Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
மெய்யழகன், கார்த்தி, அரவிந்த்சாமி

பட மூலாதாரம்,X/2D ENTERTAINMENT

27 செப்டெம்பர் 2024, 06:35 GMT
புதுப்பிக்கப்பட்டது 9 மணி நேரங்களுக்கு முன்னர்

விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில், 2018ஆம் ஆண்டு வெளியான ‘96’ திரைப்படம் தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தைப் பெருமளவில் ஈர்த்தது.

அப்படத்தை இயக்கிய பிரேம் குமாரின் இரண்டாவது படமான மெய்யழகன் இன்று (வெள்ளி, செப்டம்பர் 27) வெளியாகியிருக்கிறது.

இப்படத்தில் கார்த்தி, அரவிந்த்சாமி, ராஜ்கிரண், தேவதர்ஷிணி, இளவரசு, ஸ்ரீதிவ்யா, சுவாதி கொண்டே ஆகியோர் நடித்திருக்கின்றனர். 96 படத்துக்கு இசையமைத்த கோவிந்த் வசந்தா இப்படத்திற்கும் இசையமைத்திருக்கிறார். சூர்யா-ஜோதிகாவின் தயாரிப்பு நிறுவனமான 2D எண்டர்டெய்ன்மெண்ட் இப்படத்தைத் தயாரித்திருக்கிறது.

கார்த்தி-அரவிந்த்சாமி இருவரும் ஒன்றாகத் தோன்றும் இப்படத்தின் ஸ்டில்கள், ட்ரெய்லர் ஆகியவை வெளியாகியதில் இருந்தே ரசிகர்களிடையே இப்படத்திற்கு எதிர்பார்ப்பு இருந்தது. காரணம், கார்த்தி மற்றும் அரவிந்த்சாமி கூட்டணி.

இந்நிலையில், இப்படம் எப்படி இருக்கிறது? ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? ஊடக விமர்சனங்கள் என்ன சொல்கின்றன?

மெய்யழகன் படத்தின் கதை என்ன?

'96' திரைப்படம் போன்றே இந்தப் படமும் 1996-ஆம் ஆண்டு துவங்குகிறது. அருள்மொழி வர்மன் (அரவிந்த்சாமி) ஒரு குடும்பப் பிரச்னையால் தஞ்சாவூரில் தனது சொந்த ஊரையும் குடும்பத்தையும் விட்டு வெளியேறுகிறார். அவருக்கு உறவினர்களுடன் முற்றிலும் தொடர்பற்றுப்போகிறது.

இந்த நிலையில், சுமார் 20 ஆண்டுகள் கழித்து, தனக்குப் பிரியமான உறவுப்பெண்ணான புவனாவின் (சுவாதி கொண்டே) திருமணத்துக்காக, மீண்டும் தனது சொந்த ஊருக்குச் செல்ல வேண்டிய சூழ்நிலை அரவிந்த்சாமிக்கு ஏற்படுகிறது. பல மனக்குழப்பங்களைக் கடந்து சொந்த ஊருக்குச் செல்லும் அரவிந்த்சாமி, அங்கு அவர் பாசமாக இருக்கும் ஒரே உறவினர் ராஜ்கிரணைச் சந்திக்கிறார்.

அங்குதான், அரவிந்த்சாமியை ‘அத்தான்’ என்றழைத்தபடி, அவரை உபசரிக்கும் கார்த்தி அறிமுகமாகிறார். இருவரிடையே ஒரு மெல்லிய பாசம் உண்டாகி, அது ஆழமாகிறது. இருவரும் ஒன்றாகச் சுற்றித்திரிந்து, பல விஷயங்களைப் பற்றிப்பேசுகிறார்கள்.

அதன்பின் அரவிந்த்சாமியின் உணர்வுகள் அவரிடம் என்ன சொல்லின?

இதுதான் இப்படத்தின் கதை.

 
மெய்யழகன், கார்த்தி, அரவிந்த்சாமி

பட மூலாதாரம்,X/2D ENTERTAINMENT

‘உணர்வுகளே படத்தின் அடித்தளம்’

இப்படத்திற்கு விமர்சனம் எழுதியுள்ள ஊடகங்கள், மனிதர்களிடையே, உறவுகளிடையே உள்ள உணர்வுகள் தான் படத்தின் அடித்தளம் என்று குறிப்பிடுகின்றன.

தினமணி இணையதளம், தனது விமர்சனத்தில், இயக்குநர் பிரேம் குமார், ‘உறவுகளின் நீட்சியை அழகியல் தன்மையுடன் காட்சிப்படுத்தியிருப்பதாகக்’ கூறுகிறது. “பிறந்து, பால்யத்தை எதிர்கொண்ட ஊரின் திசைகளை பல ஆண்டுகள் கழித்துத் தேடும் ஒருவனின் நினைவாக உறவுகளின் மேன்மையை அழகாகக் கையாண்டிருக்கிறார்,” என்றும் கூறியிருக்கிறது.

‘தி டைம்ஸ் ஆஃப் இந்தியா’ ஆங்கில இணையதளம், தனது விமர்சனத்தில், இப்படம் அதீத நாடகத்தனமாக முடிந்துவிடும் அபாயம் இருந்தபோதிலும், அப்படிச் செய்யாமல், மெல்லிய சோகம்-இதயத்தை வருடும் காட்சிகள் ஆகியவற்றுக்கு இடையே பயணிப்பதாகச் சொல்கிறது.

“படத்தின் சில காட்சிகளில், நமது கண்களில் நீர் துளிர்க்கிறது. குறிப்பாக அரவிந்தசாமியும், சுவாதி கொண்டேவும் பேசிக்கொள்ளும் காட்சிகள். அதேபோல் உறவினர்கள் பேசிக்கொள்ளும் சிறிய காட்சிகள் கூட சிறப்பாகவே அமைந்திருக்கின்றன,” என்கிறது இந்த விமர்சனம்.

 
மெய்யழகன், கார்த்தி, அரவிந்த்சாமி

பட மூலாதாரம்,X/2D ENTERTAINMENT

கார்த்தி, அரவிந்த்சாமியின் நடிப்பு எப்படி?

இப்படத்திலுள்ள நடிகர்களின் நடிப்பைப் பற்றிப் பேசும் ‘தி டைம்ஸ் ஆஃப் இந்தியா’ ஆங்கில இணையதள விமர்சனம், அனைத்து நடிகர்களின் நடிப்பும் ‘முதல் தரம்’ என்கிறது.

“படம் மொத்தத்தையும் அரவிந்த்சாமியும் கார்த்தியுமே தாங்குகிறார்கள். இருவரும் அபாரமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். தனது கடந்த காலத்திலிருந்து விலகிவர முடியாத ஒருவனது தவிப்பை அரவிந்த்சாமி அற்புதமாகச் வெளிப்படுத்தியிருக்கிறார்,” என்கிறது இந்த விமர்சனம்.

அதேபோல் கார்த்தியின் நடிப்பைப் பற்றிப் பேசும் தினமணி விமர்சனம், “காட்சிக்கு காட்சி கள்ளமில்லாத ஆன்மாவாக [கார்த்தி] பேசும் வசனங்களும் உடல்மொழியும் ரசிக்க வைக்கின்றன,” என்கிறது.

மேலும், “இப்படத்திற்காக கார்த்திக்கு விருதுகள் கிடைக்க வேண்டும். ரசிகர்களுக்கு, ‘விருந்து கொடுக்கும்’ வணிக குட்டிக்கரணங்களை அடிக்காமல் முழுமையாகத் தன்னை கதைக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார்,” என்கிறது.

இந்த இருவர் மட்டுமல்ல, ராஜ்கிரண், தேவதர்ஷினி, ஜெயப்பிரகாஷ் ஆகியோர் ஒருசில காட்சிகளிலேயே தோன்றினாலும், அவர்கள் தங்கள் கதாபாத்திரங்களை நினைவில் நிற்கும்படிச் செய்திருக்கிறார்கள், என்கிறது ‘தி டைம்ஸ் ஆஃப் இந்தியா’ ஆங்கில இணையதளம். கருணாகரன், இளவரசு, ரேச்சல் ரெபெக்கா, ஸ்ரீதிவ்யா ஆகியோரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பதாக இந்த விமர்சனம் கூறுகிறது.

படத்தின் மிகப்பெரிய குறை

இவையனைத்தும் இருந்தும், கிட்டத்தட்ட அனைத்து விமர்சனங்களும் படத்தின் மிகப்பெரிய குறை என்று ஒரு விஷயத்தைச் சொல்கின்றன.

அது, இப்படத்தின் நீளம்.

சுமார் 3 மணிநேரம் (177 நிமிடங்கள்) ஓடும் இப்படம் ஆங்காங்கே ரசிகர்களின் பொறுமையைச் சோதிக்கிறது, படத்தின் நீளத்தை 20-30 நிமிடங்கள் குறைத்திருக்கலாம், என்கின்றன விமர்சனங்கள்.

இந்தக் குறையைப் பிரதானமாகச் சுட்டியிருக்கும் ‘ஹிந்துஸ்தான் டைம்ஸ்’ தமிழ் இணையதளம், “உறவுகளையும், உணர்வுகளையும் சொல்ல நினைத்த படம் தான். ஆனால், சொல்லிக் கொண்டே இருந்தால் எப்படி?” என்று கேட்கிறது.

‘தி டைம்ஸ் ஆஃப் இந்தியா’ ஆங்கில இணையதளம் இப்படத்தை ‘மிக நீளமானது’ என்று குறிப்பிட்டு, சில பகுதிகள் படத்தை மிக நீளமாக்குகின்றன, என்கிறது.

அதேபோல், படம் பெரும்பாலும் வசனங்களாலேயே நகர்கிறது என்பதும் ஒரு குறை என்கிறது ஹிந்துஸ்தான் டைம்ஸ் விமர்சனம். “3 மணி நேரத்திற்கு 3 நிமிடம் மட்டுமே குறைவு என்கிற கால அளவில் படம் ஓடுகிறது. படம் ஆரம்பிக்கும் போது பேச ஆரம்பிப்பவர்கள், முடியும் வரை பேசுகிறார்கள். பேசிக்கொண்டே இருக்கிறார்கள்,” என்று இந்த விமர்சனம் குறிப்பிடுகிறது.

 
மெய்யழகன், கார்த்தி, அரவிந்த்சாமி

பட மூலாதாரம்,YOUTUBE/THINK MUSIC INDIA

சொல்ல வந்ததை விட்டுவிட்டு…

படத்தின் மற்றொரு குறை, மனித உறவுகளைப் பற்றிச் சொல்ல வந்ததை விட்டுவிட்டு, சம்பதமில்லாமல், அரசியல், சமூக, வரலாற்று விஷயங்களைப் பேசுவது என்கின்றன சில விமர்சனங்கள்.

‘தி டைம்ஸ் ஆஃப் இந்தியா’ ஆங்கில இணையதளம், “காளைமாடு தோன்றும் ஒரு காட்சி, வரலாறு, போர்கள் ஆகியவற்றைப் பற்றி கார்த்தி பேசும் வசனங்கள் மிக நீளமாகத் தோன்றுகின்றன,” என்கிறது.

‘ஹிந்துஸ்தான் டைம்ஸ்’ தமிழ் இணையதளத்தின் விமர்சனம், ‘திடீரென ஜல்லிக்கட்டு, ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு, ஈழத்தமிழர் படுகொலை’ என கதைக்குச் சம்மந்தமே இல்லாத விஷயங்களைப் பற்றிப் படம் பேசுகிறது என்கிறது.

இன்னொரு அன்பே சிவம்?

இப்படத்தில், அரவிந்த்சாமி-கார்த்தி இருவருக்கிடையே உருவாகும் புரிதலும் பிணைப்பும், ‘அன்பே சிவம்’ படத்தின் கமல்ஹாசன்-மாதவனை நினைவுறுத்துவதாக ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ ஆங்கில இணையதளம் தெரிவிக்கிறது.

ஆனால், ‘அன்பே சிவம்’ படம் இரண்டு வேறுபட்ட நபர்கள் ஒருவருக்கொருவரில் தோழமையைக் கண்டடைவது பற்றிய படம். மெய்யழகனோ, ஒருவருக்கொருவர் அன்பாக இருப்பது மிகவும் எளிமையான விஷயம் என்று கூறுகிறது, என்கிறது இந்த விமர்சனம்.

கிராமத்தில் இருந்து நகரத்துக்குக் குடிபெயரும் அனைவருக்கும் மனதில் இருக்கும் ஒரு வீடற்ற உணர்வினை அரவிந்த்சாமி வெளிப்படுத்துகிறார் என்கிறது இந்த விமர்சனம்.

  • கருத்துக்கள உறவுகள்

’மெய்யழகன்’ திரைப்பட விமர்சனம்

fa4a8d24179db334c4640d260b587013.jpg

Casting : Karthi, Aravind Swamy, Raj Kiran, Sri Divya, Swati Konde, Devadarsini, Jayaprakash, Sriranjani, Ilavarasu, Karunakaran, Saran Shakthi, Rachel Rebecca, Antony, Rajsekar Pandian, Indumathy

 

Directed By : C.Prem Kumar

 

Music By : Govind Vasantha

 

Produced By : 2D Entertainment - Jyotika and Suriya

 

 

 

 

சொந்தங்களின் துரோகத்தால் சொத்தை இழந்து இரவோடு இரவாக தஞ்சாவூரை விட்டுச் சென்று,  சென்னையில் குடியேறும் அரவிந்த்சாமியின் குடும்பம் 20 வருடங்களாக சொந்த ஊர் மற்றும் சொந்தங்களின் எந்தவித தொடர்பும் இல்லாமல் வாழ்ந்து வருகிறார்கள். சித்தப்பா மகளின் திருமணத்திற்கு போக வேண்டிய சூழல் ஏற்பட, குடும்பத்தின் சார்பாக அரவிந்த்சாமி தஞ்சாவூர் செல்ல நேரிடுகிறது. மனது நிறைய தங்கை மீது பாசம் இருந்தாலும், உறவினர்களின் துரோகத்தால் வேண்டா வெறுப்பாக திருமணத்திற்கு செல்லும் அரவிந்த்சாமிக்கு, உறவினர் கார்த்தி அறிமுகமாகி, அவரிடம் அன்பு பொழிகிறார். கார்த்தி எந்தவிதத்தில் உறவு, அவர் பெயர் என்ன? என்பது கூட தெரியாமல், தெரிந்தது போல் அவருடன் பழகும் அரவிந்த்சாமி, கார்த்தியின் மூலமாக தன்னைப் பற்றியும், உறவுகளின் உண்ணதத்தை பற்றியும் தெரிந்துக்கொள்ள நேரிடும் பயணம் தான் ‘மெய்யழகன்’.

 

’96’ திரைப்படத்தில் ஒரு இரவில் காதலர்களை நெகிழச் செய்த இயக்குநர் பிரேம்குமார், இதில் உறவுகளின் மேன்மை பற்றியும், மனிதம் பற்றியும் பேசி அனைத்து தரப்பினரையும் நெகிழச் செய்திருப்பதோடு, சொந்த ஊரை விட்டு விலகியவர்களை கண்கலங்க செய்திருக்கிறார்.

 

டெல்டா இளைஞராக நடித்திருக்கும் கார்த்தி, நடிப்பு, பேச்சு, உடல் மொழி, வெகுளித்தனம், பாசம் என அனைத்து உனர்வுகளையும் மிக அழகாக வெளிக்காட்டி மெய்யழயகன் என்ற கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்திருக்கிறார். நகரமாக இருந்தாலும் சரி கிராமமாக இருந்தாலும் சரி, அதற்கான தோற்றத்தில் தன்னை கச்சிதமாக பொருத்திக்கொள்ளும் கார்த்தி, தனது இயல்பான நடிப்பு மூலம் தான் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரமாக மக்கள் மனதில் மிக எளிதாக நுழைந்து விடுவார், அப்படி தான் மெய்யழகன் என்ற இளைஞராக பசை போட்டு ஒட்டிக்கொள்பவர், தனது நடிப்பு மூலமாக ரசிகர்களை பல இடங்களில் சிரிக்க வைத்து கண்கலங்க வைப்பதோடு, சிந்திக்கவும் வைத்திருக்கிறார்.

 

கார்த்திக்கு இணையான கதாபாத்திரத்தில் அரவிந்த்சாமியும் அருள்மொழி என்ற வேடத்தை சிறப்பாக கையாண்டிருக்கிறார். சொந்த ஊர் மீது இருக்கும் ஈர்ப்பும் ,ஏக்கமும் தன் மனதில் எந்த அளவுக்கு இருக்கிறது, என்பதை தன் கண்கள் மூலமாக வெளிக்காட்டுபவர், கார்த்தியிடம் சொல்லாமல் அவரை விட்டு விலகும் காட்சிகளில் நடிப்பில் தஞ்சை கோபூரம் போல் உயர்ந்து நிற்கிறார்.

 

கார்த்தியின் மனைவியாக நடித்த ஸ்ரீ திவ்யா, அரவிந்த்சாமியின் மனைவியாக நடித்த தேவதர்ஷினி, ராஜ்கிரண், ஜெயப்பிரகாஷ், இளவரசு, கருணாகரன், ஸ்ரீரஞ்சனி என பிரபல நட்சத்திரங்கள் பலர் இருந்தாலும் அவர்களுக்கான வாய்ப்பு என்னவோ குறைவு தான். ஆனால், அதை எந்தவித குறையும் இன்றி செய்து மக்கள் மனதில் நின்றுவிடுகிறார்கள்.

 

ஒளிப்பதிவாளர் மகேந்திரன் ஜெயராஜின் கேமரா கதைக்களத்தின் அழகை மட்டும் இன்றி கதாபாத்திரங்களின் உணர்வுகளை மிக அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறது. குறிபாக மெய்யழகன் மற்றும் அருள்மொழி கதாபாத்திரங்களின்  மகிழ்ச்சி, சோகம், நெகிழ்ச்சி ஆகிய அனைத்து உணர்வுகளும் பார்வையாளர்களையும் தொற்றிக்கொள்ளும் விதத்தில் மகேந்திரன் ஜெயராஜின் கேமரா உணர்வுகளை காட்சிப்படுத்துவதில் அதிகம் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறது.

 

கோவிந்த் வசந்தாவின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதைக்கு ஏற்றபடி மென்மையாக பயணித்திருக்கிறது. இளையராஜா தன்னை சாடினாலும் தான் அவரது தீவிர ரசிகன் என்பதை கோவிந்த வசந்தா இந்த படத்திலும் நீரூபித்திருக்கிறார்.

 

படத்தொகுப்பாளர் ஆர்.கோவிந்தராஜ், இயக்குநரை காட்டிலும் காட்சிகளை அதிகம் ரசித்திருக்கிறார் என்பது காட்சிகளின் நீளத்தை பார்க்கும் போதே தெரிகிறது. இயக்குநரின் கற்பனை எவ்வளவு நீளமாக இருந்தாலும், படம் பார்க்கும் பார்வையாளர்களின் பக்கம் இருந்து அதை பார்க்காமல், இயக்குநர் பக்கம் நின்று அவர் பார்த்திருப்பது படத்திற்கு சில இடங்களில் பலவீனமாக அமைந்திருக்கிறது.

 

இயக்குநர் சி.பிரேம்குமார் ஒரு இரவு பயணத்தின் மூலம் உறவுகளையும், உணர்வுகளையும் மக்களிடம் கடத்தும் கதைக்கு திரைக்கதை மற்றும் காட்சிகள் அமைத்த விதம் மிக மென்மையாக இருப்பதோடு, ரசிகர்களை இளைபாற வைப்பது போல் இருக்கிறது. ஆனால், அதில் திடீரென்று  தமிழர்களின் வரலாறு, வீரம், ஜல்லிக்கட்டு, ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு, ஈழத்தமிழர்கள் படுகொலை என்று சமூக கருத்துகளை பேசுவது பாராட்டுக்குரியதாக இருந்தாலும், அவை படத்துடன் ஒட்டாமல் பயணித்திருக்கிறது.

 

கார்த்தி மற்றும் அரவிந்த்சாமி ஆகியோரது நடிப்பு மற்றும் திரை இருப்பு பார்வையாளர்களை படத்துடன் ஒன்றிவிட செய்திருப்பதோடு, சிரிக்க வைத்து ரசிக்க வைக்கவும் செய்கிறது. ஆனால், அவை படம் முழுவதும் வராமல் ஆங்காங்கே வருவதாலும், இருவருக்குமான உரையாடல் வேறு தலைப்புகளை நோக்கி செல்வதாலும் சில பார்வையாளர்கள் சற்று ஏமாற்றம் அடையவும் செய்கிறார்கள். 

 

இருவரை மட்டுமே வைத்துக்கொண்டு இயக்குநர் சி.பிரேம்குமார் கையாண்டிருக்கும் உணர்வுப்பூர்வமான திரைக்கதை பார்வையாளர்கள் மனதுக்கு நெருக்கமாக பயணித்தாலும், சில காட்சிகளின் நீளம் பார்வையாளர்களுக்கு இருக்கமான மனநிலையை ஏற்படுத்தி விடுகிறது. அந்த நீளமான காட்சிகளை சற்று பொருத்துக்கொள்பவர்கள் நிச்சயம் படத்துடன் ஒன்றிவுடுவதோடு, கொண்டாடவும் செய்வார்கள்.

 

மொத்தத்தில், ‘மெய்யழகன்’ மனதுக்கு நெருக்கமானவன்.

 

ரேட்டிங் 3.8/5

https://www.cinemainbox.com/movie-reviews/1017.html

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 4/10/2024 at 06:37, nunavilan said:

’96’ திரைப்படத்தில் ஒரு இரவில் காதலர்களை நெகிழச் செய்த இயக்குநர் பிரேம்குமார், இதில் உறவுகளின் மேன்மை பற்றியும், மனிதம் பற்றியும் பேசி அனைத்து தரப்பினரையும் நெகிழச் செய்திருப்பதோடு, சொந்த ஊரை விட்டு விலகியவர்களை கண்கலங்க செய்திருக்கிறார்.

 

100 வீதம் உண்மை👍

  • கருத்துக்கள உறவுகள்

கதை நல்லதுதான் முதல்பாதி நன்றாகச் சொல்லப்படிருந்தது. இரண்டாவது  பாதி இழுவை.  குறும் படத்துக்கான கதையை 2.30 மணித்தியாலத்துக்கு நீட்டி இருக்கிறார்கள். ஆனாலும் மோசமில்லை. பார்க்கக் கூடிய படம். அவரவர்களுக்கு தந்த பாத்திரங்களை நன்றாகவே செய்திருக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

தியேட்டரில் பார்க்காமல், நெட்fபிலிக்ஸில் பார்த்தேன். தியேட்டரில் ஓடிய வடிவத்தில் இருந்து ஒரு "பெரிய துண்டை" அப்படியே வெட்டியெடுத்திருக்கிறார்கள் போல நெட்fபிலிக்ஸில். படம் ஒரு கட்டத்திற்குப் பின்னர், வடகொரியா விட்ட ஏவுகணை போல சடாரென்று முடிந்து விடுகிறது😂.

"மட்பாண்டத்தில் பியர்" என்று சுவாரசியத்தோடு  பார்த்தால் ஒரு கட்டத்தில் கமெராக் கோணம் பாத்திரத்தில் மேலேயிருந்து பார்க்கும் போது குவளையில் பளீரேன்று வெண்மையான பால் தெரிகிறது. என்றாலும் அமேசனில் பியர் குடிக்கும் மண்குவளை கிடைக்குமா எனத் தேடுகிறேன்.   

  • கருத்துக்கள உறவுகள்

தொலைக்காட்சியில் சுமார் பதினைந்து நிமிடங்கள் நேற்று முன்தினம் பார்த்தேன். படத்தின் பெயர், விபரம் இப்போது இங்கு அறிகின்றேன்.

கொஞ்சம் வித்தியாசமான படம். வழமையில் பொறுமையாக இவ்வளவு நேரம் பார்ப்பது இல்லை. ஏதோ ஒரு காரணத்தால் படம் பிடித்துவிட்டது.

அரவிந்தசாமி திருமண நிகழ்வில் உண்பது தொடக்கம் நாட்டுப்பால் ரீ கார்த்தியின் தூண்டுதலால் குடித்து பேருந்தை தவறவிட்டு பின்னர் இருவரும் கார்த்தி வீட்டில் ஒன்றாக பியர் அடிக்கும் காட்சிவரை பார்த்தேன்.

அத்தான் என உருகும் கார்த்தி முகபாவனையாலேயே பேசும் அரவிந்தசாமி என சென்றது. கார்த்தி கொஞ்சம் ஓவர் அக்டிங்க் தான்.

  • கருத்துக்கள உறவுகள்


இந்த படத்தில் ஏதோ இருக்கிறது.

இப்படியான படங்களில்  ஈடுபாடு காட்டாத இளம் தலைமுறை பலரை இந்த படம் கவர்ந்து இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

படம் பார்க்கப் போவோம் என்று மகள் கேட்டாள். எனக்குக் கார்த்தியின் படங்கள் பொதுவாகப் பிடிப்பதில்லை. படத்துக்ப் போனபின் அதற்குள் நான் முழ்கி விட்டேன். படம் மெதுவாகப் போனாலும்.நாம் வாழ்ந்த வாழ்க்கையை அப்படியே படம் பிடித்துக் காட்டியது.தஞ்சைப் பெரிய கோயிலைப் படம்பிடித்துக்காட்டியது.ஆசை தீரத் தரிசித்தேன்.திடீரென்று எமது ஈழப் போராட்டத்தையும் மிக உணர்ச்சி மயமாக கவனமாக கத்தரி போடாத வகையில் தொட்டுச் சென்றது. அதை இயக்குநர் வேண்டுமானால் தவிர்த்திருக்கலாம். ஆனால் அதை வேண்டுமென்றே புகுத்தி இருக்கிறார்.ஜ அதேபோல் ஜல்லிக்கட்டு பல இடங்களில் சீமானின் பேச்சுகளின் தாக்கம் தெரிகிறது.  பெயரை சீமான் பெயரை எழுதியதற்காகப் பார்க்காமல் விடாதீர்கள். நாம் வாழ்ந் வாழ்க்கை தெரியும் 50 பிளஸ் வயதானவர்களுக்கு மிக நெருக்கமான படம்.படம் தியேட்டரில் வந்த போது பெரிதாக விமர்சனங்கள் வரவில்லை. ஓடிடியில் வந்த பிறகு பல நல்ல விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன.

https://www.facebook.com/share/p/3h3dNHnFyhJ51hde/

https://www.facebook.com/share/p/TzHwfyA4y375QnFw/

  • கருத்துக்கள உறவுகள்

https://www.facebook.com/share/p/EXy8p3crXdkGhfqC/

விசிலடிச்சான் குஞ்சுகளுக்கு இந்தப்பம் பிடிக்காது. அதனால்தான் தீயேட்ரில் படம் நன்றாக ஓடவில்லை. இந்தப்படத்திற்கு சி0ல விருதுகள் கிடைக்க வாய்ப்புண்டு.

மெய்யழகன்: வெப்பம் மிகுந்த நாளில் குளிரோடையில் கால்களை நனைத்த மாதிரி ஒரு அனுபவம்.

கோடை காலத்தில் தாகத்துடன் இருக்கும் போது எவராவது சில்லென குளிரும் lemon juice தரும் போது கிடைக்கும் அந்த பேரானந்தம்.

மனசையும் இடைக்கிடை கண்களையும் பனிக்க வைத்த படம்.

ஊருக்கு கன நாட்களின் பின் போன, பழகிய நண்பர்களை, உறவுகளை மீண்டும் கண்டு மெய்சிலிர்த்த அனுபவங்களை எமக்கு இப் படம் மீண்டும் அருட்டுகின்றது..

அதுவும் அந்த சைக்கிள்!

அருமையான படம்!

2 hours ago, புலவர் said:

https://www.facebook.com/share/p/EXy8p3crXdkGhfqC/

விசிலடிச்சான் குஞ்சுகளுக்கு இந்தப்பம் பிடிக்காது. அதனால்தான் தீயேட்ரில் படம் நன்றாக ஓடவில்லை. இந்தப்படத்திற்கு சி0ல விருதுகள் கிடைக்க வாய்ப்புண்டு.

நல்லதொரு விமர்சனம்!

  • கருத்துக்கள உறவுகள்

விமசனங்களின் எதிர்பார்ப்புகள் எதுவிமின்றி படம் பார்த்தால், இர்சிக்க கூடியதாக இருக்கும் என நினக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

https://www.facebook.com/share/p/3UMgeJLADBq9DiJt/

இந்தப்படம் தியேட்டருக்கு வந்து பல காலமாகி விட்டது. அப்போது  இல்லாத அளவுக்கு எந்தப்பட்த்திற்குமில்லாத அளவு விமர்சனங்கள் இப்போது படம் OTT வந்தவுடன் வந்து குவிந்து கொண்டே இருக்கிறது. எல்லாம் நேர்மறையான விமர்சனங்கள். படம் மிகவும் மெசுவாகப் போகின்றது என்றாலும் இந்தக்கதைக்கு அதுதான் நல்லது போலத் தெரிகிறது. தவறவிடாமல்பாருங்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.