Jump to content

அமெரிக்க புளோரிடா மாநிலத்தை நோக்கி நகரும் பாரிய புயல்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க புளோரிடா மாநிலத்தை நோக்கி நகரும் பாரிய புயல் மணிக்கு 150 இலிருந்து 175 மைல்கள் (ஏறத்தாள 240-280 கிலோ)வேகத்தில் தாக்கலாம் என்று 3-4 நாட்களாக விடாது சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

புளோரிடா மாநிலத்தில் வசிக்கும் மேற்குக் கரையை அண்டி வாழ்பவர்களை அந்தப் பகுதிகளை விட்டு வெளியேறுமாறு சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள்.

1300 பெற்றோல் நிரப்பு நிலையங்களில் பெற்றோல் தீர்ந்துவிட்டதாக சொல்கிறார்கள்.கடைகளில் சாப்பாட்டுச் சாமான் கழிப்பறையில் பாவிக்கும் காகிதங்கள் என்று எல்லாமே தீர்ந்துவிட்டதாக சொல்கிறார்கள்.

1,300 Florida gas stations have run out of fuel. Hurricane Milton could cause even more trouble.

பாரிய இடப்பெயர்ச்சியால் நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் நெரிசலாக உள்ளது.

Link to comment
Share on other sites

புளோரிடா முழுவதும் பாரிய புயல் தாக்க இருப்பதாகவும் கிட்டத்தட்ட 100 வருடங்களுக்கு (97) பிறகு இப்புயல் இவ்வளவு வேகமாக தாக்க உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புளோரிடாவை அச்சுறுத்தும் மில்டன் சூறாவளி!

புளோரிடாவை அச்சுறுத்தும் மில்டன் சூறாவளி!

மில்டன் சூறாவளி புளோரிடா கடற்கரையை நோக்கி நெருங்கும் போது, பொது மக்களின் உயர் ஆபத்து மற்றும் சேதங்கள் குறித்து அமெரிக்க அதிகாரிகள் எச்சரித்து வருகின்றனர்.

அண்மைய ஆண்டுகளில் வடக்கு அட்லாண்டிக்கில் உருவாகும் மிக சக்திவாய்ந்த புயல்களில் ஒன்று மில்டன்.

ஹெலீன் சூறாவளி அமெரிக்கா முழுவதும் கணிசமான சேதத்தை ஏற்படுத்திய இரண்டு வாரங்களுக்குப் பின்னர் இந்த சூறாவளி உருவாகியுள்ளது.

புயல் புதன்கிழமை (09) தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தேசிய சூறாவளி மையம் (NHC), மில்டன் உள்ளூர் நேரப்படி புதன்கிழமை இரவு அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் “மிகவும் ஆபத்தான சூறாவளியாக” கரையைக் கடக்கும் என்று கூறியுள்ளது.

மில்டன் சுமார் ஒரு நூற்றாண்டில் இப்பகுதியைத் தாக்கும் மிக மோசமான புயலாக இருக்கலாம்.

மில்டன் ஞாயிற்றுக்கிழமை ஒரு வகை சூறாவளியாக மாறியது மற்றும் மெக்சிகோவின் யுகடன் தீபகற்பத்தை கடந்த பிறகு மெக்ஸிகோ வளைகுடா வழியாக கிழக்கு நோக்கி சீராக நகர்கிறது.

இது மிகவும் சக்திவாய்ந்த சூறாவளி பிரிவில் வைக்கப்பட்டது.

https://athavannews.com/2024/1403304

 

@suvy  இந்தச் சூறாவளிக்கு "மில்ரன்" என்று ஆணின் பெயர் வைத்துள்ளார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, தமிழ் சிறி said:

இது மிகவும் சக்திவாய்ந்த சூறாவளி பிரிவில் வைக்கப்பட்டது.

நீர்வேலியனையும். யசோவையும் எழுப்பி விடுங்கள்     தொடர்ந்து நித்திரதேவியை  அணைத்து கொண்டு கிடக்கிறார்கள். போலுள்ளது 🙏😂.  வெள்ளமும் காற்றும் தம்பதிகளாக்.  வீட்டுக்குள் வரப்போகிறார்கள் 🤣😀

  • Haha 5
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Kandiah57 said:

நீர்வேலியனையும். யசோவையும் எழுப்பி விடுங்கள்     தொடர்ந்து நித்திரதேவியை  அணைத்து கொண்டு கிடக்கிறார்கள். போலுள்ளது 🙏😂.  வெள்ளமும் காற்றும் தம்பதிகளாக்.  வீட்டுக்குள் வரப்போகிறார்கள் 🤣😀

🤣........

இந்தச் சூறாவளி கிழக்குக்கரையில், நாங்கள் இருப்பது மேற்குக்கரையில். 

மேற்குக்கரை அப்பப்ப அதிரும், கிழக்குக்கரை அடிக்கடி பறக்கும்..........

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, ரசோதரன் said:

🤣........

இந்தச் சூறாவளி கிழக்குக்கரையில், நாங்கள் இருப்பது மேற்குக்கரையில். 

மேற்குக்கரை அப்பப்ப அதிரும், கிழக்குக்கரை அடிக்கடி பறக்கும்..........

தகவல்களுக்கு நன்றி யசோதரன்.   அப்படியிருந்தும்   அமெரிக்கர்கள் தான்  உலகை அதிரவும். பறக்கவும். பண்ணுறார்கள்.  🤣.  ஒருவர் 24 மணிநேரமும்  தொலைக்காட்சி முன்பே இருந்து  விதம் விதமான படங்களை பதிகிறார்கள்.  🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

நீர்வேலியனையும். யசோவையும் எழுப்பி விடுங்கள்     தொடர்ந்து நித்திரதேவியை  அணைத்து கொண்டு கிடக்கிறார்கள். போலுள்ளது 🙏😂.  வெள்ளமும் காற்றும் தம்பதிகளாக்.  வீட்டுக்குள் வரப்போகிறார்கள் 🤣😀

கந்தையா நீங்க யசோவையும் என்று எழுதியதைப் பார்த்து 

அட நீர்வேலியானின் மனைவியாக்கும் என்று எண்ணிவிட்டேன்.

அப்புறமா தான் ஓடிப் பிடித்தேன்.

1 hour ago, ரசோதரன் said:

🤣........

இந்தச் சூறாவளி கிழக்குக்கரையில், நாங்கள் இருப்பது மேற்குக்கரையில். 

மேற்குக்கரை அப்பப்ப அதிரும், கிழக்குக்கரை அடிக்கடி பறக்கும்..........

நியூயோர்க் வெடிச் சத்தம் தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

New-Project-7-5.jpg?resize=750,375&ssl=1

புளோரிடாவை தாக்கிய ‘மில்டன் சூறாவளி’

மில்டன் சூறாவளி மணிக்கு சுமார் 160 கிலோ மீற்றர் வேகத்தில் புதன்கிழமை (09) புளோரிடாவின் நகரங்களை தாக்கியது.

“மிகவும் ஆபத்தான” மற்றும் “உயிர் அச்சுறுத்தும்” மில்டன் சூறாவளி புளோரிடாவின் சியஸ்டா கீயில் கரையைக் கடந்தது என்று அமெரிக்க தேசிய சூறாவளி மையம் தெரிவித்துள்ளது.

புயல் இறுதி மணிநேரத்தில் தெற்கே தடம் புரண்டது மற்றும் தம்பாவிற்கு தெற்கே 70 மைல் (112 கிலோமீட்டர்) தொலைவில் உள்ள சரசோட்டாவிற்கு அருகிலுள்ள சியஸ்டா கீயில் நிலச்சரிவை ஏற்படுத்தியது.

செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் 16 அங்குலங்கள் (41 சென்டிமீட்டர்) மழை பதிவானதால், தம்பா பகுதியில் நிலைமை இன்னும் ஒரு பெரிய அவசரநிலையாக இருந்ததுடன் தேசிய வானிலை சேவை திடீர் வெள்ளம் குறித்த எச்சரிக்கையை தூண்டியது.

இதனால், புளோரிடாவில் 2 மில்லியனுக்கும் அதிகமான வீடுகள் மற்றும் வணிகங்கள் மின்சாரம் இல்லாமல் இருந்ததுடன், மில்லியன் கணக்கான மக்கள் மாநிலத்தை விட்டு புதன்கிழமை வெளியேறினர்.

மாநிலத்தின் கிழக்கு கடற்கரையில் உள்ள செயின்ட் லூசி கவுண்டியில் இறப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன, இருப்பினும் இறப்புகளின் எண்ணிக்கை தெளிவாகக் கூறப்படவில்லை.

முன்னதாக, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், இது “ஒரு நூற்றாண்டில் மிகவும் அழிவுகரமான சூறாவளிகளில் ஒன்றாகும்” என்று கூறினார்.

புளோரிடா, ஜோர்ஜியா, தென் கரோலினா, டென்னசி, வர்ஜீனியா மற்றும் வட கரோலினாவில் குறைந்தது 225 பேரைக் கொன்ற ஹெலீன் சூறாவளி வளைகுடா கடற்கரையைத் தாக்கிய இரண்டு வாரங்களுக்குப் பிறகு மில்டன் சூறாவளியின் வருகை வந்துள்ளது.

https://athavannews.com/2024/1403471

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோரும் எதிர்பார்த்தளவுக்கு இல்லாமல் சூறாவழியின் வேகம் குறைந்தபடியால் உயிர் உடமைகளுக்கு சிறிய சேதாரங்களுடன் புளோரிடா மக்கள் தப்பியுள்ளனர்.

இதுவரை 4 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.

3 மில்லியன் மக்கள் மின்சாரம் இல்லாமல் இருக்கிறார்கள்.

பல வீடுகள் கட்டடங்கள் கூரையைக் காணவில்லை.சில வீடுகள் முற்றாக காற்றுடன் பறக்கிறது.

சிறிய சிறிய சூறாவழிகள் பல தாக்கியதால்த் தான் இப்படியான சேதங்கள்.

கடந்த சூறாவழியுடன் ஒப்பிடும் போது இது எதுவுமே என்ற மாதிரி இருக்கிறது.

பைடன் அரசுக்கு இப்போது மிகப்பெரும் சவால் இருக்கிறது.

கூடுதலான பணங்களை வசதிகளைக் கொட்டி புளோரிடா மாநிலத்தை தங்கள் பக்கம் வரவைக்க முயற்சி செய்வார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புளோரிடாவை புரட்டிபோடும் மில்டன் சூறாவளி- 'இது வாழ்வா சாவா என்ற விஷயம்'- எச்சரித்த பைடன்

மில்டன் சூறாவளி

பட மூலாதாரம்,GETTY IMAGES

10 அக்டோபர் 2024

மில்டன் சூறாவளி அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை தாக்கி கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது.

புளோரிடாவில் 80,000-க்கும் மேற்பட்ட மக்கள் முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். முப்பது லட்சத்திற்கும் அதிகமான வீடுகள் மற்றும் வணிக இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளன.

செயின்ட் லூசி கவுன்ட்டியின் கிழக்கு கடற்கரையில் மில்டன் சூறாவளியால் 4 பேர் உயிரிழந்தனர்.

மேற்கு கடற்கரையில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில், தண்ணீர் விநியோகம் துண்டிக்கப்பட்டது.

 

அதே நேரத்தில் புளோரிடாவில் வரும் நாட்களில் மேலும் வெள்ளப்பெருக்கு ஏற்படலாம் என அம்மாகாண ஆளுநர் ரான் டிசாண்டிஸ் தெரிவித்துள்ளார்.

"சில வாரங்களுக்கு முன்பு புளோரிடாவை தாக்கிய ஹெலன் சூறாவளியினால் ஏற்பட்ட பாதிப்பை விட தற்போது ஏற்பட்டிருப்பது 'மோசமான சூழ்நிலை அல்ல', என்றும் ஆளுநர் ரான் டிசாண்டிஸ் கூறினார்.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

அதி தீவிர பாதிப்பை ஏற்படுத்தும் சூறாவளி

மில்டன் சூறாவளி அதி தீவிர பாதிப்பை ஏற்படுத்தும் ஐந்தாம் வகை (category 5) சூறாவளி ஆகும். இந்த சூறாவளி மணிக்கு 270 கிலோமீட்டர் வேகத்தில் காற்றை வீசியது.

ஹெலன் சூறாவளி தாக்கிய இரண்டு வாரங்களுக்குள், புதன்கிழமை அன்று இரவு கடும் வேகத்தில் மில்டன் சூறாவளி புளோரிடாவை தாக்கியது.

பல ஆண்டுகளாக இல்லாத அளவிற்கு மக்களை வெளியேற்றும் பணியை அம்மாகாண அரசு மேற்கொண்டு வந்தபோது, 'இது வாழ்வா சாவா என்ற விஷயம்' எனக்கூறி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் புளோரிடா மக்களை தங்கள் வீடுகளை விட்டு வெளியேறுமாறு எச்சரிக்கை விடுத்தார்.

புளோரிடா

பட மூலாதாரம்,EPA

படக்குறிப்பு, புதன்கிழமை அன்று இரவு கடும் வேகத்தில் மில்டன் சூறாவளி புளோரிடாவை தாக்கியது.

பல்வேறு மக்கள் சூறாவளியில் இருந்து தப்பிக்க புளோரிடாவை விட்டு வெளியேறியதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. விமான நிலையங்களும் மூடப்பட்டன.

ஒரு நூற்றாண்டு காலத்தில் இந்த பகுதியைத் தாக்கும் மிக மோசமான சூறாவளியாக இது இருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்

புயலுக்கு முன் 31 கவுன்டிகள், மக்களை வெளியேறுமாறு உத்தரவு பிறப்பித்ததால் 70,000க்கும் மேற்பட்ட புளோரிடா மக்கள் அரசாங்க முகாம்களில் இருப்பதாக அமெரிக்க மத்திய அவசரகால மேலாண்மை ஆணையத்தின் தலைவர் டீன் கிறிஸ்வெல் பிபிசியின் ரேடியோ 4 டுடே நிகழ்ச்சியில் தெரிவித்தார்.

புளோரிடாவில் பெரும்பாலான பகுதிகளைத் தவிர, ஜார்ஜியா மற்றும் தெற்கு கரோலைனா பகுதிகளிலும் மில்டன் சூறாவளி பாதிப்பு ஏற்படுத்தியுள்ளது.

 
மணிக்கு 270 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசுகிறது.

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, மணிக்கு 270 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியது

புளோரிடா முழுவதும் புதன்கிழமை அன்று குறைந்தது 116 சூறாவளி எச்சரிக்கைகள் விடப்பட்டன என்று அம்மாகாண ஆளுநர் ரான் டிசாண்டிஸ் கூறினார். மாகாணத்தில் இதுவரை 19 முறை சுழற்காற்று வீசியதாக உறுதி செய்யப்பட்டுள்ளன.

மீட்பு பணிக்காக மாகாண அதிகாரிகள் சுமார் 10,000 தேசிய காவல் படை உறுப்பினர்களை அனுப்பியுள்ளனர். 20 மில்லியன் உணவுப் பொட்டலங்கள் மற்றும் 40 மில்லியன் லிட்டர் குடிநீர் மக்களுக்கு விநியோகிக்க தயாராக உள்ளது.

25 ஆண்டுகளில் தான் பார்த்த மிகவும் கடுமையான, சக்திவாய்ந்த புயல் என்று புளோரிடாவில் வசிக்கும் நபர் ஒருவர் கூறுகிறார்.

"மரங்கள் இவ்வளவு வளைந்ததை நான் பார்த்ததில்லை, இது உண்மையில் பயமாக இருந்தது", என்று பிபிசியிடம் ஒலாண்டோவில் வசிக்கும் ஃபில் பீச்சி கூறுகிறார்.

"இந்த புயலில் வலு குறைந்த பிறகுதான் இது ஏற்படுத்திய மோசமான பாதிப்பின் விளைவுகள் பற்றி தெரிய வரும்", என்றும் அவர் கூறினார்.

புளோரிடாவில் உள்ள டாம்பா நகரத்தில் 35 பேர் வெள்ளத்தில் இருந்து மீட்கப்பட்டனர்.

தற்போது மில்டன் சூறாவளியின் காற்றின் வேகம் மணிக்கு 129 கிலோமீட்டராகக் குறைந்துள்ளது.

புளோரிடாவில் பாதிப்புகளை ஏற்படுத்திய பிறகு, அது அட்லாண்டிக் பெருங்கடல் நோக்கி நகர்ந்துள்ளது.

ஆனால் மாகாணத்தின் கிழக்குப் பகுதிகளில் சூறாவளி காற்றும் மழையும் தொடரும் என்று வானிலை கணிப்பாளர்கள் எச்சரித்துள்ளனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/10/2024 at 21:31, ரசோதரன் said:

🤣........

இந்தச் சூறாவளி கிழக்குக்கரையில், நாங்கள் இருப்பது மேற்குக்கரையில். 

மேற்குக்கரை அப்பப்ப அதிரும், கிழக்குக்கரை அடிக்கடி பறக்கும்..........

FL, CA இரண்டில் எது திறம் ரசோதரன்? FL கியுபா பக்கம் என நினக்கின்றேன். CA மெக்ஸிகோ பக்கம். வீட்டு விலைகள், வேலவாய்ப்பு? இயற்கை அழகு, இனத்துவேசம் என்பவற்றில் ஏது சிற‌ந்தது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, colomban said:

FL, CA இரண்டில் எது திறம் ரசோதரன்? FL கியுபா பக்கம் என நினக்கின்றேன். CA மெக்ஸிகோ பக்கம். வீட்டு விலைகள், வேலவாய்ப்பு? இயற்கை அழகு, இனத்துவேசம் என்பவற்றில் ஏது சிற‌ந்தது?

என்ன தம்பி அமெரிக்காவில் குடியேறப் போறீங்களோ?

ஏன் உங்களுக்கு நியூயோர்க்கைப் பிடிக்காதோ?

இதுவரை 16 பேர் இறந்துள்ளனர்.

2.5 மில்லியன் மக்கள் இன்னமும் மின்சாரம் இல்லாமல் இருக்கிறார்கள்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, ஈழப்பிரியன் said:

இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

பல நாட்களுக்கு முன்பிருந்தே எச்சரித்துக் கொண்டு வந்ததால்... 
உயிர்ச் சேதம் ஒப்பிடடளவில் குறைவு என நினைக்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, தமிழ் சிறி said:

பல நாட்களுக்கு முன்பிருந்தே எச்சரித்துக் கொண்டு வந்ததால்... 
உயிர்ச் சேதம் ஒப்பிடடளவில் குறைவு என நினைக்கின்றேன்.

உண்மை தான்.

அத்துடன் ஆரம்பத்தில் மிகவேகமாக அளவு 5 இல் புயலின் வேகம் இருந்தது.புளோரிடா மண்ணைத் தொடும்போது இதன் அளவு 3 ஆகி குறைந்து குறைந்து அடுத்த  கரையை கடந்து அற்லாற்ரிக் கடலில் இறங்கும் போது அளவு 1 ஆகிவிட்டது.

தொடங்கிய வேகத்தில் அடித்திருந்தால் மிகப்பெரும் அழிவு வந்திருக்கும்.

பலருக்கு விருப்பமில்லாவிட்டாலும் அரசு சொன்னதற்கிணங்க வெளியேறிவிட்டார்கள்.

நிறைய பேருக்கு திடீரென இன்னொரு இடத்தில் போய் 2-3 நாட்களுக்கு தங்கும் வசதி இல்லை.

குறைந்த நேரத்தில் கூடிய மழைப்பொழிவு.இது தான் போன புயலிலும் நடந்தது.

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, colomban said:

FL, CA இரண்டில் எது திறம் ரசோதரன்? FL கியுபா பக்கம் என நினக்கின்றேன். CA மெக்ஸிகோ பக்கம். வீட்டு விலைகள், வேலவாய்ப்பு? இயற்கை அழகு, இனத்துவேசம் என்பவற்றில் ஏது சிற‌ந்தது?

அமெரிக்காவில் எங்களுக்கு உகந்த இடங்களில் இவை இரண்டுமே சிறந்தவை, கொழும்பான். 

இந்த இரண்டில் எது சிறந்தது என்றால், நான் கலிஃபோர்னியாவே சிறந்தது என்று சொல்வேன். வேலை வாய்ப்புகளில் கலிஃபோர்னியாவே ஆகச் சிறந்த மாநிலம். செலவு அதிகம் தான். ஆனால் பொதுவாகவே இங்கு சம்பளமும் அதிகம். வீட்டு விலைகள் இரண்டு மாநிலங்களிலும் அதிகம் என்றாலும், கலிஃபோர்னியாவில் வீட்டு விலை எக்கச்சக்கமாக கூடிப் போயிருக்கின்றது. இது ஒரு பெரிய பிரச்சனையே. 

கலிஃபோர்னியாவின், குறிப்பாக தென் கலிஃபோர்னியாவின், வருடம் முழுவதுமான காலநிலை மிகச் சிறந்தது. வருடத்தில் பத்து மாதங்கள் வெறும் ரீ சேட்டுடன் இரவு பத்து மணிக்கும் கிரவுண்டில் பந்து அடிக்கக் கூடிய காலநிலை.  

அமெரிக்காவின் மேற்குக்கரை ஒப்பீட்டளவில் துவேஷம் குறைந்த பிரதேசம். பொதுவாகவே இந்தப் பக்கம் உள்ள மக்கள் இறுக்கமும், பழைய நம்பிக்கைகளும் குறைந்தவர்கள்.

இரண்டுமே அழகானவை. இந்து சமுத்திரத்திற்கும், அத்திலாந்திக் சமுத்திரத்திற்கும் (புளோரிடா கரைகள்) அவ்வளவாக வித்தியாசம் இல்லை. ஆனால் பசுபிக் சமுத்திரம் (கலிஃபோர்னியா கரைகள்) எப்போதும் ஓங்கி ஓங்கி அடிக்கும். அத்துடன் எப்போதும் குளிரான கடல், அலாஸ்காவுடன் தொடர்பு இருப்பதால். நீண்ட, அகன்ற கடற்கரைகள், மலைகள், வெளிகள், தோட்டங்கள்.

கடைசியாக 1994ம் ஆண்டு பெரிய ஒரு பூமியதிர்வு கலிஃபோர்னியாவில் வந்தது. இங்குள்ள வீடுகளும், தெருக்களும், பாலங்களும், எல்லாமே பெரிய அதிர்வையும் தாங்கக் கூடிய வகைகளிலேயே கட்டப்படுகின்றன. 

என்னுடைய தெரிவு கலிஃபோர்னியா............. மிக நீண்ட நாட்களாக, 27 வருடங்கள், இந்த மாநிலத்தில் இருப்பதும் அதற்கு ஒரு காரணமாக இருக்கக்கூடும்.    

  • Like 2
  • Thanks 2
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஓம்…டிரம்ப் வெல்ல உதவும் குணங்களில் இதுவும் ஒன்று. தனக்கு தேவை என்றால் பழசை மறந்து விடுவார். தற்போதைய பிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சர் 2018 இல் டிரம்பை தூக்கி போட்டு மிதித்துள்ளார். ஆனால் அவர் பதவிக்கு வந்ததுமே, டிரம்ப் வெல்ல கூடும் என ஊகித்து, அமெரிக்கா போய், வான்சை சந்தித்து, அவர் மூலம் டிரம்பை ஷேப் பண்ணி விட்டார். ——— @குமாரசாமி @Kandiah57 @தமிழ் சிறி ஜேர்மன் நிதியமைச்சரை தூக்கி அடித்து கூட்டணியை உடைத்துள்ளார் சான்சிலர். தேர்தல் மேகம்கள் சூழுதோ? நேற்றுதான் குசா அண்ணை தேர்தல் வரும் எண்ட மாரி எழுதினவர்.
    • தடித்த குடியரசு பெண்மணி ஒருவர் கமலா ஜனாதிபதியானால் வெள்ளைமாளிகை முழுவதும் கறி மணமாகவே இருக்கும் என்றார். உஷாவின் மாளிகையில் எப்படி மணக்கும். இது சாதாரண வார்த்தைகள் இல்லை.   இதற்கு முன்னர் ரம்பை கிழிகிழி என்று கிழித்தார்.
    • சொத்து யாரது எண்டு சொல்லுங்கோ… கள்ள உறுதி முடிக்கிறம்… விக்கிறம்…🤣 இதென்ன என்ர உன்ர எண்டு பிரிச்சு பேசிகொண்டு. அப்படியா நாம் பழகிறோம்🤣
    • வேன்ஸ் இன் பின்புலம் மிக சுவாரசியமானது.  சிற்ரூரில் வாழ்க்கை, உழைக்கும் வர்க்க பின்புலம், இராணுவ உத்தியோகம், வெள்ளையினமல்லாத மனைவி என பல விடயங்களில் டிரம்புக்கு எதிரான வாழ்க்கை. மேலே பகிடி சொன்ன உழைக்கும், நடுத்தர மக்கள் ஏன், எப்படி வலது சிந்தனையால் ஈர்க்கப்படுகிறார்கள் என்பதற்கு ஒரு நல்ல உதாரணம். ஆனால் டிரம்ப்பை போலவே ஆளும் உளறுவாயன். டிரம்பை விட லூசுதனமாக மேடைகளில் பேசுவார். மைக் பென்ஸ் போல காலம்தாழ்த்தியாவது டிரம்பை எதிர்க்க கூட மாட்டார் என நினைக்கிறேன். டிரம்ப்பின் நாலு வருடத்தின் பின் டிரம்ப்பின் அரசியல் பிராண்டுக்கு வாரிசு இவரா இல்லை டிரம்பின் மகளா என்பதில் லடாய் ஆரம்பிக்கலாம்.
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.