Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஈஸ்டர் தாக்குதல்அறிக்கைகளை ஜனாதிபதி வெளியிடாவிட்டால் நான் வெளியிடுவேன்!

ஈஸ்டர் தாக்குதல்அறிக்கைகளை ஜனாதிபதி வெளியிடாவிட்டால் நான் வெளியிடுவேன்! -உதயகம்மன்பில-

 

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக இதுவரை வெளியிடப்படாத இரண்டு அறிக்கைகளையும், ஜனாதிபதி இன்னும் 7 நாட்களில் வெளியிடாவிட்டால், அவற்றை தான் வெளியிடுவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதயகம்மன்பில தெரிவித்தார்.

மேலும், குறித்த அறிக்கைகளில் எந்தவொரு பக்கமும் காணாமல் போகவில்லை என்றும் எந்தவொரு விசாரணை அறிக்கையும் மாயமாகவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

இது குறித்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில மேலும் தெரிவித்துள்ளதாவது”  ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, நீர்க்கொழும்பு கட்டுவாப்பிட்டிய தேவாலயத்திற்கு அண்மையில் சென்றிருந்தார். அவர் வெறுங்கையுடன்தான் அங்கு சென்றிருந்தார்.

எனினும், ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக இதுவரை வெளிவராத அறிக்கைகள் இரண்டை அவர், அங்கு கொண்டு சென்றிருக்கலாம் என்று தெரிவித்திருந்தேன். இனியும் தாமதிக்காமல், அந்த இரண்டு அறிக்கைகளையும் ஜனாதிபதி வெளியிட வேண்டும் என்று நாம் அரசாங்கத்திடம் வலியுறுத்தியிருந்தோம்.

எனினும், அமைச்சரவைப் பேச்சாளரான விஜத ஹேரத், சில அறிக்கைகளின் பக்கங்கள் குறைவாக காணப்படுவதாகவும் சில அறிக்கைகள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

மேலும், இதுதொடர்பாக தாங்கள் விசாரணை நடத்துவதாகவும் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்திருந்தார். அமைச்சரே, ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான எந்தவொரு அறிக்கையின் பங்கங்கள் குறைவடையவும் இல்லை, எந்தவொரு அறிக்கையும் காணாமல் போகவும் இல்லை என்பதை நாம் பொறுப்புடன் கூறிக்கொள்கிறோம்.

அரசாங்கத்திற்கும், சட்டமா அதிபர் திணைக்களத்திற்கும், ஜனாதிபதியின் செயலகத்திற்கும் இந்த அறிக்கைகளை தேடிக் கண்டுபிடிக்க முடியாமல் போனாலும், எம்மிடம் தற்போது அந்த இரண்டு அறிக்கைகளும் கிடைத்துள்ளன.

எனவே, ஜனாதிபதி இன்னும் 7 நாட்களில் இதுவரை வெளியிடப்படாத, ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான இந்த இரண்டு விசாரணை அறிக்கைகளையும் வெளியிட வேண்டும்.
அவ்வாறு இல்லாவிட்டால், நாம் அந்த இரண்டு அறிக்கைகளையும் வெளியிடுவோம்” இவ்வாறு உதயகம்மன்பில தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2024/1404109

  • கருத்துக்கள உறவுகள்

சரியான நடவடிக்கை. உண்மை வெளியே வரவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

செய்தது இந்தியா 

பயன்படுத்தப்பட்டவர்கள் தீவிர எண்ணம் கொண்ட இஸ்லாமியர்கள் 

காரணம் :1)

மிதவாத மைத்திரி - ரணில் அரசு தமிழரசுக் கட்சியோடு நடத்திய பேச்சிக்களில் இணக்கம் ஏற்பட்டு தேசிய இனபிரச்னை ஒரு முடிவுக்கு வந்து விடுமோ என்ற பயம் அதனால் கடும் இனவாத கோத்தபாயா அரசை கொண்டு வரும் உபாயம். அப்பொழுது நாட்டுப் பிரச்னை தீராது என்ற விருப்பம், இதனால் தீவிர தமிழ் உணர்வையும் எழுப்பி விடலாம். பிரச்சனை மேலும் தொடர வைக்கப்படும் 

2) தமிழர் முக்கியமாக கிறிஸ்தவர்கள் மத்தியில் இஸ்லாமிய விரோதத்தை வளர்த்தல் 

3) இலங்கையில் ஹிந்துத்துவ கொள்கையை வளர்க்க ஏற்ற சூழலை ஏற்படுத்துதல் 

3) இந்தியாவில் இஸ்லாமிய விரோத மனப்பான்மையை இன்னும் கூர்மைப் படுத்துதல் 

குண்டு வெடிப்பு நடந்து சில வாரங்களில் இன்னொரு குண்டு வெடிப்புக்கு இந்தியா திட்டமிட்டது என்று ஊகிக்கின்றேன்,இங்கிலாந்து அதை வெளியே இந்தியா என்று சொல்லாமல் இலங்கையில் இன்னொரு குண்டு வெடிக்கலாம் என்று சொன்னதும் அது நாடாத்தப்படவில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்

ஈஸ்டர் தின தாக்குதல் அறிக்கைகளை மூன்று நாட்களுக்குள் ஒப்படைக்கவேண்டும்; கம்மன்பிலவுக்கு அரசு காலக்கெடு

ஈஸ்டர் தின தாக்குதல் சம்பவம் தொடர்பான அறிக்கைகள் இரண்டையும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில எதிர்வரும் மூன்று நாட்களில் அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டும் என அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து இன்னமும் வெளியிடப்படாத இரண்டு அறிக்கைகளையும் ஒரு வாரகாலத்திற்குள் அரசாங்கம் வெளியிடவேண்டும் எனவும் இல்லாவிட்டால் அவற்றை இணையவழியில் தான் வெளியிடப்போவதாகவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில அறிவித்திருந்தமைக்கு பதிலளிக்கும் போதே அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் இவ்வாறு தெரிவித்தார்.

இந்த அறிக்கைகள் எவையும் காணாமல்போகவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

https://thinakkural.lk/article/310761

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

ஈஸ்டர் தின தாக்குதல் அறிக்கைகளை மூன்று நாட்களுக்குள் ஒப்படைக்கவேண்டும்; கம்மன்பிலவுக்கு அரசு காலக்கெடு

ஈஸ்டர் தின தாக்குதல் சம்பவம் தொடர்பான அறிக்கைகள் இரண்டையும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில எதிர்வரும் மூன்று நாட்களில் அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டும் என அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து இன்னமும் வெளியிடப்படாத இரண்டு அறிக்கைகளையும் ஒரு வாரகாலத்திற்குள் அரசாங்கம் வெளியிடவேண்டும் எனவும் இல்லாவிட்டால் அவற்றை இணையவழியில் தான் வெளியிடப்போவதாகவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில அறிவித்திருந்தமைக்கு பதிலளிக்கும் போதே அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் இவ்வாறு தெரிவித்தார்.

இந்த அறிக்கைகள் எவையும் காணாமல்போகவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

https://thinakkural.lk/article/310761

 

வாயைக் கொடுத்து பின்பக்கத்தை பழுதாக்கியுள்ளார்.

இவ்வளவு காலமும் சகல உண்மைகளும் தெரிந்திருந்தும் கொலைகாரருடன் சேர்ந்து கூடிக்கும்மாளம் அடித்துள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்


 

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முறையாக விசாரணை நடத்தி உண்மையை வௌிப்படுத்துவோம் - விஜித ஹேரத்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, ஈழப்பிரியன் said:

 

வாயைக் கொடுத்து பின்பக்கத்தை பழுதாக்கியுள்ளார்.

இவ்வளவு காலமும் சகல உண்மைகளும் தெரிந்திருந்தும் கொலைகாரருடன் சேர்ந்து கூடிக்கும்மாளம் அடித்துள்ளார்.

தவளையும் தன் வாயால் கெடும்.
அதுகும் மூன்று நாட்களுக்குள் அந்த அறிக்கைகளை சமர்ப்பிக்கும் படி குறுகிய கால கெடுவை… அரசாங்கம் விதித்துள்ளது.
மாட்டிக் கிட்டாரு மைனரு… 😂 🤣

  • கருத்துக்கள உறவுகள்

அனுரவின் புலனாய்வு பிரிவின் முக்கிய நியமனத்தால் கலக்கத்தில் பலர் .

கடந்த அரசுகளால் பல் நெருக்குவாரங்களுக்கு உள்ளான பலர் இப்போது நாடு திரும்புகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இப்போ 

தொலைந்து போயிற்று கொஞ்சம் பக்கங்களை காணோம் என்று....

யார் பொய் சொல்கிறார்கள்??

ஜனாதிபதி?

அமைச்சர்?

எதிர்கட்சி??

அல்லது எல்லோரும்???

தேர்தலுக்கு முன்னர் தெரியவந்தால் பல முகங்கள் கோணலாகும்....

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

இப்போ 

தொலைந்து போயிற்று கொஞ்சம் பக்கங்களை காணோம் என்று....

யார் பொய் சொல்கிறார்கள்??

ஜனாதிபதி?

அமைச்சர்?

எதிர்கட்சி??

அல்லது எல்லோரும்???

தேர்தலுக்கு முன்னர் தெரியவந்தால் பல முகங்கள் கோணலாகும்....

வெளிநாடு போன முக்கிய சாட்சிகள் பலர் நாடு திரும்புகிறார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

463435824_949183580579948_47550237915593

ஈஸ்டர் தின தாக்குதல் சம்பவம் தொடர்பான அறிக்கைகள் இரண்டையும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில எதிர்வரும் மூன்று நாட்களில் அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டும் என அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

  • கருத்துக்கள உறவுகள்

உயிர்த்த ஞாயிறுதாக்குதல் விசாரணை அறிக்கைகளை பகிரங்கப்படுத்துவதாக அரசாங்கம் உறுதியளித்தால் அவற்றை கையளிப்பேன் - உதயகம்மன்பில

image

அரசாங்கம் பகிரங்கமாக வெளியிடுவதாக உறுதியளித்தால் உயிர்த்த ஞாயிறுதாக்குதல் தொடர்பில் தன்னிடமுள்ள இதுவரை வெளியிடப்படாத இரண்டு அறிக்கைகளையும் கையளிக்க தயார் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதயகம்மன்பில தெரிவித்துள்ளார்.

என்னிடமுள்ள அறிக்கையை பெற்றுக்கொண்ட பின்னர் அதனை அரசாங்கம் பகிரங்கப்படுத்தாவிட்டால் என்ன நடக்கும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜனாதிபதியோ அமைச்சரவை பேச்சாளரோ நான் வழங்கும் அறிக்கைகளை வெளியிடுவோம் என உறுதியளிக்கும் வரை நான் அரசாங்கத்திடம் அவற்றை கையளிக்க தயாரில்லை என உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

நான் வேண்டுகோள் விடுத்தபடி ஏழுநாட்களிற்குள் அறிக்கைகளை வெளியிடுவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்காவிட்டால் நான் அவற்றை இணையத்தில் வெளியிடுவதற்கான நடவடிக்கைகளை எடுப்பேன், என அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/196441

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ஏராளன் said:

அவற்றை இணையத்தில் வெளியிடுவதற்கான நடவடிக்கைகளை எடுப்பேன், என அவர் தெரிவித்துள்ளார்

இவரும் எங்களை போல இணைய போராளி போலகிடக்கு 😅

  • கருத்துக்கள உறவுகள்
On 15/10/2024 at 09:55, விசுகு said:

இப்போ 

தொலைந்து போயிற்று கொஞ்சம் பக்கங்களை காணோம் என்று....

யார் பொய் சொல்கிறார்கள்??

ஜனாதிபதி?

அமைச்சர்?

எதிர்கட்சி??

அல்லது எல்லோரும்???

தேர்தலுக்கு முன்னர் தெரியவந்தால் பல முகங்கள் கோணலாகும்....

விசுகர் இன்னுமா இதுகளை நம்புறியள்.....நம்புவது நம்மடை யாழ்ப்பாணீஸ்...சிங்கள்வன் ..முசுலீமல்ல..

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, ஏராளன் said:

அரசாங்கம் பகிரங்கமாக வெளியிடுவதாக உறுதியளித்தால் உயிர்த்த ஞாயிறுதாக்குதல் தொடர்பில் தன்னிடமுள்ள இதுவரை வெளியிடப்படாத இரண்டு அறிக்கைகளையும் கையளிக்க தயார்

அப்போ, இதுவரை இதை திருடி ஒளித்து வைத்திருந்தவர் இவர்தானா? தெரியாமல் மாட்டிக்கினார். இவரை துணிந்து கைது செய்து விசாரணை செய்யலாம். தானாகவே  துணிந்து சாட்சியமளித்துள்ளார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

463831508_949974033834236_82716151648595

  • கருத்துக்கள உறவுகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான அறிக்கைகள் உடனடியாக வெளிப்படுத்தப்பட வேண்டும் - நிமல் லான்சா

image

எம்.மனோசித்ரா

கத்தோலிக்க திருச்சபை மற்றும் கத்தோலிக்க மக்களை ஏமாற்றாமல் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஆணைக்குழுவின் அறிக்கைகளை நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும். அவற்றில் ஏதேனும் குறைபாடுகள் அல்லது பிழைகள் இருந்தால் அவை தொடர்பில் உடனடியாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா தெரிவித்தார்.

நீர்கொழும்பில் வியாழக்கிழமை (17) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மிகவும் உணர்ச்சிகரமான விடயமாகும். எனவே அந்த தாக்குதல்கள் தொடர்பான அறிக்கைகளை வெளியிட்டு நீதி வழங்கப்பட வேண்டும் என கத்தோலிக்க திருச்சபையும் கத்தோலிக்க மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். 

இது நாடகம் அல்ல. கத்தோலிக்க மக்கள் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவை நம்புகின்றனர். எனவே அந்த நம்பிக்கையை அவர் பாதுகாக்க வேண்டும்.

ரணில் விக்கிரமசிங்க இந்த நாட்டைப் பொறுப்பேற்றபோது அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலை இருந்தது. 

ஆனால், அவர் பதவியேற்ற பின்னர், அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட்டது. நல்லாட்சியின்போதும் சம்பளம் அதிகரிக்கப்பட்டது.

ஊதிய முரண்பாடுகளைக் களைய குழுக்கள் நியமிக்கப்பட்டன. பொருளாதாரம் வளர்ச்சியடைந்துள்ளதால் அடுத்த வருடம் முதல் அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும் என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

ஆறு மாதங்களுக்கு ஒரு முறை சம்பளத்தை அதிகரிக்கவுள்ளதாக முன்னர் மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்தது. ஆனால் தற்போது தாம் சம்பள அதிகரிப்பை வழங்குவதாகக் கூறவில்லை என்று அவர்கள் மறுக்கின்றனர். 

சுமார் 80 சதவீத அரச ஊழியர்கள் தேசிய மக்கள் சக்திக்கே வாக்களித்தனர். எனவே அவர்களை இந்த அரசாங்கம் ஏமாற்றக்கூடாது என்றார். 

https://www.virakesari.lk/article/196511

  • கருத்துக்கள உறவுகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; மிக முக்கியமான ஆவணங்களை கையளிப்பதற்காக விஜித ஹேரத்தை சந்திப்பதற்கு அனுமதி கோரினார் உதய கம்மன்பில

image

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதயகம்மன்பில தன்னிடமுள்ள மிக முக்கியமான பாதுகாப்பு விடயங்கள் தொடர்பான ஆவணங்களை கையளிப்பதற்காக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தினை  சந்திப்பதற்கு அனுமதி கோரியுள்ளதை தொடர்ந்து உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த ஆவணங்களை மறைத்த விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

பாதுகாப்பு அடிப்படையில் மிகவும் முக்கியமான ஆவணங்களை பகிரங்கப்படுத்துவதற்கு தயாரில்லை என தெரிவித்துள்ள உதயகம்மன்பில இதன்காரணமாக அமைச்சரை தொலைபேசியில் தொடர்புகொள்ள முயன்றதாக தெரிவித்துள்ளார்.

இதன்பின்னர் அமைச்சருக்கு குறுஞ்செய்தியை அனுப்பியதாகவும் அதற்கும் பதில் இல்லை என உதயகம்மன்பில தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக அவரை தொடர்புகொள்வதற்கான அனுமதியை கோரி பதிவுதபால் மூலம் கடிதமொன்றை அனுப்பினேன், என்னிடம் உள்ள ஆவணங்களை பொறுப்பான முறையில் கையளிக்க விரும்புகின்றேன் என உதயகம்மன்பில தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/196633

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

463821973_950910020407304_50267369625432

 

 

463743371_950894877075485_79222751261820

  • கருத்துக்கள உறவுகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை அறிக்கைகள் - நாளை காலைக்குள் ஜனாதிபதி வெளியிடவேண்டும் - உதய கம்மன்பில

image

ஜனாதிபதி நாளைக்குள் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான இரண்டு விசாரணை அறிக்கைகளையும் வெளியிடவேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதயகம்மன்பில காலக்கெடுவிதித்துள்ளார்.

ஜனாதிபதி உயிர்த்த ஞாயிறுதாக்குதல் தொடர்பான இரண்டு அறிக்கைகளை பகிரங்கப்படுத்த தயங்குகின்றார், அந்த அறிக்கைகளை வெளியிடுவதற்காக நான் ஜனாதிபதிக்கு வழங்கிய காலக்கெடு நாளை காலை பத்துமணியுடன் முடிவடைகின்றது என உதயகம்மன்பில தெரிவித்துள்ளார்.

நாளைகாலைக்குள் ஜனாதிபதி அறிக்கைகளை வெளியிட்டு அரசமைப்பின்படி தனக்குள்ள கடமைகளை நிறைவேற்றலாம் ஆனால் அவர் அவ்வாறு செய்ய தவறினால் அரசியல் குற்றவியல் பிரேரணையை எதிர்கொள்ளவேண்டிவரும் என உதயகம்மன்பில தெரிவித்துள்ளார்.

அரசமைப்பின் சில பிரிவுகளை ஜனாதிபதி மீறினால் அறிக்கைகளை வெளியிட தவறினால் நான் அவற்றை பகிரங்கப்படுத்துவேன் என உதயகம்மன்பில தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/196688

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

1729404962-gammanpila-6.jpg?resize=650,3

ஜனாதிபதிக்கான கால அவகாசம் நாளையுடன் நிறைவு – உதய கம்மன்பில!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் வெளியிடத் தயங்கும் இரண்டு அறிக்கைகளை வெளியிடுவதற்கு ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள கால அவகாசம் நாளை (21) காலை 10.00 மணியுடன் நிறைவடைவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இன்று (20) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் பகிரங்கப்படுத்தத் தயங்கும் இரண்டு அறிக்கைகளை வெளியிடுவதற்கு ஜனாதிபதிக்கு நான் வழங்கிய கால அவகாசம் நாளை காலை 10.00 மணியுடன் முடிவடைகிறது.

அறிக்கைகளை வெளியிடுவதற்கும் அரசியலமைப்புப் பொறுப்பை நிறைவேற்றுவதற்கும் ஜனாதிபதிக்கு நாளை காலை வரை அவகாசம் உள்ளது.

எனவே, அரசியலமைப்பின் 38 ஆவது சரத்தை ஜனாதிபதி மீறினாலோ நாளை அறிக்கைகளை வெளியிடத் தவறினாலோ, நான் நிச்சயமாக அவற்றை பகிரங்கப்படுத்துவேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.

https://athavannews.com/2024/1404883

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.