Jump to content

இந்தியாவை எதிர்த்து விட்டு எதனையும் செய்ய முடியாது: செல்வம் அடைக்கலநாதன் எச்சரிக்கை

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவை எதிர்த்து விட்டு எதனையும் செய்ய முடியாது: செல்வம் அடைக்கலநாதன் எச்சரிக்கை

Oruvan

”அதிகாரப்பகிர்வையும், 13ஆவது திருத்தச்சட்டத்தையும் வடக்கின் அரசியல்வாதிகள் கோரவில்லை. இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பது நீண்டகாலமாக எமது மக்களின் கோரிக்கையும், அபிலாசையுமாகும். அரசியலமைப்பின் அங்கமாக உள்ள 13ஆவது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறே நாம் கோருகிறோம்.”

- இவ்வாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

”இந்தியாவை புறந்தள்ளிவிட்டு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் அரசாங்கம் செயல்பட பார்க்கிறது. ஆனால், இந்தியாவுடன் அனுசரித்து செல்வதே அவர்களுக்கு நல்லதாக இருக்கும் எனவும் செல்வம் அடைக்கலநாதன், எச்சரிக்கை விடுத்தார்.

அதிகாரப்பகிர்வு மற்றும் 13ஆவது திருத்தச்சட்டங்களை வடக்கின் அரசியல்வாதிகளே கோருகின்றன. மாறாக மக்கள் அல்ல என அண்மையில் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா, தெரிவித்திருந்தார். இது தொடர்பில் 'ஒருவன்' பத்திரிகைக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு கூறியதுடன், மேலும் அவர் வலியுறுத்தியதாவது,

”அபிவிருத்தி என்பது மக்களுக்கு முக்கியம். அதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், அரசியலமைப்பில் உள்ள ஒரு விடயத்தை இல்லையெனக் கூற முடியாது. 13ஆவது திருத்தச்சட்டம் மாகாண சபை முறைமைகளுக்காக அரசியலமைப்பில் உள்வாங்கப்பட்டுள்ளது.

புதிய அரசியலமைப்பொன்றின் ஊடாக மாகாண சபை முறையை இல்லாதொழிக்க முடியும். ஆனால், இதனை நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். எமது மக்கள் இனப்பிரச்சினையாலும் போராளும் பாதிக்கப்பட்ட மக்கள். அவர்கள் வெறும் அபிவிருத்தியை மாத்திரம் எதிர்பார்ப்பதாக ரில்வின் சில்வா கருத கூடாது.

வடக்கின் அரசியல்வாதிகள்தான் அதிகாரப்பகிர்வை கோருவதாக கூறுவது பிழையான கருத்தாகும். அரசியலமைப்பில் உள்ள விடயத்தைதான் நாம் கோருகிறோம். இதில் அரசியல்வாதிகளை தொடர்புப்படுத்துவது தவறு. இது எமது உரிமையாகும்.

13ஆவது திருத்தச்சட்டம் என்பது இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் ஊடாகதான் அரசியலமைப்புக்குள் உள்வாங்கப்பட்டது. இதனை இல்லாதொழிக்க முற்படுவது இந்தியாவுக்கு எதிரான ஒரு முயற்சியாகவே பார்க்கப்படும். புதிய அரசாங்கத்துக்கு இந்தியாவை அனுசரித்து போக வேண்டிய தேவை உள்ளது. அண்டைய நாடாக உள்ள இந்தியாவை எதிர்த்துவிட்டு எதனையும் செய்ய முடியாது.

இவர்களுடைய கருத்துகள் 13ஆவது திருத்தச்சட்டத்தை புதிய அரசியலமைப்பில் இருந்து இல்லாதொழிக்கும் வகையில் உள்ளது. ஆனால், இந்தியாவை பகைத்துத்கொண்டு இவர்களால் நகர முடியாது.” என்றார்.

https://oruvan.com/sri-lanka/2024/10/19/nothing-can-be-done-against-india-selvam-adhikalanathan-warns

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அநுரவின் கருத்துகள் 13ஆவது திருத்தச்சட்டத்தை இல்லாதொழிப்பதா? – செல்வம் அடைக்கலநாதன் சாடல்

அநுரவின் கருத்துகள் 13ஆவது திருத்தச்சட்டத்தை இல்லாதொழிப்பதா? – செல்வம் அடைக்கலநாதன் சாடல்.

அதிகாரப்பகிர்வையும், 13ஆவது திருத்தச்சட்டத்தையும் வடக்கின் அரசியல்வாதிகள் கோரவில்லை. இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பது நீண்டகாலமாக எமது மக்களின் கோரிக்கையும், அபிலாசையுமாகும். அரசியலமைப்பின் அங்கமாக உள்ள 13ஆவது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறே நாம் கோருகிறோம்.”

இவ்வாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

”இந்தியாவை புறந்தள்ளிவிட்டு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் அரசாங்கம் செயல்பட பார்க்கிறது. ஆனால், இந்தியாவுடன் அனுசரித்து செல்வதே அவர்களுக்கு நல்லதாக இருக்கும் எனவும் செல்வம் அடைக்கலநாதன், எச்சரிக்கை விடுத்தார்.

அதிகாரப்பகிர்வு மற்றும் 13ஆவது திருத்தச்சட்டங்களை வடக்கின் அரசியல்வாதிகளே கோருகின்றன. மாறாக மக்கள் அல்ல என அண்மையில் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா, தெரிவித்திருந்தார். இது தொடர்பில் ‘ஒருவன்’ பத்திரிகைக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு கூறியதுடன், மேலும் அவர் வலியுறுத்தியதாவது,

”அபிவிருத்தி என்பது மக்களுக்கு முக்கியம். அதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், அரசியலமைப்பில் உள்ள ஒரு விடயத்தை இல்லையெனக் கூற முடியாது. 13ஆவது திருத்தச்சட்டம் மாகாண சபை முறைமைகளுக்காக அரசியலமைப்பில் உள்வாங்கப்பட்டுள்ளது.

புதிய அரசியலமைப்பொன்றின் ஊடாக மாகாண சபை முறையை இல்லாதொழிக்க முடியும். ஆனால், இதனை நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். எமது மக்கள் இனப்பிரச்சினையாலும் போராளும் பாதிக்கப்பட்ட மக்கள். அவர்கள் வெறும் அபிவிருத்தியை மாத்திரம் எதிர்பார்ப்பதாக ரில்வின் சில்வா கருத கூடாது.

வடக்கின் அரசியல்வாதிகள்தான் அதிகாரப்பகிர்வை கோருவதாக கூறுவது பிழையான கருத்தாகும். அரசியலமைப்பில் உள்ள விடயத்தைதான் நாம் கோருகிறோம். இதில் அரசியல்வாதிகளை தொடர்புப்படுத்துவது தவறு. இது எமது உரிமையாகும்.

13ஆவது திருத்தச்சட்டம் என்பது இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் ஊடாகதான் அரசியலமைப்புக்குள் உள்வாங்கப்பட்டது. இதனை இல்லாதொழிக்க முற்படுவது இந்தியாவுக்கு எதிரான ஒரு முயற்சியாகவே பார்க்கப்படும். புதிய அரசாங்கத்துக்கு இந்தியாவை அனுசரித்து போக வேண்டிய தேவை உள்ளது. அண்டைய நாடாக உள்ள இந்தியாவை எதிர்த்துவிட்டு எதனையும் செய்ய முடியாது.

இவர்களுடைய கருத்துகள் 13ஆவது திருத்தச்சட்டத்தை புதிய அரசியலமைப்பில் இருந்து இல்லாதொழிக்கும் வகையில் உள்ளது. ஆனால், இந்தியாவை பகைத்துத்கொண்டு இவர்களால் நகர முடியாது.” என்றார்.

https://athavannews.com/2024/1404797

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, தமிழ் சிறி said:

இந்தியாவை பகைத்துத்கொண்டு இவர்களால் நகர முடியாது.” என்றார்

உங்களுக்கு இந்தியாவை புறந்தள்ளி நகர்வது கடினமாக இருக்கலாம் ஆனால் சிங்கள அரசியல்/கொள்கை வகுப்பாளர்கள் நன்றாகவே புறந்தள்ளி நடப்பார்கள்...நடக்க தெரியும்...காரணம் இந்தியாவுக்கு முதுகெழும்பு இல்லை ....என்பதை சிங்களவர்கள நன்றாகவே உணர்ந்துள்ளனர்

  • Thanks 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, putthan said:

உங்களுக்கு இந்தியாவை புறந்தள்ளி நகர்வது கடினமாக இருக்கலாம் ஆனால் சிங்கள அரசியல்/கொள்கை வகுப்பாளர்கள் நன்றாகவே புறந்தள்ளி நடப்பார்கள்...நடக்க தெரியும்...காரணம் இந்தியாவுக்கு முதுகெழும்பு இல்லை ....என்பதை சிங்களவர்கள நன்றாகவே உணர்ந்துள்ளனர்

இவர்களுக்கு இந்தியா நல்ல கொழுத்த சம்பளம் கொடுத்து வைத்திருக்குது போலை.
அதுதான்... இந்தியாவின் சீலைத்தலைப்பில்  தொங்கிக் கொண்டு இருக்கின்றார்கள்.
இந்தியாவோடு இவர்கள் மினக்கெடுகின்ற நேரம், சீனாக்காரனுடன்  
சேர்ந்து அரசியல் செய்து இருந்தாலும்... பிரயோசனமாக இருந்திருக்கும்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

இந்தியாவை எதிர்த்து விட்டு எதனையும் செய்ய முடியாது: செல்வம் அடைக்கலநாதன் எச்சரிக்கை

large.IMG_7259.jpeg.4a99e811e4f2e459570e

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, தமிழ் சிறி said:

இவர்களுக்கு இந்தியா நல்ல கொழுத்த சம்பளம் கொடுத்து வைத்திருக்குது போலை.
அதுதான்... இந்தியாவின் சீலைத்தலைப்பில்  தொங்கிக் கொண்டு இருக்கின்றார்கள்.
இந்தியாவோடு இவர்கள் மினக்கெடுகின்ற நேரம், சீனாக்காரனுடன்  
சேர்ந்து அரசியல் செய்து இருந்தாலும்... பிரயோசனமாக இருந்திருக்கும்.

அடுத்த தேர்தலுடன் இவரும் இளைப்பாறி இளைஞர்களுக்கு வழிவிட வேண்டும்  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, putthan said:

அடுத்த தேர்தலுடன் இவரும் இளைப்பாறி இளைஞர்களுக்கு வழிவிட வேண்டும்  

இவர் என்ன வழி விடுகிறது. 😃
இந்தத் தேர்தலுடன், கழுத்தை பிடித்து வெளியே தள்ளப் படுவார். 😂
எல்லாம்... பட்டுத்தான் தெளிய வேண்டும் என்று விதி இருந்தால், நாம் ஒன்றும் செய்ய முடியாது. 🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, தமிழ் சிறி said:

இவர் என்ன வழி விடுகிறது. 😃
இந்தத் தேர்தலுடன், கழுத்தை பிடித்து வெளியே தள்ளப் படுவார். 😂
எல்லாம்... பட்டுத்தான் தெளிய வேண்டும் என்று விதி இருந்தால், நாம் ஒன்றும் செய்ய முடியாது. 🤣

மன்னார் மன்னனுக்கு இப்படி ஒர் நிலை வரக்கூடாது...😅

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பதற்றம் ஆளைக் காட்டிக் கொடுத்துவிட்டது. 

விடுதலைப் புலிகளால் TELO அழிக்கப்பட்டது ஏன்  என்பது இப்போது தெளிவாகப்  புரிகிறது. 

2 hours ago, தமிழ் சிறி said:

இவர்களுக்கு இந்தியா நல்ல கொழுத்த சம்பளம் கொடுத்து வைத்திருக்குது போலை.
அதுதான்... இந்தியாவின் சீலைத்தலைப்பில்  தொங்கிக் கொண்டு இருக்கின்றார்கள்.
இந்தியாவோடு இவர்கள் மினக்கெடுகின்ற நேரம், சீனாக்காரனுடன்  
சேர்ந்து அரசியல் செய்து இருந்தாலும்... பிரயோசனமாக இருந்திருக்கும்.

இவரின் பிள்ளைகள் இந்தியாவில் கல்வி கற்கிறார்கள் என்று அறிகிறேன். 

Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.