Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
1299666.jpg  
 

தூத்துக்குடி மாவட்டம் புளியங்குளத்தில் தன் அம்மா மற்றும் அக்காவுடன் வசித்து வருகிறான் சிறுவன் சிவனணைந்தான் (பொன்வேல்). அவன் வாழ்க்கையில் வெறுக்கும் ஒரே விஷயம் வாழைத்தார் சுமப்பது. வறுமையான குடும்பம், அப்பா இல்லை, வாங்கிய கடனை அடைத்தாக வேண்டும் என்பதற்காக தாயின் வற்புறுத்தலால் பள்ளி விடுமுறை நாட்களில் பெரும் துயரத்துடன் வாழைத்தார்களை சுமக்க செல்கிறான். அதனால் இரவில் வலியால் துடிக்கிறான். வாழைத்தார் சுமக்கும் அவனது ‘கனமான’ வாழ்க்கையை இலகுவாக்குவது பூங்கொடி மிஸ் (நிகிலா விமல்). இப்படியாக கறுப்பு பக்கங்களும், நடுவே சில ‘கலர்ஃபுல்’ பக்கங்களும் சிவனணைந்தான் வாழ்க்கையை ஆட்கொள்கின்றன.

இதனிடையே, அதே ஊரில் வாழைத்தார் சுமக்கும் கனி (கலையரசன்) ஊதிய உயர்வு கேட்டு ஆட்களை திரட்டி போராடுகிறார். ஒருவகையில் அதற்கு ஒப்புக்கொள்ளும் முதலாளி, மற்றொருபுறம் ஆபத்தில் சிக்க வைக்கிறார். அது என்ன? சிவனணைந்தானுக்கு வாழை சுமப்பத்திலிருந்து விடுதலை கிடைத்ததா என்பது திரைக்கதை.

தன் வாழ்வின் உச்சபட்ச அழுகையின் தருணங்களையும், மகிழ்ச்சியின் நினைவுகளையும் ஒரு சேர கோத்து ‘உணர்வுபூர்வமான’ படைப்பை கொடுத்திருக்கிறார் இயக்குநர் மாரி செல்வராஜ். சொற்ப கூலிக்காக, உயிர்கொடுத்து வாழைத்தாரை சுமந்து செல்லும் அம்மக்களின் வாழ்வியலையும், அது சிறுவனின் உளவியலில் ஏற்படுத்தும் தாக்கத்தையும் சமரசமின்றி அழுத்தமாக பதிவு செய்கிறது படம். அதேசமயம் கண்ணீர் மழையை பொழியும் காட்சிகளை உருக்கி உருக்கி வடிக்காமல், வெகுஜன ரசனையை ஈர்க்கும் படத்தின் திரைமொழி கவனம் பெறுகிறது.

சிவனணைந்தான் மற்றும் அவனது நண்பனுக்கு இடையிலான நட்பு, ரஜினி, கமல் ரெஃபரன்ஸ், “நம்மூர்ல ரஜினி படம் தான் ஓடுது. கமல் படம் எங்க ஓடுது” என்ற வசனம், அதையொட்டிய காட்சிகள், ‘பூவே உனக்காக’, ‘பிரியமுடன்’ போஸ்டர்கள், கர்சீஃப் காட்சி என ஜாலியாக நகரும் படத்தின் தொடக்கம் ரசிக்க வைக்கிறது. தனக்கு பிடித்த ஆசிரியை மீது அந்தப் பருவத்தில் விளையும் ஈர்ப்பை எந்த வகையிலும், கொச்சையாகவோ, மிகைப்படுத்தியோ சொல்லாமல் மிக கவனமாக நேர்த்தியாக கையாண்டியிருப்பது பாராட்டுக்குரியது. நிகிலா விமலிடம், மாணவன், “நேத்து எங்க அம்மா மாதிரி அழகா இருந்தீங்க டீச்சர். இன்னைக்கு அக்கா மாதிரி” என சொல்லும் வசனம் அழகு! இதற்கு மறுபுறம், மற்றொரு காதலையும், மெல்லிய உணர்வுடன் 2 ரெட்ரோ பாடல்களின் வழியே கடத்தியிருந்தது அட்டகாசமான திரையனுபவம்.

 

 

கொத்தடிமை வாழ்க்கை, ஒரு ரூபாய் கூலி உயர்வு போராட்டம், அதனால் ஏற்படும் இழப்பு, இடைத்தரகர்களின் வஞ்சகம், கம்யூனிஸ்ட், அம்பேத்கர் குறியீடுகள் என உழைக்கும் மக்களின் வலியை அழுத்தமாக பதிய வைக்கிறது படம். எல்லாவற்றையும் தாண்டி கட்டிப்போட்டு உலுக்கும் இறுதிக் காட்சியின் தாக்கத்தை படம் முடிந்தும் உணர முடிகிறது. மாரி செல்வராஜின் ‘உருவக’ காட்சிகளின் டச் இப்படத்தில் நிறைந்திருக்கிறது.

17244071973078.jpeg

தேர்ந்த கலைஞர்கள் கூட தோற்றுப்போகும் அளவுக்கு, வலி, வேதனை, கண்ணீர், தாயிடம் கெஞ்சி மன்றாடுவது, களைப்பினால் சோர்ந்து வீழும் இடம் என உணர்வுகளை நடிப்பில் வரித்து மிரட்டியிருக்கிறார் சிறுவன் பொன்வேல். உற்ற தோழனாக, டைமிங்கிலும், யதார்த்தமான நடிப்பிலும் ஈர்க்கிறார் மற்றொருவர் சிறுவன் ராகுல். பால்ய கால ஆசிரியரை நினைவூட்டும் நிகிலா விமல், க்ளோசப் ஷாட்களில் முகத்தில் உணர்வுகளை கச்சிதமாக வெளிப்படுத்தி, இனம்புரியா உணர்வுகளைக் கொண்ட சிறுவனை ‘ஹேண்டில்’ செய்யும் முறையில் முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்துகிறார்.

ஆக்ரோஷமான இளைஞனாக கூலிக்காக போராடும் கலையரசன், வாழைத்தாரை தாங்குவது போல கதாபாத்திரத்தை நேர்த்தியாக தாங்கி கிராமத்து பெண்ணாக ஈர்க்கும் திவ்யா துரைசாமி கச்சிதமான தேர்வு. சிறுவனின் தாயாக நடித்துள்ள ஜானகி இறுதிக்காட்சியில் அட்டகாசமான நடிப்பால் பாரத்தை இறக்கிவிடுகிறார். அவருக்கு தனி பாராட்டுகள்!

கமல் குறித்து பேசும் காட்சியில், ‘நாயகன்’ பட இசையை மெல்லிதாக ஓட விடுவது, உருக்கமான காட்சிகளுக்கு உயிரூட்டி உணர்வுகளாக்கியிருப்பது, தேவையான இடங்களில் அமைதியின் வழியே அழுத்தம் சேர்ப்பது என சந்தோஷ் நாராயணன் பின்னணி இசையில் மிரட்டுகிறார். ‘தென்கிழக்கு தேன் சிட்டு’, ‘பாதவத்தி’ பாடல்கள் சிறப்பு. கறுப்பு வெள்ளையிலும், ஷில்அவுட்டிலும் காட்சிகளை நனைத்து, மூச்சிறைக்க ஓடும் சிறுவனின் உணர்வுகளை கடத்தி, மாரி செல்வராஜின் நினைவுகளுக்கு உயிரூட்டுகிறது தேனி ஈஸ்வரின் கேமரா. ஒலிக்கலை நேர்த்தி.

பொறுமையாக நகரும் கதை தான் என்றாலும் எங்கேயும் அயற்சி ஏற்படுத்தாமல் சுவாரஸ்யமாக கடப்பது பலம். மீண்டும் மீண்டும் ஒரே இடத்தில் காட்சிகள் சுற்றுவதாக சிலருக்கு தோன்றலாம். வெறும் வலியை மட்டும் திணித்து கடத்தாமல், வெகுஜன ரசனையிலும், திரை அனுபவத்திலும் கவனம் செலுத்தியிருக்கும் உன்னதமான இப்படம் இறுதியில் உங்களை ஆட்கொள்ளும்.

வாழை Review: மாரி செல்வராஜின் உன்னத படைப்பு தரும் தாக்கம் என்ன? | mari selvaraj directorial Vaazhai movie review - hindutamil.in

 "அப்பா நாங்கள் accidents இல் ஒருவர் இறந்து விட்டார் என்று கேள்விப்பட்டவுடன், அவர் பாவம் என்று கடந்து விடுகின்றோம்... ஆனால் அவருக்கு பின்னால் அவர் அம்மா, அக்கா, அப்பா, பிரெண்ட், என்று எத்தனை பேர் துடிதுடித்து போவினம் என்று நாங்கள் நினைப்பதே இல்லை"

என் மகள் இப் படம் முடிந்த பின் காரில் வரும் போது கூறியது.

நேற்று மகளையும் கூட்டிக் கொண்டு மாரி செல்வராஜின் வாழை படம் பார்க்க போனோம்.

உன்னதமான திரைமொழியில், மிகச் சிறந்த உடல் மொழியில், நடப்பவற்றை சினிமா என நம்ப முடியாத காட்சிகளில், உயிரோட்டமான இசையில், பதைக்க வைக்கும் கிளைமாக்ஸில் வாழை எம் முன் விரிகின்றது.

சிவனணைந்தான் எனும் சிறுவனின் பார்வை மற்றும் அனுபவத்தின் வாயிலாக வாழை ஒரு கிராமத்தில் கூலிக்காக சுரண்டப்படும், அதனை கேள்வி கேட்கும் சாதாரண மனிதர்களின் நாளாந்த கடின வாழ்வை பேசுகின்றது.

குலை குலையாக வாழை குலைகளை சுமந்து வியாபாரிகளுக்காக உழைக்கின்ற ஏழைகளுக்கு கடும் பசியில் கூட ஒரே ஒரு வாழைப்பழத்தை சாப்பிட தானும் கொடுக்க மறுக்கும் உலகை மிக இயல்பாக வாழை காட்டுகின்றது.

பதின்ம வயதில் ரீச்சர் மேல் வரும் ஈர்ப்பை கவிதையாக காட்டிய விதமும் அருமை.

கொஞ்சம் கூட தனக்கு சம்பந்தம் இல்லாத, கேள்விப்படாத, கற்பனை செய்ய முடியாத, மாந்தர்களின் வாழ்வைஎ என் மகளுக்கு கூட உணர்வு பூர்வமாக புரிய வைக்கிறது மாரி செல்வராஜின் திரைமொழி.

பல நாட்களுக்கு சிவனணைந்தான், அவன் காதல், அவனது அக்கா, சுற்றம், நட்பு, கிராமம், மாடு, அந்த கோழி எல்லாம் என் நினைவுகளை விட்டு அகலாது..

  • கருத்துக்கள உறவுகள்

Vaazhai நல்லாருக்கா? Mari Selvaraj-க்கு இது சிறந்த படமா? ஊடகங்கள் சொல்வது இதுதான் | Vaazhai Review

 

  • கருத்துக்கள உறவுகள்
On 24/8/2024 at 23:45, நிழலி said:

 "அப்பா நாங்கள் accidents இல் ஒருவர் இறந்து விட்டார் என்று கேள்விப்பட்டவுடன், அவர் பாவம் என்று கடந்து விடுகின்றோம்... ஆனால் அவருக்கு பின்னால் அவர் அம்மா, அக்கா, அப்பா, பிரெண்ட், என்று எத்தனை பேர் துடிதுடித்து போவினம் என்று நாங்கள் நினைப்பதே இல்லை"

என் மகள் இப் படம் முடிந்த பின் காரில் வரும் போது கூறியது.

நேற்று மகளையும் கூட்டிக் கொண்டு மாரி செல்வராஜின் வாழை படம் பார்க்க போனோம்.

உன்னதமான திரைமொழியில், மிகச் சிறந்த உடல் மொழியில், நடப்பவற்றை சினிமா என நம்ப முடியாத காட்சிகளில், உயிரோட்டமான இசையில், பதைக்க வைக்கும் கிளைமாக்ஸில் வாழை எம் முன் விரிகின்றது.

சிவனணைந்தான் எனும் சிறுவனின் பார்வை மற்றும் அனுபவத்தின் வாயிலாக வாழை ஒரு கிராமத்தில் கூலிக்காக சுரண்டப்படும், அதனை கேள்வி கேட்கும் சாதாரண மனிதர்களின் நாளாந்த கடின வாழ்வை பேசுகின்றது.

குலை குலையாக வாழை குலைகளை சுமந்து வியாபாரிகளுக்காக உழைக்கின்ற ஏழைகளுக்கு கடும் பசியில் கூட ஒரே ஒரு வாழைப்பழத்தை சாப்பிட தானும் கொடுக்க மறுக்கும் உலகை மிக இயல்பாக வாழை காட்டுகின்றது.

பதின்ம வயதில் ரீச்சர் மேல் வரும் ஈர்ப்பை கவிதையாக காட்டிய விதமும் அருமை.

கொஞ்சம் கூட தனக்கு சம்பந்தம் இல்லாத, கேள்விப்படாத, கற்பனை செய்ய முடியாத, மாந்தர்களின் வாழ்வைஎ என் மகளுக்கு கூட உணர்வு பூர்வமாக புரிய வைக்கிறது மாரி செல்வராஜின் திரைமொழி.

பல நாட்களுக்கு சிவனணைந்தான், அவன் காதல், அவனது அக்கா, சுற்றம், நட்பு, கிராமம், மாடு, அந்த கோழி எல்லாம் என் நினைவுகளை விட்டு அகலாது..

நானும் பார்த்தேன் . சிவனணைந்தான் , அவரது அக்கா, அம்மா, நண்பன் , பூங்கொடி டீச்சர் நினைவுகளில்…

 

  • கருத்துக்கள உறவுகள்

 

நீயா நானா பகுதியில் வாழைக்குலைக்கு பக்கத்திலிருந்தே வாழை திரைப்படம் பற்றி,,மாரி செல்வராஜ்

 

 

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

வாழை

vaazhai-2.jpg?w=600

திரைப் பார்வை

பொதுவாக பல திரைப்படங்கள் ஒரு முடிவை பரிசளித்து இருக்கையிலிருக்கும் எம்மிடம் தந்து அனுப்பிவைக்கும். சிந்தனையில் இடையீடு இன்றி எழுந்து சென்று விடுவோம். அநாதரவாக எழுத்தோட்டம் திரையில் நகரும் வால்போல அசைந்துகொண்டிருக்கும். வாழை திரைப்படம் முடிந்தும் பார்வையாளர்கள் எழுந்தபாடில்லை. வாழையின் கனதியும் படத் தொகுப்பும் இருக்கையோடு கட்டிப் போட்டுவிட்டிருந்தது. இசை மூளையறையெங்கும் ஒலித்துக் கொண்டிருந்தது. காட்சிப்புலத்துள் யாரோ கலவரப்பட்டபடி ஓடித்திரிந்தார்கள்.

ஒரு விளிம்புநிலை மாந்தரின் வாழ்வு என்பதை நடுத்தரவர்க்க கீழ்மட்ட மாந்தர்கள் புரிந்துகொள்வதிலும்கூட முழுமையிருக்காது. “பசி” என்பதை இவர்கள் இருவரும் புரிந்துகொள்வதிலும் வேறுபாடு இருக்கிறது. ஒரு நேர சாப்பாட்டின் தாமதம் அல்லது இல்லாமை தரும் பசி என்பதும் ஒரு நேர சாப்பாட்டுக்காக ஏங்கி உடல் அவதியுறும் பசி என்பதும் ஒன்றல்ல. 

வாழையில் இந்தப் பசி வாழைக்குலையில் ஒரு வாழைப்பழத்தை எட்டிப் பிடிக்க படாதபாடு படுகிறது. எட்டியபின் அதற்கான தண்டனையாக பசிச் சிறுவன் அதே வாழைக்குலையை சுமந்து நிற்கிறான். பசி உடல்நரம்புகளெல்லாம் களேபரப்பட்டு அந்த சிறுவனை வாட்டுகிறது. அவனை துரத்துகிறது. ஒரு பூனைபோல் தனது வீட்டினுள் புகுந்து ஒரு பிடி சோற்றை அவனது உடல் இரக்கத் துரத்துகிறது. தனது சகோதரியின் மரணம் தரும் மனவலியைத் தாண்டியும்கூட அவனை அடுப்படிக்குள் துரத்துகிறது. பின் அங்கிருந்தும் துரத்தப் படுகிறான். உளம் உடல் இரண்டும் அவனை பிய்த்தெறிகிறது. நெடிய வறுமையும் வாழ்தலின் பெரும் பாடும் மகளை இழந்த நிகழ் துயரும் என செரித்துக்கொள்ள முடியாமல் அவதிப்படும் ஒரு தாயின் பாசம் சிதைந்து பின் உயிர்ப்புறம் கடைசிக் காட்சியை புரிந்துகொள்ள முயற்சித்தபோது ஏதோவொன்று இதயத்தில் ஆணியை சொருகிக் கொண்டிருந்தது.

படத்தின் ஆரம்பம் வாழ்வின் மகிழ்வான தருணங்களை, பாடசாலை குறும்புகளை நினைவூட்டியது. பின் அந்த மகிழ்வை இரக்கமற்றுக் கொல்லும் யதார்த்தத்துள் வாழை என்னை பாதையெடுத்து அழைத்துச் சென்றுகொண்டிருந்தது. இந்தப் படத்தை முன்முடிவுகளோடு, சாதியப் பிரச்சினையோடு குறுக்கி திரையரங்கினுள் செல்பவர்களுக்கு வர்க்கப் பார்வை மங்கிப் போய்விடக் கூடும். வாழ்தலுக்காக இந்த உலகோடு போராடுபவர்களை மட்டுமல்ல, பசியோடு போராடுபவர்களையும் முன்முடிவுகளோடு குந்தியிருப்பவர்களுக்கு காணக் கிடைக்குமோ தெரியாது.

அந்தச் சிறுவனின் தந்தை விட்டுச் சென்ற சுத்தியல் அரிவாள் சின்னத்தை அவன் தனது சகோதரியின் காதலனாக உருவானவனிடம் பரிசாக அளிக்கிறான். தொழிலாளர் சார்ந்து முதலாளியை எதிர்கொள்ளும் அவனது துணிச்சலிலும் மனிதநேயத்திலும் தனது தந்தையை அவனிடத்தில் சிறுவன் காண்கிறான். அதை அவனிடத்தில் சொல்லவும் செய்கிறான்.

vaazhai-3.jpg?w=600

பாடசாலையில்லாத நாட்களில் வாழைக்குலை சுமப்பதற்கு அந்த பிஞ்சுடலை ஓயாது துரத்தும் இந்த சுரண்டல் முறைமைக்குள் வாழ நிர்ப்பந்திக்கப்பட்ட நிலையில், ஓரிடத்தில் தாய் சொல்வாள் “அவனை வேணுமெண்டு இப்படி வாட்டுகிறேனா நான். இந்த உலகில் நானில்லாத காலத்தில் அவன் தன் காலில் தான் நிற்கவேண்டும். அதற்கு அவன் உழைக்கப் பழகியிருக்க வேண்டும்” என்கிறாள். உழைப்பானது தன்காலில் தான் நிற்கவேண்டும் என்பதாக மட்டுமல்ல, ஒரு மனிதஜீவி என்ற அர்த்தத்தில் பரிணமிக்க உழைப்பை அத்தியாவசியமாக முன்வைப்பது கம்யூனிசம். ஆனால் வறுமையும் சுரண்டல் அமைப்பு முறைமையும் இணைந்து இங்கு குழந்தைகளின் உழைப்பை கோருவதுதான் கொடுமை.

அந்தக் கொடுமையை வாழை சுமந்தலைகிறது. இந்த உக்கிரம் மனதை பாரமாக்கி அழுத்துகிறது. நாம் விரும்பாத அல்லது ஜீரணிக்கமுடியாத ஒன்றை வாழை தருகிறபோது எழும் அதிர்ச்சயானது படத்தைத் தீவிரமடையச் செய்யும் காட்சிகள் மீதும் அதற்குப் பொருந்திப் போகிற ஒலியமைப்புத் தீவிரத்தின் மீதும் ஓர் இரக்கத்தைக் கோருகிறது. அதுவே படம் முடிந்தபின்னும் இருக்கையை விட்டு இலகுவில் எழமுடியாத பாரத்தை தருகிறது. வாழையைச் சுமந்தபடி திரையரங்கிலிருந்து வழிந்து வெளியேறவேண்டியிருக்கிறது.

விளிம்புநிலை மனிதர்கள் மீது விதிக்கப்பட்ட இந்த வாழ்வுச் சேற்றில் குழந்தைமையின் எதிர்காலமும் படிப்படியாக சந்ததி சந்ததியாக மெல்லப் புதையுண்டு கொண்டிருப்பதன் குறியீடாக படத்தின் முடிவு அமைவதாக நான் வாசிக்கிறேன். அந்தப் புதைவு முழுமையாக நடந்து முடிவதாக காட்சி கட்புலனினுள் புகுந்து கொள்ளவில்லை. என்றபோதும் அதிலிருந்து மீள்தலுக்கான வழியில் ஒரு தூரப் பறவையின் ஒலியைத் தன்னும் -யதார்த்தத்தில் மட்டுமல்ல- வாழையிலும் கேட்க முடியவில்லை. போராட்டக் குணத்தின் குறியீடான சுத்தியலும் அரிவாளும் வாழைத் தோட்டத்துள்ளும் இறக்கையற்று வீழ்ந்த கிடக்கிறது. அந்தச் சின்னம் ஒப்படைக்கப்பட்டவரும் மரணித்துப் போகிறார். ஒரு படைப்பின் முடிவினுள் தலையிட்டு படைப்பாளிக்கு அபிப்பிராயம் சொல்ல முடியாது என்பது அறிவுத்தளத்தில் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியது என்றபோதும், உணர்வுத்தளத்தில் எழும் மீள்தலுக்கான மனித ஏக்கத்தை அறிவு பூர்த்திசெய்ய முடியாது என்றே நம்புகிறேன்.

குழந்தைமை அல்லது இளவயது மிகையுணர்ச்சியை உடல்சார்ந்த காதலாகவோ ஈர்ப்பாகவோ புரிந்துகொள்வது எமது இறக்கைகளை உதிர்த்துக் கொட்டிவிடும். பள்ளிக் காலம் வாழைத் தோட்டத்தில் புதைந்தெழும் பாதத்தில் முளைத்திருக்கும் ஆணிகளை விலக்கி சிவனணைந்தானுக்கும் அவனது தோழன் சேகருக்கும் இறக்கைகள் முளைக்கப் பண்ணிவிடுகிறது. அதை அந்த ஆசிரியையும் சரியாகவே புரிந்துகொண்டு இறக்கைகளை வளர்த்துவிடுகிறாள். இடையிடையே திரையரங்கினுள் புன்னகைகள் வெடித்து வாயினூடக வெளியேறியதை காணமுடிந்தது. மனித மனம் அவாவும் மகிழ்ச்சி அது.

அதிகாரத்தின் சூழ்ச்சி காவுகொண்ட -பள்ளிச் சிறுவர்கள் உட்பட- 19 பேரின் வாழைத் தோட்டப் பயங்கரத்தையும் தனது சிறுவயது வாழ்கால அனுபவத்தையும் தழுவி இயக்குநர் மாரி செல்வராஜ் அவர்கள் ஒரு அற்புதமான கலையாக திரைப்பட வடிவத்தினூடு வெளிப்படுத்தியிருக்கிறார். ஒளிப்பதிவு, இசை, காட்சித் தொகுப்பு, கொம்பு முளைக்காத நடிப்பு என எல்லாமும் வாழையினுள் இயக்குநருடன் சகவாசம் செய்கிறது. தமிழ்த் திரைப்படம் கலைத்தளத்தில் தரையிறங்கும் இன்னொரு காட்சியை வாழை திரைப்படம் பிரமிப்போடு பார்க்க வைத்திருக்கிறது.
*

முன்றாம் உலக நாடுகள் முழுவதும் இந்த சுரண்டல் முறைமை தேயிலைத் தோட்டங்களிலும், கொக்கோ தோட்டங்களிலும், தொழிற்துறைகளிலும் விரவியிருக்கிறது. காலங்காலமாக வறுமை அங்கெல்லாம் விளிம்புநிலை மனிதர்களை குறிப்பாக சிறுவர்களை இந்த கொடுமைக்குள் துரத்திவிடுகிறது. இன்னொருபுறம் சாதிய அமைப்புமுறைமை தன் பங்குக்கு துரத்துகிறது. இந்த மாந்தர்களின் வாழ்வை புரிந்துகொள்ள நடுத்தர வர்க்கத்தின் கீழ்மட்டத்தில் உலவுபவர்கள்கூட துளைபோட்டு கீழிறங்க வேண்டியுள்ளது.

vaazhai-1.jpg?w=600

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.