Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

இலங்கை -இந்திய மீனவர் பிரச்சினை : சென்னையில் உள்ள இலங்கை துாதரகம் முற்றுகை ?

இலங்கை -இந்திய மீனவர் பிரச்சினை : சென்னையில் உள்ள இலங்கை துாதரகம் முற்றுகை ?

இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து தாக்கப்படும் தமிழக மீனவர்களை பாதுகாக்க கோரியும், தற்போது இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்களை மீட்க கோரியும், மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண கோரியும் சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை இன்று முற்றுகையிட போவதாக பா.ம.க. அறிவித்திருந்தது.

அதன்படி வள்ளுவர் கோட்டம் அருகே பா.ம.க.வினர் திரண்டனர். இந்த போராட்டத்திற்கு முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே.மூர்த்தி, பா.ம.க. பொருளாளர் திலகபாமா ஆகியோர் தலைமை தாங்கினர்.

மேலும் சத்ரிய நாடார் இயக்க நிறுவனர் சந்திரன் ஜெயபால், தமிழ்நாடு நாடார் சங்க தலைவர் முத்து ரமேஷ் நாடார், நெல்லை தூத்துக்குடி நாடார் மகிமை பரிபாலன சங்க தலைவர் ஆனந்தராஜ், தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை மாநில ஒருங்கிணைப்பாளர் அருண்குமார் உள்பட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களும் பங்கேற்றனர்.

மேலும் பாதிக்கப்பட்ட மீனவர் கிராமங்களான தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளம் உள்பட பல்வேறு கிராமங்களை சேர்ந்த மீனவர் பிரதிநிதிகளும் கலந்து கொண்டார்கள். போராட்டத்தில் ஏ.கே.மூர்த்தி பேசும்போது, “கைது செய்யப்படும் மீனவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது.

இலங்கை சிறையில் மொட்டை அடித்து அவமானப்படுத்துகிறார்கள். கச்சத்தீவை தாரை வார்த்த தமிழக அரசுக்கு மீனவர்கள் படும் பாடு தெரியவில்லையா? இந்த பிரச்சனைக்கு தமிழக அரசு தீவிர அழுத்தம் கொடுத்து நிரந்தர தீர்வுகாண முன்வர வேண்டும். தமிழக மீனவர்களும் இந்திய மீனவர்களே என்பதை கருத்தில் கொண்டு இந்த பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும்.

எல்லையில் இந்திய மீனவர்கள் சுதந்திரமாக மீன்பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இரு நாட்டு சிறைகளிலும் வாடும் இலங்கை மற்றும் இந்திய மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும்.

உடமைகளை திருப்பிக் கொடுக்க வேண்டும். இரு நாட்டு பிரதிநிதிகள் குழு அமைத்து பேச்சுவார்த்தை மூலம் உடனடி தீர்வை எட்ட வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

அதைத்தொடர்ந்து இலங்கை தூதரகத்தை முற்றுகையிட புறப்பட்டார்கள் அவர்களை தடுத்து நிறுத்திய பொலிசார் 5 பேரை மட்டும் மனு கொடுக்க அழைத்து சென்றனர்.

https://athavannews.com/2024/1403168

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மீனவர்கள் மீதான அடக்குமுறையை கண்டித்து சென்னையில் இலங்கை தூதரகம் முற்றுகை

09 OCT, 2024 | 12:07 PM
image

சென்னை: தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் அடக்குமுறையைக் கண்டித்து, சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம் பாமக சார்பில் நேற்று நடைபெற்றது.

வங்கக்கடலில் மீன் பிடிக்கச்செல்லும் தமிழக மீனவர்கள்அத்துமீறி கைது செய்யப்படுவதோடு, ஆண்டுக்கணக்கில் சிறை தண்டனை, கோடிக்கணக்கில் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இவற்றைக் கண்டித்து பாமக சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் இருந்து பேரணியாகச் சென்று இலங்கை தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம் நேற்று நடைபெற்றது.

கட்சியின் இணை பொதுச்செயலாளர் ஏ.கே.மூர்த்தி, பொருளாளர் திலகபாமா தலைமையில் நடந்த போராட்டத்தில் கட்சியினர், பல்வேறு அமைப்புகள், மீனவர் பிரதிநிதிகள் பங்கேற்றனர். இலங்கை தூதரகத்தை முற்றுகையிட முயன்ற அவர்களை தடுத்துநிறுத்திய போலீஸார், 5 பேரைமட்டும் மனு கொடுக்க அழைத்துச் சென்றனர்.

அப்போது, செய்தியாளர்களிடம் பாமக பொருளாளர் திலகபாமா கூறியதாவது: இலங்கை கடற்படையினரால் 162 தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். 192 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பிடிபட்டுள்ள படகுகள் மத்திய அரசால் மானிய விலையில் வழங்கப்பட்டவை. பிரதமர்பெயரால் வழங்கிய படகுகள் இன்னொரு நாட்டில் சிறைபிடிக்கப்பட்டுள்ளன.

கடந்த காலங்களில் இந்திய - இலங்கை மீனவர்கள் எந்தவித பிரச்சினையும் இன்றி மீன்பிடித்தனர். அதேபோன்ற ஒருநிலையை மீண்டும் உருவாக்கித்தர வேண்டும். அதற்கு இரு நாட்டு பிரதிநிதிகளும் அடங்கிய குழு அமைத்து, மீனவர்கள் தொடர்பான பிரச்சினைகள் ஏற்படும் போதெல்லாம் பேச்சுவார்த்தை மூலம் உடனடியாக தீர்வு காணப்பட வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

https://www.virakesari.lk/article/195830

  • கருத்துக்கள உறவுகள்
Posted
18 minutes ago, ஏராளன் said:

கடந்த காலங்களில் இந்திய - இலங்கை மீனவர்கள் எந்தவித பிரச்சினையும் இன்றி மீன்பிடித்தனர். அதேபோன்ற ஒருநிலையை மீண்டும் உருவாக்கித்தர வேண்டும். அதற்கு இரு நாட்டு பிரதிநிதிகளும் அடங்கிய குழு அமைத்து, மீனவர்கள் தொடர்பான பிரச்சினைகள் ஏற்படும் போதெல்லாம் பேச்சுவார்த்தை மூலம் உடனடியாக தீர்வு காணப்பட வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

முடியாது  அது எப்படி முடியும்?????   

கடந்த காலத்தில் இலங்கை பொருளாதார தடைகளை விதித்து இருந்தது   தமிழர்கள் வாழும் பகுதிகளில்  

எரிபொருள்கள் 

உணவுப் பொருள்கள் 

மின்சார உபகரணங்கள்  இதுபோன்ற ஏனைய பொருள்கள் 

தட்டுப்பாடுகள்  நிலவியது இவற்றை எல்லாம் 

தமிழக மீனவர்கள் கடத்தி தந்தார்கள்  கடந்த காலப்பகுதியில் 

இப்போது   இந்த தேவைகள் நமக்கு இல்லை   எனவே…  எல்லைகள் தண்டினால்.  இலங்கை சிங்களவருடன்.  சேர்ந்து 

உங்களை பிடித்து மொட்டை அடிப்போம்.  ஒரு கோடி இல்லை  அதற்கு மேலும்  தண்டனைகள் விதிப்போம்.   😂🤣🙏

மேலும்  கடந்தகாலங்களில் நாங்கள் தங்குவதற்கு    வாழ்வதற்கு   

இது போன்ற விடயங்களுக்கு  தமிழ்நாடு தேவைப்பட்டது 

இப்போது தேவையில்லை     எங்களுக்கு வாழ்வாதாரத்துக்கு மீன்கள் வேண்டும்   நன்றி வணக்கம்…   🙏

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, Kandiah57 said:

தவறான வாதம் அண்ணை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 minutes ago, ஏராளன் said:

தவறான வாதம் அண்ணை.

ஒம்  எனக்கும் தெரியும் ஆனால்  கடந்த காலங்களில் இந்த பிரச்சனை இல்லை என்கிறார்கள்   பிழையா ??? அல்லது சரியா?? மேலும்    கடந்த காலப்பகுதியில்  தமிழக மீனவர்கள்  இலங்கை கடலில் மீன்கள் பிடிக்கவில்லையா ?? பிடித்தார்களா ?? 

மொட்டை அடிப்பது  கோடிக்கணக்கில் அபராதம் விதிப்பு  இவற்றை யாராவது எதிர்ப்பு தெரிவித்துள்ளார்களா?? 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உலக வல்லரசாக துடிக்கும் இந்தியாவுக்கு 

அடுத்தவனின் கடலில் போய் மீன் பிடிக்கக் கூடாது என்பது தெரியாதா?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, Kandiah57 said:

முடியாது  அது எப்படி முடியும்?????   

கடந்த காலத்தில் இலங்கை பொருளாதார தடைகளை விதித்து இருந்தது   தமிழர்கள் வாழும் பகுதிகளில்  

எரிபொருள்கள் 

உணவுப் பொருள்கள் 

மின்சார உபகரணங்கள்  இதுபோன்ற ஏனைய பொருள்கள் 

தட்டுப்பாடுகள்  நிலவியது இவற்றை எல்லாம் 

தமிழக மீனவர்கள் கடத்தி தந்தார்கள்  கடந்த காலப்பகுதியில் 

இப்போது   இந்த தேவைகள் நமக்கு இல்லை   எனவே…  எல்லைகள் தண்டினால்.  இலங்கை சிங்களவருடன்.  சேர்ந்து 

உங்களை பிடித்து மொட்டை அடிப்போம்.  ஒரு கோடி இல்லை  அதற்கு மேலும்  தண்டனைகள் விதிப்போம்.   😂🤣🙏

மேலும்  கடந்தகாலங்களில் நாங்கள் தங்குவதற்கு    வாழ்வதற்கு   

இது போன்ற விடயங்களுக்கு  தமிழ்நாடு தேவைப்பட்டது 

இப்போது தேவையில்லை     எங்களுக்கு வாழ்வாதாரத்துக்கு மீன்கள் வேண்டும்   நன்றி வணக்கம்…   🙏

அவசரத்திற்கு உங்களுக்கு நான் உதவி செய்தேன் கந்தையர் . ஆதலால் உங்கள் சொத்தை எனக்கு எழுதித் தாங்கோ ... சரியே,......🤦🏼‍♂️

2 hours ago, Kandiah57 said:

ஒம்  எனக்கும் தெரியும் ஆனால்  கடந்த காலங்களில் இந்த பிரச்சனை இல்லை என்கிறார்கள்   பிழையா ??? அல்லது சரியா?? மேலும்    கடந்த காலப்பகுதியில்  தமிழக மீனவர்கள்  இலங்கை கடலில் மீன்கள் பிடிக்கவில்லையா ?? பிடித்தார்களா ?? 

மொட்டை அடிப்பது  கோடிக்கணக்கில் அபராதம் விதிப்பு  இவற்றை யாராவது எதிர்ப்பு தெரிவித்துள்ளார்களா?? 

எப்ப சொத்தை எழுதுவதாக உத்தேசம்? 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, Kapithan said:

அவசரத்திற்கு உங்களுக்கு நான் உதவி செய்தேன் கந்தையர் . ஆதலால் உங்கள் சொத்தை எனக்கு எழுதித் தாங்கோ ... சரியே,......🤦🏼‍♂️

எப்ப சொத்தை எழுதுவதாக உத்தேசம்? 

என்னுடன் சொத்துக்கள் இல்லை   🙏நான் தான் இருக்கிறேன்  

உங்களுடன்  வந்து இருக்கட்டுமா?? கனடாவில் 😂🤪

29 minutes ago, ஈழப்பிரியன் said:

உலக வல்லரசாக துடிக்கும் இந்தியாவுக்கு 

அடுத்தவனின் கடலில் போய் மீன் பிடிக்கக் கூடாது என்பது தெரியாதா?

அப்படி கேளுங்கள்   இந்தியா என்று 

தமிழன்  தமிழ்நாட்டுக்காரன். என்று கேட்க வேண்டாம் 🙏🤪

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உலகளவில் தடை செய்யப்பட்ட bottom trawling மீன் பிடி முறையை வைத்து கொண்டு ஆ ஊ என்று சத்தம் போடுகிறார்கள் .

அந்த முறை மூலம் உலகளவில் அழிந்து வரும் ஆமை இனம்களின் அழிவு கூடுகின்றது என்று போங்கடா உங்க மீன் இறால் வேணாம் என்று அமெரிக்கா தடை விதித்தது அப்ப கூட அவங்களுக்கு அறிவு வரவில்லை .

இலங்கையின் கடல் அநேக பகுதி சூரிய ஒளி இலகுவாக எட்டும் ஆழம் குறைந்த கடல் பகுதி மீன்கள் இலகுவாக இனபெருக்கம் செய்யும் கருவறை அந்த இடம்களை கருவறுக்க 5௦ அறுபது bottom trawling வள்ளம்கள் ஒரே நேரத்தில் நாசம் பண்ணுவதை யார்தான் பார்த்து கொண்டு இருப்பார்கள் ?

  • Like 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இங்கு பிரச்சனை என்னவென்றால் bottom trawling  ரோலர்கள் வைத்து இருக்கும் உரிமையாளர்களே பிரச்சனைக்குரியவர்கள் .எல்லை தாண்டி ரோலிங் பண்ணும்  அனைத்து றோலர்களையும் பறிமுதல் செய்யனும் இல்லை பழைய வாகனம்களை அவர்கள் ரோலிங் பண்ணும் இடங்களில் போட்டு விடனும் டக்கி கொஞ்சம் இந்த வேலை ஆரம்பத்தில் செய்து பின் அடங்கி விட்டார் அநேகமா றோலர் உரிமையாளர்களிடம் பெட்டி வாங்கி இருப்பார் .

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, ஈழப்பிரியன் said:

உலக வல்லரசாக துடிக்கும் இந்தியாவுக்கு 

அடுத்தவனின் கடலில் போய் மீன் பிடிக்கக் கூடாது என்பது தெரியாதா?

ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா த‌மாஸ் ப‌ண்ணாதைங்கோ

இந்தியா ஒரு போதும் வ‌ல்ல‌ர‌சு நாடாக‌ ஆக‌ போவ‌து கிடையாது

2020க‌ளில் இந்தியா வ‌ல்ல‌ர‌சு நாடாக‌ வ‌ந்துடும் என்று வ‌டை சுட‌ தொட‌ங்கின‌வை இன்னும் அதே புளிச்ச‌ மாவில் சுட்டு கொண்டு தான் இருக்கின‌ம்

ப‌ல‌ ம‌க்க‌ள் வாழும் நாட்டில் ம‌க்க‌ளுக்கு சரியான‌ க‌ழிவ‌றை வ‌ச‌தி இல்லை

எத்த‌னையோ கோடி இந்திய‌ர்க‌ள் இரவு நேர‌ உண‌வு இல்லாம‌ தூங்கினம்

இந்தியாவில் த‌மிழ் நாடு தொட்டு ம‌ற்ற‌ மானில‌ங்க‌ள் வ‌ரை ப‌ல‌ ஊர்க‌ளுக்கு மின்சார‌ வ‌ச‌தி இல்லை

உத்திர‌பிர‌தேஸ் பாட‌சாலைய‌ க‌ண் கொடுத்து பார்க்க‌ முடியாது

இந்தியா அர‌ச‌ ம‌ருத்துவ‌ம‌னைய‌ நேரில் போய் பார்த்தால் தெரியும் அசிங்க‌த்தின் வெளிப்பாடு 

இப்ப‌டி எவ‌ள‌வோ குறைக‌ள் இருக்கு சொந்த‌ நாட்டை ச‌ரி செய்ய‌ இதில‌ வ‌ல்ல‌ர‌சு விம்ப‌ம் வேர‌...........................இந்தியா ஒரு போதும் அபிவிருத்தி அடைந்த‌ நாடாக‌ வ‌ராது..........................ச‌ன‌த்தொகைய‌ பெருக்கி அதுக‌ளை ந‌ர‌க‌ வாழ்க்கை வாழ‌ வைக்க‌ தான் இப்ப‌த்த‌ ஆட்சியாள‌ர்க‌ள் விரும்புகின‌ம்..................

வ‌ல்ல‌ர‌சு ஆகிற‌து இருக்க‌ட்டும் முடிந்தால் உல‌க‌ புக‌ழ் பெற்ற‌ விளையாட்டான‌ ஒலிம்பிக்கில் இந்திய‌ர்க‌ள் சாத‌னை செய்ய‌ முய‌ற்ச்சிக்க‌ட்டும்....................................

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
9 hours ago, Kandiah57 said:

மொட்டை அடிப்பது  கோடிக்கணக்கில் அபராதம் விதிப்பு  இவற்றை யாராவது எதிர்ப்பு தெரிவித்துள்ளார்களா?? 

அண்ணே நீங்க பிழையாக விளங்கி கொண்டு உள்ளீர்கள் அவங்கடை தமிழ்  நாட்டிலே கூட இரண்டுமாதம் bottom trawling ரோலிங் பண்ணகூடாது என்று ஏப்ரல் தொடக்கம் யூன் வரை தடை மற்ற மீன் பிடி முறைகள் அனுமதி உள்ளது வருஷம் முழுவதும் .

முடிந்தால் அதிராம் பட்டினம் இல்லை கேரளா பக்கம் இதே ஆக்களை ரோலிங் பண்ண சொல்லுங்க பிடித்து லாடம் கட்டி அனுப்புவாங்க அவங்கடை சொந்த நாட்டிலேye  கூட அந்த நிலைமை .

இங்கு மொட்டை அடித்தது ஒருமுறைக்கு மேல் பிடிபடுபவர்களுக்கு தண்டனை என்று சொல்கிறார்கள் உண்மை பொய் தெரியாது .இங்கு சிங்கள நேவி அவர்களை பிடிப்பது தண்டனை கொடுப்பது தேவையற்ற மீன் விலை ஏற்றம் வேண்டாம் எனும் சிங்கள  சுய நல போக்கேதவிர இரு இனமும் சேர்ந்து தமிழ்நாட்டு மீனவர்களை தண்டனை கொடுப்பது இல்லை அடுத்து மீன்கள் பிரசவிக்கும் ஆழம் குறைந்த மன்னார் வளைகுடா  பருத்திதுறைக்கு மேல் உள்ள ஆழம் குறைந்த கண்டமேடை போன்ற இலங்கையின் இயற்கையான வளத்தை தமிழ்நாட்டு bottom trawling மீன்பிடி ரோலர் உரிமையாளர்கள் அள்ளி செல்கிறார்கள் என்ற விழிப்பு உணர்வு காரணமாக இருக்கலாம் .

மேலும் றோலர்களில் வரும் தொழிலாளிகளுக்கு தாங்கள் கடலை நாசம் பண்ணுகிறோம் என்ற விழிப்பு உணர்வு இல்லாதவர்கள் உண்மையான குற்றவாளிகள் ரோலர்கள் வைத்து இருக்கும் உரிமையாளர்களே  .

Edited by பெருமாள்
எழுத்து பிழை
  • Like 1

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.