Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உருவப்படுமா?
---------------------
எங்கும் ஒருவித மயான அமைதி
காடைத்தனத்தின் 
உச்சத்தைக் கடந்த பொழுதில் 
நிலமெங்கும் மனிதமலைகளாய் உடலங்கள்
குருதியும் சகதியுமாய்... 
எனக்கு உயிர் இருந்தது
அதுவே எனக்குப் போதுமானது
கடற்காற்று ஊவென்று வீசியது
உடம்பெங்கும் சில்லிட்டுக் குளிர்ந்தது
ஆடையற்று அம்மணமாகக்
கிடக்கும் உணர்வு
நானும் செத்திருக்கக் கூடாதா
மனம் சொல்லிற்று
குப்புறக் கிடந்த என்னால்
அசையக்கூட முடியவில்லை
பிணங்களில் இருந்துவரும் வாடை
வாடைக்காற்று வீசிய கடலோரம்
பிணவாடை உலுப்பியது
சட்டென அம்மாவின் குரல்
என் காதில் ஒலித்தது
டேய் அரைநாண் கயிறைக் கட்டடா
அவிழ்ந்தால் நீ அம்மணக்கட்டையடா
ஒட்டுத் துணிகூட இல்லாதபோதிலும்
அரைநாண் கயிறிருந்தால் 
உன்னை அம்மணமானவன் என்றழையார்
என்று என் அம்மா சொன்னது 
நினைவிலே வந்து போனது!
என் சக்தி முழுவதையும் திரட்டி
சுற்றுமுற்றும் தலையைத் தூக்கிப்பார்த்தேன்
சற்றுக் கைக்கெட்டும் தூரத்தில்
ஒற்றைச் சப்பாத்தொன்று புதையுண்டவாறு
யாரோ ஒரு போராளியினுடையதாக
இருக்க வேண்டும்
மெல்ல நகர்ந்து சப்பாத்திலிருந்து
நூலைப் பிரித்தெடுத்து
என் இடுப்பிலே கட்டிக்கொண்டேன்
இப்போது எனக்கொரு திருப்தி!
தொலைவில் ஒற்றை வெடியோசைகள்
வெடிப்புகள் எனக் கேட்டன...
மெதுவாக ஊர்ந்து பற்றையுள் பதுங்கினேன்
எதுவுமே தெரியவில்லை
கண்விழித்ததோ ஒரு மருத்துவமனையில் 
நான் ஒரு அரச ஊழியன் 
ஆனாலும் நான் தமிழன் அல்லவா
இடுப்பு நூலுக்கும் 
விசாரணை விளத்தங்கள் 
அலைக்கழிப்புகள் ஆனாலும் என்ன
அரைநாண் கயிறை 
இப்போதுவரை அணிந்திருக்கிறேன்!
அப்பா அம்மாவை முள்ளிவாய்கால் 
அள்ளிச் சென்றுவிட்டது
உறவுகளில் ஏறக்குறையத்
தொண்ணூறுவீதம் பேரையும்
இழந்துவிட்டேன்
நண்பர்கள் ஒரு சிலரோ
வாடா வெளிநாடென்கிறார்கள்
அரைநாண் கயிற்றையும்
இழக்க முடியுமா
அம்மா சொன்னதை மறக்க முடியுமா 
இழப்பதற்கு நான் தயாரில்லை
எங்கள் மண்ணில் எங்கள் வளவிலே
சிறு பயிர்களோடும்
சிறு உயிர்களோடும் 
நகர்கிறது என்வாழ்வு
பொருண்மியத் திரட்சி 
இல்லையென்றாலும்
மனதிற்குள் மகிழ்வு துளிர்கிறது!
என்னைப் பார்க்க வந்த
வெளிநாட்டு உறவொன்று 
மரவள்ளிக் கிழங்கும்
கட்டைச் சம்பலும் அற்புதமென்றான்
அற்புதங்கள் நிகழ்துவதாய் 
பழைய நாற்றொன்று புதிதாய் மின்னி
அனைவரையும் அழைத்துத் தலைமையேற்றுள்ளது
ஆனாலும் என்ன அரைநாண் கயிற்றுக்கும்
ஆபத்து வருமா(?) என்ற வினா
என்னைத் தொடர்கிறது!

நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, nochchi said:

உருவப்படுமா?

வாடைக்காற்று வீசிய கடலோரம்
பிணவாடை உலுப்பியது
சட்டென அம்மாவின் குரல்
என் காதில் ஒலித்தது
டேய் அரைநாண் கயிறைக் கட்டடா
அவிழ்ந்தால் நீ அம்மணக்கட்டையடா
ஒட்டுத் துணிகூட இல்லாதபோதிலும்
அரைநாண் கயிறிருந்தால் 
உன்னை அம்மணமானவன் என்றழையார்
என்று என் அம்மா சொன்னது 
நினைவிலே வந்து போனது!
என் சக்தி முழுவதையும் திரட்டி
சுற்றுமுற்றும் தலையைத் தூக்கிப்பார்த்தேன்
சற்றுக் கைக்கெட்டும் தூரத்தில்
ஒற்றைச் சப்பாத்தொன்று புதையுண்டவாறு
யாரோ ஒரு போராளியினுடையதாக
இருக்க வேண்டும்
மெல்ல நகர்ந்து சப்பாத்திலிருந்து
நூலைப் பிரித்தெடுத்து
என் இடுப்பிலே கட்டிக்கொண்டேன்
இப்போது எனக்கொரு திருப்தி!

மனதை தொட்ட வரிகள் இவை. 
கவிதைக்கு நன்றி நொச்சி. 

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, nochchi said:


வெளிநாட்டு உறவொன்று 
மரவள்ளிக் கிழங்கும்
கட்டைச் சம்பலும் அற்புதமென்றான்

அற்புதங்கள் நிகழ்துவதாய் 
பழைய நாற்றொன்று புதிதாய் மின்னி
அனைவரையும் அழைத்துத் தலைமையேற்றுள்ளது

ஆனாலும் என்ன அரைநாண் கயிற்றுக்கும்
ஆபத்து வருமா(?) என்ற வினா
என்னைத் தொடர்கிறது!

அருமையான கவிதை நொச்சி..........🙏.

'நான் பார்க்காதது எதையும் நான் எழுதவில்லை.........' என்பது போல சில பெரிய எழுத்தாளர்கள் சொல்லியிருக்கின்றனர். உங்களின் எழுத்தும் அவ்வாறானதே.........👍.

ஒரு நாளுக்கு மட்டுமே என்றால் மரவள்ளியும், சம்பலும் அற்புதம் தான்..........அதுவே தினம் என்றால் அது வேற நிலைமை.

'அற்புதங்கள்....' என்ற சொல் அவநம்பிக்கையையே உடனே கொண்டு வந்துவிடுகின்றது. எங்களின் ஏராளமான முன் அனுபவங்கள் அப்படி. 

Edited by ரசோதரன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாசித்த உறவுகளுக்கும், விருப்போடு, நன்றியையும் பகிர்ந்த ரசோதரன், தமிழ்சிறி மற்றும் உடையார் ஆகியோருக்கும் உளமார்ந்த நன்றி. 

3 hours ago, தமிழ் சிறி said:

மனதை தொட்ட வரிகள் இவை. 
கவிதைக்கு நன்றி நொச்சி. 

தமிழ்சிறியவர்களே, படித்துப் பாராட்டியமைக்கு நன்றி. அந்த அமைதிக்காலத்தில் சோலைக் கடற்கரை. அதன் கம்பீரம். பின்வந்த ஆண்டுகளில்.... உயிருள்ளவரை மறக்க முடியாத வலிகளோடு வாழும் வாழ்வாகிவிட்டது. சிலவேளைகளில் மனம் எதையாவது கிறுக்கச் சொல்கிறது. 
நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரசோதரன் said:

அருமையான கவிதை நொச்சி..........🙏.

'நான் பார்க்காதது எதையும் எழுதவில்லை.........' என்பது போல சில பெரிய எழுத்தாளர்கள் சொல்லியிருக்கின்றனர். உங்களின் எழுத்தும் அவ்வாறானதே.........👍.

ஒரு நாளுக்கு மட்டுமே என்றால் மரவள்ளியும், சம்பலும் அற்புதம் தான்..........அதுவே தினம் என்றால் அது வேற நிலைமை.

'அற்புதங்கள்....' என்ற சொல் அவநம்பிக்கையையே உடனே கொண்டு வந்துவிடுகின்றது. எங்களின் ஏராளமான முன் அனுபவங்கள் அப்படி. 

ரசோதரனவர்களே, படித்துப் பாராட்டியமைக்கு நன்றி. உண்மைதான். 

ஒருநாளென்றால் அது ஒரு தனிச்சுவை. ஆனால், சிறிமாவின் ஆட்சிக்காலத்தில் கைகொடுத்தது மரவள்ளி. மறக்கமுடியாத காலம். ஒவ்வொரு வீட்டிலும் மரவள்ளி நட்டகாலமாக இருந்தது. இனிவருங்காலங்கள் இலங்கைத் தீவுக்கு எப்படியோ அநுர மாத்தையா மட்டுமே அறிவார். 

நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

படித்தோர் மற்றும் விருப்போடு இணைந்த புங்கையூரனவர்களுக்கும், கவலையை வெளிப்படுத்திய  குமாரசாமி ஐயாவுக்கும் நன்றி.

நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி 

  • கருத்துக்கள உறவுகள்
On 25/9/2024 at 12:55, nochchi said:

ஒரு சிலரோ
வாடா வெளிநாடென்கிறார்கள்
அரைநாண் கயிற்றையும்
இழக்க முடியுமா
அம்மா சொன்னதை மறக்க முடியுமா 
இழப்பதற்கு நான் தயாரில்லை
எங்கள் மண்ணில் எங்கள் வளவிலே
சிறு பயிர்களோடும்
சிறு உயிர்களோடும் 
நகர்கிறது என்வாழ்வு

இழப்பதை விரும்பாத மனிதன் இருப்பதை வைத்தே மகிழ்வுடன் வாழ்வான்.
இருந்ததை எல்லாம்  இழந்துவிட்டு.... இப்போது.. எல்லாம் இருப்பதாக உலகம் எங்கும் அலைபவன், மீண்டும்  தன் சொந்த மண்ணில் கால் வைக்கும் போதெல்லாம்
எதையோ தெடிக் கொண்டுதான் இப்போதும் இருக்கின்றான்-

எங்கும் கிடைக்காமல்...
 
கவிதைக்கு நன்றி நொச்சி

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் மண்ணில் எங்கள் வளவிலே
சிறு பயிர்களோடும்
சிறு உயிர்களோடும் 
நகர்கிறது என்வாழ்வு............

பிறந்த மண்ணில் வாழும் கொடுப்பினை கோடி கொடுத்தாலும் கிடைக்காது. வெளிநாடு வந்தோர் எதோ ஒன்றை இழந்தது போன்ற நினைவுகளுடன் தான் வாழ்கிறார்கள்.  தங்கள் மண்பற்று  மனஉறுதி பாராடட படவேண்டியது. தொடர்ந்தும் அடிக்க கடி கிறுக்குங்கள். நன்றி 

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் மனதை நெகிழவைத்த கவிதை . ........பல கவிதைகள் படித்தபோதும் சில கவிதைகள்தான் மனதை முள் கொண்டு வருடுகின்றன . ......அவற்றுள் இதுவும் ஒன்று ........!

நன்றி நொச்சி ........!   

  • கருத்துக்கள உறவுகள்
On 25/9/2024 at 06:55, nochchi said:

நொச்சி

ஆழ்ந்து சிந்திக்க ணே;டிய கவிதை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, வாத்தியார் said:

இழப்பதை விரும்பாத மனிதன் இருப்பதை வைத்தே மகிழ்வுடன் வாழ்வான்.
இருந்ததை எல்லாம்  இழந்துவிட்டு.... இப்போது.. எல்லாம் இருப்பதாக உலகம் எங்கும் அலைபவன், மீண்டும்  தன் சொந்த மண்ணில் கால் வைக்கும் போதெல்லாம்
எதையோ தெடிக் கொண்டுதான் இப்போதும் இருக்கின்றான்-

எங்கும் கிடைக்காமல்...
 
கவிதைக்கு நன்றி நொச்சி

வாத்தியாரவர்களுக்குப் படித்துக் கருத்தைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி. இருந்ததையும் இழந்துவிட்ட மனிதனின் கடைசித்தேடலாக இருப்பது என்னவோ அவனது பிறப்பிடமே. அது இளமையில் தெரிவதில்லை. இலகுவாக வந்துவிடுவோம். ஆனால், தேடலில் பதியும் பாதங்கள் தேடுவது என்னவோ ஆறுதலை.

நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி
 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 26/9/2024 at 17:07, நிலாமதி said:

எங்கள் மண்ணில் எங்கள் வளவிலே
சிறு பயிர்களோடும்
சிறு உயிர்களோடும் 
நகர்கிறது என்வாழ்வு............

பிறந்த மண்ணில் வாழும் கொடுப்பினை கோடி கொடுத்தாலும் கிடைக்காது. வெளிநாடு வந்தோர் எதோ ஒன்றை இழந்தது போன்ற நினைவுகளுடன் தான் வாழ்கிறார்கள்.  தங்கள் மண்பற்று  மனஉறுதி பாராடட படவேண்டியது. தொடர்ந்தும் அடிக்க கடி கிறுக்குங்கள். நன்றி 

நிலாமதியவர்களே, படித்துப் பாராட்டியமைக்கு நன்றி. கிறுக்க முயற்சிக்கிறேன்.  நாம்தானே ஓடிவந்துவிட்டோம். எங்கோ ஒதுங்கி ஓடிய காலங்களைத் திரும்பிப்பார்க்கும் போது வெறுமையாய் தெரிகிறது. 
 
நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி

23 hours ago, suvy said:

மிகவும் மனதை நெகிழவைத்த கவிதை . ........பல கவிதைகள் படித்தபோதும் சில கவிதைகள்தான் மனதை முள் கொண்டு வருடுகின்றன . ......அவற்றுள் இதுவும் ஒன்று ........!

நன்றி நொச்சி ........!   

சுவியவர்களே, படித்துப் பாராட்டியமைக்கு நன்றி. நீங்களே ஒரு சிறந்த படைப்புகளைப் தருபவர். உங்கள் வரிகள் உற்சாகம் தருவனவாக உள்ளன. 
நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி

22 hours ago, ஈழப்பிரியன் said:

ஆழ்ந்து சிந்திக்க ணே;டிய கவிதை.

ஈழப்பிரியனவர்களே, படித்துப் பாராட்டியமைக்கு நன்றி. உண்மைதான். ஆனால், சிங்களத்தின் சிந்தனையல்லவா எம்மை ஆக்கிரமித்துள்ளது. 

நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

படித்தோருக்கும் , விருப்புப் புள்ளியை வழங்கிய யாயினி அவர்களுக்கும் நன்றி.
நட்பார்ந்த நன்றியுடன்  
நொச்சி
 

  • கருத்துக்கள உறவுகள்

பட்டவலிகளும், இழக்கவேறில்லியென்பதும். எனி என்னநடக்குமோ? என்ற ஏக்கமும் வரிகளில் தந்து எமதுணர்வ்வ உருகவைத்த கவிக்கு உளமார்ந்த வாழ்த்துகள்.நொச்சியரே!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.