Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, island said:

எனது எந்த கருத்துலும் யாரிலும் வன்மத்தை கொட்டவுமில்லை யாரையும் நான் திட்டவும் இல்லை.

தாயக/ புலம் பெயர் அரசியல்வாதிகளின் தமிழ் தேசிய அரசியல் என்ற பெயரில் செய்யும் அரசியலின் பாரிய முரண்பாட்டையும் தமிழர் அரசியலை பின்னோக்கி  செலுத்தும் செயலையுமே சுட்டிக்காட்டினேன். 

தமிழர் அரசியல்வாதிகள் அன்றில் இருந்து தொடர்சசியாக செய்துவரும்,  தமிழரை மட்டும் மையப்படுத்தும்  உசுப்பேற்றல் அரசியல் மூலம்,  எப்படி ஶ்ரீலங்கா அரசியலமைப்பை மாற்ற முடியும் என்று உங்களால் பதில் கூற முடியுமா?  ஶ்ரீலங்கா அரசியலமைப்பை  மாற்ற ஶ்ரீலங்கா மக்களில் பெரும்பான்மை  மக்கள் சாதகமாக வாக்களித்தால் மட்டுமே முடியும் என்ற ஜதார்த்தத்தை,  உங்களால் அல்லது உங்களை போலவே தாயகத்திலும்  உதவாக்கரை தீவிர தமிழ் தேசியம் பேசும் அரசியல் கோமாளிகளால் புறந்தள்ள முடியுமா? 

கேள்வி கேட்பது சுலபம்

செயலும் முடிவுகளை எடுத்தலுமே கடினமானவை.

எங்கே முழுக்கோமாளி நீங்கள் சொல்லுங்கள் தமிழர்கள் யாருக்கு வாக்களித்தால் பெரும்பான்மை மக்களின் மனதை எம் பக்கம் திருப்பி கிழித்து எறியப்படாத ஒப்பந்தத்தை தருவார். இல்லை எனில் நீங்கள் முழுக்கோமாளி என்றே இனி மேல் என்னால் இங்கே அழைக்கப்படுவீர்கள். 

Edited by விசுகு
எழுத்துப்பிழை

  • Replies 82
  • Views 6.9k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • ஈழப்பிரியன்
    ஈழப்பிரியன்

    ஐயா சம்பந்தரின் இறுதி அஞ்சலியின் போதுகூட இவ்வளவு மக்கள் கலந்து கொள்ளவில்லை என்பதை கவனத்தில் கொள்க.

  • அக்னியஷ்த்ரா
    அக்னியஷ்த்ரா

    இது முற்றிலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய கருத்து. அனால் இதில் புலம்பெயர்ஸ் செய்யும் அரசியல் என்பது புலத்திற்கு மனிதாபிமான உதவிகளைச்செய்வதும், லாபியிங் செய்து மூக்குடைபடுவதும், யாழில் பக்கம்பக்கமாக எழுதித்தள

  • தமிழன்பன்
    தமிழன்பன்

    சரி தமிழ் வேட்பாளருக்கு ஆதரவில்லத்தவர்கள் சொல்லுங்கள் . உங்கள் தெரிவு என்ன. றனிலா? சஜிதா ? சரி நீங்கள் ரணிலுக்கு போட சஜித் வென்றால் என்ன நடக்கும் ? அதே மாதிரி சஜித்துக்கு போட்டு ரணில் வென்றால் ? இந்த

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, விசுகு said:

கேள்வி கேட்பது சுலபம்

செயலும் முடிவுகளை எடுத்தலுமே கடினமானவை.

எங்கே முழுக்கோமாளி நீங்கள் சொல்லுங்கள் தமிழர்கள் யாருக்கு வாக்களித்தால் பெரும்பான்மை மக்களின் மனதை எம் பக்கம் திருப்பி கிழித்து அறியப்படாத ஒப்பந்தத்தை தருவார். இல்லை எனில் நீங்கள் முழுக்கோமாளி என்றே இனி மேல் என்னால் இங்கே அழைக்கப்படுவீர்கள். 

யாருக்கு வாக்களிப்பது என்பது அவரவர் விருப்பம்.

தமிழர் இனப்பிரச்சனையை பொறுத்தவரை, தனியே ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பு மூலம் ஶ்ரீலங்கா அரசியலைப்பு மாற்றத்தை கொண்டு வர முடியாது என்பது  வெள்ளிடை மலை.  

இந்த திரியில் எனது முன்னைய கருத்தில் இதைப்பற்றி கூறியுள்ளேன்.  இத் தேர்தலில் வட கிழக்கு மாகாணங்களுல் அளிக்கப்பட்ட மொத்த வாக்கில் 50 வீதத்துக்கு மேற்பட்ட வாக்குகளை பொது வேட்பாளர் பெறாவிட்டால் வட கிழக்கு இணைந்த சுயாட்சி எனபது வெற்று கோஷமாகவே அமையும். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, island said:

 இத் தேர்தலில் வட கிழக்கு மாகாணங்களுல் அளிக்கப்பட்ட மொத்த வாக்கில் 50 வீதத்துக்கு மேற்பட்ட வாக்குகளை பொது வேட்பாளர் பெறாவிட்டால் வட கிழக்கு இணைந்த சுயாட்சி எனபது வெற்று கோஷமாகவே அமையும். 

சரி

இத் தேர்தலில் வட கிழக்கு மாகாணங்களில் அளிக்கப்பட்ட மொத்த வாக்கில் 50 வீதத்துக்கு மேற்பட்ட வாக்குகளை பொது வேட்பாளர் பெற உங்கள் உதவி மற்றும் செயல் என்ன??

நான் ஆரம்பத்திலேயே எழுதி விட்டேன். வந்தால் மலை போனால் உரோமம் என்பதே எனது நிலைப்பாடு என்று.

Edited by விசுகு
எழுத்துப்பிழை

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, விசுகு said:

சரி

இத் தேர்தலில் வட கிழக்கு மாகாணங்களில் அளிக்கப்பட்ட மொத்த வாக்கில் 50 வீதத்துக்கு மேற்பட்ட வாக்குகளை பொது வேட்பாளர் பெற உங்கள் உதவி மற்றும் செயல் என்ன??

நான் ஆரம்பத்திலேயே எழுதி விட்டேன். வந்தால் மலை போனால் உரோமம் என்பதே எனது நிலைப்பாடு என்று.

கடைசிவரை 50 வீதத்தை நெருங்கப் போவதில்லை என்பது மூளை உள்ள அனைத்து மக்களுக்கும் தெரியும்.  நடக்காத ஒன்று நடக்கும் என்று லூசுத்தனமாக கூற நான் என்ன தீவிர தமிழ் தேசியம்  பேசும் அரசியல்வாதியா? 

வட கிழக்கு இணைந்த சமஷ்டி என்பதை கொள்கையாக அறிவித்து,  அதை உலகிற்கு/ சர்வதேசத்திற்கு  செய்தி சொல்லப் போவதாக அறிவித்த பொது வேட்பாளர்,  வட கிழக்கு மாகணங்களில் அளிக்கப்பட்ட வாக்கில் 50 வீதத்துக்கு குறைவாக பெறுவதன் மூலம் அதை வலியுறுத்தும் தார்மீக உரிமையை  தமிழர் தரப்பு  உத்தியோகபூர்வமாக இழப்பது என்பது,   உரோமம் உதிர்வதற்கு ஈடான ஒன்றா? 

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, விசுகு said:

சரி

இத் தேர்தலில் வட கிழக்கு மாகாணங்களில் அளிக்கப்பட்ட மொத்த வாக்கில் 50 வீதத்துக்கு மேற்பட்ட வாக்குகளை பொது வேட்பாளர் பெற உங்கள் உதவி மற்றும் செயல் என்ன??

நான் ஆரம்பத்திலேயே எழுதி விட்டேன். வந்தால் மலை போனால் உரோமம் என்பதே எனது நிலைப்பாடு என்று.

எந்த சிங்கள வேட்பாளருக்கு போட்டாலும் புத்த பிக்குகளை விலத்தி ஒன்றுமே செய்யப்போறதில்லை. அதைவிட ஒருபக்கத்தால் பிக்குகளையும் ராணுவத்தையும் ஏவிவிட்டு புத்தர் சிலை வைக்கிறது, காணி பிடிக்கிறது எண்டு செய்துபோட்டு மற்றப்பக்கத்தாலை தான்நல்லவன் என்று காட்ட அதுக்கு ஏதாவது தீர்வு தருவது போலநடிப்பது. எப்பவும் இது கொதிநிலையிலேயே இருக்கும். வேறை ஒண்டும்நடக்கப் போவதில்லை. இதுக்கு பொது வேட்பாளருக்கே போடலாம்.நான் கேள்விப்பட்டதன் படி யாழ்ப்பாணத்தில் 2லட்சம் வாக்குகளாவது பொது வேட்பாளருக்கு கிடைக்கும். மற்ற இடங்கள் பற்றி வடிவாக தெரியாது.

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, island said:

கடைசிவரை 50 வீதத்தை நெருங்கப் போவதில்லை

ஏன்??

(மூளைக்கு பின்னர் வருகிறேன்😡)

  • கருத்துக்கள உறவுகள்
Quote

‘தமிழ்ப் பொதுவேட்பாளர்’ மாபெரும் பொதுக்கூட்டம்

இந்த மாபெரும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட மக்களைப் பார்க்கும்போது தமிழ்ப் பொதுவேட்பாளரின் வெற்றி ஏலவே உறுதிசெய்யப்பட்டுவிட்டதாகவே தோன்றுகின்றது!😂

  • கருத்துக்கள உறவுகள்
On 21/8/2024 at 23:15, island said:

எனது பார்வையில் பொது வேட்பாளரை மட்டுமல்ல ஒட்டுமொத்தமான தமிழ் தரப்புக்களின் அரசியலுமே (புலம்பெயர் அரசியல் செய்வோர் உட்பட)  எந்த விதமான வினை திறனும் அற்ற தமிழரை பொறுதவரை பாதகமான திசையிலேயே   முட்டாள்தனமாக செலுத்தி செல்லும் மண்குதிரையே   எனலாம். 

விடுதலை புலிகளை பொறுத்தவரை அவர்கள் சுதந்திர தனிநாட்டுக்கான ஆயுத போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.  சர்வதேச அரசியலில் அதன் சாத்திய தன்மை குறித்த சந்தேகங்கள் விவாதங்கள்  இருந்த போதும் அதைத் தாண்டி  அவர்களது அரசியல் தனி நாட்டை  நோக்கியதாகவே இருந்தது. ஆயுத வழியில் தனிநாட்டை அடையலாம் என்ற ஒர்மத்துடன் அதை நோக்கிய பாதையில் போராடினார்கள்.  ஆகவே சர்வ தேசத்தை புறக்கணித்து  தமிழரை மட்டும் மையமாக கொண்ட அவர்களது அரசியலில் நியாயம் இருந்தது. 

ஆனால் இன்றய நிலையில் தமிழரின் சார்பில் செயற்படும் எந்த தரப்பும் தனி நாட்டிற்காக போராடவில்லை. ஶ்ரீ லங்கா என்ற நாட்டிற்குள்  அதன் அரசியலமைப்பை கூட்டாட்சி அரசியலமைப்பாக மாற்றவே  போராடுகின்றார்கள்.  ஆகவே தமிழருக்குள் மட்டும் உசுப்பேற்றும் குண்டு சட்டி அரசியலின் மூலம் ஶ்ரீலங்காவில் அரசியலமைப்பை மாற்ற முடியுமா?  அரசியலமைப்பை மாற்றுவதென்றால் நாட்டில் வாழும்அனைத்து இன மக்களிடமும் அரசியல் செய்யாமல் சாத்தியமா?  உலகில் எந்த நாட்டிலாவது வரலாற்றில் அப்படி நடந்ததுண்டா?  வட கிழக்கு மாகாணங்கள் இணைந்த சமஸ்டி என்றால் ஆக குறைந்தது  அந்த இரு மாவட்டங்களிலும் வாழும் ஏனைய இன மக்களின் ஆதரவை  பெறாவிட்டால் அதை பற்றி உலக நாடுகளிடம்  வலியுறுத்த முடியுமா?    தமிழ் மக்களிடம் அரசியல் செய்யும் அதே வேளை அதற்கு இணையாக சிங்கள மக்களிடமும் அரசியல் செய்து சமஸ்டிஅரசியலமைப்பின் நன்மைகள் பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்துவதன் மூலம் அதற்கான் ஆதரவு தளத்தை ஏற்படுத்த வில்லை என்றால் இந்த தமிழ் தேசியவாதிகளது கோஷம் வெறும் வெற்றுக்  கோஷமாகவே இருக்கும். அவர்களது பொழுது போக்கு  மற்றும் பதவிகளை பெறும் சுயநல அரசியலாகவும. வெற்று வீரம்  பேசும் புலம்பெயர் தேசியவாதிகளின் பண திருட்டு அரசியலாக மட்டும் அமைந்து அவர்களுக்கு மட்டும் பயன்தரும் அரசியலாக மட்டுமே  அமையும் என்பது எனது கருத்து.  தமிழ

 தேசியவாதிகள் என்று தம்மை அழைத்துக்கொண்டு செயற்படுவோர் மத்தியில் பல சட்டவாளர்கள்,  அரசியல் விற்பன்னர்கள், பத்தி எழுத்தாளர்கள்,  புலம் பெயர் இணையத்தள  அரசியல் ஆய்வாளரகள், அதி தீவிர தேசியவாதிகள்   என்று பலர் இருந்தும்  இதை கணக்கில் எடுக்காதது ஏன்?  நாம் இந்த உலகில்  வாழும் வரை தமிழ் தேசியத்தை பொழுது போக்காக அல்லது வருமானத்தை பெருக்க,  நிதி சேகரிக்க தமிழ் தேசியம் என்ற சொல்லாடலை  உபயோகிப்போம் என்ற அவர்களது  எண்ணமே இதற்கு காரணம். 

சரி 

உங்கள் கணிப்பு மற்றும் ஆலோசனைப்படி 

இந்த பொது வேட்பாளர் தனிநாடு கோரிக்கையை வலியுறுத்தவில்லை. தமிழர்களின் நியாயமான கோரிக்கைகள் மற்றும் நீதி வேண்டியே போட்டி இடுகிறார். அப்படியானால் எத்தனை சிங்கள மக்கள் இவருக்கு ஆதரவு தருவர்??? 

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, விசுகு said:

சரி 

உங்கள் கணிப்பு மற்றும் ஆலோசனைப்படி 

இந்த பொது வேட்பாளர் தனிநாடு கோரிக்கையை வலியுறுத்தவில்லை. தமிழர்களின் நியாயமான கோரிக்கைகள் மற்றும் நீதி வேண்டியே போட்டி இடுகிறார். அப்படியானால் எத்தனை சிங்கள மக்கள் இவருக்கு ஆதரவு தருவர்??? 

எத்தனை தரம் இதையே திருப்பி திருப்பி கேட்பீர்கள்? 

தமிழர்கள்களிலையே  அரைவாசிக்கு மேற்பட்டோர் ஆதரவு தரப்போவதில்லை. இதில் சிங்கள மக்கள் ஆதரவாம். 😂😂

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, island said:

எத்தனை தரம் இதையே திருப்பி திருப்பி கேட்பீர்கள்? 

தமிழர்கள்களிலையே  அரைவாசிக்கு மேற்பட்டோர் ஆதரவு தரப்போவதில்லை. இதில் சிங்கள மக்கள் ஆதரவாம். 😂😂

அதாவது சிங்களம் வேறு பகுதி,  நாடு என்கிறீர்கள்.????

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, வாதவூரான் said:

நான் கேள்விப்பட்டதன் படி யாழ்ப்பாணத்தில் 2லட்சம் வாக்குகளாவது பொது வேட்பாளருக்கு கிடைக்கும்.

நான் கேள்விபட்டதிற்கு நேர் எதிரான தகவல் நீங்கள் கேள்விபட்டுள்ளீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

சொன்னீர்கள்

5 hours ago, வாதவூரான் said:

வேறை ஒண்டும்நடக்கப் போவதில்லை. இதுக்கு பொது வேட்பாளருக்கே போடலாம்.


ஒரு மாற்றத்துக்காக வெனிசுலா கொள்கைவாதிகள் ஜேவிபி வந்துதான் பார்க்கட்டுமே  என்று முதலில்  சொன்னீர்கள்  இப்போது உங்கள் கொள்கையில் மாற்றம் வந்துவிட்டதா

  • கருத்துக்கள உறவுகள்

Image

2009 பின்னரும், ஆயுத போராட்ட காலத்திற்கு முன்ன்னரும் ஒரே மாதிரியான அரசியல் நகர்வுகளையே சிறுபான்மை சமூகத்தினர் முன்னெடுத்து வருகின்றனர், ஏதோ ஒரு அரசியல் கட்சிகளுடன் திரைமறைவு உடன்படிக்கையோ அல்லது வெளிப்படையான உடன்படிக்கையினூடாகவோ, இந்த நடவடிக்கை அமைந்திருக்கிறது, இனியும் மாறப்போவதில்லை, ஆனால் சாதாரண மக்களுக்கு இதனால் ஏதாவது மாற்றம் ஏற்பட்டதா என்பதனை சதாரண மக்கள் சிந்தித்து அதற்கேற்ப  தமது முடிவுகளை எடுக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, vasee said:

2009 பின்னரும், ஆயுத போராட்ட காலத்திற்கு முன்ன்னரும் ஒரே மாதிரியான அரசியல் நகர்வுகளையே சிறுபான்மை சமூகத்தினர் முன்னெடுத்து வருகின்றனர்

large.IMG_6949.jpeg.8f497092cb81d292b7a9

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, விசுகு said:

அதாவது சிங்களம் வேறு பகுதி,  நாடு என்கிறீர்கள்.????

நான் அப்படி சொல்லவில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, island said:

நான் அப்படி சொல்லவில்லை. 

அப்படி இல்லை என்றால் ஏன் தமிழர்களின் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு தமிழருக்கு ஒரு வாக்கு கூட போடக் கூடாது??????

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, விசுகு said:

அப்படி இல்லை என்றால் ஏன் தமிழர்களின் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு தமிழருக்கு ஒரு வாக்கு கூட போடக் கூடாது??????

வாக்கு போடுவது வாக்காளரது தனிப்பட்ட உரிமை. இந்த கேள்வியை இலங்கை நாட்டில் வாக்களிக்க இருக்கும் வாக்காளரிடம் கேளுங்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, island said:

வாக்கு போடுவது வாக்காளரது தனிப்பட்ட உரிமை. இந்த கேள்வியை இலங்கை நாட்டில் வாக்களிக்க இருக்கும் வாக்காளரிடம் கேளுங்கள். 

உங்களின் எந்த தீர்வோ உரிமையோ பதிலோ இல்லாதபோது ஏன் தேவை அற்று உங்களுக்கு சரிவராது இடங்களில் வகுப்பெடுப்பதையாவது நிறுத்துங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, விசுகு said:

உங்களின் எந்த தீர்வோ உரிமையோ பதிலோ இல்லாதபோது ஏன் தேவை அற்று உங்களுக்கு சரிவராது இடங்களில் வகுப்பெடுப்பதையாவது நிறுத்துங்கள்.

நீங்கள் கேட்ட பல கேள்விகளுக்கு  நான் பதிலளித்தேன். நான் கேட்ட எந்த கேள்விக்கும் உங்களால் பதிலளிக்க கூட முடியவில்லை.  என்பதால்  நீங்களும் இங்கு வகுப்பைடுப்பதை நிறுத்துவீர்களா?  உங்களிடமும் வெறும் உசுபேற்றலை தவிர எந்த தீர்வும் இல்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kavi arunasalam said:

large.IMG_6949.jpeg.8f497092cb81d292b7a9

 

காலாகாலமாக சிங்கள தலைவர்கள் தமிழரின் தலையில் மிளகாய் அரைக்கிறார்களே 

அதையும் சேர்த்து வரைந்திருந்தால் ரொம்ப நன்றாக இருந்திருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Kavi arunasalam said:

large.IMG_6949.jpeg.8f497092cb81d292b7a9

Image

 

இரண்டும் வேறுபட்ட கருத்துடையது, நீங்கள் கூறுவது பயனற்றது என்பதான பொருள்படும் ஆனால் ஐன்ஸ்ரினது கருத்து ஒரே விடயத்தினை செய்து வேறு பட்ட முடிவுகளை எதிர்பார்ப்பது பைத்தியக்காரத்தனம்.

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, island said:

நீங்கள் கேட்ட பல கேள்விகளுக்கு  நான் பதிலளித்தேன். நான் கேட்ட எந்த கேள்விக்கும் உங்களால் பதிலளிக்க கூட முடியவில்லை.  என்பதால்  நீங்களும் இங்கு வகுப்பைடுப்பதை நிறுத்துவீர்களா?  உங்களிடமும் வெறும் உசுபேற்றலை தவிர எந்த தீர்வும் இல்லை. 

உங்களிடம் கேள்விகளோ தீர்வுகளோ செயற்பாடுகளோ துளி கூட கிடையாது.

ஆனால் முன்னைய இன்றைய செயற்பாட்டாளர்கள் மீது வசை பாடவும் முட்டையில் ரோமம் புடுங்கவும் மட்டுமே உங்கள் நேரத்தை முழுவதுமாக ஒதுக்குகிறீர்கள். எனவே எனக்கு அது ஒரு போதும் ஒட்டாது. டொட்.

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, விசுகு said:

உங்களிடம் கேள்விகளோ தீர்வுகளோ செயற்பாடுகளோ துளி கூட கிடையாது.

ஆனால் முன்னைய இன்றைய செயற்பாட்டாளர்கள் மீது வசை பாடவும் முட்டையில் ரோமம் புடுங்கவும் மட்டுமே உங்கள் நேரத்தை முழுவதுமாக ஒதுக்குகிறீர்கள். எனவே எனக்கு அது ஒரு போதும் ஒட்டாது. டொட்.

அரசியல்  கேள்விகளுக்கு பதில் கூற  உங்களல் முடியாது. 

நாட்டை இனத்தை மக்களின் உயிர்களை நாசமாக்கும் அரசியல்  கொள்கைகளே உங்களிடம் உள்ளது. குற்றவாளிகளை பற்றியும் குற்றங்களை பற்றியும் கேள்வி கேட்டால்  குற்றவாளிகளுக்கு வக்காலத்து  வாங்கவும் மட்டும் தான் உங்களால் முடியும்.  தமிழர் அரசியலை மீள முடியாத முட்டு சத்தியில் கொண்டுவந்து நிறுத்தி, மக்களின் அழிவை இளைஞர்களின் உயிரை விற்று  பணம் சம்பாதித்ததே,   அன்றைய  இன்றைய செயற்பாட்டாளர்கள் என்று நீங்கள் அழைக்கும் மாபியாக்களின் சாதனை.  

அரசியல் என்றால்,  மக்களின் அழிவை வைத்து நிதி  சேகரிப்பதும் வியாபாரம்  செய்வதும் என்று புரிந்து வைத்திருப்பவர்களால் அரசியல் கேள்விகளுக்கு பதில் கூற முடியாது என்பது புரிந்து கொள்ளக்கூடியதே. 

  • கருத்துக்கள உறவுகள்

மொத்தத்தில் தமிழ் தேசிய அரசில்வாதிகளின் பைத்தியகார செயல்களை, தமிழர்களை குண்டுசட்டிக்குள் வைத்திருக்கும் முயற்சியை  விளக்கும் கருத்து படங்கள் 👍

 

8 hours ago, vasee said:

இரண்டும் வேறுபட்ட கருத்துடையது,

 

Edited by விளங்க நினைப்பவன்

  • கருத்துக்கள உறவுகள்

456673855_1737580839981487_6627596448740

தாயகத்தின் பாராளுமன்ற உறுப்பினர்களுடன்... பிரித்தானியாவில் கருத்தாடல்.
01.09.2024 ஞாயிற்றுக்கிழமை மாலை 5:30 முதல் 8:30 வரை.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.