Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
நளபாகம்
---------------
நல்ல கைப்பக்குவம் உள்ளவர் வாழ்வில் துணையாக கிடைத்தால் அது பெரும் அதிர்ஷ்டமே. மூன்று வேளைச் சாப்பாட்டிற்காகத் தான் வாழ்க்கையில் இந்த ஆட்டம் எல்லாம் என்று நடிகர் சிவாஜி கணேசன் சொன்னதாகச் சொல்லுவார்கள். அவரையும், அவருடைய மகன்களையும் பார்த்தால், அவர்கள் மூன்று வேளைகள் தான் சாப்பிட்டிருக்கின்றார்கள் என்று சொல்ல முடியவில்லை. 'எந்தக் கடையில் நீ அரிசி வாங்கினாய்.......' என்ற பாடல் வரிகள் அவர்களுக்காகவே எழுதப்பட்டும் இருக்கின்றது.
 
இதில் இருக்கும் ஒரு சிக்கல் என்னவென்றால், கைப்பக்குவம் உள்ளவர் அவசரமாக சில வாரங்களுக்கு வேறெங்கும் போக வேண்டி வந்தால், வீட்டில் இருக்கும் மற்றவர்களின் நிலை என்ன என்பது தான். அக்கம்பக்கத்தில் நண்பர்கள், உறவுகள் இருப்பார்கள். அவர்கள் கொடுப்பார்கள் கூட. ஆனால் அந்தப் 'பக்குவம்' அங்கே இருக்காது. கொண்டு வந்து கொடுப்பவர்களிடம் வேண்டாம் என்று சொல்ல முடியாது, ஆனால் கொடுப்பது எல்லாவற்றையும் வாங்கி வீட்டில் வைத்தாலும், அவற்றை சாப்பிடவும் முடியாது. சில நேரங்களில் எதையுமே சாப்பிடமுடியாது.
 
பல வருடங்களின் முன் வீட்டில் வந்து நின்ற ஒருவர் அன்று இரவுச் சாப்பாட்டிற்கு சம்பல் செய்ய தயாரானார். அவர் ஏற்கனவே ஒரு தடவை சில நாட்களின் முன் சம்பல் செய்திருந்தார். அப்போது மகன் சிறுவன். மகன் நேரே அவரிடம் போய் இன்று நீங்கள் சம்பல் செய்ய வேண்டாம், அம்மாவே செய்யட்டும் என்று சொன்னான். கொஞ்சம் வயதானவர். சத்தம் ஓய சில நிமிடங்கள் எடுத்தது.
 
சில நாடுகளில் நல்ல உணவகங்கள் இருக்கின்றன போல. இங்கு அப்படி இல்லை. இந்திய உணவகங்கள் இருக்கின்றன. ஆனாலும் இரண்டு, மூன்று நாட்களுக்கு மேல் அவற்றுடன் தாக்குப் பிடிக்க முடியாது.
 
நள மகாராஜா தான் சமையலில் மிகச் சிறந்தவர் என்பார்கள். இன்றும் உலகில் மிகப் பிரபலமான, மிகச் சிறந்த சமையல் வல்லுநர்கள் என்று சில ஆண்களையே சொல்கின்றனர். அன்னதான மடங்கள், விழாக்கள் என்று பெரிய சமையல்களையும் பொதுவாக ஆண்களே செய்து வருகின்றனர். எனக்குத் தெரிந்த வரையில் என் நண்பன் ஒருவன் போல உலகில் எவரும் வட்டம் வட்டமாக தோசை சுட மாட்டார்கள். வட்டாரி வைத்துக் கீறியது போல இருக்கும் அவன் சுடும் தோசைகள். பலவிதமான சமையல்களும் திறமாகவே செய்வான். சந்தேகம் இல்லாமல் அவன் நளனின் வழித் தோன்றல் தான். 
 
ஆனாலும் நளனின் வழித் தோன்றல்கள் மிகக் குறைவு என்பதே என் அனுபவம். இந்த வழித் தோன்றல்களுக்கு சரியான உதவி, ஒத்தாசை செய்யக் கூடிய நிலையில் கூட பெரும்பாலான ஆண்கள் இல்லை என்பது தான் நிஜம். 'நீட்டாக வெட்ட வேண்டிய வெங்காயத்தை நீ ஏன் குறுக்காக வெட்டினாய்....' என்று புலம்பி, என்னால் ஒருவர் ஒரு தடவை அமைதி இழந்தார். வெங்காயம் வதங்கி சுருங்கிய பின் நீட்டென்ன குறுக்கென்ன என்ன உள்ளுக்குள் நினைத்தேன், ஆனால் வெளியால் சொல்லவில்லை. 
 
இறைச்சி துண்டுகளை முக்கோணங்களாக வெட்ட வேண்டும் என்று சொன்னார்கள். வெளிப்பரப்பளவு கூடுமாம். நாங்கள் சட்டிக்குள் போட்டு அவி அவி என்று அவிக்கின்ற அளவிற்கு இறைச்சி துண்டின் பரப்பளவு ஒரு அரைப் பரப்பாக இருந்தால் கூட நன்றாக அவியுமே என்றும் தோன்றியது. ஆனாலும் மகாராஜாக்களை அமைதியிழக்க செய்யக் கூடாது என்று சத்தமில்லாமல் செங்கோண முக்கோணிகள் செய்வதில் கவனம் செலுத்தினேன்.
  
திருமணத்தின் முன் சில பேர்கள் சேர்ந்து ஒரு வீட்டிலோ அல்லது அறைகளிலோ இருக்கும் காலங்களில் எல்லாவற்றுக்குமே அட்டவணை இருக்கும், ஒவ்வொருவரும் சமைக்கும் நாட்கள் உட்பட.  இப்படி இருக்கும் போது நாள் கிழமை நட்சத்திரம் எதுவும் பார்க்கப்படுவதில்லை. பெரும்பாலும் அசைவம் தான். அசைவ சமையல் அப்படி இப்படி இருந்தாலும் ஒரு மாதிரி, தக்காளிச் சாறு மற்றும் வேறு சில வஸ்துக்களையும் மேலால் ஊற்றி, சாப்பிட்டு விடலாம். 
 
நாலு பேர்கள் சேர்ந்து ஒரு இடத்தில் இருந்தார்கள். அன்று இரவு சமையல் பொறுப்பு இருக்கும் ஒருவர் தவிர மற்ற மூவரும் விளையாடப் போக ஆயத்தமானார்கள். சமையல் செய்ய வேண்டியவர் தொலைக்காட்சி பார்த்தபடியே இருந்தார். இவர்கள் மூவரும் நாலாவது நபருக்கு நீ தான் இன்று சமையல் என்று மீண்டும் ஞாபகப்படுத்தி விட்டுப்போனார்கள்.
 
விளையாடி விட்டு வந்து, குளித்து விட்டு, மூவரும் சட்டியைத் திறந்தனர். நல்ல பசி. சட்டி முட்ட முட்ட சிவப்பு நிறத்தில் குழம்பு. கோழிக் குழம்பு தான் என்று கரண்டியை விட்டு விட்டு எடுத்தனர். எதுவுமே கரண்டியில் வரவில்லை. சில இலைகள் மட்டுமே கரண்டியில் வந்து கொண்டிருந்தது. என்ன குழம்பு என்று கேட்டனர். கோவாக் குழம்பு என்று பதில் வந்தது.

Edited by ரசோதரன்

  • கருத்துக்கள உறவுகள்

 என்ன குழம்பு என்று கேட்டனர். கோவாக் குழம்பு என்று பதில் வந்தது.😄

எனக்கும் தான் புரியவில்லை கோவாவில் குழம்பா ? 

என் நண்பி ஒருவர்,  இரண்டு ஆண்மக்கள் தோளுக்கு மேலே வளர்ந்து விடடார்கள் . நான் பெட்டிக்குள் போனாலும் " அப்பனும் மக்களும் சமைத்து வைத்துவிட்டு  போ " என்று  தான் சொல்வார்கள்   என்று சலித்து கொள்வார் 

  • கருத்துக்கள உறவுகள்

கோவாவோட உருளைக்கிழங்கு போட்டு அம்மா குழம்பு வைக்கிறவ!

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ஏராளன் said:

கோவாவோட உருளைக்கிழங்கு போட்டு அம்மா குழம்பு வைக்கிறவ!

நீங்கள் சொல்வது தப்பு ஏராளன் ......... உருளைக்கிழங்குக்குள் கோவா கொஞ்சம் பருப்பும் சேர்த்து வைக்கலாம் ஆனால் கோவாவுக்குள் கிழங்கு போட்டால் கோவம்தான் வரும் .......!   😂

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரசோதரன் said:

நல்ல கைப்பக்குவம் உள்ளவர் வாழ்வில் துணையாக கிடைத்தால் அது பெரும் அதிர்ஷ்டமே.

இதில் எனக்கு உடன்பாடில்லை.

ஊரிலேயே இருந்திருந்தால் நீங்கள் சொல்வது சரி.

ஆனால் வெளிநாடு என்று வெளிக்கிட்ட பின்பு ஆண்களும் சமையலில் கைதேர்ந்தவர்களாக ஆகிவிட்டார்கள்.

பெண்களைவிட சுவையாக சுமையல் செய்யும் ஆண்களும் இருப்பார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிலாமதி said:

 என்ன குழம்பு என்று கேட்டனர். கோவாக் குழம்பு என்று பதில் வந்தது.😄

எனக்கும் தான் புரியவில்லை கோவாவில் குழம்பா ? 

🤣.....

கோவாவில் குழம்பு வைத்த அவர் அடிக்கடி இப்படியும் கேட்டுக் கொள்வார்:
 
பத்து நிமிடத்தில் சாப்பிட்டு முடிக்கிற ஒரு சாப்பாட்டை இரண்டு மணித்தியாலம் எடுத்து சமைக்க வேண்டுமா என்று.
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரசோதரன் said:

நள மகாராஜா தான் சமையலில் மிகச் சிறந்தவர் என்பார்கள். இன்றும் உலகில் மிகப் பிரபலமான, மிகச் சிறந்த சமையல் வல்லுநர்கள் என்று சில ஆண்களையே சொல்கின்றனர்.

வீட்டிலே ரசோதரன்தான் சமைக்கிறார் என்பதை இத்தால் புரிந்து கொண்டேன். சமைக்கும் சதி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்.

பெண்ணே நீ வாழ்க என்ற படத்தின் பாடல் நினைவுக்கு வந்தது

“சமையலுக்கும் மையலுக்கும் ஓரெழுத்து பேதம்

நாம் சரசமாகப் பேசி சமைத்திடுவோம் சாதம்….”

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ரசோதரன் said:
நளபாகம்
---------------
நல்ல கைப்பக்குவம் உள்ளவர் வாழ்வில் துணையாக கிடைத்தால் அது பெரும் அதிர்ஷ்டமே. மூன்று வேளைச் சாப்பாட்டிற்காகத் தான் வாழ்க்கையில் இந்த ஆட்டம் எல்லாம் என்று நடிகர் சிவாஜி கணேசன் சொன்னதாகச் சொல்லுவார்கள். அவரையும், அவருடைய மகன்களையும் பார்த்தால், அவர்கள் மூன்று வேளைகள் தான் சாப்பிட்டிருக்கின்றார்கள் என்று சொல்ல முடியவில்லை. 'எந்தக் கடையில் நீ அரிசி வாங்கினாய்.......' என்ற பாடல் வரிகள் அவர்களுக்காகவே எழுதப்பட்டும் இருக்கின்றது.
 
இதில் இருக்கும் ஒரு சிக்கல் என்னவென்றால், கைப்பக்குவம் உள்ளவர் அவசரமாக சில வாரங்களுக்கு வேறெங்கும் போக வேண்டி வந்தால், வீட்டில் இருக்கும் மற்றவர்களின் நிலை என்ன என்பது தான். அக்கம்பக்கத்தில் நண்பர்கள், உறவுகள் இருப்பார்கள். அவர்கள் கொடுப்பார்கள் கூட. ஆனால் அந்தப் 'பக்குவம்' அங்கே இருக்காது. கொண்டு வந்து கொடுப்பவர்களிடம் வேண்டாம் என்று சொல்ல முடியாது, ஆனால் கொடுப்பது எல்லாவற்றையும் வாங்கி வீட்டில் வைத்தாலும், அவற்றை சாப்பிடவும் முடியாது. சில நேரங்களில் எதையுமே சாப்பிடமுடியாது.
 
பல வருடங்களின் முன் வீட்டில் வந்து நின்ற ஒருவர் அன்று இரவுச் சாப்பாட்டிற்கு சம்பல் செய்ய தயாரானார். அவர் ஏற்கனவே ஒரு தடவை சில நாட்களின் முன் சம்பல் செய்திருந்தார். அப்போது மகன் சிறுவன். மகன் நேரே அவரிடம் போய் இன்று நீங்கள் சம்பல் செய்ய வேண்டாம், அம்மாவே செய்யட்டும் என்று சொன்னான். கொஞ்சம் வயதானவர். சத்தம் ஓய சில நிமிடங்கள் எடுத்தது.
 
சில நாடுகளில் நல்ல உணவகங்கள் இருக்கின்றன போல. இங்கு அப்படி இல்லை. இந்திய உணவகங்கள் இருக்கின்றன. ஆனாலும் இரண்டு, மூன்று நாட்களுக்கு மேல் அவற்றுடன் தாக்குப் பிடிக்க முடியாது.
 
நள மகாராஜா தான் சமையலில் மிகச் சிறந்தவர் என்பார்கள். இன்றும் உலகில் மிகப் பிரபலமான, மிகச் சிறந்த சமையல் வல்லுநர்கள் என்று சில ஆண்களையே சொல்கின்றனர். அன்னதான மடங்கள், விழாக்கள் என்று பெரிய சமையல்களையும் பொதுவாக ஆண்களே செய்து வருகின்றனர். எனக்குத் தெரிந்த வரையில் என் நண்பன் ஒருவன் போல உலகில் எவரும் வட்டம் வட்டமாக தோசை சுட மாட்டார்கள். வட்டாரி வைத்துக் கீறியது போல இருக்கும் அவன் சுடும் தோசைகள். பலவிதமான சமையல்களும் திறமாகவே செய்வான். சந்தேகம் இல்லாமல் அவன் நளனின் வழித் தோன்றல் தான். 
 
ஆனாலும் நளனின் வழித் தோன்றல்கள் மிகக் குறைவு என்பதே என் அனுபவம். இந்த வழித் தோன்றல்களுக்கு சரியான உதவி, ஒத்தாசை செய்யக் கூடிய நிலையில் கூட பெரும்பாலான ஆண்கள் இல்லை என்பது தான் நிஜம். 'நீட்டாக வெட்ட வேண்டிய வெங்காயத்தை நீ ஏன் குறுக்காக வெட்டினாய்....' என்று புலம்பி, என்னால் ஒருவர் ஒரு தடவை அமைதி இழந்தார். வெங்காயம் வதங்கி சுருங்கிய பின் நீட்டென்ன குறுக்கென்ன என்ன உள்ளுக்குள் நினைத்தேன், ஆனால் வெளியால் சொல்லவில்லை. 
 
இறைச்சி துண்டுகளை முக்கோணங்களாக வெட்ட வேண்டும் என்று சொன்னார்கள். வெளிப்பரப்பளவு கூடுமாம். நாங்கள் சட்டிக்குள் போட்டு அவி அவி என்று அவிக்கின்ற அளவிற்கு இறைச்சி துண்டின் பரப்பளவு ஒரு அரைப் பரப்பாக இருந்தால் கூட நன்றாக அவியுமே என்றும் தோன்றியது. ஆனாலும் மகாராஜாக்களை அமைதியிழக்க செய்யக் கூடாது என்று சத்தமில்லாமல் செங்கோண முக்கோணிகள் செய்வதில் கவனம் செலுத்தினேன்.
  
திருமணத்தின் முன் சில பேர்கள் சேர்ந்து ஒரு வீட்டிலோ அல்லது அறைகளிலோ இருக்கும் காலங்களில் எல்லாவற்றுக்குமே அட்டவணை இருக்கும், ஒவ்வொருவரும் சமைக்கும் நாட்கள் உட்பட.  இப்படி இருக்கும் போது நாள் கிழமை நட்சத்திரம் எதுவும் பார்க்கப்படுவதில்லை. பெரும்பாலும் அசைவம் தான். அசைவ சமையல் அப்படி இப்படி இருந்தாலும் ஒரு மாதிரி, தக்காளிச் சாறு மற்றும் வேறு சில வஸ்துக்களையும் மேலால் ஊற்றி, சாப்பிட்டு விடலாம். 
 
நாலு பேர்கள் சேர்ந்து ஒரு இடத்தில் இருந்தார்கள். அன்று இரவு சமையல் பொறுப்பு இருக்கும் ஒருவர் தவிர மற்ற மூவரும் விளையாடப் போக ஆயத்தமானார்கள். சமையல் செய்ய வேண்டியவர் தொலைக்காட்சி பார்த்தபடியே இருந்தார். இவர்கள் மூவரும் நாலாவது நபருக்கு நீ தான் இன்று சமையல் என்று மீண்டும் ஞாபகப்படுத்தி விட்டுப்போனார்கள்.
 
விளையாடி விட்டு வந்து, குளித்து விட்டு, மூவரும் சட்டியைத் திறந்தனர். நல்ல பசி. சட்டி முட்ட முட்ட சிவப்பு நிறத்தில் குழம்பு. கோழிக் குழம்பு தான் என்று கரண்டியை விட்டு விட்டு எடுத்தனர். எதுவுமே கரண்டியில் வரவில்லை. சில இலைகள் மட்டுமே கரண்டியில் வந்து கொண்டிருந்தது. என்ன குழம்பு என்று கேட்டனர். கோவாக் குழம்பு என்று பதில் வந்தது.
கி மு 1750 ஆண்டை சேர்ந்தது என கருதப்படும், இரண்டாவது யேல் சமையல் பலகையில் [YBC 8958],  ஒரு சின்ன பறவை ஒன்றில் சமைத்த உணவு பற்றி பதிவிட்டுள்ளது 
 
"தலையையும் பாதத்தையும் அகற்று, உடலை விரித்து பறவையை கழுவு, பின் இரைப்பை, இதயம், கல்லீரல், நுரையீரல் போன்றவற்றை பிடுங்கி ஒதுக்கி வை, பின் இரைப் பையை பிரித்து துப்பரவு செய்,அடுத்து, அந்த பறவையின் உடலை அலசி [கழுவி] அதை தட்டையாக கிடத்து, ஒரு சட்டி எடுத்து அதற்குள் பறவையின் உடலையும் இறப்பையையும் மற்றும் இதயம், கல்லீரல், நுரையீரலையும் போட்டு பின் அடுப்பில் வைக்கவும்"
 
இப்படி போகிறது. அதன் பின்,  
 
"முதலாவது கொதித்தலின் அல்லது கொழுப்பில் பழுப்பாய் வறுத்த பின், மீண்டும் சட்டியை நெருப்பில் வை, புதிய தண்ணீரால் சட்டியை கழுவு, பாலை நன்றாய் அடிச்சு சட்டியில் விட்டு பறவையுடன் நெருப்பில் வை, பின் சட்டியை எடுத்து வடி, சாப்பிட முடியாத பறவையின் பகுதிகளை வெட்டி ஏறி, மற்றவைக்கு உப்பு சேர், அவையை சட்டியில் பாலுடனும் கொஞ்ச கொளுப்புடனும் இடு, மேலும் இதனுடன் சில ஏற்கனவே கழுவி உரித்து வைக்கப்பட்ட அரூத அல்லது அருவதா என்ற மூலிகையை சேர், அந்த கலவை கொதிக்கத் தொடங்கியதும், அதனுடன் துண்டு துண்டாக வெட்டப்பட்ட அல்லது நறுக்கிய லீக்ஸ், மற்றும் உள்ளி, சமிடு [ரவை?], போதுமான வெங்காயம் சேர்த்து கொள்,"
 
என்று சமையயலை முடிகிறது. 
 
அப்படி என்றால், இப்ப  4000, ஆண்டுகளுக்கு பின்பும் எதற்கு குழப்பம் ?
 
"கோழிக் குழம்பு தான் என்று கரண்டியை விட்டு விட்டு எடுத்தனர். எதுவுமே கரண்டியில் வரவில்லை. சில இலைகள் மட்டுமே கரண்டியில் வந்து கொண்டிருந்தது.  .... ???"
 
ஒருவேளை      
 
"பின் சட்டியை எடுத்து வடி, சாப்பிட முடியாத பறவையின் பகுதிகளை வெட்டி ஏறி, மற்றவைக்கு உப்பு சேர், அவையை சட்டியில் பாலுடனும் ....  "
 
அப்படி என்றால் கோழியின் [பறவையின்] சாப்பிட முடியாத பகுதி போக , ஒன்றும் மிஞ்சவில்லை போலும் ??
 
பாவம் "மாறி சுமேரியன் சமையல் பலகையை பார்த்துவிட்டார் போலும்" 
 
"என்ன குழம்பு என்று கேட்டனர். கோவாக் குழம்பு என்று பதில் வந்தது. ... "
 
ஆமாம் வேறு என்ன பதில் சொல்ல முடியும் ??
 
மன்னித்து விடுங்கள் !!
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஈழப்பிரியன் said:

ஆனால் வெளிநாடு என்று வெளிக்கிட்ட பின்பு ஆண்களும் சமையலில் கைதேர்ந்தவர்களாக ஆகிவிட்டார்கள்.

பெண்களைவிட சுவையாக சுமையல் செய்யும் ஆண்களும் இருப்பார்கள்.

👍.........

நீங்கள் சொல்வது போலவே சிலர் இருக்கின்றார்கள், அண்ணை, மிக நல்ல சமையல்காரர்கள்.  வேறு சில ஆண்களும் சமைப்பார்கள் தான், ஆனால் தரம் சராசரிக்கும் கீழே தான்.

பலர் சுத்தம்.........

1 hour ago, Kavi arunasalam said:

வீட்டிலே ரசோதரன்தான் சமைக்கிறார் என்பதை இத்தால் புரிந்து கொண்டேன்.

🤣........

மேலே சொன்னதை விட, சுடு தண்ணீர் வைத்து விட்டே, எத்தனை குமிழிகள் வந்தாப் பிறகு அதை இறக்க வேண்டும் என்று கண்கொட்டாமல் அதையே பார்த்துக் கொண்டு நிற்கும் சில ஆண்களும் இருக்கின்றார்கள்........... இந்த வகுப்பு தான் என்னுடைய வகுப்பு......🤣....... ஆனால் படைத்தவன்  காப்பாற்றிவிட்டான்...............

Edited by ரசோதரன்

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, ரசோதரன் said:

👍.........

நீங்கள் சொல்வது போலவே சிலர் இருக்கின்றார்கள், அண்ணை, மிக நல்ல சமையல்காரர்கள்.  வேறு சில ஆண்களும் சமைப்பார்கள் தான், ஆனால் தரம் சராசரிக்கும் கீழே தான்.

பலர் சுத்தம்.........

🤣........

மேலே சொன்னதை விட, சுடு தண்ணீர் வைத்து விட்டே, எத்தனை குமிழிகள் வந்தாப் பிறகு அதை இறக்க வேண்டும் என்று கண்கொட்டாமல் அதையே பார்த்துக் கொண்டு நிற்கும் சில ஆண்களும் இருக்கின்றார்கள்........... இந்த வகுப்பு தான் என்னுடைய வகுப்பு......🤣....... ஆனால் படைத்தவன்  காப்பாற்றிவிட்டான்...............

https://www.facebook.com/share/v/XBTnNHvaTg7sn42M/

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ரசோதரன் said:
ஆனாலும் நளனின் வழித் தோன்றல்கள் மிகக் குறைவு என்பதே என் அனுபவம். இந்த வழித் தோன்றல்களுக்கு சரியான உதவி, ஒத்தாசை செய்யக் கூடிய நிலையில் கூட பெரும்பாலான ஆண்கள் இல்லை என்பது தான் நிஜம். 'நீட்டாக வெட்ட வேண்டிய வெங்காயத்தை நீ ஏன் குறுக்காக வெட்டினாய்....' என்று புலம்பி, என்னால் ஒருவர் ஒரு தடவை அமைதி இழந்தார். வெங்காயம் வதங்கி சுருங்கிய பின் நீட்டென்ன குறுக்கென்ன என்ன உள்ளுக்குள் நினைத்தேன், ஆனால் வெளியால் சொல்லவில்லை. 
 
இறைச்சி துண்டுகளை முக்கோணங்களாக வெட்ட வேண்டும் என்று சொன்னார்கள். வெளிப்பரப்பளவு கூடுமாம். நாங்கள் சட்டிக்குள் போட்டு அவி அவி என்று அவிக்கின்ற அளவிற்கு இறைச்சி துண்டின் பரப்பளவு ஒரு அரைப் பரப்பாக இருந்தால் கூட நன்றாக அவியுமே என்றும் தோன்றியது. ஆனாலும் மகாராஜாக்களை அமைதியிழக்க செய்யக் கூடாது என்று சத்தமில்லாமல் செங்கோண முக்கோணிகள் செய்வதில் கவனம் செலுத்தினேன்.

நீங்கள் இந்த விடயத்தினை தொட்டு சென்ற வகையில் நீங்கள் ஒரு விபரமான சமையல்காரர் என கருதுகிறேன்,வழமை போல தெரியாத விடயமாக காட்ட முயற்சிக்கிறீர்களோ எனும் சந்தேகம் எனக்கு உள்ளது அல்லது உண்மையிலேயே உங்களுக்கும் என்னை போல சமையல் எட்டா(?)பொருத்தமோ தெரியவில்லை, நான் உங்களை தவறாக புரிந்துள்ளேனோ தெரியவில்லை.

குறுக்காக வெட்டிய வெங்காயமும் நீட்டாக வெட்டிய வெங்காயமும் தன்மையிலும் (Texture), சுவையிலும் வித்தியாசம் உள்ளதென கூறுவார்கள், அதே போல வெட்டு அளவுகளும் சுவை மற்றும் தன்மையில் மாற்றத்தினை காட்டும், அது காய்கறிக்கும் பொருந்தும் அத்துடன் அசைவ உணவுகளில் கலக்கப்படும் காய்கறி மற்றும் மற்ற சுவையூட்டிகளின் அளவீடுகள் என்பவற்றைனையும் குறிப்பிடுவார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, kandiah Thillaivinayagalingam said:

🙃.............

தில்லை ஐயா, நான் இன்னும் பல்லாயிரம் பிறவிகள் எடுத்தாலும் இந்தளவிற்கு என்னால் வரவே முடியாது. நீங்கள் 'வேற லெவல்' தில்லை ஐயா............

நீங்களும் அக்பரில் தானே சாப்பிட்டு இருப்பீர்கள்...... அதற்குப் பிறகா, போதுமடா என்று, சமைக்கப் பழகினீர்கள்.......🤣

2 hours ago, kandiah Thillaivinayagalingam said:
"பின் சட்டியை எடுத்து வடி, சாப்பிட முடியாத பறவையின் பகுதிகளை வெட்டி ஏறி, மற்றவைக்கு உப்பு சேர், அவையை சட்டியில் பாலுடனும் ....  "
 
அப்படி என்றால் கோழியின் [பறவையின்] சாப்பிட முடியாத பகுதி போக , ஒன்றும் மிஞ்சவில்லை போலும் ??
 
பாவம் "மாறி சுமேரியன் சமையல் பலகையை பார்த்துவிட்டார் போலும்" 
 
"என்ன குழம்பு என்று கேட்டனர். கோவாக் குழம்பு என்று பதில் வந்தது. ... "
 
ஆமாம் வேறு என்ன பதில் சொல்ல முடியும் ??
 
மன்னித்து விடுங்கள் !!

🤣.............

நீங்கள் சொன்ன பின் ஒரு சந்தேகம் வருகுது தான். எல்லா 'பீசுகளையும்' அவனே சாப்பிட்டு விட்டானோ........ ஆனால் குழம்பில் ஒரு அசைவ மணம் கூட இருக்கவில்லை. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, vasee said:

நீங்கள் இந்த விடயத்தினை தொட்டு சென்ற வகையில் நீங்கள் ஒரு விபரமான சமையல்காரர் என கருதுகிறேன்,வழமை போல தெரியாத விடயமாக காட்ட முயற்சிக்கிறீர்களோ எனும் சந்தேகம் எனக்கு உள்ளது அல்லது உண்மையிலேயே உங்களுக்கும் என்னை போல சமையல் எட்டா(?)பொருத்தமோ தெரியவில்லை, நான் உங்களை தவறாக புரிந்துள்ளேனோ தெரியவில்லை.

குறுக்காக வெட்டிய வெங்காயமும் நீட்டாக வெட்டிய வெங்காயமும் தன்மையிலும் (Texture), சுவையிலும் வித்தியாசம் உள்ளதென கூறுவார்கள், அதே போல வெட்டு அளவுகளும் சுவை மற்றும் தன்மையில் மாற்றத்தினை காட்டும், அது காய்கறிக்கும் பொருந்தும் அத்துடன் அசைவ உணவுகளில் கலக்கப்படும் காய்கறி மற்றும் மற்ற சுவையூட்டிகளின் அளவீடுகள் என்பவற்றைனையும் குறிப்பிடுவார்கள்.

🤣............

நான் விபரமான சமையல்காரன் இல்லை. எனக்கும் இது எட்டவே எட்டாது, அத்துடன் சமைப்பதில் ஆர்வம் துளியளவும் இல்லை.

ஆனால் எல்லோர் சொல்லும் விபரங்களையும் கேட்டு வைத்துள்ளேன். ஏட்டுச் சுரைக்காய் என்று சொல்லலாம்......😃

நீங்கள் சொல்லியிருப்பது சரியே. நீட்டு, குறுக்கு, வட்டம், மெல்லியது என்று ஒவ்வொன்றும் ஒவ்வொரு சமையலுக்கு சரியாகப் பொருந்தும் என்று சொல்வார்கள்.  

Edited by ரசோதரன்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, kandiah Thillaivinayagalingam said:

ஐயா தில்லை

ஒரே நேரத்தில் 2-3 டிரம்மில் விளையாடுகிறாரே!

பலே கில்லாடி.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ரசோதரன் said:

🤣............

நான் விபரமான சமையல்காரன் இல்லை. எனக்கும் இது எட்டவே எட்டாது, அத்துடன் சமைப்பதில் ஆர்வம் துளியளவும் இல்லை.

ஆனால் எல்லோர் சொல்லும் விபரங்களையும் கேட்டு வைத்துள்ளேன். ஏட்டுச் சுரைக்காய் என்று சொல்லலாம்......😃

நீங்கள் சொல்லியிருப்பது சரியே. நீட்டு, குறுக்கு, வட்டம், மெல்லியது என்று ஒவ்வொன்றும் ஒவ்வொரு சமையலுக்கு சரியாகப் பொருந்தும் என்று சொல்வார்கள்.  

ரசோதரா...சிவத்த வெங்காயம்..குறுக்கென்ன ..நெடுக்கென்ன..வட்டமென்ன எங்கேயும் ..எப்படியும் வ்வேலைசெய்யும்...சமையலில் மட்டுமில்லை...அறையிலும் வேலைசெய்யும்...🙃

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ரசோதரன் said:

🙃.............

தில்லை ஐயா, நான் இன்னும் பல்லாயிரம் பிறவிகள் எடுத்தாலும் இந்தளவிற்கு என்னால் வரவே முடியாது. நீங்கள் 'வேற லெவல்' தில்லை ஐயா............

நீங்களும் அக்பரில் தானே சாப்பிட்டு இருப்பீர்கள்...... அதற்குப் பிறகா, போதுமடா என்று, சமைக்கப் பழகினீர்கள்.......🤣

🤣.............

நீங்கள் சொன்ன பின் ஒரு சந்தேகம் வருகுது தான். எல்லா 'பீசுகளையும்' அவனே சாப்பிட்டு விட்டானோ........ ஆனால் குழம்பில் ஒரு அசைவ மணம் கூட இருக்கவில்லை. 

அக்பரில் தானே சாப்பிட்டு இருப்பீர்கள்  ,,,,   ஆமாம் இறுதி ஆண்டு அங்குதான். அந்தநேரம் என் உடம்பை பார்த்தால் தெரியும். அப்பொழுது எடுத்த ஓர் சில படங்கள் கீழே [checked shirt  நான்]

No photo description available.

"தேடிய இன்பம், ஆடிய நையாண்டி
மடியில் கொட்டுது, ஆயிரம் பாடல்கள்
வாடிய இதயம், பூக்குது மீண்டும்
கூடிய எம்மிடம், குதித்து துள்ளுது"
 
"ஆண்டு ஒன்று அஞ்சி கழிந்தது
ஆண்டு இரண்டு நிமிர்த்தி சென்றது
ஆண்டு மூன்று துணிந்து நின்றது
ஆண்டு நான்கு அறிவால் மலர்ந்தது"
 
"நிறைந்த படிப்பு, இடையில் காதல்
குறைந்த கூத்து, மத்தியில் தேர்வு
உறைந்தது நெஞ்சம், முடிவு கண்டு
திரையும் வீழ்ந்தது, சிமிட்டில் பறந்தது"
 
"நினைவுகளை விட்டு, மறைந்தது பல்கலைக்கழகம்
சுனைகளாய் நெஞ்சில், நல்லவை நின்றன
நனைக்கவில்லை எம்மை, பாரபட்சமும் இனவெறியும்
இணைந்த கைகளாய், நம்மையும் உலகத்தையும் அறிந்தோம்"
 
14117747_10207209304413708_8198192577157840653_n.jpg?_nc_cat=103&ccb=1-7&_nc_sid=13d280&_nc_ohc=mAcAbCfgy3EQ7kNvgFvkO4E&_nc_ht=scontent-lhr8-1.xx&oh=00_AYAeADRBE353bS_bxvOHjYl1EGVf8Zl7of0X4ivo15I19w&oe=66C04E20
 
No photo description available.
 
No photo description available.

No photo description available. 14117847_10207209305293730_2927142022393748520_n.jpg?_nc_cat=100&ccb=1-7&_nc_sid=13d280&_nc_ohc=buUKWfJeEdQQ7kNvgElyhOn&_nc_ht=scontent-lhr6-2.xx&oh=00_AYCtP6Oaq16HxJvFTbP2LG1j6upGyZmEd0PWGV1AoJCv8Q&oe=66C03498

Edited by kandiah Thillaivinayagalingam

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, alvayan said:

ரசோதரா...சிவத்த வெங்காயம்..குறுக்கென்ன ..நெடுக்கென்ன..வட்டமென்ன எங்கேயும் ..எப்படியும் வ்வேலைசெய்யும்...சமையலில் மட்டுமில்லை...அறையிலும் வேலைசெய்யும்...🙃

🤣.........

கனம் கோர்ட்டார் அவர்களே,

ஒரு 'யூ' கதைக்குள் 'ஏ' விசயத்தை அல்வாயன் அவர்கள் புகுத்துகின்றார்............😃.

வெங்காயம், முருங்கைக்காய், மட்டி, ................... இப்படி ஒரு வரிசையே இருக்குது போல......😜.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, kandiah Thillaivinayagalingam said:

ஆமாம் இறுதி ஆண்டு அங்குதான். அந்தநேரம் என் உடம்பை பார்த்தால் தெரியும். அப்பொழுது எடுத்த ஓர் சில படங்கள் கீழே [checked shirt  நான்]

No photo description available.
 
 14117847_10207209305293730_2927142022393748520_n.jpg?_nc_cat=100&ccb=1-7&_nc_sid=13d280&_nc_ohc=buUKWfJeEdQQ7kNvgElyhOn&_nc_ht=scontent-lhr6-2.xx&oh=00_AYCtP6Oaq16HxJvFTbP2LG1j6upGyZmEd0PWGV1AoJCv8Q&oe=66C03498

அப்பவும் படு ஸ்டைலாகத்தான் இருந்திருக்கிறீர்கள்............👍

சமூகக் கல்வியில் பெரிய ஆறு என்று படித்த மகாவலி கங்கை வருடத்தில் முன்னூறு நாட்களுக்கு மேல் கால் பாதம் அளவு உயரத்தில் ஓடிக் கொண்டிருந்தது முதலில் கொஞ்சம் அதிர்ச்சியாகவே இருந்தது........ 

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோருக்கும் நன்றிகள்

இது பல்கலைக்கழகத்தால் வெளிக்கிட்டு பிரம்மச்சாரியாக வேலை செய்யும் பொழுது, ஆனால் இன்று எல்லாம் கனவே !! 

10015165_10201660229610306_2132187250_n.jpg?_nc_cat=102&ccb=1-7&_nc_sid=13d280&_nc_ohc=7oBcF-ejMbsQ7kNvgF30tHw&_nc_ht=scontent-lhr6-1.xx&oh=00_AYBQVu7T_YLjJkgmVoblqma5Rq--th17OrzrumQ3of1_Bg&oe=66C0C518 

No photo description available.

No photo description available.

Edited by kandiah Thillaivinayagalingam

  • கருத்துக்கள உறவுகள்
On 17/7/2024 at 23:15, ரசோதரன் said:

தை இறக்க வேண்டும் என்று கண்கொட்டாமல் அதையே பார்த்துக் கொண்டு நிற்கும் சில ஆண்களும் இருக்கின்றார்கள்........... இந்த வகுப்பு தான் என்னுடைய வகுப்பு......🤣.......

எண்பதுகளின் ஆரம்பம். யேர்மனியில் அகதி முகாமில் இருந்த நேரம். மூன்று நேரமும் நல்ல ஆரோக்கிய உணவு தருவார்கள். ஆனால் சாப்பிட மனம் வருவதில்லை. ஊரில் உறைப்பு, உப்பு, புளி, தாளிப்புகளுடன் சாப்பிட்ட ருசி தேடி நாக்கு அடம்பிடிக்கும். தங்குமிடத்தில் சமைக்க அனுமதி இல்லை. ஆனாலும் 10 மார்க் கொடுத்து ஒரு மின்சார அடுப்பு வாங்கியிருந்தோம். அதை யார் கண்ணிலும் படாமல் கட்டிலின் கீழ் மறைத்து வைத்திருப்போம். எங்கள் முகாமுக்கு அருகேபெனிமார்க்கெற் இருந்தது. அங்கே கோழியின் முதுகுப் பகுதியை 99 பெனிக்குகளுக்கு வாங்கிக் கொள்வோம். அதை வாங்குவதற்குக் கூடசிண்டிகேட்தான். அப்பொழுது மாதாந்தம் கைச்செலவுக்கென கிடைத்தது 60 மார்க்குகள் மட்டுமே என்பதனால்தான் இந்தச் சிக்கனம்.

கோழியின் முதுகுப் பகுதியை   விறாண்டினால்தான் ஏதோ கொஞ்சத் துகள்கள் போல் இறைச்சி கிடைக்கும். ஆனலும் சாப்பிட்டோம். அப்பொழுது என்னுடன் இருந்த சந்திரன், “எப்பதான் காப்புக் கையால் சமைச்ச சாப்பாட்டை சாப்பிடப் போறனோ?” என்று சொல்வான்.

சில ஆண்டுகளுக்குப் பின்னர் அவனைப் பார்க்கப் போயிருந்தேன். அவனது மனைவிஇருங்கோ வருவார்என்று சொன்னார்.  கிச்சினை விட்டு வெளியே வந்த சந்திரன், “இரு மச்சான். கறி அடுப்பிலை. இறக்கிப் போட்டு வாறன்என்று சொன்னான்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Kavi arunasalam said:

கவிஞரே, நீங்கள் எங்கே சுற்றினாலும் எங்கே வருகிறீர்கள் என்று தெரிகின்றது............😜.

என்றாவது நீங்கள் என் வீட்டிற்கு வந்தால், அன்று என் வீட்டில் உங்களுக்கு இப்படி ஒரு பதில் கிடைத்தால்.......... தப்பினோம் பிழைத்தோம் என்று ஓடித் தப்பி விடுங்கள்...............🤣.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.