Jump to content

விமல் வீரவன்சவின் கட்சி தேர்தலில் போட்டியிடவில்லை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
On 10/10/2024 at 09:38, விசுகு said:

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவை இரண்டாம் கோட்டாபய ஆக்குவதற்கான ஏகாதிபத்திய சதியில் எதிர்க்கட்சிகள் ஈடுபட்டுள்ளதாகவும், 

அவர் தான் மீண்டும் கம்பீரமாக வலம் வர ஒரு புளியம் கொம்பை வைத்திருக்கிறார். சிங்களம் மீண்டும் தனது உண்மையான முகத்தை காட்ட விரும்பும் போது அடுத்த ஜனாதிபதி இவராகக்கூட இருக்கலாம்.

இவரது கனவு கோத்தாவின் பின் ஒருகாலத்தில் தான் வரவேண்டுமென்றே இனவாதத்தைக் கையிலெடுத்து ஆடியவர். ஆனால், அறகலய கோத்தாவின் ஆட்சியை வீழ்தியதால் விதிமாறித் தடுமாறி நிற்கின்றார்.
நட்பார்ந்த நன்றியுடன் 
நொச்சி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 10/10/2024 at 14:56, Kavi arunasalam said:

கண்ணாடி முன் நின்று கேட்டுப்பாருங்கள்.

தமிழரை  இன்னும் இன்னும் அழிவுக்கு கொண்டு செல்லும் உங்கள் சிந்தனைக்கு ஒற்றுமை ஒன்றும் தேவையில்லை. சிந்தித்து முன்னேற வழி சொல்லுங்கள்.

“உப்புக் கல்லை வைரம் என்று சொன்னால் - அதை

ஒப்புக் கொள்ளும் மூடருக்கு முன்னால்

நாம் கதறி என்ன குழறி என்ன

 ஒன்றுமே  நடக்கவில்லை தோழா

ரொம்ப நாளா…”

தவறான புரிதல். நான் சிங்களத்தின் ஆற்றலாளர்களையே குறிப்பிட்டேன். தமிழர் தரப்பையல்ல. முதலில் மற்றவனை நோக்கி ஒற்றைவிரலைச் சுட்டும்போது, எம்மை நோக்கி நான்குவிரல் என்று யோசித்தால் முதலில் தாங்கள் கண்ணாடியின் முன்னின்று யோசித்திருக்க வேண்டும். 
நன்றியுடன் 
நொச்சி

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, nochchi said:

மற்றவனை நோக்கி ஒற்றைவிரலைச் சுட்டும்போது, எம்மை நோக்கி நான்குவிரல்

மூன்று

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 10/10/2024 at 20:12, விளங்க நினைப்பவன் said:

மக்கள் விடுதலை முன்னணியின் வரலாற்றுப் பாரம்பரியத்தை மதிக்கும் மற்றும் உரிமையுள்ள ஒரு இயக்கம் என்ற வகையில்இ ஜனாதிபதியை ஆட்சிக்குக் கொண்டு வந்த மக்களின்  ஆணையைப் பாதுகாப்பதற்கும் அந்த ஆணையை வழங்கிய மக்களின்இ எதிர்பார்ப்புகளுக்கு ஆதரவாக நிற்பதற்கும் தாங்கள் உறுதிபூண்டுள்ளோம் என  வீரவன்ச  விடுத்துள்ள  அறிக்கையில் தெரிவித்துள்ளார்.]

சரியாக சொல்லியுள்ளார் அவருக்கு பதிலாக அனுரகுமார திஸாநாயக்க வந்துள்ளார்

மேற்கினதும்,இந்தியாவினதும் தேவைகளுக்காக இவர் ஒதுங்கியிருக்கிறாரோ தெரியவில்லை...அடுத்த "அரகலய 2 "க்கு  இவர் தலைமை தாங்க கூடும்...இவருக்கும் ஜனாதிபதி கனவு இருக்குமல்ல‌😅

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, putthan said:

மேற்கினதும்,இந்தியாவினதும் தேவைகளுக்காக இவர் ஒதுங்கியிருக்கிறாரோ தெரியவில்லை...அடுத்த "அரகலய 2 "க்கு  இவர் தலைமை தாங்க கூடும்...இவருக்கும் ஜனாதிபதி கனவு இருக்குமல்ல‌😅

ஆள் கம்பி எண்ணவும் சந்தர்ப்பம் உள்ளது.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ஈழப்பிரியன் said:

ஆள் கம்பி எண்ணவும் சந்தர்ப்பம் உள்ளது.

ஊழலிசத்தின் காவலர்கள் .....தனக்கு போட்டியாக ஒர் சக்தி வருவதை விரும்பாத சக்தி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை, தவறு! ஜனாதிபதி தேர்தல் முடிவு வந்தபோது அனுராவுக்கு எதிராகவே கருத்து தெரிவித்தவர் இந்த விமல் வீரவன்ச. அது அவரது வயிற்றெரிச்சல். இந்த கட்சியின் முன்னாள் அங்கத்தவர், பெரும் பொறுப்பிலிருந்தவர் இவர். விமல் வீரவன்சவின் அனுரா எதிர்ப்பு அறிக்கை வந்த கையோடு, சஷி விமல் வீரவன்சவின், (இவரது மனைவியின்) பாஸ்போட் பிரச்சனையும், விசாரணையும் என்கிற செய்தியும் வந்தவுடன், விமல் செய்தியை மாற்றிப்போட்டு விட்டார், தப்பி விடலாம் என நினைக்கிறார். கோத்தா வெல்ல இவரும் தானே உழைத்தார்? இப்போ பெரும்பாலான கட்சிகள், மொத்தக்கட்சிகளும் அனுராவோடு கூட்டிணைவதற்கு ஏங்கிக்கொண்டிருக்கின்றன. எல்லோரும் ஊழலோடு சம்பந்தப்பட்டவர்கள், அவர்களை  வழிக்கு கொண்டுவந்து அடக்குவதற்கே அவர் முன்னெச்சரிக்கையாக சில அதிரடிகளை ஆரம்பித்தார். சில சவாலான  இடங்களில் தனது சிறந்த வேட்ப்பாளர்களை களமிறக்கினார்.  மகிந்த குடும்பத்தின் ஊழல் விசாரணை என்கிற செய்தி. அதனால் சிலர் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து பின்வாங்கினர். ஒவ்வொரு கட்சியின் நகர்வையும் கூர்ந்து கவனித்து களத்தில்இருந்து  தடுத்து நிறுத்த துல்லியமாக நிதானமாக காய் நகர்த்தி அவர்களாகவே வாயடைக்கவும் விலகவும் செய்கிறார்.அது சரியாகவே வேலை செய்கிறது. அப்படி இவர்களை அனுரா அணைத்தால்; இப்பவே பெட்டியை கட்டி வைப்பது நல்லது. தப்பவே முடியாது, உடனே கைது செய்யப்படுவார்.   

  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 10/10/2024 at 03:37, தமிழ் சிறி said:

சிங்களவனிடம் மன மாற்றத்தை எதிர்பார்ப்பது கடினம். ஏனென்றால் அவர்கள் சிறு வயதில் இருந்தே.. கல்வி, மதம் மூலம்... மூளைச் சலவை செய்து வைக்கப் பட்டுள்ளளார்கள். மயிலே... மயிலே.... இறகு போடு என்றால் போடாது.

நேர்மையாக கதைத்தால் நாம் எல்லோருமே ஏதோ ஒரு வகையில் மூளைச் சலவை செய்யப்பட்டு உள்ளோம். நீங்களோ நானோ ஒரு பேச்சுக்கு சிங்களப் பெற்றோருக்கு பிறந்து இருந்தால் நீங்களும் நானும் அப்படித்தான்.

தமிழர்களும் மூளைச் சலவை செய்யப்பட்டு உள்ளோம். மொழி வெறி, கலாச்சார வெறி என்று. 

இரண்டு பக்கமும் மிதவாதம் உள்ளவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் இருவரும் மட்டும் இலங்கையில் இருந்தால் அது சொர்க்கபுரியாக இருக்கும் 

Link to comment
Share on other sites

On 10/10/2024 at 20:37, தமிழ் சிறி said:

தலைவர் பிரபாகரன் காலத்தில் இவர்களிடம் இருந்து எமது உரிமைகளை அடித்து பறித்திருக்க வேண்டும். அந்தப் போராட்டம்   கூட 75% வெற்றியளித்து சரியாக போய்க் கொண்டிருந்த நிலையில்... ஒட்டுக்கு ழுக்களும், எமது பாராளுமன்ற உறுப்பினர்களும் அவருக்கு கை கொடுக்காமல் இருந்ததன் விளைவு எல்லாம் கை நழுவி போய் இந்த அவலத்தில் வந்து நிற்கின்றது.

அண்ணை, வன்னிக்குள் மாட்டுப்பட்ட சில ஆயிரம் மக்களை போராட விட்டு விட்டு வெளியால ஒடி வேற யாரை குறை சொல்ல முடியும்? 

புலம்பெயர் மக்கள் தங்கட மகனயோ/மகளயொ முன் லைனில ஆயுதத்தொட விட ஆயத்தமா? 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[இப்போ பெரும்பாலான கட்சிகள்  மொத்தக்கட்சிகளும் அனுராவோடு கூட்டிணைவதற்கு ஏங்கிக்கொண்டிருக்கின்றன. எல்லோரும் ஊழலோடு சம்பந்தப்பட்டவர்கள் அவர்களை  வழிக்கு கொண்டுவந்து அடக்குவதற்கே அவர் முன்னெச்சரிக்கையாக சில அதிரடிகளை ஆரம்பித்தார். சில சவாலான  இடங்களில் தனது சிறந்த வேட்ப்பாளர்களை களமிறக்கினார்.  மகிந்த குடும்பத்தின் ஊழல் விசாரணை என்கிற செய்தி. அதனால் சிலர் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து பின்வாங்கினர். ஒவ்வொரு கட்சியின் நகர்வையும் கூர்ந்து கவனித்து களத்தில்இருந்து  தடுத்து நிறுத்த துல்லியமாக நிதானமாக காய் நகர்த்தி அவர்களாகவே வாயடைக்கவும் விலகவும் செய்கிறார்.]

அநுரகுமார திசநாயக்கவுக்கு அதிகரிக்கும் புலம்பெயர் தமிழ் மக்களின் ஆதரவு  என்று  தமிழ் யுரியுப்பர்கள்  சொல்வது உண்மை போல தான் இருக்கின்றது. இலங்கை புதிய ஜனாதிபதிக்கு பிரசாரமே  நடத்தபடுகின்றது இங்கே  🤣
 

On 13/10/2024 at 07:59, பகிடி said:

இரண்டு பக்கமும் மிதவாதம் உள்ளவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் இருவரும் மட்டும் இலங்கையில் இருந்தால் அது சொர்க்கபுரியாக இருக்கும் 

உண்மை 👍

Edited by விளங்க நினைப்பவன்
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 'தோழர் அநுர' பத்து வருடங்களுக்கு முன்னர் ஜே.வி.பி.யின் ஐந்தாவது தலைவராக வந்தபோது.....! பாகம் 3 டி பி.எஸ். ஜெயராஜ்  அது 1969ஆம் ஆண்டு. 31 வயதான தாய் தனது ஆறு மாத ஆண் குழந்தையின் ஜாதகத்தை எழுதுவிப்பதற்காக பிரபலமான ஒரு சோதிடரின் சேவையை நாடினார். முன்னைய வருடத்தில் குழந்தை பிறந்த நேரத்தில் இருந்த கிரக நகர்வுகளின் அடிப்படையில் சில கணிப்பீடுகளைச் செய்த சோதிடர் தாயாரை பெரு வியப்புடன் பார்த்து "உங்கள் மகனுக்கு அவனது விதியில் ஒரு இராஜயோகம் இருக்கிறது. அவன் ஆளப்பிறந்தவன். அவன் ஒரு நாள் இந்த நாட்டை ஆட்சி செய்வான்" என்று கூறினார்.  தாயாருக்கு மகிழ்ச்சிதான். ஆனால், ஆச்சரியம். அவர் குறைந்த வருமானத்தைக் கொண்ட ஒரு விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர். 'எவ்வாறு எனது மகன் ஆட்சியாளராவான்?' அவருக்கு ஆச்சரியம். அந்த குழந்தை வளர்ந்து பையனாகி 12வது பிறந்த தினத்தைக் கொண்டாடியபோது தாயார் ஒரு புதிய பிரச்சினையை எதிர்நோக்கினார். அவரது மகன் பௌத்த பிக்குவாக வரவேண்டும் என அந்த கிராமத்தின் விகாராதிபதி விரும்பினார். அந்த பையனின் நல்லொழுக்கம், விவேகம் மற்றும் நடத்தையினால் அந்த விகாராதிபதி பெரிதும் கவரப்பட்டார். ஆனால் நீண்ட யோசனைக்கு பிறகு பெற்றோர் மறுத்துவிட்டார்கள். அந்த முடிவை எடுக்கும்போது தாயார் சோதிடர் கூறிய இராஜயோகத்தைப் பற்றியே முக்கியமாக நினைத்தார். 55 வருடங்கள் கழித்து சோதிடர் கூறியது உண்மையாகியது. அந்த பையன் பெரிய ஆளாக வளர்ந்து இறுதியில் நாட்டின் பிரதம ஆட்சியாளராக வந்துவிட்டான். அது வேறு யாருமல்ல... 2024 செப்டெம்பர் 21ஆம் திகதி இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட அநுரகுமார திசாநாயக்கவே.  நாட்டின் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக அவர் தெரிவு செய்யப்பட்ட நாள் முதல் அநுராதபுரம் மாவட்டத்தின் தம்புத்தேகமவில் உள்ள திருத்தியமைக்கப்பட்ட அவரது எளிமையான வீட்டுக்கு பத்திரிகையாளர்கள், யூரியூபர்கள் உட்பட பெருவாரியான வெளியாட்கள் வருகை தந்த வண்ணம் இருக்கிறார்கள். புதிதாக தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி அந்த வீட்டில் தங்கியிருப்பதில்லை என்ற போதிலும், இப்போது  அவரின் தாயார் சீலாவதியும் மூத்த சகோதரி சிறியலதாவும் குடும்பத்தின் ஏனைய உறுப்பினர்களும் அதில்  வசிக்கிறார்கள். முன்கூட்டியே அறிவிக்காமல் வருகை தருவோரை மிகவும் நேச உணர்வுடன் விருந்தோம்புகிறார்கள். 86 வயதான தாயாரை ஊடகவியராளர்கள் அடிக்கடி பேட்டி காண்கிறார்கள். அவரும் தனது மகனின் இளமைக்காலத்தைப் பற்றி பேசுவதில் பெருமையடைகிறார். இந்த பேட்டிகளிலேயே தாயார் மகனின் இராஜயோகம் பற்றியும் அவனை பிக்குவாக்க விரும்பிய பௌத்த விகாராதிபதி பற்றியும் விபரங்களை கூறினார். இரு வாரங்களுக்கு முன்னர் வெளியான "அநுரகுமார திசாநாயக்க; இலங்கை வானில் இடதுசாரி நட்சத்திரம்" என்ற தலைப்பில் அமைந்த இந்த கட்டுரைத் தொடரின் முதல் பாகத்தில் நான் அநுரவின் இளமைக்காலத்தை பற்றி எழுதியிருந்தேன். அதில் நான் அவருக்கு வாசிப்பிலும் நீச்சலிலும் இருந்த பேரார்வத்தைப் பற்றி குறிப்பிட்டிருந்தேன். சீலாவதி அம்மையாரும் கூட தான் வழங்கிய பேட்டிகளில் அவற்றைப் பற்றி கூடுதல் விபரங்களை கூறினார். அநுர தனது வீட்டுக்கு அருகாமையில் உள்ள 'நாராச்சியாவ' குளத்தில் தான் நீச்சல் பழகினார். நீந்துவதில் எப்போதும் அவருக்கு ஆர்வம். தனது மகன் தீவிரமான ஒரு வாசகன் என்றும் சாப்பிடும்போது கூட ஒரு புத்தகத்தையோ அல்லது பத்திரிகையையோ வாசித்துக்கொண்டிருப்பார் என்றும்  தாயார் கூறினார். வாசிப்பதற்கு அநுர விரும்பித் தெரிவுசெய்தது  வீட்டு வளவில் வளர்ந்திருந்த தேமா (அரலிய)  மரத்தையேயாகும். அந்த மரத்தின் ஒரு கிளையில் அமர்ந்திருந்து புத்தகங்களை அவர் வாசிப்பார். படிப்பதற்கு அவரை தான் ஒருபோதும் நிர்ப்பந்திக்க வேண்டியிருந்ததில்லை என்று தாயார் கூறுகிறார். ஜே.வி.பி.யின் இரண்டாவது கிளர்ச்சிக் காலகட்டத்தில் தாங்கள் எதிர்நோக்கிய தொல்லைகள் பற்றியும் அநுரவின் தாயார் பேசினார். அநுரவின் ஒன்றுவிட்ட சகோதரன் எவ்வாறு சித்திரவதைக்குள்ளாகி  கொலைசெய்யப்பட்டார் என்பதையும் நீண்டகாலமாக அநுர கைதாகாமல் எவ்வாறு தப்பி வாழ்ந்தார் என்பதையும் சீலாவதி விபரித்தார்.  தந்தையார் ரண்பண்டா திசாநாயக்க மரணமடைந்தபோது இறுதிச்சடங்குக்காக அநுர வீட்டுக்கு வருவார் என்று எதிர்பார்த்த பாதுகாப்பு அதிகாரிகள் அருகாமையில் உள்ள பகுதிகளில் காத்திருந்தார்கள். அவ்வாறு தனக்கு ஒரு  வலை விரிக்கப்படும் என்பதை எதிர்பார்த்த அநுர அங்கு வரவில்லை. சொந்த தந்தையாரின் இறுதிச் சடங்குகளில் கூட அவரால் பங்கேற்க முடியாமல் போய்விட்டது என்று சீலாவதி கவலையுடன் கூறினார். அநுரகுமார திசாநாயக்கவை பற்றி இந்த கட்டுரையை நான் எழுதத் தொடங்கியபோது   இரு பாகங்களுடன் மாத்திரம்  நிறைவு செய்து கொள்வதற்கே  உத்தேசித்திருந்தேன். ஆனால், கட்டுரை  வாசகர்களிடமிருந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. கட்டுரையின் வீச்செல்லையை விரிவுபடுத்தி எழுதுமாறு பல வேண்டுகோள்கள் வந்தன. அதனால் அநுர மீதான கவனக்குவிப்பு மேலும் தொடருகிறது. இரு வாரங்களுக்கு முன்னர் வெளியான இந்த கட்டுரையின் முதலாவது பாகத்தில் நிகழ்வுகள் பல நிறைந்த அநுரவின் ஆரம்பகால வாழ்க்கையை ஓரளவு விபரங்களுடன் எழுதினேன்.  கடந்த வாரம் வெளியான இரண்டாம் பாகத்தில் ஜனதா விமுக்தி பெரமுனவுக்குள் (ஜே.வி.பி.) ஒரு அரசியல் தலைவராக அவரது சீரான வளர்ச்சி எவ்வாறு அமைந்தது என்பதை ஓரளவு விரிவாக  எழுதினேன். இந்த மூன்றாவது பாகத்தில் ஜே.வி.பி.யின் தலைவராக அவர் அடைந்த உயர்வு பற்றி விபரிக்கவிருக்கிறேன். சோமவன்ச அமரசிங்க முன்னர் குறிப்பிடப்பட்டதை போன்று ஜே.வி.பி. 1965இல் ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து 1989 வரை 23 வருடங்களாக வசீகரமான அதன் தாபகர் றோஹண விஜேவீரவினாலேயே தலைமைதாங்கப்பட்டு வந்தது. முதலாவது ஜே.வி.பி. தலைவர் விஜேவீர, இரண்டாவது தலைவர் சமான் பியசிறி பெர்னாண்டோ, மூன்றாவது தலைவர் லலித் விஜேரத்ன - இவர்கள் மூவரும் 1989 - 1990 காலப்பகுதியில் அரசினால் கொல்லப்பட்ட 14 ஜே.வி.பி. தலைவர்களில் அடங்குவர். உயிர் தப்பியிருந்த ஒரே சிரேஷ்ட தலைவர் சிறி ஐயா என்ற சோமவன்ச அமரசிங்க மாத்திரமே. அவர் 1990 ஜனவரியில் ஜே.வி.பி.யின் நான்காவது தலைவராக வந்தார். சோமவன்ச அமரசிங்கவின் தலைமைத்துவத்தின்  கீழ் ஜே.வி.பி.க்கு அதன் மீளெழுச்சிக்காக புதியதொரு கொள்கை தேவைப்பட்டது. இலங்கைப் படைகள் தமிழீழ விடுதலை புலிகளுடன் போரில் ஈடுபட்டிருந்தனர். இலங்கை தேசப்பற்று மற்றும் நாட்டுப் பிரிவினைக்கு எதிர்ப்பு என்ற போர்வையில் ஜே.வி.பி. சோமவன்சவின் தலைமையின் கீழ் சிங்களப் பேரினவாத போக்கு ஒன்றைக் கடைப்பிடித்தது. விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரை ஆதரித்த பல்வேறு வழிகளில் போர் முயற்சிகளுக்கு முழுமையாக உறுதுணையாக இருந்தது.  சோமவன்ச அமரசிங்கவின் கீழ் ஜே.வி.பி. எந்த வகையான சமாதான முன்முயற்சியையும் முற்றுழுழுதாக எதிர்க்கின்ற ஒரு போர்விரும்பி அமைப்பாக விளங்கியது. விடுதலைப்புலிகளுடனான சமாதான முயற்சிகள் தொடர்பில் ஜே.வி.பி. மிகவும் முறைப்பான ஒரு கடும் நிலைப்பாட்டை எடுத்தது. ஜனாதிபதி திருமதி குமாரதுங்கவின் சமாதான முயற்சிகளை  அது எதிர்த்தது. அன்றைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கீழான ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் 2022ஆம் ஆண்டில்  விடுதலைப்புலிகளுடன் சமாதான முயற்சி ஒன்றில் பிரவேசித்தபோது ஜே.வி.பி. அதை எதிர்த்தது. சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கு எதிராக அது பல ஆர்ப்பாட்டங்களையும் பொதுக் கூட்டங்களையும் நடத்தியது. நோர்வே வகித்த அனுசரணையாளர் பாத்திரத்தையும் அது கடுமையாக எதிர்த்தது. ஒஸ்லோ அதன் மத்தியஸ்த முயற்சிகளை  நிறுத்தவேண்டும் என்று ஜே.வி.பி. தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்தது. இனப்பிரச்சினைக்கு சமஷ்டி முறையின் அடிப்படையிலான தீர்வொனறைக் காண்பது தொடர்பில் ஆராய்வதற்கு அரசாங்கத்துக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் காணப்பட்ட ஒஸ்லோ உடன்படிக்கையை ஜே.வி.பி. கண்டனம் செய்தது.  ஒரு இடைக்கால ஏற்பாடாக உள்ளக சுயாட்சி அதிகார சபையை (Internal Self - Governing Authority) அமைப்பதற்கான யோசனையை விடுதலைப்புலிகள் முன்வைத்த போது ஜே.வி.பி. அதற்கு எதிராக சுவரொட்டி இயக்கம் ஒன்றை முன்னெடுத்தது. 2004ஆம் ஆண்டில் ரணில் விக்கிரமசிங்கவின்  அரசாங்கம் தேர்தலில் தோற்கடிக்கப்படுவதை உறுதிசெய்வதன் மூலமாக சமாதான முயற்சிகளை குழப்பியடிப்பதற்கு ஜே.வி.பி. உறுதிபூண்டது. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடன் அணி சேர்ந்து தேர்தலில் போட்டியிட்டது. விக்கிரமசிங்க தோற்கடிக்கப்பட்டார். அந்த தேர்தலில் ஜே.வி.பி.க்கு பாராளுமன்றத்தில் 39 ஆசனங்கள் கிடைத்தன. அநுர குமார திசாநாயக்க உட்பட ஜே.வி.பி.யின் நான்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்னாள் ஜனாதிபதி திருமதி குமாரதுங்கவின் அரசாங்கத்தில் அமைச்சரவை அமைச்சர்களாக நியமிக்கப்பட்டனர். அநுர விவசாயம், கால்நடை வளர்ப்பு, காணி, நீர்ப்பாசன அமைச்சராக நியமிக்கப்பட்டார். சுனாமி உதவிக் கட்டமைப்பு ஆனால், சுனாமியினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் வாழும் கரையோரப் பகுதிகளுக்கு வெளிநாட்டு நிதியைப் பகிர்ந்தளிப்பதற்காக மரபுக்கு மாறான கட்டமைப்பு ஒன்றை நிறுவுவதற்கான யோசனையை முன்னாள் ஜனாதிபதி திருமதி குமாரதுங்க  முன்வைத்தபோது ஜே.வி.பி.யின் அமைச்சர்கள் பதவி விலகியதுடன் அதன்  39 பாராளுமன்ற உறுப்பினர்களும் அரசாங்கத்தில் இருந்து வெளியேறினர். அந்த உத்தேச கட்டமைப்பு சுனாமிக்கு பின்னரான செயற்பாட்டு முகாமைத்துவ கட்டமைப்பு [Post - Tsunami Operational Management Structure (P - TOMS)] என்று அழைக்கப்பட்டது. அது  அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான ஒரு கூட்டுப் பொறிமுறையாகும். அந்த சுனாமி உதவிக் கட்டமைப்பை ஜே.வி.பி. கடுமையாக எதிர்த்தது. அநுர உட்பட ஜே.வி.பி.யின் 39 பாராளுமன்ற உறுப்பினர்களும் அதற்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்தனர். அந்த மனுவை விசாரணை செய்த அன்றைய பிரதம நீதியரசர் சரத் என். சில்வா தலைமையிலான உயர்நீதிமன்ற அமர்வு சுனாமி உதவிக் கட்டமைப்புக்கான  உடன்படிக்கையின் முக்கியமான செயற்பாட்டு பிரிவுகளை கட்டுப்படுத்தி இடைக்காலத் தடையுத்தரவு ஒன்றைப் பிறப்பித்தது.  அதையடுத்து அந்த கட்டமைப்பை முன்னெடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. இடைக்காலத் தடையுத்தரவை வரவேற்ற ஜே.வி.பி.  கூட்டுப் பொறிமுறை நடைமுறைப்படுத்தப்படுவதை வெற்றிகரமாக தடுத்துவிட்டதாக கூறியது. சுனாமி உதவிக் கட்டமைப்பு தொடர்பான ஜே.வி.பி.யின் கதையை கடந்த வாரம் வெளியான இந்த கட்டுரையான இரண்டாம் பாகத்தில் காலவரிசைப்படி விபரித்திருந்தேன். வடக்கு - கிழக்கு இணைப்பு  ஜே.வி.பி. அதன் இந்த நடவடிக்கைகளை எல்லாம் பிரிவினைவாதத்தையும் பயங்கரவாதத்தையும் எதிர்ப்பது என்ற அடிப்படையில் நியாயப்படுத்திய அதேவேளை, இந்திய - இலங்கை சமாதான உடன்படிக்கையின் ஏற்பாடுகளின் பிரகாரம் செய்யப்பட்ட வடக்கு,  கிழக்கு மாகாணங்களின் தற்காலிக இணைப்பு மீதான விரோதத்தையும்  பெரியளவில் வெளிக்காட்டியது. "வடக்கு மாகாணமும் கிழக்கு மாகாணமும் இலங்கையின் தமிழ் பேசும் மக்களின்  வரலாற்று ரீதியான வாழ்விடங்களாக இருந்து வந்திருக்கின்றன. இந்த பிராந்தியத்தில் இதுவரை காலமும் அவர்கள் ஏனைய இனக்குழுக்களுடன் சேர்ந்து வாழ்ந்து வருகிறார்கள்" என்று சமாதான உடன்படிக்கையின் 1.4 பந்தி கூறுகிறது. இணைப்பை தொடரவேண்டுமானால் ஒரு வருடத்துக்கு பிறகு கிழக்கு மாகாணத்தில் சர்வஜன வாக்கெடுப்பு ஒன்று நடத்தப்பட வேண்டும் என்ற நிபந்தனைக்கு உட்பட்ட முறையில் இரு மாகாணங்களும் தற்காலிகமாக இணைக்கப்பட்டன. போர் முடிவின்றித் தொடர்ந்த காரணத்தினால் சர்வஜன வாக்கெடுப்பை அரசாங்கங்கள் தொடர்ச்சியாக ஒத்திவைத்துவந்தன. வடக்கு - கிழக்கு இணைப்புக்கு எதிராக ஜே.வி.பி. ஒரு கடும்போக்கை கடைப்பிடித்தது. ஒரு அரசியல் கட்சி என்ற வகையில் இணைப்புக்கு  வெளிப்படையாக எதிர்ப்பை காட்டியதற்கு புறம்பாக ஜே.வி.பி. எதிர்ப்பை தீவிரப்படுத்துவதற்காக வேறு அமைப்புக்களையும் உருவாக்கியது. பரந்தளவில் கருத்தரங்குகளும் பொதுக்கூட்டங்களும் நடத்தப்பட்டன. ஆயிரக்கணக்கில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டதுடன் இலட்சக்கணக்கான துண்டுப்பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன. வடக்கு -  கிழக்கு இணைப்புக்கு எதிரான நீணடதொரு பிரசார இயக்கத்துக்கு பிறகு ஜே.வி.பி. 2006ஆம் ஆண்டில் நீதிமன்றத்தையும் நாடியது. வடக்கு மாகாணமும் கிழக்கு மாகாணமும் இணைக்கப்பட்டு ஒரு தனியான தமிழ் பேசும் மாகாணம் உருவாக்கப்பட்டதை ஆட்சேபித்து ஜே.வி.பி. இலங்கை உயர்நீதிமன்றத்தில் மூன்று அடிப்படை உரிமைமீறல் மனுக்களை தாக்கல் செய்தது.  அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான வசந்த பியதிஸ்ஸ, திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த விஜேசேகர, சம்மாந்துறையைச் சேர்ந்த ஒரு அரசாங்க சேவையாளரான ஏ.எஸ்.எம். புஹாரி ஆகியோரே மனுதாரர்கள். வடக்கு, கிழக்கு மாகாணங்களை மக்களினால் தெரிவு செய்யப்படும் ஒரு சபையினால் நிருவகிக்கப்படும் ஒரு நிருவாக அலகாக்குவதற்காகவும் அதற்காக அந்த மாகாணங்களை இணைப்பதற்காகவும் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆ்.ஜெயவர்தனவினால்  1988 செப்டெம்பர் 2ஆம் திகதியும் 8ஆம் திகதியும் செய்யப்பட்ட பிரகடனங்களை செல்லுபடியற்றவை என்று அறிவிக்குமாறு உயர்நீதிமன்றத்தை ஜே.டி.பி.யின் மனுதாரர்கள் கோரினர். பிரதம நீதியரசர் சரத் என். சில்வா, நீதியரசர்கள் நிஹால்  ஜயசிங்க, என்.கே. உடலாகம, நிமால் காமினி அமரதுங்க,  ரூபா பெர்னாண்டோ ஆகிய ஐவரைக் கொண்ட உயர்நீதிமன்ற அமர்வு வடக்கு, கிழக்கு மாகாணங்களின் இணைப்பு செல்லுபடியற்றது என்று தீர்ப்பளித்தது. 23 பக்கங்களைக் கொண்ட அந்த தீர்ப்பில் அவர்கள் 1987ஆம் ஆண்டின் 42ஆம் இலக்க மாகாண சபைகள் சட்டத்தின்  பிரிவு 31 (1) (பி )யில் குறிப்பிடப்பட்டிருக்கும் நிபந்தனைகளில் எந்த ஒன்றுமே நிறைவேற்றப்படாத போதிலும், அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தன அவசரகால ஒழுங்குவிதிகளின் கீழ் இரு மாகாணங்களையும் இணைத்தார் என்று கூறியிருந்தனர். மோதல் நிறுத்தம் செய்யப்படவேண்டும் என்பதும் சகல தீவிரவாத குழுக்களும் ஆயுதங்களைக் கையளிக்கவேண்டும் என்பதுமே அந்த இரு நிபந்தனைகளுமாகும். இணைப்பு என்பது ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரங்களை விட மிகையானதாகும் என்று உயர்நீதிமன்றம் கூறியது. எனவே, தமிழர்கள் சம்பந்தப்பட்ட சில விவகாரங்களில் ஜே.வி.பி. கடந்த காலத்தில் மிகுந்த கடும்போக்கை கடைப்பிடித்தது என்பதை காணக்கூடியதாக இருந்தது. தங்களது இந்த போக்கு சாதாரண தமிழர்களுக்கு எதிரானது அல்ல. விடுதலைப் புலிகளின் பயங்கரவாதத்துக்கும் பிரிவினைவாதத்துக்கும் எதிரானது என்று ஜே.வி.பி. நியாயம் கற்பித்தது.தேசத்தின் சுயாதிபத்தியத்தைப் பாதுகாத்து தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு தாங்கள் கடமைப்பட்டிருந்ததாகவும் அவர்கள் கூறினர். ஆனால், மெய்யாகவே  தமிழர்களுக்கு விரோதமானது என்று அழைக்கப்படக்கூடிய கொள்கை ஒன்றை ஜே.வி.பி. கடந்த காலத்தில் கடைப்பிடித்தது என்பது மறுதலிக்க முடியாத கேள்விக்கு இடமின்றிய  உண்மையாகும். இந்த விவகாரங்களில் எல்லாம் அநுர குமார திசாநாயக்க வகித்த பங்கு என்ன என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது. ஜே.வி.பி.  அந்த நேரத்தில் தன்னை ஒரு மார்க்சிஸ்ட் என்று பிரகடனப்படுத்திக் கொண்ட அதேவேளை பெருமளவுக்கு சிங்கள கடும்போக்காளராகவும் இருந்த சோமவன்ச அமரசிங்கவின் தலைமைத்துவத்தின் கீழ் இருந்தது. இந்த விவகாரங்களில் அவருக்கு ஒரு இடதுசாரி என்பதை விடவும் கூடுதலான அளவுக்கு தீவிரமான சிங்கள தேசியவாதியாக இருந்த விமல் வீரவன்ச நன்றாக உதவினார். அந்த நாட்களில் இந்த விவகாரங்களில் அநுரவின் பெயர் பெரிதாக அடிபடவில்லை. உட்கட்சி விவாதங்களில் இந்த நடவடிக்கைகளை  அவர் எதிர்த்துப் பேசினாரா என்பது தெரியவில்லை. ஆனால்  சுனாமி உதவிக்கட்டமைப்புக்கு எதிரான வழக்கில் அவரும் ஒரு மனுதாரர் என்பது உண்மை. வடக்கு, கிழக்கு மாகாணங்களின் இணைப்பை எதிர்ப்பதிலும் அவர் கட்சியின் கொள்கையை பின்பற்றினார். ஜே.வி.பி.யின் கடந்த காலமும் நிகழ்காலமும் ஜே.வி.பி.யின் இந்த சர்ச்சைக்குரிய கடந்த காலம் அதன் தலைமையிலான தற்போதைய தேசிய மக்கள் சக்தியிடமிருந்து கணிசமானளவுக்கு வேறுபடுகிறது. நாளடைவில் ஜே.வி.பி. தன்னை மாற்றியமைத்துக்கொண்டிருக்கக்கூடியது சாத்தியமே.  தேசிய மக்கள் சக்தி என்பது ஜே.வி.பி.யின் மாற்றியமைத்து மெருகூட்டப்பட்ட ஒரு வடிவமே.  அநுர குமார திசாநாயக்க ஒரு கெட்டியான கோட்பாட்டுப் பிடிவாதமுடையவராக அன்றி நெகிழ்வுத்தன்மையுடன் நடைமுறைச் சாத்தியமான கொள்கைகளை கடைபிடிக்கும் ஒருவராக கருதப்படுகிறார். அவரின் போக்கின் பிரகாரம் கட்சியும் அதன் கொள்கைகளை மாற்றியமைத்திருக்கக்கூடியது சாத்தியமே. கடந்த காலத்தை மாத்திரம் அடிப்படையாகக் கொண்டு ஜே.வி.பி.யை கண்டனம் செய்வது நியாயமற்றது. தற்போது அநுர குமார திசாநாயக்க இலங்கை மக்களின் குறிப்பாக இளைய தலைமுறையினரின் அன்புக்குரியவராக விளங்குகிறார். ஜே.வி.பி. தலைமையிலான தேசிய மக்கள் சக்தி மக்கள் மத்தியில் பெருமளவு செல்வாக்கைக் கொண்டதாக இருக்கிறது. இத்தகைய பின்புலத்தில் ஜே.வி.பி.யின் கடந்தகால நெறிகெட்ட அம்சங்கள் அலட்சியப்படுத்தப்பட வோ, கண்டும் காணமால் விடப்படவோ அல்லது பேசாமல் தவிர்க்கப்படவோ கூடியவை அல்ல. புதிய ஜே.வி.பி.யையும் அதன் தலைவர் அநுரவையும் ஏற்றுக்கொண்டு வரவேற்கின்ற அதேவேளை, அண்மைய கடந்த காலத்தை நாம் மறந்துவிடவும் கூடாது.  வரலாற்றில் இருந்து படிப்பினைகளைப் பெற்றுக் கொள்ளாதவர்கள் எதிர்காலத்தில் எதிர்மறையான விளைவுகளுக்கு முகங்கொடுக்க வேண்டியேற்படலாம். அதன் காரணத்தினால் தான் இந்த பத்திகளில் ஜே.வி.பி.யின் கடந்த காலத்துக்கு பெருமளவு இடம் ஒதுக்கப்பட்டது. விமல் வீரவன்சவின் பிளவு சோமவன்ச அமரசிங்கவின் தலைமையின் கீழான ஜே.வி.பி. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் நேச அணியாக விளங்கிய அதேவேளை எதிரணியிலேயே தொடர்ந்தும் இருந்தது. ஆனால், ஜே.வி.பி.யில் ஒரு பிளவு ஏற்பட்டது. அதையடுத்து அந்த கட்சிக்கும் மகிந்த அரசாங்கத்துக்கும் இடையிலான உறவுகள் கசப்படையும் நிலை ஏற்பட்டது. ஜே.வி.பி.யின் பிரபலமான பிரசாரச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச 2008 மார்ச்சில் கட்சியின் தலைமைத்துவத்துடன் முரண்பட்டுக்கொண்டார். ஊழல் உட்பட பல்வேறு குற்றச் செயல்களில் அவர் ஈடுபட்டதாகக் கூறி ஜே.வி.பி.யின் நிறைவேற்றுக்குழு வீரவன்சவை இடைநிறுத்தியது. தனது விசுவாசிகள் சிலருடன் ஜே.வி.பி.யில் இருந்து வெளியேறிய வீரவன்ச  2006 மே 14ஆம் திகதி தேசிய சுதந்திர முன்னணி என்ற புதிய கட்சியை ஆரம்பித்தார். அந்த வருடம் டிசம்பரில் புதிய கட்சி அரசாங்கத்தில் இணைந்துக்கொண்டதை அடுத்து வீரவன்ச ஒரு அமைச்சரவை அமைச்சரானா். பிளவுக்கு  காரணமாக இருந்தவர்கள் என்று மகிந்தவையும் அவரின் சகோதரர் பசிலையும் சந்தேகித்த ஜே.வி.பி. அவர்கள் மீது கடும் ஆத்திரமடைந்தது. " தற்போதைய அரசியல் சூழ்நிலையில் புதிய அரசியல் கட்சிக்கான எந்த ஒரு தேவையும் இல்லை" என்று அநுர குமார திசாநாயக்க கூறியதாக ஊடகங்கள் அந்த நேரத்தில் செய்தி வெளியிட்டன. பொன்சேகாவுக்கு ஆதரவு விடுதலைப் புலிகளுடனான போர் 2009 மே நடுப்பகுதியில் முடிவுக்கு வந்ததற்கு பிறகு இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கும் ஆளும் ராஜபக்ஷக்களுக்கும் இடையில் வேறுபாடுகள் தோன்றத் தொடங்கின. இறுதியில் பொன்சேகா 2010 ஜனாதிபதி தேர்தலில் எதிரணியின் பொதுவேட்பாளராக மகிந்த ராஜபக்ஷவை எதிர்த்துப் போட்டியிட்டார். ராஜபக்ஷவுக்கு எதிராக பொன்சேகாவை ஆதரித்து ஜே.வி.பி. தீவிரமாக பிரசாரம் செய்தது. ஆனால், பொன்சேகா தோல்வியடைந்தார். 2010 பாராளுமன்ற தேர்தலில் ஜே.வி.பி. சரத் பொன்சேகா தலைமையிலான ஜனநாயக தேசிய  கூட்டணியின் அங்கமாக போட்டியிட்டது.  அந்த கூட்டணிக்கு பாராளுமன்றத்தில் ஏழு ஆசனங்கள் கிடைத்தன. ஜே.வி.பி. நான்கு ஆசனங்களை பெற்றது.  அநுர தேசியப் பட்டியல் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். 2004 பாராளுமன்ற தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அங்கமாக 39 ஆசனங்களைக் கைப்பற்றிய ஜே.வி.பி. 2010ஆம் ஆண்டில் நான்கு ஆசனங்களுக்கு வீழ்ச்சி கண்டது. ஒரு விசித்திரமான திருப்பமாக, வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி அந்த தேர்தலில் ஜே.வி.பி.யை விடவும் கூடுதல் ஆசனங்களைக் கைப்பற்றியது. குமார் குணரத்தினம்  2012ஆம் ஆண்டில் ஜே.வி.பி.யில் இன்னொரு பிளவு ஏற்பட்டது. சோமவன்ச அமரசிங்கவின் தலைமைத்துவம் பாணி குறித்து ஜே.வி.பி. செயற்பாட்டாளர்களில் ஒரு குழுவினர் மத்தியில் பெருமளவு வெறுப்புணர்வு காணப்பட்டது. ஜே.வி.பி. அதன் புரட்சிகர குணாம்சத்தை இழந்து பாரம்பரியமான பூர்ஷுவா (முதலாளித்துவ)  கட்சி ஒன்றின் குணாதிசயங்களைப் பெறத் தொடங்குவதாக அவர்கள் உணர்ந்தார்கள். அந்த அதிருப்தியாளர்கள் குழுவுக்கு நொயல் முதலிகே என்ற பெயரில் அவுஸ்திரேலியாவில் இருந்த குமார் என்ற  பிரேம்குமார் குணரத்தினம் தலைமை தாங்கினார்.   இந்த அரசியல் முரண்பாடுகள் ஜே.வி.பி. தலைவர் சோமவன்சவுக்கும் பிரேம்குமாருக்கும் இடையில் கடுமையான மோதல்களுக்கு வழிவகுத்தது. இந்த உட்கட்சிச் சண்டையில் அநுர குமார சோமவன்சவை ஆதரித்தார். தீவிரவாதப்  போக்குடையவர்கள் கட்சியில் இருந்து வெளியேறி புதிய கட்சி ஒன்றை அமைத்தார்கள். புதிய முன்னரங்க சோசலிஸ்ட் கட்சியை (Frontline Socialist Party)  ஆரம்பித்து வைப்பதற்காக நொயல் முதலிகே என்ற குணரத்தினம் அவுஸ்திரேலியாவில் இருந்து இலங்கை  திரும்பினார். அரசாங்கத்தின் ஏஜண்டுகளினால் கடத்தப்பட்ட அவர் "காணாமல்" போனார். ஆனால் ஜே.வி.பி.க்குள் குமார் குணரத்தினம் என்ற பெயர் கொண்ட ஒரு நபர் கிடையாது என்று அநுர குமார கூறினார். அவ்வாறு கூறியது அவருக்கு என்றென்றைக்குமே அவப்பெயர். அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரின் முயற்சியின் விளைவாக  இறுதியில் குமார் விடுதலை செய்யப்பட்டார்.  முன்னரங்க சோசலிஸ்ட் கட்சி 2008  ஏப்ரலில் தொடங்கப்பட்டது. ஜே.வி.பி.யின் பெண்கள், இளைஞர்கள் மற்றும் மாணவர் அணிகளைச் சேர்ந்த கணிசமான எண்ணிக்கையினர் வெளியேறி புதிய கட்சியில் இணைந்தனர்.  பெருமளவு உறுப்பினர்கள் முன்னரங்க சோசலிஸ்ட் கட்சியில் சேர்ந்ததால் சிறிது காலம் ஜே.வி.பி.யின் ஊடகப்பிரிவு மூடப்பட்டிருந்தது. புத்தம் புதிய தலைவர் வீரவன்ச தலைமையிலான பிளவு பல சிங்கள தேசியவாதிகளையும் குணரத்தினத்தின் தலைமையிலான பிளவு பல புரட்சிகர சோசலிஸ்டுகளையும் ஜே.வி.பி.யிடமிருந்து எடுத்துச் சென்றுவிட்டன. ஜே.வி.பி.யில் எஞ்சிவிடப்பட்டவர்கள் சிங்கள தேசியவாதத்துக்கும  புரட்சிகர சோசலிசத்துக்கும் இடையிலான "மிதவாதிகளாகவே" இருந்தார்கள். ஜே.வி.பி. அதன் ஊக்கத்தையும் உயிர்த்துடிப்பையும் இழக்கத் தொடங்கி அதன் முன்னைய வடிவத்தின் ஒரு கேலிச்சித்திரமாக மாறிக்கொண்டுவந்தது. ஒரு அரசியல் சக்தியாக பிழைத்திருக்க வேண்டும் என்றால் புதிய தலைவர் ஒருவரின் கீழ் ஜே.வி.பி.க்கு புதியதொரு செல்நெறி தேவைப்படுகிறது என்பது  பெருமளவுக்கு தெளிவாகத் தெரியத் தொடங்கியது. தான் பதவியில் இருந்து இறங்கவேண்டிய தேவையை புரிந்துகொண்ட மூத்த தலைவர் சோமவன்ச அமரசிங்க விரைலில் ஓய்வுபெறப்போவதாக சூசகமாக அறிவிக்கத் தொடங்கினார். அவருக்கு பிறகு தலைவர் யார் என்பதே கேள்வி. கே.டி.லால்காந்த, ரில்வின் சில்வா, விஜித ஹேரத், சுனில் ஹந்துனெத்தி,  பிமால் இரத்நாயக்க, அநுர குமார திசாநாயக்க என்று அடுத்து தலைவராக வரக்கூடிய பலர் இருந்தார்கள். இவர்களில் பொதுச் செயலாளரான ரில்வின் சில்வாவே புதியதலைவராக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஜே.வி.பி.யின் 17வது தேசிய மகாநாடு 2014 பெப்ரவரி 2ஆம் திகதி நடைபெற்றது. தலைவர் பதவியில் இருந்து இறங்கிய சோமவன்ச அமரசிங்க தன்னை பதிலீடு செய்வதற்கு அநுர குமார திசாநாயக்கவை பிரேரித்தார். அது ஏகமனதாக மகாநாட்டில் அங்கீகரிக்கப்பட்டது. அநுர குமாரவின் ஆற்றல்களை நன்றாக புரிந்துகொண்ட சோமவன்ச தனக்கு பிறகு தலைவராக்குவதற்காக அவரை வளர்த்துவந்தார். ஜே.வி.பி.யின் வரலாற்று பயணம்  பத்து வருடங்களுக்கு முன்னர் 2014ஆம் ஆண்டில் அநுர குமார திசாநாயக்க ஜே.வி.பி.யின் ஐந்தாவது தலைவராக வந்தார். அவரின் தலைமைத்துவத்தின் கீழ் ஜே.வி.பி. முன்னெடுத்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பயணம் இலங்கையின் ஜனாதிபதியாக அநுர குமார  தெரிவாகுவதற்கு வழிவகுத்தது. இது ஏன், எவ்வாறு நடந்தது என்பதை இந்த கட்டுரையின் நான்காவதும் இறுதியானதுமான பாகத்தில் பார்ப்போம். https://www.virakesari.lk/article/196240
    • நாங்கள் புலவர் ,பித்தன் ,புத்தன் என்ற புமரங்க் கோஸ்டிகள் என தற்போதைய ஜென்சி கோஸ்டிகள் நினைக்கினம்😅
    • இதை பூரணமாக எற்க முடியும் எற்கவேண்டும்.  அப்படியென்றால் வருட வருடம்  இந்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒதுக்கீடு செய்யும் மில்லியன் கணக்கான பணம்   எங்கே??? 
    • Courtesy: தீபச்செல்வன் ஜேவிபி (JVP) எனப்படும் மக்கள் விடுதலை முன்னணி தற்போது இங்கையின் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. கடந்த ஜனாதிபதித் தேர்தலின் வாயிலாக அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) வெற்றி பெற்றுள்ளார்.  இந்த நிலையில் மக்கள் விடுதலை முன்னணி வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினைக்கு உருப்படியான தீர்வு ஒன்றை முன்வைக்குமா? என்ற பேச்சுகள் ஒருபுறத்தில் எழுந்துள்ளன. அதேவேளை மக்கள் விடுதலை முன்னணி தற்போது தேசிய மக்கள் சக்தி என்ற கட்சியின் பெயரில் செயற்பட்டு வருகின்றது. எனினும் அது பெயரளவிலான மாற்றம் மாத்திரமே என்பதை மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ள கருத்து தெளிவுபடுத்தி நிற்கிறது. இந்த நிலையில் இந்த நாள் (16.10.2024) என்பது ஈழத் தமிழ் மக்களின் வாழ்வில் ஜேவிபியால் ஏற்படுத்தப்பட்ட மறக்க முடியாத ஒரு நாளாக இருக்கிறது. தீர்வு வழங்கும் எண்ணமில்லையா? வடக்கின் அடித்தட்டு மக்களுக்கு அதிகாரப் பகிர்வு அவசியமற்றது என்ற கருத்தை மக்கள் விடுதலை முன்னணி கூறியுள்ளது. தமிழ் தலைவர்கள் தமக்கான அதிகாரத்தை தக்க வைப்பதற்காகவே 13ஆவது திருத்தம் மற்றும் அதிகாரப் பரவலாக்கல் குறித்துப் பேசுவதாக மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார். வடக்கு மக்களுக்கு அதிகாரப் பகிர்வு தேவையில்லை என்றும் அவர்களுக்கு விவசாயத்திற்கு நீரும் சந்தைப்படுத்தலும் கல்வியும் மாத்திரம் வழங்கினால் போதும் என்று அவர் கூறியுள்ளார். கடந்த காலத்தில் பல சிங்கள தலைவர்களே தமிழ் மக்களுக்கு சமஸ்டி ஆட்சி வழங்க வேண்டும் என்பதையும் அதிகாரப் பகிர்வு இலங்கையின் இனப்பிரச்சனைக்கு அவசியம் என்பதையும் ஏற்றிருக்கிறார்கள். இந்த நிலையில் 2009இற்குப் பிறகு தமிழ் தேசத்திற்கு வந்த ஜேவிபி தமிழ் மக்களுக்கென எந்தத் தீர்வும் முன்வைக்கத் தேவையில்லை என்றும் தமிழ் மக்களும் இலங்கையர்கள் என்றும் அவர்களுக்கு தனியான பிரச்சினைகள் இல்லை என்றும் கூறி வந்தது. இந்த நிலையில் அநுர குமாரவின் மூளையாக செயற்படும் ரில்வின் சில்வா போன்றவர்கள் இலங்கை இனப்பிரச்சினை குறித்து ஜேவிபி காலம் காலமாக கொண்டுள்ள கொள்கையை வெளிப்படுத்தியுள்ளனர். ஜேவிபி தேசிய மக்கள் சக்தி என்ற பெயரை மாற்றிக் கொண்டாலும் அதன் உள்ளடக்கமான இனவாத்தில் எந்த மாற்றமும் இல்லை என்பதை நாம் மிகக் கவனமாக அவதானிக்க வேண்டும். கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்குப் பிறகு வடக்கில் அநுர மீது கண்மூடித்தனமான - கடந்தகால பார்வையற்ற - அறிவற்ற ஆதரவு கொண்டவர்களே இதில் விழித்துக் கொள்ள வேண்டும். இணைக்கப்பட்ட வடக்கு கிழக்கு 1987ஆம் ஆண்டு இலங்கை இந்திய ஒப்பந்தம் இடம்பெற்றது. இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்திக்கும் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தனவுக்கும் இடையில் இலங்கை இந்திய ஒப்பந்தம் கொழும்பில் கைச்சாத்திடப்பட்டது. இலங்கையில் ஏற்பட்ட உரிமை மறுப்பு மற்றும் பேரினவாத இன ஒடுக்குமுறைக்கு எதிராக தனித் தமிழ் ஈழம் வேண்டி ஈழத் தமிழ் இளைஞர்கள் போராடிய நிலையில், இலங்கை இந்திய ஒப்பந்தம் இடம்பெற்றது. இலங்கை அரசுடன் பேச்சு நடாத்தி இந்தியாவின் தலையீடாகவும் தீர்வாகவும் முன்வைக்கப்பட்ட 13ஆவது அரசியல் திருத்தத்தின் அடிப்படையில் வடக்கு கிழக்கு இணைக்கப்பட்டு ஒரு மாகாண அலகாக ஆக்கப்பட்டிருந்தது. இதன் அடிப்படையில் 1988ஆம் ஆண்டில் வடக்கு கிழக்கு மாகாண சபைத் தேர்தல் நடைபெற்றது. 13ஆவது திருத்தம் ஈழத் தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வல்ல என்றும் அதனை தாண்டிய சமவுரிமை ஆட்சி வழங்க வேண்டும் என்றும் அன்று வலியுறுத்திய தமிழர் தரப்பு அந்தத் தேர்தலைப் புறக்கணித்தது. எனினும் சில தரப்புக்கள் மாத்திரம் தேர்தலில் போட்டியிட்டன. அதன் அடிப்படையில் வடக்கு கிழக்கு மாகாண முதலமைச்சராக வரதராஜப் பெருமாள் தெரிவு செய்யப்பட்டார். அதில் எந்த அதிகாரமும் இல்லை என்பதை ஏற்றுக்கொண்டு வடக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை பின்னாளில் அவர் துறந்திருந்தார். வடக்கு கிழக்கை பிரித்த நாள்? இதேபோன்றதொரு நாளில் தான் இணைந்திருந்த வடக்கு கிழக்கு மாகாணம் நீதிமன்றத் தீர்ப்பினால் பிரிக்கப்பட்டது. தமிழ் மக்கள் செறிந்து வாழ்கின்ற யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, வவுனியா, மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை முதலிய மாவட்டங்கள் வடக்கு கிழக்கு மாகாணத்தில் இணைக்கப்பட்ட நிலையில் இலங்கை இந்திய ஒப்பந்த அடிப்படையின் ஆகக் குறைந்த ஒரு சிறப்பாக, ஏற்றுக்கொள்ளப்பட்ட வடக்கு கிழக்கு தமிழ் பேசும் மக்களின் தாயகம் என்பதை இல்லாமல் ஆக்க வேண்டும் என்பது சிங்களப் பேரினவாதிகளின் கனவாக இருந்தது. அதனை மக்கள் விடுதலை முன்னணி என்கின்ற ஜேவிபி நீதிமன்றத் தீர்ப்பின் வாயிலாகப் பிரித்துச் சாதித்தது. 2006ஆம் ஆண்டில் (2006.10.16) வடக்கு கிழக்கை பிரித்த அதேவேளை அன்றைய நாட்களில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் சமாதானப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடக்கூடாது என்றும் சமாதான ஒப்பந்தத்தைக் கிழித்தெறிந்து போரைத் தொடங்கி விடுதலைப் புலிகளை அழிக்க வேண்டும் என்றும் ஜேவிபி அன்றைய மகிந்த அரசுக்கு மக்கள் மத்தியில் இனவாதத்தை ஊட்டி ஆதரவை ஏற்படுத்தியது. ஆரம்பத்தில் சந்திரிகா அரசுக்கு ஜேவிபி ஆதரவு வழங்கியதுடன் பின்னர் மகிந்தவுக்கு போருக்கான ஆதரவை வழங்கியது. அந்த அடிப்படையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போருக்கு ஆதரவு திரட்டியவர்கள் என்ற வகையில் தமக்கே போர் வெற்றி சொந்தம் என்றும் ஜேவிபி முன்னயை காலத்தில் அரசுடன் முரண்பட்டதும் பெருமைப்பட்டதும் கூட வரலாறு ஆகும். கடந்த காலத்தில் தமிழ் மக்கள் மத்தியில் கசப்பான பல அனுபவங்களை ஜேவிபி ஏற்படுத்தியுள்ள நிலையில், அண்மைய காலத்தில் அநுர குமார திசாநாயக்க தேர்தலின்போது போர்க்குற்றவாளிகளைத் தண்டிப்பேன் என்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் அன்னையர்களின் கண்ணீருக்குப் பதில் கூறுவேன் என்றும் சொல்லியிருந்தபோதும் இலங்கைக்கு எதிராக ஐ.நாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்பதன் ஊடாகவும் வடக்கு கிழக்கிற்கு அதிகாரப் பகிர்வு தேவையில்லை என்பதன் ஊடாகவும் தனது மெய்யான பேரினவாத முகத்தைக் காட்டுகிறது. https://ibctamil.com/article/split-of-north-east-rajapaksas-vs-jvp-1729146082#google_vignette
    • ஐயா இங்கு மட்டுமல்ல உலகம் பூராவும் செம்பு தூக்குபவர்கள்  இருக்கின்றனர்...எந்த இனம் என்றாலும் அது இருக்கும் இருக்க தான் செய்யும் ...ஈரானுக்கே இஸ்ரேலுக்காக செம்பு தூக்கும்  ஈரானியர்கள் இருக்கும் பொழுது நாம் எம்மாத்திரம்... மாபெரும் எமது போராட்டத்தை அழிக்க ,சிங்கள அரசுக்கு எம்மவ‌ர்களும் சர்வதேசமும் துணை நின்றார்கள் அல்லவா....சரி அதை தான் விடுங்கள் இன்று அனுராவுவுக்கு பலர் ஆதரவு( (உங்கள் பாசையில் சொல்வது என்றால் செம்பு தூக்குபவரகள் )கொடுக்கின்றனர் அல்லவா பிறகும் ஏன் ஐயா இந்த சிங்கள் இனவாதிகளுக்கு பயம்.... பிரித்தானியா ....போட்ட பிச்சை சிறிலங்கா.... அந்த பிச்சை பாத்திரத்தை  ஒழுங்காக பயன் படுத்தவில்லை என நான் நினைக்கிறேன் 
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.