Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
"பேரனின் அகவை நாள் இன்று [18/07/2024]"
 
 
"திரேனின் [Dhiren] பிறந்த நாள் இன்று 
திரு விழாவா பெரு விழாவாவென  
திகைத்து இவன் வியந்து பார்க்க 
திரேனின் [Dhiren] பிறந்த நாள் இன்று !"
 
 
"தில்லைக் கூத்தனின் பேரன் இவன் 
திசைமுகனை குட்டிய முருகன் இவன் 
திருந்தலரை கலக்கும் வீரன் இவன் 
திருமகள் அருள்பெற்ற குழந்தை இவன் !"
 
 
"தித்திக்கும் இனிப்புகள் ஒரு பக்கம் 
தீஞ்சுவை பலகாரம் மறு பக்கம்  
திசை நான்கும் பேரிசை முழங்க 
திரேனின் [Dhiren] பிறந்த நாள் இன்று !" 
 
 
"திங்கள் மறைந்து ஞாயிறு மலர 
திலகம் இட்டு மங்கையர் வாழ்த்த 
திருநாள் இது இவனின் பொன்நாள்  
திரேனின் [Dhiren] பிறந்த நாள் இன்று !" 
 
 
"தின் பண்டம் வந்தோரை மகிழ்விக்க
திறமையான அலங்காரம் காற்றில் ஆட 
திருப்தி கொண்டு இவனும் மகிழ  
திரேனின் [Dhiren] பிறந்த நாள் இன்று !"
 
 
"திங்கட்குடையோன் இவனோ என மயங்க 
தினகரனும் முகிலில் மறைந்து நிழல்தர 
தீந்தமிழில் வாழ்த்துக்கள் எங்கும் ஒலிக்க
திரேனின் [Dhiren] பிறந்த நாள் இன்று !"    
 
 
"அச்சம் தவிர்த்து துணிந்து நின்று 
அழகு வார்த்தைகள் நாவில் தவழ 
அன்பு ஒன்றால் உலகை ஆள
அறிவு பெற்று உயர்ந்து எழுகவே!"
 
 
"ஆராய்ந்து உண்மை கண்டு விளங்கி 
ஆக்கமான செயலில் ஈடு பட்டு 
ஆலமரம் போல் நிழல் கொடுத்து 
ஆனந்தமாக வாழ தாத்தாவின் ஆசிகள்!"
 
 
"ஆகாயத்தில் அம்மம்மாவின் வாழ்த்து கேட்குது
ஆகாரம் பலபல சுவையில் இருக்குது 
ஆசி பெற்று அறிஞனாய் வளர்ந்து 
ஆதிரனாக என்றும்  ஒளிர வேண்டும்!
 
 
"இளமை கல்வி மனதில் நிற்கும்
இனிதாய் உணர்ந்தால் அறிவு சிறக்கும் 
இணக்கம் கொண்ட கொள்கை எடுத்து 
இதயம் சேர வாழ வேண்டும்!"
 
 
"ஈன்ற பெற்றோரை நன்கு மதித்து 
ஈரக் கண்ணீர் சிந்த விடாதே
ஈவு இரக்கம் காட்ட வேண்டும்
ஈனப் புத்தி என்றும் வேண்டாம்!"
 
 
"உலகம் போற்றும் வாழ்வு எட்ட   
உள்ளம் வைத்து ஆற்ற வேண்டும் 
உரிமை உள்ள ஒரு மனிதனாக 
உயர்ந்து நின்று வாழ வேண்டும்!"
 
 
"ஊக்கம் வேண்டும் பற்று வேண்டும் 
ஊரார் எண்ணம் அறிய வேண்டும் 
ஊமையாய் என்றும் காலத்தை கழிக்காமல் 
ஊன்றுகோலாய் அறிவைப் பயன்படுத்த வேண்டும் !"
 
 

"ஒன்பதுஆண்டு மகிழ்ச்சியின் மகுடம் இன்று 
ஆச்சரியமானவரே பாலகனே கனவுகள் சிறகடிக்கட்டும்! 
உயர்ந்து வாழ்வதைப்பார்க்க அம்மம்மா இல்லையென்றாலும்    
அவளுடையகருணை உனக்கு என்றும் பாதுகாப்புகவசமே!"


"காற்றின் கிசுகிசுக்களில் அம்மம்மாவின் குரல் 
உன்னை வழிநடத்தும் கலங்கரை விளக்கமே! 
விண்மீன்கள் சிமிட்டும் அம்மம்மாவின் ஆசீர்வாதம் 
இரவும் பகலும் உன்னை அடையுமே!"


"பொன்னான இந்நாளில் வானிலிருந்து ஒருவாழ்த்து 
அன்பான அம்மம்மாவின் கருணை மழையே! 
பட்டாம்பூச்சி பறப்பதைப்போன்ற இலகுவான இதயமே    
காலைக்கதிரவனாய் உந்தன் நாள் பிரகாசிக்கட்டுமே!"

 
"குட்ட குட்ட குனியக் கூடாது 
குடை பிடித்து வாழக் கூடாது  
குறை இல்லாத வாழ்வு இல்லை
குரோதம் வேண்டாம் அமைதி ஓங்கட்டும்!"
 
 
"பதினெட்டு ஏழில் பிறந்த அழகனே  
பகலோன் போல உலகில் பிரகாசித்து 
பகைவர்கள் அற்று கவலைகள் அற்று 
பல்லாண்டு நீ வாழ வாழ்த்துகிறேன்!"
 
 
"ஒழுக்கம் கொண்ட அழகுப் பேரனே  
ஒன்பது அகவை இன்று உனக்கு 
ஒல்லாரையும் மதித்து நடக்கும் பேரனே 
ஒற்றுமை கொண்ட பண்பாடு மலரட்டும்!" 
 
 
தாத்தா 
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
அத்தியடி, யாழ்ப்பாணம்]
294064912_10221349228422971_6473147950793718828_n.jpg?_nc_cat=110&ccb=1-7&_nc_sid=127cfc&_nc_ohc=FnOtYE_qiMQQ7kNvgGU2_ln&_nc_ht=scontent-lhr6-1.xx&oh=00_AYCpnXR2-2QV2cMUpLKv89p_nSxrBYYd1z9Ohw7O0yEfVA&oe=669DECB3    May be an image of wedding cake and text
 
 
 

Edited by kandiah Thillaivinayagalingam

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கள் பேரனுக்கு இனிய அகவை நாள் வாழ்த்துகள்.☘️

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் பேரனுக்கு, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, kandiah Thillaivinayagalingam said:
"பேரனின் அகவை நாள் இன்று [18/07/2024]"
 
 
"திரேனின் [Dhiren] பிறந்த நாள் இன்று 
திரு விழாவா பெரு விழாவாவென  
திகைத்து இவன் வியந்து பார்க்க 
திரேனின் [Dhiren] பிறந்த நாள் இன்று !"
 
 
"தில்லைக் கூத்தனின் பேரன் இவன் 
திசைமுகனை குட்டிய முருகன் இவன் 
திருந்தலரை கலக்கும் வீரன் இவன் 
திருமகள் அருள்பெற்ற குழந்தை இவன் !"
 
 
"தித்திக்கும் இனிப்புகள் ஒரு பக்கம் 
தீஞ்சுவை பலகாரம் மறு பக்கம்  
திசை நான்கும் பேரிசை முழங்க 
திரேனின் [Dhiren] பிறந்த நாள் இன்று !" 
 
 
"திங்கள் மறைந்து ஞாயிறு மலர 
திலகம் இட்டு மங்கையர் வாழ்த்த 
திருநாள் இது இவனின் பொன்நாள்  
திரேனின் [Dhiren] பிறந்த நாள் இன்று !" 
 
 
"தின் பண்டம் வந்தோரை மகிழ்விக்க
திறமையான அலங்காரம் காற்றில் ஆட 
திருப்தி கொண்டு இவனும் மகிழ  
திரேனின் [Dhiren] பிறந்த நாள் இன்று !"
 
 
"திங்கட்குடையோன் இவனோ என மயங்க 
தினகரனும் முகிலில் மறைந்து நிழல்தர 
தீந்தமிழில் வாழ்த்துக்கள் எங்கும் ஒலிக்க
திரேனின் [Dhiren] பிறந்த நாள் இன்று !"    
 
 
"அச்சம் தவிர்த்து துணிந்து நின்று 
அழகு வார்த்தைகள் நாவில் தவழ 
அன்பு ஒன்றால் உலகை ஆள
அறிவு பெற்று உயர்ந்து எழுகவே!"
 
 
"ஆராய்ந்து உண்மை கண்டு விளங்கி 
ஆக்கமான செயலில் ஈடு பட்டு 
ஆலமரம் போல் நிழல் கொடுத்து 
ஆனந்தமாக வாழ தாத்தாவின் ஆசிகள்!"
 
 
"ஆகாயத்தில் அம்மம்மாவின் வாழ்த்து கேட்குது
ஆகாரம் பலபல சுவையில் இருக்குது 
ஆசி பெற்று அறிஞனாய் வளர்ந்து 
ஆதிரனாக என்றும்  ஒளிர வேண்டும்!
 
 
"இளமை கல்வி மனதில் நிற்கும்
இனிதாய் உணர்ந்தால் அறிவு சிறக்கும் 
இணக்கம் கொண்ட கொள்கை எடுத்து 
இதயம் சேர வாழ வேண்டும்!"
 
 
"ஈன்ற பெற்றோரை நன்கு மதித்து 
ஈரக் கண்ணீர் சிந்த விடாதே
ஈவு இரக்கம் காட்ட வேண்டும்
ஈனப் புத்தி என்றும் வேண்டாம்!"
 
 
"உலகம் போற்றும் வாழ்வு எட்ட   
உள்ளம் வைத்து ஆற்ற வேண்டும் 
உரிமை உள்ள ஒரு மனிதனாக 
உயர்ந்து நின்று வாழ வேண்டும்!"
 
 
"ஊக்கம் வேண்டும் பற்று வேண்டும் 
ஊரார் எண்ணம் அறிய வேண்டும் 
ஊமையாய் என்றும் காலத்தை கழிக்காமல் 
ஊன்றுகோலாய் அறிவைப் பயன்படுத்த வேண்டும் !"
 
 

"ஒன்பதுஆண்டு மகிழ்ச்சியின் மகுடம் இன்று 
ஆச்சரியமானவரே பாலகனே கனவுகள் சிறகடிக்கட்டும்! 
உயர்ந்து வாழ்வதைப்பார்க்க அம்மம்மா இல்லையென்றாலும்    
அவளுடையகருணை உனக்கு என்றும் பாதுகாப்புகவசமே!"


"காற்றின் கிசுகிசுக்களில் அம்மம்மாவின் குரல் 
உன்னை வழிநடத்தும் கலங்கரை விளக்கமே! 
விண்மீன்கள் சிமிட்டும் அம்மம்மாவின் ஆசீர்வாதம் 
இரவும் பகலும் உன்னை அடையுமே!"


"பொன்னான இந்நாளில் வானிலிருந்து ஒருவாழ்த்து 
அன்பான அம்மம்மாவின் கருணை மழையே! 
பட்டாம்பூச்சி பறப்பதைப்போன்ற இலகுவான இதயமே    
காலைக்கதிரவனாய் உந்தன் நாள் பிரகாசிக்கட்டுமே!"

 
"குட்ட குட்ட குனியக் கூடாது 
குடை பிடித்து வாழக் கூடாது  
குறை இல்லாத வாழ்வு இல்லை
குரோதம் வேண்டாம் அமைதி ஓங்கட்டும்!"
 
 
"பதினெட்டு ஏழில் பிறந்த அழகனே  
பகலோன் போல உலகில் பிரகாசித்து 
பகைவர்கள் அற்று கவலைகள் அற்று 
பல்லாண்டு நீ வாழ வாழ்த்துகிறேன்!"
 
 
"ஒழுக்கம் கொண்ட அழகுப் பேரனே  
ஒன்பது அகவை இன்று உனக்கு 
ஒல்லாரையும் மதித்து நடக்கும் பேரனே 
ஒற்றுமை கொண்ட பண்பாடு மலரட்டும்!" 
 
 
தாத்தா 
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
அத்தியடி, யாழ்ப்பாணம்]
294064912_10221349228422971_6473147950793718828_n.jpg?_nc_cat=110&ccb=1-7&_nc_sid=127cfc&_nc_ohc=FnOtYE_qiMQQ7kNvgGU2_ln&_nc_ht=scontent-lhr6-1.xx&oh=00_AYCpnXR2-2QV2cMUpLKv89p_nSxrBYYd1z9Ohw7O0yEfVA&oe=669DECB3    May be an image of wedding cake and text
 
 
 

உங்கள் பேரனுக்கு, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, kandiah Thillaivinayagalingam said:
 
294064912_10221349228422971_6473147950793718828_n.jpg?_nc_cat=110&ccb=1-7&_nc_sid=127cfc&_nc_ohc=FnOtYE_qiMQQ7kNvgGU2_ln&_nc_ht=scontent-lhr6-1.xx&oh=00_AYCpnXR2-2QV2cMUpLKv89p_nSxrBYYd1z9Ohw7O0yEfVA&oe=669DECB3    
 
 
 

தில்லை ஐயா, உங்கள் பேரன் திரேனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!

  • கருத்துக்கள உறவுகள்

தில்லை உங்கள் பேரன் திரேனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் பேரனுக்கு, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் பேரன் திரேனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள், வாழ்க வளத்துடன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எல்லோருக்கும் நன்றிகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

பேரன் திரேனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தில்லை ........!  💐

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் பேரனுக்கு இனிய அகவை நாள் வாழ்த்துகள்

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் பேரனுக்கு, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எல்லோருக்கும் நன்றிகள்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.