Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

தமிழரசுக்கட்சியின் அனைத்து பொறுப்புகளையும் துறக்கிறார் மாவை!

adminOctober 7, 2024
Mavai.jpg

இலங்கை தமிழரசுக் கட்சியின் அனைத்து பொறுப்புகளையும் துறப்பதற்கு அதன் தலைவர் மாவை சேனாதிராசா தீர்மானித்துள்ளார்.

பதவியை துறந்தாலும் அவர் கட்சி உறுப்பினராக தொடர்ந்தும் பதவி வகிப்பாரென  தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை தமிழரசுக் கட்சியின் கொழும்பு கிளை முக்கியஸ்த்தர் சட்டத்தரணி கே.வி தவராசா தமிழரசுக்கட்சியில் இருந்து விலகுவதாக ஏற்கனவே அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
https://globaltamilnews.net/2024/207216/

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

நல்ல காலம் பிறக்குது

நல்ல காலம் பிறக்குது....

Edited by விசுகு
  • Haha 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted
44 minutes ago, கிருபன் said:

பதவியை துறந்தாலும் அவர் கட்சி உறுப்பினராக தொடர்ந்தும் பதவி வகிப்பாரென  தெரிவிக்கப்படுகிறது.

உறுப்பினராக இருப்பது சரி ....இனியாவது சும்மா இருக்காமல் நீங்கள் இளமைக்காலத்தில் தமிழ்தேசியத்திற்கு செய்த நல்ல விடயங்களை சொல்லி இளைஞர்களை தமிழ்தேசிய அரசியல் மயப்படுத்துங்கள்...பதவி இல்லாமல் செயல் படுவது இலகுவான காரியம்...
 
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
57 minutes ago, putthan said:

உறுப்பினராக இருப்பது சரி ....இனியாவது சும்மா இருக்காமல் நீங்கள் இளமைக்காலத்தில் தமிழ்தேசியத்திற்கு செய்த நல்ல விடயங்களை சொல்லி இளைஞர்களை தமிழ்தேசிய அரசியல் மயப்படுத்துங்கள்...பதவி இல்லாமல் செயல் படுவது இலகுவான காரியம்...
 
உளுத்துப்போன மரம் எரிக்கவும் உதவாது . .........!

இனி ஈஸிசேரில் கிடந்து அண்ணாந்து பார்த்து பல தலைமுறைக்கு சொத்து சேர்த்தாச்சுது, ஆனால்  இந்த மக்களுக்கு என்ன நன்மை செய்தேன் என்று நினைக்கும்பொழுது கண்ணோரம் கண்ணீர் உருளும் .........!

  • Like 1
  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இருபத்தைந்து வருடத்துக்கு முன்னம் ஓய்வுக்கு போயிருக்க வேண்டி ஆள்,
இவர் பாராளுமன்ற உறுப்பினராக இருந்து தனது இனத்துக்கு செய்த சேவை பூச்சியம். 
ஆனால்.... தனக்கும் குடும்பத்திற்கும்  அளப்பரிய சேவை ஆற்றியுள்ளார். 😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, putthan said:

உறுப்பினராக இருப்பது சரி ....இனியாவது சும்மா இருக்காமல் நீங்கள் இளமைக்காலத்தில் தமிழ்தேசியத்திற்கு செய்த நல்ல விடயங்களை சொல்லி இளைஞர்களை தமிழ்தேசிய அரசியல் மயப்படுத்துங்கள்...பதவி இல்லாமல் செயல் படுவது இலகுவான காரியம்...
 
உங்கள் நம்பிக்கை மலர்ந்தால் நன்மையே.
நட்பார்ந்த நன்றியுடன் 
நொச்சி

30 minutes ago, suvy said:

கண்ணீர் உருளும் .........!

நான் நினைக்கிறேன்... ஆனந்தக் கண்ணீர் உருளும் என்று எழுதநினைத்திருப்பீர்கள் என்று..
நட்பார்ந்த நன்றியுடன் 
நொச்சி

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, suvy said:

உளுத்துப்போன மரம் எரிக்கவும் உதவாது . .........!

இனி ஈஸிசேரில் கிடந்து அண்ணாந்து பார்த்து பல தலைமுறைக்கு சொத்து சேர்த்தாச்சுது, ஆனால்  இந்த மக்களுக்கு என்ன நன்மை செய்தேன் என்று நினைக்கும்பொழுது கண்ணோரம் கண்ணீர் உருளும் .........!

அதிகம் கண்ணீரை விடாதீர்கள். பின்னரும் தேவை. உறுப்பினர் என்ற அட்டையில் எல்லாமே இருக்கிறது. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மாவை அண்ணா போயிட்டீங்களா....
ஐயகோ இனி உங்கள் தணல் பறக்கும் உங்கள் பேச்சுக்களை கேட்கவே முடியாதா?

Vaseegara Tamil Movie | Comedy Scenes | Vijay | Sneha | Vadivelu |  Manivannan on Make a GIF

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, விசுகு said:

நல்ல காலம் பிறக்குது

நல்ல காலம் பிறக்குது....

சுமந்திரனும் வெளியே போனால் தான், தமிழரசு கட்சிக்கு நல்ல காலம்.
அதுவரை... வாய்ப்பில்லை ராஜா.  😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 minutes ago, குமாரசாமி said:

மாவை அண்ணா போயிட்டீங்களா....
ஐயகோ இனி உங்கள் தணல் பறக்கும் உங்கள் பேச்சுக்களை கேட்கவே முடியாதா?

Vaseegara Tamil Movie | Comedy Scenes | Vijay | Sneha | Vadivelu |  Manivannan on Make a GIF

யூ  டியுப்பில் போடுவார் நாங்கள் பார்க்கலாம் ,கேட் கலாம்

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.