாளர்கள் போட்டியிடுகின்ற போதிலும் ஆயிரத்திற்கும் குறைவான வேட்பாளர்களே தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டுள்ளனர் என பவ்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளார் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். இது அரசியல் ஈடுபாடு குறைவடைந்துள்ளதை வெளிப்படுத்துவதோடு, மக்களிற்கு அரசியல் ஈடுபாடு குறைவடைவதை காண்பிக்கின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார். அரசியலில் ஈடுபடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து பொதுமக்களின் அபிப்பிராயங்கள் மாற்றமடைந்துள்ளமையும், பாராம்பரிய கட்சி கட்டமைப்பு குறித்த அதிருப்தியும் இதற்கு காரணம் என ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். வழமையாக வாக்காளர்களை உள்வாங்குவதற்காக 6,00,000 கட்சி அலுவலகங்களை அமைப்பார்கள், ஆனால் இம்முறை 9241 கட்சி அலுவலகங்களே இயங்குகின்றன என அவர் தெரிவித்துள்ளார். பொதுச் சொத்துக்கள் துஸ்பிரயோகம் போன்றவை தற்போதும் காணப்படுகின்ற போதிலும் ஆபத்தான கட்டத்தை அவை நெருங்கவில்லை, 25 வன்முறை சம்பவங்கள் பதிவாகியுள்ளன அவை ஆபத்தான கட்டத்தை அடையவில்லை என குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2024/1407705
    • கிழக்கை மண்ணை காப்பாற்றுவதற்காக மக்களுடன் இனைந்து கடந்த 15 வருடமாக  போராடிவருகின்றோம். எனவே கிழக்கு மாகாணத்தை காப்பாற்ற வேண்டுமாக இருந்தால் வடக்கில் இருக்கின்ற தமிழ் மக்கள் சைக்கிளுக்கு வாக்களிக்க வேண்டும். அப்போது தான் கிழக்கை காப்பாற்ற முடியும் என இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் சைக்கிள் சின்னத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் கட்சியின் தேசிய அமைப்பாள் தர்மலிங்கம் சுரேஸ் கிழக்கு மண்ணிலிருந்து அறைகூவல் விடுத்துள்ளார். மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை சந்தியில் புதன்கிழமை(06) மாலை சைக்கிள் சின்னதில் தேர்தல் பிரச்சாரத்துக்கான கட்சி காரியாலயம் திறந்துவைத்து உரையாற்றுகையில் அவர் இவ்வாறு அறைகூவல் விடுத்தார்.   இந்த தேர்தலை இதுவரைக்கும் நடந்த தேர்தல்போல எங்கள் மக்கள் கையாளக் கூடாது என ஆரம்பத்திலிருந்தே தெரிவித்துவருகின்றோம். இந்த தேர்தல் தமிழ் மக்களுக்குப் பேரம் பேசக்கூடிய இறுதி சந்தர்ப்பமாக அமையப் போகின்ற இந்த தேர்தலுக்குப் பின்னர் தமிழ் மக்களுடைய வாழ்வு  இந்த தீவிலே ஒரு அடிமைத்தனமாக இருக்கப் போகின்றதா? அல்லது சிங்கள தமிழ் முஸ்லீம் மக்கள் சம உரிமையோடு வாழப்போகின்றோமா? என்ற ஒரு கேள்வி எழுப்புகின்ற ஒரு தேர்தல் அமையப் பெற்றிருக்கின்றது. தமிழர்களை பொறுத்தமட்டில் தமிழர்கள் ஒரு நீண்ட நெடிய வரலாற்று ரீதியாகப் போராடி ஒரு மரபுவழியாக தமக்கான ஒரு தனித்துவத்தை பெற்றிருக்கும் ஒரு இனம் அதனடிப்படையில் தமிழர்கள் இந்த தீவிலே சுதந்திரமாக வாழ்வதற்காக அதிக விலை கொடுத்துள்ளனர், உயிர்களைத் தியாகம் செய்துள்ளனர், கோடான கோடி சொத்துக்களை இழந்துள்ளனர் நிலங்களைப் பறிகொடுத்துக் கட்டமைக்கப்பட்ட இனழிப்புக்கு உட்பட்டு வருகின்றனர். எனவே மக்கள் இந்த தேர்தல் தொடர்பாக மிகுந்த ஆர்வத்துடனும் கரிசனையுடனும் கையாளவேண்டும். வடக்கு கிழக்கிலே சைக்கிள் அணி மிகப் பெரும் பலமாக வந்து கொண்டிருக்கின்றது. தென்பகுதியை பொறுத்தமட்டில் ஒரு ஊழல் அற்ற நேர்மையான ஒரு அரச தலைவராக அனுரகுமார திசாநாயக்காவை  ஜனாதிபதியாக அந்த மக்கள் தெரிவு செய்துள்ளனர். ஆனால் வடகிழக்கிலே அவ்வாறான ஒரு தலைவரை இதுவரைக்கும் தமிழ் மக்களால் தேர்ந்தெடுக்கப்படவில்லை ஆனால் இந்த தேர்தல் அந்த சந்தர்ப்பத்தை மக்களுக்குக் கொடுத்திருக்கின்றது. தமிழ் மக்களின் உரிமைகளைச் சர்வதேச மட்டத்தில் பெற்றுக் கொடுப்போம்  அதற்கு தலமைதாங்க வேண்டும் என்ற அடிப்படையிலே தமிழர்கள் நம்பி யுத்தத்தின் பின்னர் மூன்று தடவைகள் வாக்களித்து அறுதி பெரும்பான்மையான ஆணைகளைப் பெற்று தமிழ் மக்கள் மீது நடாத்தப்பட்ட இனழிப்புக்கு சந்தர்பம் கிடைக்கின்ற போதெல்லாம் அதனைத் தட்டிக்களித்து எந்தவொரு தீர்வையும் பெற்றுக் கொடுக்காது தமிழ் மக்களுக்கு துரோகம் இழைத்ததை தவிர வேறு எந்தவொரு வேலையையும் இந்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் செய்யவில்லை. அதனால் நாங்கள் கடந்த 15 வருடங்களாக தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் வடகிழக்கிலே நடைபெறுகின்ற கட்டமைப்புசார் இடம்பெறும் இன அழிப்பை மக்களுடன் இணைந்து தடுத்து நிறுத்தி வருகின்றோம் அப்படிப்பட்ட எங்கள் தலைமைக்கும் அணிக்கும் ஒரு தடவை இந்த தேர்தலில் சந்தர்ப்பம் தாருங்கள். எந்த நோக்கத்தோடு எங்களைச் சிங்கள தேசம் அழித்ததோ அதற்கான பரிகாரத்தை நாங்கள் நாடாளுமன்றத்தில் பேரம் பேசி .நா. மனித உரிமை இனழிப்பு தொடர்பான பொறுப்புக்கூறலை சரியான இடத்துக்கு கொண்டு செல்ல ஆணையை தாருங்கள் மக்களின் உரிமையை வென்றெடுப்பதற்காகச் செயற்படுகின்ற சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் இந்த அணியைப் பலப்படுத்தப் போகின்றீர்களா? இல்லை வழமைபோன்று சாராயம் அரிசி மாவுக்கும் வெறும் சலுகைகளுக்கும் நீங்கள் வாக்களித்து இனிமேல் உரிமை என்றால் என்ன என்று கேட்கமுடியாத ஒரு நிலைக்கு இட்டுச் சென்று நிரந்தரமாகத் தமிழர்கள் அடிமையாகப் போகின்றோமா? என்ற கேள்வியைப் பெருவாரியான மக்கள் விளங்கி வடக்கிலும் கிழக்கிலும் சைக்கிள் அணிக்குப் பின்னால் நகர்ந்து கொண்டிருக்கின்றனர். கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழ் மக்களை பாதுகாப்பதற்காக தொடர்ச்சியாக கடந்த 15 வருடங்களாக இந்த மண்ணில் இருந்து போராடி செயற்பட்டு வருகின்றோம் கிழக்கில் மக்கள் நிச்சயமாக ஆணையை தரும் அதேவேளை வடக்கில்; எங்கள் கட்சி மீது மக்கள் திசை திரும்பியுள்ளனர் அதனால் ஏனைய சிங்கள கட்சிகளும் அவர்களுடன் சோந்திருக்கின்ற கட்சிகளும் குழப்புவதற்காக மட்டக்களப்பு மாவட்டத்திலே கூடியளவு சாராயம் மற்றும் பணங்களையும் கொடுத்து இந்த மக்களை திசைதிருப்புவதற்கான வேலைத் திட்டங்களை செய்கின்றனர். வீடு, சங்கு, சின்னத்திலே போட்டியிடுகின்ற அந்த அரசியல்கட்சிகளின் கடந்தகால செயற்பாடு பற்றி எங்கள் மக்களுக்கு சொல்லவேண்டிய அவசியம் கிடையாது பிறிந்து செயற்படும் அத்தனை பேரும் இந்த இனத்தை அழிப்பதற்காக 2015ம் ஆண்டு ஒற்றையாட்சி அரசியல் யாப்புக்கான இடைக்கால யாப்பை உருவாக்கி வைத்துள்ளனர் எனவே  இந்த மண்ணிலே தமிழ் மக்கள் நிம்மதியாக சிங்கள மக்கள் போன்று ஒரு சுபீட்சத்துடன் வாழவேண்டும் என்றால் இந்த தேர்தலை பயன்படுத்த வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/198140
    • மக்களுக்கு அரசியலில் ஈடுபாடு குறைவடைந்து விட்டது – பெப்ரல். பொதுத் தேர்தலில் 8888 வேட்பாளர்கள் போட்டியிடுகின்ற போதிலும் ஆயிரத்திற்கும் குறைவான வேட்பாளர்களே தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டுள்ளனர் என பவ்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளார் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். இது அரசியல் ஈடுபாடு குறைவடைந்துள்ளதை வெளிப்படுத்துவதோடு, மக்களிற்கு அரசியல் ஈடுபாடு குறைவடைவதை காண்பிக்கின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார். அரசியலில் ஈடுபடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து பொதுமக்களின் அபிப்பிராயங்கள் மாற்றமடைந்துள்ளமையும், பாராம்பரிய கட்சி கட்டமைப்பு குறித்த அதிருப்தியும் இதற்கு காரணம் என ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். வழமையாக வாக்காளர்களை உள்வாங்குவதற்காக 6,00,000 கட்சி அலுவலகங்களை அமைப்பார்கள், ஆனால் இம்முறை 9241 கட்சி அலுவலகங்களே இயங்குகின்றன என அவர் தெரிவித்துள்ளார். பொதுச் சொத்துக்கள் துஸ்பிரயோகம் போன்றவை தற்போதும் காணப்படுகின்ற போதிலும் ஆபத்தான கட்டத்தை அவை நெருங்கவில்லை, 25 வன்முறை சம்பவங்கள் பதிவாகியுள்ளன அவை ஆபத்தான கட்டத்தை அடையவில்லை என குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2024/1407705
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.