Jump to content

இலங்கையின் 9வது ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டார் அனுர குமார திஸாநாயக்க


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
இலங்கையின் 9வது ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டார் அனுர குமர திஸாநாயக்க - நேரலை

பட மூலாதாரம்,GETTY IMAGES

22 செப்டெம்பர் 2024, 01:56 GMT
புதுப்பிக்கப்பட்டது 16 நிமிடங்களுக்கு முன்னர்

தேசிய மக்கள் கட்சியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க ஜனாதிபதியாக தேர்தலில் வென்றுள்ளார். அவர் இந்தத் தேர்தலில் 57,40,179 வாக்குகளைப் பெற்றுள்ளார். அதன்படி, இலங்கையின் ஜனாதிபதியாக அநுர குமார பதவியேற்பார் என பிபிசி சிங்கள சேவை தெரிவிக்கிறது. இலங்கை தேர்தல் வரலாற்றில் முதன்முறையாக இந்தத் தேர்தலில்தான் விருப்ப வாக்குகள் எண்ணப்பட்டன.

தான் அதிபராவது குறித்து அநுர குமார தெரிவித்துள்ள செய்தியில், “நூற்றாண்டுகளாக நாம் கண்ட கனவு இறுதியில் இன்று நனவாகியுள்ளது. இந்தக் கனவு நனவாக உழைத்த பல்லாயிரக்கணக்கான மக்களின் முயற்சிகள் இன்று பலித்துள்ளது.”

அதற்காக உங்களுக்கு நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன். ஏனெனில், இது என்னுடைய முயற்சி மட்டுமல்ல, நம் அனைவருடைய கூட்டுப் பணியும்கூட. இந்த வெற்றி நம் எல்லோருக்குமானது.”

இந்த வெற்றிக்காக நாம் மட்டுமல்லாமல், பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் ரத்தம், கண்ணீர், வியர்வை மற்றும் தங்கள் உயிரையும்கூடத் தியாகம் செய்துள்ளனர். அவர்களின் இந்தத் தியாகங்கள் வீண்போகவில்லை. அவர்களின் தியாகங்கள் வரும் தலைமுறைகளுக்கு நினைவுகூரப்படும். இலங்கையின் வரலாறு மாற்றி எழுதப்பட்டுள்ளது.”

கனவை நனவாக்க, இந்த நிலத்திற்குப் புதிய தொடக்கம் தேவை. சிங்களர்கள், தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களின் ஒற்றுமை, புதிய யுகத்தின் தொடக்கமாக இருக்கும். இதன் அடிப்படையில்தான் மறுமலர்ச்சி தோன்றும். வாருங்கள், எல்லோரும் இதற்காகக் கைகோர்ப்போம்!” எனத் தெரிவித்துள்ளார்.

ரணில் என்ன சொன்னார்?

இதுகுறித்து ரணில் விக்ரமசிங்க வெளியிட்ட அறிக்கையில், ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் வழங்கிய ஆணையின்படி அநுர குமார திஸாநாயக்கவிடம் ஆட்சியை ஒப்படைக்க வேண்டும் எனவும் தனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கையில், இலங்கை எனும் அன்புக்குரிய குழந்தையை சவால்மிகு தொங்குபாலத்தின் ஊடாகத் தான் இதுவரை பாதுகாப்பாகக் கொண்டு வந்துள்ளதாகவும், தற்போதைய ஜனாதிபதி அந்தக் குழந்தையை இன்னும் பாதுகாப்பாக தொங்குபாலத்தின் ஊடாகக் கொண்டு வர முடியும் என நம்புவதாகவும் ரணில் அந்த தெரிவித்துள்ளார்.

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளில் எந்தவொரு வேட்பாளரும் 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெறாத நிலையில், இரண்டாவது விருப்பு வாக்குகளை எண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இலங்கை ஜனாதிபதி தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தொடக்கம் முதலே தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த அநுர குமார திஸாநாயக்க முன்னிலையில் உள்ளார். அவருக்கு 42.31% வாக்குகள் கிடைத்துள்ளது.

இரண்டாவது இடத்தில் உள்ள சஜித் பிரேமதாசவுக்கு 32.76% வாக்குகளும், மூன்றாவது இடத்தில் ரணில் விக்ரமசிங்கவுக்கு 17.27% வாக்குகளும் பதிவாகியுள்ளது

இதுவரை அறிவிக்கப்பட்ட முடிவுகளில் எந்த வேட்பாளரும் 50% வாக்குகளை தாண்டவில்லை.

இலங்கை ஜனாதிபதித் தேர்தல் வரலாற்றில் இரண்டாவது விருப்ப வாக்கை எண்ணுவது இதுவே முதல்முறையாகும்.

இரண்டாவது விருப்ப வாக்குகளை எண்ணும் நடைமுறையின்படி, ''அநுர குமார திஸாநாயக்க மற்றும் சஜித் பிரேமதாச தவிர மற்ற அனைத்து வேட்பாளர்களும் ஜனாதிபதி தேர்தல் போட்டியில் இருந்து நீக்கப்படுவார்கள்'' என தேர்தல் ஆணைக்குழு தலைவர் ரத்னநாயக்க கூறியுள்ளார்.

''இவ்வாறு போட்டியிலிருந்து நீக்கப்பட்ட ஏனைய வேட்பாளர்களின் இரண்டாவது மற்றும் மூன்றாவது விருப்ப வாக்குகள், போட்டியிலுள்ள வாக்காளர்களுக்கு சாதகமாக உள்ளதா என்பதை கணக்கிடப்படும்''

''22 தேர்தல் மாவட்டங்களிலும் தற்போது போட்டியிலுள்ள வேட்பாளர்களுக்கு சாதகமாக கிடைத்த வாக்குகள் எண்ணப்பட்டு கிடைக்கப் பெறும் விருப்ப வாக்குகள், ஏற்கனவே எண்ணப்பட்ட வாக்குகளுடன் சேர்த்து அதில் அதிக வாக்குகளை பெற்ற வேட்பாளர் ஜனாதிபதியாக அறிவிக்கப்படுவார்'' எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

'அநுர குமார வென்றதாக ஏற்கிறோம்'

தேசிய மக்கள் கட்சியின் அதிபர் வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க வென்றுவிட்டதாகக் கூறியுள்ள அக்கட்சியின் எம்.பி விஜிதா ஹேரத், அதனால் கட்சியினர் பதற்றமடையத் தேவையில்லை எனத் தெரிவித்துள்ளார்.

அக்கட்சியால் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்ட காணொளியில், இரண்டாவது மற்றும் மூன்றாவது விருப்ப வாக்குகள் எண்ணப்பட்டாலும், 50% வாக்குகள் இல்லாததால் விதிகளின்படி அநுர குமார திஸாநாயக்க வென்றுவிட்டதாக அவர் கூறியுள்ளார்.

இதனிடையே, அநுர குமார வென்றுவிட்டதாக தாங்கள் ஏற்றுக் கொள்வதாக சஜித் பிரேமதாசவின் கட்சியின் எம்.பி ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், ஜனநாயக ரீதியாக அநுரவின் வெற்றியை ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், சில வாக்கு எண்ணும் நிலையங்களில் தேர்தல் ஆணைக்குழு அறிவிப்புக்கு முன்னதாகவே விருப்ப வாக்குகளை எண்ணியதாகவும் அதுகுறித்து தேர்தல் ஆணைக்குழுவிடம் முறையிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அந்த நிலையங்களில் வாக்குகளை மீண்டும் எண்ண வலியுறுத்திய நிலையில், அதை ஆணைக்குழு ஏற்றுக்கொண்டதாக, பிபிசி தமிழின் இலங்கை செய்தியாளர் ரஞ்சன் அருண் பிரசாத் தகவல் தெரிவித்துள்ளார்.

வாக்கு எண்ணிக்கை நிலவரம்

இலங்கையில் 2022-ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு நடந்த முதல் ஜனாதிபதி தேர்தலில் மக்கள் வாக்களிக்க அதிக ஆர்வம் காட்டினர். வாக்குப்பதிவு நிறைவடைந்ததும், நேற்றிரவே இலங்கையில் உள்ள 22 தேர்தல் மாவட்டங்களில் உள்ள 1,703 வாக்கு எண்ணும் மையங்களில் வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது.

அநுர குமார திஸாநாயக்க, ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாச ஆகிய மூவருக்கும் இடையே மும்முனைப் போட்டி நிலவிய இந்த தேர்தலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்ட போதே மக்களின் ஆதரவு அநுர குமார திஸாநாயக்கவுக்கு அதிகம் இருந்தது புலப்பட்டது.

 

இலங்கை ஜனாதிபதி தேர்தல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

வாக்கு எண்ணிக்கை நிலவரம்

  • அநுர குமார திஸாநாயக்க - 56,34,915 (42.31%)
  • சஜித் பிரேமதாச - 43,63,035 (32.76%)
  • ரணில் விக்ரமசிங்க -22,99,767 (17.27%)

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் ஒருவர் வெற்றி பெற, ஒட்டுமொத்தமான பதிவான வாக்குகளில் 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற வேண்டும். தொடக்கத்தில் 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றிருந்த அநுர குமார திஸாநாயக்கவின் வாக்கு சதவீதம் அடுத்தடுத்து தொடர்ச்சியாக குறைந்தது.

அதேநேரத்தில், சஜித் பிரேமதாசவின் வாக்கு சதவீதம் தொடர்ச்சியாக அதிகரித்தது. தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மூன்றாவது இடத்தில் தொடர்கிறார்.

நண்பகல் 12 மணி வரை ஊரடங்கு

வாக்குப்பதிவு நாளான நேற்று (செப்டம்பர் 21) இரவு 10 மணி முதல் இன்று (செப்டம்பர் 22) காலை 6 மணி வரை இலங்கை முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமல்படுத்தப்படுவதாக போலிஸ் தலைமையகம் அறிவித்திருந்தது.

பொது பாதுகாப்பு சட்டத்தில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாக ஜனாதிபதிக்கு வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானிக்கு அமைய ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதாக போலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

நாட்டில் தற்போது அமைதியான சூழல் நிலவுகின்ற போதிலும், பொதுமக்களின் பாதுகாப்பு கருதி ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதுடன், ஊரடங்கு சட்டம் அமலில் இருக்கும் நேரத்தில் வீட்டிலேயே நேரத்தைச் செலவிடுமாறு போலிசார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.

வாக்கு எண்ணிக்கை காலையிலும் தொடர்ந்த நிலையில் இலங்கை முழுவதும் இன்று நண்பகல் 12 மணி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

 

இலங்கை ஜனாதிபதி தேர்தல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஜனாதிபதி தேர்தலில் 38 பேர் போட்டி

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட 39 வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்தனர். இவர்களில் ஒருவர் இறந்துவிட்டார். ஆகவே, தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த அநுர குமார திஸாநாயக்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷேவின் மகன் நாமல் ராஜபக்ஷ, முன்னாள் ராணுவத் தளபதி சரத் பொன்செக, தமிழர்களின் பொது வேட்பாளர் என்ற பெயரில் பா.அரியநேத்திரன் உள்ளிட்ட 38 பேர் களத்தில் இருந்தனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

Edited by ஏராளன்
மா
Link to comment
Share on other sites

  • ஏராளன் changed the title to இலங்கையின் 9வது ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டார் அனுர குமார திஸாநாயக்க
  • கருத்துக்கள உறவுகள்

அநுரவின் வெற்றி பன்மைத்துவம் மற்றும் சமூகநீதியை உள்ளடக்கிய புதிய இலங்கைக்கான ஆரம்பமாக அமையும் - மனோகணேசன் 

Published By: VISHNU   22 SEP, 2024 | 07:23 PM

image

(நா.தனுஜா)

அநுரகுமார திஸாநாயக்கவின் வெற்றி பன்மைத்துவம், சமூகநீதி ஆகிய கொள்கைகளை உள்ளடக்கிய புதிய இலங்கைக்கான ஆரம்பமாக அமையும் என தமிழ் முற்போக்குக்கூட்டணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மனோகணேசன் நம்பிக்கை வெளியிட்டிருக்கிறார்.

நாட்டின் ஒன்பதாவது ஜனாதிபதித்தேர்தலின் முதலாவது வாக்குகள் எண்ணப்பட்டு வெளியான முடிவுகளின் பிரகாரம் தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் இருந்த வேளையில், அவரது வெற்றிக்கு வாழ்த்துக்கூறி தனது உத்தியோகபூர்வ 'எக்ஸ்' தளப்பக்கத்தில் பதிவொன்றைச் செய்த மனோகணேசன், அப்பதிவில் மேலும் கூறியிருப்பதாவது:

'மக்களின் ஆணையைப் பெற்றுக்கொண்ட அநுரகுமார திஸாநாயக்கவுக்கு வாழ்த்துக்கள். அதேபோன்று சஜித் பிரேமதாஸவின் வெற்றிக்காக நாம் கடுமையாகப் பணியாற்றிய மத்திய, மேல், சப்ரகமுவ, ஊடக மாகாணங்களைச் சேர்ந்த வாக்காளர்களுக்கு நாம் நன்றி கூறுகின்றோம். ஜனநாயக செயன்முறை வெளிப்பட்டிருக்கிறது. அநுரகுமார திஸாநாயக்கவின் இந்த வெற்றி பன்மைத்துவம், சமூகநீதி ஆகிய கொள்கைகளை உள்ளடக்கிய புதிய இலங்கைக்கான ஆரம்பமாக அமையும் என நம்புகிறேன்' எனத் தெரிவித்திருக்கிறார்.

https://www.virakesari.lk/article/194551

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் 9 ஆவது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியாக அநுரகுமார திசாநாயக்க தெரிவு

Published By: VISHNU   22 SEP, 2024 | 08:46 PM

image

நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் விருப்பு வாக்கின் அடிப்படையில் இலங்கையின் 9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அநுரகுமார தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இதனை தேர்தல்கள் ஆணைக்குழு உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

ஜனாதிபதி தேர்தல் வாக்குகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர்  அனுரகுமார திஸாநாயக்க 5,634,915 (42.31%) வாக்குகளைப் பெற்று முன்னிலையில் இருந்தார்.

இரண்டாவது இடத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ 4,363,035 ( 32.76% ) வாக்குகளைப் பெற்று 2 ஆவது இடத்தில் இருந்தார்.

ஜனாதிபதியும் சுயேட்சை வேட்பாளருமான ரணில் விக்கிரமசிங்க 2,299,767 ( 17.27%) வாக்குகளைப் பெற்று 3 ஆம் இடத்தில் இருந்தார்.

இந்நிலையில், எவரும் 50 சதவீதமான வாக்குகளைப் பெறாத நிலையில், விருப்பு வாக்கின் அடிப்படையில் ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான நிலை ஏற்பட்டது.

இந்த விருப்பு வாக்கின் அடிப்படையில் 22 தேர்தல் மாவட்டங்களை அடிப்படையாக வைத்து விருப்பு வாக்கு கணக்கெடுப்பு இடம்பெற்று இறுதியில் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவு செய்யப்பட்டார்.

இரண்டாம் விருப்பு வாக்கில் அகில இலங்கை ரீதியாக சஜித் பிரேமதாஸவுக்கு 167,867 வாக்குகளும் அநுரகுமார திஸாநாயக்கவுக்கு 105, 264 வாக்குகளும் கிடைத்தன.

இறுதியில் 5,634,915 முதல் சுற்று வாக்குகளுடன் 105,183 விருப்பு வாக்குகளை சேர்த்து மொத்தமாக 5,740,098 (55.87%) வாக்குகளைப் பெற்று அநுரகுமார திஸாநாயக்க புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.

சஜித் பிரேமதாஸ 4,363,035 முதல் சுற்றுவாக்குகளுடன் 170,867 விருப்பு வாக்குகளை சேர்த்து மொத்தமாக 4,533,902 (44.13% ) வாக்குகளைப் பெற்றார்.

https://www.virakesari.lk/article/194554

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை வரலாற்றை திருப்பி போட்ட தேர்தல் முடிவுகள்! போராடி வெற்றி வாகை சூடிய அநுர தரப்பு

நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் வரலாற்றில் இதுவரை யாரும் எதிர்பாரா விதமாக தேசிய மக்கள் சக்தி கட்சியின் சார்பில் போட்டியிட்ட அநுர குமார திஸாநாயக்க வெற்றிபெற்றுள்ளார்.

இதுவரை நாட்களிலும் அரச தரப்பு மற்றும் எதிர்தரப்பில் இருந்து போட்டியிட்டு பலராலும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு வேட்பாளர் வெற்றி பெற்று வந்திருந்த நிலையில் தற்போது முதன்முறையாக யாரும் எதிர்பாரா விதமாக அநுரவின் இந்த வெற்றி பதிவாகியிருக்கின்றது.

இலங்கை மாத்திரமல்லாமல் உலக நாடுகளும் வியந்து நோக்கும் அளவுக்கு இந்த தேர்தல் முடிவு அமைந்துள்ளது.

மாற்றத்தை நோக்கிய பயணம்

மிக நேர்த்தியான ஒழுங்கமைப்பு, திட்டமிடல் போன்றவை அநுரவின் வெற்றிக்கு வழிவகுத்திருக்கின்றது.  இதற்கு முன்னரான நாட்களில் பரம்பரையாக நாங்கள் இந்த கட்சிக்கு ஆதரவு எனவே இந்த முறையும் அதே கட்சிக்குத் தான் வாக்களிப்போம் என்ற மரபு மாற்றமடைந்திருந்ததை கண்கூடாக காண முடிந்துள்ளது இந்த தேர்தலில். 

குறிப்பாக மாற்றத்தை நோக்கிய அநுரவின் பயணம் என்ற கொள்கை நிறைவேறியுள்ளது என்று கூட கூறலாம். 

இலங்கை வரலாற்றை திருப்பி போட்ட தேர்தல் முடிவுகள்! போராடி வெற்றி வாகை சூடிய அநுர தரப்பு | Sri Lanka New President Anura

இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரமுள்ள  ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள  முதியன்சேலாகே அநுர குமார திசாநாயக்க 1968 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 24 ஆம் திகதி இலங்கையின் வடமத்திய மாகாணத்தில் அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள தம்புதேகம கிராமத்தில் பிறந்தார்.

அவரது தந்தை ஒரு தொழிலாளி அவரது தாய் ஒரு இல்லத்தரசி. திசாநாயக்க, தம்புத்தேகம காமினி மகா வித்தியாலயம் மற்றும் தம்புதேகம மத்திய கல்லூரியில் தனது கல்வியைப் பெற்று, கல்லூரியிலிருந்து பல்கலைக்கழக பிரவேசத்தைப் பெற்ற முதல் மாணவராக அவர் இருந்திருக்கின்றார். 

பள்ளிப் பருவத்திலிருந்தே  மக்கள் விடுதலை முன்னணியின் செயற்பாடுகளால் ஈர்க்கப்பட்டு குறித்த அணியில் இணைந்திருந்த  அநுர குமார, 1987இல் ஜே.வி.பி.யில் இணைந்து, மாணவர் அரசியலில் தீவிரமாக ஈடுபட்டார்.

இலங்கை வரலாற்றை திருப்பி போட்ட தேர்தல் முடிவுகள்! போராடி வெற்றி வாகை சூடிய அநுர தரப்பு | Sri Lanka New President Anura

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் நுழைந்த அவர் சில மாதங்களுக்குப் பின் அச்சுறுத்தல் காரணமாக வெளியேறினார். ஒரு வருடம் கழித்து 1992 இல் களனி பல்கலைக்கழகத்திற்கு மாற்றப்பட்டார். பின் 1995 இல் பௌதீக விஞ்ஞானத்தில் இளங்கலை பட்டம் பெற்றதோடு அதே ஆண்டில், அவர் சோசலிச மாணவர் சங்கத்தின் தேசிய அமைப்பாளராகவும் ஜேவிபியின் மத்திய செயற்குழுவிலும் நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், ஜேவிபி கட்சியின் தலைவர்  சோமவன்ச அமரசிங்கவின் கீழ் பிரதான அரசியலில் மீண்டும் பிரவேசித்த ஜே.வி.பி, 1994 இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் சந்திரிகா குமாரதுங்கவை ஆதரித்தது, இருப்பினும் விரைவில் குமாரதுங்க நிர்வாகத்தை கடுமையாக விமர்சித்தது.

2000 ஆண்டு  நாடாளுமன்றத்திற்கு தெரிவான அவர், இன்று வரை எம்.பியாக இருக்கிறார். 2004 இல் குருணாகல் மாவட்டத்தில் போட்டியிட்டு அதிக விருப்பு வாக்குகளுடன் நாடாளுமன்றத்துக்கு தெரிவானார்.

இலங்கை வரலாற்றை திருப்பி போட்ட தேர்தல் முடிவுகள்! போராடி வெற்றி வாகை சூடிய அநுர தரப்பு | Sri Lanka New President Anura

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் கூட்டணி அரசாங்கத்தில் , விவசாய அமைச்சராக 2004 முதல் 2005 வரை பதவி வகித்தார். 2005இல் சந்திரிகா அரசில் இருந்து விலகினார்.

2008 இல் ஜே.வி.பியின் நாடாளுமன்ற குழு தலைவராக நியமிக்கப்பட்டார். 2010 இல் தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்துக்கு தெரிவானார். 2014 ஜனவரி 2 ஆம் திகதி ஜே.வி.பியின் தலைவராக நியமிக்கப்பட்டார் அநுர குமார.

அவர் பதவியேற்ற பின்னர் மாகாணசபைத் தேர்தலில் ஜே.வி.பியின் வாக்கு வங்கி அதிகரித்தது. 2015இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். எதிர்க்கட்சி பிரதம கொறடாவாகவும் செயற்பட்டார்.

2019 ஆகஸ்ட் 18 ஆம் திகதி தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக பெயரிடப்பட்டார்.

ஜனாதிபதி தேர்தலும் ஜே.வி.பியும்

1982ஆம் ஆண்டு நடந்த முதலாவது ஜனாதிபதி தேர்தலில் ஜேவிபி சார்பில் அதன் நிறுவுனரான றோகண விஜேவீர போட்டியிட்டு, 273,428 வாக்குகளைப் பெற்றிருந்தார். அதன் பின்னர் 1999 ஜனாதிபதி தேர்தலில் ஜேவிபி சார்பில் நந்தன குணதிலக போட்டியிட்டு, 344,173 வாக்குகளைப் பெற்றிருந்தார்.

2010 இல் பொது வேட்பாளராக களமிறங்கிய பொன்சேகாவுக்கு ஆதரவு வழங்கியது. 2015 இல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவில்லை. எனினும், மகிந்த ராஜபக்சவுக்கு வாக்களிக்ககூடாது என பிரசாரம் முன்னெடுத்தது.

இலங்கை வரலாற்றை திருப்பி போட்ட தேர்தல் முடிவுகள்! போராடி வெற்றி வாகை சூடிய அநுர தரப்பு | Sri Lanka New President Anura

2019இல் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட அநுரகுமார திசாநாயக்க மூன்று வீத வாக்குகளை மட்டும் சுமார் நான்கு லட்சத்து எண்பத்து ஐயாயிரம் அளவிலான வாக்குகளை மட்டும் பெற்று மூன்றாவது இடத்தைப் பெற்றிருந்தார். அதன் பின்னரான நாடாளுமன்றத் தேர்தலிலும் 3 எம்பிக்களை மட்டுமே அவர் தரப்பால் நாடாளுமன்றத்திற்கு கொண்டு வரமுடிந்தது. 

அதனையடுத்து, இடம்பெற்ற பொருளாதார நெருக்கடி காலமும், அதனோடான போராட்டக் காலமும் இன்றைய அநுரவின் வெற்றிக்கு வித்திட்ட  வித்து என்று கூட கூறலாம். 

கிட்டத்தட்ட, 2019ஆம் ஆண்டு இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல் எப்படி கோட்டாபயவின் வெற்றிக்கு வழிவகுத்ததோ, அப்படியொரு  நிலையையே அநுரவின் வெற்றிக்கு அரகலய காலம் வழிவகுத்துக் கொடுத்திருக்கின்றது என்பதும் மறுக்க முடியாத ஒன்று. 

குறிப்பாக, இம்முறை முதன்முறையாக   வாக்களிக்கத் தகுதிப்பெற்ற இளையோர்களின்  முதன்நிலை தெரிவாக அநுர இருந்திருக்கின்றார் என்பதையும் ஏற்றுக் கொள்ள வேண்டியதாக இருக்கின்றது.  

அத்தோடு, ரணில் இழைத்த தவறுகளும் கூட அநுரவின் வெற்றிக்கு  வழி ஏற்படுத்திக் கொடுத்தன. குறிப்பாக அரகலயவின் போது ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான தாக்குதல் மற்றும் கைதுகள், ஒடுக்குறைகள் போன்றவை ரணில் மீதான அதிருப்திக்கும், அநுர மீதான ஈர்ப்புக்கும் காரணமாகியிருந்தன. 

இலங்கை வரலாற்றை திருப்பி போட்ட தேர்தல் முடிவுகள்! போராடி வெற்றி வாகை சூடிய அநுர தரப்பு | Sri Lanka New President Anura

அத்தோடு, அரச ஊழியர்கள் சம்பள பிரச்சினையின் போதும் போராட்டங்களின் போதும் அதனை கையாள்வதற்கு ரணில் மேற்கொண்ட நடவடிக்கைகள் ரணில் மீதான அரச ஊழியர்களின் வெறுப்புக்கு காரணமாகியதோடு, அது அநுரவை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது.

எது எவ்வாறாயினும் மாற்றத்தை விரும்பிய பலருக்கு அநுரவின் வெற்றி சிறிய அல்ல மிகப்பெரிய மாற்றமாகவே அமைந்துள்ளது.

https://tamilwin.com/article/sri-lanka-new-president-anura-1726963033

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டுக்காக கட்டம் கட்டமாக அனைவரும் ஒன்றிணைய வேண்டும் - புதிய ஜனாதிபதி அநுர வேண்டுகோள்!

Published By: VISHNU   22 SEP, 2024 | 09:20 PM

image

ஜனாதிபதி தேர்தல் இடம்பெற்றமை முதல் வெற்றியாகும் என புதிய ஜனாதிபதியாகத் தெரிவாகியுள்ள அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

தேர்தல் ஆணைக்குழுவில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சவால்களைத் தனி நபராலும், அணியாலும் வெற்றி கொள்ள முடியாது. நாட்டுக்காகக் கட்டம் கட்டமாக அனைவரும் ஒன்றிணைய வேண்டும், அதற்கான  பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்போம் என்றும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டார்.

எனக்கு ஆதரவளித்த மற்றும் ஆதரவளிக்காத அனைத்து பிரஜைகளையும் இலங்கையர் என்ற அடிப்படையில் பேதமற்ற வகையில் ஒன்றிணைத்து செயற்படுவேன் என்றும் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/194556

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அநுரா சனாதிபதி ஆனதும் கோத்தா சனாதிபதி ஆவதும் தமிழர்களின் அரசியல் எதிர்காலத்துக்கு ஒன்றுதான்.. பொருளாதாரத்தில் ஏதும் மாற்றம் வரலாம் ஆனால் அரசியலில் தமிழர்களுக்கு எந்த அநுகூலமான தீர்வும் கிடைக்காது.. இருக்கும் மாகாண சபைகளும் இல்லாமல் போகுதோ தெரியா..
    • மக்களை கவனித்தால் அவர்களை உங்கள் சார்பாக ஈர்க்க முடியும். ஆனால் எத்தனை பேரை உங்களால் கவனிக்க முடியும். போட்டியில் வெற்றி பெறுவதற்கு ஆகும் செலவை ஈடுசெய்ய முடியுமா? நான் ஆட்டோ ஒன்றில் ஒரு அலுவலாக சென்றசமயம் ஓட்டுனருடன் நாட்டு நிலவரம் பற்றி பேச்சு கொடுத்தேன். அவர் ஒரு முன்னாள் போலிஸ் கமாண்டோ. சிறப்புப்பிரிவில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். அவர் அநுர குமா வெற்றி பெறுவார் என கூறினார். அநுர குமாரவிற்கு இயல்பான ஆதரவு கிடைத்தது. நாமல் போன்றோர் ஆட்களுக்கு வாகனம் விட்டு ஏற்றி இறக்கி, உணவு, இதர வசதிகள் கொடுத்து கவனித்து, காசும் கொடுத்து கூட்டங்களுக்கு கூப்பிடப்படுவதாய் சொன்னார். இல்லாவிட்டால் அவர்கள் கூட்டங்களுக்கு ஆட்கள் செல்ல மாட்டார்கள் என கூறினார்.  பசி வந்தால் பத்தும் பறந்து போகும். அது சிங்களம், தமிழ், முஸ்லீம் என வேறுபாடு பார்ப்பது இல்லை.   நாட்டு நிலவரம் அப்படி. 
    • இப்படியா? 2009 இற்கு பின்னர் ஒரு தடவையே தமிழர்கள் ஆதரவு வழங்கிய வேட்பாளர் வென்றுள்ளார்.  
    • யார் இந்த அநுர குமார திஸாநாயக்க? தமிழர் விவகாரங்களில் அவரது நிலைப்பாடு என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அநுர குமார திஸாநாயக்க 22 செப்டெம்பர் 2024, 13:20 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் அநுர குமார திஸாநாயக்க 2024 ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்று இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதியாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள்ளார். அவர் யார், அவரது பின்னணி என்ன? அநுராதபுரம் மாவட்ட தம்புத்தேகம பகுதியில் 1968ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 24ஆம் தேதி அநுர குமார திஸாநாயக்க பிறந்தார். தம்புத்தேகம கமினி மகா வித்யாலயாவிலும் தம்புத்தேகம மத்திய கல்லூரியிலும் படித்த அநுர குமார திஸாநாயக்க, அங்கிருந்து பேராதனை பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார்.   பாடசாலை காலத்தில் இருந்தே அரசியலில் அநுர குமாரவுக்கு அதிக ஆர்வம் இருந்தது. தனது 19வது வயதில் இலங்கையின் மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட் இடதுசாரிக் கட்சியான ஜனதா விமுக்தி பெரமுனவில் இணைந்தார். ஒரு கட்டத்தில் பேராதனை பல்கலைக்கழகத்தில் இருந்து விலகி, களனி பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். கடந்த 1995ஆம் ஆண்டு வாக்கில் அவரை சோஷலிச மாணவர் அமைப்பின் தேசிய அமைப்பாளராக ஜே.வி.பி. நியமித்தது. அக்கட்சியின் மத்திய பணிக் குழுவிலும் அவருக்கு இடமளிக்கப்பட்டது. கடந்த 2000ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஜனதா விமுக்தி பெரமுனவின் தேசிய பட்டியல் மூலமாக நாடாளுமன்றத்தில் நுழைந்தார் அநுர குமார. 2001ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு மீண்டும் நாடாளுமன்றத்திற்கு நியமிக்கப்பட்டார்.   கடந்த 2004ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஜே.வி.பி., ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது. 39 இடங்கள் அக்கட்சிக்குக் கிடைத்தன. குருநாகல் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிட்ட அநுர குமார திஸாநாயக்க, 1,53,868 வாக்குகளை பெற்று நாடாளுமன்றத்திற்குள் பிரவேசித்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஜே.வி.பியும் இணைந்து ஆட்சி அமைத்தன. இந்த அரசாங்கத்தில் விவசாயம், கால்நடைகள், காணி, நீர்பாசனத் துறை அமைச்சராக அநுர குமார பதவியேற்றார். ஆனால், சுனாமிக்குப் பிறகு, வடக்கிலும் கிழக்கிலும் புலிகளுடன் இணைந்து நிவாரணப் பணிகளை மேற்கொள்ள சந்திரிகா குமாரதுங்க அரசு முடிவு செய்தபோது, அதை எதிர்த்து ஜே.வி.பி. அமைச்சர்கள் அனைவரும் பதவி விலகினர். அநுரவும் பதவி விலகினார்.   கடந்த தேர்தலில் மூன்றாம் இடம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அநுரவுக்கு ஆதரவாக பல்கலைக்கழக மாணவர்கள், அரச ஊழியர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் திரண்டனர் கடந்த 2014ஆம் ஆண்டு நடந்த ஜே.வி.பியின் தேசிய மாநாட்டில், அக்கட்சியின் புதிய தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார் அநுர குமார. அதைத் தொடர்ந்து, மக்கள் விடுதலை முன்னணி தலைமையில் 2019ஆம் ஆண்டு தேசிய மக்கள் சக்தி உருவாக்கப்பட்டது. தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தி 2019ஆம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க முதல் தடவையாகப் போட்டியிட்டார். வெறும் சுமார் 3 சதவீத வாக்குகளுடன் மூன்றாவது இடத்தையே பிடித்தார் அவர். கடந்த 2019ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஸ தேர்வான நிலையில், ஊழலுக்கு எதிராக அநுர குமார திஸாநாயக்க தொடர்ச்சியாகக் குரல் எழுப்பி வந்தார். இதனால், அவருக்கான ஆதரவுத்தளம் வலுவடைய ஆரம்பித்தது. மேலும் பொருளாதார நெருக்கடியின்போது நடந்த போராட்டங்களிலும் அநுர குமார முன்னணியில் இருந்தார். இந்த நிலையில், 2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலிலும் அநுர குமார திஸாநாயக்க போட்டியிடுவதாக அறிவித்தார். அவருக்கு ஆதரவாக பல்கலைக்கழக மாணவர்கள், அரச ஊழியர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் திரண்டனர்.   வன்முறைகளுக்கு மன்னிப்பு பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க முதல் தடவையாகப் போட்டியிட்டார் அநுர குமார திஸாநாயக்கவின் தேர்தல் பிரசாரக் கூட்டங்களில், கடந்த காலங்களோடு ஒப்பிட்டால் பெருமளவு கூட்டம் திரண்டது. கடந்த தேர்தலில் வெறும் 3 சதவீத வாக்குகளைப் பெற்ற ஒருவர், 2024 தேர்தலில் ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டிருப்பது பலரது புருவங்களையும் உயர்த்தியுள்ளது. தற்போது அவர் தேசிய மக்கள் சக்தி கூட்டணியின் சார்பில் போட்டியிட்டிருந்தாலும் அவர் தலைமை வகிக்கும் ஜனதா விமுக்தி பெரமுனவின் கடந்த காலம் வன்முறைகளால் நிறைந்தது. கடந்த 1971இல் பண்டாரநாயக அரசுக்கு எதிராக ஜே.வி.பி. நடத்திய கிளர்ச்சியில் ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்தனர். அதேபோல, 1987 - 89 காலப் பகுதியில் இந்தியா - இலங்கை அமைதி ஒப்பந்தத்திற்கு எதிராக ஜே.வி.பி. நடத்திய கலகத்திலும் ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்தனர். ஆனால், 2014இல் ஜே.வி.பியின் தலைவரான பிறகு பிபிசிக்கு அளித்த பேட்டியில், அக்கட்சியின் கடந்த கால வன்முறைகளுக்காக மன்னிப்பு கோரினார் அநுர. அக்கட்சி இலங்கையில் நிகழ்த்திய வன்முறைகளுக்கு மன்னிப்பு கோரியது அதுவே முதலும் கடைசியுமாக இருந்தது. தமிழர் பிரச்னையில் நிலைப்பாடு என்ன? இந்தியா - இலங்கை ஒப்பந்தத்தை அடுத்து மாகாணங்களுக்கு கூடுதல் அதிகாரத்தை அளிப்பதற்காக 13வது சட்டத் திருத்தம் இலங்கையின் அரசியல் யாப்பில் மேற்கொள்ளப்பட்டது. நிலம், காவல் மற்றும் நிதி தொடர்பாகக் கூடுதல் அதிகாரத்தை இந்த சட்டத் திருத்தம் மாகாண சபைகளுக்கு அளிக்கிறது. ஆனால், இதுவரை மாகாண சபைகளுக்குக் கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்படவில்லை. இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வடக்கு - கிழக்கு பகுதிகளுக்குப் பயணம் செய்த அநுர குமார, யாழ்ப்பாணத்தில் பேசினார். அப்போது, "நான் 13வது சட்டத் திருத்தத்தைச் செயல்படுத்துகிறேன். பதிலுக்கு எனக்கு வாக்களியுங்கள் என்று கேட்க நான் வரவில்லை. கூட்டாட்சி முறையை அளிக்கிறேன், எனக்கு வாக்களியுங்கள் எனக் கேட்க வரவில்லை" என்றார். இது அந்தத் தருணத்தில் தமிழர் தரப்புக்கு ஏமாற்றத்தையே அளித்தது. ஆனால், தேர்தலுக்கு நெருக்கமாக அநுர குமார தனது நிலைப்பாட்டை சற்று மாற்றிக்கொண்டார். ஜூன் மாதத்தில் மீண்டும் யாழ்ப்பாணத்திற்குப் பயணம் செய்து தமிழ் அரசியல் தலைவர்களைச் சந்தித்துப் பேசினார் அநுர. அந்த சந்திப்பிற்குப் பிறகு பேசிய அவர், மாகாண சபைகள் தொடர்ந்து செயல்படும் எனக் கூறினார். ஆனால், மாகாண சபைகளுக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்குவது பற்றி அவர் ஏதும் தெரிவிக்கவில்லை. மேலும், ஜனதா விமுக்தி பெரமுனவை பொறுத்தவரை, அது நீண்ட காலமாகவே அதிகாரப் பகிர்வை எதிர்த்து வருகிறது. ஆனால், தற்போதைய புதிய சூழலில் அக்கட்சி என்ன செய்யும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.   அதானி திட்டத்திற்கு எதிர்ப்பு பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அநுர குமார திஸாநாயக்கவின் பிரசார கூட்டத்திற்கு வந்திருந்த மக்கள் இரு நாட்டு உறவுகளைப் பொறுத்தவரை, இந்தியா - சீனா ஆகிய இரு நாடுகளுமே இலங்கைக்கு மிக முக்கியமானவை. இரு நாடுகளுமே இலங்கைக்கு மிகப்பெரிய அளவில் கடனுதவிகளைச் செய்திருக்கின்றன. ஜே.வி.பி ஒரு இடதுசாரி கட்சியாக இருப்பதால், இயல்பாகவே சீனாவுக்கு நெருக்கமாக இருக்கும் என்ற எண்ணம் இருக்கிறது. மேலும், மாகாணங்களுக்கு கூடுதல் அதிகாரத்தை வலியுறுத்தும் இந்திய - இலங்கை ஒப்பந்தத்தை தொடர்ந்து எதிர்த்து வருகிறது ஜே.வி.பி. இந்த ஒப்பந்தம் இலங்கை மீது இந்தியாவால் திணிக்கப்பட்டதாகவும் கருதுகிறது. செப்டம்பர் 16ஆம் தேதியன்று ஒரு அரசியல் விவாத நிகழ்ச்சியில் பங்கேற்ற அநுர, அதானி குழும முதலீட்டில் உருவாகும் காற்றாலை மின் திட்டத்தை ரத்து செய்வோம் என்று கூறினார். அந்தத் திட்டம் இலங்கையின் இறையாண்மைக்கு எதிரானது என்றும் கூறினார். ஆனால், இந்தத் திட்டத்தில் கூடுதல் விலைக்கு மின்சாரம் இலங்கைக்கு விற்கப்படும் என்பதாலேயே அதற்கு எதிராக இருப்பதாக அவர் தெரிவித்தார். ஆனால் பிராந்தியத்தில் உள்ள எந்த சக்திகளையும் பகைத்துக்கொள்ள மாட்டோம் என அக்கட்சியினர் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர். அநுர குமாரவும் இந்தியாவுக்கு வந்து சென்றார். ஆகவே, வரும் நாட்களில் இந்தியா தொடர்பான, அவரது அணுகுமுறை என்னவாக இருக்கும் என்பது தெரிய வரும். அநுரவை பொறுத்தவரை, ஒரு கடினமான உழைப்பாளி என்பதில் சந்தேகமில்லை. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெறும் 3 இடங்களைப் பிடித்த கட்சியின் சார்பில் போட்டியிட்டு ஜனாதிபதியாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இலங்கை தற்போது எதிர்கொண்டு வரும் பிரச்னைகளையும் இதே தீவிரத்தோடு எதிர்கொள்வாரா என்பதைப் பார்க்க வேண்டும். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cg4q542l6zxo
    • பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சஜித் பிரேமதாஸவின் அரசியல் பயணம் கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ், இலங்கை 53 நிமிடங்களுக்கு முன்னர் தந்தையின் படுகொலைக்குப் பிறகு அரசியலில் நுழைந்த சஜித் பிரேமதாஸ, இலங்கை அரசியலின் ஏற்ற இறக்கங்களில் 30 ஆண்டுகளாகப் பயணம் செய்தவர். இலங்கை ஜனாதிபதி தேர்தலில் முக்கியப் போட்டியாளர்களில் ஒருவராக இருந்த சஜித் பிரேமதாஸ, நாடாளுமன்ற உறுப்பினர், அமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் எனப் பல பதவிகளை வகித்தவர். கடந்த 2019ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷவிடம் தோல்வியடைந்த சஜித், இந்த முறை கூடுதல் நம்பிக்கையுடன் களம் இறங்கி இருந்தாலும், அவரால் வெற்றிபெற முடியவில்லை. சஜித் பிரேமதாசவின் தோல்விக்கு என்ன காரணம்? "திஸாநாயக்க ஜேவிபிக்கு கிடைத்த வெற்றியாகப் பார்க்கக்கூடாது. இலங்கையின் பாரம்பரிய, பழைய அரசியல் கட்சிகள் மீது, பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து மக்களிடையே ஒரு வெறுப்பு இருக்கிறது. அப்படியிருக்கும் சூழலில், அநுர குமார ஒரு நல்ல தேர்வாகத் தெரிகிறது. ஆகையால் அவருக்கு வாக்களிக்கிறார்கள். அதேநேரம், சஜித்தை பொறுத்தவரை, அவர் ஐக்கிய தேசிய கட்சியை விட்டு வெளியே வந்து, ஒரு புதிய கட்சியை உருவாக்கியிருந்தாலும், பழைய ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து வெளியே வந்தவர்கள்தான் இந்தப் புதிய கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியிலும் இருக்கிறார்கள். அதன் காரணமாகத்தான் இந்தக் கட்சியும் ஒரு பழைய அரசியல் சக்தியாகவே மக்கள் மத்தியில் பார்க்கப்படுகிறது. ஆகையால், மக்கள் அவரைப் பெரியளவில் தேர்வு செய்யவில்லை,” என்கிறார் வீரகத்தி தனபாலசிங்கம். யார் இந்த சஜித் பிரேமதாஸ? பிற்காலத்தில் இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட இரண்டாவது ஜனாதிபதியாகப் பதவியேற்ற ரணசிங்க பிரேமதாஸ, ஒரு நாடாளுமன்ற உறுப்பினராகவும் அரசின் தலைமைக் கொறடாவாகவும் இருந்த காலத்தில், அவருக்கும் ஹேமா விக்ரமதுங்கேவுக்கும் 1967 செப்டம்பர் 12ஆம் தேதி பிறந்தார் சஜித் பிரேமதாஸ. செயின்ட் தாமஸ் பிரிபரேட்டரி பள்ளி, கொழும்புவில் உள்ள ராயல் கல்லூரி, லண்டனில் உள்ள மில் ஹில் ஸ்கூல் ஆகியவற்றில் படித்தார் சஜித். இவருக்குப் பத்து வயதாக இருக்கும்போதே, இவருடைய தந்தை ரணசிங்க பிரேமதாஸ, இலங்கையின் பிரதமராகிவிட்டார். இருந்தாலும் சஜித்தின் படிப்பு தொடர்ந்தது. லண்டன் பொருளாதாரப் பள்ளியிலும் லண்டன் பல்கலைக் கழகத்திலும் படித்த சஜித், மேரிலாண்ட் பல்கலைக்கழகத்தில் பொது மேலாண்மையில் முதுகலை படிப்பில் சேர்ந்தார். இதற்கிடையில் ரணசிங்க பிரேமதாஸ இலங்கையின் புதிய ஜனாதிபதியாகத் தேர்வு செய்யப்பட்டார். ஆனால், அடுத்த சில ஆண்டுகளிலேயே, 1993இல் ஒரு தற்கொலைப் படை தாக்குதலில் கொல்லப்பட்டார் பிரேமதாஸ. இதையடுத்து அமெரிக்காவில் இருந்து சஜித் நாடு திரும்பினார். தந்தையைப் போலவே அரசியலில் ஈடுபட விரும்பிய சஜித், 1994இல் தனது தந்தை இருந்த கட்சியான ஐக்கிய தேசிய கட்சியில் சேர்ந்தார். அவருக்கு அம்பாந்தோட்டை மாவட்டத்தின் மாவட்ட அமைப்பாளர் பதவி வழங்கப்பட்டது. சிறிய பொறுப்புதான் என்றாலும் சின்னச் சின்ன நிகழ்சிகளை நடத்தி விறுவிறுப்புடன் செயல்பட்டார் சஜித். அந்த மாவட்டத்தில் தருண சவிய என்ற இளைஞர் இயக்கத்தையும் வறுமை ஒழிப்பிற்காக சன சுவய போன்ற அமைப்புகளையும் கட்டியெழுப்பினார்.   தொடர் வெற்றிகளைக் குவித்த சஜித் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தந்தையைப் போலவே அரசியலில் ஈடுபடவிரும்பிய சஜித், 1994ஆம் ஆண்டு ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்தார் கடந்த 2000வது ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் போட்டியிடும் வாய்ப்பு சஜித்திற்கு அளிக்கப்பட்டது. அதில் பெரும் வெற்றி பெற்றார் சஜித். அதற்குப் பிறகு, 2001, 2004, 2010, 2015 ஆகிய தேர்தல்களிலும் வெற்றி பெற்றார். கடந்த 2001இல் ரணில் விக்ரமசிங்க பிரதமரானபோது, அவரது அமைச்சரவையில் சுகாதாரத் துறை துணை அமைச்சராக நியமிக்கப்பட்டார். 2011இல் ஐக்கிய தேசியக் கட்சியின் துணைத் தலைவராகவும் தேர்வானார் சஜித். கடந்த 2015இல் மைத்திரி பால சிறிசேன புதிய ஜனாதிபதியாகத் தேர்வானதும், சஜித் வீட்டு வசதி மற்றும் சமிர்தி திட்ட அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார். அந்தக் காலகட்டத்தில் கீழ் மத்தியதர மக்களுக்காகப் பல வீட்டு வசதித் திட்டங்களை முன்னெடுத்தார் சஜித். கடந்த 2010, 2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல்களில் ஐக்கிய தேசிய கட்சி நேரடியாகப் போட்டியிடவில்லை. மாறாக பொது வேட்பாளர்களை ஆதரித்தது. 2015இல் ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவுடன் மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்றதும் ரணில் விக்ரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்டார். ஆனால், விரைவிலேயே ரணிலுக்கும் சிறிசேனவுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. இது 2018இல் ஒரு மிகப்பெரிய அரசியல் சாஸன சிக்கலுக்கு இட்டுச் சென்றது. அந்தப் பிரச்சனை பிறகு தீர்க்கப்பட்டாலும், 2015இல் மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்தது தவறு எனக் கருதியது ஐக்கிய தேசியக் கட்சி. இதனால், 2019இல் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது. இந்தத் தேர்தலில் ரணில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிட விரும்பினார். ஆனால், மங்கள சமரவீர, ஹரின் ஃபெர்னாண்டோ போன்றவர்கள் சஜித் பிரேமதாஸவே ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிட வேண்டும் எனக் கூறினர். சில நாட்கள் இழுபறிக்குப் பிறகு, சஜித்தை ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக ஏற்க ரணில் விக்கிரமசிங்க ஒப்புக்கொண்டார். அந்தத் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷவை எதிர்த்துப் போட்டியிட்டு 41 சதவீத வாக்குகளைப் பெற்றார் சஜித்.   எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாஸ பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கடந்த 2011ஆம் ஆண்டில் ஐக்கிய தேசியக் கட்சியின் துணைத் தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டார் விரைவிலேயே எதிர்க்கட்சித் தலைவராகவும் நியமிக்கப்பட்டார் சஜித். இந்நிலையில் அவரை பிரதமர் பதவிக்கான போட்டியில் நிறுத்த விரும்பியது ஐக்கிய தேசியக் கட்சி. 2020 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட சமாகி ஜன பலவெகய என்ற முன்னணியை உருவாக்கினார் சஜித். இந்த முன்னணிக்கு அன்னப் பறவையின் சின்னம் ஒதுக்கப்பட்டது. இதில் போட்டியிட ரணில் ஒப்புக்கொண்டார். ஆனால், இறுதி நேரத்தில் சஜித் ஆதரவாளர்கள், வேறு சின்னத்தில் போட்டியிட்டனர். இதனால், கட்சி பிளவடைந்தது. அந்தத் தேர்தலில் 54 இடங்களைப் பிடித்த சமாகி ஜன பலவெகயவின் சார்பில் சஜித் எதிர்க்கட்சித் தலைவரானார். 2020 ஜனாதிபதித் தேர்தலிலும் இந்த முன்னணியின் சார்பில் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட களத்தில் இறங்கினார் சஜித். "தந்தையின் நிழலில் அரசியலுக்கு வந்தவர் சஜித். அவருடைய பேச்சுகள், பேட்டிகள் ஆகியவை அவர் அந்த நிழலை விட்டு வெளியேறவில்லையோ என்ற எண்ணத்தை ஏற்படுத்துகின்றன. 2022 நெருக்கடியின்போது ஜனாதிபதி பதவியை ஏற்க மறுத்தார். பதவியை ஏற்றுக்கொண்டு, சிறப்பாகச் செயல்பட்டுக் காட்டியிருக்க வேண்டும். ஆனால், அவர் அப்படிச் செய்யவில்லை" என்கிறார் பிபிசி சிங்களப் பிரிவின் ஆசிரியரான இஷாரா தனசேகர. இருந்தபோதும், எதிர்க்கட்சித் தலைவராக அவருடைய செயல்பாடுகள் கவனிக்கத் தக்கவையாகவே இருந்தன. பொருளாதாரக் கொள்கையைப் பொறுத்தவரை, அவர் உலகமயமாக்கலுடன், உள்ளூர் மக்களுக்கான சமூகப் பாதுகாப்புத் திட்டங்களிலும் கவனம் செலுத்த விரும்புகிறார். "பொருளாதாரத்தைச் சீர்திருத்தி, அதைப் போட்டித்தன்மை வாய்ந்ததாகவும் உலகளாவிய ரீதியில் இணைக்கப்பட்டதாகவும் மாற்ற வேண்டும். இது மக்களிடையே செல்வத்தை உருவாக்கும். பாதிக்கப்படக்கூடிய நபர்களைப் பாதுகாப்பதற்காக இலக்கு வைக்கப்பட்ட மானியங்களுடன் கூடிய வலுவான சமூகப் பாதுகாப்பு வலையமைப்பு மூலம் பொருளாதார நீதி மற்றும் சமத்துவத்தை உறுதி செய்ய வேண்டும்" என அவருடைய தேர்தல் அறிக்கையிலும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.   தமிழர் விவகாரங்களில் நிலைப்பாடு என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES தமிழர் பிரச்சனைக்கான தீர்வைப் பொறுத்தவரை, 13வது சட்டத் திருத்தத்தை முழுமையாகச் செயல்படுத்துவதையே முன்வைக்கிறார் சஜித். கடந்த ஜூலை மாதம் யாழ்ப்பாணத்தில் தமிழ் தலைவர்களைச் சந்தித்த பிறகு பேசிய அவர், தான் ஜனாதிபதியானால் 13வது சட்டத் திருத்தத்தை முழுமையாகச் செயல்படுத்தப் போவதாகத் தெரிவத்தார். 'சர்வதேச சமூகத்தின் ஆதரவுடன் புலிகளைவிட சக்தி வாய்ந்த பயங்கரவாத அமைப்பை உருவாக்கவே இது உதவும்' என பிவிதுரு ஹெல உருமய போன்ற அமைப்புகள் குற்றம் சாட்டியபோதும் அவர் அதிலிருந்து பின்வாங்கவில்லை. இதனால் இலங்கை தமிழரசுக் கட்சி ஜனாதிபதித் தேர்தலில் அவரை ஆதரிப்பதாக அறிவித்தது. வடக்கிலும் கிழக்கிலும் மேலும் பல கட்சிகள் இவருக்கு ஆதரவளிப்பதாக அறிவித்தன. தேர்தல் முடிவுகளைப் பார்க்கும்போதும், முதல் விருப்ப வாக்குகளில் இந்தப் பகுதிகளில் சஜித்திற்கு கூடுதலான ஆதரவு இருப்பது தெளிவாகவே தெரிந்தது. இந்தியாவை பொறுத்தவரை, எப்போதும் இந்தியாவை சந்தேகத்துடன் பார்க்கும் ஜனதா விமுக்தி பெரமுன தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் அநுர குமார திஸாநாயக்கவைவிட, ஆரம்பத்திலிருந்தே சீனாவைவிட இந்தியாவை நெருக்கமாகக் கருதும் சஜித்தை கூடுதலாக விரும்பக்கூடும். இந்த நிலையில், தோல்வி அடைந்திருந்தாலும், சஜித்திற்கு இதுவொரு முக்கியமான தேர்தல். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/crkdegee7x3o
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.