Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது (edited)

தமிழக மீனவர்களுக்கு கோடிகளில் அபராதம் விதிக்கும் இலங்கை: என்ன செய்யப் போகிறது மத்திய அரசு?

1313461.jpg ராமேசுவரம் மீன்பிடி இறங்குதளம்
 
ராமேசுவரம்: இலங்கை வெளிநாட்டு மீன்பிடி தடை சட்டத்தின் கீழ் தமிழக மீனவர்களுக்கு சிறை தண்டனை மற்றும் கோடிக் கணக்கில் அபராதம் விதிக்கப்படுவதை தடுத்து நிறுத்த மத்திய அரசு துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக மீனவர்களிடையே கோரிக்கை வலுத்து வருகிறது.

இலங்கையின் வட மாகாண கடற்பகுதிகிளில் மீன்பிடியில் ஈடுபடும் தமிழக மீனவர்கள், இலங்கை தமிழ் மீனவர்களின் வலைகளை நாசப்படுத்தி விட்டுச் செல்கிறார்கள், மன்னார், யாழ்ப்பாண மாவட்ட மீனவர்களின் வலைகள் மற்றும் நடுக்கடலில் கூடுகளில் பிடிக்கப்படும் மீன்களை திருடிவிட்டுச் செல்கிறார்கள், தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி இலங்கையின் மீன்வளங்களையும் கடலின் சூழலியலையும் அழிக்கிறார்கள் என்றெல்லாம் குற்றஞ்சாட்டி மன்னார், யாழ்ப்பாணம், வவுனியா, கிளிநொச்சி, மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் பல்வேறு தொடர்ப் போராட்டங்களை நடத்தினர்.

இலங்கை மீனவர்களுக்கும் அபராதம், சிறை தண்டனை: இந்தத் தொடர் போராட்டங்களின் விளைவாக, இலங்கை கடற்பகுதியில் தடை செய்யப்பட்ட வலைகள் மற்றும் படகுகளைக் கொண்டு மீன்பிடிக்கும் அந்நாட்டு மீனவர்களுக்கு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படுவது போல, இலங்கை எல்லைக்குள் நுழைந்து மீன்பிடிக்கும் வெளிநாட்டுப் படகுகள் மற்றும் மீனவர்களுக்கும் அபராதம் மற்றும் சிறை தண்டனை விதிக்கும் வெளிநாட்டு மீன்பிடி தடைச் சட்டம் கடந்த ஜனவரி 24, 2018 அன்று இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

இந்தச் சட்டத்தின் கீழ், எல்லை மீறும் மீனவர்களுக்கு சிறை தண்டனையும், 15 மீட்டர் நீளமுடைய படகுக்கு இலங்கை ரூ.50 லட்சம், 15 முதல் 24 மீட்டர் நீளமுள்ள படகுக்கு இலங்கை ரூ.2 கோடி, 24 மீட்டர் முதல் 45 மீட்டர் நீளமுள்ள படகுக்கு இலங்கை ரூ.10 கோடி, 45 முதல் 75 மீட்டர் நீளமுள்ள படகுக்கு இலங்கை ரூ.15 கோடி, 75 மீட்டருக்கும் அதிகமுள்ள படகுக்கு இலங்கை ரூ.17.5 கோடி வரையிலும் அபராதம் விதிக்க முடியும். இதன் அடிப்படையில் இலங்கை எல்லைக்குள் சிறைப்பிடிக்கப்படும் தமிழக படகுகளுக்கு வெளிநாட்டு மீன்பிடி தடை சட்டத்தின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு அந்நாட்டு நீதிமன்றங்களில் வழக்கு தாக்கல் செய்யப்பபடுகிறது.

இலங்கை அரசு, வெளிநாட்டு மீன்பிடி தடைச்சட்டத்தை உடனடியாக அமல்படுத்தாமல், முதல் முறையாக சிறைப்பிடிக்கப்படும் மீனவர்கள் மீண்டும் எல்லை தாண்டி மீன்பிடித்தால் சிறை தண்டனை மற்றும் அபராதம் செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையின் கீழ் விடுதலை செய்யப்பட்டார்கள். படகினை விடுவிப்பதற்கு அதன் உரிமையாளர்கள் ஆவணங்களுடன் நீதிமன்றத்தில் ஆஜராகி வழக்காடினால் படகுகளும் விடுவிக்கப்பட்டன.
தொடர்ந்து இரண்டாவது முறையாக சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்களுக்கு சிறை தண்டனையும் படகின் ஓட்டுநர்களுக்கு முதல்முறையாக சிறைப்பிடிக்கப்பட்டாலே சிறை தண்டனையும் வழங்கப்பட்டது. முதல்முறையாக சிறைப்பிடிக்கப்பட்டாலும் மீனவர்களுக்கு அபராதம் விதித்தல், அபராதத்தை கட்டத் தவறினால் சிறை தண்டனை விதிப்பது, அல்லது அபராதத்தையும் சிறை தண்டனையும் ஒரு சேர விதிப்பது என தற்போது முழுமையாக வெளிநாட்டு மீன்பிடி தடைச்சட்டங்களை இலங்கை நீதிமன்றங்கள் அமல்படுத்த துவங்கி உள்ளன.
 
17267442283061.jpg

இது குறித்து தமிழ்நாடு மீனவத் தொழிலாளர் சங்கத்தின் (ஏஐடியுசி) மாநிலச் செயலாளர் சி.ஆர்.செந்தில்வேல் கூறியது: “கடந்த 2010-ல் துவங்கி பல கட்டங்களாக சென்னை, டெல்லி, கொழும்பு ஆகிய நகரங்களில் இரு நாட்டு மீனவப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து இரு நாட்டு அதிகாரிகளைக் கொண்டு பேச்சு வார்த்தைகளும் நடைபெற்றன. இலங்கை நாடாளுமன்றத்தில் வெளிநாட்டு மீன்பிடித் தடைச் சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு மீனவர் பிரச்சினை தொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடத்தப்படாமல் இன்று வரையிலும் தாமதம் ஏற்பட்டுக் கொண்டே போகிறது.

இந்த வெளிநாட்டு மீன்பிடித் தடைச் சட்டத்தினை இலங்கை அரசு படிப்படியாக அமல்படுத்தி தற்போது மீனவர்களுக்கு சிறை தண்டனை மற்றும் கோடிக் கணக்கில் அபராதம் விதிக்க துவங்கி உள்ளது. தினக்கூலிகளாக கடலுக்குச் செல்லும் மீனவர்களால் எவ்வாறு லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் அபராதங்களை செலுத்த முடியும்? எனவே, இந்த வெளிநாட்டு மீன்பிடித் தடைச்சட்டத்தை ரத்து செய்ய இலங்கை அரசுக்கு மத்திய அரசு அழுத்தம் கொடுப்பதுடன், நீண்ட காலமாக நடைபெறாமல் உள்ள இரு நாட்டு மீனவர் பேச்சுவார்த்தையை விரைந்து நடத்தி தீர்வு காண வேண்டும்” என்றார்.

தமிழக மீனவர்களுக்கு கோடிகளில் அபராதம் விதிக்கும் இலங்கை: என்ன செய்யப் போகிறது மத்திய அரசு? | Sri Lanka will impose crores of fines on TN fishermen: What is the central govt going to do? - hindutamil.in

Edited by பிழம்பு
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, பிழம்பு said:

இந்த வெளிநாட்டு மீன்பிடித் தடைச் சட்டத்தினை இலங்கை அரசு படிப்படியாக அமல்படுத்தி தற்போது மீனவர்களுக்கு சிறை தண்டனை மற்றும் கோடிக் கணக்கில் அபராதம் விதிக்க துவங்கி உள்ளது. தினக்கூலிகளாக கடலுக்குச் செல்லும் மீனவர்களால் எவ்வாறு லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் அபராதங்களை செலுத்த முடியும்? எனவே, இந்த வெளிநாட்டு மீன்பிடித் தடைச்சட்டத்தை ரத்து செய்ய இலங்கை அரசுக்கு மத்திய அரசு அழுத்தம் கொடுப்பதுடன், நீண்ட காலமாக நடைபெறாமல் உள்ள இரு நாட்டு மீனவர் பேச்சுவார்த்தையை விரைந்து நடத்தி தீர்வு காண வேண்டும்” என்றார்.

அப்ப இந்தக் கடற்கொள்ளையர்கள் திருந்த வாய்ப்பே இல்லை!

அடுத்தவன் வீட்டில் போய்த் திருடுறதுக்கு பேச்சுவார்த்தை நடத்தட்டாம். கேவலம் கெட்ட பிறவிகள்!

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

கொள்ளை அடிப்பதற்கு எதிரான தண்டனைகளை நீக்கி தமிழ்நாடு கடற்கொள்ளையர்களை சுதந்திரமாக இலங்கை தமிழர்கள் கடற்பரப்பில்கொள்ளையடிக்க விடவேண்டும் என்று  ஆசைபடுகின்றார்கள். தண்டணைகள் மேலும் கடுமையாக்கபட வேண்டும்

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 minutes ago, விளங்க நினைப்பவன் said:

கொள்ளை அடிப்பதற்கு எதிரான தண்டனைகளை நீக்கி தமிழ்நாடு கடற்கொள்ளையர்களை சுதந்திரமாக இலங்கை தமிழர்கள் கடற்பரப்பில்கொள்ளையடிக்க விடவேண்டும் என்று  ஆசைபடுகின்றார்கள். தண்டணைகள் மேலும் கடுமையாக்கபட வேண்டும்

இந்த உலகளவில் தடை செய்யப்பட்ட  bottom trawling.மீன் பிடி முறையை இலங்கை அரசுகூட தடை செய்ய முடியாது காரணம் பல சிங்கள முதலாளிகள் இந்த முறையாம் அதோடு இங்கிருந்து சண்டை முடிந்த பின் ஊரை அபிவிருத்தி செய்கிறம் போன ஓசி விசுகோத்து கூட்டமும் இதே முறை தானாம் கடைசியில் கள்ளன் பக்கத்து வீட்டுக்குள் அல்ல நம்ம வீட்டுக்குள் தான் .

Posted
6 minutes ago, பெருமாள் said:

எங்கிருந்து இந்த தகவல்களை பெற்றீர்கள்?

இலங்கை யில் bottom trawling முறையில் மீன் பிடிப்பது மிக குறைவு. அரிது என்று கூட சொல்ல முடியும்.  அங்கொன்று இங்கொன்றாக வேண்டுமானால் களவாக நடக்கலாம். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அழிவுகரமான  சட்டவிரோதமான மீன்பிடி முறைகள் மூலம் தமிழ்நாட்டு மீனவாகள் தங்கள்கடல் வளங்களையும் அழித்துமுடித்ததோடு தற்போது இலங்கை கடற்பரப்பில்  சட்டவிரோதமா சென்று  இலங்கை தமிழர்கள் வாழ்வாதாரத்தையும் அழிக்கின்றார்கள் என்பது பலரும் அறிந்ததே

  • கருத்துக்கள உறவுகள்
Posted
24 minutes ago, நிழலி said:

எங்கிருந்து இந்த தகவல்களை பெற்றீர்கள்?

இலங்கையில்  தடை செய்யப்பட்ட மீன்பிடி முறைகள்.....................இப்படி தேடி பாருங்கள் அத்துடன் இலங்கையில் bottom trawling என்று கூற மாட்டார்கள் அவ்வாறான மீன் பிடியை ரோலர் என்பார்கள் இயக்கம் இருக்கையில் இதே பிரச்சனை  வந்தது அப்போது சில கட்டு பாடுகளை சூசை கொண்டு வந்தார் அதற்கும் சூசையின் வீட்டுக்கு மண்ணள்ளி எறிந்து சாபம் போட்டார்கள் அந்த சாபம் போட்டதுகள் இப்ப வெளிநாட்டில் நன்றாக இருக்கிரார்ர்கள் நாடு நல்லதாக இருக்கணும் என்று நினைத்தவர் குடும்பம் ?...............

சிலர் இங்கிருந்து சொல்வார்கள் நாங்க ஊருக்கு போறோம் எங்கடை பழைய மயிலிட்டியை புனரமைக்கிறோம் என்றார்கள் உண்மையில் அந்த தீவில் ஒரு காலத்தில் மயிலிட்டி துறைமுகமே மீன்பிடியில் முதலாவதாய் இருந்த துறைமுகம் உங்களுக்கு தான் தெரியுமே என்  சொந்த பெயர் தெரியாமல் அந்த தீவு முழுக்க எனக்கு நண்பர்கள் உண்டென .

40 minutes ago, நிழலி said:

எங்கிருந்து இந்த தகவல்களை பெற்றீர்கள்?

https://www.google.com/search?q=இலங்கையில்++தடை+செய்யப்பட்ட+மீன்பிடி+முறைகள்&sca_esv=301b91059aa118e3&sca_upv=1&rlz=1C1CHBF_en-GBGB878GB878&biw=1920&bih=919&sxsrf=ADLYWILC-eM2SYH0zgGlUf1Ojh7mSKO91g%3A1726780461009&ei=LZTsZsAKk_3v9Q_P2Ir4Cg&ved=0ahUKEwiA1e6_9s-IAxWT_rsIHU-sAq8Q4dUDCA8&uact=5&oq=இலங்கையில்++தடை+செய்யப்பட்ட+மீன்பிடி+முறைகள்&gs_lp=Egxnd3Mtd2l6LXNlcnAieuCuh-CusuCumeCvjeCuleCviOCur-Cuv-CusuCvjSAg4K6k4K6f4K-IIOCumuCvhuCur-CvjeCur-CuquCvjeCuquCun-CvjeCunyDgrq7gr4Dgrqngr43grqrgrr_grp_grr8g4K6u4K-B4K6x4K-I4K6V4K6z4K-NSN9tUKcyWNNRcAJ4AJABAZgBb6ABsASqAQMyLjS4AQPIAQD4AQGYAgCgAgCYAwCIBgGSBwCgB_wM&sclient=gws-wiz-serp

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, பெருமாள் said:

இந்த உலகளவில் தடை செய்யப்பட்ட  bottom trawling.மீன் பிடி முறையை இலங்கை அரசுகூட தடை செய்ய முடியாது காரணம் பல சிங்கள முதலாளிகள் இந்த முறையாம் அதோடு இங்கிருந்து சண்டை முடிந்த பின் ஊரை அபிவிருத்தி செய்கிறம் போன ஓசி விசுகோத்து கூட்டமும் இதே முறை தானாம் கடைசியில் கள்ளன் பக்கத்து வீட்டுக்குள் அல்ல நம்ம வீட்டுக்குள் தான் .

இலங்கையில் வட கடலில் இது தாராளமாகவே நடைபெறுகிறது. 

பிழை எப்போதும் பிழையே. அது யார் செதாகினும். 

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, Kapithan said:

இலங்கையில் வட கடலில் இது தாராளமாகவே நடைபெறுகிறது. 

பிழை எப்போதும் பிழையே. அது யார் செதாகினும். 

இது ஒருவகை சூதாட்டம்?

பணமுள்ளவர்கள் அடுத்த அடுத்த கட்டங்களுக்கு செல்ல வசதியற்றவர்களும் வயிற்றுப்பாட்டுக்கு சிறிய அளவில் தொழில் செய்வோரும் பாதிக்கப்பட்டுக்கொண்டே இருப்பார்கள். 

இந்த பணமுதலைகள் பணத்தை தவிர வேறு எதனையும் கணக்கெடுக்கும் போவதில்லை. இதற்கு இனம் குணம் நாடு என்ற எதுவும் இல்லை. அரசு தண்டனைகளை மற்றும் சட்டங்களை இயற்றி வறிய மக்களுக்கான குறைந்த பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். 

இத்தண்டனை நல்ல விடயமே. ஆனால் கொடுத்த தண்டனைப்பணத்தை மீண்டும் எடுக்க இவர்கள்....????

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.